Wednesday, October 7, 2020

ஆலு மட்டர் - உருளை கிழங்கு , பட்டாணி காய்

Ingredients:
  • வேகவைத்த உருளை கிழங்கு 2 -3 (தோலுரித்து, சதுரமாக வெட்டிக்கொள்ளவும்)
  • பச்சை பட்டாணி - வேகவைத்தது 1 கப்
  • வெங்காயம் - 1 - பொடியாக நறுக்கிகொள்ளவும்
  • பச்சைமிளகாய் - 2
  • இஞ்சி - 1 துண்டு தோலெடுத்து , துருவிக்கொள்ளவும்
  • பெங்களூர் தக்காளி 2 - விதை எடுத்து பொடியாக நறுக்கவும்
  • உப்பு
  • சீரகம் 1 டீ ஸ்பூன்
  • எண்ணெய் 1 டீ ஸ்பூன்
  • நெய் 1 டீ ஸ்பூன்
  • மாங்காய் பொடி ( ஆம்சூர் ) 1/2 டீ ஸ்பூன்
  • கரம் மசாலா பவுடர் 1/2 டீ ஸ்பூன்
  • தனியா பொடி 1 1/2 டீ ஸ்பூன்
  • மிளகாய் பொடி 1/2 to 1 டீ ஸ்பூன்
  • மஞ்சள் பொடி 1/4 டீ ஸ்பூன்
  • கொத்துமல்லி கொஞ்சம்


Method:
  • மிக்சி இல் வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி யை மையாக அரைத்துக் கொள்ளவும்.
  • வாணலி இல் எண்ணெய் மற்றும் நெய் விடவும்.
  • சீரகத்தை தாளிக்கவும், அரைத்ததை போட்டு நன்கு வதக்கவும்.
  • எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கணும்.
  • அத்துடன், பொடியாக நறுக்கின தக்காளி யை போட்டு நன்கு வதக்கவும்.
  • பிறகு நறுக்கி வைத்துள்ள உருளை மற்றும் வெந்த பட்டாணியை போடவும்.
  • கொஞ்சம் உப்பு போடவும்.
  • கொஞ்சம் வதங்கினதும், எல்லா பொடிகளையும் போடவும்.
  • அடுப்பை கொஞ்சம் தணித்து வைக்கவும்.
  • அப்பப்போ கிளறி விடவும்.
  • கொஞ்சம் 'கிரேவியாக' வேண்டுமானால் தண்ணீர் விடவும்; இல்லை உதிர் உதிராக வேண்டுமானால் அப்படியே கிளறி இறக்கிவிடவும்.
  • அவ்வளவு தான், சுவையான 'ஆலு மட்டர்' தயார்.
  • சப்பாத்தி மற்றும் சாதத்துடன் சாப்பிடலாம் .

No comments:

Blog Archive