Wednesday, October 7, 2020

வாசனை ஊட்டும் காய்ந்த இலைகள்

Ingredients:
  • கொத்துமல்லி
  • கறிவேப்பிலை
  • புதினா


Method:
  • கொத்துமல்லி , கறிவேப்பிலை மற்றும் புதினா இலைகளை காயவைத்தும் உபயோகிக்கலாம். அதாவது நம் நாட்டில் இவைகள் கிடைப்பது நமக்கு ரொம்ப சுலபம். ஆனால் வெளிநாடுகளில் இருக்கும்போது ரொம்ப கஷ்டம், மேலும் விலையும் ரொம்ப அதிகம். எனவே, அவற்றை 'வேஸ்ட்' செய்யாமல் உபயோகிக்கணும். அதற்குத்தான் இந்த ஐடியா
  • ஒன்னும் பெரிசாக இல்லை. நாம் உபயோகித்ததும் பாக்கி இருக்கும் இலைகளை நன்கு அலம்பி, ஒரு துணி இல் போட்டு காற்றாட வைக்கவும்.
  • வெய்யில் இல்லாவிட்டாலும் பரவாஇல்லை. அல்லது வெயில் இல் வைத்தால் ரொம்ப சூப்பர்
  • அவ்வளவு தான் நன்கு காய்ந்ததும் - கை இல் நொறுக்கினால் நொருங்கணும் - அந்த அளவுக்கு காயணும்.
  • எடுத்து பாட்டிலில் போட்டு வைத்துக்கொள்ளனும்.
  • தேவையானபோது நொறுக்கி சமையலில் போட்டுக்கலாம்.
  • மணமாக இருக்கும்.
  • புதினா இலைகளை நொறுக்கி மோரில் போட்டு குடிக்கலாம்.

No comments:

Blog Archive