Saturday, July 30, 2011

ஓட்ஸ் அடை

தேவையானவை :

ஓட்ஸ் 1 கப்
அரிசி மாவு 1/2 கப்
சோள மாவு 1/2 கப்
பெரிய வெங்காயம் 1 (பொடியாக நறுக்கவும்)
பச்சை மிளகாய் 2 (பொடியாக நறுக்கவும்)
உப்பு
அடை வார்க்க எண்ணை

செய்முறை:

முதலில் ஓட்ஸ் ஐ வெறும் வாணலி இல் போட்டு வறுக்கவும்.
கர கர ப்பாக மிக்சி இல் பொடிக்கவும்.
ஒரு பாத்திரத்தில் போட்டு அரிசி மாவு, சோள மாவுடன் கலக்கவும்.
உப்பு, வெங்காயம், பச்சை மிளகாய் எல்லாம் போட்டு கொஞ்சமாய் தண்ணீர் விட்டு கெட்டியாக பிசையவும் .
ஒரு பிளாஸ்டிக் கோவரில் அல்லது வாழை இலை இல் எண்ணை தடவி, இந்த மாவில் ஒரு சாத்துகுடி அளவு எடுத்து அடை போல் தடவும்.
உரித்து எடுத்து தோசை கல்லில் போட்டு இரண்டு பக்கமும் எண்ணை விட்டு எடுக்கவும்.

குறிப்பு: மிளகாய் வேண்டாம் என்பவர்கள் மிளகாய் பொடி போட்டுக்கலாம்; மிளகு சீராக பொடி போடலாம், கரம் மசாலா போடலாம் நம் சுவைக்கு ஏற்ப செயலாம்புன்னகை" src="http://illiweb.com/fa/i/smiles/icon_smile.gif" alt="புன்னகை" longdesc="4">கறிகாய் கூட காரட் துருவி போடலாம .

ஓட்ஸ் தோசை

தேவையானவை :

ஓட்ஸ் 1 கப்
கோதுமை மாவு 1 கப்
பெரிய வெங்காயம் 1 (பொடியாக நறுக்கவும்)
பச்சை மிளகாய் 2 (பொடியாக நறுக்கவும்)
தேவையானால் ..மிளகு சீரக பொடி சேர்க்கவும்.
உப்பு
தோசை வார்க்க எண்ணை

செய்முறை:

முதலில் ஓட்ஸ் ஐ வெறும் வாணலி இல் போட்டு வறுக்கவும்.
கர கர ப்பாக மிக்சி இல் பொடிக்கவும்.
ஒரு பாத்திரத்தில் போட்டு கோதுமை மாவுடன் கலக்கவும்.
உப்பு, வெங்காயம், பச்சை மிளகாய், மிளகு சீரக பொடி எல்லாம் போட்டு தண்ணீர் விட்டு தோசை மாவு பதத்துக்கு கரைக்கவும்
பிறகு தோசை கல்லில் எண்ணை விட்டு வார்க்கவும்.

குறிப்பு: வேண்டுமானால், இந்த மாவை மோர் விட்டு கரைக்கலாம்

ஓட்ஸ் பொங்கல்

தேவையானவை:

ஓட்ஸ் 1 கப்
மிளகு சீரகம் பொடித்தது 1 டீ ஸ்பூன்
இஞ்சி மிகவும் பொடியாக நறுக்கினது அல்லது துருவினது 1/2 ஸ்பூன்
வேக வைத்த பயத்தம் பருப்பு 1/2 கப்
நெய் 2 ஸ்பூன்
வேண்டுமானால் முந்திரி
கொஞ்சம் கறிவேப்பிலை
உப்பு
பெருங்காயப்பொடி 1/4 ஸ்பூன்

செய்முறை:

ஒரு வாணலி இல் 1 ஸ்பூன் நெய் விட்டு ஒட்சை போட்டு நன்கு வறுக்கவும்.
( நல்ல வறுபடவில்லை என்றால் 'கொஞ்சம் ஒட்டிக்கும்' )
இதில் வெந்த பருப்பை கொட்டி வேண்டுமால் கொஞ்சம் தண்ணீர் விட்டு அடுப்பை சின்ன தாக வைக்கவும்.
நன்கு கலக்கவும்.
ஓட்ஸ் வெந்து நன்கு கலந்ததும், உப்பு போட்டு கிளறவும்.
வேறு ஒரு வாணலி இல் 1 ஸ்பூன் நெய் விட்டு முந்திரி வறுக்கவும்.
அதிலேயே மிளகு சீரகம், இஞ்சி கறி வேப்பிலை போட்டு தாளிக்கவும்.
இதை அடுப்பில் உள்ள ஓட்ஸ் மற்றும் பருப்பு கலவை இல் கொட்டவும்.
நன்கு கிளறி இறக்கவும்.
ஓட்ஸ் பொங்கல் ரெடி.

உலர் பழங்கள் / நட்ஸ் உடன் ஓட்ஸ்

இதுவும் குழந்தைகளுக்கானது

தேவையானவை:

ஓட்ஸ் 2 கரண்டி
பால் 1/2 கப்
படம், முந்திரி , கிஸ்மிஸ் (உலர்ந்த திராக்ஷை) உலர்ந்த அத்திப்பழம் 1/4 கப்
சர்க்கரை அல்லது தேன்

செய்முறை:

ஓட்ஸ் ஐ மைக்ரோ வேவ் பாத்திரத்தில் போட்டு அது மூழ்கும் வரை தண்ணீர் விட்டு 3 – 5 நிமிஷங்கள் வரை வைக்கவும்.
வெளியே எடுத்ததும் நன்கு கிளறி, பால் மற்றும் சக்கரை போட்டு கலக்கவும்.
போடவும்
உலர் பழங்கள் போடவும்
வேண்டுமானால் தண்ணீர் விட்டுக்கொள்ளவும்.
இல்லைஎன்றால் கெட்டியாக கப்பில் விட்டு ஸ்பூன் போட்டு கொடுக்கவும்.
சத்தான கஞ்சி இது .
மதியம் வரை பசிக்காது

குறிப்பு: இந்த கஞ்சி இல் உங்களுக்கு விருப்பமான பழங்கள் + உலர் பழங்கள்சேர்க்கலாம்.

பழங்களுடன் ஓட்ஸ்

நாம் குடிக்கும்போது குழந்தைகள் கேட்குமே, அதனால், அவர்களுக்கானது இது.

தேவையானவை:

ஓட்ஸ் 2 கரண்டி
பால் 1/2 கப்
வாழைப்பழம் அல்லது ஆப்பிள் துண்டாங்கள் 1/2 கப்
சர்க்கரை அல்லது தேன்

செய்முறை:

ஓட்ஸ் ஐ மைக்ரோ வேவ் பாத்திரத்தில் போட்டு அது மூழ்கும் வரை தண்ணீர் விட்டு 3 – 5 நிமிஷங்கள் வரை வைக்கவும்.
வெளியே எடுத்ததும் நன்கு கிளறி, பால் மற்றும் சக்கரை போட்டு கலக்கவும்.
ஆப்பிள் அல்லது வாழப்பழம் போடவும்
வேண்டுமானால் தண்ணீர் விட்டுக்கொள்ளவும்.
இல்லைஎன்றால் கெட்டியாக கப்பில் விட்டு ஸ்பூன் போட்டு கொடுக்கவும்.
சத்தான கஞ்சி இது .
மதியம் வரை பசிக்காது

குறிப்பு: இந்த கஞ்சி இல் உங்களுக்கு விருப்பமான பழங்கள் சேர்க்கலாம். 2 பழங்களை சேர்த்தும் போட்டுத் தரலாம்.

ஓட்ஸ் கஞ்சி சக்கரையுடன்

தேவையானவை:

ஓட்ஸ் 2 கரண்டி
பால் 1/2 கப்
சர்க்கரை அல்லது தேன்

செய்முறை:

ஓட்ஸ் ஐ மைக்ரோ வேவ் பாத்திரத்தில் போட்டு அது மூழ்கும் வரை தண்ணீர் விட்டு 3 - 5 நிமிஷங்கள் வரை வைக்கவும்.
வெளியே எடுத்ததும் நன்கு கிளறி, பால் மற்றும் சக்கரை போட்டு கலக்கவும்.
வேண்டுமானால் தண்ணீர் விட்டுக்கொள்ளவும்
பருகவும்.
சத்தான கஞ்சி ரேயடு.
மதியம் வரை பசிக்காது

குறிப்பு : சர்க்கரை வியாதி உள்ளவர்கள் கூட அதர்க்கான 'செயற்க்கை சக்கரையை ' போட்டுக்கொள்ளலாம்.ஓட்ஸ் ஐ பாலிலேயும் வேக விடலாம்

பூண்டு ஓட்ஸ்

தேவையானவை:

ஓட்ஸ் 2 கரண்டி
பூண்டு 4 - 5 பல்
உப்பு


செய்முறை:

பூண்டை மிகவும் பொடியாக நறுக்கி மைக்ரோ வேவ் பாத்திரத்தில் போட்டு அது 1 டம்ளர் தண்ணீர் விட்டு 2 நிமிஷங்கள் வரை வைக்கவும்.
பிறகு ஓட்ஸ் போட்டு மீண்டும் 3 -5 நிமிடங்கள் வைக்கவும்.
வெளியே எடுத்ததும் நன்கு கிளறி, உப்பு போடவும்.
வேண்டுமானால் தண்ணீர் அல்லது மோர் விட்டுக்கொள்ளவும்
பருகவும்.
சத்தான கஞ்சி தயார் .
மதியம் வரை பசிக்காது.

குறிப்பு: இது கொலஸ்ற்றால் உள்ளவர்கள் குடிக்க ஏற்றது.

கோஸ் ஓட்ஸ்

தேவையானவை:

ஓட்ஸ் 2 கரண்டி
துருவின கோஸ் 1 கரண்டி
உப்பு


செய்முறை:

துருவின கோஸ் ஐ மைக்ரோ வேவ் பாத்திரத்தில் போட்டு அது மூழ்கும் வரை தண்ணீர் விட்டு 3 - 5 நிமிஷங்கள் வரை வைக்கவும்.
பிறகு ஓட்ஸ் போட்டு மீண்டும் 3 -5 நிமிடங்கள் வைக்கவும்.
வெளியே எடுத்ததும் நன்கு கிளறி, உப்பு போடவும்.
வேண்டுமானால் தண்ணீர் அல்லது மோர் விட்டுக்கொள்ளவும்
பருகவும்.
சத்தான கஞ்சி தயார் .
மதியம் வரை பசிக்காது.

குறிப்பு: இது போல் காரட் துருவலையும் செயலாம்

ரசம்/குழம்பு ஓட்ஸ்

தேவையானவை:

ஓட்ஸ் 2 கரண்டி
ரசம் அல்லது குழம்பு 1 கரண்டி


செய்முறை:

ஓட்ஸ் ஐ மைக்ரோ வேவ் பாத்திரத்தில் போட்டு அது மூழ்கும் வரை தண்ணீர் விட்டு 3 - 5 நிமிஷங்கள் வரை வைக்கவும்.
(ஒவ்வொரு ஓவன் ஒரு மாதிரி அதனால் தான் 3 -5 என்றேன். நீங்கள் ஒருநாள் வைத்து பார்த்து பின் உங்களுக்கு தேவையான நேரம் வைத்துக்கொள்ளவும்.)
வெளியே எடுத்ததும் நன்கு கிளறி, ரசமோ குழம்போ விட்டு கலக்கவும்.
வேண்டுமானால் தண்ணீர் விட்டுக்கொள்ளவும்
பருகவும்.
சத்தான கஞ்சி தயார் .
மதியம் வரை பசிக்காது.

குறிப்பு:
வயசானவங்களுக்கு நாம் ஆவாளுக்கு தராமல் ஏதோ சமைத்து சாப்பிடுகிறோம் என்கிற எண்ணம் வரும், அதை தவிர்க்க வே இப்படி புன்னகை" src="http://illiweb.com/fa/i/smiles/icon_smile.gif" alt="புன்னகை" longdesc="4">வேண்டுமானால் இதுல் மாவடு சாறு, வேற ஏதேனும் ஊருகாய் கூட போடலாம்

ஓட்ஸ் கஞ்சி

இதை பல வழிகளில் போடலாம், ஒவ்வொன்றாக பார்போம.

தேவையானவை:

ஓட்ஸ் 2 கரண்டி
புளிக்காத தயிர் 1 கரண்டி
உப்பு சிறிதளவு

செய்முறை:

ஓட்ஸ் ஐ மைக்ரோ வேவ் பாத்திரத்தில் போட்டு அது மூழ்கும் வரை தண்ணீர் விட்டு 3 - 5 நிமிஷங்கள் வரை வைக்கவும்.
(ஒவ்வொரு ஓவன் ஒரு மாதிரி அதனால் தான் 3 -5 என்றேன். நீங்கள் ஒருநாள் வைத்து பார்த்து பின் உங்களுக்கு தேவையான நேரம் வைத்துக்கொள்ளவும்.)
வெளியே எடுத்ததும் நன்கு கிளறி, உப்பு தயிர் விட்டு கலக்கவும்.
வேண்டுமானால் தண்ணீர் விட்டுக்கொள்ளவும்
பருகவும்.
சத்தான கஞ்சி தயார்.
மதியம் வரை பசிக்காது புன்னகை" src="http://illiweb.com/fa/i/smiles/icon_smile.gif" alt="புன்னகை" longdesc="4">

ஓட்ஸ் இல் பலவகை உணவுகள்

"ஓட்ஸ்" சமீபகாலமாக நிறைய பேரின் காலை உணவாக மாறிவருகிறது. சக்கரை நோயாளிகள், இருதய நோயாளிகள், எடை குறைப்பவர்கள் , கர்பிணிகள் என
அனைத்து தரப்பினரும் உபயோகிக்க ஆரம்பித்து விட்டார்கள். பிடித்தோ பிடிக்காமலோ டாக்டரின் அறிவுரை இன் பேரில் சாப்பிட ஆரம்பித்து விட்டார்கள்.
நாம் அதையே ஏன் சுவையான உணவாக சாப்பிடக்கூடாது, என யோசித்தத்தான் விளைவு தான் இந்த பதிவு

Blog Archive