Showing posts with label
வீட்டில் கைவசம் இருக்கவேண்டிய Ready Made பொடிகள்.
Show all posts
Showing posts with label
வீட்டில் கைவசம் இருக்கவேண்டிய Ready Made பொடிகள்.
Show all posts
Ingredients:
- பச்சை மிளகாய்
- உப்பு
- கொஞ்சம் எண்ணை
- தண்ணீர்
Method:
- நல்ல தரமான பச்சைமிளகாயை நன்கு அலம்பி, காம்புகளை ஆய்ந்து எடுத்துக்கொள்ளவும்.
- ஒரு பெரிய பாத்திரத்தில் நிறைய தண்ணீர் வைத்து கொஞ்சம் உப்பு போட்டு அது கொதிக்கும்போது மிளகாய்களை அதில் போடவும்.
- பச்சைமிளகாய்கள் வெந்து மேலே வரும்போது அடுப்பை அணைத்துவிட்டு, ஒரு வடிகட்டி இல் கொட்டவும்.
- தண்ணீர் வடிந்ததும் , ஒரு துணி இல் போட்டு வெயிலில் நன்கு காயவிடவும்.
- கை இல் எடுத்தால் நொறுங்கணும் ; அப்போது எடுத்து, துளி எண்ணை விட்டு மிச்சி இல் பொடித்து வைக்கவும்.
- கலரில்லாத இது எங்கு தேவைப்படுமோ அங்கு போட்டுக்கலாம்
Ingredients:
- தேங்காய் பொடி அல்லது தேங்காய் துருவல் 2 கப்
- பொட்டுகடலை 1 கப்
- சோம்பு 2 டேபிள் ஸ்பூன்
- கஸ கஸா 2 டேபிள் ஸ்பூன்
- பூண்டு 10 -12 பற்கள்
Method:
- எல்லவற்றையும் மிக்சி இல் பொடித்து வைத்து கொள்ளவும்.
- குருமா செய்யும்போது தேவையான அளவு எடுத்து போட்டுக்குக்கொள்ளவும்.
Ingredients:
- மிளகு 5 - 6 டீ ஸ்பூன்
- மிளகாய் வற்றல் 10 - 12
- உப்பு
Method:
- எல்லாவற்றையும் பச்சையாக மிக்சி இல் அரைத்து வைத்துக்கொள்ளவும்.
- எரிசேரி செய்யும்போது உபயோகிக்கவும்.
Notes:
- fridge இல் வைப்பதானால் தேங்காய் துருவல் அல்லது தேங்காய் பவுடர் கலந்து வைத்துக்கொள்ளலாம்.
Ingredients:
Method:
- இதை செய்து வைத்துக்கொண்டால் பண்டிகைகளின் போது ரொம்ப சௌகர்யமாக இருக்கும்.
- ஏலக்காய் இன் தோலை நீக்கவும்.
- கஷ்டமாக இருந்தால் மைரோ வேவ் இல் வைத்து ஓர் 15 செகண்டுகள் சூடு படுத்தவும் அல்லது வாணலி இல் கை பொறுக்கும் சூட்டுக்கு வறுத்து எடுக்கவும். சரியா?
- பிறகு மிக்சி இல் போட்டு பொடித்து வைத்துக்கொள்ளவும்.
- தோல்களை டீ பொடி யுடன் போட்டு வைக்கவும் அல்லது வெல்ல டப்பாவில் போட்டு வைக்கவும்.
- வாசனையாக இருக்கும்
-
Ingredients:
- கொத்துமல்லி
- கறிவேப்பிலை
- புதினா
Method:
- கொத்துமல்லி , கறிவேப்பிலை மற்றும் புதினா இலைகளை காயவைத்தும் உபயோகிக்கலாம். அதாவது நம் நாட்டில் இவைகள் கிடைப்பது நமக்கு ரொம்ப சுலபம். ஆனால் வெளிநாடுகளில் இருக்கும்போது ரொம்ப கஷ்டம், மேலும் விலையும் ரொம்ப அதிகம். எனவே, அவற்றை 'வேஸ்ட்' செய்யாமல் உபயோகிக்கணும். அதற்குத்தான் இந்த ஐடியா
- ஒன்னும் பெரிசாக இல்லை. நாம் உபயோகித்ததும் பாக்கி இருக்கும் இலைகளை நன்கு அலம்பி, ஒரு துணி இல் போட்டு காற்றாட வைக்கவும்.
- வெய்யில் இல்லாவிட்டாலும் பரவாஇல்லை. அல்லது வெயில் இல் வைத்தால் ரொம்ப சூப்பர்
- அவ்வளவு தான் நன்கு காய்ந்ததும் - கை இல் நொறுக்கினால் நொருங்கணும் - அந்த அளவுக்கு காயணும்.
- எடுத்து பாட்டிலில் போட்டு வைத்துக்கொள்ளனும்.
- தேவையானபோது நொறுக்கி சமையலில் போட்டுக்கலாம்.
- மணமாக இருக்கும்.
- புதினா இலைகளை நொறுக்கி மோரில் போட்டு குடிக்கலாம்.
Ingredients:
Method:
- நல்ல சிவப்பு உள்ள மெல்லிய அழுத்தமான நீளமான மிளகாய் வாங்குங்கள்.
- நல்லா காய வையுங்கள்.
- காம்புகள் மற்றும் குப்பைகளை அகற்றுங்கள்.
- 1 கிலோ மிளகாய் என்றால் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் கொஞ்சம் ...கொஞ்சமே கொஞ்சம் உப்பு அல்லது பெருங்காயபொடி 1 சின்ன ஸ்பூன் போட்டு நன்றாக இடியுங்கள்.
- இது மிளகாயை பாதுகாக்கும்.
- எண்ணெய் விடுவதால் ரொம்ப நெடி வராது.
- இடிக்க முடியாது என்றால் மிக்சி இல் பொடியுங்கள்.
- Ziplock பாலித்தீன் பைகளில் வைத்து அல்லது காற்று புக முடியாத கண்ணாடி ஜாடி களில் போட்டு வையுங்கள்.
- பயமாய் இருந்தால் பிரிட்ஜில் வைக்கவும்.
- 1 வருஷமானாலும் கெடாது அருமையாக இருக்கும்.
- கலப்படம் இல்லாத மிளகாய் பொடி ரெடி
Ingredients:
- 2 - 4 SP. கருப்பு மிளகு
- 10 சிவப்பு மிளகாய்
- 2 SP கொத்தமல்லி விதைகள்
- பெருங்காயம்
- கருவேப்பிலை
- உப்பு
- எண்ணெய்
Method:
- வாணலி இல் ஒரு துளி எண்ணெய் விட்டு அனைத்து பொருட்களையும் வறுக்கவும்.
- அது ஆறினதும் மிக்சியில் அரைக்கவும்.
- ஒரு காற்று புகாத தப்ப அல்லது பாட்டில் இல் போட்டு வைத்துகொள்ளவும்.
- எப்போது மிளகு குழம்பு அல்லது மிளகு கூட்டு அல்லது மிளகு ரசம் செய்ய வேண்டுமோ இந்த பொடியை எடுத்து உடனடியாக செய்துவிடலாம்.
- ரொம்ப ஈசி.
- சில நேரத்தில் நமது குழந்தைகள் மற்றும் கணவர் சமைக்கும் போது ஒவ்வொரு முறையும் அரைக்கும் வேலை இருக்காது.
- அவர்களுக்கு சமைக்க எளிதாக இருக்கும் .
- ஏன் நமக்கே கூட ரொம்ப சௌகர்யமாய் இருக்கும் தானே ?
Ingredients:
- கொத்தமல்லி
- சீரகம்
- மிளகு
- பெரிய ஏலக்காய்
- சிறிய வகை ஏலக்காய்
- கிராம்பு
- பிரிஞ்சி இலைகள்
- ஜாதி பத்ரி
Method:
- எல்லாவற்றையும் அரைக்கவும்.
Ingredients:
- சீரகம் (வறுத்த பொடி )
- 2 டேபிள் ஸ்பூன் ஆம்சூர்
- 2 டேபிள் ஸ்பூன் மிளகாய் பொடி
- 1 / 4 ஸ்பூன் மிளகு
- 1 / 4 ஸ்பூன் கரம் மசாலா
- 1/ 2 ஸ்பூன் பிளாக் உப்பு .
Method:
- பொடித்து வைத்துக்கொள்ளவும்.
- அனைத்து கலந்து கறி வகைகள் மற்றும் குருமா பயன்படுத்தலாம்.
Ingredients:
- பட்டை
- மிளகு
- பூண்டு
- தக்காளி
- பச்சை மிளகாய்
- சோம்பு
- இஞ்சி
- பொட்டுகடலை
- தேங்காய்
- வெங்காயம்
- சிவப்பு மிளகாய் .
Method:
- அனைத்து பொருட்களையும் அரைக்கவும்.
- குருமா செய்யும் போது பயன்படுத்தலாம்.
Ingredients:
- இஞ்சி
- பச்சை மிளகாய்
- பூண்டு
- சிவப்பு மிளகாய் தூள்
- சர்க்கரை
- ஓமம்
Method:
- எல்லாவற்றையும் அப்படியே அரைக்கவும்.
- கறி அல்லது குருமா தயார் செய்யும் போது இந்த பொடியை போடலாம்.
Ingredients:
- மிளகாய்
- கொத்தமல்லி விதை
- உளுத்தம் பருப்பு
- வெந்தயம்
- கச கசா
- மிளகு
- தேங்காய்.
Method:
- எல்லாவற்றையும் அப்படியே அரைக்கவும்.
- கறி அல்லது குருமா தயார் செய்யும் போது இந்த பொடியை போடலாம்.
Ingredients:
Method:
- ஒரு வாணலி இல் சிறிது எண்ணெய் வைத்து, சிவப்பு மிளகாயை வறுக்கவும்.
- கவனமாக கருகாமல் வறுக்கணும்.
- ஆறினதும் மிக்சி இல்போட்டு 'கர கர' பாக அரைக்கணும்.
- ஒரு பாட்டில் எடுத்து வைத்துத்துக் கொள்ளுங்கள் .
- நீங்கள் எந்த சமையலிலும் அதன் காரத்தை அதிகரிக்க இந்த மிளகாய் பொடியை உபயோகிக்கலாம்.
- மேலும் நீங்கள் ஊறுகாய் போடும்போது இந்த மிளகாய் பொடியை உபயோகிக்கலாம்
Ingredients:
Method:
- குண்டாகவும், பழுப்பு, நறுமணமாகவும் உள்ள சீரகம் எடுத்துக்கொள்ளுங்கள்.
- ஒரு கடாயில் அல்லது ஒரு அணைக்கப்பட்டு அடுப்பில் ஒரு வாணலி இல் சீரகத்தை போட்டு வறுக்கவும்.
- கை பொறுக்கும் சூடு போறும்.
- பிறகு சிட்டிகை உப்பு சேர்த்து மிக்சியில் போட்டு அரைக்கவும்.
- காற்று புகாத டப்பாவில் சேமிக்கவும்.
- மோர் குடிக்கும்போது அல்லது வடஇந்திய உணவு வகைகள் செய்யும்போது உபயோகிக்கலாம்.
- வயறு சரி இல்லாத போது அல்லது 'பேதி' ஆகும்போது இந்த பொடியை சுடு சாதத்தில் போட்டு நெய் விட்டு சாப்பிட்டால் சரியாகும்.
Ingredients:
Method:
- மாங்காயை தோல் சீவி, மெல்லிய வில்லைகளாக அதாவது உளுளைகிழங்கு சிப்ஸ் போல சீவவும்.
- உடனடியாக வெயிலில் உலர்த்தவும்.
- இல்லாவிட்டால் கலர் மாறும்
- நல்லா 'சல சல' வென சத்தம் வரும்வரை தினமும் காயவைக்கவும்.
- கை இல் நொறுக்கினால் மாங்காய் வத்தல் நொறுங்கனும் அந்த அளவு காயணும். சரியா?
- (அது தான் மெட்ராஸ் இல் நல்லா வெயில் காயறதே )
- அப்படி நன்கு காய்ந்ததும் மிக்சி இல் போட்டு பொடிக்கவும்.
- அவ்வளவுதான் 'ஆம்சூர்' என்கிற மாங்காய் பொடி ரெடி.
- காற்று புகாத டப்பாவில் வைக்கவும், இல்லாவிட்டால் கட்டி கட்டியாகி விடும்.
- தேவையான போது உபயோகிக்கலாம்.
- வருடம் முழுவதும் உபயோகிக்கலாம்
Ingredients:
- 1cup கடலை பருப்பு
- 1cup உளுத்தம் பருப்பு
- 25 - 35 குண்டு மிளகாய்
- பெருங்காயம் ஒரு சின்ன துண்டு
- 1 /4cup கருப்பு எள்
- உப்பு.
- துளி எண்ணெய்
Method:
- கருப்பு எள் ளை சுத்தம் செய்யவும்.
- வறட்டு வாணலில் 'பட பட' வென பொரியும் வரை வறுக்கவும்
- தனியே வைக்கவும்.
- வாணலில் ஒரு துளி எண்ணெய் விட்டு பெருங்காயத்தை பொரிக்கவும் .
- தனியே வைக்கவும்.
- மிளகாய் வற்றலை கருகாமல் வறுக்கவும்.
- தனியே வைக்கவும்.
- இரண்டு பருப்புகளையும் தனி தனி யாக கருகாமல் வறுக்கவும்.
- ஆறினதும், எல்லாவற்றையும் மிக்சியில் போட்டு , உப்பு போட்டு உங்கள்விருப்ப படி, கரகரப்பாகவோ மிகவும் பொடியாகவோ அரைக்கவும்.
- எள் போட்ட தோசை மிளகாய் பொடி ரெடி.
- எள் போடுவதால் ரொம்ப மணமாக இருக்கும்.
Ingredients:
- 1cup கடலை பருப்பு
- 1cup உளுத்தம் பருப்பு
- 25 - 35 குண்டு மிளகாய்
- பெருங்காயம் ஒரு சின்ன துண்டு
- உப்பு.
- துளி எண்ணெய்
Method:
- வாணலில் ஒரு துளி எண்ணெய் விட்டு பெருங்காயத்தை பொரிக்கவும் .
- தனியே வைக்கவும்.
- மிளகாய் வற்றலை கருகாமல் வறுக்கவும்.
- தனியே வைக்கவும்.
- இரண்டு பருப்புகளையும் தனி தனி யாக கருகாமல் வறுக்கவும்.
- ஆறினதும், மிக்சியில் போட்டு , உப்பு போட்டு உங்கள்விருப்ப படி, கரகரப்பாகவோ மிகவும் பொடியாகவோ அரைக்கவும்.
- தோசை மிளகாய் பொடி ரெடி.
Notes:
- சிலர் ஒரு ஸ்பூன் சர்க்கரை சேர்ப்பார்கள். வேண்டுமானால் நீங்களும் சேர்க்கலாம்.
Ingredients:
- முதல் செட் :
- 200gm குண்டு மிளகாய்
- 200gm தனியா
- 2 - 3 தேக்கரண்டி எண்ணெய்
- இரண்டாவது செட் :
- தலா 2 டீ ஸ்பூன் வெந்தயம், மிளகு, சீரகம் மற்றும் கடுகு
- 200gm துவரம் பருப்பு
- 2 - 3 தேக்கரண்டி
- 3வது செட் :
- 2 கைப்பிடி கறிவேப்பிலை ( அலசி தண்ணீர் வடிய வைக்கவும்)
- 1 சின்ன கோலி குண்டு அளவு பெருங்காயம்
- 1 துண்டு பட்டை - உடைத்து வைத்துக்கொள்ளவும்
- 1 டீ ஸ்பூன் மஞ்சள் பொடி
Method:
- வானலி இல் 1 ஸ்பூன் எண்ணெய் விட்டு முதல் செட் ஐ கருகாமல் வறுக்கவும்.
- தனியே வைக்கவும்.
- அடுத்து மீண்டும் எண்ணெய்விட்டு 2 வது செட்டை கருகாமல் வறுக்கவும்.
- தனியே வைக்கவும்.
- அடுத்து மீண்டும் எண்ணெய்விட்டு 3 வது செட்டை கருகாமல் வறுக்கவும்.
- தனியே வைக்கவும்.
- கொஞ்சம் ஆறினதும், ஒவ்வொரு 'செட்' ஆக போட்டு , தனித்தனியாக மிக்சி இல் அரைக்கவும்.
- பிறகு எல்லாவற்றையும் ஒரே பேசினில் கொட்டி கலந்து எடுத்து வைக்கவும்.
- அவ்வளவு தான் உங்களின் 'கர்நாடகா ரச பொடி ' ரெடி.
- ரசம் செய்யும் போது இதை உபயோகிக்கவும்.
Notes:
- ரசம் செய்து இறக்கினதும் 1 ஸ்பூன் சர்க்கரை சேர்க்கவும்........அருமையான ரசம் தயாராகிவிடும்
Ingredients:
- 25 கிராம் குண்டு மிளகாய்
- 250 கிராம் தனியா
- 50 கிராம் மிளகு
- 100 கிராம் துவரம் பருப்பு
- 50 கிராம் சீரகம்
Method:
- மேல் கூறிய எல்லாவற்றையும் மிக்சி இல் போட்டு 'கர கரப்' பாக அரைக்கவும்.
- 'ரச பொடி ' ரெடி.
Ingredients:
- 250gm குண்டு மிளகாய்
- 500gm தனியா
- 150gm மிளகு
- 100gm துவரம் பருப்பு
- 50gm கடலை பருப்பு
- 25gm வெந்தயம்
- 25gm விரலி மஞ்சள்
- 100 gm சுக்கு
- 100 gm கஸ கஸா
Method:
- மேல் கூறிய எல்லா பொருட்களையும் ஒரு டப்பாவில் போட்டு, மெஷினில் அரைத்து, ( 3 போட்டு அரைக்கவும் ) ஒரு பேப்பரில் போட்டு ஆறவிடவும்.
- பிறகு காற்று புகாத டப்பாவில் போட்டு வைக்கவும்.
- தினசரி உபயோகத்துக்கு சிறிய டப்பாவில் எடுத்துவைததுக்கொள்ளவும்.
Notes:
- இந்த பொடி 6 மாதமானாலும் கெடாது. Fridge இல் வைத்தால் வருடக்கணக்கில் வைத்துக்கொள்ளலாம்.