- ஜவ்வரிசி 1 கப்
- சர்க்கரை 2 கப்
- பால் 1 கப்
- ஏலக்காய் பொடி ½ sp
- நெய் 2 - 3 ஸ்பூன்
- முந்திரி 1 ஸ்பூன் உடைத்தது
- கிஸ் மிஸ் 1 ஸ்பூன் ( அலம்பி துடைத்து வைக்கவும் )
- ‘கேசர் கலர்’ சில சொட்டுகள் அல்லது குங்குமப்பூ
Method:
- ஒரு பாத்திரத்தில் ஒரு ஸ்பூன் நெய் விட்டு, கிஸ் மிஸ் மற்றும் முந்திரி பருப்பை வறுக்கவும்.
- அவற்றை ஒரு தட்டில் வைக்கவும்.
- மீண்டும் கொஞ்சம் நெய்விட்டு, ஜவ்வரிசி போட்டு, நன்கு வறுக்கவும்.
- பொதுவாக இது அதன் அசல் அளவை விட 2 - 3 மடங்கு பெரியதாக மாறும்.
- கருகாமல், ஆனால் நன்றாக வறுக்கவும்.
- தண்ணீர் + பாதி பால் விடவும்.
- நன்றாக கிளறவும்; ஒரு மூடி போட்டு வேகவிடவும்.
- ஜவ்வரிசி நன்றாக வேகவேண்டும்; நடுநடுவில் கிளறிவிடவும்.
- தேவையானால் இன்னும் தண்ணீர் சேர்க்கலாம்.
- ஜவ்வரிசி நன்கு வெந்ததும், சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கவும்.
- மீதி பாலை சேர்க்கவும்; ‘கேசர் கலர்’ சில சொட்டுகள் அல்லது குங்குமப்பூ வை பாலில் சேர்த்து கரைத்து பின் பாயசத்தில் சேர்க்கவும்.
- எல்லாமாக சேர்ந்து நன்கு கொதிக்கட்டும்.
- ஏலக்காய் பொடி , வறுத்த முந்திரி மற்றும் கிஸ் மிஸ் சேர்க்கவும்.
- அடுப்பிலிருந்து இறக்கவும்.
- அருமையான, ஜவ்வரிசி பாயசம் தயார்.
- சூடாக அல்லது குளிராக பரிமாறவும்.
Notes:
- ஜவ்வரிசியை வறுத்ததும், பால் மற்றும் தண்ணீர் விட்டு ஒரு பாத்திரத்தில் போட்டு குக்கரில் வைத்துவிடவும். மூன்று விசில் வரை வைத்திருந்து பிறகு எடுத்து சர்க்கரை சேர்த்து பாயசம் செய்யவும். இப்படி செய்வதால், நேரம் மிச்சமாவதுடன், ஜவ்வரிசி நன்கு வேகும்.
No comments:
Post a Comment