Showing posts with label வத்தல் வாடாம் வகைகள். Show all posts
Showing posts with label வத்தல் வாடாம் வகைகள். Show all posts

Wednesday, October 7, 2020

மாங்காய் மிளகு குழம்பு

Ingredients:
  • காய்ந்த மாங்காய் துண்டங்கள் - 10 -12
  • மிளகு - 2 -4 டீ ஸ்பூன்
  • மிளகாய் வற்றல் 10 -12
  • தனியா 2 டேபிள் ஸ்பூன்
  • பெருங்காயப்பொடி 1/4 டீ ஸ்பூன்
  • புளி ஜலம் - 2 கப் அல்லது 2 டீ ஸ்பூன் புளி பேஸ்ட்
  • உப்பு
  • எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
  • கறிவேப்பிலை - கொஞ்சம்
  • மஞ்சள் பொடி - கொஞ்சம்
  • தாளிக்க கொஞ்சம் கடுகு , கறிவேப்பிலை


Method:
  • மாங்காய் துண்டங்களை கொஞ்சம் தண்ணிரில் ஊற வைக்கவும்.
  • வாணலி இல் மிளகு,மிளகாய் வற்றல், தனியா மற்றும் கறிவேப்பிலையை கொஞ்சம் எண்ணெய் விட்டு வறுக்கவும்.
  • மிக்சி இல் அரைக்கவும்.
  • வாணலி இல் எண்ணெய் விட்டு கடுகு கறிவேப்பிலை தாளிக்கவும்.
  • புளி ஜலம் விடவும்.
  • மட்டாக உப்பு போடவும்.
  • ஊறவைத்த மாங்காய் துண்டங்களை போடவும்.
  • பெருங்காயப்பொடி மற்றும் மஞ்சள் பொடி போடவும்.
  • அரைத்து வைத்த மசாலாவையும் போடவும்.
  • எல்லாமாக சேர்ந்து நன்கு கொதிக்கட்டும்.
  • மாங்காய் வெந்து குழம்பு இறுகும் வரை குழம்பு கொதிக்கட்டும்.
  • பிறகு இறக்கவும்.
  • ரொம்ப மணமான மிளகு குழம்பு தயார்.
  • சுடு சாதத்தில் நிறைய நெய் விட்டு இதை சாப்பிடவும்.
  • காச்சின அப்பளம் போறும் தொட்டுக்க


Notes:
  • மிளகு குழம்பு உடலுக்கு ரொம்ப நல்லது. இதை மாங்காய் போட்டு அல்லது போடாமலும் செய்யலாம். குளிர் காலத்தில் சளி பிடித்திருக்கும் போது வாய்க்கு ரொம்ப ஆரோகியமாக இருக்கும்.
  • மாங்காய் இல் உப்பு இருப்பதால் உப்பு போடும் போது நினைவாக குறைந்த அளவே போடவும்

மோர் மிளகாய்

Ingredients:
  • பச்சைமிளகாய் 1 கிலோ
  • கெட்டி யாக குழப்பின மோர் 1 கிலோ
  • உப்பு


Method:
  • பச்சை மிளகாய் களை நன்கு அலம்பவும்.
  • காம்பு கிள்ள வேண்டாம், வால் பக்கத்தில் கீறவும் , அதாவது விதை சிதறாமல் மிளகாயை பிளக்கவும்.
  • ஒரு பெரிய பிளாஸ்டிக் பக்கெட்டில் மோர் மொத்தத்தையும் விடவும்.
  • உப்பு போட்டு கலக்கவும்.
  • மிளகாய்களை அதில் போடவும்.
  • மோர், மிளகாய்கள் மேலே இருக்கணும். ( தேவையானால் கொஞ்சம் ( ரொம்ப கொஞ்சம் ) தண்ணீர் விட்டுக்கொள்ளவும்)
  • 2 நாள் அப்படியே ஊறட்டும்.
  • ஆனால் தினமும் ஒரு முறை குலுக்கி விடனும்.
  • முன்றாம் நாளில் இருந்து வெறும் மிளகாய்களை மட்டும் ( கலர் மாறி இருக்கும் ) எடுத்து , ஒரு முங்கில் தட்டில் போட்டு வெயிலில் காய வைக்கவும்.
  • சாயங்காலம் ஆனதும், மீண்டும் மோரில் போட்டுவிடவும்.
  • மறுநாள் மீண்டும் மிளகாய்களை காய வைக்கவும்.
  • இப்படியே மொத்த மோரும் ஆகும் வரை செய்யணும்.
  • அப்புறமும் மிளகாய்கள் நன்கு ( நொறுங்கும் பதம் ) காயும் வரை காய வைத்து சேமிக்கவும்.
  • தேவையான போது எடுத்து வறுத்துக்கொள்ளவும்.
  • வருஷத்துக்கும் நல்லா இருக்கும்.
  • தயிர் சாதம் மற்றும் 'மோர் கூழ் ' செய்யும் போது உபயோகிக்கலாம்.

அவரை மற்றும் கொத்தவரை வற்றல்

Ingredients:
  • பிஞ்சான அவரைக்காய் 2 கிலோ ( அல்லது தேவையான அளவு )
  • உப்பு


Method:
  • பெரிய வாணலி அல்லது பெரிய குக்கரின் அடிபாகம் எடுத்துக்கொண்டு அதில் தண்ணீர் விடவும்.
  • நன்கு கொதிக்க ஆரம்பித்ததும் அலம்பி வைத்துள்ள அவரை அலல்து கொத்ததவங்காய்களை அதில் போடவும்.
  • காய்கள் முழ்கும் அளவு தண்ணீர் இருக்கணும்.
  • மேலே மூடி போடவும்.
  • ஒரு 2 நிமிடம் கழித்து நன்கு கிளறி விடவும்.
  • காய்கள் அரை வேக்காடாக இருக்கும் போது உப்பு போடவும்.
  • நன்கு வெந்ததும், வடி தட்டில் காய்களை கொட்டவும்.
  • தண்ணீரை நன்கு வடித்துவிட்டு , காய்களை வெயிலில் நன்கு காய வைக்கவும்.
  • காய்களை உடைக்க வரணும்.
  • அப்படி ' மொறு மொறுப்பாக' காய வைக்கவும்.
  • காற்று புடாத டப்பாக்களில் சேமிக்கவும்.
  • தேவையான போது எடுத்து வறுக்கவும்.
  • கலந்த சாதங்கள் மற்றும் மோர் சாதத்துக்கு ரொம்ப நல்லா இருக்கும்.

கத்தரிக்காய் வற்றல்

Ingredients:
  • கத்தரிக்காய்யை நீள நீள மாக வெட்டி வெயிலில் நன்றாக காயவைக்கணும். (வைத்தலை உடைக்கவரனும் )


Method:
  • குழம்பு செய்யும் முன் ஒரு 10 - 15 நிமிஷம் தண்ணிரில் ஊரவைக்கணும்.
  • குழம்பு கொதிக்கும் போதே, ஊறவைத்த தண்ணியுடன் வத்தலையும் போட்டுடனும். புளி தண்ணியுடன் வத்தலும் கொதிக்கணும் அப்பதான் taste வரும்.
  • இந்த வத்தலை பருப்பு சாம்பாரிலும் போடலாம், வத்த குழம்பிலும் போடலாம்.
  • சாயந்தரம் ஆக ஆக கத்தரிக்காய் ஊறி ண்டு ரொம்ப நல்ல இருக்கும். அரிசி உப்புமா விற்கு நல்ல துணை.


Notes:
  • கத்தரிக்காய் வற்றல் - இது போடுவதும் சுலபம். குழம்பில் போடுவதும் சுலபம்.

அவல் வத்தல் - 2

Ingredients:
  • 1 கிலோ கெட்டி அவல்
  • 1/4 கிலோ பொடியாக அரிந்த பூசணி (வெள்ளை நிறத்தில் இருப்பது )
  • 1/2 கிலோ பொடியாக நறுக்கிய வெங்காயம்
  • 200 பச்சை மிளகாய்
  • 2 ஸ்பூன் ஓமம் அல்லது சீரகம்
  • உப்பு


Method:
  • முதலில் அவலை 2 - 3 முறை தண்ணீர் விட்டு நன்கு அலசவும்.
  • பிறகு அவல் மூழ்கும் வரை தண்ணீர் விட்டு ஒரு 1/2 மணி வாக்கவும்.
  • இதனிடையே பூசணிக்காயை பொடியாக நறுக்கி அல்லது துருவி பிழிந்து வாக்கவும்.
  • ஊறி பிழிந்த அவலில் பிழிந்து வைத்துள்ள பூசணிக்கா. வெங்காயம், ஓமம் அல்லது சீரகம் (தேவை இல்லை என்றால் போடவேண்டாம் ) மற்றும் பச்சை மிளகாயை போட்டு கலக்கவும்.
  • நன்கு பிசையவும்.
  • பிளாஸ்டிக் ஷீட் இல் கையால் மாவை எடுத்து பகோடா போடுவது போல் கிள்ளி, கிள்ளி வைக்கவும்.
  • காய கொஞ்சம் லேட் ஆனாலும் பொறுமயாக 2 நாள் காய வைத்து டப்பாவில் அடைக்கவும்.
  • தேவயான போது வறுக்கலாம்.
  • கலந்த சாத வகைகளுக்கு ரொம்ப நல்ல இருக்கும்
  • வெறுமன கூட சயந்தரம் காஃபி அல்லது டீ யுடன் சாப்பிடலாம்.
  • நல்லா வெள்ளையாக பொரிந்து கொண்டு பார்பதர்க்கும் அழகாக இருக்கும்.


Notes:
  • அவல் வத்தல் - இதுவும் பகோடா போல இருக்கும். ரொம்ப சுவையானது.
  • அபாரமாக இருக்கும்

Blog Archive