Showing posts with label சப்பாத்தி வகைகள். Show all posts
Showing posts with label சப்பாத்தி வகைகள். Show all posts

Friday, October 9, 2020

சௌதி 'கர கர' சப்பாத்தி

Ingredients:
  • 1 கப் கோதுமை மாவு
  • 1 டீஸ்பூன் எள் (வெள்ளை அல்லது கருப்பு)
  • 1 ஸ்பூன் பெருஞ்சீரகம் அல்லது சோம்பு போடலாம்
  • 1 ஸ்பூன் சீரகம்
  • 1 ஸ்பூன் எண்ணெய்
  • உப்பு

Method:
  • அனைத்து பொருட்களையும் எண்ணெயுடன் கலக்கவும்.
  • தண்ணீரை தெளித்தது, சப்பாத்திமாவு போல கலக்கவும்.
  • இந்த மாவில் சப்பாத்திகளை இட்டு, இரண்டு பக்கமும் தோசை கல்லில் போட்டு நன்கு சூடாக்கவும்.
  • பிறகு அதை மைக்ரோவேவ் ஓவனில் (ஒவ்வொரு பக்கமும் ஒரு நிமிடம்) வைத்து நல்ல கரகரப்பாக வரும்வரை காய்ச்சி எடுக்கவும்.
  • காற்று இறுக்கமான டப்பாக்களில் சேமிக்கவும்.
  • உங்கள் மாலை தேநீருடன் ஒரு சிற்றுண்டியாக இதை சாப்பிடுங்கள்!
  • நல்ல மசாலா வாசனையுடன் கரகரப்பான புதுவித சிற்றுண்டி இது.
  • ஒருமுறை செய்து பாருங்கள் , உங்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும்.
  • பிரயாணங்களை ஏற்றது.

Notes:
  • அங்கு ( சௌதி) கடை இல் இது போல் கிடைக்கும், மிக அருமையாக இருக்கும். வாங்கி வைத்துக் கொள்வோம். மாலை டீ அல்லது காபியுடன் சாப்பிட நன்றாக இருக்கும். வயிற்றுக்கு நிறைவாகவும் இருக்கும் .

காக்ரா கரகரப்பான சப்பாத்தி

Ingredients:
  • கோதுமை மாவு - 2 கப்
  • நெய் ஒரு டேபிள் ஸ்பூன்
  • உப்பு - அரை டீஸ்பூன்.

Method:
  • மாவை உப்பு சேர்த்து, ‘மெத்’தென்று பிசைந்து கொள்ளவும்.
  • மிக மெல்லிய சப்பாத்திகளாக இட்டு, தோசைக்கல்லில் போடவும்.
  • எண்ணெய் தடவத் தேவையில்லை.
  • இரண்டு சப்பாத்திகளை ஒன்றன் மேல் ஒன்றாக தோசைக்கல்லில் போட்டு, கனமான துணி கொண்டு இருபுறமும் நன்கு அழுத்தி எடுங்கவும்.
  • சப்பாத்திகள் அப்பளம் போல நன்கு மொறுமொறுப்பாக வரும்வரை, இப்படியே திருப்பித் திருப்பிவிட்டு, துணியால் அழுத்திவிட்டு எடுத்தால், ‘கரகர’ காக்ரா ரெடி.
  • காக்ராவை பல நாட்களுக்கு வைத்திருந்து சாப்பிடலாம். கெட்டுப்போகாது.
  • பயணங்களுக்கு ஏற்றது.

Notes:
  • இதில் மேத்தி இலைகள் அதாவது வெந்தயக் கீரை இலைகள் சேர்த்தும் செய்யாலாம், அல்லது மசாலா போட்டும் செய்யலாம். மீந்து போன சப்பாத்திகளை ஓவனில் காயவைத்தும் வைத்துக் கொள்ளலாம்.

புல்கா அதாவது மிருதுவான சப்பாத்தி

Ingredients:
  • கோதுமை மாவு - 2 கப்
  • உப்பு - அரை டீஸ்பூன்
  • தண்ணீர் - தேவையான அளவு.

Method:
  • கோதுமை மாவுடன் உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து 'மெத்' என்று பிசைந்து கொள்ளவும்.
  • அந்த மாவிலிருந்து சிறிதளவு எடுத்து, ஓரளவிற்கு மெல்லிய சப்பாத்தியாக இடவேண்டும்.
  • பிறகு, தோசைக்கல்லை காய்ந்ததும், இட்ட சப்பாத்தியைப் போட்டு, இருபுறமும் திருப்பித் திருப்பிவிடவும்.
  • பிறகு, பக்கத்து அடுப்பில், மிதமான தீயில், சப்பாத்தி சுடும் வலையிலோ அல்லது நேரடியாக அடுப்பிலோ சப்பாத்தியைப் போட்டால் அது நன்கு எழும்பி வரும்.
  • அவ்வாறு வந்தபின், திருப்பிவிட்டு மறுபுறமும் வெந்ததும் எடுத்து விடவும்.
  • இதுதான், எண்ணெயில்லாத புல்கா.
  • புல்காவை எடுத்தபிறகு அதன் மேலே விருப்பம் போல, நெய் தடவி அல்லது அப்படியேவும் சாப்பிடலாம்.
  • எந்த சப்ஜியுடனும் இது நன்றாக இருக்கும்.

Notes:
  • புல்காவுக்காக, சப்பாத்தி இடும் போது ஒரே சீராகத் இடவேண்டும். ஒரு பக்கம் கனமாக வும், ஒரு பக்கம் லேசாகவும் இருந்தால் எழும்பி வராது. மாவு நல்ல 'மெத்' என்று இருக்கவேண்டும். மேலும், எப்பொழுதுமே சப்பாத்தி இடும்பொழுது, ஒரே பக்கமாக இடவேண்டும், திருப்பி போட்டு திருப்பி போட்டு இடக்கூடாது.

காரட் மசாலா சப்பாத்தி

Ingredients:
  • கோதுமை மாவு - 2 கப்
  • நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
  • துருவிய காரட் - 2 கப்
  • பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - ஒரு டேபிள் ஸ்பூன்
  • கரம் மசாலா - அரை டீ ஸ்பூன்
  • 'ஆம் சூர்' எனப்படும் மாங்காய் பொடி - ஒரு ஸ்பூன்
  • உப்பு - தேவையான அளவு
  • எண்ணெய் - நெய் கலவை - தேவையான அளவு.

Method:
  • ஒரு பேசினில், துருவிய காரட், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், கரம் மசாலா, 'ஆம் சூர்', கோதுமை மாவு, நெய், உப்பு சேர்த்து தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும் .
  • இந்த மாவை வழக்கம்போல சப்பாத்தியாக இட்டு , தோசைக்கல்லில் போட்டு எண்ணெய், நெய் கலவை விட்டு எடுக்கவும் .
  • சுவையான காரட் மசாலா சப்பாத்தி தயார்.

காரட் சப்பாத்தி

Ingredients:
  • கோதுமை மாவு - 2 கப்
  • நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
  • துருவிய காரட் - 2 கப்
  • பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - ஒரு டேபிள் ஸ்பூன்
  • உப்பு - தேவையான அளவு
  • எண்ணெய் - நெய் கலவை - தேவையான அளவு.

Method:
  • ஒரு பேசினில், துருவிய காரட், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், கோதுமை மாவு, நெய், உப்பு சேர்த்து தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும் .
  • இந்த மாவை வழக்கம்போல சப்பாத்தியாக இட்டு , தோசைக்கல்லில் போட்டு எண்ணெய், நெய் கலவை விட்டு எடுக்கவும் .
  • அழகிய கலரில் கண்ணைக் கவரும் இந்த சப்பாத்தி, குழந்தைகளுக்கு பிடித்தமான அயிட்டம்.
  • நமக்கும் பார்க்க ஆரஞ்சு கலரில் உள்ள சப்பாத்தி பிடிக்கும்.

காரட் இனிப்பு சப்பாத்தி

Ingredients:
  • கோதுமை மாவு - 2 கப்
  • நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
  • உப்பு - தேவையான அளவு
  • எண்ணெய் - நெய் கலவை - தேவையான அளவு.
  • அரைக்க:
  • வேகவைத்தகாரட் (நடுத்தரமான அளவு) - 2
  • வெல்லம் அல்லது கருப்பட்டி நாலு டேபிள் ஸ்பூன்
  • ஏலப்பொடி அரை டீ ஸ்பூன்

Method:
  • காரட்டை வெல்லத்துடன் அரைத்து வடிகட்டிக் கொள்ளவும்.
  • வடிகட்டிய சாறுடன் கோதுமை மாவு, நெய், உப்பு, ஏலப்பொடி சேர்த்து தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும் .
  • இந்த மாவை வழக்கம்போல சப்பாத்தியாக இட்டு , தோசைக்கல்லில் போட்டு எண்ணெய், நெய் கலவை விட்டு எடுக்கவும் .
  • அழகிய பிங்க் கலரில் கண்ணைக் கவரும் இந்த சப்பாத்தி, குழந்தைகளுக்கு பிடித்தமான அயிட்டம்.
  • தித்திப்பாக இருப்பதாலும் குழந்தைகள் விரும்புவர்.

பீட்ரூட் இனிப்பு சப்பாத்தி

Ingredients:
  • கோதுமை மாவு - 2 கப்
  • நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
  • உப்பு - தேவையான அளவு
  • எண்ணெய் - நெய் கலவை - தேவையான அளவு.
  • அரைக்க:
  • வேகவைத்த பீட்ரூட் (நடுத்தரமான அளவு) - 1
  • வெல்லம் அல்லது கருப்பட்டி நாலு டேபிள் ஸ்பூன்
  • ஏலப்பொடி அரை டீ ஸ்பூன்

Method:
  • பீட்ருட்டை வெல்லத்த்துடன் அரைத்து வடிகட்டிக் கொள்ளவும்.
  • வடிகட்டிய சாறுடன் கோதுமை மாவு, நெய், உப்பு, ஏலப்பொடி சேர்த்து தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும் .
  • இந்த மாவை வழக்கம்போல சப்பாத்தியாக இட்டு , தோசைக்கல்லில் போட்டு எண்ணெய், நெய் கலவை விட்டு எடுக்கவும் .
  • அழகிய பிங்க் கலரில் கண்ணைக் கவரும் இந்த சப்பாத்தி, குழந்தைகளுக்கு பிடித்தமான அயிட்டம்.
  • தித்திப்பாக இருப்பதாலும் குழந்தைகள் விரும்புவர்.

பீட்ரூட் சப்பாத்தி

Ingredients:
  • கோதுமை மாவு - 2 கப்
  • நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
  • உப்பு - தேவையான அளவு
  • எண்ணெய் - நெய் கலவை - தேவையான அளவு.
  • அரைக்க:
  • வேகவைத்த பீட்ரூட் (நடுத்தரமான அளவு) - 1
  • இஞ்சி துருவல் - ஒரு டீஸ்பூன்
  • மிளகாய் பொடி - ஒரு டீஸ்பூன்
  • பூண்டு - 2 பல்
  • உப்பு - தேவையான அளவு.

Method:
  • அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை தண்ணீர் சேர்த்து அரைத்து, வடிகட்டிக் கொள்ளவும்.
  • வடிகட்டிய சாறுடன் கோதுமை மாவு, நெய், உப்பு சேர்த்து தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும் .
  • இந்த மாவை வழக்கம்போல சப்பாத்தியாக இட்டு , தோசைக்கல்லில் போட்டு எண்ணெய், நெய் கலவை விட்டு எடுக்கவும் .
  • அழகிய பிங்க் கலரில் கண்ணைக் கவரும் இந்த சப்பாத்தி, குழந்தைகளுக்கு பிடித்தமான அயிட்டம்.

கார மசாலா சப்பாத்தி

Ingredients:
  • கோதுமை மாவு - 2 கப்
  • மிளகாய் பொடி - அரை டீஸ்பூன்
  • கரம் மசாலா பொடி - அரை ஸ்பூன்
  • நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
  • உப்பு - தேவையான அளவு
  • எண்ணெய் - நெய் கலவை - தேவையான அளவு.

Method:
  • கோதுமை மாவுடன் உப்பு, நெய் சேர்த்துநன்கு கலக்கவும்.
  • அதில் மிளகாய் பொடி, கரம் மசாலா பொடி போட்டு தேவையான தண்ணீர் விட்டு நன்கு பிசைந்து கொள்ளவும்.
  • சப்பாத்திகளாக இட்டு, தோசைக்கல்லில் போட்டு, எண்ணெய் - நெய் கலவை விட்டு எடுக்கவும்.
  • கொஞ்சம் காரத்துடன் இந்த சப்பாத்தி நன்றாக இருக்கும்.
  • காரம் குறைவான 'தால்' இதற்கு தொட்டுக்கொள்ள நன்றாக இருக்கும்.

Notes:
  • இதில் மிளகாய் பொடிக்கு பதில் இஞ்சி பச்சை மிளகாய் அரைத்து விட்டும் மசாலா சப்பாத்தி செய்யலாம்.

கார சப்பாத்தி

Ingredients:
  • கோதுமை மாவு - 2 கப்
  • மிளகாய் பொடி - அரை டீஸ்பூன்
  • நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
  • உப்பு - தேவையான அளவு
  • எண்ணெய் - நெய் கலவை - தேவையான அளவு.

Method:
  • கோதுமை மாவுடன் உப்பு, நெய் சேர்த்துநன்கு கலக்கவும்.
  • அதில் மிளகாய் பொடி போட்டு தேவையான தண்ணீர் விட்டு நன்கு பிசைந்து கொள்ளவும்.
  • சப்பாத்திகளாக இட்டு, தோசைக்கல்லில் போட்டு, எண்ணெய் - நெய் கலவை விட்டு எடுக்கவும்.
  • கொஞ்சம் காரத்துடன் இந்த சப்பாத்தி நன்றாக இருக்கும்.
  • காரம் குறைவான 'தால்' இதற்கு தொட்டுக்கொள்ள நன்றாக இருக்கும்.

க்ரீன் மசாலா சப்பாத்தி

Ingredients:
  • கோதுமை மாவு - 2 கப்
  • நெய் - 1 டேபிள்ஸ்பூன்
  • உப்பு - அரை டீஸ்பூன்
  • நெய் - எண்ணெய் கலவை - தேவையான அளவு.
  • மசாலாவிற்கு :
  • புதினா - 2 கைப்பிடி
  • மல்லித்தழை - 2 கைப்பிடி
  • இஞ்சி - 1 துண்டு
  • பூண்டு - 3 - 5 பல்
  • பச்சை மிளகாய் - 3 - 5
  • உப்பு - தேவையான அளவு

Method:
  • அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை அரைத்துக்கொள்ளுங்கள்.
  • தண்ணீர் மட்டா விடுங்கள்.
  • மாவுடன் நெய், உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.
  • பிறகு அரைத்த விழுதை போட்டு நன்கு மென்மையாக பிசையுங்கள்.
  • தேவையானால் மட்டுமே தண்ணீர் சேர்க்கவும்.
  • மெல்லிய சப்பாத்திகளாக இட்டு , தோசை தவாவில் எண்ணெய்-நெய் கலவை சேர்த்து வேகவிட்டு எடுக்கவும்.
  • கண்ணுக்குக் குளுமையான பசுமையான நிறத்தில், வாய்க்கு ருசியான க்ரீன் மசாலா சப்பாத்தி ரெடி.
  • எப்பொழுதும் போல் இதற்கும் தயிர் தான் சூப்பர் ஆக இருக்கும் .

பச்சை சோள கார்ன் சப்பாத்தி

Ingredients:
  • கோதுமை மாவு - ஒரு கப்,
  • பச்சை சோளம் - 1 ஆழாக்கு - 200 கிராம் அல்லது ஒன்றோ இரண்டோ சோளக் கதிர்
  • பச்சை மிளகாய் 8 - 10
  • கரம் மசாலா = ஒரு ஸ்பூன்
  • உப்பு - ஒரு சிட்டிகை
  • நெய் - 2 டீஸ்பூன் (மாவு கலக்க )
  • நெய் எண்ணெய் கலவை சப்பாத்தி செய்ய

Method:
  • சோளத்தை துருவிக் கொள்ளவும்.
  • அல்லது உதிர்த்து மிக்சி இல் ஒரு முறை அரைத்துக் கொள்ளவும்.
  • பிறகு, தனியே ஒரு கிண்ணத்தில், உப்பு மற்றும் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாயை நன்கு கசக்கிப் பிசையவும்.
  • ஒரு பேசினில் போட்டுக்கொண்டு, மேலே கொடுத்துள்ள எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து, பிசைந்துகொள்ளுங்கள்.
  • தண்ணீர் தேவை இருக்காது, வேண்டுமானால் கொஞ்சம் தெளித்துக் கொள்ளுங்கள்.
  • பிறகு, சப்பாத்திகளாக இட்டு, நெய் எண்ணெய் கலவையை விட்டு, இரண்டு பக்கமும் வேகவிட்டு எடுங்கள்.
  • இந்த சப்பாத்தியும் மிக மிருதுவாக இருக்கும்.
  • இப்படி நாம் காய்கறிகளை அரைத்து செய்வதால், குழந்தைகளுக்கு விதம் விதமாய் செய்தது போலவும் இருக்கும், காய்கறியும் உடம்பில் சேரும்.

Notes:
  • அதிக காரம் தேவைப்படுபவர்கள் கொஞ்சம் வறட்டு மிளகாய் பொடி - ஒரு ஸ்பூன் சேர்த்துக் கொள்ளலாம் .

பச்சை பட்டாணி சப்பாத்தி

Ingredients:
  • கோதுமை மாவு - ஒரு கப்,
  • பச்சை பட்டாணி - 1 ஆழாக்கு - 200 கிராம்
  • பச்சை மிளகாய் 8 - 10
  • கரம் மசாலா = ஒரு ஸ்பூன்
  • உப்பு - ஒரு சிட்டிகை
  • நெய் - 2 டீஸ்பூன் (மாவு கலக்க )
  • நெய் எண்ணெய் கலவை சப்பாத்தி செய்ய

Method:
  • பட்டாணியை நன்கு அலசி, மிக்சி இல் ஒரு சுற்று சுற்றி எடுத்துக் கொள்ளுங்கள்.
  • தனியே ஒரு கிண்ணத்தில், உப்பு மற்றும் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாயை நன்கு கசக்கிப் பிசையவும்.
  • ஒரு பேசினில் போட்டுக்கொண்டு, மேலே கொடுத்துள்ள எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து, பிசைந்துகொள்ளுங்கள்.
  • தண்ணீர் தேவை இருக்காது, வேண்டுமானால் கொஞ்சம் தெளித்துக் கொள்ளுங்கள்.
  • பிறகு, சப்பாத்திகளாக இட்டு, நெய் எண்ணெய் கலவையை விட்டு, இரண்டு பக்கமும் வேகவிட்டு எடுங்கள்.
  • இந்த சப்பாத்தி மிக மிருதுவாக இருக்கும்.

Notes:
  • அதிக காரம் தேவைப்படுபவர்கள் கொஞ்சம் வறட்டு மிளகாய் பொடி - ஒரு ஸ்பூன் சேர்த்துக் கொள்ளலாம் .

ஆப்பிள் சப்பாத்தி

Ingredients:
  • கோதுமை மாவு - ஒரு கப்,
  • பெரிய ஆப்பிள் - 1
  • சர்க்கரை - ஒரு டேபிள்ஸ்பூன்,
  • உப்பு - ஒரு சிட்டிகை,
  • நெய் - 2 டீஸ்பூன்

Method:
  • ஆப்பிளை நன்கு துருவிக் மசித்துக்கொள்ளுங்கள்.
  • மேலே கொடுத்துள்ள எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து, பிசைந்துகொள்ளுங்கள்.
  • தண்ணீர் தேவை இருக்காது, வேண்டுமானால் கொஞ்சம் தெளித்துக் கொள்ளுங்கள்.
  • பிறகு, சப்பாத்திகளாக இட்டு, நெய் விட்டு, இரண்டு பக்கமும் வேகவிட்டு எடுங்கள்.
  • இந்த சப்பாத்தி மிக மிருதுவாக இருக்கும்.
  • இனிப்பு பிடிக்கும் குழந்தைகளுக்கு , தேன் அல்லது வெல்லம் அல்லது சர்க்கரை தொட்டுக் கொடுக்கலாம்.
  • எனவே, சிறு குழந்தைகளுக்கும், மெல்ல முடியாத வயோதிகர்களுக்கும் கூட ஏற்ற சப்பாத்தி.

வாழைப்பழ சப்பாத்தி

Ingredients:
  • கோதுமை மாவு - ஒரு கப்,
  • கனிந்த வாழைப்பழம் - 1 - 2
  • சர்க்கரை - ஒரு டேபிள்ஸ்பூன்,
  • உப்பு - ஒரு சிட்டிகை,
  • நெய் - 2 டீஸ்பூன்

Method:
  • வாழைப்பழத்தை நன்கு மசித்துக்கொள்ளுங்கள்.
  • மேலே கொடுத்துள்ள எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து, பிசைந்துகொள்ளுங்கள்.
  • தண்ணீர் தேவை இருக்காது, வேண்டுமானால் கொஞ்சம் தெளித்துக் கொள்ளுங்கள்.
  • பிறகு, சப்பாத்திகளாக இட்டு, நெய் விட்டு, இரண்டு பக்கமும் வேகவிட்டு எடுங்கள்.
  • இந்த சப்பாத்தி மிக மிருதுவாக இருக்கும்.
  • இனிப்பு பிடிக்கும் குழந்தைகளுக்கு , தேன் அல்லது வெல்லம் அல்லது சர்க்கரை தொட்டுக் கொடுக்கலாம்.
  • நெய் விட்டும் கொடுக்கலாம்.
  • எனவே, சிறு குழந்தைகளுக்கும், மெல்ல முடியாத வயோதிகர்களுக்கும் கூட ஏற்ற சப்பாத்தி.

வெந்தயக் கீரை சப்பாத்தி

Ingredients:
  • கோதுமை மாவு - 2 கப்,
  • கடலை மாவு - ஒரு டேபிள்ஸ்பூன்,
  • மஞ்சள் பொடி - அரை டீஸ்பூன்,
  • வெந்தயக் கீரை - 2 கட்டு ( நன்கு வளர்ந்த வெந்தயக் கீரைதான் இதற்கு வேண்டும் )
  • வறட்டு மிளகாய் பொடி - ஒரு டீஸ்பூன், (தேவையானால் )
  • பச்சை மிளகாய் 8 - 10
  • உப்பு - தேவையான அளவு
  • எண்ணெய்-நெய் கலவை - தேவையான அளவு.

Method:
  • வெந்தயக் கீரையை இலைகளாக ஆய்ந்து கொண்டு, தண்ணீரில் அலசி, வடியவிடுங்கள்.
  • தனியே ஒரு கிண்ணத்தில், உப்பு மற்றும் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாயை நன்கு கசக்கிப் பிசையவும்.
  • மற்றும் ஒரு பேசினில், ஒரு டீஸ்பூன் நெய் + ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு, கோதுமை மாவு, கடலை மாவு, மஞ்சள் பொடி, மிளகாய் பொடி எல்லாம் சேர்த்து, தண்ணீர் விடாமல் நன்கு கலக்கவும்.
  • இப்பொழுது ஆய்ந்த கீரையைப் போட்டு, நன்றாகப் பிசைந்து கொள்ளவும்.
  • உப்பு மிளகாய் கலவையையும் சேர்த்து நன்கு பிசையவும்.
  • தேவையானால் கொஞ்சம் தண்ணீர் தெளித்துக் கொள்ளலாம்.
  • மாவு நன்கு கெட்டியாக, சப்பாத்தி மாவுபோல் இருக்க வேண்டும்.
  • அப்படியே ஒரு பத்து நிமிடங்கள் மூடி வைத்திருங்கள்.
  • பிறகு பிசைந்த மாவை சிறிய சப்பாத்திகளாக இட்டு , தோசைக்கல்லில் போட்டு, எண்ணெய்-நெய் கலவையை விட்டு இரண்டு பக்கங்களும் பவுன் நிறமாக எடுங்கள்.
  • சுவையான மேத்தி சப்பாத்தி தயார்.
  • இதற்கு தொட்டுக்கொள்ள கெட்டித்தயிர் மற்றும் ஏதாவது ஊறுகாய் போதும்.

Notes:
  • எண்ணெய்-நெய் கலவை - தோசை மற்றும் சப்பாத்தி செய்வதற்கு எப்போதுமே எண்ணெய் அரை கப் என்றால், நெய் கால் கப் என்ற விகிதத்தில் கலந்து வைத்துக் கொள்ளுங்கள். அருமையாக, மணமாக இருக்கும்.

மிகவும் மிருதுவான சப்பாத்தி

Ingredients:
  • 1 கப் கோதுமை மாவு
  • 1 கரண்டி நல்லெண்ணெய்
  • 2 கரண்டி நெய்
  • உப்பு

Method:
  • ஒரு பேசினில் கோதுமை மாவு போடவும்.
  • உப்பு மற்றும் எண்ணெய் சேர்க்கவும்.
  • நன்றாக கலக்கவும்.
  • தண்ணீர் சேர்த்து நன்றாக பிசையவும்.
  • அரை மணி நேரம் அப்படியே வைத்துவிடவும்.
  • பிறகு சிறிது சிறிதாக உருட்டிக்கொள்ளவும்.
  • சப்பாத்தியாக இடவும்.
  • அடுப்பில் தோசைக்கல்லை போடவும்.
  • கல் சூடானதும், ஒரு சப்பாத்தியை எடுத்து அதில் போடவும்.
  • ஒரு துணியால் அழுத்திவிடவும்.
  • அது 'புஸு புஸு' என்று உப்பி வரும்.
  • இருபுறமும் திருப்பிப்போடவும்.
  • அதை வெளியே எடுத்து ஒரு தட்டில் போட்டு, இரண்டுபக்கமும் நெய் தடவவும்.
  • அவ்வளவுதான், மிருதுவான சப்பாத்திகள் தயார்.
  • ஏதாவது ஒரு சைடிஷ் செய்து , அத்துடன் சப்பாத்தியை பரிமாறவும்.

Blog Archive