Showing posts with label சிறு தானியங்கள் கொண்டு செய்யும் பலகாரங்கள் !. Show all posts
Showing posts with label சிறு தானியங்கள் கொண்டு செய்யும் பலகாரங்கள் !. Show all posts

Monday, June 22, 2015

சோளப் பணியாரம்

சோளப் பணியாரம்


தேவையானவை:

சோளம் ஒரு கப்  
உளுந்து கால் கப்
வெந்தயம் – 1 டீ ஸ்பூன்
சின்ன வெங்காயம் ஒரு கையளவு
பச்சை மிளகாய் – 2 -3
உப்பு தேவைக்கு ஏற்ப

செய்முறை:

சோளம், உளுந்து, வெந்தயம் மூன்றையும் நான்கு மணி நேரம் ஊறவைத்து, இட்லிக்கு அரைப்பதுபோல அரைத்து, உப்புச் சேர்த்துக் கரைத்து, 4 மணி நேரம் அப்படியே வைக்கவும்.
பிறகு வெங்காயம், மிளகாய் சேர்த்து 'அப்பக்காரலில்' எண்ணெய் விட்டு பணியாரம் செய்யவும்.
அது காரப் பணியாரம்.

தித்திப்பு வேண்டும் என்றால், அரைத்த இந்த  மாவில் தேவைக்கு ஏற்ப பனை வெல்லத்தைக் கரைத்து சேர்த்து, ஏலக்காய் பொடி  போட்டு, கலந்து அப்பம் செய்தால்,  அது இனிப்புப் பணியாரம்.

இது உடம்புக்கு ரொம்ப நல்லது புன்னகை

உடல் எடையை உரமுடன் ஏற்றும் தன்மை சோளத்துக்கு உண்டு. என் குழந்தை குண்டாக வேண்டும்என ஆதங்கப்படும் தாய்மார்கள், சோளத்தில் காரப் பணியாரமும் இன்னொரு நாள் பனை வெல்லம் சேர்த்து இனிப்புப் பணியாரமும் செய்து கொடுக்கலாம். ஆரோக்கியத்துடன், குழந்தையின் உடல் எடையும் கண்டிப்பாகக்கூடும். எலும்பில் ஏற்படும் சுண்ணாம்புச் சத்துக் குறைவினால் வரும் ஆஸ்டியோபோரோசிஸ் உள்ள பெண்களுக்குச் சோள உனவு சிறந்தது. இது தரும் இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ், புரதம், நார்ச்சத்துக்கு இணையே இல்லை.

குதிரை வாலி மற்றும் சாமை 'தயிர் சாதம்'

குதிரை வாலி மற்றும் சாமை இரண்டிலுமே 'தயிர் சாதம்' அருமையாக இருக்கு . சாதம் வடிப்பதற்கு முன், ஒரு 10 நிமிஷம் ஊறவைக்க வேண்டி இருக்கு................மற்றபடி 1 கப் க்கு 2 கப் அல்லது 2 1/4 கப் தண்ணீர் விட்டு குக்கரில் வைக்கணும்.

சாதம் ஆனதும், தயிர் விட்டு தேவையானால், காரட் துருவி போடலாம், பச்சைமிளகாய் கடுகு தாளிக்கலாம், பெருங்காயப்பொடி போடலாம் அல்லது வறுத்து அரைத்த உளுத்தம் பொடி போடலாம்................எது போட்டும் கலக்கலாம்...............அருமையான தயிர் சாதம் .................தினமும் இரவு இதை சாப்பிட்டால் 3 மாதத்தில் அடிவயிறு கொழுப்புகள் கரையும் என்கிறார்கள்..............செய்து தான் பார்க்கணும் புன்னகை

குதிரை வாலி உப்புமா 2

குதிரை வாலி உப்புமா 2

தேவையானவை:

குதிரை வாலி 2 கப்
வெங்காயம் 2 (பொடியாய் நறுக்கவும்)
தக்காளி 1 (தேவையானால் )
பூண்டு 4 - 5 பற்கள்
இஞ்சி 1 சின்ன துண்டு
பச்சை மிளகாய் 6 -8
கேரட், உருளை, பீன்ஸ், பச்சை பட்டாணி, கத்தரி என நறுக்கிய காய்கள் மொத்தம் 1 - 1 1/2 கப்.

தாளிக்க:

கடுகு 1 ஸ்பூன்
உளுந்து 1 ஸ்பூன்
கடலை பருப்பு 1 ஸ்பூன்
மஞ்சள் பொடி 1/2 ஸ்பூன்
கறிவேப்பிலை 1 கைப்பிடி
எண்ணை 3 - 4 ஸ்பூன்
நெய் 2 -3 ஸ்பூன்

செய்முறை:

ஒரு ஆழமான வாணலி இல் எண்ணை மற்றும் நெய் விடவும்.
தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளிக்கவும்.
பூண்டு, பச்சைமிளகாய் போடவும்.
வெங்காயம் போடவும்.
நன்கு வதக்கவும், இப்ப எல்லா காய்கறிகளையும் போடவும்.
நன்கு கிளறவும், உப்பு போட்டு ஒரு 2 நிமிடம் மூடி வைக்கவும்.
கொஞ்சம் வெந்து இருக்கும்.
இப்ப அடுப்பை சின்ன தாக்கி விட்டு, குதிரை வாலி கொட்டி கிளறவும்.
நன்கு வறுக்கவும்; 1 ஸ்பூன் நெய்விட்டு மீண்டும் நன்கு வறுக்கவும்.
அது நன்கு வறுபட்டதும் 2 டம்பளர் தண்ணீர் விடவும், கிளறி விடவும்.
குதிரை வாலி நன்கு வெந்ததும் கிளறி இறக்கவும்.
நல்ல சுவையான 'குதிரை வாலி உப்புமா ' தயார்.
தொட்டுக்கொள்ள தேங்காய் சட்டினி அல்லது சாம்பார் நல்லா இருக்கும்.

குறிப்பு : தேவையானால் பிரட் ஐ சிறு துண்டுகளாக வெட்டி, நெய் இல் வறுத்து கடைசி இல் உப்புமாவில் போட்டு கிளறலாம், நல்லா இருக்கும். வேண்டுமானால் பச்சை வேர்கடலை போடலாம், அருமையாக இருக்கும்.

குதிரை வாலி உப்புமா

குதிரை வாலி உப்புமா


தேவையானவை :

குதிரை வாலி 2 கப்
துவரம் பருப்பு 2 டேபிள் ஸ்பூன்
மிளகு சீரகம் பொடித்தது 1 டேபிள் ஸ்பூன்
தேங்காய் துருவல் 2 டேபிள் ஸ்பூன்
உப்பு

தாளிக்க :

கடுகு 1 ஸ்பூன்
மிளகாய் வற்றல் 4 - 5
உளுத்தம் பருப்பு 1 ஸ்பூன்
கடலை பருப்பு 1 ஸ்பூன்
பச்சை மிளகாய் 2 - 3 ( தேவை என்றால் - வாசனைக்காக போடலாம் )
பெருங்காயம் கால் ஸ்பூன்
கறிவேப்பிலை கொஞ்சம்
தேங்காய் எண்ணெய் தாளிக்க கொஞ்சம்

செய்முறை :

குதிரை வாலி களைந்து, ஒரு 10 நிமிஷம் ஊறவைக்கவும்.
மண் இருக்கும் எனவேஅரித்து போடுவது நல்லது. புன்னகை
தனியாக துவரம் பருப்பையும் ரவை போல பொடிக்கவும்.
ஒரு வாணலி இல் எண்ணெய் விட்டு தாளிக்க வேண்டியவைகளை போட்டு தாளிக்கவும்.
பிறகு தண்ணிர் விடவும். உப்பு போடவும்.
அது நன்கு கொதிக்கும் போது அடுப்பை சின்னதாக்கி விட்டு குதிரை வாலி மற்றும் அரைத்து வைத்துள்ள பருப்பு இவைகளை போடவும்.
கட்டிகள் இல்லாமல் நன்கு கலக்கவும்.
மேலே ஒரு மூடி போட்டு முடவும்.
ஒரு 5 நிமிடம் கழித்து திறந்து பார்க்கவும்.
நன்கு கிளறவும் , தேவையானால் கொஞ்சம் தண்ணிர் விடவும்.
மீண்டும் மூடிவைக்கவும்.
ஓரிரு நிமிடங்கள் கழித்து மீண்டும் திறந்து பார்க்கவும்.
ரவை வெந்திருந்தால் , தேங்காய் துருவல் மற்றும் மிளகு சீரகம் போட்டு நன்கு கிளறி இறக்கவும்.
அவ்வளவுதான் குதிரை வாலி உப்புமா ரெடி.
தேங்காய் சட்டினியுடன் பரிமாறவும்.
அல்லது பருப்பு சாம்பாருடன் பரிமாறவும். கெட்டி தயிர் அல்லது ஊறுகாய் கூட ஓகே தான் புன்னகை

குறிப்பு : இந்த உப்புமா ஆறினதும் தான் ரொம்ப நல்லா இருக்கும். அப்படியே அரிசி உப்புமா போலவே இருக்கும்.

கம்பு ஆலு ரொட்டி

கம்பு ஆலு ரொட்டி


தேவையானவை :

கம்பு அல்லது திணை மாவு-2 கப்
வேகவைத்து பிசைந்த உருளைக்கிழங்கு-1கப்
நறுக்கிய கொத்தமல்லி-5 தேக்கரண்டி
நறுக்கிய வெங்காயம்-1/2கப்
நறுக்கிய பச்சை மிளகாய-2
எலுமிச்சை சாறு-1 தேக்கரண்டி
இஞ்சி விழுது-1தேக்கரண்டி
உப்பு-தேவைக்கேற்ப
நெய் - சப்பாத்தி  செய்ய

செய்முறை:

சலித்து எடுத்து வைக்கப்பட்ட மாவை ஒரு பாத்திரத்தில் கொட்டி அதனுடன் தேவைக்கு வைத்துள்ள அனைத்து பொருட்களையும் போட்டு கொஞ்சம் தண்ணீர் ஊற்றி ரொட்டி செய்வதற்கு பிசைவது போல பிசைந்து கொள்ளவும். பின்னர் நான்ஸ்டிக் தோசைகல்லை அடுப்பில் வைத்து சூடாக்கி கொள்ளவும்.  
கொஞ்சம் கனமான ரொட்டியாக இடவும்.
இருபுறமும் நெய்விட்டு எடுக்கவும்.
சுவையான கம்பு ஆலு ரொட்டி ரெடி.
இதை பால்  அல்லது தயிர் சேர்த்து சூடாக பரிமாறலாம் சுவையாக இருக்கும்.

கம்பு தித்திப்பு பொங்கல்

கம்பு தித்திப்பு பொங்கல்


தேவையானவை :

கம்பு - 100 கிராம்
வெல்லம் - 200 கிராம்
நெய் - 1 - 2 டீஸ்பூன்
உப்பு - 1 சிட்டிகை
முந்திரி, பாதாம் - டேபிள் ஸ்பூன் உடைத்தது.

செய்முறை :

கம்பை முதல் நாள் களைந்து இரவே ஊற வைக்கவும்.
மறுநாள் அலசி , தண்ணீரை வடித்து, மிக்சியில் ஒரு சுற்று ஓட விடவும்.
ரவை போல ஓடித்துக்கொள்ளவும். ரொம்பவும் நைசாக அரைக்கக்  கூடாது.
பிறகு அதில் 3 பங்கு தண்ணீர் விட்டு, உப்பு சேர்த்து பிரஷர் குக்கரில் 5 விசில் வைத்தெடுக்கவும்.
வெல்லத்தில் தண்ணீர் விட்டு, கரைத்து வடிகட்டி மண்ணில்லாமல் எடுத்துக்கொள்ளவும்.
பிறகு அடுப்பில் வைத்து கொதிக்கவிடவும்.
கொஞ்சம் 'திக்' ஆனதும் வெந்த கம்பை இதில் கொட்டி கிளறவும்.
1 spoon
நெய்விடவும்.
1 spoon
நெய்யில் முந்திரி, பாதாம் வறுத்துச் சேர்த்துப் பரிமாறவும்.

குறிப்பு : தேவையானால் ஏலம் போடலாம் ஆனால் கம்புக்கு இயல்பிலேயே ஒரு நல்ல மணம் உண்டு என்பதால், வாசனைக்காக ஏலக்காய் கூடத் தேவையில்லை.
நார்ச்சத்து, கால்சியம், இரும்புச்சத்து என எல்லாம் நிறைந்தது இது.

பார்லி, கோதுமை ரவா இட்லி

பார்லி, கோதுமை ரவா  இட்லி


தேவையானவை :

பார்லி 2 கப்
கோதுமை ரவை 1 கப்
மிளகாய் வற்றல் 4 -5
உப்பு

செய்முறை :

பார்லியை நன்கு களைந்து ஒரு 4 மணிநேரம் ஊர வைக்கவும்.
கோதுமை ரவையை 1/2 மணி ஊர வைக்கவும்.
பிறகு இரண்டையும் மிளகா உப்பு போட்டு மைய அரைக்கவும்.
மீண்டும் ஒரு அரைமணி அப்படியே வைத்திருந்து விட்டு பிறகு இட்லி வார்க்கவும்.
ஹெல்தியான இட்லி இது புன்னகை

குறிப்பு: வேணுமானால் தண்ணிருக்கு பதில் தையிர் உபயோகிக்கலாம். இதே மாவில் தோசையும் வார்க்கலாம் .

கேழ்வரகு இட்லி

கேழ்வரகு இட்லி


தேவையானவை :

கேழ்வரகு மாவு ( களைந்து உலர்த்தி அரைத்தது ) 2 கப்
உளுத்தம் பருப்பு 3/4 கப்
உப்பு

செய்முறை:

கேழ்வரகு மாவை கட்டிகள் இல்லாமல் தண்ணிரில் கரைத்து வைக்கவும்.
உளுந்தை நன்கு களைந்து 1 மணிநேரம் ஊறவைக்கவும்.
பிறகு நன்கு அரைக்கவும், கடைசி இல் கேழ்வரகு மாவையும் சேர்த்து போட்டு ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.
உப்பு போட்டு கரைத்து வைக்கவும்.
மறுநாள் எப்பவும் போல இட்லி வார்க்கவும்.
நல்லா மெத் என்று வரும் இந்த இட்லி.
கலர் தான் கருப்பா இருக்கும் ஜாலி ஆனால் உடம்புக்கு தெம்பு , ரொம்ப நல்லது.
சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு வரப்பிரசாதம் , பூண்டு துவையல் அல்லது காரமான வெங்காய சட்னி யுடன் ரொம்ப நல்லா இருக்கும். புன்னகை

Blog Archive