Ingredients:
- பாசி பருப்பு - 1 கப்,
- துருவிய கேரட் - 1 கப்,
- ஒரு வெள்ளரிக்காய் - பொடியாக நறுக்கவும்.
- பச்சை மிளகாய் - 5,
- எலுமிச்சம் பழம் - ஒரு மூடி
- கொதித்துமல்லி இலை - 1 கைப்பிடி,
- கறிவேப்பிலை - 10.
- பெருங்காய பொடி ஒரு சிட்டிகை
- உப்பு - 1 ஸ்பூன்
- தாளிக்க கடுகு மற்றும் எண்ணெய்
Method:
- பாசி பருப்பை நன்கு அலசி 1/2 மணி நேரம் ஊற வைக்கவும்.
- ஊறிய பின் நன்கு தண்ணிரை வடித்து விட்டு, துருவிய கேரட், பொடியாக நறுக்கிய வெள்ளரிக்காய் , கொத்தமல்லி, உப்பு போட்டு கலக்கவும்.
- வாணலி இல் எண்ணெய்ப விட்டு, கடுகு, பச்சை மிளகாய் தாளிக்கவும்.
- எலுமிச்சை சாறு விட்டு கலக்கவும்.
- அவ்வளவுதான், 'பயத்தம் பருப்பு கோஸ்மல்லி' ரெடி !
Notes:
- இதற்கு பருப்பை பச்சையாகதான் போடவேண்டும்.பச்சை வாசனை பிடிக்காதவர்கள்,மைக்ரோவேவ்லே 2 நிமிஷம் 100% பவர்லே வைத்து எடுக்கலாம் அல்லது தாளித்ததும், வாணலி இல் பருப்பைக் கொட்டி இரண்டு நிமிடங்கள் கிளறி இறக்கலாம். இதில் எல்லாமே பச்சையாக இருப்பதால் , அடிக்கடி செய்து சாப்பிட்டால் உடம்புக்கு நல்லது. சிலர் தேங்காய் துருவல் சேர்ப்பார்கள். மாங்காய் ஸீஸன் என்பதால் மாங்காயையும் பொடியாக நறுக்கி சேர்க்கலாம்.
Ingredients:
- தயிர் 1 cup
- சுத்தமான தண்ணீர் 2 cups
- கொத்தமல்லி நன்றாக பொடியாக நறுக்கியது 2 tsp
- உப்பு தேவையான அளவு
- கரகரப்பாக அரைத்து கொள்ள :
- பச்சை மிளகாய் - 1
- இஞ்சி - 1 சிறு துண்டு
- தாளிப்பதற்கு :
- கடுகு - 1/2 tsp
- பெருங்காயம் - தேவையான அளவு
- கறிவேப்பிலை - 5 - 6
- எண்ணை - 1/2 tsp
Method:
- தயிர் மற்றும் தண்ணீர் சேர்த்து நன்றாக சிலுப்பிக் கொள்ளவும்.
- கரகரப்பாக அரைத்து வைத்துள்ள விழுதை கடைந்த மோரில் சேர்க்கவும்.
- எண்ணை சூடேற்றி அதில் கடுகு, பெருங்காயம் மற்றும் கறிவேப்பில்லை போட்டு தாளித்தது, கரைத்து வைத்துள்ள மோரில் கொட்டவும் .
- சுவையான நீர் மோர் தயார்.
Notes:
- பச்சைமிளகாயை அரைக்காமல், பொடியாக நறுக்கி தாளித்தும் மோரில் கொட்டலாம்.இஞ்சி தேவை இல்லை என்றால் தவித்துவிடவும். பிரிட்ஜில் வைத்து பிறகு குளிர்ச்சியாகவும் குடிக்கலாம்.
Ingredients:
- வெல்லம் (பொடி செய்தது) - 1 கப்
- சுத்தமான தண்ணீர் - 4 கப்
- எலுமிச்சை பழ சாறு (தேவையான அளவு)
- 1/4 டீ ஸ்பூன் சுக்கு பொடி
- ஏலக்காய் பொடி 1/2 டீ ஸ்பூன்
Method:
- பொடி செய்த வெல்லத்தை தண்ணீரில் கரைத்து, வடிகட்டி கொள்ளவும்.
- வெல்ல தண்ணீரில் ஏலக்காய் பொடி மற்றும் சுக்கு பொடி இவற்றை சேர்த்து கலக்கவும். தேவையானால், எலுமிச்சை சாற்றினையும் சேர்க்கவும்.
Notes:
- பிரிட்ஜில் வைத்து பிறகு குளிர்ச்சியாகவும் குடிக்கலாம்.