- மைதா மாவு - 1 கப்,
- சற்று புளித்த தயிர் - அரை கப் - ஒரு கப்
- சோடா உப்பு - ஒரு சிட்டிகை,
- பெருங்காயம் - அரை டீஸ்பூன்,
- சீரகம் - ஒரு ஸ்பூன்
- மிளகு - ஒரு ஸ்பூன் ( தேவையானால் )
- கறிவேப்பிலை - சிறிது,
- உப்பு - ருசிக்கேற்ப,
- எண்ணெய் - தேவையான அளவு.
Method:
- ஒரு பாத்திரத்தில் மைதா மாவை போட்டு அதில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் விட்டு நன்கு கலக்கவும்.
- பிறகு அத்துடன் தயிர், உப்பு, சோடா உப்பு, சீரகம், மிளகு, பெருங்காயம், கறிவேப்பிலை எல்லாம் சேர்த்து நன்கு கலக்கவும்.
- தேவையானால் சிறிதளவு தண்ணீர் சேர்த்து சற்று கெட்டியாக கரைக்கவும். கை இல் எடுத்து உருட்டிப்போடும் அளவிற்கு தளர்வான மாவு நமக்குத் தேவை. நமக்கு பதம் முக்கியம், மாவு இட்லி மாவைவிட கொஞ்சம் கெட்டியாக இருக்கவேண்டும். :)
- வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு, அது சூடானதும் மாவை சிறு சிறு போண்டாக்களாக உருட்டிப் போடவும்.
- நன்கு உப்பிக்கொண்டு குண்டு குண்டாக வரும்.
- சிவக்க வேக விட்டெடுத்து, சூடாகப் பரிமாறுங்கள்.
- சுவையான மாலைநேர ஸ்நாக்ஸ் மங்களூர் போண்டா ரெடி.
- தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்.
No comments:
Post a Comment