Showing posts with label வட இந்திய சமையல்கள். Show all posts
Showing posts with label வட இந்திய சமையல்கள். Show all posts

Monday, June 22, 2015

'ப்ளைன் நான்' + 'பட்டர் நான்'

வட இந்திய உணவுகளில் எல்லோருக்குமே ரொம்ப பிடிக்கும் இது .................இதை செய்ய முட்டை வேண்டும்...................... தந்துரி அடுப்பு வேண்டும்............... அது இது என்று ரொம்ப சொல்வார்கள்................ஆனால் நம்ப வேண்டாம்       இது ரொம்ப ரொம்ப சுலபமாக செய்யக் கூடியது.......நிஜம் தான்......................நாம் சாதாரணமாக செய்யும் ரொட்டியை விட இதை சுலபமாக செய்யலாம்..........நான் அப்படித்தான் 'நான்' செய்தேன்...................நீங்களும் செய்து பார்க்கலாம் 

தேவையானவை :

மைதா 2 கப்
எண்ணெய் 1 டேபிள் ஸ்பூன்
சர்க்கரை 1 டீ ஸ்பூன் ( நன்கு பொடிக்கவும் )
உப்பு 1/2 ஸ்பூன்
பேகிங் சோடா 1/2 ஸ்பூன்
தயிர் 1/4 கப் ( குழப்பி வைக்கவும் )

செய்முறை:

மைதாவை பேக்கிங் சோடா போட்டு சலிக்கவும்.
அதில் நடுவில் குழி செய்து எண்ணெய், சர்க்கரை, உப்பு எல்லாம் போட்டு கலக்கவும்.
இப்போ குழப்பி வைத்துள்ள தயிரை அதில் விடவும்.
மாவை மிருதுவாக பிசையவும்.
அநேகமாய் தண்ணிரே வேண்டி இருக்காது.
இந்த மாவை சுமார் 6 - 7 நிமிடங்கள் தொடர்ந்து ( கடிகாரத்தை பார்த்து கொண்டு ) பிசையவேண்டும்.
அப்படி பிசைந்த மாவை சுமார் 4 மணி நேரம் ஊர வைக்கவும்.
இந்த நேரம் சென்னை வாசிகளுக்கு மட்டும் தான்  .............குளிர் பிரதேசம் என்றால் 12 மணி நேரம் கூட வைக்கலாம்.
அல்லது இரவே மாவு பிசைந்து வைத்து விட்டு காலை செய்யலாம்..............சரியா?
ஸோ, இப்போ மாவு தயார்.
மேலே சொன்ன அளவிற்கு சுமார் 8 வட்டமான 'நான்கள்' வரும்.
வட்டமாக இடாமல் 'ஓவல்' ஆக கூட இடலாம்.............. ஆனால் அப்படி செய்தால் கல்லில் இருந்து விழுந்து விடுகிறது .................எனவே தான் வட்டம்  
மொத்த மாவையும் 8 சமமான உருண்டைகளாக பிரித்து உருட்டி வைத்துகொள்ளவும்.
மாவை நல்ல கனமான சப்பாத்தி போல வட்டமாக இடவும்.
கையை தண்ணீரில் நனைத்துக்கொண்டு, அதை சப்பாத்தி போல இட்டு வைத்திருக்கும் பகுதி இல் தடவவும்.
கைப்பிடி உள்ள தோசைக்கல்லில் ஈரமான பகுதி படும்படி 'நானை' போடவும்.
ஒரே நிமிடத்தில் அதில் கொப்புளங்கள் போல வரும், அந்த நேரத்தில் மெல்ல தோசைக்கல்லை எடுத்து அடுப்பிற்கு நேரே காட்டவும்.
கண்டிப்பாக 'நான்' அடுப்பில் விழாது................கொஞ்சம் சாய்த்து சாய்த்து முழுவதும் நெருப்பில்  காட்டவும்.
அது வெந்ததும், மெல்ல தோசைக்கல்லை பழயபடி அடுப்பில் வைத்து விட்டு, அடுப்பை சின்னதாக்கவும்.
இப்போது தோசைக்கல்லில் இருந்து 'நானை' எடுக்கவும்.
உங்களுக்கு பிடித்த 'சைட் டிஷ்' உடன் பரிமாறுங்கள்.
அவ்வளவுதான் சூப்பர்...........மெத் மெத் என்கிற 'ப்ளைன் நான்' ரெடி.


'பட்டர் நான்' வேண்டும் என்றால்....................எடுத்த சூடான நானில் கொஞ்சம் வெண்ணையை தடவி பரிமாறவும்........அவ்வளவு தான்.  


குறிப்பு : ஒருவேளை................ஒருவேளை..................'நான்' விழுந்து விட்டால் அடுத்த முறை நிறைய ஈரம் இருக்கும்படி தண்ணீர் தடவவும்.

Tuesday, July 22, 2014

உளுந்து கச்சோடி

இதை 'தால் கச்சோடி' என்றும் சொல்வார்கள் . 

தேவையானவை : 

உளுந்தும் பருப்பு - 2 cup 
கோதுமை மாவு /மைதா   - 3 cup 
சீரகம் - 4 டீ ஸ்பூன் 
ஏலக்காய்: 10
கிராம்பு: 5 -6 
பட்டை: 1 சிறிய துண்டு 
மிளகாய் வற்றல்: 10 - 12 
உப்பு
எண்ணெய் - பொறிப்பதற்கு 
சோடா  உப்பு - ஒரு சிட்டிகை  

செய்முறை :

உளுந்தும் பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்து நைஸாக அரைத்துக் கொள்ளவும். 
சீரகம், கிராம்பு, ஏலக்காய், பட்டை, மிளகாய் வற்றல், உப்பு ஆகிய மசாலா பொருள்களைத் தனியாக அரைத்துக் கொள்ளவும். 
வாணலியை அடுப்பில் வைத்து, எண்ணெய் காய்ந்ததும் மசாலாவை அதில் போட்டு, நன்றாக வதக்கவும்.  
பிறகு நைஸாக அரைத்த உளுந்தையும் அதில் சேர்த்து, நீர் வற்றும் வரை நன்றாக வதக்கவும். 
இதை பூரணம் என்று சொல்வோம்.
கோதுமை மாவுடன் சிறிதளவு எண்ணெய், உப்பு, சோடா  உப்பு ஆகியவற்றைப் போட்டு ஒரு ஸ்பூன் எண்ணைவிட்டு மாவை நன்கு கலக்கவும். 
பிறகு கொஞ்சம் தண்ணீர் ஊற்றிக் கலந்து நன்றாகப் பிசைந்து சிறுசிறு உருண்டைகளாகச் செய்து கொள்ளவும். 
ஒவ்வோர் உருண்டைகளுக்குள்ளும் பூரணத்தைச் சிறிது வைத்து, பூரி போல இட்டு அல்லது கையால் வடை தட்டுவது போல தட்டி,, காய்ந்த எண்ணெயில் போட்டு, இரண்டு பக்கமும் நன்கு பொரிந்தவுடன் எடுக்கவும். 

குறிப்பு : இது 1 வாரம் வரை வைத்து சாப்பிடலாம். ரொம்ப நல்லா இருக்கும். இதனுடன் இனிப்பு மற்றும் கார சட்டினி நல்லா இருக்கும். இனிப்பு மற்றும் கார சட்னி செய்முறையை நான் இதே திரி இல் போட்டிருக்கேன் பாருங்கள் புன்னகை

சால்ட் பிரட் இல் பாவ் பாஜி

தேவையானவை :

வெங்காயம் 2 - 3 பொடியாக நறுக்கவும்
வெந்த உருளைக்கிழங்கு - 2 - 3 
பச்சை பட்டாணி - வேகவைத்தது - 1/2 கப் தேவையானால் 
வெண்ணை 1/4 கிலோ 
கொத்துமல்லி பொடியாக நறுக்கினது 1 டேபிள் ஸ்பூன் 
உப்பு தேவையான அளவு 
பாட்ஷா பாவ்பாஜி மசாலா 2 டேபிள் ஸ்பூன் 
சால்ட் பிரட் 1 full 
எலுமிச்சை சாறு 1 டேபிள் ஸ்பூன் 

செய்முறை :

பாதி வெண்ணையை வாணலி இல் போட்டு அது கொஞ்சம் உருகினதும் வெங்காயம், போட்டு வதக்கணும்.
கொஞ்சம் வதங்கினதும் வெந்த உருளைக்கிழங்கு , உப்பு மற்றும் கொத்துமல்லி தழை போட்டு வதக்கவும்.
பாட்ஷா மசாலாவும் போட்டு வதக்கவும்.
தனியே எடுத்து வைக்கவும்.
தோசை கல்லில் பிரட் ஐ வெண்ணை போட்டு டோஸ்ட் செய்யவும்.
பரிமாறும் போது, பிரட் 2 slice  வைத்து மேலே பாஜியை போட்டு தேவையானால் பொடியாக நறுக்கிய வெங்காயம் தூவி துளி எலுமிச்சை பிழிந்து தரவும்.

குறிப்பு: இது சாதரணமாக 'pav ban ' இல் தான் செய்வார்கள், ஆனால் இதிலும் செய்யலாம். 

பாலக் பகோடா 2

தேவையானவை:

பாலக்கீரை - ஒரு கட்டு
கடலை மாவு - 3/4 கப்
அரிசி மாவு- 1/4 கப்
மிளகாய் பொடி 1/2 ஸ்பூன்
சோடா உப்பு 1 சிட்டிகை 
உப்பு
எண்ணெய் - பொரிக்க

செய்முறை:

கீரையை ஆய்ந்து தண்ணீரில் அலசி , ஒரு 1 நிமிடம் வெந்நீரில் போட்டு எடுக்கவும் 
கடலை மாவு, அரிசி மாவு, உப்பு, மிளகாய் பொடி, சோடா உப்பு சேர்த்து கலக்கவும் 
பிறகு கொஞ்சம் தண்ணீர் விட்டு பஜ்ஜி மாவு பதத்தில் கரைத்துக்கொள்ளவும் கொள்ளவும்.
வாணலி இல் எண்ணெய் விட்டு பஜ்ஜி மாவில், பாலக் இலைகளை முக்கி,எண்ணை இல் போட்டு பொரித்தெடுக்கவும்.
ரொம்ப நல்லா இருக்கும்.

குறிப்பு: பாலக் இலைகளை வெந்நீரில் போடாமலும் செயலாம்

சோளே மசாலா பொடி

சோளே மசாலா பொடி இதை செய்து வைத்துக்கொண்டால் சுலபமாக சோளே செய்துவிடலாம். 

தேவையானவை :

கரம் மசாலா பொடி 1 ஸ்பூன்
மிளகாய் பொடி 2 ஸ்பூன்
மஞ்சள் பொடி 1 ஸ்பூன்
தனியா பொடி 2 ஸ்பூன்
சீரகப்பொடி 1 ஸ்பூன்
மிளகு பொடி 1 ஸ்பூன் 
இஞ்சி பொடி அதாவது சுக்கு பொடி 1 ஸ்பூன்
பூண்டு பொடி 1 ஸ்பூன்

வெந்த கொத்து கடலைகள் பாட்டில் களில் கிடைக்கும் ; நாம் வேறுமான உருளைக்கிழங்கை வேகவைத்தால் போறும். சோளே பண்ணிடலாம்.

Tuesday, July 19, 2011

பாலக் பக்கோடா

தேவையானவை:

பாலக்கீரை - ஒரு கட்டு
கடலை மாவு - அரை கப்
அரிசி மாவு-கால் கப்
இஞ்சி, பூண்டு, சோம்பு-அரைத்த விழுது ஒரு டேபிள் ஸ்பூன்
உப்பு
எண்ணெய் - பொரிக்க

செய்முறை:

கீரையை ஆய்ந்து தண்ணீரில் அலசி பொடியாக நறுக்கவும்.
அதனுடன் கடலை மாவு, அரிசி மாவு, உப்பு, இஞ்சி, பூண்டு, சோம்பு விழுது சேர்த்து பிசையவும்
பிறகு கொஞ்சம் தண்ணீர் விட்டு பக்கோடாவுக்கு தேவையான பதத்தில் பிசைந்து கொள்ளவும்.
வாணலி இல் எண்ணெய் விட்டு பக்கோடாக்களாக போட்டு பொரித்தெடுக்கவும்.
ரொம்ப நல்லா இருக்கும்.

இனிப்புச் சட்னி

தேவையானவை:

பேரீச்சம்பழம் 50 கிராம்
ஒரு சிறு உருண்டை புளி
உப்பு
மிளகாய்த் பொடி 1 டீஸ்பூன்
சர்க்கரை 1 டீஸ்பூன்

பேரீச்சம்பழ கொட்டையை எடுத்துவிட்டு , எல்லாவற்றையும் சேர்த்து நன்கு அரைக்கவும்.
இதுவும் கெட்டிக் குழம்பு பத்த்தில் இருக்கணும் .

இனிப்புச் சட்னி இரண்டாம் வகை

100 கிராம் புளியை ஊற வைத்து புளிக்கரைசல் எடுத்து கொட்டை, கோதுகள் போக வடிகட்டி வைக்கவும்.
இதற்கு ஒரு ஆழாக்கு அல்லது ஒன்றரை ஆழாக்கு வெல்லத்தூள் தேவைப்படும். ஒரு டேபிள் ஸ்பூன் மிளகாய்த் தூள், உப்பு தேவையான அளவு.
ஒரு டீஸ்பூன் சர்க்கரை(பிடித்தமானால்)
ஜீரகத்தை வெறும் வாணலியில் வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ளவும். இந்தப் பொடியில் ஒரு டேபிள் ஸ்பூன் பொடியைச் சட்னியை இறக்குகையில் சேர்க்கவேண்டும்.

இப்போது கரைத்த புளிக்கரைசலை அடுப்பில் வைத்து, உப்பு, மிளகாய்த்தூள், வெல்லத்தூள், சர்க்கரை சேர்த்துக் கொதிக்க விடவும்.
நன்கு கொதித்துச் சட்னி கெட்டியாக ஆகும்போது வறுத்த ஜீரகப் பொடியைச் சேர்த்து அடுப்பில் இறந்து கீழே இறக்கவும்.
இது பல நாட்கள் பயன்படுத்தலாம்.
பயன்படுத்துகையில் ஒரு சின்னக் கிண்ணம் சட்னியை எடுத்துக்கொண்டு நீர் விட்டுத் தளர்த்திக்கொண்டால் ஆறு அல்லது ஏழு நபர்களுக்குப் பரிமாற முடியும்.

காரச் சட்னி அல்லது பச்சைச் சட்னி செய்யும் விதம்.

தேவையான பொருட்கள்:

கொத்துமல்லி பெரியதாய் ஒரு கட்டு
பச்சை மிளகாய்10 -12
இஞ்சி ஒரு துண்டு
பூண்டு 2 -4
2 டீஸ்பூன் பொட்டுக்கடலை
உப்பு

செய்முறை :

கொத்துமல்லி, பச்சை மிளகாய், இஞ்சி போன்றவற்றை நன்கு கழுவி நீரை வடிகட்டிவிட்டு மற்றச் சாமான்களோடு சேர்த்து அரைக்கவும்.
கொஞ்சம் நீர் விட்டு அரைக்கலாம்.
கெட்டிக் குழம்பு பத்த்தில் சட்னி இருக்கனும் .

பேல் பூரி

பேல் பூரி: சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இதை சாப்பிடலாம். நல்ல balancedfood . இதற்க்கு முக்கியத் தேவை அரிசிப் பொரிதான். அதோடு வேக வைத்த உருளைக்கிழங்கு, வேகவைத்த பட்டாணி , வீட்டில் செய்த அல்லது கடையில் வாங்கிய ஓமப்பொடி, வறுத்துக் காரம் போட்ட கடலைப்பருப்பு அல்லது வேர்க்கடலை, மாதுளை முத்துக்கள் அல்லது பொடியாக நறுக்கிய தக்காளி , பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சைக்கொத்துமல்லி,எலுமிச்சைச் சாறு போன்றவை. மற்றபடி பச்சைச் சட்னி, இனிப்புச் சட்னி, சின்னச் சின்ன பூரிகள் பேல் பூரியில் கலக்க வைத்த்குக்கொண்டால் "பேல்" அருமையாக இருக்கும் புன்னகை" src="http://illiweb.com/fa/i/smiles/icon_smile.gif" alt="புன்னகை" longdesc="4">

சட்னி வகைகளை முன் கூட்டியே தயாரித்து வைத்துக்கொள்ளுதல் நல்லது. பேல்பூரியில் கலக்கவேண்டிச் சின்னச் சின்ன பூரிக ளையும் செய்து வைத்துக கொள்ள வேண்டும் .

முதலில் பூரி செய்யும் விதம்:

ரவை ஒரு கப்
மைதா ஒரு கப்
கோதுமை மாவு ஒரு கப்
தேவையான அளவுக்கு உப்பு
பொரிக்க எண்ணெய்

மூன்று மாவையும் நன்கு உப்பைப் போட்டுக் கலந்துகொண்டு தேவையான நீரைச் சேர்த்துக் கெட்டியாகப் பிசையவும்.
ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.
பின்னர் மறுபடி நன்கு பிசைந்து சின்னச் சின்ன உருண்டைகளாக உருட்டி எடுத்துக்கொண்டு மெல்லிய பூரிகளாக இடவும்.
இட்ட பூரியில் ஒரு ஃபோர்க் அல்லது முள் கரண்டியால் குத்திவிடவும்.
இப்படிக் குத்தாமல் பொரித்தால் பூரி உப்பிவிடும்.
தட்டையான பூரிகளே இதற்குத் தேவை.
ஆகையால் குத்திவிட்டுப் பூரிகளைப் பொரித்தெடுக்கவும்.

அடுத்து காரச் சட்னி அல்லது பச்சைச் சட்னி செய்யும் விதம்.


தேவையான பொருட்கள்:

கொத்துமல்லி பெரியதாய் ஒரு கட்டு
பச்சை மிளகாய்10 -12
இஞ்சி ஒரு துண்டு
பூண்டு 2 -4
2 டீஸ்பூன் பொட்டுக்கடலை
உப்பு

செய்முறை :

கொத்துமல்லி, பச்சை மிளகாய், இஞ்சி போன்றவற்றை நன்கு கழுவி நீரை வடிகட்டிவிட்டு மற்றச் சாமான்களோடு சேர்த்து அரைக்கவும்.
கொஞ்சம் நீர் விட்டு அரைக்கலாம்.
கெட்டிக் குழம்பு பத்த்தில் சட்னி இருக்கனும் .

அடுத்து இனிப்புச் சட்னி:

தேவையானவை:

பேரீச்சம்பழம் 50 கிராம்
ஒரு சிறு உருண்டை புளி
உப்பு
மிளகாய்த் பொடி 1 டீஸ்பூன்
சர்க்கரை 1 டீஸ்பூன்

பேரீச்சம்பழ கொட்டையை எடுத்துவிட்டு , எல்லாவற்றையும் சேர்த்து நன்கு அரைக்கவும்.
இதுவும் கெட்டிக் குழம்பு பத்த்தில் இருக்கணும் .

புளிச்சட்னி(இனிப்புச் சட்னி இரண்டாம் வகை)

100 கிராம் புளியை ஊற வைத்து புளிக்கரைசல் எடுத்து கொட்டை, கோதுகள் போக வடிகட்டி வைக்கவும்.
இதற்கு ஒரு ஆழாக்கு அல்லது ஒன்றரை ஆழாக்கு வெல்லத்தூள் தேவைப்படும். ஒரு டேபிள் ஸ்பூன் மிளகாய்த் தூள், உப்பு தேவையான அளவு.
ஒரு டீஸ்பூன் சர்க்கரை(பிடித்தமானால்)
ஜீரகத்தை வெறும் வாணலியில் வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ளவும். இந்தப் பொடியில் ஒரு டேபிள் ஸ்பூன் பொடியைச் சட்னியை இறக்குகையில் சேர்க்கவேண்டும்.

இப்போது கரைத்த புளிக்கரைசலை அடுப்பில் வைத்து, உப்பு, மிளகாய்த்தூள், வெல்லத்தூள், சர்க்கரை சேர்த்துக் கொதிக்க விடவும்.
நன்கு கொதித்துச் சட்னி கெட்டியாக ஆகும்போது வறுத்த ஜீரகப் பொடியைச் சேர்த்து அடுப்பில் இறந்து கீழே இறக்கவும்.
இது பல நாட்கள் பயன்படுத்தலாம்.

பயன்படுத்துகையில் ஒரு சின்னக் கிண்ணம் சட்னியை எடுத்துக்கொண்டு நீர் விட்டுத் தளர்த்திக்கொண்டால் ஆறு அல்லது ஏழு நபர்களுக்குப் பரிமாற முடியும்.
இப்போ பேல் பூரிக்கு வேண்டிய சாமான்கள் தயார். இவை எல்லாவற்றையும் முன்கூட்டியே தயார் செய்து வைத்துக்கொண்டால் நேரே பேல்பூரியைக் கலக்க ஆரம்பிக்கலாம்.


அரிசிப் பொரி கைகளால் போட்டால் இரண்டு கை அளவு அல்லது இரண்டு பெரிய கிண்ணம் அளவு, அதே அளவு ஓமப்பொடி, நொறுக்கிய பூரிகள், (நம் விருப்பத்திற்கேற்ப பூரிகளைச் சேர்க்கலாம்) இதன் மேல் நறுக்கிய உருளைக்கிழங்கு, வெங்காயம் போன்றவை சேர்க்கவும். இதன் மேலே இரண்டு டீஸ்பூன் காரச் சட்னியை ஊற்றி, இரண்டு டீஸ்பூன் இனிப்புச் சட்னியையும் ஊற்றவும். அரை மூடி எலுமிச்சையைப் பிழிந்து கொள்ளவும். எல்லாவற்றையும் கலக்கும் முன்னர் நறுக்கி வைத்த கொத்துமல்லிக்கீரையைச் சேர்க்கவும். நன்கு கலக்கவும். உடனே சாப்பிடவும். பேல்பூரியை முதலிலேயே கலந்து வைத்தால் சொத சொதவென ஆகிவிடும். ஆகவே அவ்வப்போது சாப்பிடும் நபர்களுக்கு ஏற்பக் கொஞ்சம் கொஞ்சமாய்க் கலக்கவேண்டும்.

குறிப்பு: பேல் பூரி பண்ணப் போகும் நாளின் முந்தைய தினம் கூட இதைப் பண்ணி ஒரு காற்றுப் புகாத டப்பாவில் போட்டு வைக்கலாம்.

இந்த ஜீரகப் பொடி ரசம், சாட், தயிர்வடை போன்றவற்றிலும் கலக்கத் தேவைப்படும். ஆகவே நூறு கிராம் ஜீரகத்தை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொண்டால் தேவைப்படும்போது பயன்படுத்தலாம்.

சோளே பட்டூரா அல்லது சன்னா பட்டூரா

அடுத்து சோளே பட்டூரா அல்லது சனா பட்டூரா: வட இந்தியாவைப் பொறுத்த வரையில் இது ஒரு முக்கிய உணவு. தவறாமல் விருந்துகளில் இடம் பிடிக்கும் ஒன்று
இதற்குச் சோளே அல்லது சனா செய்ய முதல் நாளே கொண்டைக்கடலையை ஊற வைக்க வேண்டும். இது செய்ய வெள்ளைக் கொண்டைக்கடலையே ஏற்றது.

பட்டூரா செய்ய தேவையானவை :

மைதா மாவு 1/2 கிலோ
வெண்ணெய் அல்லது டால்டா(விருப்பம்போல்) 100 கிராம்
உப்பு தேவையான அளவு
ஒரு சிட்டிகை சமையல் சோடா
தயிர் ஒரு கப்
பொரிக்க எண்ணெய் தேவையான அளவு.

செய்முறை :

முதலில் மாவைப் பிசைந்து வைத்துக்கொள் ளவும் , மாவு நன்கு ஊறினால் தான் பூரி உப்புக்கொண்டு கரகரப்பாயும் கையால் பிய்த்தால் உள்ளே பொரபொரவென்றும் வரும்.

ஒரு அகலத் தட்டு அல்லது பேசனில் சிட்டிகை சோடாவைப் போட்டுக்கொண்டு நூறுகிராம் வெண்ணெயைப் போட்டு நன்கு குழைக்கவும். குழைக்க்க் குறைந்த்து ஐந்திலிருந்து பத்து நிமிஷம் ஆகவேண்டும். இப்போது தேவையான உப்பைச் சேர்த்துக் கலக்கவும். இதைச் சிறிது நேரம் நன்கு கலந்து விட்டுப்பின்னர் மைதாமாவைக் கொஞ்சம் கொஞ்சமாய்ச் சேர்த்துக்கொண்டே கலக்கவும். மாவும், வெண்ணெய் விழுதும் நன்கு கலக்க வேண்டும். கலக்க்க் கலக்க நம் கைகளுக்கே மாவின் வழவழப்புத் தன்மை மாறி பொரபொரவென வருவது புரியும். இப்போது கொஞ்சம் கொஞ்சமாய்த் தயிரைச் சேர்க்கவும். மாவை நன்கு பிசையவும். மாவு நன்கு கெட்டியாகப் பிசைந்த்தும், ஒரு ஈரத்துணியால் மாவை மூடி வைக்கவும். குறைந்த்து ஆறு மணி நேரமாவது மாவு ஊற வேண்டும். நடு நடுவே எடுத்து மாவைப் பிசைந்து திரும்ப மூடி வைக்கவும்.

சன்னா செய்ய தேவையானவை :

1 கப் ஊரவைத்த வெள்ளை கொத்துக்கடலை
2 உருளை கிழங்கு
2 வெங்காயம்
1 துண்டு இஞ்சி
சிறிய எலுமிச்சை அளவு புளி
1 ஸ்பூன் கடுகு
1/4 ஸ்பூன் மஞ்சள் பொடி
1 ஸ்பூன் மிளகாய் பொடி
1/2 ஸ்பூன் கரம் மசாலா
1 சின்ன துண்டு வெல்லம்
உப்பு
ஒரு சிட்டிகை சோடா உப்பு
2 ஸ்பூன் எண்ணை அல்லது டால்டா

செய்முறை :

ஒரு குக்கரில் ஊறிய கொத்துக்கடலை மற்றும் உருளை கிழங்கை உப்பு மற்றும் சோடா உப்பு சேர்த்து வேகவிடவும்.
வெந்ததும் அதிலிருந்து 2 ஸ்பூன் கொத்துக்கடலை , வெங்காயம் மற்றும் இஞ்சி சேர்த்து நன்கு விழுதாக அரைக்கவும் .
ஒரு வாணலி இல் எண்ணை விட்டு கடுகு தாளித்து அரைத்த விழுது போட்டு வதக்கவும்.
மிளகாய் பொடி மஞ்சள் பொடி சேர்க்கவும்.
நன்கு வதங்கியதும் புளியை கரைத்து விடவும்.
அது நன்கு கொதிக்கும் போது, வெந்த கடலை மற்றும் உருளைக்கிழங்கை போடவும்.
கரம் மசாலா பொடி யை போடவும்.
நன்கு கொதித்து கொஞ்சம் இறுகும் வரை பொறுக்கவும்.
வெல்லத்தை தட்டி போடவும்.
நன்கு கொதித்ததும் இறக்கவும்.

பட்டூரா செய்யும் விதம்: பிசைந்து வைத்த மாவைச் ரொட்டிக்கு எடுப்பது போல், உருண்டை எடுத்துக்கொண்டு பூரியாக இடவும். எண்ணெயைக் காய வைத்துப் பொரித்தெடுக்கவும். பூரி நன்கு உப்பிக்கொண்டு வெண்மையாக அப்படியே உப்பல் குறையாமல் இருக்கும்.

செய்து வைத்துள்ள சன்னா வுடன் பரிமாறவும். தேவையானால் பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி , கொத்துமல்லி தூவி பரிமாறலாம்.
புளிப்பு அதிகம் தேவைபடுபவர்கள், சன்னா மேல் எலுமிச்சை பிழிந்து கொள்ளலாம்.

பானி பூரி



பூரி செய்ய தேவயானவை :

1 கப் மைதா
1/4 கப் உளுந்துமாவு
1 கப் மெல்லிய ரவை
தேவையான உப்பு
கொஞ்சம் வெது வெதுப்பான தண்ணீர்

மேற்சொன்ன மாவுகளை உப்புச் சேர்ந்துக் கலந்து நீர் விட்டுப் பிசைந்து வைத்துக்கொள்ளவும். இந்த பூரிகளைச் சிறு உருண்டைகளாக உருட்டி உடனடியாகப் பொரிக்கவும். இவை நன்கு உப்ப வேண்டும். ஆகவே முள்கரண்டியால் குத்த வேண்டாம். இதை ஒரு நாள் முன்னதாய்ச் செய்து வைத்துக்கொள்ளலாம்.

அடுத்துப் பானி என்னும் சட்னி நீர் தயாரிக்கும் விதம்
. ஹிந்தியில் பானி என்றால் தண்ணீர் என்ற பொருள் என அனைவரும் அறிவோம். இங்கே பானி என்பது சட்னியை நீர்க்க்க் கரைப்பதைக் குறிக்கும்.

ஒரு கட்டு புதினா இலைகள்
ஒரு கட்டு கொத்துமல்லி இலைகள்
ஒரு டீஸ்பூன் மிளகு
ஒரு டேபிள் ஸ்பூன் கருப்பு உப்பு (இது இல்லாவிட்ட்லும் பரவாயில்லை )
ஒரு டேபிள் ஸ்பூன் சாதாரண உப்பு
2 டீஸ்பூன் ஜீரகம்
4 டீஸ்பூன் காய்ந்த ஆம்சூர் தூள்(மாங்காயைக் காய வைத்துச் செய்த பொடி, ஆம்சூர் என்ற பெயரிலே எல்லாக் கடைகளிலும் கிடைக்கும்.)
இஞ்சி ஒரு துண்டு.
2 டீஸ்பூன் வறுத்த ஜீரகப் பொடி

மேற்சொன்ன பொருட்களை நன்கு சுத்தம் செய்து ஒன்றாய்ப் போட்டு சட்னி பத்த்தில் நல்ல நைசாகவே அரைக்கவும். அரைத்த்தைச் சற்று நேரம் வைக்கவும்.
பிறகு நீரில் கரைத்து வைக்கவும்.

பூரிக்குள் வைக்கும் மசாலா :

பச்சைப் பயறு அல்லது கொண்டைக்கடலையை அல்லது பச்சை பட்டாணி உப்புப் போட்டு வேக வைத்துக்கொள்ளவேண்டும். உருளைக்கிழங்கை வேக வைத்துப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். தேவையானால் கொஞ்சம் உப்புப் போட்டுக் கலக்கலாம், பயறு வகையைச் சுண்டல் போல் செய்தாலும் நன்றாக இருக்கும்.

பானி பூரி யை பரிமாறுவது எப்படி ?

இப்போது பொரித்த பூரிகளை எடுக்கவும். ஒரு பூரியின் நடுவே கைக்கட்டை விரலால் ஒரு ஓட்டை போடவும். அந்த ஓட்டைக்குள்ளாக வேக வைத்த ப்யறு, உருளைக்கிழங்கை வைக்கவும். இப்போது அரைத்து வைத்த சட்னியை நீர் விட்டுக் கரைத்துக்கொண்டு அந்த நீரைக் கொஞ்சம் அதில் விடவும். உடனே வாயில் போட்டுக்கொண்டு சாப்பிட வேண்டும். இதில் முக்கியமாய்க் கவனிக்க வேண்டியது பூரி வாய் கொள்ளுமளவுக்குச் சின்னதாய் இருக்க வேண்டும் என்பதே. பூரியின் கரகரப்பு சட்னி நீரில் ஊறிப் போகும் முன்னர் சாப்பிட வேண்டும். பூரியின் கரகரப்பு, சட்னியின் காரம், அதோடு பயறு, உளுந்து இவற்றின் வெந்த தன்மை எல்லாம் சேர்ந்து சுவை நன்றாக இருக்கும்.

Blog Archive