Showing posts with label துவையல்கள். Show all posts
Showing posts with label துவையல்கள். Show all posts

Wednesday, October 7, 2020

கொள்ளு துவையல் - 2

Ingredients:
  • கொள்ளு : 1 / 2 கப்
  • தேங்காய் : 1/2 மூடி
  • சிவப்பு மிளகாய் : 7
  • பூண்டு : 7 பல்
  • உப்பு : தேவையான அளவு


Method:
  • தேங்காயை துருவி வைத்துக் கொள்ளவும்.
  • வாணலில் இல் கொள்ளைப் போட்டு , மிதமான தீ இல் , கருகாமல் , நன்கு வாசனை வரும் வரை வறுக்கவும்.
  • பூண்டை உரித்து பொடியாக நறுக்கி வைத்துக் கொண்டால் மிக்ஸியில் நன்றாக அரைபடும்.
  • இப்போது தேங்காய், கொள்ளு, உப்பு, சிவப்பு மிளகாய், பூண்டு இவற்றை மிக்ஸியில் தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ளவும். கொள்ளு துவையல் தயார்.
  • சாதத்துடன் சேர்த்து நல்லெண்ணெய் விட்டு சாப்பிடலாம்


Notes:
  • கொள்ளு உடம்பிற்கு மிகவும் நல்லது. எனவே, கொள்ளு துவையல், கொள்ளு தால், என்று வாரம் ஒருமுறையாவது உடம்புக்கு சேர்த்துக்கொள்வது நல்லது.

Tuesday, October 6, 2020

பருப்பு துவையல் 2

Ingredients:
  • துவரம் பருப்பு 1 கப்
  • தேங்காய் துருவல் 1/4 கப்
  • மிளகாய் வற்றல் 3 - 4
  • உப்பு
  • கொஞ்சம் எண்ணெய்


Method:
  • வாணலியில் 1 /2 ஸ்பூன் எண்ணை விட்டு அதில் துவரம் பருப்பு மற்றும் மிளகாய் போட்டு வறுக்கவும்.
  • நன்றாக 'மொரு மொரு 'பாக, கருக்காமல் வறுக்கவும்.
  • தேங்காய் துருவல் மற்றும் உப்புடன் சேர்த்து மிக்சி இல் 'மட்டா' தன்னறி விட்டு அரைக்கவும்.
  • அவ்வளவுதான், 'பருப்பு துவையல்' தயார்.

காய்கறி துவையல்

Ingredients:
  • கேரட் - 1
  • பீட்ரூட் - 1
  • பீன்ஸ் - 2
  • முட்டைக்கோஸ் - 1 இலை
  • சௌ சௌ - பாதி
  • வெங்காயம் - 1
  • தேங்காய் - 2 பத்தை
  • மிளகாய் வற்றல் - 2 - 4
  • கடுகு - 1 டீஸ்பூன்
  • உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
  • பெருங்காயம் - 1/4 டீ ஸ்பூன்
  • நல்லெண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
  • உப்பு - தேவையான அளவு.


Method:
  • காய்கறிகள் அனைத்தையும் சிறிதாக வெட்டிக் கொள்ளுங்கள்.
  • வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு வெட்டிய காய்கறிகள், மிளகாயைப் போட்டு, உப்பு சேர்த்து லேசாக வதக்குங்கள்.
  • வதங்கியதும் மிக்ஸியில் தேங்காய் சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள்.
  • மீண்டும் வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு பெருங்காயம், கடுகு, உளுந்து போட்டு தாளித்து அரைத்து வைத்துள்ள சட்னியில் கொட்டுங்கள்.
  • இப்பேது சுவையான காய்கறி துவையல் ரெடி


Notes:
  • நீங்கள் மீந்த எந்த கறிகாயிலும் இப்படி துவையல் செய்யலாம். வெங்காயம் சேர்த்து அல்லது சேர்க்காமல் செய்யலாம்

சௌ சௌ துவையல்

Ingredients:
  • சௌ சௌ - 1 காய்...............தோல் சீவி நறுக்கி வைத்துக்கொள்ளவும் அல்லது துருவி வைத்து கொள்ளவும் வதக்க நல்லா இருக்கும்
  • கடலைப் பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்,
  • உளுத்தம் பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்,
  • மிளகாய் வற்றல் - 2 - 4
  • பெருங்காயம் - சிறிது,
  • புளி பேஸ்ட் 1 டீ ஸ்பூன்
  • கறிவேப்பிலை - சிறிது,
  • உப்பு - தேவைக்கு,
  • எண்ணெய் - கொஞ்சம்
  • கடுகு - 1/2 ஸ்பூன்


Method:
  • வாணலி இல் 1/2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, மிளகாய் போட்டு வதக்கவும்.
  • அத்துடன் சௌ சௌ சேர்த்து நன்றாக வதக்கவும்.
  • கொஞ்சம் வதங்கினதும் உப்பு போட்டு வதக்கவும்.
  • இத்துடன் புளி பேஸ்ட் , பெருங்காயம் சேர்த்து மிக்ஸியில் நைசாக அரைத்துக் கொள்ளவும்.
  • பின்பு 1/2 டீஸ்பூன் எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை தாளித்துச் சேர்க்கவும்.
  • அருமையான 'சௌ சௌ துவையல்' தயார்.


Notes:
  • இது காரம் அதிகம் தாங்காது எனவே மிளகாய் வற்றலை பார்த்து போடுங்கள்

மாங்காய் இஞ்சி துவையல்

Ingredients:
  • மாங்காய் இஞ்சி 100 கிராம்
  • மிளகாய் வற்றல் – 6 - 8
  • புளி பேஸ்ட் 1 டீ ஸ்பூன்
  • உப்பு – தேவையான அளவு
  • எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
  • வெல்லம் ஒரு சின்ன துண்டு
  • தாளிக்க :
  • கடுகு 1/2 ஸ்பூன்
  • உளுத்தம் பருப்பு 1/2 ஸ்பூன்
  • பெருங்காயப்பொடி 1/4 ஸ்பூன்


Method:
  • மாங்காய் இஞ்சியை அலம்பி, தோல் சீவி துருவி வைக்கவும்.
  • வாணலி இல் எண்ணை விட்டு மாங்காய் இஞ்சி, மிளகாய் வற்றல் போட்டு வதக்கவும்.
  • கொஞ்சம் ஆறினதும், புளி பேஸ்ட், உப்பு, வெல்லம் எல்லாம் போட்டு அரைக்கவும்.
  • வாணலி இல் எண்ணைவிட்டு தாளிக்க கொடுத்த பொருட்களை தாளித்து, அரைத்ததை போட்டு கிளறி இறக்கவும்.
  • சூப்பரான மாங்காய் இஞ்சி துவையல் தயார்.

கோங்கூரா துவையல்

Ingredients:
  • கோங்கூரா (புளிச்ச கீரை) - 1 கட்டு
  • பெரிய வெங்காயம் - 1
  • மிளகாய் வற்றல் - 6
  • புளி பேஸ்ட் 1 டீ ஸ்பூன்
  • நல்லெண்ணெய் - 1 டீஸ்பூன்
  • உப்பு - தேவையான அளவு
  • பூண்டு - 6 பல்
  • உளுத்தம்பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்


Method:
  • கோங்கூராவை மண் போக அலசி நறுக்கிக் கொள்ளவும்.
  • வாணலியில் எண்ணெய் விட்டு பூண்டு, உளுத்தம்பருப்பு, வெங்காயம், மிளகாய் வற்றல் போட்டு வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
  • கோங்கூராவை வதக்கவும்.
  • எல்லாவற்றையும் உப்பு, புளி சேர்த்து அரைக்கவும்.
  • கோங்கூரா துவையல் ரெடி.
  • இதை நெய் விட்டு பிசைந்து சாப்பிடணும், ரொம்ப சூடு பண்ணும் உடம்புக்கு

எள் துவையல்

Ingredients:
  • வெள்ளை எள்ளு – 1 கப்
  • தேங்காய் துருவல் – அரை கப்
  • மிளகாய் வற்றல் – 6 - 8
  • புளி பேஸ்ட் 1 டீ ஸ்பூன்
  • உப்பு – தேவையான அளவு
  • எண்ணெய் – 1 டீ ஸ்பூன்


Method:
  • வாணலி இல் எண்ணெய் இல்லாமல் எள் 'பட பட' வென வெடிக்கும் வரை வறுத்துக்கொள்ளவும்.
  • பிறகு தேங்காய் ஈரம் போக வறுத்துக்கொள்ளவும்.
  • பிறகு சிறிது எண்ணெய் விட்டு மிளகாயை வறுக்கவும்.
  • வறுத்தப் பொருட்கள் ஆறிய பிறகு மிக்சியில் போட்டு புளி பேஸ்ட் மற்றும் உப்பு சேர்த்து அரைத்து கொள்ளவும்.
  • அவ்வளவு தான் மணமான எள் துவையல் தயார்.

அரு நெல்லிக்காய் துவையல்

Ingredients:
  • அரு நெல்லிக்காய் - 1 கப் கொட்டைகளை எடுத்துவிடவும்.
  • மிளகாய் வற்றல் 7 - 8
  • அல்லது பச்சை மிளகாய் 3 - 4
  • பெருங்காய பொடி - கால் டீஸ்பூன்
  • உப்பு - தேவையான அளவு
  • எண்ணை தாளிக்க
  • கடுகு 1/2 ஸ்பூன்


Method:
  • வாணலி இல் என்னைவிட்டு, கடுகு மிளகாய் வற்றல் தாளிக்கவும்.
  • தாளித்த மிளகாயை மட்டும் எடுத்துக்கொண்டு அத்துடன், பெருங்காய பொடி, உப்பு என எல்லாவற்றையும் போட்டு மிக்ஸியில் அரைத்து, கடைசியாக நெல்லிக்காய் சேர்த்து ஒரு சுற்றுசுற்றி எடுத்தால் அருமையான அரு நெல்லிக்காய் துவையல் ரெடி.
  • வாணலி இல் உள்ள கடுகை இத்துடன் சேர்த்து கலக்கவும்.
  • செய்வதும் சுலபம் ருசியும் அபாரம்
  • இப்போ அரு நெல்லிக்காய் சீசன் இதை செய்து பாருங்களேன் !

நெல்லிக்காய் துவையல்

Ingredients:
  • முழு நெல்லிக்காய் - ஐந்து - கொட்டைகளை எடுத்துவிடவும்.
  • மிளகாய் வற்றல் 2 - 4
  • அல்லது பச்சை மிளகாய் 3 - 4
  • பெருங்காயபொடி - கால் டீஸ்பூன்
  • தேங்காய் துருவல், எலுமிச்சைச் சாறு - தலா ஒரு டீஸ்பூன்
  • உப்பு - தேவையான அளவு


Method:
  • மிளகாய் வற்றல் அல்லது பச்சை மிளகாய், பெருங்காய பொடி, தேங்காய் துருவல், எலுமிச்சைச் சாறுஎல்லாவற்றையும் உப்பு போட்டு மிக்ஸியில் அரைத்து, கடைசியாக நெல்லிக்காய் சேர்த்து ஒரு சுற்றுசுற்றி எடுத்தால் அருமையான நெல்லிக்காய் துவையல் ரெடி.
  • செய்வதும் சுலபம் ருசியும் அபாரம்

கமலா ஆரஞ்சுத் தோல் துவையல்

Ingredients:
  • கமலா ஆரஞ்சு தோல் - கைப்பிடி அளவு
  • இஞ்சி - சிறிய துண்டு
  • மிளகாய் வற்றல் - 2 - 3
  • உளுத்தம்-பருப்பு - 2 டீஸ்பூன்
  • எண்ணெய், உப்பு - தேவையான அளவு.


Method:
  • முதலில் ஆரஞ்சுப்பழத் தோலை பொடியாக நறுக்கவும்.
  • பிறகு வாணலி இல் எண்ணெய் விட்டு அதை நன்கு வதக்கவும்.
  • இஞ்சியை தோல் சீவி துருவவும்.
  • பின்பு வாணலி இல் எண்ணெய் விட்டு மிளகாய், உளுத்தம்-பருப்பை வறுக்கவும்.
  • பிறகு, வதக்கிய ஆரஞ்சுத் தோல், இஞ்சி, மிளகாய், உளுத்தம்பருப்புடன் உப்பு சேர்த்து மிக்ஸியில் தண்ணீர் விடாமல் கெட்டியாக அரைக்கவும்.
  • அவ்வளவுதான் சுவையான கமலா ஆரஞ்சுத் தோல் துவையல் ரெடி


Notes:
  • வேண்டுமானால் இஞ்சியைக்கூட ஒரு வதக்கு வதக்கலாம் ஜுர வாய்க்கு இது நல்லா இருக்கும்

மாங்காய் துவையல்

Ingredients:
  • பெங்களுரா - கிளிமூக்கு மாங்காய் - 1
  • புளி பேஸ்ட் 1/2 ஸ்பூன்
  • உப்பு
  • மஞ்சள் தூள் - சிறிது
  • கொத்தமல்லி - அரை கட்டு
  • பச்சை மிளகாய் - 3
  • கடுகு - 1/2 டீ ஸ்பூன்
  • எண்ணெய் - கொஞ்சம் தாளிக்க


Method:
  • மாங்காயை தோல் சீவி பொடியாக நறுக்கவும்.
  • புளி பேஸ்ட் தகுந்த உப்பு, மஞ்சள் பொடி, கொத்தமல்லி, பச்சை மிளகாய் சேர்த்து மிக்சி இல் அரைக்கவும்.
  • (தண்ணீர் விடாமல் அரைக்கவும்) நறுக்கிய மாங்காயும் போட்டு ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.
  • சிறிது எண்ணெயில் கடுகு தாளித்து அரைத்த துவையல் மேல் சேர்க்கவும்.
  • இதை சூடான சாதத்துடன் கலந்து சாப்பிட்டால் மிக ருசியாக இருக்கும்.
  • இப்போ மாங்காய் சீசன் என்பதால் சுலபமாக செய்து சாப்பிடலாம்

காரட் துவையல்

Ingredients:
  • 1/4 கிலோ காரட்
  • 1 ஸ்பூன் புளி பேஸ்ட்
  • 1 -2 மிளகாய் வற்றல் அல்லது 1 ஸ்பூன் மிளகு
  • உப்பு
  • கொஞ்சம் எண்ணை
  • கடுகு மற்றும் உளுத்தம் பருப்பு 1 ஸ்பூன்


Method:
  • காரட்டை அலம்பி நறுக்கவும் ....அல்லது துருவவும்.
  • பிறகு வாணலி இல் எண்ணெய் விட்டு மிளகாய்வற்றல் போட்டு தாளித்து, நறுக்கி வைத்துள்ள
  • காரட்டை போட்டு நன்கு வதக்கவும்.
  • கொஞ்சம் வதங்கினதும் உப்பு போட்டு வதக்கவும்.
  • பிறகு எல்லாவற்றையும் மிக்சி இல் போட்டு அரைக்கவும்;
  • வாணலி இல் எண்ணை விட்டு கடுகு உளுத்தம்பருப்பு போட்டு தாளித்து துவையல் மீது கொட்டவும்.
  • அவ்வளவுதான் காரட் துவையல் ரெடி.
  • கொஞ்சம் தித்திப்பாய் இருப்பது போல இருக்கும், குழந்தைகளுக்கு பிடிக்கும்.
  • கலரும் நல்லா இருக்கும் உடம்புக்கு நல்லது

வெங்காயம் தக்காளி துவையல்

Ingredients:
  • 1 - 2 பெரிய வெங்காயம் - நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
  • 4 - 5 மிளகாய் வற்றல்
  • பெங்களூர் தக்காளி 2 அல்லது tomato பேஸ்ட் 1 - 2 ஸ்பூன்
  • 1/2 ஸ்பூன் கடுகு
  • 1/2 ஸ்பூன் உளுந்து
  • உப்பு
  • கொஞ்சம் எண்ணெய்


Method:
  • வாணலி இல் எண்ணெய் விட்டு வெங்காயத்தை நன்கு வதக்கவும்.
  • கொஞ்சம் ஆறினதும் மிக்சி இல்,விதை நீக்கப்பட்ட தக்காளி அல்லது தக்காளி பேஸ்ட் மற்றும் உப்பு போட்டு அரைக்கவும்.
  • கடுகு உளுந்தை தாளித்து இதன் மேல் கொட்டி கலக்கவும்.
  • சுவையான 'வெங்காயம் தக்காளி துவையல் ' ரெடி.
  • சாதத்துடன் சாப்பிட்டாலும் நல்லா இருக்கும், சப்பாத்தியுடன் சாப்பிட்டாலும் நல்லா இருக்கும்.
  • தக்காளி என்பதால் இதன் கலர் சிவப்பாய் இருக்கும் ஆனால் காரம் அதிகம் இருக்காது.
  • குழந்தைகள் விரும்பி உண்பார்கள்

வெங்காயத்துவையல்

Ingredients:
  • 1 - 2 பெரிய வெங்காயம் - நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
  • 4 - 5 மிளகாய் வற்றல்
  • புளி பேஸ்ட் 1 ஸ்பூன்
  • 1/2 ஸ்பூன் கடுகு
  • 1/2 ஸ்பூன் உளுந்து
  • உப்பு
  • கொஞ்சம் எண்ணெய்


Method:
  • வாணலி இல் எண்ணெய் விட்டு வெங்காயத்தை நன்கு வதக்கவும்.
  • கொஞ்சம் ஆறினதும் மிக்சி இல், புளி பேஸ்ட் மற்றும் உப்பு போட்டு அரைக்கவும்.
  • கடுகு உளுந்தை தாளித்து இதன் மேல் கொட்டி கலக்கவும்.
  • சுவையான 'வெங்காயத்துவையல் ' ரெடி.
  • சாதத்துடன் சாப்பிட்டாலும் நல்லா இருக்கும், சப்பாத்தியுடன் சாப்பிட்டாலும் நல்லா இருக்கும்.

கொள்ளு துவையல்

Ingredients:
  • கொள்ளு 1 கப்
  • பூண்டு 2 - 4 பற்கள்
  • தனியா 1 டீ ஸ்பூன்
  • சீரகம் 1 டீ ஸ்பூன்
  • மிளகாய் வற்றல் 2 -4
  • உப்பு
  • கொஞ்சம் எண்ணெய்
  • கறிவேப்பிலை


Method:
  • கொள்ளை நன்கு அலசி, அது முழ்கும் படி தண்ணீர் விட்டு குக்கரில் வைத்து, ( 3 -4 விசில்கள் வரும் வரை)
  • வேகவிட்டு ஆறவைக்கவும்.
  • வாணலி இல் எண்ணைவிட்டு, உப்பு தவிர மற்ற எல்லாம் போட்டு வறுக்கவும்.
  • வெந்த கொள்ளை தண்ணிரை வடிகட்டிவிட்டு , வறுத்ததையும் சேர்த்து உப்பு போட்டு அரைக்கவும்.
  • 'கொள்ளு துவையல்' ரெடி.
  • சாதத்தில் நெய்விட்டு இதையும் போட்டு சாப்பிடலாம்.


Notes:
  • சிலர் கொள்ளை வறுத்தும் செய்வார்கள்.

பருப்புத்துவையல் அல்லது சவரத்துவையல்

Ingredients:
  • துவரம் பருப்பு 1 கப்
  • உப்பு
  • கொஞ்சம் எண்ணெய்


Method:
  • வாணலியில் 1 /2 ஸ்பூன் எண்ணை விட்டு அதில் துவரம் பருப்பை போட்டு வறுக்கவும்.
  • நன்றாக 'மொரு மொரு 'பாக, கருக்காமல் வறுக்கவும்.
  • உப்புடன் சேர்த்து மிக்சி இல் 'மட்டா' தன்னறி விட்டு அரைக்கவும்.
  • அவ்வளவுதான், 'பருப்பு துவையல்' தயார்.
  • பொதுவாக இதை நாங்கள் 'காரமான பூண்டு ரசம்' செய்யும்போது செய்வோம்.
  • வேண்டுமானால் வெந்தய குழம்பு அல்லது வத்தக்குழம்பு செய்யும்போதும் செய்யலாம்.
  • காரமே இல்லாததால் குழந்தைகள் இதை ரொம்ப விரும்புவர்கள்.

தேங்காய் துவையல்

Ingredients:
  • தேங்காய் 1 துருவிக்கொள்ளவும்
  • குண்டு மிளகாய் வற்றல் 5 - 6
  • புளி பேஸ்ட் 1 டீ ஸ்பூன்
  • தாளிக்க எண்ணெய் + கடுகு, உளுத்தம் பருப்பு
  • உப்பு


Method:
  • ஒரு வாணலி இல் 1/2 ஸ்பூன் எண்ணை விட்டு, கடுகு, உளுத்தம் பருப்பு மற்றும் மிளகாய் வற்றலை தாளித்து ஒரு பேசினில் கொட்டிக்கொள்ளவும்.
  • அதிலிருந்து மிளகாய் வற்றல் ஐ மட்டும் எடுத்துகொண்டு, அத்துடன் தேங்காய் , உப்பு ,புளி பேஸ்ட் போட்டு மிக்சி இல் அரைக்கவும்.
  • தேவை என்றால் மட்டுமே துளி ஜலம் விடுங்கோ....இல்லாவிட்டால் அப்படியே அரைக்கவும்.
  • இதை தாளித்து வைத்ததுடன் கொட்டி கிளறவும்.
  • அவ்வளவுதான், சுவையான 'தேங்காய் துவையல்' ரெடி.
  • சுடு சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம்.
  • தோசை, சப்பாத்திக்கும் தொட்டுக்கலாம்.
  • ரசம் செய்யும் போது இதையும் செய்தால் அட்டகாசம் போங்கள்

பூண்டு துவையல்

Ingredients:
  • 1 கப் பூண்டு பற்கள்
  • 2 ஸ்பூன் புளி பேஸ்ட்
  • 1/2 ஸ்பூன் வறுத்து பொடித்த வெந்தய பொடி (தேவையானால் )
  • 10 - 12 மிளகாய் வற்றல்
  • உப்பு
  • கொஞ்சம் எண்ணை
  • கடுகு மற்றும் உளுத்தம் பருப்பு 1 ஸ்பூன்


Method:
  • வாணலி இல் எண்ணை விட்டு பூண்டு, மிளகாய் போட்டு வதக்கவும்.
  • மிக்சி இல் புளி பேஸ்ட் மற்றும் உப்பு போட்டு அரைக்கவும்.
  • தண்ணீர் ரொம்ப மட்டாக விடவும்.
  • வாணலி இல் எண்ணை விட்டு கடுகு உளுத்தம்பருப்பு போட்டு தாளித்து துவையல் மீது கொட்டவும்.
  • அவ்வளவுதான் பூண்டு துவையல் ரெடி.


Notes:
  • கொஞ்சம் காரம் கம்மியா போட்டால் , பிள்ளை பெற்றவர்களுக்கு தரலாம். தாய்ப்பால் நன்கு சுரக்கும் பூண்டு சேர்த்தால் :)

புடலங்காய் துவையல்

Ingredients:
  • 1/4 கிலோ புடலங்காய்
  • 2 ஸ்பூன் புளி பேஸ்ட்
  • 1 -2 மிளகாய் வற்றல் அல்லது 1 ஸ்பூன் மிளகு
  • உப்பு
  • கொஞ்சம் எண்ணை
  • கடுகு மற்றும் உளுத்தம் பருப்பு 1 ஸ்பூன்
  • 2 டீ ஸ்பூன் எள்


Method:
  • புடலங்காயை அலம்பி நறுக்கவும்.
  • வாணலி இல் எண்ணெய் விடாமல் எள்ளை 'பட பட' வென பொறியும் வரை வறுக்கவும்.
  • தனியே வைக்கவும்.
  • பிறகு வாணலி இல் எண்ணெய் விட்டு மிளகாய்வற்றல் போட்டு தாளித்து, நறுக்கி வைத்துள்ள
  • புடலங்காயை போட்டு நன்கு வதக்கவும்.
  • கொஞ்சம் வதங்கினதும் உப்பு போட்டு வதக்கவும்.
  • பிறகு எல்லாவற்றையும் மிக்சி இல் போட்டு அரைக்கவும்;
  • வாணலி இல் எண்ணை விட்டு கடுகு உளுத்தம்பருப்பு போட்டு தாளித்து துவையல் மீது கொட்டவும்.
  • அவ்வளவுதான் புடலங்காய் துவையல் ரெடி.


Notes:
  • எள் போடுவதால் ரொம்ப வாசனையாக நல்லா இருக்கும். நீங்க புடலங்காய்யை கூட்டு செய்யும்போது உள்ளே இருக்கும் விதைகளில் கூட இந்த துவையல் செய்யலாம்.இது சாதத்துடன் மட்டும் அல்ல தோசை இட்லி க்கு கூட தொட்டுக்கொள்ள நல்லா இருக்கும்.

பீர்கங்காய் துவையல்

Ingredients:
  • 1/4 கிலோ பீர்கங்காய்
  • 2 ஸ்பூன் புளி பேஸ்ட்
  • 10 -12 மிளகாய் வற்றல்
  • உப்பு
  • கொஞ்சம் எண்ணை
  • கடுகு மற்றும் உளுத்தம் பருப்பு 1 ஸ்பூன்
  • 2 டீ ஸ்பூன் எள்


Method:
  • பீர்க்கங்காயை அலம்பி நறுக்கவும்.
  • வாணலி இல் எண்ணெய் விடாமல் எள்ளை 'பட பட' வென பொறியும் வரை வறுக்கவும்.
  • தனியே வைக்கவும்.
  • பிறகு வாணலி இல் எண்ணெய் விட்டு மிளகாய்வற்றல் போட்டு தாளித்து, நறுக்கி வைத்துள்ள பீர்க்கங்காயை போட்டு நன்கு வதக்கவும்.
  • கொஞ்சம் வதங்கினதும் உப்பு போட்டு வதக்கவும்.
  • பிறகு எல்லாவற்றையும் மிக்சி இல் போட்டு அரைக்கவும்;
  • வாணலி இல் எண்ணை விட்டு கடுகு உளுத்தம்பருப்பு போட்டு தாளித்து துவையல் மீது கொட்டவும்.
  • அவ்வளவுதான் பீர்கங்காய் துவையல் ரெடி.


Notes:
  • எள் போடுவதால் ரொம்ப வாசனையாக நல்லா இருக்கும். நீங்க பீர்க்கங்காயை கூட்டு செய்யும்போது மீறும் தோலி இல் கூட இந்த துவையல் செய்யலாம்.இது சாதத்துடன் மட்டும் அல்ல தோசை இட்லி க்கு கூட தொட்டுக்கொள்ள நல்லா இருக்கும்.

Blog Archive