Showing posts with label புளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை. Show all posts
Showing posts with label புளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை. Show all posts

Saturday, September 10, 2011

ரவா கிச்சடி

தேவையானவை:

வறுத்த ரவை 2 கப்
வெங்காயம் 2 (பொடியாய் நறுக்கவும்)
தக்காளி 1 (தேவையானால் )
பூண்டு 4 - 5 பற்கள்
இஞ்சி 1 சின்ன துண்டு
பச்சை மிளகாய் 6 -8
புளி பேஸ்ட் 3 - 4 ஸ்பூன்ஸ்
கேரட், உருளை, பீன்ஸ், பச்சை பட்டாணி, கத்தரி என நறுக்கிய காய்கள் மொத்தம் 1 - 1 1/2 கப்.

தாளிக்க:
கடுகு 1 ஸ்பூன்
உளுந்து 1 ஸ்பூன்
கடலை பருப்பு 1 ஸ்பூன்
மஞ்சள் பொடி 1/2 ஸ்பூன்
கறிவேப்பிலை 1 கைப்பிடி
எண்ணை 3 - 4 ஸ்பூன்
நெய் 2 -3 ஸ்பூன்

செய்முறை:

ஒரு ஆழமான வாணலி இல் எண்ணை மற்றும் நெய் விடவும்.
தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளிக்கவும்.
பூண்டு, பச்சைமிளகாய் போடவும்.
வெங்காயம் போடவும்.
நன்கு வதக்கவும், இப்ப எல்லா காய்கறிகளையும் போடவும்.
நன்கு கிளறவும், உப்பு போட்டு ஒரு 2 நிமிடம் மூடி வைக்கவும்.
கொஞ்சம் வெந்து இருக்கும்.
இப்ப புளி பேஸ்ட் போட்டு நன்கு கிளறவும்.
மீண்டும் 2 நிமிடம் மூடி வைக்கவும்.
திறந்து, 2 டம்பளர் தண்ணீர் விடவும், தண்ணீர் நன்கு கொதிக்கும் வரை காத்திருக்கவும்.
நன்கு கொதித்ததும், அடுப்பை சின்ன தாக்கி விட்டு, ரவையை கொட்டி கிளறவும்.
நன்கு வெந்ததும் இறக்கவும்.
நல்ல சுவையான 'ரவா கிச்சடி' தயார்.
தொட்டுக்கொள்ள ஒன்றுமே வேண்டாம், தயிர் போறும் புன்னகை

Ready Made புளியோதரை

Ready Made புளியோதரை செய்ய புளி பேஸ்ட் தவிர ஒரு பொடியும் செய்து வைத்துக்கொள்ளனும். ரொம்ப அருமையான recipe இது. எங்க வீட்டிலும் எங்க உறவினர் மற்றும் நண்பர்கள் வட்டாரத்திலும் மிகவும் பிரபலம். புன்னகை

முதலில் பொடி செய்யும் முறையை பார்போம். இதை நான் APP - that is 'ALL PURPOSE POWDER' என் அழைப்பது வழக்கம். இதை கொண்டும் பல டிஷ் கள் தயாரிக்கலாம்.

தேவையானவை:

500gm தனியா
500gm கடலை பருப்பு
250gm குண்டு மிளகாய்
பெருங்காயம் - ஒரு சின்ன துண்டு
கொஞ்சம் எண்ணெய் (அரை ஸ்பூன் )

செய்முறை :

பெருங்காயத்தை துளி எண்ணெயில் பொரிக்கவும்.
தனி எ எடுத்துவைக்கவும்
அதே வாணலில் மற்றவற்றை போட்டு கருகாமல் வறுக்கவும்.
நன்கு ஆறினதும் மிக்சியில் போட்டு பொடிக்கவும்.
உங்கள் APP தயார்.

இப்ப புளியோதரை செய்யலாம்.

அதற்கு 'உதிர் உதிராய்' வடித்த சாதம் 1 கப்
APP இரண்டு அல்லது மூன்று ஸ்பூன்
புளி பேஸ்ட் இரண்டு அல்லது மூன்று ஸ்பூன்

தாளிக்க:
நல்லெண்ணெய்
கடலை பருப்பு
உளுத்தம் பருப்பு
கடுகு
மிளகாய் வட்ற்றல்
கறிவேப்பிலை
வேர்கடலை
முந்திரி

செய்முறை:

ஒரு தாம்பாளம் அல்லது ஒரு பேசினில் 'உதிர் உதிராய்' வடித்த சாததை போடவும்.
ஒரு வாணலில் நல்லெண்ணெய் விட்டு, தாளிக்க கூறிய சாமான்களை போட்டு தாளித்து, சாதத்தின் மேல் கொட்டவும்.
புளி பேஸ்ட் போடவும்
APP யும் போட்டு மெல்ல கிளறவும் அல்லது குலுக்கவும்.
சுவையான புளியோதரை ரெடி.

குறிப்பு:APP யும், புளி பேஸ்ட் ம தயாராக இருந்தால் போரும். எப்பவேனாலும்
புளியோதரை ரெடி பண்ணிடலாம்.
lunchbox கு, பிக்னிக் போவதற்கு , அல்லது நாக்கு செத்து போச்சுனா உடனடியாக தயார் பண்ணலாம்.

புளிக்கூட்டு செய்யும் முறை

கூட்டுக்கு பருப்பு கறிகாய் வெந்ததும், வாணலில் கடுகு தாளித்து, வெந்த பருப்பு கறிகாய் போட்டு , இரண்டு ஸ்பூன் புளி பேஸ்ட் போட்டு, பெருங்காயம் , கறிவேப்பிலை, வறுத்து அரைத்த வெந்தய பொடி, உப்பு , தேங்கா துருவல்,அரைத்துவைத்துள்ள மசாலா எல்லாம் போட்டு ஒரு கொதி வந்ததும் இறக்கிடலாம். ரொம்ப சுலபம்.

வத்தக்குழம்பு, சாம்பார், ரசம் செய்ய

பருப்பு சாம்பார் செய்ய, வெந்த பருப்புடன் புளி பேஸ்ட் ஐ போட்டு கரைக்கவும் . காய்கள் தாளித்ததும், இதை கொட்டி, சாம்பார் பொடி ,வெந்தயபொடி, பெருங்காயப்பொடி என எல்லாம் போட்டு கொதித்ததும் இறக்கவும்.


பருப்புசாம்பார் போலவே, ரசம் இரண்டு முதல் முன்று ஸ்பூன் புளி பேஸ்ட் ஐ உபயோகிக்கலாம்.

ரசத்துக்கு தாளித்ததும் , இரண்டு தம்ப்ளர் தண்ணி விட்டு டனும்.
பிறகு புளி பேஸ்ட் ஐ போட்டு கலக்கணும்.
உடனேயே ரசப்பொடி , தக்காளி பருப்பு ஜலம், மஞ்சள் பொடி, பெருங்காய பொடி உப்பு எல்லாம் போட்டுடலாம்.
நன்கு கொதித்து விளாவினதும் இறக்கிடலாம்.
இங்கு நாம் புளி பேஸ்ட் ஐ உபயோகிப்பதால் சமயல் நேரம் குறையும். புன்னகை புளி யும் 'திட்டமாக ' உபயோகிக்கலாம்.


வத்தல் குழம்புக்கும் இதே போல் தான் :)

புளிப்பு வேண்டுமானால் கடைசியில் கூட இன்னும் சேர்க்கலாம்.
No problem ஏன்னா புளி முன்பே நல்லா கொதித்துவிட்டது.
புளி பேஸ்ட் ஐ உபயோகிப்பதால் உங்கள் புளி செலவு பாதியாகிவிடும் பாருங்களேன்.

புளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை

புளி பேஸ்ட் கொண்டு பல 'recipes ம பண்ணலாம். புளி எங்கெல்லாம் உபயோகிக்கிறோமோ அங்கு இந்த பேஸ்ட் ஐ உபயோகப்படுத்தலாம் .
குழம்புகள் செய்யலாம்,
ரசம் செய்யலாம்,
புளித்த கூட்டு செய்யலாம்,
Ready Made புளியோதரை செய்யலாம்
ரவா கிச்சடி செய்யலாம்.
இங்கு நாம் மேற்கூறியவைகளின் செய்முறையை பார்போம்.

Blog Archive