Thursday, October 8, 2020

ஜவ்வரிசி பச்சடி

Ingredients:
  • 1 கப் ஜவ்வரிசி
  • 2 கப் குழப்பின கெட்டி தயிர்
  • 1 டேபிள் ஸ்பூன் பொடியாக நறுக்கின கொத்துமல்லி தழை
  • இரண்டு பச்சை மிளகாய் - பொடியாக நறுக்கவும்
  • உப்பு
  • தாளிக்க :
  • அரை ஸ்பூன் கடுகு
  • ஒரு சிட்டிகை பெருங்காயம்
  • இரண்டு ஸ்பூன் எண்ணெய்


Method:
  • வாணலி இல் எண்ணெய்விட்டு, கொஞ்சம் கொஞ்சமாய் ஜவ்வரிசியை பொறித்து எடுத்துக் கொள்ளவேண்டும்.
  • தயிர், கொத்துமல்லி தழை, உப்பு என்று எல்லாவற்றையும் ஒன்றாக போட்டு கலக்கவும்.
  • வறுத்த ஜவ்வரிசியை தயிரில் கொட்டவும்.
  • இப்போது, தாளிக்க கொடுத்ததை தாளித்து, அத்துடன் பச்சைமிளகாய் போட்டு தாளித்து பச்சடி மேல் கொட்டவும்.
  • அவ்வளவுதான், சுவையான ஜவ்வரிசி பச்சடி ரெடி.
  • எல்லா துவையல் சாதத்திற்கும் இது நன்றாக இருக்கும்.

ஜவ்வரிசி, வெங்காயப் பச்சடி

Ingredients:
  • 2 வெங்காயம் - பொடியாக நறுக்கி வைக்கவும்
  • 1 கப் ஜவ்வரிசி
  • 2 கப் குழப்பின கெட்டி தயிர்
  • 1 டேபிள் ஸ்பூன் பொடியாக நறுக்கின கொத்துமல்லி தழை
  • இரண்டு பச்சை மிளகாய் - பொடியாக நறுக்கவும்
  • உப்பு
  • தாளிக்க :
  • அரை ஸ்பூன் கடுகு
  • ஒரு சிட்டிகை பெருங்காயம்
  • இரண்டு ஸ்பூன் எண்ணெய்


Method:
  • வாணலி இல் எண்ணெய்விட்டு, கொஞ்சம் கொஞ்சமாய் ஜவ்வரிசியை பொறித்து எடுத்துக் கொள்ளவேண்டும்.
  • தயிர், கொத்துமல்லி தழை, உப்பு என்று எல்லாவற்றையும் ஒன்றாக போட்டு கலக்கவும்.
  • வறுத்த ஜவ்வரிசியை தயிரில் கொட்டவும்.
  • இப்போது, தாளிக்க கொடுத்ததை தாளித்து, அத்துடன் பச்சைமிளகாய் மற்றும் பொடியாக நறுக்கின வெங்காயத்தை போட்டு வதக்கவேண்டும்.
  • ஜஸ்ட் இரண்டு நிமிடங்கள் போதும் இறக்கிவிடவும்.
  • பரிமாறுவதற்கு முன், நன்றாக ஊறி உள்ள ஜவ்வரிசி பச்சடி மேல் கொட்டவும்.
  • நன்கு கலக்கி பரிமாறவும்.
  • அவ்வளவுதான், சுவையான ஜவ்வரிசி, வெங்காயப் பச்சடி ரெடி.
  • எல்லா துவையல் சாதத்திற்கும் இது நன்றாக இருக்கும்.


Notes:
  • சூட்டுடன் வெங்காயத்தை தயிரில் போட்டால் நீர்த்துவிடும். அதனால் ஆறினதும் சேர்க்கவும் . அப்படி உடனே போடும் பட்ஷத்தில் கூட உள்ள ஜவ்வரிசி அந்த நீரை உறிஞ்சிவிடும். பச்சடி கெட்டியாக இருக்கும்.

வெங்காயப் பச்சடி

Ingredients:
  • 2 வெங்காயம் - பொடியாக நறுக்கி வைக்கவும்
  • 2 கப் குழப்பின கெட்டி தயிர்
  • 1 டேபிள் ஸ்பூன் பொடியாக நறுக்கின கொத்துமல்லி தழை
  • இரண்டு பச்சை மிளகாய் - பொடியாக நறுக்கவும்
  • உப்பு
  • தாளிக்க :
  • அரை ஸ்பூன் கடுகு
  • ஒரு சிட்டிகை பெருங்காயம்
  • அரை ஸ்பூன் எண்ணெய்


Method:
  • தாளிக்க கொடுத்ததை தாளித்து, அத்துடன் பச்சைமிளகாய் மற்றும் பொடியாக நறுக்கின வெங்காயத்தை போட்டு வதக்கவேண்டும்.
  • ஜஸ்ட் இரண்டு நிமிடங்கள் போதும் இறக்கிவிடவும்.
  • தயிர், கொத்துமல்லி தழை, உப்பு என்று எல்லாவற்றையும் ஒன்றாக போட்டு கலக்கவும்.
  • இதன் மேல் கொட்டவும்.
  • அவ்வளவுதான், சுவையான வெங்காயப் பச்சடி ரெடி.
  • எல்லா துவையல் சாதத்திற்கும் இது நன்றாக இருக்கும்.


Notes:
  • சிலர் வெங்காயத்தை பச்சையாகவே நறுக்கி செய்வார்கள். அப்படி செய்யும்போது, சாப்பிட்டபின் வாய் நாற்றம் அடிக்கும். இதுவும் அப்படி ஆகும் என்றாலும், கொஞ்சம் குறைவாக உணரலாம்.
  • சூட்டுடன் வெங்காயத்தை தயிரில் போட்டால் நீர்த்துவிடும். ஒருவேளை மதியம் புலவுடன், வெங்காய பச்சடி வைக்க வேண்டும் என்றால், வெங்காயம் ஆறினதும், தயிர் மட்டும் விட்டு, உப்பு போடாமல் கொடுத்து அனுப்பவும். சாப்பிடும்போது உப்பை போட்டு கலந்து உபயோகிக்கட்டும்.

பூந்தி ராய்த்தா பச்சடி

Ingredients:
  • புளிக்காத கெட்டித்தயிர் – 1கப்
  • காரா பூந்தி –2கப்
  • உடைத்து வறுத்த வேர்க்கடலை – 2 டேபிள்ஸ்பூன்
  • நெய் இல் வறுத்த முந்திரிபருப்பு – 5 - 6 (உடைத்து வைத்துக் கொள்ளவும் )
  • பச்சைமிளகாய் – 2
  • சர்க்கரை – 1 டீஸ்பூன்
  • மல்லித்தழை – சிறிதளவு
  • உப்பு – தேவைக்கேற்ப


Method:
  • பச்சைமிளகாய், கொத்து மல்லித்தழை, சர்க்கரை எல்லாவற்றையும் மிக்ஸியில் விழுதாக அரைக்கவும்.
  • அரைத்த விழுதுடன், வறுத்துப் பொடித்த வேர்க்கடலை, உப்பு சேர்த்துத் தயிருடன் கலக்கவும்.
  • பரிமாறுவதற்கு சிறிது நேரத்திற்கு முன்பு, பூந்தி யைத் தயிருடன் கலந்து மேலே முந்திரி தூவி பரிமாறவும்.

காரட் பச்சடி

Ingredients:
  • 2 காரட் - அலம்பி துடைத்து தோல் சீவி துருவவும்.
  • 2 கப் குழப்பின கெட்டி தயிர்
  • 1 டேபிள் ஸ்பூன் பொடியாக நறுக்கின கொத்துமல்லி தழை
  • இரண்டு பச்சை மிளகாய் - பொடியாக நறுக்கவும்
  • உப்பு
  • தாளிக்க :
  • அரை ஸ்பூன் கடுகு
  • ஒரு சிட்டிகை பெருங்காயம்
  • அரை ஸ்பூன் எண்ணெய்


Method:
  • ஒரு பேசினில் , துருவிய காரட், தயிர், கொத்துமல்லி தழை , பச்சை மிளகாய், உப்பு என்று எல்லாவற்றையும் ஒன்றாக போட்டு கலக்கவும்.
  • தாளிக்க கொடுத்ததை தாளித்து இதன் மேல் கொட்டவும்.
  • அவ்வளவுதான், சுவையான காரட் பச்சடி ரெடி.
  • எல்லா துவையல் சாதத்திற்கும் இது நன்றாக இருக்கும்.


Notes:
  • சிலர் காரட்டை துருவாமல் மிகவும் சிறியதாக நறுக்கியும் செய்வார்கள்.

நார்த்தங்காய் பச்சடி

Ingredients:
  • நாரத்தை 1 (பொடியாக நறுக்கியது)
  • உப்பு – தேவைக்கேற்ப
  • புளி – நெல்லிக்காய் அளவு
  • மஞ்சள்தூள் 1/2டீஸ்பூன்
  • துருவிய வெல்லம் – 1/4கப்
  • கடுகு – 1/4டீஸ்பூன்
  • நறுக்கிய பச்சைமிளகாய் – 3
  • வெந்தய பொடி 1 /4 டீ ஸ்பூன்
  • மிளகாய் பொடி 1 /4 டீ ஸ்பூன்
  • எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்


Method:
  • வாணலி இல் எண்ணெய்விட்டு கடுகு, பச்சைமிளகாய் தாளித்து, புளிக்கரைசலில் சேர்க்கவும்.
  • அத்துடன், பொடியாக நறுக்கிய நாரத்தங்காய்,மஞ்சள் பொடி சேர்க்கவும்.
  • நார்த்தங்காய் நன்கு வெந்ததும், உப்பு வெல்லம் சேர்க்கவும்.
  • எல்லாமாக சேர்ந்துகொண்டு வரும்போது, கொஞ்சம் வெந்தய பொடி மற்றும் மிளகாய் பொடி போடவும்.
  • இன்னும் கொதித்து இறுகினதும், இறக்கவும்.


Notes:
  • புளி கரைசலுக்கு பதிலாக ஒரு வேளை நீங்கள் புளி பேஸ்ட் உபயோகித்தால், கொஞ்சம் தண்ணீர் சேர்த்துக்கொள்ளுங்கள். அப்போது தான் நாரத்தங்காய் வேகும்.

மாங்காய் இஞ்சி பச்சடி!

Ingredients:
  • புளிப்பில்லாத தயிர் – 2கப்
  • நறுக்கிய மாங்காய் இஞ்சி – 11/2டீஸ்பூன்
  • தேங்காய்த் துருவல் – 4டேபிள்ஸ்பூன்
  • சீரகம் 1 /2 டீஸ்பூன்
  • கடுகு – 1/4டீஸ்பூன்
  • கொத்துமல்லி இலைகள் – சிறிதளவு
  • பெருங்காயம்
  • எண்ணெய்
  • உப்பு – தேவைக்கேற்ப


Method:
  • தேங்காய், சீரகம், மாங்காய் இஞ்சி முதலியவற்றை விழுதாக அரைக்கவும்.
  • தயிரில் அரைத்தவிழுது, உப்பு போட்டுக் கலந்து, கடுகு, பெருங்காயம் தாளித்து கொத்துமல்லியைத் தூவி அலங்கரிக்கவும்.

மல்டி வெஜிடபிள் பச்சடி

Ingredients:
  • துருவிய கேரட்,சௌசௌ,முட்டைகோஸ் குடைமிளகாய் – தலா 2டேபிள்ஸ்பூன்
  • தேங்காய் துருவல் – தலா 1டேபிள்ஸ்பூன்
  • வறுத்த கசகசா – 1/2டீஸ்பூன்
  • கடுகு – 1/4டீஸ்பூன்
  • பச்சைமிளகாய் – 1
  • மல்லித்தழை - சிறிதளவு
  • தயிர் – 3கப்
  • உப்பு – ருசிக்கேற்ப
  • எண்ணெய் – தேவையானாளவு.


Method:
  • வாணலி இல் எண்ணெய்விட்டு கடுகு தாளிக்கவும்.
  • குழப்பி வைத்துள்ள தயிரில் கொட்டவும்.
  • தேங்காய், பச்சைமிளகாய், கசகசா மற்றும் கோத்த்துமல்லி எல்லாவற்றையும் விழுதாக அரைக்கவும்.
  • பின்பு, மிகவும் பொடியாக நறுக்கிவைத்துள்ள காய்கறிகள் அரைத்த விழுது எல்லாவற்றையும் தயிரில் போட்டு நன்கு கலக்கவும்.
  • உப்பு போட்டு கலந்து பரிமாறவும்.

மணத்தக்காளி வற்றல் பச்சடி

Ingredients:
  • மணத்தக்காளி வற்றல் – 1/4கப்
  • கெட்டித்தயிர். – 2கப்
  • மிளகாய்வற்றல் – 1
  • துவரம்பருப்பு – 1/2டீஸ்பூன்.
  • சீரகம் – 1/4டீஸ்பூன்
  • நெய் – 2டீஸ்பூன்
  • பெருங்காயம் – ஒரு சிட்டிகை
  • உப்பு – தேவைக்கேற்ப


Method:
  • வாணலி இல் நெய்விட்டு மணத்தக்காளி வற்றலை பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும்.
  • பின் மிளகாய் வத்தல்,சீரகம், துவரம்பருப்பு, இவைகளை வறுத்துப் பொடித்துக் கொள்ளவும்.
  • பிறகு, அனைத்தையும் தயிரில் கலந்து, கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து , உப்பு சேர்க்கவும்.

நெல்லிமுள்ளி பச்சடி

Ingredients:
  • நெல்லிமுள்ளி – 10 - 15
  • புளிப்பில்லாத தயிர் – 2கப்
  • பச்சைமிளகாய் – 4
  • தேங்காய்த்துருவல். - 3டேபிள்ஸ்பூன்
  • நெய் – 1டீஸ்பூன்
  • கொத்தமல்லி – 1/4கப் நறுக்கியது
  • உப்பு - தேவைக்கேற்ப


Method:
  • நெல்லிமுள்ளியை ஒரு அரைமணி நேரம் வெந்நீரில் ஊறவைத்து மைய அரைத்துக் கொள்ளவும்..
  • அதில், தேங்காய், பச்சைமிளகாய் சேர்த்து நன்றாக அரைக்கவும்.
  • அரைத்த அனைத்தையும் புளிக்காத தயிரில் கலந்து,உப்பு போட்டு கலக்கவும்.
  • பிறகு, நெய்யில் கடுகு, பெருங்காயம் தாளித்துக் கொட்டவும்.
  • தேவையானால் கொத்துமல்லி தூவலாம்.
  • குறிப்பு: பெரிய நெல்லிக்காய்களை வெயிலில் காயவைத்து எடுத்து வைத்துக் கொள்வதையே நெல்லி முள்ளி என்று சொல்கிறோம். இந்த பச்சடியை பொதுவாக துவாதசி அன்று செய்வார்கள். காய்ந்தாலும் நெல்லிக்காய் இல் உள்ள சத்துக்கள் வீணாவது இல்லை.

விளாம்பழ பச்சடி

Ingredients:
  • விளாம்பழம்- - 2
  • பொடியாக்கிய வெல்லம் – 3/4கப்
  • சுக்குப்பொடி – 1/2டீஸ்பூன்
  • கடுகு – 1/4டீஸ்பூன்
  • பச்சை மிளகாய் – 2
  • நெய் – 2டீஸ்பூன்
  • உப்பு – ஒருசிட்டிகை


Method:
  • விளாம்பழத்தை உடைத்து,ஓட்டிலிருந்து எடுத்து, கூழாக மசித்து வைக்கவும்.
  • வெல்லத்தை தூளாக்கி, கொஞ்சம் தண்ணீர்விட்டு அடுப்பில் வைக்கவும்.
  • வெல்லம் கரைந்ததும் வடிகட்டவும்.
  • மீண்டும் அடுப்பில் வைத்து, 'பிசு பிசு' பாகு வந்ததும், ( கையில் தொட்டால் ஓட்டவேண்டும், அது தான் பதம் ) மசித்து வைத்த விளாம்பழத்தை போட்டு கலக்கவும்.
  • உப்பு, சுக்குப்பொடி போட்டுக் கலக்கவும்.
  • அடுப்பிலிருந்து இறக்கவும்.
  • ஒரு சின்ன கடாய் அல்லது தாளிக்கும் கரண்டி இல், நெய்விட்டு கடுகு, பச்சைமிளகாய் தாளித்துக் கொட்டவும்.
  • அருமையான விளாம்பழ தித்திப்பு பச்சடி தயார் !

வெள்ளரிக்காய் பச்சடி 2

Ingredients:
  • 2 வெள்ளரிக்காய் - அலம்பி துடைத்து தோல் சீவி துருவவும்.
  • 'திக்' ஆக குழப்பிய தயிர் - 1 cup
  • பச்சை மிளகாய் - 4 -6
  • தேங்காய் துருவல் - 1 கப்
  • இஞ்சி 2 -3 இன்ச் அளவு
  • கடுகு - 1/2 ஸ்பூன்
  • உளுத்தம்பருப்பு - 1/2 ஸ்பூன்
  • கொத்தமல்லித்தழை - சிறிதளவு
  • ஒரு சிட்டிகை பெருங்காயம்
  • எண்ணெய் - 1 ஸ்பூன்
  • உப்பு - தேவையான அளவு


Method:
  • பச்சைமிளகா, இஞ்சி,உப்பு , தேங்காய் சேர்த்து அரைக்கவும்.
  • அரைத்த விழுதுடன் தயிரைச் சேர்க்கவும்.
  • கொஞ்சமும்
  • தண்ணீர் சேர்க்கவேண்டாம்.
  • துருவிய வெள்ளரிக்காயையும் அதில் போட்டு நன்கு கலக்கவும்.
  • வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயம் போட்டு தாளித்து, தயிருடன் உள்ள விழுதில் கொட்டவும்.
  • அதனுடன் நறுக்கிய கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.
  • எல்லா துவையலுக்கும் இது சுவையான சைடு டிஷ்.

வெள்ளரிக்காய் பச்சடி 3

Ingredients:
  • 2 வெள்ளரிக்காய் - அலம்பி துடைத்து தோல் சீவி துருவவும்.
  • 2 கப் குழப்பின கெட்டி தயிர்
  • 1 டேபிள் ஸ்பூன் பொடியாக நறுக்கின கொத்துமல்லி தழை
  • இரண்டு பச்சை மிளகாய் - பொடியாக நறுக்கவும்
  • உப்பு
  • தாளிக்க :
  • அரை ஸ்பூன் கடுகு
  • ஒரு சிட்டிகை பெருங்காயம்
  • அரை ஸ்பூன் எண்ணெய்


Method:
  • ஒரு பேசினில் , துருவிய வெள்ளரிக்காய், தயிர், கொத்துமல்லி தழை , பச்சை மிளகாய், உப்பு என்று எல்லாவற்றையும் ஒன்றாக போட்டு கலக்கவும்.
  • தாளிக்க கொடுத்ததை தாளித்து இதன் மேல் கொட்டவும்.
  • அவ்வளவுதான், சுவையான வெள்ளரிக்காய் பச்சடி ரெடி.
  • எல்லா துவையல் சாதத்திற்கும் இது நன்றாக இருக்கும்.


Notes:
  • சிலர் வெள்ளரிக்காயை துருவல் மிகவும் சிறியதாக நறுக்கியும் செய்வார்கள்.

தேங்காய் இஞ்சி பச்சடி

Ingredients:
  • 'திக்' ஆக குழப்பிய தயிர் - 1 cup
  • பச்சை மிளகாய் - 4 -6
  • தேங்காய் துருவல் - 1 கப்
  • இஞ்சி 2 -3 இன்ச் அளவு
  • கடுகு - 1/2 ஸ்பூன்
  • உளுத்தம்பருப்பு - 1/2 ஸ்பூன்
  • கொத்தமல்லித்தழை - சிறிதளவு
  • எண்ணெய் - 1 ஸ்பூன்
  • உப்பு - தேவையான அளவு


Method:
  • பச்சைமிளகா, இஞ்சி,உப்பு , தேங்காய் சேர்த்து அரைக்கவும்.
  • அரைத்த விழுதுடன் தயிரைச் சேர்க்கவும்.
  • வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து, தயிருடன் உள்ள விழுதில் கொட்டவும்.
  • அதனுடன் நறுக்கிய கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.
  • எல்லா துவையலுக்கும் இது சுவையான சைடு டிஷ்.
  • முக்கியமாய் 'ஸ்ரார்த துவையலுக்கு; ரொம்ப நல்லா இருக்கும்.

நெல்லிக்காய் பச்சடி

Ingredients:
  • பெரிய நெல்லிக்காய் - 5
  • 'திக்' ஆக குழப்பிய தயிர் - 1 cup
  • பச்சை மிளகாய் - 2 - 4
  • தேங்காய் துருவல் - ஒரு மேஜைக்கரண்டி
  • இஞ்சி 1 இன்ச் அளவு
  • கடுகு - 1/2 ஸ்பூன்
  • உளுத்தம்பருப்பு - 1/2 ஸ்பூன்
  • கறிவேப்பிலை - சிறிதளவு
  • கொத்தமல்லித்தழை - சிறிதளவு
  • எண்ணெய் - 1 ஸ்பூன்
  • உப்பு - தேவையான அளவு


Method:
  • நெல்லிக்காயை நறுக்கிக்கொள்ளவும்.
  • பச்சைமிளகா, இஞ்சி,உப்பு , தேங்காய் சேர்த்து அரைக்கவும்.
  • அரைத்த விழுதுடன் தயிரைச் சேர்க்கவும்.
  • வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து, தயிருடன் உள்ள நெல்லிக்காய் விழுதில் கொட்டவும்.
  • அதனுடன் நறுக்கிய கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.

மாங்காய் பச்சடி

Ingredients:
  • 1 ஸ்பூன் வேப்பம் பூ
  • 4 ஸ்பூன் மாங்காய் துண்டுகள்
  • 3 ஸ்பூன் வெல்லம்
  • 1/2 ஸ்பூன் கடுகு
  • 2 பச்சை மிளகாய்
  • 1/2 ஸ்பூன் உப்பு
  • 1 ஸ்பூன் நெய்


Method:
  • முதலில் வாணலியில் நெய் விட்டு கடுகு போட்டு, வெடித்ததும் பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.
  • பிறகு வேப்பம் பூ போட்டு வதக்கவும். பிறகு மாங்காய் துண்டுகளை சேர்க்கவும்.
  • பிறகு 1 கப் தண்ணீர் விடவும். மாங்காய் துண்டுகள் வெந்ததும் வெல்லம் சேர்க்கவும்.
  • உப்பு போடவும். நன்றாக கொதித்ததும் இறக்கவும்.
  • அருமையான பச்சடி ரெடி.


Notes:
  • புது வருட பிறப்பு அன்று செய்வது வழக்கம். அறு சுவை பச்சடி அது. அறு சுவைகள்: இனிப்பு, கசப்பு, காரம், உப்பு, துவர்ப்பு மற்றும் புளிப்பு. இவை அனைத்தும் இந்த பச்சடியில் உண்டு. இதை செய்வது மிகவும் சுபலம்.
  • என் வீட்டில் அனைவரும் இந்த பச்சடியை விரும்பி சாப்பிடுவதால் நான் மாங்காய் சீசனில்
  • நிறைய செய்வது வழக்கம். அப்பொழுது வேப்பம் பூ சேர்க்காமல், வெறும் மாங்காய் பச்சடி செய்வேன். குக்கரில் மாங்காயை செதுக்கி போட்டு, வேக வைக்கணும்.
  • பிறகு மிக்ஸியில் போட்டு ஓரு சுற்று ஓட்டணும். பிறகு வழக்கம் போல் பச்சடி செய்ய வேண்டியது தான்.
  • அந்த சுவைக்கு "சொத்தையே எழுதி வைக்லாம் போங்கள்".

டாங்கர்

Ingredients:
  • சிவக்க வறுத்து அரைத்த உளுத்தம் பொடி 1/2 கப்
  • திக்கான மோர் - ஒரு கப்
  • மோர் மிளகாய் வறுத்தது அல்லது வறுக்காதது எதானாலும் பரவாஇல்லை 4- 6
  • உப்பு - தேவையான அளவு.


Method:
  • மோர் மிளகாய் யை கிள்ளி போட்டு, மேலே சொன்ன எல்லாவற்றையும் ஒரு பாத்திரத்தில் போட்டு கரைக்கவும்.
  • வேண்டுமானால் தண்ணீர் விடவும்.
  • அவ்வளவுதான் 'டாங்கர் பச்சடி' தயார்
  • எல்லா காரமான துவயல்களுக்கும் , கூட்டுக்கும் இது ரொம்ப நல்லா இருக்கும்.
  • நாங்க இதில் சாதம் போட்டுக் கூட சாப்பிட்டுவிடுவோம்.
  • ரொம்ப அருமையாக இருக்கும் .


Notes:
  • இது ரொம்ப சுலபமான ஆனால் ருசியான பச்சடி.

சோள அடை

Ingredients:
  • பச்சை சோளம் - ஒரு டம்ளர்
  • அரிசி - ஒரு டம்ளர்
  • கடலைப்பருப்பு - அரை டம்ளர்
  • துவரம்பருப்பு - கால் டம்ளர்
  • உளுத்தம்பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
  • பெருங்காயம் - சிறு துண்டு
  • மிளகாய் வற்றல் - 5
  • பெரிய வெங்காயம் - ஒன்று - தேவையானால்
  • கறிவேப்பிலை, உப்பு - சிறிது
  • நல்லெண்ணெய் - தேவைக்கேற்ப


Method:
  • வெங்காயம் மற்றும் கறிவேப்பிலையைப் பொடியாக நறுக்கி வைக்கவும்.
  • அரிசி, மற்றும் பருப்பு வகைகளை நன்கு களைந்து சுமார் 3 மணி நேரம் ஊற வைக்கவும்.
  • பிறகு, தண்ணீரை வடித்து மிக்ஸியில் சோளம்மிளகாய் வற்றல், பெருங்காயம், உப்பு சேர்த்து கொஞ்சம் கொரகொரப்பாக அரைக்கவும்.
  • அரைத்த மாவுடன் நறுக்கின வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து கலக்கவும்.
  • தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் கரைத்து வைத்திருக்கும் மாவை மெல்லிய அடைகளாக வார்க்கவும்.
  • இரண்டு புறமும் எண்ணெய் விட்டு , சற்று மொறுமொறுப்பாக எடுக்கவும்.
  • சுவையான சோள அடை ரெடி.
  • தோசைமிளகாய் பொடி அல்லது தேங்காய் சட்டினியுடன் பரிமாறவும்.


Notes:
  • இதில் அரிசிக்கு பதிலாக குதிரை வாலி, தினை சேர்க்கலாம்.
  • வெங்காயத்திற்கு பதில் துருவிய தேங்காய் சேர்க்கலாம்.
  • பச்சை சோளம் கிடைக்காத நாட்களில், காய்ந்த சோளத்தையும் பருப்புகளுடன் ஊறவைத்து அரைத்து உபயோகிக்கலாம்.

குதிரைவாலி தக்காளி தோசை மற்றும் மசால் தோசை

Ingredients:
  • 4 கப் குதிரைவாலி அரிசி
  • 1 கப் உளுந்து
  • 1 டீஸ்பூன் வெந்தயம்


Method:
  • எல்லாவற்றையும் நன்கு களைந்து, ஒன்றாக சேர்த்து மூன்று மணி நேரம் ஊறவைக்கவும்.
  • பிறகு, அரைத்து உப்பு சேர்த்துக் கலந்து நான்கு முதல் ஆறு மணி நேரம் புளிக்க விடவும்.
  • 4 தக்காளி, சிறிய துண்டு இஞ்சி, ஒரு டீஸ்பூன் சீரகம் சேர்த்து, விழுதாக அரைத்த மாவுடன் கலக்கவும்.
  • தேவையானால் வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிச் சேர்க்கவும்.
  • சூடான தோசைக் கல்லில் மெல்லிய தோசைகளாகச் சுட்டு, கொத்தமல்லிச் சட்னி அல்லது தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்.


Notes:
  • குழந்தைகள் விருப்பப்படும் காய்கறிகளை மிகவும் பொடியாக நறுக்கி, தோசை மாவில் கலந்தும் வார்த்து கொடுக்கலாம். அல்லது, மசாலா போல செய்து 'மசால் தோசை' யாகவும் செய்யலாம்.அருமையாக இருக்கும் .

கம்பு தேன்குழல்

Ingredients:
  • கம்புமாவு 2 கப்
  • பொட்டுக்கடலை மாவு 1/4 கப்
  • எள்ளு கொஞ்சம்
  • பெருங்காய பொடி
  • தேவையானால் மிளகாய் பொடி கொஞ்சம்
  • உப்பு
  • நெய் 1 ஸ்பூன்
  • பொறிக்க எண்ணெய்


Method:
  • இரண்டுமாவையும் பேசினில் போட்டு, உப்பு, நெய், பெருங்காய பொடி (மிளகாய் பொடி ) போட்டு நன்கு கலக்கவும்.
  • கொஞ்சமாக தண்ணீர் விட்டு , மாவை பிசையவும்.
  • தேன்குழல் அச்சில் போட்டு, சூடான எண்ணெய் இல் பிழியவும்.
  • இருபுறமும் திருப்பி போட்டு எடுக்கவும்.
  • நல்ல கரகரப்பான 'கம்பு தேன்குழல்' தயார்.
  • என்ன, கொஞ்சம் எண்ணெய் குடிக்கும் ஆனால் நல்ல சுவையாக இருக்கும்.

கேழ்வரகு உளுந்து தோசை( ராகி, உளுந்து)

Ingredients:
  • கேழ்வரகு மாவு 1 டம்ளர்
  • உளுந்து சுமார் 50 கிராம் அல்லது ஒரு குழிக்கரண்டி.
  • உப்பு


Method:
  • கேழ்வரகு மாவை கடை இல் வாங்கிக்கொள்ளுங்கள் அல்லது நீங்களே மிஷினில் நைசாக‌ அரைத்து வைத்துக் கொள்ளுங்கள்.
  • காலையில் உளுந்தம் பருப்பை அலசி , ஊறப்போடுங்கள்.
  • மத்தியானம் மிக்சியில் நன்கு அரைக்கவும்.
  • இதோடு ஒரு டம்ளர் கேழ்வரகு மாவைக் கட்டி தட்டாமல் கரைத்து உப்பு போட்டு வைக்கவும்.
  • ஆறு மணி நேரத்தில் நன்கு புளித்துவிடும்.
  • அவ்வளவுதான் ராத்திரிக்கு சுவையான‌ மொறுமொறுப்பான‌ ராகி தோசை ரெடி.
  • அருமையாக இருக்கும்.
  • என்ன ஒண்ணு , கலர் கொஞ்சம் கம்மியாக இருக்கும்.
  • எனவே ,தோசையைக் கருக விடாமல் கவனமாய் எடுக்கணும்.
  • அவ்வளவுதான், கலர் தான் குறைவே தவிர சுவை இல் குறைவு இல்லை!

சுக்கா ரொட்டி

Ingredients:
  • 1 கப் கோதுமை மாவு
  • 2 கரண்டி நல்லெண்ணெய்


Method:
  • ஒரு பேசினில் கோதுமை மாவு போடவும்.
  • உப்பு மற்றும் எண்ணெய் சேர்க்கவும்.
  • நன்றாக கலக்கவும்.
  • தண்ணீர் சேர்த்து நன்றாக பிசையவும்.
  • அரை மணி நேரம் அப்படியே வைத்துவிடவும்.
  • பிறகு சிறிது சிறிதாக உருட்டிக்கொள்ளவும்.
  • சப்பாத்தியாக இடவும்.
  • அடுப்பில் தோசைக்கல்லை போடவும்.
  • கல் சூடானதும், ஒரு சப்பாத்தியை எடுத்து அதில் போடவும்.
  • சப்பாத்தியை தவாவில் வைத்த பிறகு, 2-3 முறை திரும்பவும்.
  • இப்போது அதை நேரடியாக நெருப்பில் காட்டவும்.
  • அப்பளம் சுடுவது போல இரண்டுபக்கமும் சுட்டு எடுக்கவும்.
  • கருகாமல் இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும்.
  • அதை நெருப்பிலிருந்து அகற்றி சைட் டிஷ் உடன் உடனே பரிமாறவும்.
  • சப்பாத்தி சூடாக இருக்கும்போது இதை நீங்கள் சாப்பிட வேண்டும்.
  • இதில் எண்ணெய் இல்லை; என்றாலும் இது 'மெத் மெத்' என்று இருக்கும்.
  • எண்ணெய் இல்லதாதால் , வழக்கம் போல் ஆரோக்கியத்திற்கு நல்லது.

மிகவும் மிருதுவான சப்பாத்தி

Ingredients:
  • 1 கப் கோதுமை மாவு
  • 1 கரண்டி நல்லெண்ணெய்
  • 2 கரண்டி நெய்
  • உப்பு


Method:
  • ஒரு பேசினில் கோதுமை மாவு போடவும்.
  • உப்பு மற்றும் எண்ணெய் சேர்க்கவும்.
  • நன்றாக கலக்கவும்.
  • தண்ணீர் சேர்த்து நன்றாக பிசையவும்.
  • அரை மணி நேரம் அப்படியே வைத்துவிடவும்.
  • பிறகு சிறிது சிறிதாக உருட்டிக்கொள்ளவும்.
  • சப்பாத்தியாக இடவும்.
  • அடுப்பில் தோசைக்கல்லை போடவும்.
  • கல் சூடானதும், ஒரு சப்பாத்தியை எடுத்து அதில் போடவும்.
  • இருபுறமும் திருப்பிப்போடவும்.
  • அதை வெளியே எடுத்து ஒரு தட்டில் போட்டு, இரண்டுபக்கமும் நெய் தடவவும்.
  • அவ்வளவுதான், மிருதுவான சப்பாத்திகள் தயார்.
  • ஏதாவது ஒரு சைடிஷ் செய்து , அத்துடன் சப்பாத்தியை பரிமாறவும்.

சாதாரண சப்பாத்தி

Ingredients:
  • 1 கப் கோதுமை மாவு
  • 2 கரண்டி எண்ணெய் அல்லது நெய்
  • உப்பு


Method:
  • ஒரு பேசினில் கோதுமை மாவு போடவும்.
  • உப்பு மற்றும் எண்ணெய் சேர்க்கவும்.
  • நன்றாக கலக்கவும்.
  • தண்ணீர் சேர்த்து நன்றாக பிசையவும்.
  • அரை மணி நேரம் அப்படியே வைத்துவிடவும்.
  • பிறகு சிறிது சிறிதாக உருட்டிக்கொள்ளவும்.
  • சப்பாத்தியாக இடவும்.
  • அடுப்பில் தோசைக்கல்லை போடவும்.
  • கல் சூடானதும், ஒரு சப்பாத்தியை எடுத்து அதில் போடவும்.
  • இருபுறமும் எண்ணெய் அல்லது நெய்யை ஊற்றி சப்பாத்திகள் செய்யுங்கள்.
  • மிருதுவான சப்பாத்திகள் தயார்.
  • ஏதாவது ஒரு சைடிஷ் செய்து , அத்துடன் சப்பாத்தியை பரிமாறவும்.

வெள்ளரிக்காய் பச்சடி

Ingredients:
  • 4 வெள்ளரிக்காய்
  • உப்பு
  • 1 கப் துருவிய தேங்காய்
  • 2 பச்சை மிளகாய்
  • 1 கப் தயிர்
  • பொடியாக நறுக்கிய மல்லி இலை


Method:
  • நன்கு விளைந்த பெரிய வெள்ளரிக்காயை தோல் சீவி, துண்டுகளாக்கி, உப்பு சேர்த்து நன்கு பிசையவும். 10 நிமிடங்கள் அப்படியே வைக்கவும். ஒரு கப் துருவிய தேங்காய், இரண்டு பச்சை மிளகாய் சேர்த்து, மிக்சியில் அரைத்து, உப்பில் ஊறிய வெள்ளரிக்காயை நன்கு பிழிந்து தனியே எடுத்து, தேங்காய் கலவையுடன் சேர்த்து கலந்து கொள்ளவும். புளிக்காத கெட்டித் தயிர், ஒரு கப் எடுத்து, கடைந்து, இத்துடன் சேர்த்து, பொடியாக நறுக்கிய மல்லி இலைகளை சேர்த்துக் கலந்தால், வெள்ளரிக்காய் பச்சடி தயார்

பீட்ரூட் பச்சடி 2

Ingredients:
  • 2 பீட்ரூட்
  • 1 கப் துருவிய தேங்காய்
  • தயிர்
  • நறுக்கிய மல்லி இலை
  • உப்பு


Method:
  • இரண்டு பெரிய அளவு பீட்ரூட்டை தோல் சீவி துண்டுகளாக்கி, வேக வைத்து துருவிக் கொள்ளவும். வெள்ளரிக்காய் பச்சடியில் கலந்தது போலவே, தேங்காய் கலவை, தயிர், கொஞ்சம் உப்பு, நறுக்கிய மல்லி இலை சேர்த்தால், பீட்ரூட் பச்சடி தயார்.

அரிசி - சீஸ் உருண்டை

Ingredients:
  • வேகவைத்த அரிசி சாதம் - 1 கப்
  • நறுக்கிய வெங்காயம் - 1/2 கப்
  • துருவிய சீஸ் - 1/4 கப்
  • துருவிய கேரட் - 1 டேபிள் ஸபூன்
  • நறுக்கிய பச்சை மிளகாய் - 1 டேபிள் ஸ்பூன்
  • நறுக்கிய மல்லி தழை - 1 டேபிள் ஸ்பூன்
  • இடித்த மிளகாய் வற்றல் துாள் - 1 டீ ஸ்பூன்
  • மிளகாய் துாள் - 1/2 டீ ஸ்பூன்
  • உப்பு - ருசிக்கு
  • மைதா - 1/2 கப்
  • எண்ணெய் - தேவைக்கு


Method:
  • மைதா மாவு தவிர, தேவையான பொருட்கள் அனைத்தையும், நன்கு பிசைந்து கொள்ள வேண்டும். அதன்பின், மைதா மாவை சேர்த்து பிசைய வேண்டும். சமைத்த சாதத்தில், நீர்ச் சத்து இருக்கும் என்பதால், தனியாக, தண்ணீர் சேர்க்க வேண்டாம். அனைத்தும் நன்கு கலந்த பின், சிறு உருண்டைகளாக உருட்டி, தனியே வைக்கவும்.
  • வாணலியில், தேவையான அளவு எண்ணெய் விட்டு, சூடானதும், உருட்டி வைத்த உருண்டைகளைப் போட்டு, சிவக்க பொரித்து எடுக்கவும். தக்காளி சாஸ் தொட்டு, சூடாக சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

உருளைக் கிழங்கு பக்கோடா

Ingredients:
  • வேகவைத்த உருளைக் கிழங்கு - 3
  • கடலை மாவு - 1 கப்
  • அரிசி மாவு - 1/2 கப்
  • பேக்கிங் சோடா - 1 சிட்டிகை
  • மிளகாய் துாள் - 1 டீ ஸ்பூன்
  • நறுக்கிய பச்சை மிளகாய் - 1 டீ ஸ்பூன்
  • நறுக்கிய வெங்காயம் - 1 கப்
  • சீரகம் - 1/2 டீ ஸ்பூன்
  • எண்ணெய் - தேவைக்கு
  • நறுக்கிய மல்லி தழை - சிறிது


Method:
  • அகலமான பாதிரத்தில், வேக வைத்து, தோல் உரித்த, உருளைக் கிழங்கை, பிசைந்து கொள்ளவும். இதில் கடலை மாவு, அரிசி மாவு, சோடா உப்பு, உப்பு, மிளகாய் துாள், சீரகம், பச்சை மிளகாய், மல்லித் தழை, வெங்காயம் சேர்த்து, கலந்து கொள்ளவும். சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து, கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும்.
  • வாணலியில், எண்ணெய் ஊற்றி, சூடானதும், மிதமான தீயில், சிவக்க பொரித்து, எடுக்கவும். சூவையான உருளைக் கிழங்கு பங்கோட ரெடி.

மோதிசூர் லட்டு

Ingredients:
  • கடலை மாவு - 1 கப்
  • நெய் - 1 டேபிள் ஸ்பூன்
  • சர்க்கரை - 1 கப்
  • ஏலக்காய் - 1/2 டீ ஸ்பூன்
  • பாதாம் - 10
  • முந்திரி - 1 டேபிள் ஸ்பூன்
  • உலர் திராட்சை - 1 டேபிள் ஸ்பூன்


Method:
  • ஒரு கப் கடலை மாவிற்கு, ஒரு கப் தண்ணிர் சேர்த்து, கட்டி சேராமல் பிசைந்து கொள்ளவும். தோசை மாவு பதத்தில் இருக்க வேண்டும். வாணலியை சூடாக்கி, தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, புகை வரும் அளவிற்கு சூடானதும், மெல்லிய துளைகள் உள்ள சல்லடைக் கரண்டியை எண்ணெய் மேல் பிடித்து, கடலை மாவை ஊற்றவும். மாவு எண்ணெயில் விழுந்த இரண்டு நிமிடங்களில், எடுத்து விட வேண்டும். அதிக நேரம் வைக்க வேண்டாம். இப்படியே, மொத்த மாவையும், பூந்தியாக பொரித்து எடுக்கவும்.
  • பாத்திரத்தில், ஒரு கப் சர்க்கரைக்கு, ஒரு கப் தண்ணீர் சேர்த்து, சர்க்கரை கரையும் வரை, காய்ச்சவும். அடுப்பை மிதமான சூட்டில் வைத்து, இதில், பூந்தியைப் போட்டு, சர்க்கரை பாகும், பூந்தியும் கெட்டியாகும் வரை பக்குவமாக கிளறவும். இதில், நெய், ஏலக்காய் பொடி போட்டு, அடுப்பை அணைத்து, ஆற விடவும்.
  • ஆறியதும், நெய்யில் வறுத்த முந்திரி, உலர் திராட்சை, நீரில் ஊற வைத்து உரித்த பாதாம் சேர்த்து, உருண்டைகளாகப் பிடிக்கவும்.

கீரை சூப்

Ingredients:
  • கீரை - 1 கட்டு
  • வெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
  • நறுக்கிய பூண்டு - 1 டேபிள் ஸ்பூன்
  • மைதா - 1 டேபிள் ஸ்பூன்
  • பால் - 1 ½ கப்
  • உப்பு - ருசிக்கு
  • மிளகு - தேவைக்கு
  • பிரஷ் கிரீம் - 1 டேபிள் ஸ்பூன்


Method:
  • கீரையை சுத்தம் செய்து, நறுக்கி, கொதிக்கும் நீரில் ஒரு நிமிடம் போட்டு, நீரை வடிகட்டி, அதில் குளிர்ந்த நீரை ஊற்றி, நன்கு அலசி, நீரை வடித்து விடவும்.
  • மிக்சியில் கீரையை போட்டு, சிறிது நீர் சேர்த்து, நன்கு அரைத்துக் கொள்ளவும்.
  • வாணலியில், வெண்ணெய் போட்டு, உருகியதும், பூண்டு சேர்த்து லேசாக வதங்கியதும், மைதாவை சேர்க்கவும். நன்கு வதக்கி, இதில், அரைத்து வைத்துள்ள கீரை கலவையை சேர்க்கவும். லேசாக கொதி வந்ததும், உப்பு, மிளகு துாள் சேர்த்து, நன்கு கலக்கவும். சில நிமிடங்களில், பால் சேர்த்து வேக விடவும். கீரையின் பச்சை வாசனை போகும் வரை நன்கு வேக விடவும்.
  • ஓரளவு கலவை கெட்டியானதும், கிண்ணத்தில் ஊற்றி, மேலே பிரஷ் கிரீம் போட்டு பரிமாறவும்.

புரோகோலி சூப்

Ingredients:
  • புரோகோலி - 1
  • உருளை கிழங்கு - 1
  • வெங்காயம் - 1
  • பூண்டு - 4 பல்
  • பால் - 1 கப்
  • வெங்காய தழை - சிறிது
  • மிளகு துாள் - 1 டீ ஸ்பூன்
  • உப்பு - ருசிக்கு


Method:
  • புரோகோலியை துண்டுகளாக்கிக் கொள்ளவும். உருளைக் கிழங்கை தோல் சீவி, நறுக்கவும். இத்துடன், நறுக்கிய வெங்காயம், பால், மிளகு துாள், உப்பு சேர்த்து, நறுக்கிய வெங்காய தாளை சேர்த்து, மூழ்கும் அளவுக்கு நீர் ஊற்றி, குக்கரில், நான்கு விசில் வேக விடவும். அழுத்தம் வெளியேறியதும், கலவையை நன்கு ஆற விடவும். இதை, மிக்சியில் ஊற்றி, கூழாக அரைத்துக் கொள்ளவும்.
  • இந்த கலவையை அடி கனமான பாத்திரத்தில் ஊற்றி, சில நிமிடங்கள் காய்ச்சவும். இதில், அரை டம்ளர் பால், ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து ஒரு கொதி வந்ததும், உப்பு, மிளகு துாவி பரிமாறவும்.

கேரட் சூப்

Ingredients:
  • கேரட் - 4
  • உருளைக் கிழங்கு - 4 சிறிய துண்டுகள்
  • எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
  • பூண்டு - 2 பல்
  • இஞ்சி - 1 துண்டு
  • நறுக்கிய வெங்காயம் - 1 கை பிடி
  • தண்ணீர் - 2 கப்
  • உப்பு - ருசிக்கு
  • பொடித்த மிளகு - ½ டீ ஸ்பூன்
  • புதினா இலை - சிறிது
  • பிரஷ் கிரீம் - 1 டேபிள் ஸ்பூன்


Method:
  • குக்கரில் எண்ணெய் ஊற்றி, நறுக்கிய பூண்டு, இஞ்சி போட்டு வதக்கி, வெங்காயம் சேர்த்து வதக்கவும். உருளைக் கிழங்கு, கேரட் துண்டுகளை சேர்த்து வதக்கி, மிளகு, உப்பு சேர்த்து, புதினா இலைகளையும் போட்டு, தண்ணீர் ஊற்றி, நான்கு விசில் வைக்கவும். அழுத்தம் வெளியேறியதும், குக்கரை திறந்து, புதினா இலைகளை தனியே எடுத்து விடவும்.
  • கலவை நன்கு ஆறியதும், மிக்சியில் அரைக்கவும். வாணலியில் கலவையை ஊற்றி, மிதமான சூட்டில், சூப் கெட்டியாகும் வரை கலக்கவும். சூப் கிண்ணத்தில் மாற்றி, மேலே பிரஷ் கிரீம் போடடு, விரும்பினால், உப்பு, மிளகு சேர்த்து குடிக்கவும்.

கோதுமை ரவை கேசரி

Ingredients:
  • கோதுமை ரவை - 1/2 கப் ( சன்னமானது )
  • சர்க்கரை - 3/4 கப்
  • நெய் - 4 டேபிள் ஸ்பூன்
  • ஏலக்காய் பொடி - 1/2 டீ ஸ்பூன்
  • முந்திரி - 1டேபிள் ஸ்பூன்
  • 'கிஸ் மிஸ்' - 1 டேபிள் ஸ்பூன்
  • பால் 1 /2 கப்


Method:
  • வாணலியில், ஒரு டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி, கிஸ்மிஸ் மற்றும் முந்திரியை வறுத்துக் கொள்ளவும்.
  • தனியே எடுத்து வைக்கவும்.
  • மீதி இருக்கும் நெய்யில், கோதுமை ரவை சேர்த்து, மிதமான சூட்டில், நன்கு வாசனை வரும் வரை வறுக்கவும்.
  • கருகாமல் வறுக்க வேண்டும்.
  • அதில் ஒரு கப் தண்ணீர் மற்றும் அரை கப் பால் விட்டு, நன்கு கிளறி, மூடி வைத்து வேக விடவும்.
  • நடு நடுவில் கிளறி விடவும்.
  • வெந்ததும், சர்க்கரை சேர்த்து, கரையும் வரை கிளறவும்.
  • அதன்பின், மூடி வைத்து, இன்னொரு ஐந்து நிமிடங்கள் வேக வைக்கவும்.
  • அதில் ஏலக்காய் பொடி சேர்த்து, நெய்யில் வறுத்த முந்திரி, உலர் திராட்சையை போட்டு, மீதி உள்ள நெய்யை ஊற்றி , நன்கு கலக்கவும்.
  • அவ்வளவுதான், கோதுமை ரவை அல்வா தயார்.


Notes:
  • இதையே வெல்லம் போட்டும் செய்யலாம்.

கச்சோடி (Rajasthani)

Ingredients:
  • 2 tbsp - தனியா
  • 1 tbsp - சோம்பு
  • 1/2 tbsp - சீரகம் ...இந்த மூன்றையும் ஒன்றிரண்டாக பொடித்து வைத்துக் கொள்ளவும்.
  • ¼ tsp – பெருங்காய பொடி
  • 1/2 tbsp - காய்ந்த வெந்தயக் கீரை அல்லது பிரெஷ் கீரை - பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  • 2 tbsp - மிளகாய் பொடி
  • 1 tsp - கருப்பு உப்பு ( இது கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை...சாதாரண உப்பு போடலாம் )
  • 1/2 tsp - கரம் மசாலா
  • 1 tbsp - ஆம்சுர் எனப்படும் மாங்காய் பொடி அல்லது / 1/8 tsp - சிட்ரிக் ஆசிட் / 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு
  • 1/2 tsp - மிளகுப் பொடி
  • 1/3 cup - கடலை மாவு
  • 1/2 cup - பயத்தம் பருப்பு - ஒரு முக்கால் முதல் ஒருமணி நேரம் வரை ஊறவைத்து, ஜஸ்ட் ஒரே ஒரு சுற்று மிக்சி இல் சுற்றி எடுக்கவும். பருப்பு மிகவும் பொடியாகக்கூடாது, மாவாகவும் ஆகக் கூடாது...ஒன்றிரண்டாக உடைந்தால் போதுமானது
  • 1 tbsp பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி நசுக்கி வைத்துக் கொள்ளவும்
  • 2 tbsp – எண்ணெய்
  • மேல் மாவுக்காக :
  • 2 1 / 2 cup - மைதா
  • 1 tsp - உப்பு
  • 1 /2 – உருகிய நெய்
  • கொஞ்சம் தண்ணீர்


Method:
  • முதலில் பருப்பை அலசி ஊற வைக்கவும்.
  • இது ஒரு ஒரு முக்கால் முதல் ஒருமணி நேரம் வரை ஊறவைக்க வேண்டும்.
  • பருப்பை ஊறவைக்கும்போதே மேல்மாவை தயாரித்து வைத்துவிடலாம்....
  • இதுவும் 30 நிமிடங்கள் ஊறவேண்டும்.
  • ஒரு பேசினில் மைதாவை போட்டு, அதில் உப்பு போட்டு, நெய்யை விட்டு நன்கு கலக்கவும்.
  • பொறுமையாக கலக்கவும்.
  • நன்கு கலந்ததும் மாவை கையால் பிடித்தால், அதாவது ஒரு பிடி மாவை எடுத்து கையால் அழுத்திப் பிடித்தால் அது பிடிக்க வரவேண்டும்.
  • பிடி கொழுக்கட்டை போல பிடிக்க வரவேணும், மீண்டும் உதிர்த்தால் உதிரவேண்டும்...இது தான் மாவு பதம்.
  • சரியாக ஒன்றுக்கு ஐந்து என்கிற விகிதத்தில் நெய்யும் மாவும் இருந்தால் இப்படி வரும்.
  • ( சமோசாவுக்கும் இதே பதம் தான்
  • இப்போ கொஞ்சம் கொஞ்சமாக லேசாக சூடான தண்ணீர் விட்டு மாவை பிசைய ஆரம்பிக்க வேண்டும்.
  • நன்கு அழுத்திப் பிசையவேண்டும்.
  • மாவு நல்லா 'மெத் மெத்' என்று பஞ்சு போல ஆகும்வரைக்கும் பிசையவேண்டும்.
  • சுமார் ஐந்து முதல் ஏழு நிமிடங்கள் அப்படி பிசையவேண்டும்.
  • முடிக்கும்போது மாவு கைகளில் ஓட்ட கூடாது.
  • இந்த மாவை அப்படியே மூடி வைத்து விடுங்கள்.
  • அது ஊறட்டும் அதற்குள் நாம் உள்ளே வைக்க வேண்டியதை தயார் செய்வோம்.
  • ஒரு வாணலி இல் எண்ணெய்விட்டு, ஒன்றிரண்டாக பொடித்து வைத்துள்ள தனியா முதலியவைகளை போடவும்.
  • கொஞ்சம் வறுபட்டதும், நசுக்கி வைத்துள்ள பச்சை மிளகாய் மற்றும் இஞ்சியை போட்டு வதக்கவும்.
  • அடுப்பை நிதானமாக எரியவிடவும்... அப்போதுதான் எல்லாம் கருகாமல் வறுபடும்.
  • அடுத்ததாக, மிளகுப் பொடி, மிளகாய் பொடி, ஆம்சூர், கரம்மசாலா, வெந்தயக் கீரை மற்றும் உப்பு போட்டு வதக்கவும்.
  • ஒரு இரண்டு நிமிடங்கள் நன்கு வதக்குங்கள்.
  • அப்புறம் கடலைமாவை தூவி, அதன் பச்சை வாசனை போகும் வரை வதக்குங்கள்.
  • எல்லாமாக சேர்ந்து கொண்டு நல்ல மணம் வரும்.
  • இப்போது ஒன்றாண்டாக அரைத்து வைத்துள்ள பருப்பை போட்டு நன்கு கிளறவும்.
  • இதை ஒரு நான்கு அல்லது ஐந்து நிமிடங்கள் அடுப்பில் வைத்து கிளறவேண்டும்.
  • பிறகு அதை ஒரு தாம்பாளத்தில் கொட்டி ஆறவைக்கவும்.
  • நன்கு ஆறினதும், அந்த மசாலாவை நன்கு பிசைந்து, சின்ன சின்ன உருண்டைகளாக அழுத்தி பிடித்தது வைத்துக்கொள்ளவும்.
  • மேலே சொன்ன அளவிற்கு கிட்ட தட்ட 15 உருண்டைகள் வரும்.
  • இப்போது மேல்மாவை எடுத்து நன்கு ஒருமுறை அழுத்தி பிசையவும்.
  • அதிலிருந்து கொஞ்சம் மாவை எடுத்து உருட்டி, இந்த மசாலா உருண்டையை வைத்து கொழுக்கட்டை மாவிற்குள் பூரணத்தை எப்படி உள்ளே வைப்போமோ அது போல வைத்து உருண்டையாக ஆக்கவும்.
  • இது போல் எல்லா வற்றையும் செய்யவும்.
  • பிறகு ஒரு உருண்டையை எடுத்து உள்ளங்கையால் அழுத்தி, தட்டை போல செய்யவும்.
  • இது போல ஒரு 4 செய்து கொள்ளவும்.
  • அடுப்பில் எண்ணெய் வைத்து அது சுடும் முன்னரே இந்த கச்சோடிகளை போடவும்.
  • அடுப்பை மிகவும் நிதானமாக எரியவிடவும்.
  • ஒரே சமயத்தில் ஒரு நான்கு கச்சோடிகள் பொறிக்கலாம்.
  • இது ஒரு பக்கத்தில் வேகவே 4 - 5 நிமிடங்கள் எடுக்கும்.
  • பிறகே அதை திருப்பி போடவேண்டும்.
  • அதுவும் 4 நிமிடங்கள் எடுக்கும்.
  • இப்போது பொன்னான நிறத்தில் கச்சோடிகள் தயார்.
  • கச்சோடிகள் பொறியும் வரை மற்ற உருண்டைகளை மூடி வைக்கவும்.
  • பொறித்தானதும் அடுப்பை அணைத்து விடவும், எண்ணெய் நன்கு ஆறினதும் மீண்டும் அடுப்பை மூட்டி, எண்ணெய் சுட ஆரம்பிப்பதற்குள் அடுத்த நான்கு கச்சோடிகளை போட்டு பொறிக்கவும்.
  • இது மிக முக்கியம், இப்படி செய்தால் தான் கச்சோடிகள் நன்கு பொறியும்.
  • இதை இரண்டு வாரங்கள் வரை வைத்திருந்து சாப்பிடலாம்.
  • இதற்கு , பச்சைமிளகாய் புதினா சட்னி, மற்றும் பேரீச்சம்பழம் இனிப்பு சட்னி அருமையாக இருக்கும்.
  • அது இல்லாவிட்டாலும் , வெறும் தயிரில் உப்பு மற்றும் சீரகப் பொடி போட்டு வைத்துக் கொண்டாலும் போதும், அருமையாக இருக்கும்.


Notes:
  • இதைப் அடிக்கத்தான் நேரம் அதிகம் ஆனது, செய்வதற்கு அதைவிட குறைவான நேரமே போதும்..செய்து பார்த்துவிட்டு சொல்லுங்கள்

Images:






Paneer Bakoda 3

Ingredients:
  • Paneer 200 gms (cut into small pieces )
  • Besan 100 gms
  • Rice flour 100 gms
  • Redcolour
  • Coriander powder 1 table spoon
  • Garam masala ( optional) 1 spoon
  • Red chilly powder 1 tea spoon
  • Black pepper powder ( opetional) ½ spoon
  • Salt
  • Asafoetida a pinch
  • Ajwan 1 tea spoon
  • Oil to fry


Method:
  • Put paneer pieces in a bowl and add Coriander powder,Garam masala,Red chilly powder,Black pepper powder and Salt.
  • Mix them softly without breaking paneer pieces.
  • Keep aside.
  • In another vessel put besan, rice flour, salt, ajwan, Asafoetida and a pinch of red colour.
  • Mix well by adding water.
  • Let it be somewhat thick batter.
  • Now put this batter with paneer pieces and mix well but gently.
  • Let the thick dough coat paneer pieces evenly.
  • Heat a kadai with oil and put the dough coated paneer pieces into it.
  • Allow them till they become golden brown.
  • Flip them gently and fry them till the oil reduces its sound.
  • Remove it from the oil and serve hot with tomato sauce.

மீந்த சப்பாத்தி இல் செய்த நூடுல்ஸ்

Ingredients:
  • மீந்த சப்பாத்தி - 5
  • பெரிய வெங்காயம் - 2
  • பச்சை மிளகாய் - 2
  • காரட் 2
  • எண்ணெய் - 3 + 3 தேக்கரண்டி
  • பீன்ஸ் ஒரு கைப்பிடி அளவு
  • கொத்தமல்லி, கறிவேப்பிலை - கொஞ்சம்
  • உப்பு - தேவையான அளவு.
  • கரம் மசாலா - 1 /2 டீ ஸ்பூன்


Method:
  • வெங்காயம், பச்சைமிளகாய், காரட் , பீன்ஸ் , குடமிளகாயை நீள வாக்கில் நறுக்கவும்.
  • சப்பாத்தியை, ரோல் செய்து, நீள வாக்கில் மெல்லிய நுாடுல்ஸ் போல நறுக்கிக் கொள்ளவும்.
  • வாணலி இல் எண்ணெய் விட்டு , நறுக்கி வைத்துள்ள , நூடுல்ஸ் போல நறுக்கின சப்பாத்திகளை பொறித்து எடுத்து தனியே வைத்துக்கொள்ளவும்.
  • மீண்டும் அதே வாணலியில், நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், குடமிளகாயுடன் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
  • தேவையானால் இன்னும் எண்ணெய் விட்டுக்கொள்ளவும்.
  • உப்பு மிளகாய்ப்பொடி போடவும்.
  • இந்த கலவையில், நறுக்கி, வறுத்த சப்பாத்தியை போடவும்.
  • தீயை மிதமாக்கி மேலாக கிளறவும்.
  • கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.
  • சுவைமிக்க, 'சப்பாத்தி நுாடுல்ஸ்' தயார்.

பேல்' பழைய பிரட் லிருந்து

Ingredients:
  • 4-5 ஸ்லைஸ் பழைய , மீந்த பிரட்
  • 1/2 கப் பொடியாக நறுக்கிய வெங்காயம்
  • 1/2 கப் பொடியாக நறுக்கிய தக்காளி
  • 1/2கப் பொடியாக நறுக்கிய வேகவைத்த உருளைக்கிழங்கு
  • 1 /4 கப் பொடியாக நறுக்கிய கொத்துமல்லி
  • 1/2 கப் ஓமப்பொடி
  • புளி சட்னி கொஞ்சம்
  • புதினா + கொத்துமல்லி சட்னி கொஞ்சம்
  • 2 ஸ்பூன் நெய்
  • உப்பு


Method:
  • ப்ரெட் ஐ துண்டங்களாக நறுக்கவும்.
  • வறட்டு வாணலி இல் கருகாமல் நல்லா 'கர கர' பாக வறுக்கவும் .
  • இப்போ , நெய் விட்டு வறுக்கவும்.
  • எல்லாம் 'ஒத்தார்' போல வறுபட்டதும் , ஒரு தட்டில் கொட்டி வைக்கவும்.
  • இப்போது எவ்வளவு பேர் சாப்பிடணுமோ அவ்வளவு கப் கள் எடுத்துக்கொள்ளவும்.
  • அதில் மேலே சொன்ன ellavattraiyum கொஞ்சம் கொஞ்சம் போடவும்.
  • சட்னிகளை விடவும்.............உப்பு கொத்துமல்லி துவி உடனே சாப்பிடக் கொடுக்கவும் .
  • ரொம்ப சுவையான ' பேல்' பழைய பிரட் லிருந்து ரெடி.


Notes:
  • சட்னி வேண்டாதவர்கள்....டொமாடோ சாஸ், சோயா சாஸ் போட்டு சாப்பிடலாம்.

கார அப்பம்

Ingredients:
  • மீந்த இட்லி மாவு – ஒரு கப்
  • நறுக்கிய வெங்காயம், கேரட் துருவல் – தலா 2 டேபிள்ஸ்பூன்
  • கொத்தமல்லி - கொஞ்சம்
  • பொடியாக நறுக்கிய இஞ்சி – பச்சை மிளகாய் – ஒரு டேபிள் ஸ்பூன்
  • எண்ணெய் – பொரிக்க
  • உப்பு – தேவையான அளவு.


Method:
  • இட்லி மாவில் வெங்காயம் , கேரட் துருவல்,நறுக்கிய கொத்தமல்லி, இஞ்சி – பச்சை மிளாய், உப்பு என எல்லாமும் சேர்த்துக் கலக்கவும்.
  • அப்பக்காரலில் எண்ணெய் கொஞ்சம் விட்டு, மாவு கலவையில் ஒரு ஸ்பூன் அளவு எடுத்து விடவும்.
  • வெந்ததும் திருப்பி விடவும்.
  • நன்கு வெந்ததும் எடுக்கவும்.
  • கலர்புல் ஆன 'கார அப்பம்' தயார்.
  • இதை 'உப்பு அப்பம்' என்றும் சொல்வோம்.
  • எங்க பாட்டி ரொம்ப நல்லா பண்ணுவா.
  • எந்த சட்னி வேணாலும் தொட்டுண்டு சாப்பிடலாம்.

தால் சப்பாத்தி

Ingredients:
  • மீந்த டால் 2 கிண்ணம்
  • வெங்காயம் நறுக்கியது 1 (optional)
  • உப்பு காரம் தேவையான அளவு
  • கொத்துமல்லி சிறிது
  • கோதுமை மாவு


Method:
  • எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து பிசைந்து சப்பாத்தி பண்ணவும் .
  • குறிப்பு: மீந்த கீரையையும் இப்படி செய்யாலாம்...கீரைக்கு கூட்டையும் இப்படி செய்யலாம்.

சாதம் மசாலா சப்பாத்தி

Ingredients:
  • சாதம் 1 கப்
  • கோதுமை மாவு 2 கப்
  • கொத்துமல்லி தழை 2 கைப்பிடி அளவு (பொடியாக நறுக்கவும் )
  • பச்சை மிளகாய் 4 - 6 (பொடியாக நறுக்கவும் )
  • இஞ்சி ஒரு துண்டு (பொடியாக நறுக்கவும் )
  • பூண்டு 10 பல் (பொடியாக நறுக்கவும் )
  • கரம் மசாலா 1/2 ஸ்பூன்
  • மஞ்சள் பொடி 1/4 ஸ்பூன்
  • ஆம்சூர் 1/2 ஸ்பூன்
  • சீரகம் 1/2 spoon
  • உப்பு
  • எண்ணை மற்றும் நெய் கலந்தது சப்பாத்தி செய்ய


Method:
  • கோதுமை மாவைத்தவிர மற்ற எல்லாவற்றையும் மிக்சி இல் போட்டு நன்கு அரைக்கவும்.
  • ஒரு பேசினில் போடவும்.
  • பிறகு கோதுமை மாவை போட்டு உப்பு போட்டு தேவையானால் தண்ணீர் விட்டு நன்கு பிசையவும்.
  • பிறகு எப்பவும் போல சப்பாத்திகள் செய்யவும்.
  • சுவையான சாதம் மசாலா சப்பாத்தி தயார்.

சாதம் பாயசம்

Ingredients:
  • மீந்த சாதம் 1 கப்
  • சர்க்கரை 1 1/2 கப்
  • முந்திரி 10 -12 தேவையானால்
  • பால் 1 கப்
  • ஏலப்பொடி அல்லது பச்சை கற்பூரம்
  • திராக்ஷை 10 - 12
  • கொஞ்சம் நெய்


Method:
  • சாதம், சர்க்கரை, பால் மற்றும் முந்திரியை மிசில போட்டு அடிக்கவும்.
  • வாணலி இல் நெய் விட்டு திராக்ஷை போட்டு பொறிக்கவும்.
  • அரைத்ததை அதில் கொட்டவும்.
  • ஒரு கொதி வந்ததும் ஏலப்பொடி போட்டு இறக்கவும்.
  • சுவையான பாயசம் ரெடி.
  • ரொம்ப டேஸ்டி யாக இருக்கும் இது .


Notes:
  • இதைப்போலவே புதிய சாதத்திலும் செய்யலாம், தேவையானால் குங்குமப்பூ போடலாம்.

சாதம் பக்கோடா

Ingredients:
  • மீந்த சாதம் 1 கப்
  • கடலை மாவு 1/2 கப்
  • பச்சை மிளகாய் 4 - 5
  • தேவையானால் மிளகாய் பொடி போட்டுக்கொள்ளவும்.
  • வெங்காயம் பொடியாக அல்லது நீள நீளமாக நறுக்கியது 1/2 கப்
  • உப்பு
  • பொறிக்க எண்ணை


Method:
  • சாதத்தை நன்கு மசிக்கவும் அல்லது துளி தண்ணீர் விட்டு மிக்சி இல் ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.
  • பிறகு மற்ற எல்லா பொருட்களையும் இத்துடன் போட்டு கலக்கவும்.
  • அவ்வளவுதான் வாணலி இல் எண்ணை வைத்து பக்கோடா போடவும்.
  • சாதம் பக்கோடா ரெடி .
  • நல்ல கரகரப்பாக வரும்.
  • மீந்த சாதத்தில் ஒரு வேளை சாயங்கால டிபன் செய்துவிடலாம்.


Notes:
  • முதலில் சாதம். இது தான் எப்பவும மீந்து விடும். முன்பெல்லாம் எல்லோரும் காலை இல் பழயது சாப்பிடுவார்கள் ....இப்போ ?????????? எனவே அதை என்ன செய்வது என்பது கேள்வி. அதற்கு பதில் தான் இவை. மீந்த சாதத்தில் நிறைய items புதுசு புதுசாக பண்ணலாம் ஒவ்வொன்றாக பார்க்கலாம்.

Cheese Pillows

Ingredients:
  • 2 tablespoons of maida
  • 1 1/2 cups wheat flour
  • grated cheese half cup
  • butter one tablespoon
  • salt a pinch
  • Oil to make chappati


Method:
  • Mix the wheat flour and maida with salt and mix like chappati dough.
  • Leave it for thirty minutes.
  • Then roll it like very thin chappati.
  • If you lift it with your fingers, you must be able to see your fingers through the chappati. that much thin you have to roll it.( see the below picture )
  • Then apply butter on top of it.
  • Then fold it, as shown in the picture below.
  • Put the cheese on top.
  • Fold it as shown in the picture.
  • Transfer it gently on the tava, gently turn it over and pour some oil.
  • Remove it from the tava and put it on a plate.
  • Serve hot.

Images:
















கேழ்வரகு முருங்கை இலை தோசை

Ingredients:
  • கேழ்வரகு மாவு 1 கப்
  • மைதா 1 டேபிள் ஸ்பூன்
  • அரிசி மாவு 2 - 3 டேபிள் ஸ்பூன்
  • கோதுமை மாவு 2 - 3 டேபிள் ஸ்பூன்
  • பச்சை மிளகாய் - பொடியாக நறுக்கியது 2 - 3 டீ ஸ்பூன்
  • முருங்கை இலை புதியது அல்லது காயவைத்தது 2 - 3 கைப்பிடி
  • உப்பு
  • தோசை வார்க்க எண்ணெய்


Method:
  • ஒரு பேசினில் கேழ்வரகு மாவை போட்டுக்கொள்ளுங்கள்.
  • அதில் முருங்கை இலை, மைதா, அரிசி மாவு, கோதுமை மாவு, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் உப்பு சேர்த்து நன்கு பிசையுங்கள்.
  • கொஞ்சம் சூடான தண்ணீர் விட்டு கரண்டியால் நன்கு கலக்குங்கள்.
  • தோசை மாவு பதம் வரும்வரை தண்ணீர் சேர்க்கலாம்.
  • கட்டிகள் இல்லாமல் நன்கு கலந்ததும், தோசைக்கல்லை அடுப்பில் போடுங்கள்.
  • கலந்த மாவை எடுத்து தோசைகளாக வார்த்து எடுங்கள்.
  • அருமையான 'கேழ்வரகு முருங்கை தோசை ' தயார்.
  • வெறும் தயிர் போதும் இதற்கு தொட்டுக்கொள்ள.
  • மாவு கரைத்ததுமே வார்க்கலாம், மெத் என்று இருக்கும்.

Images:


கேழ்வரகு முருங்கை இலை அடை

Ingredients:
  • கேழ்வரகு மாவு 1 கப்
  • உருவிய முருங்கை இலை அல்லது காய்ந்த முருங்கை இலை ஒரு கைப்பிடி
  • உப்பு
  • பச்சை மிளகாய் 2


Method:
  • ஒரு பேசினில் கேழ்வரகு மாவை போட்டுக்கொள்ளுங்கள்.
  • அதில் முருங்கை இலை, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் உப்பு சேர்த்து நன்கு பிசையுங்கள்.
  • கொஞ்சம் வெது வெதுப்பான தண்ணீர் விட்டு கெட்டியாக பிசையுங்கள்.
  • அதை சிறிய உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளுங்கள்.
  • ஒரு வாழை இலை அல்லது பிளாஸ்டிக் கவரில் துளி எண்ணெய் தடவிக்கொண்டு இந்த உருண்டை ஒன்றை எடுத்து அடை போல தட்டுங்கள்.
  • தோசைக்கல்லை அடுப்பில் போட்டு, அது சூடானதும் அதில் இந்த அடையை போட்டு,
  • துளி எண்ணெய் விட்டு, இரண்டு புறமும் வெந்ததும் எடுத்துவிடுங்கள்.
  • மொத்த மாவையும் இதே போல் செய்யுங்கள்.
  • அருமையான 'கேழ்வரகு முருங்கை இலை அடை ' தயார்.
  • எதுவும் தொட்டுக்கொள்ளத்தேவை இருக்காது.
  • அப்படியே நன்றாக இருக்கும்.

தீபாவளி லேகியம்

Ingredients:
  • சுக்கு 15 கிராம்
  • மிளகு 15 கிராம்
  • ஓமம் 15 கிராம்
  • கண்டந்திப்பிலி 10 கிராம்
  • கிராம்பு 10 கிராம்
  • ஏலம் 10 கிராம்
  • மஞ்சள் பொடி அரை ஸ்பூன்
  • வெல்லம் - மேல் சொன்ன பொருட்களை எல்லாம் 4 முதல் 6 மணிநேரம் ஊறவைத்து மசிய அரைத்து, அந்த விழுது எவ்வளவோ அந்த அளவு வெல்லம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • நெய் 3 - 4 டேபிள் ஸ்பூன் அல்லது நெய் 3 டேபிள் ஸ்பூன் + நல்லெண்ணெய் 1 டேபிள் ஸ்பூன்.


Method:
  • மேல் சொன்ன பொருட்களை எல்லாம் 4 முதல் 6 மணிநேரம் ஊறவைத்து மசிய அரைக்கவும்.
  • அதே அளவு வெல்லத்தூள் எடுத்துக்கொள்ளவேண்டும்.
  • உருளி இல் கொஞ்சம் நெய் விட்டு, அரைத்த விழுதை போட்டு கிளற ஆரம்பிக்கவும்.
  • அடுப்பு சின்னதாகவே எரியட்டும்.
  • அவ்வப்போது கிளறி விடவும்.
  • அடி பிடிப்பது போல் இருந்தால் இன்னும் கொஞ்சம் நெய் விடவும்.
  • நன்கு சுருள வதங்கியதும், நெய் தானே பிரிய ஆரம்பிக்கும்.
  • கை இல் கொஞ்சம் லேகியம் எடுத்ததால், கொஞ்சமும் ஒட்டாமல் உருட்ட வரும் அது தான் சரியான பதம் .
  • அப்போது உருளியை இறக்கிவிடவும்.
  • நன்கு ஆறினதும், கண்ணாடி பாட்டிலில் எடுத்து வைக்கவும்.
  • வருடம் பூராகவும் நன்றாக இருக்கும்.


Notes:
  • இந்த பொருட்களைத் தவிர இன்னும் இரண்டு சேர்க்கலாம். அவை சித்தரத்தை - 10 கிராம் மற்றும் அரசி திப்பிலி 5 கிராம். மொத்தப்பொருட்கள் ஒற்றைப்படை எண்ணிக்கை இல் இருக்கவேண்டும்.
  • தீபாவளி அன்று மட்டும் இல்லை, எப்போது வயிறு சரி இல்லை என்று தோன்றினாலும், ஒரு சின்ன கோலி குண்டு அளவு இந்த லேகியத்தை எடுத்து சாப்பிட்டுவிட்டு, சூடான தண்ணீர் குடிக்கவும். சரியாகிவிடும்.

Images:






டிரை புரூட்ஸ் லட்டுகள்

Ingredients:
  • வால்நட்
  • பேரீச்சை உலர்ந்த திராட்சை
  • பாதாம் எல்லாம் ஒவ்வொரு ஒரு கை பிடி அளவு
  • கொஞ்சம் முந்திரி
  • பொட்டுக் கடலை
  • வேர்கடலை
  • கொப்பரை தேங்காய் ஒரு கை பிடி அளவு
  • ஓட்ஸ் இரண்டு கை பிடி அளவு
  • கல்கண்டு இரண்டிலிருந்து மூன்று கை பிடி அளவு


Method:
  • ஓட்ஸை வாணலி இல் சிறிது சூடு படுத்திக்கொள்ளவும்.
  • அதாவது லேசாக வறுத்துக் கொள்ளவும்.
  • பிறகு எல்லாவற்றையும் மிக்ஸி இல் ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.
  • ஒரு தட்டில் போட்டுக்கொண்டு உருண்டைகளாக பிடிக்கவும்.
  • அருமையான, சுவையான, சத்து மிகுந்த 'டிரை புரூட்ஸ் லட்டுகள் ' தயார்.


Notes:
  • தித்திப்புக்காக கல்கண்டு அல்லது வெல்லம் அல்லது பனைவெல்லம் அல்லது பனம் கல்கண்டு எதுவேண்டுமானாலும் சேர்த்துக் கொள்ளலாம்.
  • மிக்ஸி இல் ஒரு சுற்றுவதற்கு பதிலாக எல்லாவற்றையும் முடிந்தவற்றை பொடியாய் நறுக்கிக் கொண்டு, ஓட்ஸை மட்டும் வறுத்து பொடித்துக் கொண்டு மற்றவற்றை கலந்து லட்டுவாக பிடிக்கலாம்.
  • தேன் வேண்டுமானாலும் சுவைக்காக சேர்க்கலாம்.

Images:


ரவா வெஜிடபிள் கொழுக்கட்டை

Ingredients:
  • வறுத்த பாம்பே ரவா - 1/2 கிலோ
  • துருவிய கேரட், நறுக்கிய பீன்ஸ், குடமிளகாய் - எல்லாமாக சேர்த்து 2 கப்
  • நெய் - 2 - 4 டீஸ்பூன்
  • கொத்துமல்லி அல்லது புதினா - அலசி, பின் பொடியாக நறுக்கவும்
  • பச்சை மிளகாய் - 2 - 4 பொடியாக நறுக்கவும்
  • உப்பு


Method:
  • கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் நன்கு கலந்து, சிறிது வெந்நீர் தெளித்துப் பிசைந்து,நீள் உருண்டை களாக உருட்டி, நீராவியில் 10 நிமிடம் வேகவிட்டு எடுக்கவும்.
  • கொத்தமல்லி சட்னி அல்லது தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்.
  • எண்ணெய் நெய் அதிகம் இல்லாத உப்புமா போல இருக்கும்.

வெந்தய கீரை சப்பாத்தி - மேத்தி பரோட்டா

Ingredients:
  • வெந்தய கீரை ஒரு பெரிய கட்டு ( அலம்பி ஆய்ந்து, பொடியாக நறுக்கிக்கொள்ளவும்)
  • கோதுமை மாவு 2 கப்
  • பச்சை மிளகாய் 8 - 10
  • கடலை மாவு 2 டேபிள் ஸ்பூன்
  • உப்பு
  • 1 / 2 ஸ்பூன் மஞ்சள் பொடி
  • நெய் சப்பாத்தி செய்ய


Method:
  • வெந்தய கீரை மற்றும் பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும்.
  • ஒரு பேசினில் கோதுமை மாவு, கடலை மாவு , உப்பு மற்றும் கொஞ்சம் நெய் போட்டு நன்கு கலக்கவும்.
  • பிறகு பொடியாக நறுக்கின வெந்தய கீரை, பச்சை மிளகாய்,மஞ்சள் பொடி போட்டு நன்கு கலக்கவும்.
  • நன்கு அழுத்தி பிசையவும்.
  • பிறகு கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் விட்டு ரொட்டி மாவு பதத்துக்கு பிசையவும்.
  • ஒரு மணி நேரம் ஊறவைக்கவும்.
  • பிறகு வழக்கம் போல சப்பாத்தி களாக இடவும்..
  • தோசை கல்லில் போட்டு எடுக்கவும்.
  • இருபுறமும் நெய் விட்டு எடுக்கவும்..
  • சுவையான மேத்தி பரோட்டா தயார்.

ரவா தோசை 2

Ingredients:
  • பாம்பே ரவா 1 கப்
  • பச்சைமிளகாய் 5 - 6 - பொடியாக நறுக்கவும்
  • சீரகம் அரை ஸ்பூன்
  • பெருங்காயம் கொஞ்சம்
  • மோர் 2 கப்
  • கறிவேப்பிலை கொஞ்சம்
  • கொத்துமல்லி கொஞ்சம்
  • பெரியவெங்காயம் பொடியாக நறுக்கினது
  • உப்பு
  • நெய் தோசை வார்க்க


Method:
  • வாணலி இல் பாம்பே ரவாபோட்டு நன்கு வறுக்கவும்.
  • உப்பு போடவும்.
  • ஒரு பெரிய பத்திரத்தில் கொட்டவும்.
  • கொஞ்சம் ஆறினதும் அதில் சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை, வெங்காயம் , பச்சைமிளகாய், கொத்துமல்லி எல்லாம் போடவும்.
  • நன்கு கையால் கலக்கவும்.
  • பிறகு மோர் விட்டு கட்டிகளில்லாமல் கரைக்கவும்.
  • ஒரு அரைமணி வைத்திருந்து மெல்லிய தோசைகளாய் வார்க்கவும்.
  • நல்ல கரகரப்பாக அதாவது மொறுமொறுப்பாக வரும்.


Notes:
  • சாதாரண தோசை போல இல்லாமல் இந்த மாவை தோசை கல்லின் ஓரத்திலிருந்து விடணும். நடுவில் விட்டு பரத்த முடியாது.

அரு அரை நெல்லிக்காய் தொக்கு

Ingredients:
  • அரு /அரை நெல்லிக்காய் 1 கிலோ கொட்டை எடுத்து துருவி வைக்கவும்.
  • மிளகாய் பொடி 200 கிராம்
  • உப்பு அநேகமாய் 100 - 150 போதுமானது
  • வறுத்து அரைத்த வெந்தயப்பொடி 2 டேபிள் ஸ்பூன்
  • பெருங்காயப்பொடி 1 டீ ஸ்பூன்
  • மஞ்சள் பொடி 2 டீ ஸ்பூன்
  • எண்ணெய் தொக்கு செய்வதற்கு 1/4 கிலோ
  • கடுகு 1 டேபிள் ஸ்பூன்


Method:
  • நெல்லிக்காய்களை அலம்பி துடைத்து, துருவவும்.
  • ஆழமான வாணலி அல்லது உருளி இல் எண்ணெய் விட்டு கடுகு தாளிக்கவும்.
  • அதில் துருவின நெல்லிக்காயை போட்டு அடுப்பை நிதானமாய் எரிய விடவும்.
  • நன்கு கிளறிவிடவும்.
  • மஞ்சள் பொடி, பெருங்காயபொடி மற்றும் வெந்தயப்பொடி போடவும்.
  • நன்கு கிளறி விடவும்.
  • கொஞ்சம் வெந்தார்போல ஆகும் போது உப்பு போடவும்.
  • மீண்டும் நன்கு கிளறி விடவும்.
  • எண்ணெய் கசிய ஆரம்பிக்கும் போது மிளகாய் பொடியை போட்டு அடுப்பை பெரிதாக்கி, கைவிடாமல் கிளறி , மிளகாய் பொடி வாசனை போனதும் இறக்கிவிடவும்.
  • நன்கு ஆறினதும் பாட்டிலில் போட்டு வைக்கவும்.
  • வருஷத்துக்கும் கெடாது


Notes:
  • நெல்லிக்காய்கள் மிகவும் சிறியதாக, துருவ கஷ்டமாக இருந்தால், கொட்டையை மட்டும் எடுத்துவிட்டு மிக்சி இல் ஒரு சுற்று சுற்றி எடுத்துக் கொள்ளவும்

பெரிய நெல்லிக்காய் தொக்கு

Ingredients:
  • பெரிய நெல்லிக்காய் 1 கிலோ கொட்டை எடுத்து துருவி வைக்கவும்.
  • மிளகாய் பொடி 200 கிராம்
  • உப்பு அநேகமாய் 100 - 150 போதுமானது
  • வறுத்து அரைத்த வெந்தயப்பொடி 2 டேபிள் ஸ்பூன்
  • பெருங்காயப்பொடி 1 டீ ஸ்பூன்
  • மஞ்சள் பொடி 2 டீ ஸ்பூன்
  • எண்ணெய் தொக்கு செய்வதற்கு 1/4 கிலோ
  • கடுகு 1 டேபிள் ஸ்பூன்


Method:
  • நெல்லிக்காய்களை அலம்பி துடைத்து, துருவவும்.
  • ஆழமான வாணலி அல்லது உருளி இல் எண்ணெய் விட்டு கடுகு தாளிக்கவும்.
  • அதில் துருவின நெல்லிக்காயை போட்டு அடுப்பை நிதானமாய் எரிய விடவும்.
  • நன்கு கிளறிவிடவும்.
  • மஞ்சள் பொடி, பெருங்காயபொடி மற்றும் வெந்தயப்பொடி போடவும்.
  • நன்கு கிளறி விடவும்.
  • கொஞ்சம் வெந்தார்போல ஆகும் போது உப்பு போடவும்.
  • மீண்டும் நன்கு கிளறி விடவும்.
  • எண்ணெய் கசிய ஆரம்பிக்கும் போது மிளகாய் பொடியை போட்டு அடுப்பை பெரிதாக்கி, கைவிடாமல் கிளறி , மிளகாய் பொடி வாசனை போனதும் இறக்கிவிடவும்.
  • நன்கு ஆறினதும் பாட்டிலில் போட்டு வைக்கவும்.
  • வருஷத்துக்கும் கெடாது

இஞ்சி தொக்கு

Ingredients:
  • இஞ்சி கால் கிலோ
  • புளி எலுமிச்சை அளவு அல்லது 2 டேபிள் ஸ்பூன் புளி பேஸ்ட்
  • பூண்டு 100 கிராம்
  • மிளகாய் பொடி 4 ஸ்பூன்
  • வறுத்து அரைத்த வெந்தய பொடி 1 ஸ்பூன்
  • வெல்லம் கொஞ்சம்
  • உப்பு
  • எண்ணெய் கொஞ்சம்
  • கடுகு 1 ஸ்பூன்
  • பெருங்காய பொடி
  • மஞ்சள் பொடி


Method:
  • முதலில் இஞ்சியை நன்கு மண்போக அலம்பி , தோல் சீவி துண்டங்கள் போடவும்.
  • பூண்டை உரித்து வைத்துக் கொள்ளவும்.
  • புளி பேஸ்ட் இல்லை என்றால் , புளியை தண்ணீரில் ஊற வைக்கவும்.
  • மிக்சி இல் பூண்டு, புளி பேஸ்ட் மற்றும் இஞ்சியை மையாக அரைத்துக் கொள்ளவும்.
  • புளி பேஸ்ட் இல்லாவிட்டால், புளியை கெட்டியாக கரைத்து விட்டு அரைத்துக் கொள்ளவும்.
  • வாணலி இல் எண்ணெய்விட்டு, கடுகு கறிவேப்பிலை தாளித்துக் கொள்ளவும்.
  • அரைத்த விழுதை இதில் கொட்டவும்.
  • நன்கு கிளறவும்.
  • பிறகு அதில், மஞ்சள் பொடி, பெருங்காய பொடி, மிளகாய் பொடி, வெந்தய பொடி என எல்லாவற்றையும் ஒவ்வொன்றாக போடவும்.
  • உப்பும் போட்டு நன்கு கிளறிவிடவும்.
  • நன்கு கொதித்து லேகியப்பதம் வரும்போது , எண்ணெய் பிரியும்.
  • அதுவரை, அவ்வப்போது கிளறியபடி இருக்கவும்.
  • எண்ணெய் பிரிந்து வரும்போது வெல்லம் போட்டு நன்கு கிளறி, மீண்டும் எண்ணெய் பிரிய ஆரம்பிக்கும்போது அடுப்பை அணைத்து விடவும்.
  • நன்கு ஆறினதும் பாட்டில் களில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  • மிகவும் ருசியான 'இஞ்சி தொக்கு' தயார்.
  • இது உடலுக்கு மிகவும் நல்லது, வயிற்று உபாதைகளுக்கும் நல்லது.
  • தயிர் சாதம், சப்பாத்தி , தோசை என எதனுடனும் சாப்பிடலாம்.
  • சூடு சாதத்தில் நல்லெண்ணெய் விட்டு தொக்கு சாதமும் சாப்பிடலாம்....அருமையாக இருக்கும்.
  • பிரிட்ஜ் இல் வைத்துக்கொண்டால் ஒருவருடம் கூட வைத்துக் கொள்ளலாம்.


Notes:
  • இதை சிலசமயம் ரசம் செய்யும்போது ஒரு ஸ்பூன் கலந்தால் மிகவும் ருசியாக இருக்கும். அதே போல பிரட் இல் தடவி சாப்பிடலாம். மேலும், தொக்கு செய்யும்போது வறுத்து பொடித்த மிளகாய் பொடியை யும் போட்டால் , தொக்கின் நிறமும் மணமும் மிகநன்றாக இருக்கும்.

பச்சை பயறு இட்லி

Ingredients:
  • பச்சை பயறு ஒரு கப்
  • உளுத்தம் பருப்பு அரை கப்
  • பிளைன் ENO Fruit சால்ட் 1 /4 ஸ்பூன் (தேவையானால் )


Method:
  • பயறை எட்டு மணிநேரமும், உளுந்தை நான்கு மணிநேரமும் ஊறவைத்து , தனித்தனியே அரைக்கவும்.
  • அரைத்த இரண்டையும் உப்பு போட்டு கலக்கவும்.
  • அதை அப்படியே ஒரு நான்கு மணிநேரம் வைக்கவும்.
  • பிறகு வழக்கம் போல இட்லி வார்க்கவும்.
  • சுவையான, புரதம் நிறைந்த பயறு இட்லி தயார்.
  • சர்க்கரை நோயாளிகளுக்கான இதை எல்லோரும் சாப்பிடலாம்.
  • வித்தியாசமான சுவையுடன் நன்றாக இருக்கும்
  • எந்த சாம்பாருடனும் சாப்பிடலாம்.

அவல் இட்லி 2

Ingredients:
  • அவல் ஒரு கப்
  • இட்லி ரவை ஒன்றரை கப்
  • தயிர் ஒரு கப்
  • தண்ணீர் ஒரு கப்
  • பிளைன் ENO Fruit சால்ட் 1 /4 ஸ்பூன்


Method:
  • அவலை சுத்தம் செய்து கொண்டு, மிக்சி இல் பொடித்துக் கொள்ளவும்.
  • ரவை போல இருந்தாலும் சரி தான்.
  • பிறகு அவல் பொடித்தது, இட்லி ரவை இரண்டையும் ஒரு பாத்திரத்தில் போட்டு நன்கு கலந்து கொள்ளவும்.
  • பிறகு அதில் தயிர், உப்பு மற்றும் தண்ணீர் விட்டு கலக்கவும்.
  • உப்பு சேர்க்கவும்.
  • நன்கு கட்டிகள் இல்லாமல் கலக்கவும்.
  • தேவைப்பட்டால் இன்னும் கொஞ்சம் தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம்.
  • இதை அப்படியே ஒரு பத்து நிமிடங்கள் வைத்துவிடுங்கள்.
  • பிறகு எடுத்துக் பார்த்தால் அவல் ஊறிக்கொண்டு கெட்டியாகி இருக்கும்.
  • எனவே, மீண்டும் கொஞ்சம் தண்ணீர் விட்டு தளர்த்திக் கொள்ளுங்கள்.
  • இந்த மாவு இட்லி மாவு பதத்தில் இருக்கவேண்டும்.
  • இப்போது, மாவில் ENO கலந்து உடனடியாக இட்லி தட்டில் விட்டு , இட்லி வார்க்கவும்.
  • எப்பொழுதும் போல வேகவைத்து எடுக்கவும்.
  • அவ்வளவுதான், கொஞ்சம் கூட உளுந்து இல்லாத, மிகவும் மெத் என்கிற வெள்ளை வெளேர் இட்லி பத்தே நிமிடங்களில் தயார்.....
  • எந்த சட்னியுடனும் அல்லது சாம்பார் அல்லது தோசைமிளகாய் பொடியுடனும் நன்றாக இருக்கும்.

'புஸு புஸு' MTR 'ரவா இட்லி'

Ingredients:
  • கெட்டித்தயிர் - அரை லிட்டர் ( மட்டாக தண்ணீர் விட்டு குழப்பி வைத்துக் கொள்ளவும் )
  • பாம்பே ரவை -2 1 /2 கப்
  • பன்சிரவை - சீரொட்டி ரவை என்றும் சொல்வார்கள் 2 1 /2 கப்
  • பொடியாக நறுக்கிய கொத்துமல்லி ஒரு கப் நிறைய
  • பொடித்த சர்க்கரை ஒரு டீ ஸ்பூன்
  • உப்பு - தேவையான அளவு
  • முழு முந்திரி ஒரு கைப்பிடியளவு - இரண்டாக பிளந்து வைத்துக் கொள்ளவும்
  • எண்ணெய் கால் கப்
  • ENO FRUIT SALT PLAIN 1 1 /2 டேபிள் ஸ்பூன்
  • தாளிக்க :
  • கடுகு 1 டீ ஸ்பூன்
  • உளுத்தம் பருப்பு 1 டீ ஸ்பூன்
  • பெருங்காயப்பொடி 1/4 டீ ஸ்பூன்
  • பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் ஒரு டேபிள் ஸ்பூன்
  • பொடியாக துருவிய இஞ்சி ஒரு டேபிள் ஸ்பூன்


Method:
  • ஒரு பெரிய பாத்திரத்தில் இரண்டு ரவைகளை போட்டு நன்கு கலக்கி வைத்துக் கொள்ளவும்.
  • வாணலி இல் எண்ணெய் வைத்து முதலில் முந்திரியை வறுத்து தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  • பிறகு, தாளிக்க தந்துள்ள பொருட்களை தாளித்து, கலந்து வைத்துள்ள ரவை கலவை மீது இதைக் கொட்டவும்.
  • நன்கு கலக்கவும்.
  • உப்பு மற்றும் பொடித்த சர்க்கரை சேர்த்து மீண்டும் நன்கு கலக்கவும்.
  • இப்போது கொஞ்சம் கொஞ்சமாக தயிர் மற்றும் தண்ணீர் விட்டு கலக்கவும்.
  • ஒவ்வொரு முறை விடும்போதும், இட்லி மாவை நன்கு கலக்க வேண்டும்.
  • தேவையானால் மீண்டும் கொஞ்சம் தயிர் மீண்டும் கொஞ்சம் தண்ணீர் என்று விட்டு கலக்கவும்.
  • இப்போது பொடியாக நறுக்கிய கொத்துமல்லி யை போட்டு நன்கு கலக்கவும்.
  • மாவு இட்லி மாவு பதத்தில் இருக்கணும்.
  • இந்த ஸ்டெப் தான் மிக முக்கியம்....
  • ENO FRUIT SALT ஐ கொடுத்துள்ள அளவின் படி, மாவில் போட்டு நன்கு கலக்கவும்.
  • இதை செய்ததும், உடனடியாக இட்லி தட்டுகளில் மாவை விட்டு விடவேண்டும். ஊற வைக்க வேண்டாம்.
  • பிறகு எண்ணெய் தடவிய இட்லி தட்டுகளில் முதலில் ஒரு முந்திரி யை நடுவில் வைக்கவும்.
  • அதன்மேல் மாவை விட்டு இட்லி பானை இல் வைக்கவும்.
  • பத்து முதல் பன்னிரண்டு நிமிடங்கள் வரை வேகவைக்கவும்.
  • இட்லி பானையை திறந்து, இட்லி தட்டுகளை எடுத்து ஒரு ஐந்து நிமிடங்கள் அப்படியே வைக்கவும்.
  • நாம் வைத்த மாவைவிட இரண்டு மடங்காக இருக்கும் இந்த இட்லி.
  • பார்க்கவே 'புஸு புஸு ' என்று மிக அழகாக இருக்கும்.
  • நன்கு ஆறினதும், இட்லிகளை மெதுவாக ஸ்பூன் மூலம் எடுக்கவும்.
  • மெத் மெத் என்கிற , MTR போலவே சுவையான 'ரவா இட்லி' தயார் .
  • தொட்டுக்கொள்ள எதுவுமே வேண்டாம், ஆனால் உங்களுக்கு தேவையானால் , தோசை மிளகாய் பொடி அல்லது எந்த சட்னியுடனும் பரிமாறலாம் .

பச்சை பயறு இட்லி

Ingredients:
  • பச்சை பயறு ஒரு கப்
  • உளுத்தம் பருப்பு அரை கப்
  • பிளைன் ENO Fruit சால்ட் 1 /4 ஸ்பூன் (தேவையானால் )


Method:
  • பயறை எட்டு மணிநேரமும், உளுந்தை நான்கு மணிநேரமும் ஊறவைத்து , தனித்தனியே அரைக்கவும்.
  • அரைத்த இரண்டையும் உப்பு போட்டு கலக்கவும்.
  • அதை அப்படியே ஒரு நான்கு மணிநேரம் வைக்கவும்.
  • பிறகு வழக்கம் போல இட்லி வார்க்கவும்.
  • சுவையான, புரதம் நிறைந்த பயறு இட்லி தயார்.
  • சர்க்கரை நோயாளிகளுக்கான இதை எல்லோரும் சாப்பிடலாம்.
  • வித்தியாசமான சுவையுடன் நன்றாக இருக்கும்
  • எந்த சாம்பாருடனும் சாப்பிடலாம்.

வேர்க்கடலை பயறு சாலட்

Ingredients:
  • வறுத்த வேர்க்கடலை 1 /2 கப் ....ஒன்றிரண்டாக ஒடித்துக் கொள்ளவும்.
  • முளைவிட்ட பச்சை பயிறு 1/ 2 கப்
  • வெங்காயம் 1 - பொடியாக நறுக்கவும்
  • தக்காளி 1 - விதை நீக்கி பொடியாக நறுக்கவும்
  • பச்சை மிளகாய் - 1 - பொடியாக நறுக்கவும்
  • துருவிய இஞ்சி - 1/2 ஸ்பூன்
  • எலுமிச்சை சாறு - 1 டீ ஸ்பூன்
  • உப்பு


Method:
  • மேலே சொன்ன எல்லா பொருட்களையும் ஒரு பேசினில் போட்டு கலக்கவும்.
  • ஒரு ஸ்பூன் போட்டு, சாப்பிடத் தரவும்.
  • சுவையான சாலட் இது.
  • நடு நடுவில் வேர்க்கடலை 'கடுக் முடுக் ' என்று இருக்கும், அது பிடிக்காதவர்கள் பச்சை வேர்க்கடலையை சேர்த்துக் கொள்ளலாம்.


Notes:
  • வேண்டுமானால் இதில் சில மாற்றங்கள் செய்து சாப்பிடலாம்....அதாவது, சோளம் உரித்தது அல்லது வேகவைத்தது, பயறு கொஞ்சமாய் வேகவைத்தது, பச்சை வேர்க்கடலை, துருவிய வெள்ளரிக்காய் என்று தேவையானதை சேர்க்கலாம். வடக்கே 'பச்சையாக கொத்துக்கடலை' செடியுடன் கிடைக்கும், அது கிடைத்தாலும் இதில் சேர்க்கலாம்.

சத்துமாவு பாசிப்பருப்பு அடை

Ingredients:
  • எல்லாத் தானியங்களும் சேர்த்து அரைத்த சத்து மாவு 1 கப்
  • பயத்தம் பருப்பு – 1 கப்
  • பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் – கால் கப்
  • பொடியாக நறுக்கிய பூண்டு, கொத்துமல்லித் தழை – தலா ஒரு டேபிள்ஸ்பூன்
  • மிளகு, சீரகத்தூள் – ஒரு டீஸ்பூன்
  • உப்பு
  • எண்ணெய் – தேவையான அளவு.


Method:
  • பயத்தம் பருப்பை அரை மணி நேரம் ஊறவைத்து, கரகரப்பாக அரைக்கவும்.
  • அரைத்த மாவுடன், சத்துமாவையும் சேர்த்துக் கரைத்துக்கொள்ளவும்.
  • அதில் வெங்காயம், பூண்டு, கொத்துமல்லி, மிளகு, சீரகத்தூள் எல்லாவற்றையும் சேர்த்துக் கலக்கவும்.தோசைக்கல்லைக் அடுப்பில் வைத்து, சிறிய அடைகளாக வார்த்து, எண்ணெய்விட்டு இரண்டு பக்கமும் வேகவைத்து எடுக்கவும்.
  • அடைக்குத் தொட்டுக்கொள்ள காரமான சட்னி அருமையாக இருக்கும்.

கேழ்வரகு உளுந்து அவல் தோசை

Ingredients:
  • 4 கப் கேழ்வரகு மாவு
  • 1 கப் உளுந்து
  • 2 - 2 1/2 கப் மெல்லிசு அவல்
  • ( கெட்டி அவல் என்றால் 1 - 1/2 கப் போறும்)


Method:
  • அவல் மற்றும் உளுத்தம் பருப்பை நன்கு களைந்து தனித்தனியாக 2 - 3 மணிநேரம் ஊர வைக்கவும்.
  • பிறகு கேழ்வரகு மாவை உப்பு போட்டு கரைத்து வைக்கவும்.
  • தண்ணீர் மட்டா விடவும்.
  • ஊறிய பிறகு முதலில் உளுந்தை அரைத்து பிறகு அதிலேயே ஊறிய அவலையும் போடவும்.
  • அது நன்கு அரைபட்டதும், கரைத்து வைத்துள்ள கேழ்வரகு மாவையும் கொட்டி ஒரு சுற்று சுற்றி , பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.
  • ஒரு 8 மணி நேரம் கழித்து தேவையானால் தண்ணீர் விட்டு, நல்லா 'கிறிஸ்ப்' ஆக வார்க்கலாம்.
  • அல்லது 'மெத்' என்று கனமாகவும் வார்க்கலாம்.
  • அருமையான 'கேழ்வரகு உளுந்து அவல் தோசை ' தயார்.
  • ரொம்ப நல்லா இருக்கும், இன்று ஒரே மாவில், தோசை மற்றும் இட்லி செய்து பார்த்தேன். சூப்பர்.

கேழ்வரகு இட்லி 2

Ingredients:
  • கேழ்வரகு மாவு ( களைந்து உலர்த்தி அரைத்தது ) 2 கப்
  • உளுத்தம் பருப்பு 1/2 கப்
  • ஒரு சிட்டிகை சோடா உப்பு
  • உப்பு


Method:
  • கேழ்வரகு மாவை கட்டிகள் இல்லாமல் தண்ணிரில் கரைத்து வைக்கவும்.
  • உளுந்தை நன்கு களைந்து 1 மணிநேரம் ஊறவைக்கவும்.
  • பிறகு நன்கு அரைக்கவும், கடைசி இல் கேழ்வரகு மாவையும் சேர்த்து போட்டு ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.
  • உப்பு மற்றும் சோடா உப்பு போட்டு கரைத்து வைக்கவும்.
  • மறுநாள் எப்பவும் போல இட்லி வார்க்கவும்.
  • நல்லா மெத் என்று வரும் இந்த இட்லி.
  • கலர் தான் கருப்பா இருக்கும் ஆனால் உடம்புக்கு தெம்பு , ரொம்ப நல்லது.
  • சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு வரப்பிரசாதம் , பூண்டு துவையல் அல்லது காரமான வெங்காய சட்னி யுடன் ரொம்ப நல்லா இருக்கும்.

ஓட்ஸ் ரவா இட்லி

Ingredients:
  • ஓட்ஸ் 1 கப்
  • ரவா 1 கப்
  • தயிர் 1 1/2 கப்
  • தேவையான காய்கறிகள் 1 கப் ( துருவவும்) - தேவையானால் சேர்த்துக்கொள்ளுங்கள்
  • இஞ்சி 1 ஸ்பூன் துருவியது
  • பச்சை மிளகாய் 1 ஸ்பூன் பொடியாக நறுக்கியது
  • பெருங்காயப்பொடி 1/2 ஸ்பூன்
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணை 2 - 3 ஸ்பூன்
  • கடுகு 1 ஸ்பூன்
  • உளுந்து 1 ஸ்பூன்


Method:
  • வாணலி இல் முதலில் ஓட்ஸ் மற்றும் ரவையை தனித்தனியாக எண்ணை இல்லாமல் வறுத்து தனித்தனியே வைக்கவும்.
  • வாணலி இல் எண்ணை விட்டு, கடுகு உளுந்து தாளிக்கவும்.
  • பிறகு, இஞ்சி மற்றும் பச்சைமிளகாய் போட்டு வதக்கவும்.
  • பெருங்காயப்பொடி சேர்க்கவும்.
  • இப்போது வறுத்து வைத்துள்ள ஓட்ஸ் மற்றும் ரவையை ஒவ்வொன்றாக போட்டு நன்கு வறுக்கவும்.
  • ஒரு பெரிய பாத்திரத்தில், தயிர் போட்டு நன்கு 'சிலுப்பவும்' ( கலக்கவும்)
  • உப்பு போட்டு கரைத்து வைக்கவும்.
  • வறுத்த சாமான்களை அதில் கோட்டவும்.
  • ஒரு 1/2 மணி ஊரவிடவும்.
  • தேவையானால் கொஞ்சம் தண்ணீர் விட்டுக்கொள்ளவும்.
  • உப்பு சரிபார்த்து, எண்ணை தடவிய தட்டில் விட்டு இட்லி வர்க்கவும்.
  • இந்த இட்லி க்கு தொட்டுக்கொள்ள எது வுமே வேண்டாம், 'வெறுமனே' வே நல்லா இருக்கும்.


Notes:
  • காய்கறிகள் சேர்ப்பதானால், இஞ்சி மற்றும் பச்சைமிளகாய் போட்டு வதக்கினதும் , நறுக்கி அல்லது துருவி வைத்துள்ள காய்கறிகளை போட்டு துளி உப்பு போட்டு வதக்கவும். காய் நன்கு வதங்கினதும் ஓட்ஸ் மற்றும் ரவை போடவும். சரியா?
  • குழந்தைகளுக்கு செய்வதானால் , துருவின காரட், உருளை, பச்சைப்பட்டாணி, காலி பிளவர் ,தக்காளி எல்லாம் போடலாம். ரொம்ப கலர் ஃபுல் ஆக இருக்கும். டேஸ்ட் ம அபாரமாக இருக்கும்.

ஓட்ஸ் இட்லி 2

Ingredients:
  • ஓட்ஸ் 1கப்
  • உளுத்தம் மாவு அரைத்தது 2 கரண்டி
  • உப்பு தேவையானவை


Method:
  • ஒட்ஸை மிக்சி இல் போட்டு பொடிக்கவும்.
  • இட்லி மாவில் ஓட்ஸ் மாவுடன் கலந்து , மிக்கிசி இல் ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்
  • உப்பு சேர்த்து கலக்கவும்.
  • ஒரு 10 நிமிஷம் கழித்து, மாவு சற்று கெட்டியானனதும், தண்ணீர் விட்டு இட்லி மாவு பதத்துக்கு தளர்த்தி கிக்கொண்டு, எண்ணை தடவிய தட்டில் இட்லி வார்க்கவும்.
  • சூடாக சாப்பிடவும், விருப்பமான எந்த சட்னி யுடனும் நல்லா இருக்கும்.


Notes:
  • உடனடியாக இட்லி வார்க்க வேண்டும் என்றால்; இப்படி செய்லாம்.

ஓட்ஸ் இட்லி

Ingredients:
  • ஓட்ஸ் 2 கப்
  • உளுத்தம் மாவு அரைத்தது 1/2 கப்
  • உப்பு தேவையானவை


Method:
  • இட்லி மாவில் ஒட்ஸை கலந்து , மிக்கிசி இல் ஒரு சுற்று சுற்றி எடுங்கள் .
  • உப்பு சேர்த்து கலக்கவும்.
  • ஒரு 6 மணி நேரம் புளிக்கட்டும்.
  • பிறகு எண்ணை தடவிய தட்டில் இட்லி வார்க்கவும்.
  • சூடாக சாப்பிடவும், வெங்காய சட்னி நல்லா இருக்கும்.


Notes:
  • இதை பல முறைகளில் செய்லாம் , ஒவ்வொன்றாக பார்ப்போம்.
  • தேவையானால், மிளகு சீரகம் அல்லது, இஞ்சி பச்சை மிளகாய் சேர்த்து வார்க்கலாம். சுவை கூடும்.

சீஸ் பில்லோஸ் பரோட்டா

Ingredients:
  • மைதா 1 1 /2 கப்
  • கோதுமை மாவு ஒரு கப்
  • எண்ணெய் இரண்டு ஸ்பூன்
  • துருவிய சீஸ் அரை கப்
  • வெண்ணை ஒரு டேபிள் ஸ்பூன்
  • துளி உப்பு


Method:
  • கோதுமைமாவு மற்றும் மைதாவை கலந்து உப்பு போட்டு, எப்பொழுதும் போல சப்பாத்திமாவாக பிசைந்து வைக்கவும்.
  • ஒரு முப்பது நிமிடங்கள் அப்படியே வைக்கவும்.
  • பிறகு அதை மிகவும் மெல்லிய சப்பாத்தியாக இடவேண்டும்.
  • உங்கள் கை விரல்களை கொண்டு சப்பாத்தியை தூக்கி பார்த்தால், உங்கள் விரல்கள் தெரியவேண்டும்..அந்த அளவிற்கு மெல்லியதாக இருக்கவேண்டும். (பார்க்க படம் )
  • பிறகு அதன் மேல் வெண்ணையை தடவ வேண்டும்.
  • பிறகு அதை கீழே காட்டியுள்ள படத்தில் காட்டியது போல , மடிக்கவும்.
  • அதன்மேல், துருவி வைத்துள்ள சீஸை போடவும்.
  • மீண்டும் அது வெளியே தெரியாமல் மடிக்கவும். (படம் பார்க்கவும் )
  • எடுத்து கல்லில் மெதுவாக போட்டு, மென்மையாக திருப்பி போட்டு எண்ணெய்விட்டு எடுக்கவும்.
  • அது அழகாக உப்பிக்கொண்டு வரும்.
  • அருமையான டிபன்.... சூடாக சாப்பிடவும்.

Images:
















ராஜஸ்தானி கடி பகோடா

Ingredients:
  • 1 1 /2 கப் கடலை மாவு
  • 2 ஸ்பூன் மிளகாய் பொடி
  • அரை ஸ்பூன் ஓமம்
  • ஒரு சிட்டிகை பெருங்கயப்பொடி
  • கால் ஸ்பூன் சோடா உப்பு
  • 2 கப் திக்கான மோர்
  • அரை ஸ்பூன் வறுத்து பொடித்த வெந்தயப்பொடி
  • அல்லது காய்ந்த வெந்தய கீரை
  • கறிவேப்பிலை , உப்பு
  • பொரிக்க எண்ணெய்


Method:
  • முதலில் ஒரு பேசினில் பாக்கி ஒரு கப் கடலை மாவை போட்டு, ஓமம், சோடா உப்பு, கொஞ்சம் மிளகாய் பொடி, உப்பு போடவும்.
  • தண்ணீர் விட்டு பகோடா மாவு போல கரைக்கவும்.
  • ஒரு பக்கமாய் வைக்கவும்.
  • மோரை நன்கு குழப்பவும்.
  • உப்பு, அரை கப் கடலை மாவு, கொஞ்சம் மிளகாய் பொடி, வெந்தய பொடி அல்லது பொடித்த வெந்தய கீரை போட்டு நன்கு கலக்கவும்.
  • மாவு கட்டி தட்டாமல் நன்கு கலக்கவும்.
  • வாணலி இல் எண்ணெய் துளிவிட்டு கொஞ்சம் ஓமம் மற்றும் கறிவேப்பிலை தாளிக்கவும். கரைத்த மோரை அதில் விடவும்.
  • அது கொதிக்கட்டும். இது தான் 'கடி'. வாணலி இல் எண்ணெய் வைக்கவும்.
  • சூடான எண்ணெய் இல் கரைத்து வைத்துள்ள மாவை எடுத்து பக்கோடாக்கள் போல போடவும்.
  • நல்ல பவுன் நிறத்தில் எடுத்து , கொதித்துக்கொண்டிருக்கும் 'கடி' இல் போடவும். இது போல எல்லா மாவும்ஆகும் வரை செய்யவும்.
  • பக்கோடாக்கள் மொத்தமும் போட்டதும் ஒரு கொதி வரும் வரை காத்திருக்கவும். பிறகு 'கடி பகோடாவை' அடுப்பிலிருந்து இறக்கி விடவும். இது ஒரு ராஜஸ்த்தானி டிஷ் , சப்பாத்திக்கு பூரிக்கு ரொம்ப மேட்சாக இருக்கும்மே; லே சொன்ன 'கிச்சடிக்கும்' தான்

இராஜஸ்தானி கிச்சடி

Ingredients:
  • முழு பச்சை பயிறு அல்லது உடைத்த பச்சை பயிறு 1 /2 கப்
  • அரிசி 1 /2 கப்
  • நெய் தேவையான அளவு. ( நாம் சாதாரணமாக செய்து சாப்பிடும்போது நிறைய நெய் விட்டு சாப்பிட்டால் மிக நன்றாக இருக்கும். ஜுரம் அல்லது அஜீரணம் உள்ளவர்களுக்கு ஜஸ்ட் ஒரு ஸ்பூன் விட்டால் போதுமானது . )
  • உப்பு


Method:
  • அரிசி மற்றும் பருப்பை களைந்து ஒருமணி நேரம் ஊறவைக்கவும்.
  • பிறகு குக்கரில் எப்போதும் சாதம் வடிப்பது போல வைக்கவும்.
  • வெளியே எடுத்து உப்பு போட்டு நெய்விட்டு மசித்து சாப்பிடக் கொடுக்கவும்.
  • இதற்கு தொட்டுக்கொள்ள' குஜராத்தி கடி அல்லது ராஜஸ்தானி கடி' செய்வார்கள்.
  • அவற்றின் செய்முறைகளையும் தருகிறேன்.


Notes:
  • இது ஒரு அருமையான உணவு..........கிட்டத்தட்ட நம் வெண் பொங்கல் போல் இருக்கும். நிறைய விதங்களில் இதை செய்கிறார்கள்...............நான் இங்கே தருவது குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் சிறப்பானது........... வயிறு சரி இல்லை என்றாலோ, ஜுரம் என்றாலோ அவர்கள் இதை செய்து சாப்பிடுகிறார்கள்

நான் மற்றும் பட்டர் நான்

Ingredients:
  • மைதா 2 கப்
  • எண்ணெய் 1 டேபிள் ஸ்பூன்
  • சர்க்கரை 1 டீ ஸ்பூன் ( நன்கு பொடிக்கவும் )
  • உப்பு 1/2 ஸ்பூன்
  • பேகிங் சோடா 1/2 ஸ்பூன்
  • தயிர் 1/4 கப் ( குழப்பி வைக்கவும் )


Method:
  • மைதாவை பேக்கிங் சோடா போட்டு சலிக்கவும்.
  • அதில் நடுவில் குழி செய்து எண்ணெய், சர்க்கரை, உப்பு எல்லாம் போட்டு கலக்கவும்.
  • இப்போ குழப்பி வைத்துள்ள தயிரை அதில் விடவும்.
  • மாவை மிருதுவாக பிசையவும்.
  • அநேகமாய் தண்ணிரே வேண்டி இருக்காது.
  • இந்த மாவை சுமார் 6 - 7 நிமிடங்கள் தொடர்ந்து ( கடிகாரத்தை பார்த்து கொண்டு ) பிசையவேண்டும்.
  • அப்படி பிசைந்த மாவை சுமார் 4 மணி நேரம் ஊர வைக்கவும்.
  • இந்த நேரம் சென்னை வாசிகளுக்கு மட்டும் தான் .............குளிர் பிரதேசம் என்றால் 12 மணி நேரம் கூட வைக்கலாம்.
  • அல்லது இரவே மாவு பிசைந்து வைத்து விட்டு காலை செய்யலாம்..............சரியா?
  • ஸோ, இப்போ மாவு தயார்.
  • மேலே சொன்ன அளவிற்கு சுமார் 8 வட்டமான 'நான்கள்' வரும்.
  • வட்டமாக இடாமல் 'ஓவல்' ஆக கூட இடலாம்.............. ஆனால் அப்படி செய்தால் கல்லில் இருந்து விழுந்து விடுகிறது.................எனவே தான் வட்டம்
  • மொத்த மாவையும் 8 சமமான உருண்டைகளாக பிரித்து உருட்டி வைத்துகொள்ளவும்.
  • மாவை நல்ல கனமான சப்பாத்தி போல வட்டமாக இடவும்.
  • கையை தண்ணீரில் நனைத்துக்கொண்டு, அதை சப்பாத்தி போல இட்டு வைத்திருக்கும் பகுதி இல் தடவவும்.
  • கைப்பிடி உள்ள தோசைக்கல்லில் ஈரமான பகுதி படும்படி 'நானை' போடவும்.
  • ஒரே நிமிடத்தில் அதில் கொப்புளங்கள் போல வரும், அந்த நேரத்தில் மெல்ல தோசைக்கல்லை எடுத்து அடுப்பிற்கு நேரே காட்டவும்.
  • கண்டிப்பாக 'நான்' அடுப்பில் விழாது................கொஞ்சம் சாய்த்து சாய்த்து முழுவதும் நெருப்பில் காட்டவும்.
  • அது வெந்ததும், மெல்ல தோசைக்கல்லை பழயபடி அடுப்பில் வைத்து விட்டு, அடுப்பை சின்னதாக்கவும்.
  • இப்போது தோசைக்கல்லில் இருந்து 'நானை' எடுக்கவும்.
  • உங்களுக்கு பிடித்த 'சைட் டிஷ்' உடன் பரிமாறுங்கள்.
  • அவ்வளவுதான் சூப்பர்...........மெத் மெத் என்கிற 'ப்ளைன் நான்' ரெடி.
  • 'பட்டர் நான்' வேண்டும் என்றால்....................எடுத்த சூடான நானில் கொஞ்சம் வெண்ணையை தடவி பரிமாறவும்........அவ்வளவு தான்
  • கிழே 'ஸ்டேப் பி ஸ்டேப்' ஆக படம் போட்டிருக்கேன் பாருங்கள்
  • கண்டிப்பாக செய்து பாருங்கள்........இங்கு பின்னூட்டம் போடுங்கள்


Notes:
  • வட இந்திய உணவுகளில் எல்லோருக்குமே ரொம்ப பிடிக்கும் இது .................இதை செய்ய முட்டை வேண்டும்...................... தந்துரி அடுப்பு வேண்டும்............... அது இது என்று ரொம்ப சொல்வார்கள்................ஆனால் நம்ப வேண்டாம் இது ரொம்ப ரொம்ப சுலபமாக செய்யக் கூடியது.......நிஜம் தான்......................நாம் சாதாரணமாக செய்யும் ரொட்டியை விட இதை சுலபமாக செய்யலாம்..........நான் அப்படித்தான் 'நான்' செய்தேன்...................நீங்களும் செய்து பார்க்கலாம்.
  • ஒருவேளை..................'நான்' விழுந்து விட்டால் அடுத்த முறை நிறைய ஈரம் இருக்கும்படி தண்ணீர் தடவவும்

உளுந்து கச்சோடி அல்லது தால் கச்சோடி

Ingredients:
  • உளுந்தும் பருப்பு - 2 cup
  • கோதுமை மாவு /மைதா - 3 cup
  • சீரகம் - 4 டீ ஸ்பூன்
  • ஏலக்காய்: 10
  • கிராம்பு: 5 -6
  • பட்டை: 1 சிறிய துண்டு
  • மிளகாய் வற்றல்: 10 - 12
  • உப்பு
  • எண்ணெய் - பொறிப்பதற்கு
  • சோடா உப்பு - ஒரு சிட்டிகை


Method:
  • உளுந்தும் பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்து நைஸாக அரைத்துக் கொள்ளவும்.
  • சீரகம், கிராம்பு, ஏலக்காய், பட்டை, மிளகாய் வற்றல், உப்பு ஆகிய மசாலா பொருள்களைத் தனியாக அரைத்துக் கொள்ளவும்.
  • வாணலியை அடுப்பில் வைத்து, எண்ணெய் காய்ந்ததும் மசாலாவை அதில் போட்டு, நன்றாக வதக்கவும்.
  • பிறகு நைஸாக அரைத்த உளுந்தையும் அதில் சேர்த்து, நீர் வற்றும் வரை நன்றாக வதக்கவும்.
  • இதை பூரணம் என்று சொல்வோம்.
  • கோதுமை மாவுடன் சிறிதளவு எண்ணெய், உப்பு, சோடா உப்பு ஆகியவற்றைப் போட்டு ஒரு ஸ்பூன் எண்ணைவிட்டு மாவை நன்கு கலக்கவும்.
  • பிறகு கொஞ்சம் தண்ணீர் ஊற்றிக் கலந்து நன்றாகப் பிசைந்து சிறுசிறு உருண்டைகளாகச் செய்து கொள்ளவும்.
  • ஒவ்வோர் உருண்டைகளுக்குள்ளும் பூரணத்தைச் சிறிது வைத்து, பூரி போல இட்டு அல்லது கையால் வடை தட்டுவது போல தட்டி,, காய்ந்த எண்ணெயில் போட்டு, இரண்டு பக்கமும் நன்கு பொரிந்தவுடன் எடுக்கவும்.


Notes:
  • இது 1 வாரம் வரை வைத்து சாப்பிடலாம். ரொம்ப நல்லா இருக்கும். இதனுடன் இனிப்பு மற்றும் கார சட்டினி நல்லா இருக்கும்.

சால்ட் பிரட் இல் பாவ் பாஜி

Ingredients:
  • வெங்காயம் 2 - 3 பொடியாக நறுக்கவும்
  • வெந்த உருளைக்கிழங்கு - 2 - 3
  • பச்சை பட்டாணி - வேகவைத்தது - 1/2 கப் தேவையானால்
  • வெண்ணை 1/4 கிலோ
  • கொத்துமல்லி பொடியாக நறுக்கினது 1 டேபிள் ஸ்பூன்
  • உப்பு தேவையான அளவு
  • பாட்ஷா பாவ்பாஜி மசாலா 2 டேபிள் ஸ்பூன்
  • சால்ட் பிரட் 1 full
  • எலுமிச்சை சாறு 1 டேபிள் ஸ்பூன்


Method:
  • பாதி வெண்ணையை வாணலி இல் போட்டு அது கொஞ்சம் உருகினதும் வெங்காயம், போட்டு வதக்கணும்.
  • கொஞ்சம் வதங்கினதும் வெந்த உருளைக்கிழங்கு , உப்பு மற்றும் கொத்துமல்லி தழை போட்டு வதக்கவும்.
  • பாட்ஷா மசாலாவும் போட்டு வதக்கவும்.
  • தனியே எடுத்து வைக்கவும்.
  • தோசை கல்லில் பிரட் ஐ வெண்ணை போட்டு டோஸ்ட் செய்யவும்.
  • பரிமாறும் போது, பிரட் 2 slice வைத்து மேலே பாஜியை போட்டு தேவையானால் பொடியாக நறுக்கிய வெங்காயம் தூவி துளி எலுமிச்சை பிழிந்து தரவும்.


Notes:
  • இது சாதரணமாக 'pav ban ' இல் தான் செய்வார்கள், ஆனால் இதிலும் செய்யலாம்.

பானி பூரி

Ingredients:
  • பூரி செய்ய தேவயானவை
  • 1 கப் மைதா
  • 1/4 கப் உளுந்துமாவு
  • 1 கப் மெல்லிய ரவை
  • தேவையான உப்பு
  • கொஞ்சம் வெது வெதுப்பான தண்ணீர்


Method:
  • மேற்சொன்ன மாவுகளை உப்புச் சேர்ந்துக் கலந்து நீர் விட்டுப் பிசைந்து வைத்துக்கொள்ளவும். இந்த பூரிகளைச் சிறு உருண்டைகளாக உருட்டி உடனடியாகப் பொரிக்கவும். இவை நன்கு உப்ப வேண்டும். ஆகவே முள்கரண்டியால் குத்த வேண்டாம். இதை ஒரு நாள் முன்னதாய்ச் செய்து வைத்துக்கொள்ளலாம்.
  • அடுத்துப் பானி என்னும் சட்னி நீர் தயாரிக்கும் விதம். ஹிந்தியில் பானி என்றால் தண்ணீர் என்ற பொருள் என அனைவரும் அறிவோம். இங்கே பானி என்பது சட்னியை நீர்க்க்க் கரைப்பதைக் குறிக்கும்.
  • ஒரு கட்டு புதினா இலைகள்
  • ஒரு கட்டு கொத்துமல்லி இலைகள்
  • ஒரு டீஸ்பூன் மிளகு
  • ஒரு டேபிள் ஸ்பூன் கருப்பு உப்பு (இது இல்லாவிட்ட்லும் பரவாயில்லை )
  • ஒரு டேபிள் ஸ்பூன் சாதாரண உப்பு
  • 2 டீஸ்பூன் ஜீரகம்
  • 4 டீஸ்பூன் காய்ந்த ஆம்சூர் தூள்(மாங்காயைக் காய வைத்துச் செய்த பொடி, ஆம்சூர் என்ற பெயரிலே எல்லாக் கடைகளிலும் கிடைக்கும்.)
  • இஞ்சி ஒரு துண்டு.
  • 2 டீஸ்பூன் வறுத்த ஜீரகப் பொடி
  • மேற்சொன்ன பொருட்களை நன்கு சுத்தம் செய்து ஒன்றாய்ப் போட்டு சட்னி பத்த்தில் நல்ல நைசாகவே அரைக்கவும். அரைத்த்தைச் சற்று நேரம் வைக்கவும்.
  • பிறகு நீரில் கரைத்து வைக்கவும்.
  • பூரிக்குள் வைக்கும் மசாலா :
  • பச்சைப் பயறு அல்லது கொண்டைக்கடலையை அல்லது பச்சை பட்டாணி உப்புப் போட்டு வேக வைத்துக்கொள்ளவேண்டும். உருளைக்கிழங்கை வேக வைத்துப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். தேவையானால் கொஞ்சம் உப்புப் போட்டுக் கலக்கலாம், பயறு வகையைச் சுண்டல் போல் செய்தாலும் நன்றாக இருக்கும்.
  • பானி பூரி யை பரிமாறுவது எப்படி ?
  • இப்போது பொரித்த பூரிகளை எடுக்கவும். ஒரு பூரியின் நடுவே கைக்கட்டை விரலால் ஒரு ஓட்டை போடவும். அந்த ஓட்டைக்குள்ளாக வேக வைத்த ப்யறு, உருளைக்கிழங்கை வைக்கவும். இப்போது அரைத்து வைத்த சட்னியை நீர் விட்டுக் கரைத்துக்கொண்டு அந்த நீரைக் கொஞ்சம் அதில் விடவும். உடனே வாயில் போட்டுக்கொண்டு சாப்பிட வேண்டும். இதில் முக்கியமாய்க் கவனிக்க வேண்டியது பூரி வாய் கொள்ளுமளவுக்குச் சின்னதாய் இருக்க வேண்டும் என்பதே. பூரியின் கரகரப்பு சட்னி நீரில் ஊறிப் போகும் முன்னர் சாப்பிட வேண்டும். பூரியின் கரகரப்பு, சட்னியின் காரம், அதோடு பயறு, உளுந்து இவற்றின் வெந்த தன்மை எல்லாம் சேர்ந்து சுவை நன்றாக இருக்கும்.

ரசவாங்கி கத்தரிக்காய் ரசவாங்கி

Ingredients:
  • துவரம் பருப்பு 100 கிராம்
  • பிஞ்சு கத்தரிக்காய் 1/4 கிலோ
  • கடலை பருப்பு 1 டேபிள் ஸ்பூன் அல்லது பச்சை வேர்கடலை 1 டேபிள் ஸ்பூன்.
  • துருவின தேங்காய் 2 டேபிள் ஸ்பூன்
  • APP 3 - 4 டீ ஸ்பூன்
  • புளி பேஸ்ட் 2 டேபிள் ஸ்பூன்
  • எண்ணை
  • உப்பு
  • கறிவேப்பிலை
  • தாளிக்க கடுகு
  • வறுத்து அரைத்த வெந்தய பொடி 1/2 ஸ்பூன்
  • மஞ்சள் பொடி கொஞ்சம்
  • பெருங்காயப்பொடி 1/4 ஸ்பூன்


Method:
  • கத்தரிக்காயை அலம்பி நறுக்கவும்.
  • குக்கரில் துவரம் பருப்பு மற்றும் வேர்கடலை அல்லது கடலை பருப்புடன் வேகவைக்கவும்..
  • உருளி இல் எண்ணை விட்டு கடுகு கறிவேப்பிலை தாளித்து, வெந்தகாய் மற்றும் பருப்பை கொட்டவும்.
  • அத்துடன் புளி பேஸ்ட், APP, உப்பு, பெருங்காயப்பொடி, தேங்காய் துருவல், மஞ்சள் பொடி எல்லாம் போட்டு கொதிக்க வீடவும்.
  • அப்பப்போ கிளறி விடவும்.
  • நன்கு கொதித்ததும் இறக்கவும்.
  • சுவையான 'கத்தரிக்காய் ரசவாங்கி ' ரெடி
  • பொறித்த அப்பளம் அல்லது வத்தல் அல்லது உருளைக்கிழங்கு சிப்ஸுடன் பரிமாறவும்.


Notes:
  • பொதுவாக இதை பாகற்காய் இல் மட்டும் தான் செய்வது வழக்கம்....ஒருவேளை கத்தரிக்காய் இல் செய்தால் அதன் பேர் 'ரசவாங்கி' / 'கத்தரிக்காய் ரசவாங்கி' ...அதன் குறிப்பு மேலே கொடுத்துள்ளேன்.

கொத்துமல்லி பொடி சாதம் APP சாதம்

Ingredients:
  • சாதம் 1 கப்
  • APP 2 - 3 ஸ்பூன்
  • உப்பு
  • நெய் உங்களுக்கு தேவையான அளவு


Method:
  • ரொம்ப சிம்பிள் ,சாதத்தில் இந்த பொடியை போட்டு சாப்பிட வேண்டியது தான்.
  • இதை 'கொத்துமல்லி பொடி சாதம்' என்றும் சொல்லலாம்
  • மணமாக நல்லா இருக்கும்.

தக்காளி கான்சண்ட்ரேட்

Ingredients:
  • பங்களூர் தக்காளி 1/2 கிலோ
  • பச்சை மிளகாய் 15 - 20
  • இஞ்சி துருவினது 1 - 2 டேபிள் ஸ்பூன்
  • கடுகு 1 ஸ்பூன்
  • உளுந்து 1 ஸ்பூன்
  • கடலை பருப்பு 1 ஸ்பூன்
  • பெருங்காயம் 1/2 ஸ்பூன்
  • மஞ்சள் பொடி 1/2 ஸ்பூன்
  • வறுத்துப்பொடித்த வெந்தய பொடி 1/2 ஸ்பூன்
  • APP 4 - 5 ஸ்பூன்
  • எண்ணை தாளிக்க
  • உப்பு
  • கறிவேப்பிலை கொத்துமல்லி கொஞ்சம்


Method:
  • தக்காளிகளை நன்கு அலம்பி, விதைகள் நீக்கி, சின்ன சின்னதாக நறுக்கி வைக்கவும்.
  • பச்சைமிளகாய்களையும் அதே போல செய்யவும்.
  • வாணலி இல் எண்ணை விட்டு தாளிக்க கொடுத்தவைகளை போட்டு தாளிக்கவும்.
  • பின் பச்சைமிளகாய் இஞ்சி துருவல் போட்டு வதக்கவும்.
  • இப்போ தக்காளிகளை போடவும்.
  • பிறகு, பெருங்காயம், மஞ்சள் பொடி, வறுத்துப்பொடித்த வெந்தய பொடி மற்றும் உப்பு போட்டு வதக்கவும்.
  • அது நன்கு வதங்கினதும் APP போட்டு மீண்டும் நன்கு கிளறவும்.
  • கறிவேப்பிலை கொத்துமல்லி தூவி இறக்கவும்.
  • ஆறினதும் பாட்டிலில் எடுத்து வைக்கவும்.
  • ஃபிரிஜ் இல் வைத்திருந்தால் 6ஃப் மாசம் கூட வைத்துக்கொள்ளலாம்
  • தேவையான பொது எடுத்து சாதத்தில் கலந்து பரிமாறவு.
  • பொறித்த அப்பளம் மற்றும் உருளை சிப்ஸ் இதற்க்கு நல்லா இருக்கும்.
  • இல்லா விட்டால் 'வெங்காய ராய்த்தா ' செய்யலாம்.


Notes:
  • இதை செய்து வைத்துக்கொண்டால் எப்போது வேண்டுமானாலும் தக்காளி சாதம் கலக்கலாம். ரொம்ப சுலபம், மேலும் டிபன் பாக்ஸ் கட்ட ரொம்ப சௌகர்யமாக இருக்கும். பிக்னிக் செல்லும்போது கலந்து எடுத்துக்கலாம், மோர்சாதத்துக்கு தொட்டுக்கலாம், ஒட்சில் போடலாம் நிறைய விதமாக உபயோகிக்கக்கலாம் தக்காளி மலிவாக கிடைக்கும்போது தொக்கு செய்வது போல இதையும் செய்து வைத்துக்கொண்டால் நல்லது.
  • இதில் பச்சை மிளகாயுடன் மிளகு உடைத்து போடலாம். வேண்டுமானால் சில பற்கள் பூண்டு சேர்க்கலாம். ஒவ்வொரு முறை வேறு வேறு விதமாக செய்வதால் ருசி வேறு படும்.ஆனால் எல்லாமே நல்லா இருக்கும் .

சங்கராந்தி கூட்டு

Ingredients:
  • துவரம் பருப்பு 200 கிராம்
  • மேலே சொன்ன காய் ஏதாவது 7 அல்லது 9 எடுத்துக்கொள்ளவும்
  • துருவின தேங்காய் 1/2 கப்
  • APP 5 -6 டீ ஸ்பூன்
  • புளி பேஸ்ட் 4 டேபிள் ஸ்பூன்
  • எண்ணை ,உப்பு
  • கறிவேப்பிலை , தாளிக்க கடுகு
  • வறுத்து அரைத்த வெந்தய பொடி 1/2 ஸ்பூன்
  • மஞ்சள் பொடி கொஞ்சம்
  • பெருங்காயப்பொடி 1/4 ஸ்பூன்


Method:
  • மேலே சொன்ன ஏதாவது 7 அல்லது 9 எடுத்துக்கொண்டு , அலம்பி நறுக்கவும்.
  • அதை குக்கரில் துவரம் பருப்பு மற்றும் வேர்கடலை அல்லது கடலை பருப்புடன் வேகவைக்கவும.
  • உருளி இல் எண்ணை விட்டு கடுகு கறிவேப்பிலை தாளித்து, வெந்தகாய் மற்றும் பருப்பை கொட்டவும்.
  • அத்துடன் புளி பேஸ்ட், APP, உப்பு, பெருங்காயப்பொடி, தேங்காய் துருவல், மஞ்சள் பொடி எல்லாம் போட்டு கொதிக்க வீடவும்.
  • அப்பப்போ கிளறி விடவும்.
  • நன்கு கொதித்ததும் இறக்கவும்.
  • சுவையான 'சங்கராந்தி கூட்டு ' ரெடி
  • சர்க்கரை மற்றும் வெண்பொங்கலுடன் பரிமாறவும்.


Notes:
  • இந்த கூட்டுக்கும அதாவது புளிக்கூட்டுக்கு துவரம் பருப்பு தான் போடணும் இந்த கூட்டு செய்வதற்க்கு நிறைய காய்கறிகள் போடணும். சங்கராந்திக்கூட்டு என்பது, பொங்கலுக்கு செய்வது. அப்போ எல்லா கறிகாய்கள் கிழங்குகள் வரும் இல்லையா எல்லாம் போட்டு செய்யனும் மேலும் 7 , 9 என்று எண்ணி செய்யனும் பெங்களூர் கத்தரிகாய்எனப்படும் சௌ சௌ , கத்தரிக்காய், வெள்ளை பூசணிக்காய், மஞ்சள் பூசணிக்காய் அதாவது பரங்கிக்காய், உருளைக்கிழங்கு, சேப்பன் கிழங்கு, கேரட், பீன்ஸ், ஊறவைத்த கொத்த்துக்கடலை, பச்சை வேர்கடலை, டபுள் பீன்ஸ்.

புளிப்பு கூட்டு

Ingredients:
  • துவரம் பருப்பு 100 கிராம்
  • மேலே சொன்ன காய் ஏதாவது ஒன்று 1/4 கிலோ
  • கடலை பருப்பு 1 டேபிள் ஸ்பூன் அல்லது பச்சை வேர்கடலை 1 டேபிள் ஸ்பூன்.
  • துருவின தேங்காய் 2 டேபிள் ஸ்பூன்
  • APP 3 - 4 டீ ஸ்பூன்
  • புளி பேஸ்ட் 2 டேபிள் ஸ்பூன்
  • எண்ணை , உப்பு
  • கறிவேப்பிலை , தாளிக்க கடுகு
  • வறுத்து அரைத்த வெந்தய பொடி 1/2 ஸ்பூன்
  • மஞ்சள் பொடி கொஞ்சம்
  • பெருங்காயப்பொடி 1/4 ஸ்பூன்


Method:
  • மேலே சொன்ன ஏதாவது ஒரு காய் 1/4 கிலோ எடுத்துக்கொண்டு , அலம்பி நறுக்கவும்.
  • குக்கரில் துவரம் பருப்பு மற்றும் வேர்கடலை அல்லது கடலை பருப்புடன் வேகவைக்கவும.
  • உருளி இல் எண்ணை விட்டு கடுகு கறிவேப்பிலை தாளித்து, வெந்தகாய் மற்றும் பருப்பை கொட்டவும்.
  • அத்துடன் புளி பேஸ்ட், APP, உப்பு, பெருங்காயப்பொடி, தேங்காய் துருவல், மஞ்சள் பொடி எல்லாம் போட்டு கொதிக்க வீடவும்.
  • அப்பப்போ கிளறி விடவும். நன்கு கொதித்ததும் இறக்கவும்.
  • சுவையான 'புளிப்பு கூட்டு ' ரெடி
  • பொறித்த அப்பளம் அல்லது வத்தல் அல்லது உருளைக்கிழங்கு சிப்ஸுடன் பரிமாறவும்.


Notes:
  • இந்த கூட்டுக்கு அதாவது புளிக்கூட்டுக்கு துவரம் பருப்பு தான் போடணும் இந்த கூட்டு செய்வதற்க்கு பெங்களூர் கத்தரிகாய்எனப்படும் சௌ சௌ , கத்தரிக்காய், வெள்ளை பூசணிக்காய் போன்ற காய்களை உபயோகிக்கலாம்.

எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு

Ingredients:
  • சின்ன சின்ன கத்தரிகாய்கள் 1/2 கிலோ
  • APP தேவையான அளவு
  • புளி பேஸ்ட் 2 - 3 டேபிள் ஸ்பூன்
  • உப்பு
  • எண்ணை


Method:
  • கத்தரிக்காய்யை நன்கு அலம்பி துடைக்கவும்.
  • சரியாக காம்பை நறுக்கிவிட்டு , கத்தரிக்காயை நான்காக பிளந்துவைக்கவும்.
  • நறுக்கிவிடாதீர்கள். கூடாது கூடாது கூடாது
  • APP மற்றும் உப்பை கலந்து வைத்துக்கொண்டு, காய்களில் அடைக்கவும்.
  • ஒரு 10 -15 நிமிடங்கள் அப்படியே வைத்திருக்கவும்.
  • பிறகு வாணலி il எண்ணை வைத்து எல்லா காய்களையும் போடவும்.
  • புளி பேஸ்ட் சேர்த்து மெதுவாக கிளறி விடவும்.
  • அடுப்பை குறைந்த தணலில் வைக்கவும்.
  • கத்தரிக்காய்கள் வதங்க நேரம் ஆகும், எனவே பொறுமையாக , மெதுவாக கிளறிவிடுங்கள்.
  • எண்ணை அதிகம் இருந்தால் பார்க்க ரொம்ப அழகாக இருக்கும் இந்த குழம்பு
  • நல்ல ருசியாகவும் இருக்கும்.
  • வெளி இல் வைத்திருந்தாலே 2 நாள் வைத்துக்கொள்ளல்லாம் இதை.

எண்ணெய் கத்தரிக்காய் கறியமுது

Ingredients:
  • சின்ன சின்ன கத்தரிகாய்கள் 1/2 கிலோ
  • APP தேவையான அளவு
  • உப்பு
  • எண்ணை


Method:
  • கத்தரிக்காய்யை நன்கு அலம்பி துடைக்கவும்.
  • சரியாக காம்பை நறுக்கிவிட்டு , கத்தரிக்காயை நான்காக பிளந்துவைக்கவும்.
  • நறுக்கிவிடாதீர்கள்.
  • APP மற்றும் உப்பை கலந்து வைத்துக்கொண்டு, காய்களில் அடைக்கவும்.
  • ஒரு 10 -15 நிமிடங்கள் அப்படியே வைத்திருக்கவும்.
  • பிறகு வாணலி il எண்ணை வைத்து எல்லா காய்களையும் போடவும்.
  • மெதுவாக கிளறி விடவும்.
  • அடுப்பை குறைந்த தணலில் வைக்கவும்.
  • இந்த கறியமுது வதங்க நேரம் ஆகும் என்றாலும் ரொம்ப நால்லா இருக்கும்.
  • எண்ணை அதிகம் இருப்பது போல இருந்தால் கொஞ்சம் கடலை மாவு தூவி இறக்குங்கோ.

வாழைக்காய் பொடி போட்ட கறியமுது

Ingredients:
  • வாழைக்காய் 1/2 கிலோ
  • All Purpose powder 2 ஸ்பூன்
  • உப்பு
  • எண்ணை தேவையான அளவு
  • கடலை மாவு 2 டேபிள் ஸ்பூன்
  • பெருங்காயப்பொடி 1/4 ஸ்பூன்
  • கடுகு 1 ஸ்பூன்
  • உளுந்து 1 ஸ்பூன்


Method:
  • வாழைக்காய்யை அலம்பி சின்னதாக நறுக்கவும்.
  • வாணலி il எண்ணைவிட்டு கடுகு உளுத்தம் பருப்பும் போட்டு தாளிக்கணும்.
  • நறுக்கின வாழைக்காய்யை போடவும்.
  • நன்கு வதக்கவும்.
  • இப்போது பெருங்காயம் போடணும்.
  • கொஞ்சம் வதங்கினதும் உப்பு போட்டு நன்கு வதக்கவும்.
  • காய் நல்லா வதங்கினதும் APP போடவும்.
  • நன்கு கிளறி இறக்கவும்.
  • அருமையான 'வாழைக்காய் பொடி போட்ட கறியமுது' ரெடி.

உருளை பொடி போட்ட கறியமுது

Ingredients:
  • உருளைக்கிழங்கு 1/2 கிலோ
  • All Purpose powder 2 ஸ்பூன்
  • உப்பு
  • எண்ணை தேவையான அளவு
  • கடலை மாவு 2 டேபிள் ஸ்பூன்
  • பெருங்காயப்பொடி 1/4 ஸ்பூன்
  • கடுகு 1 ஸ்பூன்
  • உளுந்து 1 ஸ்பூன்


Method:
  • உருளைக்கிழங்கை அலம்பி சின்னதாக நறுக்கவும்.
  • வாணலி il எண்ணைவிட்டு கடுகு உளுத்தம் பருப்பும் போட்டு தாளிக்கணும்.
  • நறுக்கின உருளையை போடவும்.
  • நன்கு வதக்கவும்.
  • இப்போது பெருங்காயம் போடணும்.
  • கொஞ்சம் வதங்கினதும் உப்பு போட்டு நன்கு வதக்கவும்.
  • காய் நல்லா வதங்கினதும் APP போடவும்.
  • நன்கு கிளறி இறக்கவும்.
  • அருமையான 'உருளை பொடி போட்ட கறியமுது' ரெடி.
  • இதை தொட்டுக்கொள்ளலாம் அல்லது சாதத்தில் போட்டும் சாப்பிடலாம.
  • எங்க கிருஷ்ணாக்கு ரொம்ப பிடித்த கறியமுது இது .

கத்தரிக்காய் பொடி போட்ட கறியமுது

Ingredients:
  • கத்தரிக்காய் 1/2 கிலோ
  • All Purpose powder 2 ஸ்பூன்
  • உப்பு
  • எண்ணை தேவையான அளவு
  • கடலை மாவு 2 டேபிள் ஸ்பூன்
  • பெருங்காயப்பொடி 1/4 ஸ்பூன்
  • கடுகு 1 ஸ்பூன்
  • உளுந்து 1 ஸ்பூன்


Method:
  • கத்தரிக்காய்யை அலம்பி சின்னதாக நறுக்கவும்.
  • வாணலி il எண்ணைவிட்டு கடுகு உளுத்தம் பருப்பும் போட்டு தாளிக்கணும்.
  • நறுக்கின கத்தரிக்காயை போடவும்.
  • நன்கு வதக்கவும்.
  • இப்போது பெருங்காயம் போடணும்.
  • கொஞ்சம் வதங்கினதும் உப்பு போட்டு நன்கு வதக்கவும்.
  • காய் நல்லா வதங்கினதும் APP போடவும்.
  • நன்கு கிளறி இறக்கவும்.
  • அருமையான 'கத்தரிக்காய் பொடி போட்ட கறியமுது' ரெடி.
  • இதை தொட்டுக்கொள்ளலாம் அல்லது சாதத்தில் போட்டும் சாப்பிடலாம.
  • எங்க வீட்டில் இது எப்பவும் ஹிட்

ஃபலூடா

Ingredients:
  • சோள மாவு (corn flour ) - 1/4 கப்
  • சப்ஜா விதை - 1 டேபிள் ஸ்பூன்
  • வனிலா மற்றும் டூட்டி fruity ஐஸ்கிரீம் - 2
  • டூட்டி ஃரூட்டி - 2 டேபிள் ஸ்பூன்
  • செர்ரி - 2 டேபிள் ஸ்பூன்
  • முந்திரி - 2 டேபிள் ஸ்பூன்
  • பிஸ்தாம் பாதாம் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
  • சின்ன சின்னதாக வெறும் இனிப்பு சுவையுடன் இருக்கும் கலர் கலர் மிட்டாய்கள் ( படத்தை பார்க்கவும் புன்னகை)
  • பொடியாக நறுக்கிய கிஸ் மிஸ்
  • கடைகளில் கலர் கலராக கிடைக்கும் fruit ஜெல்லி - இதை நாம் சாப்பிடும் ஐஸ்கிரீம் ன் சுவைக்கு தகுந்தாற்போல தேர்ந்து எடுக்க வேண்டும்.
  • மேலே படத்தில் நான் பச்சை மட்டும் மஞ்சள் எடுத்துக் கொண்டுள்ளேன். அதில் மஞ்சள் கலர் ஜெல்லியை துண்டு துண்டாகவும், பச்சையை ஒரு பெரிய துண்டாகவும் வைத்துள்ளேன் புன்னகை
  • ஒரு tray ஐஸ் cubes .


Method:
  • முதலில் சப்ஜா விதையை 30 நிமிடங்கள் தண்ணீரில் ஊற வைத்து வடிகட்டி கொள்ளவும்.
  • ஒரு பாத்திரத்தில் அரை கப் தண்ணீர் விட்டு நன்கு கொதிக்க வைக்கவும்.
  • அதில் சோள மாவைப் போட்டு கிளறவும்.
  • அதை அப்படியே சூட்டுடன் எடுத்து, முறுக்கு அச்சில், ஓமப்பொடி தட்டு போட்டு வைத்துக்கொள்ளவும்.
  • ஐஸ் cubes களை ஒரு பெரிய பேசினில் போட்டுக்கொண்டு, அச்சில் உள்ள மாவை, அதன் மேல் பிழியவும்.
  • அவை உடனே கெட்டிகாக , வெந்த சேமியா போல மாறிவிடும்.
  • அதை அப்படியே எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு பெரிய கண்ணாடி தம்ளரில் , அல்லது உயரமான கண்ணாடி டம்ளரில் முதலில் டூட்டி ஃப்ரூட்டியை போட்டு அதன் மேல் பிழிந்து வைத்துள்ள சேமியா, சப்ஜா விதை, ஐஸ்கிரீம், என ஒவ்வொன்றாக போட்டுக்கொண்டே வரவும். கடைசி இல் மேலே அழகாக ஒரு செர்ரி வைத்து, பொடித்த பிஸ்தா அல்லது பாதாம் பருப்பு தூவி பரிமாறவும்.
  • மிகவும் அருமையாக இருக்கும்.
  • கடைகளில் வாங்குவதை விட இது நல்லாவே இருக்கும்.
  • அழகிற்காக மேலும், 2 வேபர் பிஸ்கேட்டுகளை வைத்தேன் !

Images:








குல்பி 3

Ingredients:
  • 1 லிட்டர் கொழுப்பு நீக்கபடாத பால் ( பாதியாகும்படி சுண்டக் காய்ச்சவும் )
  • 1 ஸ்லைஸ் பிரட்
  • 1 டின் மில்க் மெய்டு ( கண்டென்ஸ்டு மில்க் )
  • 1/2 டீ ஸ்பூன் ஏலக்காய் பொடி
  • 4 -5 டேபிள் ஸ்பூன் கேசர் பாதாம் காம்ப்ளான்
  • 4 டேபிள் ஸ்பூன் பிஸ்தா ,பாதாம் மற்றும் முந்திரி துண்டுகள்.


Method:
  • ஆழமான பாத்திரத்தில் பாலை விட்டு கொதிக்கவிடவும்.
  • பிரட் ஐ மக்சி இல் போட்டு தூளாக்கவும் .
  • பால் பாதியானதும் அடுப்பை தணித்துவிட்டு, பொடித்து வைத்துள்ள பிரட் ஐ போடவும்.
  • நன்கு கைவிடாமல் கிளறவும்.
  • கண்டிப்பாக கட்டி தட்ட விடக் கூடாது.
  • 4 -5 நிமிடங்கள் கொதிக்க விடவும்.
  • காம்ப்ளான் ஐ கொஞ்சம் பால் விட்டு கரைத்து கோடிக்கும் பாலில் விடவும்.
  • கைவிடாமல் கிளறவும் .
  • condensed மில்க் சேர்க்கவும்; ஒரு கொதி வந்ததும் அடுப்பை அணைத்து விடவும் .
  • நல்லா ஆறினதும் குல்பி மோல்ட் அல்லது கப் களில் விட்டு ப்ரீசர் இல் வைக்கவும்.
  • 5 -6 மணிநேரம் கழித்து சாப்பிடலாம் .

குல்பி 2

Ingredients:
  • 1 லிட்டர் கொழுப்பு நீக்கபடாத பால் ( பாதியாகும்படி சுண்டக் காய்ச்சவும் )
  • 1 ஸ்லைஸ் பிரட்
  • 1 டின் மில்க் மெய்டு ( கண்டென்ஸ்டு மில்க் )
  • 1/2 டீ ஸ்பூன் ஏலக்காய் பொடி
  • 4 டேபிள் ஸ்பூன் பிஸ்தா ,பாதாம் மற்றும் முந்திரி துண்டுகள்.


Method:
  • ஆழமான பாத்திரத்தில் பாலை விட்டு கொதிக்கவிடவும்.
  • பிரட் ஐ மக்சி இல் போட்டு தூளாக்கவும் .
  • பால் பாதியானதும் அடுப்பை தணித்துவிட்டு, பொடித்து வைத்துள்ள பிரட் ஐ போடவும்.
  • நன்கு கைவிடாமல் கிளறவும்.
  • கண்டிப்பாக கட்டி தட்ட விடக் கூடாது.
  • 4 -5 நிமிடங்கள் கொதிக்க விடவும்.
  • condensed மில்க் சேர்க்கவும்; ஒரு கொதி வந்ததும் அடுப்பை அணைத்து விடவும் .
  • நல்லா ஆறினதும் குல்பி மோல்ட் அல்லது கப் களில் விட்டு ப்ரீசர் இல் வைக்கவும்.
  • 5 -6 மணிநேரம் கழித்து சாப்பிடலாம் .


Notes:
  • இந்த போட்டோ தான் நான் மேலே போட்டிருப்பது.

குல்பி

Ingredients:
  • 1 லிட்டர் கொழுப்பு நீக்கபடாத பால் ( பாதியாகும்படி சுண்டக் காய்ச்சவும் )
  • 1/2 கப் பால் பவுடர்
  • 2 -3 டேபிள் ஸ்பூன் ப்ரெஷ் கிரீம்
  • 1 டின் மில்க் மெய்டு ( கண்டென்ஸ்டு மில்க் )
  • 1/2 டீ ஸ்பூன் ஏலக்காய் பொடி
  • 4 டேபிள் ஸ்பூன் பிஸ்தா ,பாதாம் மற்றும் முந்திரி துண்டுகள்
  • 1 டின் (150 கிராம் ) cool whip (available in the super markets frozen dairy section.) (தேவையானால் )


Method:
  • மேலே சொன்ன எல்லாவற்றையும் ஒரு பாத்திரத்தில் விட்டு ,
  • மத்து அல்லது எலெக்டிரிகல் blender முலம் 5 - 7 நிமிடங்கள் வரை கடையவும்.
  • பிறகு 'குல்பி' மோல்ட் களில் விட்டு 8 -10 மணிநேரம் பிரீசெர் இல் வைக்கவும்.
  • எடுத்து பரிமாறும் போது, குல்பி மோல்ட் ஐ குழாய்க்கு நேரே சில வினாடிகள் பிடிக்கவும் , உள்ளே இருக்கும் ஐஸ் கொஞ்சம் உருகும், அப்போது தட்டில் தட்டி , வெட்டி தரவும்.
  • சுவையான 'குல்பி' தயார்


Notes:
  • மேலே சொன்ன cool whip இல்லாமலும் இதே முறை இல் குல்பி செய்யாலாம். நல்லா வரும்.

பட்டர் ஸ்காட்ச்

Ingredients:
  • பேசிக் ஐஸ் கிரீம் 2 கப்
  • yellow கலர் கொஞ்சம்
  • உடைத்த பாதாம் , முந்திரி, பிஸ்த, வால்நட் , வேர்கடலை 1/2 கப்
  • caramel கொஞ்சம்
  • வனிலா எசென்ஸ் 1/2 ஸ்பூன்


Method:
  • பேசிக் ஐஸ் கிரீமை மிக்சி இல் அரைக்கும் அதில் உடைத்த பருப்புகள், கலர் மற்றும் எசென்ஸ் போட்டு ஒரு சுற்றுசுற்றி, நன்கு கலக்கவும்.
  • அதில் caramel ஐ உடைத்து போடவும்.
  • பிறகு நன்கு கலக்கவும்.
  • செட் ஆனதும் பரிமாறவும்.
  • caramel செய்முறை :
  • வாணலி இல் 1/2 கப் சர்க்கரையை போடவும்.
  • அது உருகி கொஞ்சம் பிரவுன் ஆக ஆகும் போது நன்கு கிளறி கடப்பா ஸ்லாப் மேல் ( அழுக்கில்லாத சமையல் மேடை மேல்) கொட்டிக்கவும்; அல்லது மாவு தூவிய தட்டில் கொட்டவும்.
  • நன்கு ஆறினதும் துண்டங்களாக உடைத்துக்கொள்ளவும் .

ஸ்ட்ராபெரி ஐஸ் கிரீம்

Ingredients:
  • பேசிக் ஐஸ் கிரீம் 2 கப்
  • பிங்க் அல்லது இளம் சிவப்பு கலர் கொஞ்சம்
  • ஸ்ட்ராபெரிஸ் - துண்டங்கள் 1 கப்
  • ஸ்ட்ராபெரி எசென்ஸ் 1 ஸ்பூன்


Method:
  • பேசிக் ஐஸ் கிரீமை மிக்சி இல் அரைக்கும் அதில் ஸ்ட்ராபெரிஸ் துண்டங்கள் மற்றும் எசென்ஸ் போட்டு ஒரு சுற்றுசுற்றி, நன்கு கலந்து ப்ரீசர் இல் வைக்கவும்.
  • செட் ஆனதும் பரிமாறவும்.

பிஸ்தா ஐஸ் கிரீம்

Ingredients:
  • பேசிக் ஐஸ் கிரீம் 2 கப்
  • கிரீன் கலர் கொஞ்சம்
  • தூளாக்கப்பட்ட பிஸ்தா மற்றும் முந்திரி - 1/2 cup


Method:
  • பேசிக் ஐஸ் கிரீமை மிக்சி இல் அரைக்கும் அதில் உடைத்த பருப்புகளையும் போட்டு ஒரு சுற்றுசுற்றி, நன்கு கலந்து ப்ரீசர் இல் வைக்கவும்.
  • செட் ஆனதும் பரிமாறவும்.
  • ஒரு முழு முந்திரி அல்லது பிஸ்தாவை கூட மேல வைத்து பரிமாறலாம்.

பீச்- 'அப்ரிகாட்' ஐஸ் கிரீம்

Ingredients:
  • பேசிக் ஐஸ் கிரீம் 2 கப்
  • 'பீச் ' பழங்கள் - அல்லது ' அப்ரிகாட்' பழங்கள் (கோட்டையை எடுக்கவும்; துண்டுகளாக்கவும்)
  • தூளாக்கப்பட்ட சர்க்கரை 1/2 கப்
  • yellow கலர் 1 சிட்டிகை


Method:
  • பேசிக் ஐஸ் கிரீமை மிக்சி இல் அரைத்தபின் துண்டாக்கிய பழங்களை போட்டு நன்கு கலக்கவும்.
  • மசித்தார்போல கலக்கவும்.
  • பிறகு அதில் தூளாக்கப்பட்ட சர்க்கரை, மஞ்சள் கலர் போட்டு கலந்து ப்ரீசர் இல் வைக்கவும்.
  • செட் ஆனதும் பரிமாறவும்.

கிர்ணி பழ ஐஸ் கிரீம்

Ingredients:
  • பேசிக் ஐஸ் கிரீம் 2 கப்
  • கிர்ணி பழக்கூழ் 1 கப்
  • வெனிலா எசன்ஸ் 1 டீ ஸ்பூன்
  • தூளாக்கப்பட்ட சர்க்கரை 1/2 கப்


Method:
  • பேசிக் ஐஸ் கிரீமை மிக்சி இல் அரைக்கும் போது கிர்ணி பழக்கூழ் போட்டு ஒரு சுற்று சுற்றவும்.
  • பிறகு அதில் தூளாக்கப்பட்ட சர்க்கரை மற்றும் எசென்ஸ் போட்டு கலந்து ப்ரீசர் இல் வைக்கவும்.
  • செட் ஆனதும் பரிமாறவும்.
  • அவ்வளவு தான் கிர்ணி பழ ஐஸ் கிரீம் தயார்.

மாம்பழ ஐஸ் கிரீம்

Ingredients:
  • பேசிக் ஐஸ் கிரீம் 2 கப் ( பேசிக் ஐஸ் கிரீம் கான ரெசிப் இதோ )
  • மாம்பழக்கூழ் 1 கப்
  • மாம்பழ எசன்ஸ் 1 டீ ஸ்பூன்
  • தூளாக்கப்பட்ட சர்க்கரை 1/2 கப்
  • yellow கலர் 1 சிட்டிகை.


Method:
  • பேசிக் ஐஸ் கிரீமை மிக்சி இல் அரைக்கும் போது மாம்பழக்கூழ் போட்டு ஒரு சுற்று சுற்றவும்.
  • பிறகு அதில் தூளாக்கப்பட்ட சர்க்கரை, மஞ்சள் கலர் மற்றும் எசென்ஸ் போட்டு கலந்து ப்ரீசர் இல் வைக்கவும்.
  • செட் ஆனதும் பரிமாறவும்.
  • அவ்வளவு தான் மாம்பழ ஐஸ் கிரீம் தயார் .

லிச்சிஸ் ஐஸ் கிரீம்

Ingredients:
  • பேசிக் ஐஸ் கிரீம் 2 கப்
  • லிச்சீஸ் 1 கப்
  • தூளாக்கப்பட்ட பாதாம், பிஸ்தா மற்றும் முந்திரி - 1 டேபிள் ஸ்பூன்


Method:
  • பேசிக் ஐஸ் கிரீமை மிக்சி இல் அரைக்கும் போது லிச்சிசும் போட்டு ஒரு சுற்று சுற்றவும்.
  • பிறகு அதில் உடைத்த பருப்புகளையும் போட்டு கலந்து ப்ரீசர் இல் வைக்கவும்.
  • செட் ஆனதும் பரிமாறவும்.
  • தேவையானால், முழு லிச்சி ஒன்றை பரிமாறும் கப்பில் வைத்து தரவும்.
  • ஒரு முழு முந்திரி அல்லது பிஸ்தாவை கூட மேல வைத்து பரிமாறலாம்.
  • அவ்வளவு தான் லிச்சிஸ் ஐஸ் கிரீம் தயார்.

வெனிலா ஐஸ் கிரீம்

Ingredients:
  • 1 லிட்டர் கொழுப்பு நீக்கப்படாத பால்
  • 2 1/2 டீ ஸ்பூன் சோள மாவு
  • 3/4 கப் சக்கரை
  • 1 கப் ப்ரெஷ் கிரீம்
  • 1 டீ ஸ்பூன் வெனிலா எசன்ஸ்
  • 1/2 கப் கொழுப்பு நீக்கப்படாத பால்


Method:
  • முதலில் 1/2 கப் பாலில் சோளமாவை கரைத்து வைக்கவும்.
  • ஆழமான பாத்திரத்தில் பாலை விட்டு கொதிக்கவிடவும்..
  • சர்க்கரை சேர்க்கவும்; அப்பப்போ கிளறிவிடவும்.
  • பால் பாதியானதும் அடுப்பை தணித்துவிட்டு, கரைத்து வைத்துள்ள மாவை விடவும்.
  • நன்கு கைவிடாமல் கிளறவும்.
  • கண்டிப்பாக கட்டி தட்ட விடக் கூடாது.
  • 4 -5 நிமிடங்கள் கொதிக்க விடவும்.
  • பிறகு அடுப்பை அணைத்து விடவும் .
  • நல்லா ஆறினதும் ஒரு பாத்திரத்தில் விட்டு ப்ரீசர் இல் வைக்கவும்.
  • ஒரு 2 மணிநேரம் கழித்து, வெளியே எடுத்து மிக்சி இல் ஒரு சுற்று சுற்றி எடுத்து கிரீம் மற்றும் எசென்ஸ் சேர்க்கவும்.
  • நன்கு கலக்கி மீண்டும் பிரீசெர் இல் வைக்கவும்; நன்கு செட் ஆகும் வரை.
  • அவ்வளவுதான் சூப்பர் வெனிலா ஐஸ் கிரீம் is ready to serve !


Notes:
  • இன்னும் மெத் என்கிற ஐஸ் கிரீம் வேண்டுமானால், மில்க் பிரட் 4 slice எடுத்து , ஓரங்களை நீக்கி விட்டு நடு பாகத்தை , மிக்சி இல் பாதி ஆகி இருந்த ஐஸ் கிரீம் ஐ அடிக்கும்போது கூட போட்டு அடிக்கவேண்டும். இப்படி செய்வதால் ஐஸ் கிரீம் மெத் என்று வரும்.

பேசிக் ஐஸ் கிரீம் 2

Ingredients:
  • 1 லிட்டர் கொழுப்பு நீக்கப்படாத பால்
  • 2 1/2 டீ ஸ்பூன் சோள மாவு
  • 3/4 கப் சக்கரை
  • 1 கப் ப்ரெஷ் கிரீம்
  • 1/2 கப் கொழுப்பு நீக்கப்படாத பால்
  • 1/2 டின் condensed மில்க் ( milk maid போல )


Method:
  • முதலில் 1/2 கப் பாலில் சோளமாவை கரைத்து வைக்கவும்.
  • ஆழமான பாத்திரத்தில் பாலை விட்டு கொதிக்கவிடவும்..
  • சர்க்கரை சேர்க்கவும்; அப்பப்போ கிளறிவிடவும்.
  • பால் பாதியானதும் அடுப்பை தணித்துவிட்டு, கரைத்து வைத்துள்ள மாவை விடவும்..
  • நன்கு கைவிடாமல் கிளறவும்.
  • கண்டிப்பாக கட்டி தட்ட விடக் கூடாது.
  • 4 -5 நிமிடங்கள் கொதிக்க விடவும்.
  • condensed மில்க் சேர்க்கவும்; ஒரு கொதி வந்ததும் அடுப்பை அணைத்து விடவும் .
  • நல்லா ஆறினதும் ஒரு பாத்திரத்தில் விட்டு ப்ரீசர் இல் வைக்கவும்.
  • ஒரு 2 மணிநேரம் கழித்து, வெளியே எடுத்து மிக்சி இல் ஒரு சுற்று சுற்றி எடுத்து கிரீம் சேர்க்கவும்.
  • நன்கு கலக்கி மீண்டும் பிரீசெர் இல் வைக்கவும்; நன்கு செட் ஆகும் வரை.


Notes:
  • இன்னும் மெத் என்கிற ஐஸ் கிரீம் வேண்டுமானால், மில்க் பிரட் 4 slice எடுத்து , ஓரங்களை நீக்கி விட்டு நடு பாகத்தை , மிக்சி இல் பாதி ஆகி இருந்த ஐஸ் கிரீம் ஐ அடிக்கும்போது கூட போட்டு அடிக்கவேண்டும். இப்படி செய்வதால் ஐஸ் கிரீம் மெத் என்று வரும்.

பேசிக் ஐஸ் கிரீம்

Ingredients:
  • 1 லிட்டர் கொழுப்பு நீக்கப்படாத பால்
  • 2 1/2 டீ ஸ்பூன் சோள மாவு
  • 3/4 கப் சக்கரை
  • 1 கப் ப்ரெஷ் கிரீம்
  • 1/2 கப் கொழுப்பு நீக்கப்படாத பால்


Method:
  • முதலில் 1/2 கப் பாலில் சோளமாவை கரைத்து வைக்கவும்.
  • ஆழமான பாத்திரத்தில் பாலை விட்டு கொதிக்கவிடவும்..
  • சர்க்கரை சேர்க்கவும்; அப்பப்போ கிளறிவிடவும்.
  • பால் பாதியானதும் அடுப்பை தணித்துவிட்டு, கரைத்து வைத்துள்ள மாவை விடவும்.
  • நன்கு கைவிடாமல் கிளறவும்.
  • கண்டிப்பாக கட்டி தட்ட விடக் கூடாது.
  • 4 -5 நிமிடங்கள் கொதிக்க விடவும்.
  • பிறகு அடுப்பை அணைத்து விடவும் .
  • நல்லா ஆறினதும் ஒரு பாத்திரத்தில் விட்டு ப்ரீசர் இல் வைக்கவும்.
  • ஒரு 2 மணிநேரம் கழித்து, வெளியே எடுத்து மிக்சி இல் ஒரு சுற்று சுற்றி எடுத்து கிரீம் சேர்க்கவும்.
  • நன்கு கலக்கி மீண்டும் பிரீசெர் இல் வைக்கவும்; நன்கு செட் ஆகும் வரை.


Notes:
  • இன்னும் மெத் என்கிற ஐஸ் கிரீம் வேண்டுமானால், மில்க் பிரட் 4 slice எடுத்து , ஓரங்களை நீக்கி விட்டு நடு பாகத்தை , மிக்சி இல் பாதி ஆகி இருந்த ஐஸ் கிரீம் ஐ அடிக்கும்போது கூட போட்டு அடிக்கவேண்டும். இப்படி செய்வதால் ஐஸ் கிரீம் மெத் என்று வரும்.

மலபார் அவியல் - தயிர் இல்லாத அவியல்

Ingredients:
  • உ.கிழங்கு – 1
  • சேனைக்கிழங்கு -1 துண்டு
  • பூசணிக்காய் – 1 துண்டு
  • சௌ சௌ - 1/2
  • பீன்ஸ் – 4
  • காரட் – 1
  • வாழைக்காய் – 1 சிறியது
  • ப.மிளகாய் – 5 -6
  • தேங்காய் துருவல் – 4 டேபிள் ஸ்பூன்
  • சீரகம் – 1 ஸ்பூன்
  • உப்பு – 1 ஸ்பூன்
  • தேங்காய் எண்ணை 1 டேபிள் ஸ்பூன்


Method:
  • எல்லாக் காய்கறிகளையும் 1 இன்ச் நீளத்திற்கு வெட்டி வைத்துக் கொள்ளவும்.
  • சிறிது மஞ்சள் பொடி சேர்த்து காய் மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு வேக விடவும்.
  • பாதி வெந்தவுடன் உப்பு போட்டு கிளறி விடவும்.
  • தண்ணீரை வடிய விடக்கூடாது.
  • தேங்காய், பச்சை மிளகாய், சீரகத்தை அரைத்துக் கொள்ளவும்.
  • அரை வேக்காடாக இருக்கும் போது, தேங்காய் அரைத்த விழுதை அத்துடன் சேர்த்துக் கொள்ளவும்.
  • நன்கு வெந்தது ‘திக்’கானதும், தேங்காய் எண்ணெயை விட்டு இறக்கி வைத்து வைக்கவும்.
  • 'அவியல்' ரெடி.


Notes:
  • பொதுவாக தனக்கு என்று தனி வாசனை இல்லாத காய்களை இதில் போடலாம் சிலர் கொத்தவரை கூட போடுவார்கள் .

ரசவாங்கி கத்தரிக்காய் ரசவாங்கி

Ingredients:
  • துவரம் பருப்பு 100 கிராம்
  • பிஞ்சு கத்தரிக்காய் 1/4 கிலோ
  • கடலை பருப்பு 1 டேபிள் ஸ்பூன் அல்லது பச்சை வேர்கடலை 1 டேபிள் ஸ்பூன்.
  • துருவின தேங்காய் 2 டேபிள் ஸ்பூன்
  • APP 3 - 4 டீ ஸ்பூன்
  • புளி பேஸ்ட் 2 டேபிள் ஸ்பூன்
  • எண்ணை
  • உப்பு
  • கறிவேப்பிலை
  • தாளிக்க கடுகு
  • வறுத்து அரைத்த வெந்தய பொடி 1/2 ஸ்பூன்
  • மஞ்சள் பொடி கொஞ்சம்
  • பெருங்காயப்பொடி 1/4 ஸ்பூன்


Method:
  • கத்தரிக்காயை அலம்பி நறுக்கவும்.
  • குக்கரில் துவரம் பருப்பு மற்றும் வேர்கடலை அல்லது கடலை பருப்புடன் வேகவைக்கவும்..
  • உருளி இல் எண்ணை விட்டு கடுகு கறிவேப்பிலை தாளித்து, வெந்தகாய் மற்றும் பருப்பை கொட்டவும்.
  • அத்துடன் புளி பேஸ்ட், APP, உப்பு, பெருங்காயப்பொடி, தேங்காய் துருவல், மஞ்சள் பொடி எல்லாம் போட்டு கொதிக்க வீடவும்.
  • அப்பப்போ கிளறி விடவும்.
  • நன்கு கொதித்ததும் இறக்கவும்.
  • சுவையான 'கத்தரிக்காய் ரசவாங்கி ' ரெடி
  • பொறித்த அப்பளம் அல்லது வத்தல் அல்லது உருளைக்கிழங்கு சிப்ஸுடன் பரிமாறவும்.


Notes:
  • பொதுவாக இதை பாகற்காய் இல் மட்டும் தான் செய்வது வழக்கம்....ஒருவேளை கத்தரிக்காய் இல் செய்தால் அதன் பேர் 'ரசவாங்கி' / 'கத்தரிக்காய் ரசவாங்கி' ...அதன் குறிப்பு மேலே கொடுத்துள்ளேன்

பிட்லை பாகற்காய் பிட்லை

Ingredients:
  • துவரம் பருப்பு 200 கிராம்
  • பாகற்காய் 250 கிராம்
  • துருவின தேங்காய் 1/2 கப் ( சிவக்க வறுத்து வைத்துக்கொள்ளவும் )
  • APP 5 -6 டீ ஸ்பூன்
  • புளி பேஸ்ட் 4 டேபிள் ஸ்பூன்
  • கடலை பருப்பு அல்லது பச்சை வேர்கடலை 1 கை பிடி அளவு
  • எண்ணை
  • உப்பு
  • கறிவேப்பிலை
  • தாளிக்க கடுகு
  • வறுத்து அரைத்த வெந்தய பொடி 1/2 ஸ்பூன்
  • மஞ்சள் பொடி கொஞ்சம்
  • பெருங்காயப்பொடி 1/4 ஸ்பூன்


Method:
  • முதலில் பாகற்காய் யை அலம்பி நறுக்கவும்.
  • கொட்டைகளை நீக்கவும்.
  • உப்பு போட்டு பிசிறி வைக்கவும்.
  • 10- 15 நிமிடம் கழித்து நன்கு பிழிந்து அதை குக்கரில் துவரம் பருப்பு மற்றும் வேர்கடலை அல்லது கடலை பருப்புடன் வேகவைக்கவும.
  • உருளி இல் எண்ணை விட்டு கடுகு கறிவேப்பிலை தாளித்து, வெந்தகாய் மற்றும் பருப்பை கொட்டவும்.
  • அத்துடன் புளி பேஸ்ட், APP, உப்பு, பெருங்காயப்பொடி, மஞ்சள் பொடி, வெந்தய பொடி எல்லாம் போட்டு கொதிக்க வீடவும்.
  • அப்பப்போ கிளறி விடவும்.
  • நன்கு கொதித்ததும், வறுத்து வைத்த தேங்காயை தூவி ,கிளறி இறக்கவும்.
  • சுவையான 'பாகற்காய் பிட்லை' ரெடி


Notes:
  • பொதுவாக இதை பாகற்காய் இல் மட்டும் தான் செய்வது வழக்கம்....ஒருவேளை கத்தரிக்காய் இல் செய்தால் அதன் பேர் 'ரசவாங்கி' / 'கத்தரிக்காய் ரசவாங்கி' ...அதன் குறிப்பு மேலே கொடுத்துள்ளேன்.
  • பாகற்காய்ல உப்பு போட்டுள்ளதால் 'பிட்லைக்கு' போடும்போது பார்த்து போடவும்.

புளிக்கூட்டு பொடி

Ingredients:
  • 500gm தனியா
  • 500gm கடலை பருப்பு
  • 250gm குண்டு மிளகாய்
  • பெருங்காயம் - ஒரு சின்ன துண்டு
  • கொஞ்சம் எண்ணெய் (அரை ஸ்பூன் )


Method:
  • பெருங்காயத்தை துளி எண்ணெயில் பொரிக்கவும்.
  • தனி எ எடுத்துவைக்கவும்
  • அதே வாணலில் மற்றவற்றை போட்டு கருகாமல் வறுக்கவும்.
  • நன்கு ஆறினதும் மிக்சியில் போட்டு பொடிக்கவும்.
  • உங்கள் APP தயார்.


Notes:
  • ரொம்ப அருமையான recipe இது. எங்க வீட்டிலும் எங்க உறவினர் மற்றும் நண்பர்கள் வட்டாரத்திலும் மிகவும் பிரபலம்.
  • முதலில் பொடி செய்யும் முறையை பார்போம். இதை நான் APP - that is 'ALL PURPOSE POWDER' என் அழைப்பது வழக்கம். இதை கொண்டு புளிப்பு கூட் மட்டும் அல்லாமல் பல டிஷ் கள் தயாரிக்கலாம்.
  • இந்த பொடி யை கொண்டு திடீர் புளியோதரை , புளி கூட்டு , அரைத்துவிட்ட சாம்பார், கத்தரிக்காய் எண்ணெய் குழம்பு , உருளை, வாழை மற்றும் கத்தரிகாய் பொடி போட்ட காய், தக்காளி சாதம் இன்னும் பல dish கள் செய்யலாம்.

அவல் லட்டு

Ingredients:
  • கெட்டி அவல் ஒரு கப்
  • சர்க்கரை முக்கால் கப்
  • ஏலக்காய் பொடி கால் டீ ஸ்பூன்
  • நெய் அரை முதல் முக்கால் கப்
  • உடைத்த முந்திரி ஒரு டேபிள் ஸ்பூன்


Method:
  • அவலை சுத்தம் செய்து கொள்ளவும்.
  • வறட்டு வாணலி இல் நன்கு வறுக்கவும்.
  • கொஞ்சம் வறுபட ஆரம்பிக்கும் போது, நெய் ஒரு ஸ்பூன் விட்டு வறுக்கவும்.
  • நன்கு பொரிந்து வறுபடும்.
  • தேவையானால் இன்னும் ஒரு ஸ்பூன் விடவும்.
  • காந்தாமல் நன்கு வறுக்கவும்.
  • வறுத்ததை ஒரு தட்டில் கொட்டி ஆறவிடவும்.
  • அவல் நன்கு ஆறினதும், சர்க்கரை, ஏலப்பொடி மற்றும் அவல் எல்லாவற்றையும் மிக்சி இல்போட்டு நன்கு பொடிக்கவும் .
  • பொடித்த அவலை ஒரு பேசினில் போட்டுக்கொண்டு, வாணலி இல் நெய் விட்டு முந்திரியை வறுத்து இதன் மேல் கொட்டவும்.
  • நன்கு கலந்து லட்டுகளாக பிடிக்கவும்.
  • அவ்வளவுதான் சுவையான 'அவல் லட்டுகள்' தயார்.
  • செய்வதும் சுலபம் உண்பதும் சுலபம்.

Images:


அவல் லட்டு

Ingredients:
  • கெட்டி அவல் ஒரு கப்
  • சர்க்கரை முக்கால் கப்
  • ஏலக்காய் பொடி கால் டீ ஸ்பூன்
  • நெய் அரை முதல் முக்கால் கப்
  • உடைத்த முந்திரி ஒரு டேபிள் ஸ்பூன்


Method:
  • அவலை சுத்தம் செய்து கொள்ளவும்.
  • வறட்டு வாணலி இல் நன்கு வறுக்கவும்.
  • கொஞ்சம் வறுபட ஆரம்பிக்கும் போது, நெய் ஒரு ஸ்பூன் விட்டு வறுக்கவும்.
  • நன்கு பொரிந்து வறுபடும்.
  • தேவையானால் இன்னும் ஒரு ஸ்பூன் விடவும்.
  • காந்தாமல் நன்கு வறுக்கவும்.
  • வறுத்ததை ஒரு தட்டில் கொட்டி ஆறவிடவும்.
  • அவல் நன்கு ஆறினதும், சர்க்கரை, ஏலப்பொடி மற்றும் அவல் எல்லாவற்றையும் மிக்சி இல்போட்டு நன்கு பொடிக்கவும் .
  • பொடித்த அவலை ஒரு பேசினில் போட்டுக்கொண்டு, வாணலி இல் நெய் விட்டு முந்திரியை வறுத்து இதன் மேல் கொட்டவும்.
  • நன்கு கலந்து லட்டுகளாக பிடிக்கவும்.
  • அவ்வளவுதான் சுவையான 'அவல் லட்டுகள்' தயார்.
  • செய்வதும் சுலபம் உண்பதும் சுலபம்.

Images:


அவல் கேக்

Ingredients:
  • கெட்டி அவல் 1 கப்
  • சக்கரை 3/4 கப்
  • ஏலப்பொடி 1/3 ஸ்பூன்
  • நெய் 1 டேபிள் ஸ்பூன்
  • பால் 1 கப்


Method:
  • அவலை சுத்தம் செய்து கொள்ளவும்.
  • வறட்டு வாணலி இல் நன்கு வறுக்கவும்.
  • கொஞ்சம் வறுபட ஆரம்பிக்கும் போது, நெய் ஒரு ஸ்பூன் விட்டு வறுக்கவும்.
  • நன்கு பொரிந்து வறுபடும்.
  • தேவையானால் இன்னும் ஒரு ஸ்பூன் விடவும்.
  • காந்தாமல் நன்கு வறுக்கவும்.
  • வறுத்ததை ஒரு தட்டில் கொட்டி ஆறவிடவும்.
  • அவல் நன்கு ஆறினதும், சர்க்கரை, ஏலப்பொடி மற்றும் அவல் எல்லாவற்றையும் மிக்சி இல்போட்டு நன்கு பொடிக்கவும் .
  • பொடித்த அவலை ஒரு பேசினில் போட்டுக்கொண்டு அதன் மேல் சூடான பாலைவிடவும்.
  • அப்படியே ஒரு அரைமணி வைத்திருக்கவும்.
  • நன்கு ஆறினதும் வில்லைகள் போடவும்.
  • நிஜமாக சொல்கிறேன் மிகவும் அருமையாக இருக்கும்.
  • பால் இருப்பதால் பிரிட்ஜில் வைத்து உபயோகிக்கவும்.
  • செய்து பார்த்து எழுதவும்.

Images:




உப்பு பாதாம்

Ingredients:
  • 1 கப் பாதாம்
  • 1 பாக்கெட் சால்ட்


Method:
  • அடுப்பில் வாணலி இல் உப்பு மொத்தம் கொட்டி நன்கு வறுக்கவும்.
  • அது நல்ல சூடாகும்வரை வறுக்கவும் .
  • கிட்ட த்தட்ட 5 முதல் 7 நிமிடங்கள் ஆகும்.
  • பொறுமையாக வறுக்கவும்.
  • நடுவில் ஒரு ஸ்பூன் உப்பு எடுத்து இரண்டு ஸ்பூன் தண்ணீர் விட்டு கரைத்து பாதாமை அதில் போட்டு, உப்பு நீர் எல்லா பாதாமிலும் நன்கு பரவும்படி கலந்து வைக்கவும்.
  • இது சுமார் 3 நிமிடங்கள் ஊறலாம்.
  • இப்போது தண்ணீர் இல்லாமல் பாதாமை மட்டும் எடுத்து உப்பில் போடுங்கள்.
  • அடுப்பை கொஞ்சம் சின்னதாக்கவும்.
  • இப்போது உப்புடன் பாதாமையும் நன்கு வறுக்கவும்.
  • இதை கைவிடாமல் இரண்டு நிமிடங்கள் வறுக்கவும்.
  • பாதாம் பூரித்து , உப்பி வரும் .
  • அடுப்பை அணைத்துவிட்டு, மெட்டல் டீ வடிகட்டி மூலம் பாதாமை சலித்து எடுக்கவும்.
  • அவ்வளவுதான்.....சுவையான salted baadham தயார்.
  • சூடு ஆறினதும் காற்று புகாத டப்பாவில் எடுத்து சேமிக்கவும்.
  • தேவையான போது சாப்பிடலாம்.
  • உப்பு அதிகம் பூத்திருப்பது என்று நீங்கள் நினைத்தால் ஒரு டிஷு பேப்பர் மூலம் துடைத்து , பிறகு டப்பாவில் போட்டு வைக்கவும்.
  • இதேபோல முந்திரி வேர்க்கடலை போன்றவற்றிலும் செய்யலாம்


Notes:
  • 'உப்பு பாதாம்' - salted badham ......இதை நான் இந்த திரி இல்போடக்கூடாது தான், என்றாலும் ஏற்கனவே உள்ள எந்த தலைப்பிலும் இதை இட முடியவில்லை எனவே இங்கு போடுகிறேன்
  • கடைகளில் விலை மிக அதிகம் உள்ள dry fruits இல் பாதாமும் ஒன்று. அதிலும் உப்பு போட்டது , எலுமிச்சை போட்டது என்று விதம் விதமாக உள்ளவை இன்னும் விலை அதிகம். இங்கு நாம் salted badham செய்வது குறித்து பார்ப்போம்.
  • மிகவும் எளிமையான வழி இது....கடை இல் வாங்கியதற்கு நாம் செய்ததற்கும் வித்தியாசமே தெரியாது. முயன்று பாருங்கள்

Images:


அவல் கேக்

Ingredients:
  • கெட்டி அவல் 1 கப்
  • சக்கரை 3/4 கப்
  • ஏலப்பொடி 1/3 ஸ்பூன்
  • நெய் 1 டேபிள் ஸ்பூன்
  • பால் 1 கப்


Method:
  • அவலை சுத்தம் செய்து கொள்ளவும்.
  • வறட்டு வாணலி இல் நன்கு வறுக்கவும்.
  • கொஞ்சம் வறுபட ஆரம்பிக்கும் போது, நெய் ஒரு ஸ்பூன் விட்டு வறுக்கவும்.
  • நன்கு பொரிந்து வறுபடும்.
  • தேவையானால் இன்னும் ஒரு ஸ்பூன் விடவும்.
  • காந்தாமல் நன்கு வறுக்கவும்.
  • வறுத்ததை ஒரு தட்டில் கொட்டி ஆறவிடவும்.
  • அவல் நன்கு ஆறினதும், சர்க்கரை, ஏலப்பொடி மற்றும் அவல் எல்லாவற்றையும் மிக்சி இல்போட்டு நன்கு பொடிக்கவும் .
  • பொடித்த அவலை ஒரு பேசினில் போட்டுக்கொண்டு அதன் மேல் சூடான பாலைவிடவும்.
  • அப்படியே ஒரு அரைமணி வைத்திருக்கவும்.
  • நன்கு ஆறினதும் வில்லைகள் போடவும்.
  • நிஜமாக சொல்கிறேன் மிகவும் அருமையாக இருக்கும்.
  • பால் இருப்பதால் பிரிட்ஜில் வைத்து உபயோகிக்கவும்.
  • செய்து பார்த்து எழுதவும்.

Images:




Blog Archive