- கேழ்வரகு மாவு 1 டம்ளர்
- உளுந்து சுமார் 50 கிராம் அல்லது ஒரு குழிக்கரண்டி.
- உப்பு
Method:
- கேழ்வரகு மாவை கடை இல் வாங்கிக்கொள்ளுங்கள் அல்லது நீங்களே மிஷினில் நைசாக அரைத்து வைத்துக் கொள்ளுங்கள்.
- காலையில் உளுந்தம் பருப்பை அலசி , ஊறப்போடுங்கள்.
- மத்தியானம் மிக்சியில் நன்கு அரைக்கவும்.
- இதோடு ஒரு டம்ளர் கேழ்வரகு மாவைக் கட்டி தட்டாமல் கரைத்து உப்பு போட்டு வைக்கவும்.
- ஆறு மணி நேரத்தில் நன்கு புளித்துவிடும்.
- அவ்வளவுதான் ராத்திரிக்கு சுவையான மொறுமொறுப்பான ராகி தோசை ரெடி.
- அருமையாக இருக்கும்.
- என்ன ஒண்ணு , கலர் கொஞ்சம் கம்மியாக இருக்கும்.
- எனவே ,தோசையைக் கருக விடாமல் கவனமாய் எடுக்கணும்.
- அவ்வளவுதான், கலர் தான் குறைவே தவிர சுவை இல் குறைவு இல்லை!
No comments:
Post a Comment