- பாம்பே ரவா 1 கப்
- பச்சைமிளகாய் 5 - 6 - பொடியாக நறுக்கவும்
- சீரகம் அரை ஸ்பூன்
- பெருங்காயம் கொஞ்சம்
- மோர் 2 கப்
- கறிவேப்பிலை கொஞ்சம்
- கொத்துமல்லி கொஞ்சம்
- பெரியவெங்காயம் பொடியாக நறுக்கினது
- உப்பு
- நெய் தோசை வார்க்க
Method:
- வாணலி இல் பாம்பே ரவாபோட்டு நன்கு வறுக்கவும்.
- உப்பு போடவும்.
- ஒரு பெரிய பத்திரத்தில் கொட்டவும்.
- கொஞ்சம் ஆறினதும் அதில் சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை, வெங்காயம் , பச்சைமிளகாய், கொத்துமல்லி எல்லாம் போடவும்.
- நன்கு கையால் கலக்கவும்.
- பிறகு மோர் விட்டு கட்டிகளில்லாமல் கரைக்கவும்.
- ஒரு அரைமணி வைத்திருந்து மெல்லிய தோசைகளாய் வார்க்கவும்.
- நல்ல கரகரப்பாக அதாவது மொறுமொறுப்பாக வரும்.
Notes:
- சாதாரண தோசை போல இல்லாமல் இந்த மாவை தோசை கல்லின் ஓரத்திலிருந்து விடணும். நடுவில் விட்டு பரத்த முடியாது.
No comments:
Post a Comment