- அரை நெல்லிக்காய் 1/2 கப்
- சாதம் 1 கப்
- APP 2 - 3 ஸ்பூன்
- வறுத்துப்பொடித்த வெந்தய பொடி 1/2 ஸ்பூன்
- கறிவேப்பிலை கொத்துமல்லி கொஞ்சம்
- உப்பு , எண்ணை கொஞ்சம்.
- தாளிக்க :
- கடுகு 1 ஸ்பூன்
- உளுந்து 1 ஸ்பூன்
- கடலை பருப்பு 1 ஸ்பூன்
- பெருங்காயம் 1/2 ஸ்பூன்
- மஞ்சள் பொடி 1/2 ஸ்பூன்
Method:
- வாணலியை அடுப்பில் போட்டு தாளிக்க கொடுத்தவைகளை போட்டு தாளிக்கவும்.
- பிறகு துருவி வைத்துள்ள அரை நெல்லிக்காய்யை போடவும்.
- உப்பு போடவும், நன்கு கிளறி விடவும்.
- பிறகு, APP ,வறுத்துப்பொடித்த வெந்தய பொடி எல்லாம் போட்டு மீண்டும் கிளறவும். எல்லாமாக சேர்ந்து வந்ததும் இறக்கவும்.
- ஒரு பேசினில் சாதத்தை போட்டு கொஞ்சம் நெய் விட்டு கலக்கவும்.
- பிறகு செய்து வைத்துள்ளதை போட்டு நன்கு கலக்கவும்.
- அவ்வளவுதான் "அரை நெல்லிக்காய் சாதம்" தயார்.
- மணமாக நல்லா இருக்கும்.
- இதுவும் மத்யான லஞ்ச் பாக்ஸுக்கு நல்லா இருக்கும்
Notes:
- அரை நெல்லிக்காய்யை 'concentrate' செய்து வைத்துக்கொள்ளலாம். Handy யாக இருக்கும்
No comments:
Post a Comment