- 2 வெங்காயம் - பொடியாக நறுக்கி வைக்கவும்
- 2 கப் குழப்பின கெட்டி தயிர்
- 1 டேபிள் ஸ்பூன் பொடியாக நறுக்கின கொத்துமல்லி தழை
- இரண்டு பச்சை மிளகாய் - பொடியாக நறுக்கவும்
- உப்பு
- தாளிக்க :
- அரை ஸ்பூன் கடுகு
- ஒரு சிட்டிகை பெருங்காயம்
- அரை ஸ்பூன் எண்ணெய்
Method:
- தாளிக்க கொடுத்ததை தாளித்து, அத்துடன் பச்சைமிளகாய் மற்றும் பொடியாக நறுக்கின வெங்காயத்தை போட்டு வதக்கவேண்டும்.
- ஜஸ்ட் இரண்டு நிமிடங்கள் போதும் இறக்கிவிடவும்.
- தயிர், கொத்துமல்லி தழை, உப்பு என்று எல்லாவற்றையும் ஒன்றாக போட்டு கலக்கவும்.
- இதன் மேல் கொட்டவும்.
- அவ்வளவுதான், சுவையான வெங்காயப் பச்சடி ரெடி.
- எல்லா துவையல் சாதத்திற்கும் இது நன்றாக இருக்கும்.
Notes:
- சிலர் வெங்காயத்தை பச்சையாகவே நறுக்கி செய்வார்கள். அப்படி செய்யும்போது, சாப்பிட்டபின் வாய் நாற்றம் அடிக்கும். இதுவும் அப்படி ஆகும் என்றாலும், கொஞ்சம் குறைவாக உணரலாம்.
- சூட்டுடன் வெங்காயத்தை தயிரில் போட்டால் நீர்த்துவிடும். ஒருவேளை மதியம் புலவுடன், வெங்காய பச்சடி வைக்க வேண்டும் என்றால், வெங்காயம் ஆறினதும், தயிர் மட்டும் விட்டு, உப்பு போடாமல் கொடுத்து அனுப்பவும். சாப்பிடும்போது உப்பை போட்டு கலந்து உபயோகிக்கட்டும்.
No comments:
Post a Comment