Thursday, October 8, 2020

இஞ்சி தொக்கு

Ingredients:
  • இஞ்சி கால் கிலோ
  • புளி எலுமிச்சை அளவு அல்லது 2 டேபிள் ஸ்பூன் புளி பேஸ்ட்
  • பூண்டு 100 கிராம்
  • மிளகாய் பொடி 4 ஸ்பூன்
  • வறுத்து அரைத்த வெந்தய பொடி 1 ஸ்பூன்
  • வெல்லம் கொஞ்சம்
  • உப்பு
  • எண்ணெய் கொஞ்சம்
  • கடுகு 1 ஸ்பூன்
  • பெருங்காய பொடி
  • மஞ்சள் பொடி


Method:
  • முதலில் இஞ்சியை நன்கு மண்போக அலம்பி , தோல் சீவி துண்டங்கள் போடவும்.
  • பூண்டை உரித்து வைத்துக் கொள்ளவும்.
  • புளி பேஸ்ட் இல்லை என்றால் , புளியை தண்ணீரில் ஊற வைக்கவும்.
  • மிக்சி இல் பூண்டு, புளி பேஸ்ட் மற்றும் இஞ்சியை மையாக அரைத்துக் கொள்ளவும்.
  • புளி பேஸ்ட் இல்லாவிட்டால், புளியை கெட்டியாக கரைத்து விட்டு அரைத்துக் கொள்ளவும்.
  • வாணலி இல் எண்ணெய்விட்டு, கடுகு கறிவேப்பிலை தாளித்துக் கொள்ளவும்.
  • அரைத்த விழுதை இதில் கொட்டவும்.
  • நன்கு கிளறவும்.
  • பிறகு அதில், மஞ்சள் பொடி, பெருங்காய பொடி, மிளகாய் பொடி, வெந்தய பொடி என எல்லாவற்றையும் ஒவ்வொன்றாக போடவும்.
  • உப்பும் போட்டு நன்கு கிளறிவிடவும்.
  • நன்கு கொதித்து லேகியப்பதம் வரும்போது , எண்ணெய் பிரியும்.
  • அதுவரை, அவ்வப்போது கிளறியபடி இருக்கவும்.
  • எண்ணெய் பிரிந்து வரும்போது வெல்லம் போட்டு நன்கு கிளறி, மீண்டும் எண்ணெய் பிரிய ஆரம்பிக்கும்போது அடுப்பை அணைத்து விடவும்.
  • நன்கு ஆறினதும் பாட்டில் களில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  • மிகவும் ருசியான 'இஞ்சி தொக்கு' தயார்.
  • இது உடலுக்கு மிகவும் நல்லது, வயிற்று உபாதைகளுக்கும் நல்லது.
  • தயிர் சாதம், சப்பாத்தி , தோசை என எதனுடனும் சாப்பிடலாம்.
  • சூடு சாதத்தில் நல்லெண்ணெய் விட்டு தொக்கு சாதமும் சாப்பிடலாம்....அருமையாக இருக்கும்.
  • பிரிட்ஜ் இல் வைத்துக்கொண்டால் ஒருவருடம் கூட வைத்துக் கொள்ளலாம்.


Notes:
  • இதை சிலசமயம் ரசம் செய்யும்போது ஒரு ஸ்பூன் கலந்தால் மிகவும் ருசியாக இருக்கும். அதே போல பிரட் இல் தடவி சாப்பிடலாம். மேலும், தொக்கு செய்யும்போது வறுத்து பொடித்த மிளகாய் பொடியை யும் போட்டால் , தொக்கின் நிறமும் மணமும் மிகநன்றாக இருக்கும்.

No comments:

Blog Archive