- உ.கிழங்கு – 1
- சேனைக்கிழங்கு -1 துண்டு
- பூசணிக்காய் – 1 துண்டு
- சௌ சௌ - 1/2
- பீன்ஸ் – 4
- காரட் – 1
- வாழைக்காய் – 1 சிறியது
- ப.மிளகாய் – 5 -6
- தேங்காய் துருவல் – 4 டேபிள் ஸ்பூன்
- சீரகம் – 1 ஸ்பூன்
- உப்பு – 1 ஸ்பூன்
- தேங்காய் எண்ணை 1 டேபிள் ஸ்பூன்
Method:
- எல்லாக் காய்கறிகளையும் 1 இன்ச் நீளத்திற்கு வெட்டி வைத்துக் கொள்ளவும்.
- சிறிது மஞ்சள் பொடி சேர்த்து காய் மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு வேக விடவும்.
- பாதி வெந்தவுடன் உப்பு போட்டு கிளறி விடவும்.
- தண்ணீரை வடிய விடக்கூடாது.
- தேங்காய், பச்சை மிளகாய், சீரகத்தை அரைத்துக் கொள்ளவும்.
- அரை வேக்காடாக இருக்கும் போது, தேங்காய் அரைத்த விழுதை அத்துடன் சேர்த்துக் கொள்ளவும்.
- நன்கு வெந்தது ‘திக்’கானதும், தேங்காய் எண்ணெயை விட்டு இறக்கி வைத்து வைக்கவும்.
- 'அவியல்' ரெடி.
Notes:
- பொதுவாக தனக்கு என்று தனி வாசனை இல்லாத காய்களை இதில் போடலாம் சிலர் கொத்தவரை கூட போடுவார்கள் .
No comments:
Post a Comment