Showing posts with label டிப்ஸ்... Show all posts
Showing posts with label டிப்ஸ்... Show all posts

Monday, August 8, 2011

ஏலப்பொடி

நமக்கு இது எல்லா பாயாசம், சக்கரை பொங்கல் மற்றும் இனிப்புகள் என எல்லாவற்றிக்கும் தேவை. எனவே இதை மொத்தமாக பொடித்து வைப்பது நலம்.

ஏலம் (தோலுடன்) கொஞ்சம் சக்கரை சேர்த்து மிக்ஸில நன்கு பொடிக்கவும்.
டப்பாவில் எடுத்து வைக்கவும்.
தேவையான போது உபயோகிக்கவும்.
இவ்வாறு செய்வதால், ஏலக்கா இன் தோலும் உபயோகப்படும்

Friday, August 5, 2011

18ம பெருக்கு / ஆடிப்பெருக்கு

ஆடிப்பெருக்கு – இதுவும் ரொம்ப சந்தோஷமான பண்டிகை. காவிரி ஆத்து ஓரமா
இருப்பவர்கள் ஆத்தன்கரை இல் போயி சாப்பிடுவா ; நாம் வீட்டுல சாப்பிடலாம் புன்னகை" longdesc="4" src="http://illiweb.com/fa/i/smiles/icon_smile.gif" alt="புன்னகை">
அன்று கலந்த சாதங்கள் அதாவது சித்திரான்னங்கள் செய்யனும்.

முதல் நாளே புளிக்காய்ச்சல் செய்து வைக்கணும். அப்ப தான் ஊறிண்டு நல்லா இருக்கும்.

புளியோதரை, தேங்காய் சாதம், தயிர் சாதம், உளுந்து வடை, பாயசம் , அப்பலாம், வற்றல் வாடம் வகைகள் பொரிக்கணும். தயிர் சாதத்துக்கு மோர்மிளகாய் பொரிக்கலாம்.

குறிப்பு: சிலர் எலுமிச்சை சாதம் கூட பண்ணுவா

Monday, August 1, 2011

மளிகை லிஸ்ட்

இதை நாம் போடும்போது, இந்த மாதம் பண்டிகை வருகிறது என்று நினைவில் வைத்துக்கொண்டு போடணும். பண்டிகைகளுக்கு செய்யவேண்டியவைகளை ஒருமுறை யோசித்து அதிகப்படியாக வாங்க வேண்டியவைகளை குறித்துவைத்துக்கொண்டால் நலம். சில பொருட்களை நான் இங்கு சொல்கிறேன் அவை உங்கள் சமையலுக்கு சுவையை கூட்டும்.

1. மில்க் மெய்டு : இதை ஒரு டின் வாங்கி வைத்துக்கொண்டால் , நாம் பாயசம், சக்கரை பொங்கல் போன்றவை செய்யும் போது இதை கொஞ்சம் சேர்த்தல் , அம்ருதம் தான் போங்கள் .

2. டூட்டி ப்ரூடி: எப்பவும் பாயசத்தில் திராக்ஷை முந்திரி போடுவதற்க்கு பதிலாக இதை போடலாம். கல்ர் கலர்ராய் இருக்கும் இதை குழந்தைகள் விரும்புவர்கள்.

3. அதேபோல் பாயசத்தில் முந்த்ரிகு பதிலாக உப்பில்லாம்ல் வறுத்த வேர்கடலை யை தோலுரித்து போடலாம்.

பண்டிகைக்கு தயாராவது எப்படி?

1. குறைந்த பக்ஷம் 1 வாரம் முன்பே நாம் மளிகை லிஸ்ட் ரெடி பண்ணனும். மிஷினில் மாவு அரைக்கணும் என்றால் அரைத்து வரணும். நட பகோடா , மனோப்பு போல செய்வதனால் அவற்றுக்கும் மாவு அரைத்து வைக்கணும். கடைசி நேரத்தில் கரண்ட் கட் ஆனால் பண்டிகை "கோவிந்தா" தான் புன்னகை" src="http://illiweb.com/fa/i/smiles/icon_smile.gif" alt="புன்னகை" longdesc="4">

2. செய்ய வேண்டி ய பக்ஷணங்களை முதலில் எழுதணும், ( வெறுமன நினைவில் வைத்தால் போறாது) ஒரு பேப்பர்ல எழுதணும். அதற்க்கு தக்கன மளிகை லிஸ்ட் போடணும்.

3. முதல்நாளே என்ன என்ன செய்யனும், சமையல் உட்பட, எழுதி பார்க்கணும்.

4. எதை முன்ன செய்யனும் ,எதை பின்ன செய்யனும் என்றும் எழுதணும்.

உதாரணத்துக்கு, கிருஷ்ண ஜெயந்தி பக்ஷணம் செய்வதானால், எல்லா மாவுகளையும் முதலில் நல்லா சலிக்கணும். எள்ளை பொறுக்கி வைக்கணும். ரொம்ப சுத்தமான எள் என்று யார் சொன்னாலும் நம்பாதீங்கோ , சோம்பல் படாம பொறுக்கிடுங்கோ. ஓர் துளி மண் இருந்தாலும் சீடை நம்மேல் தான் வெடிக்கும். சொன்னவா மேல இல்ல. அப்பத்துக்கு முதலில் கரைத்து வெச்சிடனும். ஆனால் கடைசியா அப்பம் குத்தணும் . அப்ப தான் ஊரிண்டு ரொம்ப 'மெத்' நு வரும்.
இது போல், செய்ய வேண்டியவைகளி விவரமாக எழுதி, ஒரு பரிக்ஷை அட்டை ல பின் பண்ணி சமையல் உள்லுள்ள வைத்துக்கொள்ளுங்கள்.
இப்படி செய்தால் ரொம்ப சிஸ்ஸ்டாமடிக்காக இருக்கும், கொஞ்சமும் பதட்டப்படமல் சுலபமாக எல்லாவற்றையும் செயலாம். மறக்காம இருக்கும்.

குழந்தைகள் இதை பார்க்கும் போது அவர்களும் 'ப்ளானிங்க்' என்றால் என்ன என்று கற்றுக்கொள்வார்கள் .

அஞ்சறை பெட்டி

இதை வெறும் தாளிக்கும் பொருட்கள் வைக்கும் பெட்டி என்று என்ன வேண்டாம் இதற்க்கு பல உபயோகங்கள் உண்டு.

1. பூஜை அறை இல் திரி, சுவாமிக்கு பண்ணுவதற்க்கு கல்கண்டு, அவல், திராக்ஷை போன்றவை வைத்து கொள்ளலாம்.

2. பூஜை இன் போது தேவைப்படும், மஞ்சள் பொடி, சந்தன கட்டி, குங்குமம் வைக்கக்லாம் .

3. சின்ன பெண் குழந்தை கள் இருக்கும் வீடுகளில் சின்ன சின்ன ஹேர் கிளிப்ஸ், ஹெஐர் பின், சேஃப்டி பின் , ரப்பர் பாண்ட் போன்றவை வாக்க உபயோகிக்கலாம். கால வேளைகளில் தேடாமல் இருக்க சௌகர்யமாய் இருக்கும்.

4. சமையல் அறை இல் சாதாரணமாய் கடுகு, மிளகு, உளுந்து, கடலை பருப்பு , மிளகாய் வற்றல் போன்றவை வைப்போம் அல்லவா அது போல மஞ்சள் பொடி, மிளகாய் பொடி, கரம் மசாலா பொடி, தனைய பொடி, அம்சூர் போல தினமும் தேவை படும் பொடிகளி வைக்கவும் உபயோகப்படுத்தலாம்.

5. இப்ப பண்டிகை காலங்களில், அதில் நாம் துண்டாக்கிய முந்திரி, அலம்பி துடைத்த திராக்ஷை (கிஸ் மிஸ் ) , ஊறவைத்து தோலுரித்து துண்டங்கள் ஆக்கிய பாதாம் போன்றவைகளை வைத்துக்கொண்டால், பாயசத்திலும் பொங்கலிலும் போட சௌகர்யமாய் இருக்கும்.

மத்தியான வேளைகளில் வெறுமன இருக்கும் போது இப்படி செய்து வைத்துக்கொண்டால் , காலை நேர பர பரப்பை தவிர்க்கலாம் புன்னகை" src="http://illiweb.com/fa/i/smiles/icon_smile.gif" alt="புன்னகை" longdesc="4">

வெல்லம்

வெல்லம் : இதை யும் மொத்தமாக உடைத்து வைத்துக்கொண்டால் சௌகர்யம்.
இப்பவெல்லாம் ஃப்ளாட்ஸ் இல் இருப்பதால், முன்பு போல அம்மி குழவியால் உடைக்க முடியாது. சுத்தியல் , இடுக்கி , கரண்டி என தேடவேண்டாம் புன்னகை" src="http://illiweb.com/fa/i/smiles/icon_smile.gif" alt="புன்னகை" longdesc="4"> அதற்க்கு சுலபமான முறை, ஒரு வெல்ல கட்டி யை எடுத்து மக்ரோ வேவ் ஓவனில் ஒரு 30 முதல் 45 செகண்ட் வரை போடவும். எடுத்து தொட்டு பார்க்கவும் நல்லா சுடவில்லை என்றால் மீண்டும் ஒரு 20 செகண்ட்ஸ் போடவும். வெளியே எடுத்து கத்தியால் சுலபமாக நறுக்கவும். ஒரு டப்பாவில் சேமிக்கவும். பாயசம் செய்யும் போது காலை வேளைகளில் கஷ்டம் இருக்காது புன்னகை" src="http://illiweb.com/fa/i/smiles/icon_smile.gif" alt="புன்னகை" longdesc="4">

குறிப்பு: ஓவனில் வைத்து எடுக்கும் போது சில சமயம் அந்த வெல்லக்கட்டி இன் நடுவில் கொஞ்சம் பாகு போல ஆகிவிடும், சூடு அதிகமானால் இப்படி ஆவதுண்டு. எனவே வெல்லத்தை நறுக்கும் முன், ஒரு தட்டில் வைத்து முதலில் இரண்டாக கட் செய்யவும். பிறகு கைய்ல் எடுத்து கத்தியால் சீவவும். அழகான துருவல்களாக வரும். நடுவில் வெல்லம் குழம்பு போல ஆகி இருந்தால், கை இல் படாமல் தட்டில் கொட்டிவிடும். சில நிமிஷங்கள் அப்படியே விட்டு விட்டு பின் நறுக்கலாம். சரியா?

பண்டிகை கால டிப்ஸ்

ஆடிமாதம் பிறந்து விட்டாலே பண்டிகைகள் தான். ஆடி செவ்வை, ஆடி வெள்ளி, ஆடி ஞாயிறு , பிறகு ஆவணி அவிட்டம் , கிருஷ்ண ஜெயந்தி , பிள்ளையார் சதுர்த்தி என பட்டியல் நீளும். அதற்கான முன்னேற்பாடுகள் செய்து வைத்துக்கொண்டால், பண்டிகை அன்று சிரமப்படாமல் சந்தோஷமாக கொண்டாடலாம். அதற்கான டிப்ஸ் தான் கீழுள்ளவைகள்

கோல மாவு :

எப்படியும் இழை கோலம் தான் போடணும், ஒவ்வொரு நாளும் அரிசி ஊறவைத்து அரைத்து , கோலம் போட்டாலும், மீந்து விட்டால் வேஸ்ட் தான் . அதனால் ஒரு 1/2 அல்லது 1 ஆழாக்கு அரிசி யை ஊற வைத்து நன்கு அரைக்கவும் . முதல் நாள் அப்படியே கோலம் போட்டு விடவும். பிறகு அந்த மாவை ஒரு தாம்பாளத்தில் கொட்டி, காய வைக்கவும். வெயீல் தான் வேண்டும் என்பது இல்லை. காற்றாட வைத்தாலே காய்ந்து விடும். அவ்வளவுதான், காய்ந்ததும் அதை டப்பாவில் போட்டு வைக்கவும். தேவையான போது, அதிலிருந்து கொஞ்சம் எடுத்து துளி தண்ணி விட்டு கரைத்து கோலம் போடவும். இழை கோலம் ரொம்ப நல்ல வரும்.

குறிப்பு: கோலம் ரொம்ப வெள்ளை யாக வாரவும், சீக்கிரம் அழியாமலும் இருக்க அரைத்த மாவில் கொஞ்சம் மைதா மாவு சேர்த்து கலந்து கோலம் போடவும்.

Monday, July 25, 2011

கத்தரிக்காய் எப்படி வாங்குவது ?

அதன் பாவாடை நல்ல பச்சை யாக இருக்கணும். வாடி இருந்தால் அது பழசு. அதை வாங்குவதை தவிர்க்கணும் . பூச்சி இல்லாததாக
பார்த்து எடுக்கணும். காயை தொட்டால் , மெல்ல அமுத்தினால் மெத் என் இருக்கணும். அழுத்தமாக இருந்தால் அதில் விதை இருக்கும் என் அர்த்தம் புன்னகை" src="http://illiweb.com/fa/i/smiles/icon_smile.gif" alt="புன்னகை" longdesc="4">
அத வாங்காதிங்கோ, சுடும் போது வெடிக்கும் .

பாதுகாப்பது எப்படி?: கொஞ்சம் கஷ்டமான விஷயம் தான். காம்பை நறுக்கிவிட்டு வைக்கலாம் . முதலில் இந்த காயை பயன் படுத்திவிடுவது தான் நல்லது. வெகு நாட்கள் தாங்காது.

புடலங்காய் எப்படி வாங்குவது ?

விரல்களால் அழுத்தி பார்க்கணும். "மெத்" என் இருந்தால் புதுசு. கடினமாக இருந்தால் முற்றினது, பழசு. ஃபிரெஷ் புடல் என்றால் நல்ல வாசம் வரும்.

எப்படி பாதுகாப்பது?: முனையும்
காம்பும் நறுக்கி வைக்கலாம். பிளாஸ்டிக் கவரில் போட்டு ஃபிரிஜ் இல் வைக்கலாம் .

முருங்கைக்காய் எப்படி வாங்குவது ?

இளசாக வேண்டும் என்றால், காய் இன் ஒருமுனையை ஒருகையாலும், மறுமுனையை மறு கையாலும் பிடித்துக்கொண்டு , லேசாக முறுக்கி (twist) பார்க்கணும். நன்கு வளைந்தால் இளசு. முற்றியதானால் வளயாது.ஆனால் தொக்கு கிளற, கூட்டு செய்ய முற்றியது தேவைப்படும் , அப்ப அதை எடுத்துக்கலாம்

எப்படி பாதுகாப்பது?: முனையும் காம்பும் நறுக்கி வைக்கலாம் அல்லது சாம்பாரில் போடுவதற்க்கு நறுக்குவது போல் நறுக்கி வைக்கலாம். பிளாஸ்டிக் கவரில் போட்டு ஃபிரிஜ் இல் வைக்கலாம் .

வெண்டைக்காய் வாங்குவது எப்படி?

கை இல் தொட்டால் கெட்டியாக அதே சமயம் பச்சை யாக இருக்கணும். முன்பு காம்பை ஒடித்து வாங்குவார்கள் இப்ப முடியாது புன்னகை" src="http://illiweb.com/fa/i/smiles/icon_smile.gif" alt="புன்னகை" longdesc="4"> ஓட்டை இல்லாததாக பார்த்து வாங்க வேண்டும். ஓட்டை இருந்தால் புழு இருக்கும்.

பாதுகாப் பது எப்படி?: ஃப்ரிஜ்ஜில் வைப்பதானால் கழுவாமல், லூஸாக பிளாஸ்டிக் பையில் போட்டு காய்கறி ட்ரேயில் வைக்கவும். ஃப்ரிஜ்ஜில் வைக்கும்போது துளி கூட ஈரம் இருக்கக் கூடாது. ஈரம் இருந்தால் வெண்டைக்காய் அழுகி கொசகொசத்து பூசணம் பூத்துவிடும். சமைப்பதற்கு முன்தான் அலம்ப வேண்டும். சில வகை வெண்டைக்காயில் மெல்லிய பூனைமுடி போல இருக்கும். நன்றாக தேய்த்துக் கழுவி பேப்பர் டவலில் துடைத்துவிட்டு நறுக்கவும். நறுக்கி
தண்ணீரில் போடக்கூடாது. காம்பை நறுக்கி வைப்பதால் காய் முற்றாமல் இருக்கும்.

பாகற்காய் எப்படி வாங்குவது?

பச்சையாக இருக்கணும். தொட்டுப் பார்க்க கெட்டியாக இருக்கணும். வாடிவதங்கி இருக்க கூடாது. அதேசமயம் கெட்டியாக புடைத்துக்கொண்டு விதைகள் தெறிக்கவும் இருக்க கூடாது. வெளி இல் இருக்கும் முட்கள் போன்ற அமைப்பு குறைவாக உள்ளதாக பார்க்கணும். அப்ப கசப்பு குறைவானதாக இருக்கும். கெட்டியாக அதேசமயம் உள்ளே விதைகள் பிஞ்சாக இருந்தால் சமையலுக்கு நல்லது. மஞ்சள் தோல் இருக்கக் கூடாது. ரொம்ப பச்சை யாக இருப்பதும் நல்ல கசப்பாக இருக்கும்.

பாதுகாப்பது எப்படி?: பாகற்காயை 2 நாள் வரை ஃப்ரிஜ்ஜில் வைக்கலாம். அதற்கு மேல் வைத்தால் மஞ்சளாகும். இல்லை ஒரு 4 , 5 நாட்கள் வாக்கணும் எனில் கம்புகளை நறுக்கி வையுங்கள் .அப்போது பழுக்காது. அவ்வப்போது வாங்கி சமைப்பதுதான் சிறந்தது

சர்க்கரை வள்ளிக்கிழங்கு தேர்ந்தெடுப்பது எப்படி?

கையில் எடுத்தால் கனமாகக் கெட்டியாக இருக்க வேண்டும். அமுந்தக்கூடாது . தோல் புள்ளி எதுவும் இல்லாமல் சுத்தமாக இருக்க வேண்டும். நுனியில் சுருங்கி இருந்தால் பழசு. அழுகதுவங்கி இருக்கு என் அர்த்தம் அழுகத் தொடங்கிய பகுதியை வெட்டி எறிந்தால் கூட அதன் வாசனை மற்ற இடங்களுக்குப் பரவி இருக்கும். வெளித்தோல் கொஞ்சம் கறுத்திருந்தாலும் கெட்டுப் போய் இதனடியில் உள்ள சதையும் கறுப்பாக மாறியிருக்கும். வாங்கியதும் மண் படிந்திருந்தால், அலம்பாமல் அப்படியே வைய்யவும். ஈரம், கிழங்கை சீக்கிரம் கெடுத்துவிடும். உபயோகிக்கும் முன் சுத்தம் செய்தால் போதும்.

பாதுகாத்தல் எப்படி?: சீக்கிரம் பயன்படுத்தி விடவேண்டிய காய்கறி இது. ஃப்ரீஜ்ஜில் வைத்தால் காய்ந்து போய் ருசியும் குறைந்துவிடும். உருளை வெங்காயம் போல் காற்றாட வைக்கலாம். அல்லது கொஞ்சம் மண்ணை போட்டு அதில் வைக்கலாம் .

பீட்ரூட் வாங்குவது எப்படி?

நல்ல கருஞ்சிவப்பு வண்ணத்தில் தோல் மிருதுவாக, உருண்டையாக, அதன்மேல் வெடிப்புகள் இல்லாமல் இருக்க வேண்டும். பீட்ரூட் வாங்கும் போது இலைகளோடு வாங்குங்கள். இதில் நிறைய சத்துகள் உள்ளன. கீரையாக சமைத்து சாப்பிடலாம். சின்ன காயை வாங்குங்கள். பெரியதாக இருந்தால் முற்றல் அதிகம் இருக்கும். இலைகளை சாப்பிட வேண்டுமானால் இளசாக கரும்பச்சை வண்ணத்தில் இருக்க வேண்டும்.

பாதுகாப்பது எப்படி? : ஃப்ரெஷ்ஷாக இருக்கக் கொஞ்சமாக அவ்வவ்போது வாங்க வேண்டும். சமைக்கும் போது தான் நறுக்க வேண்டும். முன்பே நறுக்கி வைத்தால் சாயம் வடியும். வாங்கியதும் இலைகளை தனியே பிரித்து வைக்கவும். உடனே கழுவாமல் இலையையும், காயையும் தனித்தனி பையில் போட்டு வைக்கவும். இலைகளை ஒன்றிரண்டு நாளில் சமைத்து விடவும். காயை பிளாஸ்டிக் பையில் போட்டு ஃபிரிஜ் இல் 1 வாரம் கூட வைக்கலாம்.

காலிஃபிளவர் தேர்ந்தெடுப்பது எப்படி?

தேர்ந்தெடுப்பது எப்படி?: நல்ல வெள்ளை நிறத்தில் அதை ஒட்டியுள்ள இலை பசுமையாக இருக்க வேண்டும். பூவின் அளவு பெரிதாகவோ சிறியதாகவோ இருக்கலாம். சிலவற்றில் சிறிய பூக்களுக்கு இடையில் இலைகள் வளர்ந்து இருக்கும் இதனால் எந்தக் கெடுதலும் இல்லை. இலையை நீக்கிவிட்டு உபயோகிக்கலாம். தண்டு நடுவிலோ, பூக்களுக்கு இடையிலோ பெரிய பச்சைப் புழு இருக்கும். மொட்டிலேயே உள்ளே போய் இதன் சத்தை சாப்பிட்டு வளரும். பார்க்க சட்டென்று தெரியாது.கூர்ந்து பார்த்தால் புழு இருக்கும் இடத்தைச் சுற்றி கறுப்பு புள்ளிகள் இருக்கும். ஜாக்கிரதை புன்னகை" src="http://illiweb.com/fa/i/smiles/icon_smile.gif" alt="புன்னகை" longdesc="4">

அப்படியே வாங்கி வந்து விட்டாலும் புழு இருக்கும் பகுதியை நீக்கி விட்டு உபயோகிக்கலாம். சமைப்பதற்கு முன்
பூவை நறுக்கி உப்பு கலந்த வெதுவெது ப்பான நீரில் போட்டு எடுக்கவும். புழுகள் இறந்து வெளியே வந்துவிடும். பூக்கள் மஞ்சளாக இருந்தால் பழசு என்று அர்த்தம்.

பாதுகாப்பது எப்படி?: வெளி இலேயே ஒரு நாள் - 2 நாள் வைக்கலாம் . ஃப்ரிஜ்ஜில் வைக்கும்போது பிளாஸ்டிக் பைகளில் வைக்கக்கூடாது.துணிப்பைகளில் வைக்கலாம் . அடியிலுள்ள கிரிஸ்பரில் வைக்கவும். அதுவும் தண்டுப் பகுதி மேல் பக்கமாக இருக்குமாறு வைத்தால் ஈரம் பூவின் மேல் தங்காது. ஃபிரெஷ் ஆக இருக்கும்.

கோடைலிருந்து தப்பிக்க சின்னச்சின்ன டிப்ஸ்..

வெயீல் கொளுத்துகிறது; அதிலிருந்து தப்பிக்க சில டிப்ஸ் இங்கே புன்னகை

நிறைய குளுமயான பொருட்களை சாப்பாட்டில் சேர்க்கவும். அதாவது வெள்ளரி, பூசணி, பரிங்கி, சௌ சௌ போன்ற நீர் காய்களை யும், தர் பூசணி , கிர்ணி , வெள்ளரிப்பழம் போன்ற பழங்களையும் சேர்க்கலாம்.

மசாலா அதிகம் சேர்க்காத சாப்பாட்டை சாப்பிடவும்.

நீர்மோர், இளநீர் , பழரசங்கள் பருகவும். ரொம்பவும் அதிகம் பருகவேண்டியது குளிர்ந்த நீர் புன்னகை

உடல் ரொம்ப சூடாகிவிட்டால் , வாழைப்பழம் + பால் + சர்க்கரை சேர்த்து மிக்சி ல அரைத்து குடிக்கவும். உடலுக்கு ரொம்ப குளுமை.

பிடித்தவர்கள் போகவர சோம்பு சாப்பிடலாம். அதுவும் உடலுக்கு குளுமை.

தலைக்கு தவறாமல் எண்ணை தடவவும். எண்ணை தேய்த்து குளிக்கும் பழக்கம் உள்ளவர்கள் அதை செயலாம்.

கைக்கு மருதாணி இட்டுக்கொள்ளல்லாம், அதுவும் குளுமை.

இரவே ஒரு டேபிள் ஸ்பூன் வெந்தயத்தை தண்ணீரில் ஊற போட்டுவிட்டு காலை அதை அரைத்து தலை இல் வைத்துக்கொண்டு ஒரு 10 -15 நிமிட்ங்கல் ஊறி குளித்தால் தலை முடிக்கும் நல்லது, உடலுக்கும் ரொம்ப குளுமை.

அதேபோல் வெந்தயத்தை எவ்வளவுக்கு எவ்வளவு சாப்பாட்டிட்டில் செக்கிறோமோ அவ்வளவு நல்லது.

கறைகளை நீக்குவதற்க்கு முன்

கறை பட்டவுடன் கழுவினால் கறைகள் மறைந்துவிடும். ஆனால் பல சமயங்களில் கறைகளை நீக்குவது அவ்வளவு சுலபமில்லை. இதற்குத் தனி கவனம் தேவைப்படுகிறது.

கறைகளை நீக்குவதற்கு முன் செய்ய வேண்டியவை, துணிகளை ஊற வைப்பதற்கான குறிப்புகள் ஆகியவற்றை கீழே காணலாம்.

கறைகளை நீக்குவதற்கு முன்:

மறக்காதீர்கள்! கறைகள் பட்டவுடன் உடனடியாக அதை நீக்கினால் அவை முழுமையாக மறையும் வாய்ப்புண்டு.

உங்கள் உடையின் பாதுகாப்பு விதிகளைப் படித்து கறைகளை நீக்கும் போது உடைகளுக்கு ஏதேனும் சேதம் ஏற்படுமா என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

நீங்கள் உபயோகிக்கும் சோப் உங்கள் துணிகளுக்கு ஏற்றதா என்பதை சரி பார்த்து உபயோகிக்க வேண்டும்.

டிட்டர்ஜண்ட், சோப் ஆகியவற்றில் உள்ள குறிப்புகளையும் மறக்காமல் படிக்கவும்.

உங்கள் துணிகளின் நிறம் போகாமல் இருக்குமா என்பதை சரி பார்க்கவும்.

கம்பளி, பட்டு உடைகளுக்கு ப்ளீச் அல்லது ப்ளீச் அடங்கிய டிட்டர்ஜெண்ட் உபயோகிப்பதைத் தவிர்க்கவும்.

அதிகமாக கறை படிந்த துணிகளை ஊற வைத்துத் துவைக்க வேண்டும்.

ஊற வைப்பதற்கு முன் கவனிக்க வேண்டியவை:

உடையின் சாயம் மாறுமா என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.

பட்டு, கம்பளி, தோல் மற்றும் உலோகத்தாலான பொருட்கள் இல்லாத ஆடைகளாக இருக்க வேண்டும்.

சோப் அல்லது டிட்டர்ஜெண்ட் முழுமையாக கரைந்து விட்டதா என்று சரி பார்க்கவும்.

தண்ணீரின் வெப்பத்தை உடை தாங்குமா என்று சரி பார்க்கவும்.

உடைகள் அளவுக்கு அதிகமாக கசங்கிவிடாமல் பார்த்துக் கொள்ளவும்.

வெள்ளைத் துணிகளை வண்ணத் துணிகளோடு கலந்து ஊற வைக்காமல் தனியாக ஊற வைக்கவும்.

உடைகளின் சாயம் மாறுமா?

உடைகளின் சாயம் போகுமா இல்லையா என்று சந்தேகமாக இருந்தால், துணியின் ஒரு சிறிய பகுதியை நனைத்து, அதன் மேல் வெள்ளை துணி அல்லது டிஷ்ஷு பேப்பர் வைத்து அய‌ர்‌ன் ப‌ண்ணவு‌ம். துணியின் நிறம் அதில் பட்டால் துவைக்கும் போது சாயம் அவசியம் போகும்.

சாயம் போகும் துணிகளை எப்படித் துவைப்பது?

ஊற வைக்காமல், தனியாக குளிர்ந்த நீரில் துவைக்க வேண்டும்.

சாயம் மாறும் துணிகளை வீட்டில் துவைக்காமல் டிரை கிளீனிங் செய்யலாம்.

உங்கள் வீட்டின் துணிகள் கறையின்றி பளிச்சிட மேலுள்ள குறிப்புகளை மறக்காமல் பின்பற்றுங்கள்.

கறைகளை நீக்க

கா‌பி, டீ கறைகள் பட்டவுடன் சோப்பு அல்லது டிட்டர்ஜெண்ட்டால் கழுவி விடவும். வெள்ளை துணியாக இருந்தால் பிளீச் அல்லது பேகிங் சோடாவை கறையின் மீது தேய்த்து கறைகளை நீக்கலாம்.

சூயிங் கம் கறையை நீக்க:

சூயிங் கம் பட்ட உடையை ஒரு பையில் போட்டு, ஃப்ரீஜரில் ஒரு மணி நேரம் வைக்கவும். இதனால் சூயிங் கம் கெட்டியாகிவிடும். இப்போது இதை எளிதில் உடைத்து எடுத்துவிடலாம்.

எப்போதும் போல் துவைத்து முழுமையாக சுத்தம் செய்துவிடலாம்.

சாக்லேட் கறையை நீக்க:

துணியில் பட்டுள்ள சாக்லேட்டை முதலில் நீக்கவும். பிறகு வெதுவெதுப்பான சோப்பு நீரால் கறையை தேய்த்து சுத்தம் செய்யவும். சாக்லேட் கறை மறைந்துவிடும்.

பழக் கறையை நீக்க:

உடனடியாக துவைக்கவும். தேவைப்பட்டால் சிறிதளவு உப்பை கறையின் மேல் தேய்த்து கழுவவும்.

காய்ந்த கறைகளை நீக்க க்ளிசரின் (மருந்து கடைகளில் கிடைக்கும்) மற்றும் வெதுவெதுப்பான நீரை சமமான அளவில் கலந்து கறையில் தேய்த்து கழுவவும். அல்லது தண்ணீரில் துணியை ஊரவைத்து, கறையில் உப்பைத் தேய்த்து அதன்பின் கழுவவும்.

லிப்‌ஸ்டிக் கறையை நீக்க:

சிறிதளவு டூத்பே‌ஸ்ட்டை கறையின் மீது தடவி தேய்த்தால் லிப்‌ஸ்டிக் கறை மறையும். பிறகு எப்போதும் போல் துணியை துவைக்கலாம்.

அல்லது பெட்ரோலியும் ஜெல்லியால் தேய்த்தும் இந்த‌க் கறையை நீக்கலாம்.

பீர் கறையை நீக்க:

வினிகருடன் வெதுவெதுப்பான நீரை கலந்து, பீர் கறையின் மேல் தடவவும். சிறிது நேரத்திற்கு பிறகு டிட்டர்ஜேண்ட்டால் துவைக்கவும். கறை நீங்கும்.

Blog Archive