Showing posts with label வீட்டில் கைவசம் இருக்கவேண்டிய 'Ready Made' பொடிகள். Show all posts
Showing posts with label வீட்டில் கைவசம் இருக்கவேண்டிய 'Ready Made' பொடிகள். Show all posts

Friday, July 22, 2011

வெந்தய பொடி

இது நாம் செய்யும் எல்லா குழம்புகளுக்கும் வேண்டும். என்னதான் குழம்பு பொடி செய்யும் போது வெந்தயம் போட்டு அரைத்தாலும் , மேலுக்கு இதையும் போடணும் அப்ப தான் குழம்பு மணக்கும். தினமும் குழம்பு செய்யும் முன் வறுத்து பொடித்து போடணும். முடியாதவர்கள் 1 வாரம் 10 நாளுக்கு சேர்த்து வறுத்து அரைத்து வைத்து கொள்ளலாம் .

எல்லா ஊருகாய் களுக்கும் இது தேவைப்படும்.

தக்காளி சாதம், கத்தரிக்காய் சாதம், புளியோதரை போன்ற கலந்த சாதங்களுக்கும் பயன்படும்.

100 கிராம் வெந்தயத்தை எடுத்து சுத்தம் செய்யவும்.
வரட்டு வாணலி இல் போட்டு நல்ல சிவப்பாக கருகாமல் வறுக்கவும்.
நல்ல மணம் வந்ததும், ஒரு தட்டில் கோட்டவும்.
ஆறினதும் மிக்ஸில பொடிக்கவும்
பாட்டிலில் போட்டு வைக்கவும்.
தேவைப்படும் போது உபயோகிக்கவும்.

கரம் மசாலா பவுடர்

தேவயானவை:

தனியா 50 கிராம்
மிளகு 20 கிராம்
பட்டை 20 கிராம்
சீரகம் 15 கிராம்
பெரிய ஏலக்காய் 15 கிராம்
கிராம்பு 10கிராம்
சிறிய ஏலக்காய் 10 கிராம்
பிரிஞ்சி இலை 10 கிராம்

செய்முறை :
எல்லாவற்றயும் லேசாக வறுத்து பொடிக்கவும்.
Microwave வில் சுட வைத்தாலும் போரும்.
காற்று புகாமல் முடி வைத்து உபயோகப்படுத்தவும்.

கறிப்பொடி

பலசுவைகளில், பல முறைகளில் இதை தயாரிக்கலாம் நாம் சிலது பார்க்கலாம்

தேவையானவை:

குண்டு மிளகாய் வற்றல் 10 -12
தனியா 2 -3 ஸ்பூன்
உளுத்தம் பருப்பு 2 டேபிள் ஸ்பூன்
கச கசா - 2 டீ ஸ்பூன்
மிளகு 1 ஸ்பூன்
தேங்காய் - துருவியது 1/2 கப் ( வரட்டு வாணலி இல் சிவக்க வருக்க்வும்)

செய்முறை:

எல்லாவற்றையும் அப்படியே பச்சையாக போட்டு அரைத்து வைக்கவும்.
குருமா அல்லது கறி செய்யும் போது உபயோகப்படுத்தலாம்.

குறிப்பு: தேங்காய் சேர்ப்பதால் ஃபிரிஜ் ல வைக்கவும்.

டீ மசாலா பவுடர்

தேவையானவை:

ஏலக்காய் 10 கிராம்
கிராம்பு 10
பட்டை கொஞ்சம்
ஜாதிக்காய் 1/2

செய்முறை:

எல்லாவற்றையும் பொடிக்கவும்.
டீ போடும் போது ஒரு சிட்டிகை போடவும
மண மணக்கும் டீ ரெடி

முருங்கை இலை பொடி

தேவையானவை:

முருங்கை இலைகள் 1 கப்

பொட்டுக்கடலை 100 கிராம்
குண்டு மிளகாய் வற்றல் 5 -6
பூண்டு 10 -12 பல்
சீரகம் 1 ஸ்பூன்
உப்பு

செய்முறை:

முருங்கை இலையை சுத்தம் செய்து, அலம்பி வடிய விடவும்.
வாணலி இல் துளி நெய்விட்டு வதக்கவும்.
தனியே வைக்கவும்
வெறும் வாணலி இல் பொட்டுக்கடலையை போட்டு சூடாகவும்
அத்துடன் மிளகாய் வற்றல்லையும் போட்டு வறுக்கவும்.
பிறகு மிக்சி இல் உப்பு, பூண்டு, சீரகத்துடன், வறுத்தத்தையும் போட்டு, பொடிக்கவும்
சூடான சாதத்துடன் பரிமாறவும்.


பொட்டுக்கடலை பொடி

தேவையானவை:

பொட்டுக்கடலை 100 கிராம்
குண்டு மிளகாய் வற்றல் 5 -6
பூண்டு 10 -12 பல்
சீரகம் 1 ஸ்பூன்
உப்பு

வெறும் வாணலி இல் பொட்டுக்கடலையை போட்டு சூடாகவும்.
அத்துடன் மிளகாய் வற்றல்லையும் போட்டு வறுக்கவும்.
பிறகு மிக்சி இல் உப்பு, சீரகத்துடன், வறுத்தத்தையும் போட்டு, பொடிக்கவும்
சூடான சாதத்துடன் பரிமாறவும்.
வேண்டுமானால் வறுத்த காய்களின் மேல் தூவலாம், நல்லா இருக்கும்.

கறிவேப்பிலை பொடி

தேவையானவை :

கறிவேப்பிலை 2 கப் உருவியது
உளுத்தம் பருப்பு 2 டேபிள் ஸ்பூன்
கடலை பருப்பு 2 டேபிள் ஸ்பூன்
தனியா 2 டேபிள் ஸ்பூன்
கடுகு 1/2 ஸ்பூன்
குண்டு மிளக்காய் வற்றல் 12 -14
புளி சிறிய எலுமிச்சை அளவு
பெருங்காய பொடி 1/4 டீ ஸ்பூன்
உப்பு
எண்ணை
மிளகு 1 ஸ்பூன் (காரம் அதிகம் தேவைபடுபவர்கள் இதை சேர்க்கலாம் )

செய்முறை:

முதலில் கறிவேப்பிலையை அலம்பி வடிய விடணும்.
வெறும் வாணலி இல் நன்கு வறுக்கணும்.
வறுத்தத்தை கை இல் நொறுக்கினால் நொறுங்கணும் அது தான் பதம்
அதை தட்டில் கொட்டி வைக்கவும்
புளியை சிறிது சிறிதாக பிச்சு போட்டு நன்கு வறுக்கணும்
அதையும் தனியே வைக்கக்ணும்.
பின் வாணலி இல் எண்ணை விட்டு மற்ற சாமான்களை வறுக்கணும்
பின்பு எல்லா வற்றை யும் மிசில பொடிக்கணும்.
கமகமக்கும் கறிவேப்பிலை பொடி தயார்.
சாதத்தில் போட்டு சாப்பிடலாம்.
நெய் அல்லது நல்லெண்ணெய் விட்டு சாப்பிடலாம்.
தொட்டுக்கொளா சுட்ட அப்பளம் அல்லது தயிர் போரும்.

எள்ளுப் பொடி (காரம் )

தேவையானவை:

25 - 35 குண்டு மிளகாய்
1 /4cup கருப்பு எள்
உப்பு.

செய்முறை:

கருப்பு எள் ளை சுத்தம் செய்யவும்.
வறட்டு வாணலில் 'பட பட' வென பொரியும் வரை வறுக்கவும்
தனியே வைக்கவும்.
ஒரு சொட்டு எண்ணெய் மிளகாய் வற்றலை கருகாமல் வறுக்கவும்.
தனியே வைக்கவும்.
ஆறினதும், மிக்சியில் போட்டு , உப்பு போட்டு மிகவும் பொடியாக அரைக்கவும்.
எள்ளுப் பொடி ரெடி.
எள்ளுப் பொடி ரொம்ப மணமாக இருக்கும்.
இதை போட்டு சாதம் கலந்து சாப்பிடலாம், லஞ்ச் பாக்ஸ் கட்டலாம்.
நன்றாக இருக்கும்.

கொள்ளு பருப்பு பொடி

தேவயானவை :

துவரம்பருப்பு – 4 கப்
கொள்ளு – 2 கப்
மிளகு – 2 ஸ்பூன்
குண்டு மிளகாய் வற்றல் – 10 -15
பெருங்காயம் – 1 சிட்டிகை
உப்பு – 2 டீஸ்பூன்

செய்முறை:

வெறும் வாணலியில் கொள்ளை போட்டு மிதமான தீயில் அது படபடவென வெடிக்கும் வரை நன்கு வறுத்து ஆற வைக்கவும்.
அதேபோல துவரம் பருப்பு, மிளகு, மிளகாய் வற்றல், பெருங்காயம் ஆகியவற்றை மெல்லிய வாசனை வர வறுத்து ஆற வைக்கவும்.
பிறகு வாணலிச் சூட்டிலேயே உப்பை சற்று வறுத்துக் கொள்ளவும்.
வறுத்த அனைத்தையும் மிச்சியில் போட்டு பொடித்து காற்று புகாத டப்பாவில் அடைத்து வைக்கவும்.
இந்தப் பொடியை சூடான சாதத்துடன் சேர்த்துச் சாப்பிடலாம்.
பொடியுடன் சிறிது நெய் அல்லது நல்லெண்ணை கலந்து சாப்பிடலாம்.

குறிப்பு: உப்பை வறுத்து உபயோகிப்பது பொடி நீண்ட நாட்கள் கெடாமல் இருக்க உதவும். மேலும் BP காரர்களும் உப்பு பற்ற்ய பயம் இல்லாமல் சாப்பிடலாம் புன்னகை" src="http://illiweb.com/fa/i/smiles/icon_smile.gif" alt="புன்னகை" longdesc="4">

வேர்கடலை பொடி 2

தேவயானவை:
1 கப் சிவக்க வறுத்த தேங்காய் துருவல்
1/2 கப் வறுத்த வேர்கடலை
1/2 கப் வறுத்த எள்
10 மிளகாய் வற்றல் (குண்டு)
10 -12 பூண்டு
உப்பு
கொஞ்சம் எண்ணை

செய்முறை:

எல்லாவற்றயும் மிக்சி இல் போட்டு பொடிக்கவும்.
சாத்ததில் போட்டு சாப்பிடவும்.
சுவையாக இருக்கும்.

வேர்கடலை பொடி

தேவயானவை:

2 கப் வறுத்த வேர்கடலை
1/2 கப் எள்
15 மிளகாய் வற்றல் (குண்டு)
1/2 ஸ்பூன் பெருங்காயப்பொடி
உப்பு
கொஞ்சம் எண்ணை

செய்முறை:

வெறும் வாணலி இல் எள்ளை வறுக்கவும்.
நன்கு பட பட வென் வெடித்ததும், தட்டில் கொட்டிவைக்கவும்.
துளி எண்ணை விட்டு மிளகாய் வற்றல் லை வறுக்கவும்.
வேர்கடலையும் போட்டு வறுக்கவும்.
மிக்சி இல் எல்லாவற்றயும் போட்டு பொடிக்கவும்.
வாசனை மிகுந்த 'வேர்கடலை பொடி' தயார்.
சாத்ததில் போட்டு சாப்பிடலாம், அல்லது இட்லி தோசைக்கு தொட்டுக்கொள்ளல்லாம்

உருளை கிழங்கு பொடி

தேவையானவை:

ஒரு பெரிய உருளை கிழங்கு
2 Tea spoon உளுத்தம் பருப்பு
1 கப் துவரம் பருப்பு
6 -8 மிளகாய் வற்றல்
ஒருசின்ன துண்டு பெருங்காயம்
உப்பு
துளி எண்ணை

செய்முறை:

துளி எண்ணை விட்டு பெருங்காயத்தை பொரிக்கவும்.
தனியே வைக்கவும்.
பிறகு மற்றவைகளை போட்டு நன்கு வறுக்கவும்.
கருகாமல் வறுக்கவும்.
ஆறினதும், உப்பு பெருங்காயம் போட்டு அரைக்கவும்.
உருளை கிழங்கை அலம்பி துடைக்கவும்.
அதன் மேல் துளி எண்ணெய் விட்டு புரா காய் மீதும் தடவவும்.
காஸ் அடுப்பில் வைத்து சுடவும்
சுடும் போது திருப்பி திருப்பி வைத்து சுடவும்.
நன்றாக சுட்டதும், ஒரு பேசினில் தண்ணீர் விட்டு அதில் போடவும்.
ஆறினதும், தோலுரித்து துருவவும்.
பொடித்து வைத்துள்ள தில் போட்டு கலக்கவும்.
அல்லது பொடி , உருளை துருவல் இரண்டையும் மிக்சியில் ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.
சுடு சாதத்தில் நெய் விட்டு இந்த பொடி போட்டு கலந்து சாப்பிடவும்.

குறிப்பு:
இதில் துளி கூட தண்ணீர் இல்லாத தால் ஒரு வாரம் வரை வைத்திருந்து
உபயோகிக்கலாம். fridge இல் வைத்தால் 15 நாள் கூட வைக்கலாம்.உருளை யை வேகவைத்தும் இது போல் செயலாம். ஆனால் உடனே உபயோகிக்கவேண்டும். நாள் பட வைத்துக்கொள்ள முடியாது.

வாழைக்காய் பொடி

தேவையானவை:

ஒரு பெரிய வாழைக்காய்
2 Tea spoon உளுத்தம் பருப்பு
1 கப் துவரம் பருப்பு
6 -8 மிளகாய் வற்றல்
ஒருசின்ன துண்டு பெருங்காயம்
உப்பு
துளி எண்ணை

செய்முறை:

துளி எண்ணை விட்டு பெருங்காயத்தை பொரிக்கவும்.
தனியே வைக்கவும்.
பிறகு மற்றவைகளை போட்டு நன்கு வறுக்கவும்.
கருகாமல் வறுக்கவும்.
ஆறினதும், உப்பு பெருங்காயம் போட்டு அரைக்கவும்.
வாழைக்காயை அலம்பி துடைக்கவும்.
அதன் மேல் துளி எண்ணெய் விட்டு புரா காய் மீதும் தடவவும்.
காஸ் அடுப்பில் வைத்து சுடவும்
சுடும் போது திருப்பி திருப்பி வைத்து சுடவும்.
நன்றாக சுட்டதும், ஒரு பேசினில் தண்ணீர் விட்டு அதில் போடவும்.
ஆறினதும், தோலுரித்து துருவவும்.
பொடித்து வைத்துள்ள தில் போட்டு கலக்கவும்.
அல்லது பொடி , வாழை துருவல் இரண்டையும் மிக்சியில் ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.
சுடு சாதத்தில் நெய் விட்டு இந்த வாழைக்காய் பொடி போட்டு கலந்து சாப்பிடவும்.

குறிப்பு: இதில் துளி கூட தண்ணீர் இல்லாத தால் ஒரு வாரம் வரை வைத்திருந்து உபயோகிக்கலாம். fridge இல் வைத்தால் 15 நாள் கூட வைக்கலாம்.

பூண்டு பொடி 2

தேவையானவை:

10 பல் பூண்டு
ஒரு டேபிள் ஸ்பூன் தேங்காய் துருவல்
3 - 4 குண்டு மிளகாய்
உப்பு

செய்முறை:
எல்லாவற்றையும் ஜஸ்ட் எண்ணெய் தடவிய வாணலில் வறுக்கவும்.
எல்லாவற்றையும் மிக்சி இல் பொட்டு பொடிக்கவும்.
வாசனையாக நல்ல இருக்கும்.
சுடு சாதத்தில் நெய் விட்டு இந்த பொடி போட்டு பிசைந்து
சாப்பிடவும்.

குறிப்பு: எந்த காய் கும் , குருமாக்கும் இந்த பொடிய போடலாம்.

பூண்டு பொடி

தேவையானவை:

10 பல் பூண்டு
ஒரு டேபிள் ஸ்பூன் பொட்டு கடலை
ஒரு டேபிள் ஸ்பூன் வறுத்த வேர்கடலை
ஒரு டீ ஸ்பூன் மிளகாய் பொடி
உப்பு

செய்முறை:

எல்லாவற்றையும் மிக்சி இல் பொட்டு பொடிக்கவும்.
வாசனையாக நல்ல இருக்கும்.
சுடு சாதத்தில் நெய் விட்டு இந்த பொடி போட்டு பிசைந்து
சாப்பிடவும்.

குறிப்பு: எந்த காய் கும் , குருமாக்கும் இந்த பொடிய போடலாம்.

வறட்டு தனியா பொடி

தேவையானவை:

1 Cup தனியா
2 Tea spoon உளுத்தம் பருப்பு
2 Tea spoon கடலை பருப்பு
10 - 12 குண்டு மிளகாய் வற்றல்
1 Pinch பெருங்காயம்
1/2 Spoon எண்ணை
கோலி குண்டு அளவு புளி
உப்பு
மிளகு கொஞ்சம் ( தேவையானால் )

செய்முறை:

தனியாவை ஜஸ்ட் எண்ணெய் தடவிய வாணலில் வறுக்கவும்.
கருகாமல் வறுக்கணும்.
புளியை சின்ன சின்ன துண்டுகளாக பிய்த்து நன்கு வறுக்கவும்.
கரகரப்பாக வறுக்கவும்.
இப்போது எண்ணை விட்டு, மற்றசாமான்களை வறுக்கவும். .
ஆறினதும் மிக்சி இல் போட்டு உப்பு சேர்த்து அரைக்கவும்.
பாட்டில் ல போட்டு வைக்கவும்.
தேவையான போது சுடு சாதத்தில் நெய் விட்டு இந்த பொடி போட்டு பிசைந்து
சாப்பிடவும்.

குறிப்பு: இந்த பொடியை வறுத்த கறிகள் செய்யும் போது தூவலாம். பருப்பு சாம்பாரில் கடைசியில் கொஞ்சம் போட்டு இறக்கலாம். சுவை கூடும்.

கருப்பு உளுந்து பொடி

தேவையானவை :

1 கப் கருப்பு உளுந்து
6 -8 மிளகாய் வற்றல்
ஒரு கைப்பிடி காய்ந்த கறிவேப்பிலை
ஒருசின்ன துண்டு பெருங்காயம்
உப்பு
துளி எண்ணை

செய்முறை:

துளி எண்ணை விட்டு பெருங்காயத்தை பொரிக்கவும்.
தனியே வைக்கவும்.
பிறகு மற்றவைகளை போட்டு நன்கு வறுக்கவும்.
கருகாமல் வறுக்கவும்.
ஆறினதும், உப்பு பெருங்காயம் போட்டு அரைக்கவும்.
பாட்டில் ல எடுத்து வைக்கவும்.
தேவையான போது சுடு சாதத்தில் நெய் விட்டு இந்த பொடி போட்டு கலந்து சாப்பிடவும்.

குறிப்பு: இதை தோசைக்கும் தொட்டுக்கலாம்

கறிவேப்பிலை பருப்பு பொடி

தேவையானவை:

1 கப் துவரம் பருப்பு
10 மிளகாய் வற்றல்
1 டீ ஸ்பூன் மிளகு
1 கொத்த்து கறிவேப்பிலை ( நன்கு காய்ந்தது )
உப்பு

செய்முறை:

முதலில் உப்பை வறட்டு வாணலில் வறுக்கவும்.
பிறகு மிளகு, பிறகு மிளகாய் வற்றல், பிறகு துவரம் பருப்பு என் ஒவ்வொன்றாக தனி தனியாக வறுக்கவும்.
காய்ந்த கறிவேப்பிலை யும் அப்படியே போட்டு அரைக்க தரனும்.
மிஷினில் கொடுத்து நல்ல 'நைசாக' அரைக்கவும்.
கொஞ்சம் கலர் கம்மியாக இருக்கும் ஆனால் வாசனையாக நன்ன்றாக இருக்கும்.

பூண்டு பருப்பு பொடி

தேவையானவை:

1 கப் துவரம் பருப்பு
10 மிளகாய் வற்றல்
1 டீ ஸ்பூன் மிளகு
10 பல் பூண்டு
உப்பு

செய்முறை:

முதலில் உப்பை வறட்டு வாணலில் வறுக்கவும்.
பிறகு மிளகு, பிறகு மிளகாய் வற்றல், பிறகு துவரம் பருப்பு என் ஒவ்வொன்றாக தனி தனியாக வறுக்கவும்.
பூண்டு பற்களை உரித்து அப்படியே போட்டு அரைக்க தரனும்.
மிஷினில் கொடுத்து நல்ல 'நைசாக' அரைக்கவும்.
கொஞ்சம் பூண்டு வாசத்துடன் நன்ன்றாக இருக்கும்.
ஆனால் இதை fridge இல் வைப்பது நல்லது.
(பூண்டில் கொஞ்சம் ஈரப்பசை இருக்கும் அல்லவா அதுதான் "fridge " லவைக்கணும்.)

பருப்பு பொடி

பருப்பு பொடி , இது சுலபமாக செய்யக்குடியகூடியது ஆனால் சுவை மிகுந்தது.

தேவையானவை:

1 கப் துவரம் பருப்பு
10 மிளகாய் வற்றல்
1 டீ ஸ்பூன் மிளகு
உப்பு

செய்முறை:

முதலில் உப்பை வறட்டு வாணலில் வறுக்கவும்.
பிறகு மிளகு, பிறகு மிளகாய் வற்றல், பிறகு துவரம் பருப்பு என் ஒவ்வொன்றாக தனி தனியாக வறுக்கவும்.
மிஷினில் கொடுத்து நல்ல 'நைசாக' அரைக்கவும்.
வீட்டில் அரைத்தால் நன்கு சலித்துவிட்டு மறுபடி அரைக்கணும் .
இதற்கு தொட்டுக்கொள்ள வத்த குழம்பு சூப்பர் ஆக இருக்கும்., ஆவக்காய் அருமையாக இருக்கும்.
சுடு சாதத்தில் நிறைய நல்லெண்ணெய் விட்டு பருப்பு பொடி போட்டு கலந்து சாப்பிடனும். சாதம் உதிறாய் இருந்தாலும் நல்லா இருக்கும், குழைந்து இருந்தாலும் நல்லா இருக்கும்.

குறிப்பு: வத்தக்குழம்பு சாப்பிடும் போது அதன் மேல் பருப்பு பொடி துவிண்டும் சாப்பிடலாம்

Blog Archive