Showing posts with label குழம்பு சாம்பார் வகைகள். Show all posts
Showing posts with label குழம்பு சாம்பார் வகைகள். Show all posts

Saturday, September 10, 2011

கறிவேப்பிலை குழம்பு

தேவையானவை :

கறிவேப்பிலை உருவியது 1 கப்
மிளகாய் வற்றல் 4 -6
மிளகு 2 டீ ஸ்பூன்
புளி பேஸ்ட் 2 ஸ்பூன்
பொட்டுக்கடலை 1 ஸ்பூன்
பூண்டு 5 -6
தக்காளி 1
சீரகம் 1/2 ஸ்பூன்
உப்பு
எண்ணை

செய்முறை :

எல்லாவற்றையும் , சீரகம் தவிர, நன்கு அரைக்கவும் .
வாணலி இல் எண்ணை வைத்து சீரகம் தாளித்து, அரைத்தத்தை கொட்டி வேண்டுமானால் தண்ணீர் விடவும்.
நன்கு கொதித்ததும் இறக்கவும்.
சுவையான 'கறிவேப்பிலை குழம்பு ' ரெடி.

குறிப்பு: 1 வாரம் 10 நாள் வைத்துக்கொள்ளலாம். ஜுர வாய்க்கு நல்லா இருக்கும் புன்னகை

கறிவேப்பிலை குழம்பு 2

தேவையானவை :

கறிவேப்பிலை உருவியது 1 கப்
துவரம் பருப்பு 2 ஸ்பூன்
கடலை பருப்பு 1 ஸ்பூன்
மிளகாய் வற்றல் 4 -6
மிளகு 2 டீ ஸ்பூன்
தேங்காய் 2 டேபிள் ஸ்பூன்
புளி பேஸ்ட் 2 ஸ்பூன்
மஞ்சள் பொடி 1/2 ஸ்பூன்
பெருங்காயப் பொடி 1/2 ஸ்பூன்
வறுத்து அரைத்த வெந்தய பொடி 1/2 ஸ்பூன்
கடுகு 1 ஸ்பூன்
உப்பு
எண்ணை

செய்முறை :

ஒரு வாணலி இல் 1 ஸ்பூன் எண்ணை விட்டு , பருப்புகள், மிளகாய் வற்றல் மற்றும் மிளகை வறுக்கவும்.
தனியே வைக்கவும்.
அதே வாணலி இல் கறிவேப்பிலையை போட்டு நன்கு வறுக்கவும்.
எல்லாவற்றையும் தேங்காயுடன் தண்ணீர் விட்டு அரைக்கவும் .
வாணலி இல் எண்ணை வைத்து கடுகு, மஞ்சள் பொடி தாளித்து, அரைத்தத்தை கொட்டி கிளறவும் ( வேண்டுமானால் தண்ணீர் விடவும்).
வெந்தயப்பொடி, பெருங்காய பொடி போடவும்.
நன்கு கொதித்ததும் இறக்கவும்.
சுவையான 'கறிவேப்பிலை குழம்பு ' ரெடி.

குறிப்பு: தேங்காய் வேண்டாம் என்றால் விட்டு விடலாம்.
வேண்டுமானால் சில பற்கள் பூண்டு அல்லது 5 -6 சின்ன வெங்காயம் தாளிக்கும் போது சேர்க்கலாம். புன்னகை" src="http://illiweb.com/fa/i/smiles/icon_smile.gif" alt="புன்னகை" longdesc="4">

கறிவேப்பிலை குழம்பு 3

தேவையானவை :

கறிவேப்பிலை உருவியது 2 கப்
மிளகாய் வற்றல் 12 - 14
மிளகு 2 ஸ்பூன்
தனியா 2 ஸ்பூன்
புளி பேஸ்ட் 2 ஸ்பூன்
மஞ்சள் பொடி 1/2 ஸ்பூன்
பெருங்காயப் பொடி 1/2 ஸ்பூன்
கடுகு 1 ஸ்பூன்
உப்பு
எண்ணை

செய்முறை :

ஒரு வாணலி இல் 1 ஸ்பூன் எண்ணை விட்டு , தனியா , மிளகாய் வற்றல் மற்றும் மிளகை வறுக்கவும்.
தனியே வைக்கவும்.
வறுத்ததுடன் கறிவேப்பிலையை போட்டு நன்கு, துளி தண்ணீர் விட்டு அரைக்கவும் .
வாணலி இல் எண்ணை வைத்து கடுகு, மஞ்சள் பொடி தாளித்து, அரைத்தத்தை கொட்டி கிளறவும்
புளி பேஸ்ட் , பெருங்காய பொடி போடவும்.
வேண்டுமானால் கொஞ்சம் தண்ணீர் விடவும்.
நன்கு கொதித்தது, கெட்டியானதும் இறக்கவும்.
சுவையான 'கறிவேப்பிலை குழம்பு ' ரெடி.
சூடு சாதத்தில் நிறைய நெய் விட்டு , 'கறிவேப்பிலை குழம்பு விட்டு பிசைந்து சாப்பிடவும்.

குறிப்பு: இதுவும் 1 வாரம் 10 நாள் வைத்துக்கொள்ளலாம் .

Wednesday, August 31, 2011

வத்த குழமபை எப்படி சாப்பிடலாம்? (1)

இது ஒரு பெரிய விஷயமான்னு நினைபிர்கள் , ஆமாம். எதுக்கும் முறை நு ஒன்னு இருக்கே. புன்னகை" longdesc="4" src="http://illiweb.com/fa/i/smiles/icon_smile.gif" alt="புன்னகை">

சுடு சாதத்தில் ‘பிரெஷ் ‘ ஆக உருக்கின ஆவின் நெய் விட்டு ( எனக்கு உத்துகுளி வெண்ணை பிடிக்காது. சோகம்" longdesc="5" src="http://r18.imgfast.net/users/1813/71/41/02/smiles/440806.gif" alt="சோகம்"> முதலில் நல்லா இருக்கும் பிறகு கொஞ்சம் புளிப்பு வாசனை வரும். உங்களுக்கு பிடிச்சா மாதிரி நெய் விடுக்கொங்கோ ) நல்லா குழைய வேகவைத்த பயத்தம் பருப்பை போட்டு ‘மை ‘யாக பிசையவும்.
கையில் ஒரு கவளம் எடுத்துக்கொண்டு, நான்கு விரல்களில் வைத்துக்கொண்டு , கட்டை விரலால் சாதத்தை குழிதுக்கொள்ளவேண்டும்.
அந்த குழி இல் ஒரு ஸ்பூன் வத்த குழம்பை விடனும். வெளியல்
வழியககூடாது.
அப்படியே ‘லபக்’என்று வாய்ல போட்டுக்க வேண்டியது தான். Yummy யாக இருக்கும்.
குழந்தைகள் கூட நன்னா சாப்பிடுவா.
ஒரு ‘குண்டான்’ சாதமும் சீக்கிரம் முடிந்துவிடும்.
Try பண்ணி பாருங்கள்.

வத்த குழமபை எப்படி சாப்பிடலாம்? (2)

இப்ப தயிர் சாதம் .
இதுக்கு நன்றாக மசித்த சாதத்தில், கெட்டியான எருமை தயிர் விட்டு, உப்பு போட்டு ‘மை ‘யாக பிசையவும்.
கையில் ஒரு கவளம் எடுத்துக்கொண்டு, நான்கு விரல்களில் வைத்துக்கொண்டு , கட்டை விரலால் சாதத்தை குழிதுக்கொள்ளவேண்டும்.
அந்த குழி இல் ஒரு ஸ்பூன் வத்த குழம்பை விடனும். வெளியல்
வழியககூடாது.
அப்படியே ‘லபக்’என்று வாய்ல போட்டுக்க வேண்டியது தான். Yummy யாக இருக்கும்.
குழந்தைகள் கூட நன்னா சாப்பிடுவா.
ஒரு ‘குண்டான்’ சாதமும் சீக்கிரம் முடிந்துவிடும்.
இதையும் Try பண்ணி பாருங்கள்.

குழம்பு பொடி

முதலில் குழம்பு பொடி. இது தான் குழம்பின் ருசியை நிர்ணயம் செய்வது. நான் இங்கு தரப்போகும் பொடி 4 தலைமுறைகளாக எங்கள் வீட்டில் உபயோகிப்பது. கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் பிடிக்கும். இதோ அளவுகள்

500gm குண்டு மிளகாய்
500gm தனியா
150gm மிளகு
100gm துவரம் பருப்பு
100gm கடலை பருப்பு
100gm வெந்தயம்
100gm விரலி மஞ்சள்

மேல் கூறிய எல்லா பொருட்களையும் ஒரு டப்பாவில் போட்டு, மெசினில் அரைத்து, ( 3 போட்டு அரைக்கவும் ) ஒரு பேப்பரில் போட்டு ஆறவிடவும். பிறகு
காற்று புகாத டப்பாவில் போட்டு வைக்கவும். தினசரி உபயோகத்துக்கு சிறிய டப்பாவில் எடுத்துவைதுக்கொள்ளவும்.

இந்த பொடி 6 மாதமானாலும் கெடாது. Fridge இல் வைத்தால் வருடக்கணக்கில் வைத்துக்கொள்ளலாம்.

Wednesday, July 20, 2011

நாரத்தை குழம்பு

தேவையானவை:

நாரத்தங்காய் - 1 (சாறு எடுக்கவும் )
வெந்த துவரம் பருப்பு 1/2 கப்
வெல்லம் - 1 சின்ன கட்டி
பச்சை மிளகாய் - 4
குழம்பு மிளகாய் பொடி - 2 ஸ்பூன்
கடுகு - 1 ஸ்பூன்
மஞ்சள் பொடி - 1/4 ஸ்பூன்
புளி பேஸ்ட் - 1/4 ஸ்பூன் (தேவயானால் )
எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
வறுத்து அரைத்த வெந்தய பொடி - 1/2 ஸ்பூன்
பெருங்காய பொடி - 1/4 ஸ்பூன்
கறிவேப்பிலை கொஞ்சம்
உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
வாணலி இல் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு , கறிவேப்பிலை தாளித்து... பச்சை மிளகாய், உப்பு, மஞ்சள்பொடி , சேர்த்து வதக்க வும் .
அதில் வெந்த பருப்பு, நார்தம் காய்ன் சாறு சேர்க்கவும்.
வேண்டுமானால் புளிஜலம் அல்லது புளி பேஸ்ட் போடவும். ( ஆனால் வெறும் நாரத்தை சாரே இந்த குழபுக்கு போறும்)
வெந்தய பொடி, பெருங்காய பொடி மற்றும் உப்பு போடவும்.
நன்றாகக் கொதிக்க விடவும். பிறகு, வெல்லத்தை சேர்க்கவும்.
எல்லாம் சேர்ந்து நன்றாகக் கொதித்து எண்ணெய் பிரிந்து வரும் சமயத்தில் அடுப்பிலிருந்து இறக்கவும்.
ரொம்ப நல்ல டேஸ்ட் ஆன குழம்பு இது.
saadhathil போட்டு சாப்பிடலாம்.

குறிப்பு: ஒரு வாரம் 10 நாள் வைத்து சாப்பிடலாம். வயிறு சரி இல்லயானால் கூட இதை சாப்பிடலாம். நல்லது .

பருப்பு உருண்டை மோர் குழம்பு

தேவையானவை:

துவரம்பருப்பு - 1 கப்
புளிக்காத கெட்டி தயிர் - 1 கப்
தேங்காய் துருவ்ல் - 1/2 கப்
கடலை பருப்பு - 2 ஸ்பூன்
பச்சை மிளகாய் 2
கடுகு - அரை டீஸ்பூன்
குண்டு மிளகாய் - 3 - 4
வெந்தய பொடி - 1/2 ஸ்பூன் ( வறுத்து அரைத்தது)
பெருங்காய பொடி - 1/4 ஸ்பூன்
மஞ்சள் பொடி - 1/4 ஸ்பூன்
எண்ணெய், உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை:
துவரம்பருப்பை ஊற வைத்து அதனுடன் காய்ந்த மிளகாய், உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து மிக்ஸியில் கெட்டியாக அரைக்கவும்.
அதை, சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, இட்லி தட்டில் வைத்து ஆவியில் வேக விட்டு எடுக்கவும்.
தேங்காய் , பச்சைமிளகாய் கடலை பருப்பை ஒரு 10 நிமிஷம் ஊறவைத்து அரைக்கவும்
கடாயில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, சிலுப்பிய தயிர் சேர்க்கவும்.
அதில் உப்பு சேர்க்கவும்.
அரைத்த விழுத்தையும் போடவும். கொதித்து மணம் வரும்போது உருண்டைகளை அதில் மெதுவாகப் போடவும்.
வேண்டுமானால் தண்ணீர் விடவும். நன்றாக கொதிக்கவிடவும்.
வெந்தய பொடி போடவும். பெருங்காய பொடி போடவும்.
நன்கு கொதித்ததும் கறிவேப்பிலை போட்டு இறக்கவும்.

பருப்பு உருண்டைக் குழம்பு

தேவையானவை:

துவரம்பருப்பு - 1 கப்
சாம்பார்பொடி - 3 டீஸ்பூன்
புளி - எலுமிச்சம்பழ அளவு அல்லது புளி பேஸ்ட் 2 ஸ்பூன்
கடுகு - அரை டீஸ்பூன்
குண்டு மிளகாய் - 3 - 4
வெந்தய பொடி - 1/2 ஸ்பூன் ( வறுத்து அரைத்தது)
பெருங்காய பொடி - 1/4 ஸ்பூன்
எண்ணெய், உப்பு - தேவையான அளவு

செய்முறை:
துவரம்பருப்பை ஊற வைத்து அதனுடன் காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து மிக்ஸியில் கெட்டியாக அரைக்கவும்.
அதை, சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, இட்லி தட்டில் வைத்து ஆவியில் வேக விட்டு எடுக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, கரைத்து வடிகட்டிய புளிக் கரைசலை சேர்க்கவும்.
அதில் சாம்பார்பொடி சேர்த்துக் கலக்கி, உப்பு சேர்க்கவும்.
குழம்பு கொதித்து மணம் வரும்போது உருண்டைகளை அதில் மெதுவாகப் போடவும். நன்றாக கொதிக்கவிடவும்.
வெந்தய பொடி போடவும். பெருங்காய பொடி போடவும்.

குறிப்பு: உருண்டைகளை தனியாக ஸ்நாக்ஸ் போல சாப்பிடலாம்.

மலபார் சாம்பார்

அரைக்க தேவயானவை :
5 -7
குண்டு மிளகாய் வற்றல்
2
ஸ்பூன் கடலை பருப்பு
1
ஸ்பூன் தனியா
1/2
கப் துருவின தேங்காய்
1
ஸ்பூன் வெந்தயம்
மற்ற தேவயான பொருட்கள்:
கடுகு
கறிவேப்பிலை
2 -3
ஸ்பூன் தேங்காய் எண்ணை
2
ஸ்பூன் புளி paste
1/2
ஸ்பூன் வறுத்து பொடித்த வெந்தயம்
1
கப் வெந்த துவரம் பருப்பு
பெங்களூர் கத்தரிக்காய் , கத்தரிக்காய்
அல்லது பூசணிக்காய் ஏதாவது ஒரு காய் "தானுக்கு".


செய்முறை :

தேங்காய் தவிர அரைக்கவேண்டிய பொருட்களை வறுத்து, தேங்காயுடன் அரைக்கவும்.
ஒரு வாணலி இல் தேங்காய் எண்ணை விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளிக்கவும்.
வெட்டி வைத்து உள்ள "தானை"போட்டு வதக்கவும்.
2
டம்ப்லர் தண்ணீர் விட்டு, புளி பேஸ்ட், மஞ்சள் பொடி, வெந்தய பொடி, அரைத்தவிழுது , உப்பு என் எல்லாம் போடவும்.
காய் வேகும் வரை நன்கு கொதிக்க விடவும்.
பிறகு இறக்கவும்.
சாதத்துடன் பரிமாறவும். இதற்க்கு பொறித்த அப்பளாம் nandraga irukkum.

கீரை குழம்பு

தேவையானவை:

1cup வெந்த துவரம் பருப்பு
2sp புளி பேஸ்ட்
3 - 4 பச்சை மிளகாய்
1 கட்டு கீரை (முளைக்கிரை அல்லது பருப்பு கீரை )
2 -3sp சாம்பார் பொடி
1 /2sp வறுத்து பொடித்த வெந்தயம்

தாளிக்க:
கடுகு
மஞ்சள் பொடி
கறிவேப்பிலை
கொத்தமல்லி
எண்ணெய்
உப்பு.

செய்முறை:
கீரையை சுத்தம் செய்து நறுக்கவும்.
ஒரு ஆழமான வாணலி அல்லது உருளி இல் எண்ணெய் விடவும்.
கடுகு போட்டு வெடித்ததும் , அரிந்த பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.
நறுக்கிய கீரை போட்டு வதக்கவும்.
இப்போது,
வெந்த பருப்பு, புளி பேஸ்ட், மஞ்சள் பொடி, வறுத்து பொடித்த வெந்தயம்
,சாம்பார் பொடி, உப்பு என எல்லாம் ஒன்றன் பின் ஒன்றாக போடவும்.
நன்கு கொதிக்கும் படி விடவும்.
பிறகு மிளகாய் பொடி வாசம் போனதும், கறிவேப்பிலை,கொத்தமல்லி துவி இறக்கவும்.
"கீரை குழம்பு " ரெடி , சாதத்துடன் பரிமாறலாம்.
சாதத்துடன் பரிமாறவும்.

இஞ்சி குழம்பு

தேவையானவை:

3 ஸ்பூன் புளி பேஸ்ட்
2 ஸ்பூன் துவரம் பருப்பு
2 ஸ்பூன் கடலை பருப்பு
2 ஸ்பூன் சாம்பார் பொடி
2 -3 பெரிய வெங்காயம்
25 - 30 பல் பூண்டு
4-6 இன்ச் இஞ்சி துண்டு
1 ஸ்பூன் வறுத்து பொடித்த வெந்தயம்
கடுகு

மஞ்சள் பொடி
பெருங்காயம் (தேவயானால் )
கறிவேப்பிலை - கொஞ்சம்
எண்ணெய்
உப்பு
2 ஸ்பூன் பொடித்த வெல்லம்

செய்முறை:

முதலில் இஞ்சி இன் தோலியை நீக்கவும் .
பூண்டு உரிக்கவும், வெங்காயம் நறுக்கவும்.
மூன்றையும் மையாக அரைக்கவும்.
வாணலி இல் நல்லெண்ணை விட்டு, கடுகு, கடலை பருப்பு, துவரம் பருப்பு,
கறிவேப்பிலை தாளிக்கவும்.
அரைத்த விழுதை போட்டு வதக்கவும். நன்கு எண்ணை
பிரியும் வரை வதக்கவும். மஞ்சள் பொடி சேர்க்கவும்.
2 டம்பளர் தண்ணீர்
விடவும்.
புளி பேஸ்ட், சாம்பார் பொடி, பெருங்காய பொடி, வறுத்த வெந்தய பொடி
எல்லாம் சேர்க்கவும் .
நன்கு கொதித்து கெட்டியாகும் வரை பொறுக்கவும்.
பிறகு
இறக்கவும். நல்ல மணமுள்ள இஞ்சி குழம்பு தயார்.
சாதத்துடன் பரிமாறவும். தொட்டுக்கொள்ள அப்பளம் போரும்.

குறிப்பு: இந்த குழம்பை ஒரு வாரம் வரை ஃபிரிஜ் இல்லாமலே கூட வைத்து
சாப்பித்லாம். ஃபிரிஜ் இல் வைத்தால் 1 மாதம் கூட வைத்துக்கொள்ளலாம்.
(புளிக்காய்ச்சல் போல் )


வெளிஊர்களுக்கு போகும் போது எடுத்து செல்ல லாம் ரொம்ப உபயோகமானதாக இருக்கும். சமயத்தில் "Bread" il தடவி சாப்பிடலாம்

எண்ணை கத்தரிக்காய் குழம்பு

தேவையானவை :

250 gms குட்டி கத்தரிக்காய்
2 -3 ஸ்பூன் புளி பேஸ்ட்
3 - 4 ஸ்பூன் APP (ALL PURPOSE POWDER)
கொஞ்சம் கறிவேப்பிலை
கொஞ்சம் மஞ்சள் பொடி
2 சிட்டிகை பெருங்காயப்பொடி
1/2 ஸ்பூன் வறுத்து அரைத்த வெந்தய பொடி
1 ஸ்பூன் கடுகு
உப்பு
கத்தரிக்காய் வதக்க நல்லெண்ணை

செய்முறை:
முதலில் குட்டி கத்தரிக்காய் களை அலம்பி காம்பை மட்டும் நறுக்கவும்.
பிறகு, அதை 4 ஆக பிளக்கவும்.
பிளந்த தில் APP யை வைது அடைக்கவும்.
ஒரு வாணலி இல் எண்ணை விட்டு கடுகு தாளிக்கவும்.
கத்தரிக்காய்களை மெதுவே போடவும்.
உப்பு, மஞ்சள் பொடி, பொருங்காயப்பொடி , வெந்தயப்பொடி போட்டு மெல்ல வதக்கவும்.
கொஞ்சம் வதங்கியதும், புளி பேஸ்ட் போடவும்.
தேவயானால் கொஞ்சம் தண்ணீர் விடவும்.
காய் நான்கு வெந்து எண்ணை பிரிய துவங்கியதும் அடுப்பை அணைக்கவும்
சூடு சாத்ததுடன் பரிமாறவும்.
சப்பாத்தி உடனும் நன்றாக இருக்கும்.

கத்தரிக்காய் வற்றல்

கத்தரிக்காய் வற்றல் - இது போடுவதும் சுலபம். குழம்பில் போடுவதும் சுலபம்.
கத்தரிக்காய்யை நீள நீள மாக வெட்டி வெயிலில் நன்றாக காயவைக்கணும். (வைத்தலை உடைக்கவரனும் )

குழம்பு செய்யும் முன் ஒரு 10 - 15 நிமிஷம் தண்ணிரில் ஊரவைக்கணும்.
குழம்பு கொதிக்கும் போதே, ஊறவைத்த தண்ணியுடன் வத்தலையும் போட்டுடனும். புளி தண்ணியுடன் வத்தலும் கொதிக்கணும் அப்பதான் taste வரும்.

இந்த வத்தலை பருப்பு சாம்பாரிலும் போடலாம், வத்த குழம்பிலும் போடலாம்.

சாயந்தரம் ஆக ஆக கத்தரிக்காய் ஊறி ண்டு ரொம்ப நல்ல இருக்கும். அரிசி உப்புமா விற்கு நல்ல துணை. ( எங்க மாமனார் cum தாத்தா இந்த combination நை ரொம்ப விரும்பினார். புன்னகை" src="http://illiweb.com/fa/i/smiles/icon_smile.gif" alt="புன்னகை" longdesc="4"> )

"வற்றல்" குழம்பில் வற்றல் போடும் முறை

கறிகாய் இல்லாவிடில், சுண்டக்காய் வற்றல் , மணத்தக்காளி வற்றல், கத்தரிக்காய் வற்றல், கொத்தவரை வற்றல் போட்டு "வற்றல்" குழம்பு வைக்கலாம் என் சொன்னேன் அல்லவா? அதை எப்படி போடுவது?

அதாவது, சுண்டக்காய் வற்றல் , மணத்தக்காளி வற்றல், கொத்தவரை வற்றல்,
தாமரை தண்டு வற்றல், பாகற்காய் வற்றல் போன்றவற்றை முதலில் எண்ணெயில் வறுத்துக்கொள்ள வேண்டும்.

அதை தனியே எடுத்து வைத்துவிட்டு குழம்பு செய்ய வேண்டும்.
இன்னும் ஒரு இரண்டு நிமிஷம் குழம்பு கொதித்தால் போறும் என்கிற நிலை வரும் பொது, வறுத்து வைத்துள்ள வற்றலை போடணும்.
மற்றுமொரு கொதி வந்ததும் இறக்கணும்.

குறிப்பு: மேல் கூறிய வற்றல் களில் உப்பு இருக்கும். எனவே குழம்பு வைக்கும் போது உப்பு குறைவாக போடணும். இல்லாவிடில் குழம்பு உப்பு கரித்துவிடும்.

அரைத்துவிட்ட சாம்பார்

அரைத்துவிட்ட சாம்பார் - இதை இட்லி சாம்பார் ஆகவும் பயன் படுத்தலாம் புன்னகை" src="http://illiweb.com/fa/i/smiles/icon_smile.gif" alt="புன்னகை" longdesc="4">

தேவையானவை:

1cup வெந்த துவரம் பருப்பு
2sp புளி பேஸ்ட்
2 ஸ்பூன் APP
2 ஸ்பூன் தேங்கா துருவல்
ஒரு கை சின்ன வெங்காயம்
1 தக்காளி ( வேண்டுமானால் ) அரிந்து வைத்துக்கொள்ளவும் , விதைகளை எடுக்கவும் )
1 /2sp வறுத்து பொடித்த வெந்தயம்

தாளிக்க:

கடுகு
மஞ்சள் பொடி
கறிவேப்பிலை
எண்ணெய்
உப்பு.

செய்முறை:

ஒரு ஆழமான வாணலி அல்லது உருளி இல் எண்ணெய் விடவும்.
கடுகு போட்டு வெடித்ததும் ,
தக்காளி மற்றும் வெங்காயம் போட்டு வதக்கவும்.
இப்போது, வெந்த பருப்பு, புளி பேஸ்ட், தேங்கா துருவல், மஞ்சள் பொடி, வறுத்து பொடித்த வெந்தயம் ,APP பொடி, உப்பு என எல்லாம் ஒன்றன் பின் ஒன்றாக போடவும்.
நன்கு கொதிக்கும் படி விடவும்.
பிறகு மிளகாய் பொடி வாசம் போனதும், கறிவேப்பிலை, தூவி இறக்கவும்.
சாதத்துடன் பரிமாறவும்.
உருளை கிழங்கு பொடிமாஸ் , அல்லது எந்த வதக்கின கறியுடனும் ( veg ) நன்றாக இருக்கும்.
குறிப்பு: இதில் முருங்கைக்காய் , முருங்கைக்காய் + சின்ன வெங்காயம், வெறும் பெரிய வெங்காயம், முருங்கைக்காய் + பெரிய வெங்காயம் என் தான் களை மாற்றி குழம்பு செய்யலாம்

மிளகு குழம்பு

மிளகு குழம்பு - உடலுக்கு ஆரோகியமான ஒரு குழம்பு. பத்திய குழம்பு என்று கூட சொல்லலாம்.

தேவையானவை:

10 குண்டு மிளகாய்
2spoon தனியா
2 - 4 ஸ்பூன் மிளகு
பெருங்காயம்
2 ஸ்பூன் புளி பேஸ்ட்
கறிவேப்பிலை - கொஞ்சம்

தாளிக்க:

கடுகு
மஞ்சள் பொடி
கறிவேப்பிலை
எண்ணெய்
உப்பு.

செய்முறை:

முதலில் சொன்னவைகளை எண்ணெயில் வறுத்து, புளி பேஸ்ட் உடன் நன்கு அரைக்கவும்.
இரண்டு டம்பளர் தண்ணிரில் கரைக்கவும்.
ஒரு ஆழமான வாணலில் தாரளமாக எண்ணெய் விட்டு தாளிக்கும் பொருட்களை போட்டு தாளிக்கவும்.
கரைத்து வைத்ததை கொட்டவும்.
உப்பு போடவும்.
நன்கு கொதித்து கெட்டியானதும் இறக்கவும்.
சுடு சாதத்துடன் நெய் போட்டு, மிளகு குழம்பு விட்டு சாப்பிடவும்.
'பருப்பு துவைய' லுடன் நன்றாக இருக்கும்.

குறிப்பு: இந்த குழம்பில் காய்ந்த மாங்காய் துண்டங்கள் போட்டும் செய்யலாம். அவ்வாறு செய்யும் போது புளி மற்றும் உப்பை குறைக்கவும்.

வத்த குழம்பு

வத்த குழம்பு, குடமிளகாய் சாம்பாருக்கு சொத்து எழுதி வைக்காதவர்கள் இதற்கு எழுதி வைக்கலாம். புன்னகை" src="http://illiweb.com/fa/i/smiles/icon_smile.gif" alt="புன்னகை" longdesc="4">

தேவையானவை :

1 பெரிய வெங்காயம் அல்லது ஒரு கை சின்ன வெங்காயம்
1 தக்காளி ( வேண்டுமானால் ) அரிந்து வைத்துக்கொள்ளவும் , விதைகளை எடுக்கவும் )
2 -3sp சாம்பார் பொடி
1 /2sp வறுத்து பொடித்த வெந்தயம்
2sp புளி பேஸ்ட்
1 /2sp துவரம் பருப்பு
1 /2sp கடலை பருப்பு
4 - 5 குண்டு மிளகாய் வற்றல்
கடுகு
மஞ்சள் பொடி
கறிவேப்பிலை
நல்ல எண்ணெய்
உப்பு.

செய்முறை:

ஒரு ஆழமான வாணலி அல்லது உருளி இல் எண்ணெய் விடவும்.
கடுகு போட்டு வெடித்ததும் , துவரம் பருப்பு, கடலை பருப்பு,மிளகாய் வற்றல் போட்டு வதக்கவும்.
தக்காளி மற்றும் வெங்காயம் போட்டு வதக்கவும்.
இப்போது, புளி பேஸ்ட், மஞ்சள் பொடி, வறுத்து பொடித்த வெந்தயம் ,சாம்பார் பொடி, உப்பு என எல்லாம் ஒன்றன் பின் ஒன்றாக போடவும்.
நன்கு கொதிக்கும் படி விடவும்.
பிறகு மிளகாய் பொடி வாசம் போனதும், கறிவேப்பிலை துவி இறக்கவும்.
(எண்ணெய் பிரிந்து வரணும் )
சாதத்துடன் பரிமாறவும்.
சுட்ட அப்பளம் நல்லா இருக்கும்.
எல்லா வறுத்த (fried ) காய் களும் நன்றாக இருக்கும்.

குறிப்பு: வெங்காயம் போடும் போது பெருங்காயம் தேவை இல்ல.

பருப்பு சாம்பாரில் "தான் " என்ன போடலாம்?

பருப்பு சாம்பாரில் "தான் " என்ன போடலாம்?

கீழ் கண்ட காய்கறி லிஸ்ட் லிருந்து எதாவது ஒன்றை போடலாம்.
அவை: குடமிளகாய் (இந்த சாம்பாருக்கு சொத்தையே எழுதி வைக்கலாம் அவ்வளோ taste புன்னகை" src="http://illiweb.com/fa/i/smiles/icon_smile.gif" alt="புன்னகை" longdesc="4"> ) முள்ளங்கி, நூல்கோல் , கத்தரி, வெண்டை, சின்ன வெங்காயம், முருங்கைக்காய், உருளை, காரட் , சௌ சௌ.

இதில் , வெங்காயம், சின்னவெங்காயம், குடமிளகாய், கத்தரி, வெண்டை போன்றவற்றை தாளித்ததும் போட்டு வதக்கணும்.

முள்ளங்கி, நூல்கோல் ,முருங்கைக்காய், காரட் , சௌ சௌ ஆகியவற்றை பருப்புடன் வேகவைத்து போடணும்.

உருளை யை வேக வைத்து தனியே வதக்கி போடணும்.

தனக்கு என் வாசம் இல்லாத காரட் , சௌ சௌ , பீன்ஸ் போன்றவற்றை சேர்த்து போடலாம்.

பருப்பு சாம்பார்

சாதாரணமாக நம் வீடுகளில் தினசரி செய்யும் ஒன்று இது. சாம்பாரில் போடும் 'தான் 'களை மாற்றி போடுவதால் சாம்பாரின் சுவையையும் மாற்றலாம். உதாரணத்துக்கு, குடமிளகாய் சாம்பார், முள்ளங்கி சாம்பார், முருங்கைக்காய் சாம்பார். எனவே நான் சாம்பார் செய்முறை யை சொல்கிறேன் மற்றும் அதில் போடும் காய்களையும் சொல்கிறேன். பிறகு உங்கள் கைவண்ணம் தான்.

Here we go........

தேவையானவை:

1cup வெந்த துவரம் பருப்பு
2sp புளி பேஸ்ட்
3 - 4 பச்சை மிளகாய்
1 பெரிய வெங்காயம் அல்லது ஒரு கை சின்ன வெங்காயம்
1 தக்காளி ( வேண்டுமானால் ) அரிந்து வைத்துக்கொள்ளவும் , விதைகளை எடுக்கவும் )
2 -3sp சாம்பார் பொடி
1 /2sp வறுத்து பொடித்த வெந்தயம்

தாளிக்க:

கடுகு
மஞ்சள் பொடி
கறிவேப்பிலை
கொத்தமல்லி


எண்ணெய்
உப்பு.

செய்முறை:

ஒரு ஆழமான வாணலி அல்லது உருளி இல் எண்ணெய் விடவும்.
கடுகு போட்டு வெடித்ததும் , அரிந்த பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.
தக்காளி மற்றும் வெங்காயம் போட்டு வதக்கவும்.
இப்போது, வெந்த பருப்பு, புளி பேஸ்ட், மஞ்சள் பொடி, வறுத்து பொடித்த வெந்தயம் ,சாம்பார் பொடி, உப்பு என எல்லாம் ஒன்றன் பின் ஒன்றாக போடவும்.
நன்கு கொதிக்கும் படி விடவும்.
பிறகு மிளகாய் பொடி வாசம் போனதும், கறிவேப்பிலை,கொத்தமல்லி துவி இறக்கவும்.
சாதத்துடன் பரிமாறவும்.
எந்த கறியுடனும் ( veg ) நன்றாக இருக்கும்.
எலுமிச்சை ஊறுகாய் அல்லது ஆவக்காய் கூட போறும். ஜாலி" src="http://r18.imgfast.net/users/1813/71/41/02/smiles/755837.gif" alt="ஜாலி" longdesc="17">


குறிப்பு: வெங்காயம் போடும் போது பெருங்காயம் தேவை இல்ல.

Blog Archive