Ingredients:
- கடலை பருப்பு 2 spoon
- உளுத்தம் பருப்பு 1 ஸ்பூன்
- துவரம் பருப்பு 1 ஸ்பூன்
- மிளகாய் வற்றல் 2 -4
- மிளகு 1/2 ஸ்பூன்
- கடுகு 1 ஸ்பூன்
- வெந்தயம் 1/4 ஸ்பூன்
- பெரும்காயப்பொடி 1/2 ஸ்பூன்
- தேங்காய் துருவல் 2 ஸ்பூன்
- எண்ணை
- உப்பு
- குழப்பிய மோர் 2 குப்
Method:
- கடுகு, தேங்காய் தவிர எல்லாவற்றையும் வறுத்து அரைக்கவும்.
- அரைக்கும்போது தேங்காய் சேர்த்து அரைக்கவும்.
- வாணலி இல் எண்ணை விட்டு கடுகு தாளித்து, அரைத்தத்தை கொட்டவும்.
- மோரையும் சேக்கவும், உப்பு போட்டு நன்கு கொதித்ததும் இறக்கவும்.
- அவ்வளவுதான், மோர் குழம்பு ரெடி.
Ingredients:
- 'திக்' மோர் 2 கப் (புளிப்பில் லாதது)
- கடலை பருப்பு 2 ஸ்பூன்
- தனியா 1 ஸ்பூன்
- அரிசி 1 ஸ்பூன்
- கடுகு 1/2 ஸ்பூன்
- சீரகம் 1/2 ஸ்பூன்
- தேங்காய் துருவல் 2 டேபிள் ஸ்பூன்
- இஞ்சி 1 துண்டு
- சிவப்பு மெளகாய் 2 -3
- பச்சை மெளகாய் 2 - 3
- மஞ்சள் பொடி ஒரு சிட்டிகை
- எண்ணெய் 2 ஸ்பூன்
- உப்பு தேவையான அளவு
- கறிவேப்பிலை
Method:
- கடலை பருப்பை ஊற வைக்கவும்.
- கடுகு தவிர எல்லா சாமான் களையும் சேர்த்து அரைக்கவும்.
- ஒரு வாணலி இல் கடுகு, கறிவேப்பிலை , மஞ்சள்பொடி தாளித்து, அரைத்த விழுது, 'திக்' ஆனா மோர், உப்பு போட்டு கலக்கவும்.
- நன்கு கொதிக்கட்டும் .
- நடு நடு வில் கிளறவும்.
- மோர் குழம்பு ரெடி.
- சாதத்தில் போட்டு சாப்பிடலாம்.
Notes:
- இதில் வெண்டக்காய், முருங்க காய், பெங்களூரு கத்தரிக்காய், பூசணிக்காய், வேகவைத்தது , வறுத்த உருளை கிழங்கு ஆகியன 'தான்' ஆக போடலாம்.
Ingredients:
- 'திக்' மோர் 2 கப் (புளிப்பில் லாதது)
- துவரம் பருப்பு 2 ஸ்பூன்
- கடலை பருப்பு 1 ஸ்பூன்
- சீரகம் 1 ஸ்பூன்
- கடுகு 1/2 ஸ்பூன்
- பச்சை மெளகாய் 2 - 3
- மஞ்சள் பொடி ஒரு சிட்டிகை
- எண்ணெய் 2 ஸ்பூன்
- உப்பு தேவையான அளவு
- துருவின தேங்காய் 2 ஸ்பூன்
- கறிவேப்பிலை
Method:
- துவரம் பருப்பு, கடலை பருப்பை ஊற வைக்கவும்.
- கடுகு தவிர எல்லா சாமான் களையும் அரைக்கவும்.
- ஒரு வாணலி இல் கடுகை தாளித்து, அரைத்த விழுது, 'திக்' ஆனா மோர், உப்பு போட்டு கலக்கவும்.
- மஞ்சள் பொடி போடவும்.நன்கு கொதிக்கட்டும் .
- நடு நடு வில் கிளறவும்.கறிவேபலை போட்டு இற கவும்.
- மோர் குழம்பு ரெடி.
- சாதத்தில் போட்டு சாப்பிடலாம் .
Ingredients:
- புளிப்பான மாங்காய் 1 தோல் சீவி நறுக்கி வைக்கவும்
- துவரம் பருப்பு 1 கப்
- பச்சை மிளகாய் 2 - 4
- தாளிக்க கடுகு
- கறிவேப்பிலை
- எண்ணை தாளிக்க
- பெருங்காயம் 1/4 ஸ்பூன்
- சாம்பார் பொடி 2 டீ ஸ்பூன்
- மஞ்சள் பொடி 1/2 ஸ்பூன்
- வறுத்து அரைத்த வெந்தய பொடி 1/2 ஸ்பூன்
Method:
- மாங்காய் மற்றும் துவரம் பருப்பை ஒன்றாக குக்கர் il வேக வைக்கவும்.
- உருளி இல் எண்ணை விட்டு தாளிக்கணும்.
- வெந்த மாங்காய் மற்றும் பருப்பை அதில் விடவும்.
- நன்கு கிளறவும்.
- சாம்பார் பொடி, மஞ்சள் பொடி, பெருங்காயப்பொடி, வெந்தயபொடி எல்லாம் போடணும்.
- நல்லா கொதிக்கட்டும் பிறகு இறக்குங்கள்.
- ரொம்ப நல்லா இருக்கும்.
Notes:
- புளிகெடுதல் என்று சொல்லிக்கொண்டே நாம் உபயோகிக்கிறோம், எனவே எப்போ எப்போ முடியுமோ அப்போதெல்லாம் புளியை தவிர்த்து எலுமிச்சை, தக்காளி, பைன் ஆப்பிள் மற்றும் மாங்காய் புளிப்பை உபயோகிப்பது உடலுக்கும் நல்லது , டேஸ்ட்க்கும் நல்லது
Ingredients:
- நாரத்தங்காய் - 1 (சாறு எடுக்கவும் )
- வெந்த துவரம் பருப்பு 1/2 கப்
- வெல்லம் - 1 சின்ன கட்டி
- பச்சை மிளகாய் - 4
- குழம்பு மிளகாய் பொடி - 2 ஸ்பூன்
- கடுகு - 1 ஸ்பூன்
- மஞ்சள் பொடி - 1/4 ஸ்பூன்
- புளி பேஸ்ட் - 1/4 ஸ்பூன் (தேவயானால் )
- எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
- வறுத்து அரைத்த வெந்தய பொடி - 1/2 ஸ்பூன்
- பெருங்காய பொடி - 1/4 ஸ்பூன்
- கறிவேப்பிலை கொஞ்சம்
- உப்பு - தேவையான அளவு.
Method:
- வாணலி இல் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு , கறிவேப்பிலை தாளித்து... பச்சை மிளகாய், உப்பு, மஞ்சள்பொடி , சேர்த்து வதக்கவும் .
- அதில் வெந்த பருப்பு, நார்தம்காய்ன் சாறு சேர்க்கவும்.
- வேண்டுமானால் புளிஜலம் அல்லது புளி பேஸ்ட் போடவும். ( ஆனால் வெறும் நாரத்தை சாரே இந்த குழபுக்கு போறும்)
- வெந்தய பொடி, பெருங்காய பொடி மற்றும் உப்பு போடவும்.
- நன்றாகக் கொதிக்க விடவும். பிறகு, வெல்லத்தை சேர்க்கவும்.
- எல்லாம் சேர்ந்து நன்றாகக் கொதித்து எண்ணெய் பிரிந்து வரும் சமயத்தில் அடுப்பிலிருந்து இறக்கவும்.
- ரொம்ப நல்ல டேஸ்ட் ஆன குழம்பு இது.
- சாதத்தில் போட்டு சாப்பிடலாம்.
Notes:
- ஒரு வாரம் 10 நாள் வைத்து சாப்பிடலாம். வயிறு சரி இல்லயானால் கூட இதை சாப்பிடலாம். நல்லது .
Ingredients:
- காய்ந்த மாங்காய் துண்டங்கள் - 10 -12
- மிளகு - 2 -4 டீ ஸ்பூன்
- மிளகாய் வற்றல் 10 -12
- தனியா 2 டேபிள் ஸ்பூன்
- பெருங்காயப்பொடி 1/4 டீ ஸ்பூன்
- புளி ஜலம் - 2 கப் அல்லது 2 டீ ஸ்பூன் புளி பேஸ்ட்
- உப்பு
- எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
- கறிவேப்பிலை - கொஞ்சம்
- மஞ்சள் பொடி - கொஞ்சம்
- தாளிக்க கொஞ்சம் கடுகு , கறிவேப்பிலை
Method:
- மாங்காய் துண்டங்களை கொஞ்சம் தண்ணிரில் ஊற வைக்கவும்.
- வாணலி இல் மிளகு,மிளகாய் வற்றல், தனியா மற்றும் கறிவேப்பிலையை கொஞ்சம் எண்ணெய் விட்டு வறுக்கவும்.
- மிக்சி இல் அரைக்கவும்.
- வாணலி இல் எண்ணெய் விட்டு கடுகு கறிவேப்பிலை தாளிக்கவும்.
- புளி ஜலம் விடவும்.
- மட்டாக உப்பு போடவும்.
- ஊறவைத்த மாங்காய் துண்டங்களை போடவும்.
- பெருங்காயப்பொடி மற்றும் மஞ்சள் பொடி போடவும்.
- அரைத்து வைத்த மசாலாவையும் போடவும்.
- எல்லாமாக சேர்ந்து நன்கு கொதிக்கட்டும்.
- மாங்காய் வெந்து குழம்பு இறுகும் வரை குழம்பு கொதிக்கட்டும்.
- பிறகு இறக்கவும்.
- ரொம்ப மணமான மிளகு குழம்பு தயார்.
- சுடு சாதத்தில் நிறைய நெய் விட்டு இதை சாப்பிடவும்.
- காச்சின அப்பளம் போறும் தொட்டுக்க
Notes:
- மிளகு குழம்பு உடலுக்கு ரொம்ப நல்லது. இதை மாங்காய் போட்டு அல்லது போடாமலும் செய்யலாம். குளிர் காலத்தில் சளி பிடித்திருக்கும் போது வாய்க்கு ரொம்ப ஆரோகியமாக இருக்கும்.
- மாங்காய் இல் உப்பு இருப்பதால் உப்பு போடும் போது நினைவாக குறைந்த அளவே போடவும்.
Ingredients:
- புளி பேஸ்ட் 2 ஸ்பூன்
- தனியா 2 டீ ஸ்பூன்
- மிளகு 2 டீ ஸ்பூன்
- மிளகாய் வற்றல் 10 -12
- கடலை பருப்பு 2 டீ ஸ்பூன்
- உளுத்தம் பருப்பு 2 டீ ஸ்பூன்
- பெருங்காயம் 1 சின்ன துண்டு
- எண்ணெய் 2 டீ ஸ்பூன்
- கறிவேப்பிலை கொஞ்சம்
- மஞ்சள் பொடி
Method:
- வாணலி இல் எண்ணை விட்டு தனியா, பருப்புகள், மிளகு, மிளகாய் மற்றும் பெருங்காயம் போட்டு வறுக்கவும்.பிறகு கறிவேப்பிலையும் போட்டு வறுக்கவும்.
- புளி பேஸ்ட் போட்டு எல்லாவற்றையும் நன்கு அரைக்கவும்.தேவையானால் கொஞ்சம் தண்ணீர் விடவும், நன்கு கரைக்கவும்.
- மீண்டும் வாணலி இல் கொஞ்சம் எண்ணெய் விட்டு, கரைத்து வைத்திருப்பதை கொட்டவும்.
- மஞ்சள் பொடி போட்டு, நன்கு கொதித்ததும் இறக்கவும்.
Ingredients:
Method:
- இது ஒரு பெரிய விஷயமான்னு நினைபிர்கள் , ஆமாம். எதுக்கும் முறை நு ஒன்னு இருக்கே.
- சுடு சாதத்தில் 'பிரெஷ் ' ஆக உருக்கின ஆவின் நெய் விட்டு ( எனக்கு உத்துகுளி வெண்ணை பிடிக்காது. முதலில் நல்லா இருக்கும் பிறகு கொஞ்சம் புளிப்பு வாசனை வரும். உங்களுக்கு பிடிச்சா மாதிரி நெய் விடுக்கொங்கோ ) நல்லா குழைய வேகவைத்த பயத்தம் பருப்பை போட்டு 'மை 'யாக பிசையவும்.
- கையில் ஒரு கவளம் எடுத்துக்கொண்டு, நான்கு விரல்களில் வைத்துக்கொண்டு , கட்டை விரலால் சாதத்தை குழிதுக்கொள்ளவேண்டும்.
- அந்த குழி இல் ஒரு ஸ்பூன் வத்த குழம்பை விடனும். வெளியல்
- வழியககூடாது.
- அப்படியே 'லபக்'என்று வாய்ல போட்டுக்க வேண்டியது தான். Yummy யாக இருக்கும்.
- குழந்தைகள் கூட நன்னா சாப்பிடுவா.
- ஒரு 'குண்டான்' சாதமும் சீக்கிரம் முடிந்துவிடும்.
- Try பண்ணி பாருங்கள்.
Ingredients:
- கறிகாய் இல்லாவிடில், சுண்டக்காய் வற்றல் , மணத்தக்காளி வற்றல், கத்தரிக்காய் வற்றல், கொத்தவரை வற்றல் போட்டு "வற்றல்" குழம்பு வைக்கலாம் என் சொன்னேன் அல்லவா? அதை எப்படி போடுவது?
Method:
- அதாவது, சுண்டக்காய் வற்றல் , மணத்தக்காளி வற்றல், கொத்தவரை வற்றல்,
- தாமரை தண்டு வற்றல், பாகற்காய் வற்றல் போன்றவற்றை முதலில் எண்ணெயில் வறுத்துக்கொள்ள வேண்டும்.
- அதை தனியே எடுத்து வைத்துவிட்டு குழம்பு செய்ய வேண்டும்.
- இன்னும் ஒரு இரண்டு நிமிஷம் குழம்பு கொதித்தால் போறும் என்கிற நிலை வரும் பொது, வறுத்து வைத்துள்ள வற்றலை போடணும்.
- மற்றுமொரு கொதி வந்ததும் இறக்கணும்.
Notes:
- மேல் கூறிய வற்றல் களில் உப்பு இருக்கும். எனவே குழம்பு வைக்கும் போது உப்பு குறைவாக போடணும். இல்லாவிடில் குழம்பு உப்பு கரித்துவிடும்.
Ingredients:
- பூசணி துருவல் – ஒரு கப்,
- உளுத்தம்பருப்பு – ஒரு கப்,
- மிளகாய் வற்றல் – 5 முதல் 8,
- உப்பு – தேவையான அளவு,
- பெருங்காயம – கால் டீஸ்பூன்
Method:
- உளுத்தம்பருப்பை அரை மணி நேரம் ஊற வைத்து மிளகாய் சேர்த்து கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்.
- அதனுடன் பூசணிக்காய் துருவல், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து நன்றாக பிசையவும்.
- பிசைந்த மாவை பிளாஸ்டிக் பேப்பரில் சிறிது சிறிதாக கிள்ளிப் போட்டு, நன்றாக காய்ந்ததும் எடுக்கவும்.
- வத்தகுழம்பு , பருப்புசாம்பார், பொரிச்ச கூட்டு செய்யும்போது இதைப் பொரித்துப் போட்டால், சுவையும் மணமும் கூடும்.
Notes:
- பூசணிக்காய் துருவல் போடாமலும் இதை செய்யலாம்.
Ingredients:
- 2 கப் அரிசி மாவு
- 1 / 2 கப் பொட்டுக்கடலை மாவு
- 10 மிளகாய்வற்றல்
- 4 - 5 பூண்டு பற்கள்
- அரை மூடி தேங்காய்
- 2 -3 ஸ்பூன் நெய்
- உப்பு
- பொரிக்க எண்ணெய்
Method:
- பூண்டு , மிளகாய் வற்றல் மற்றும் தேங்காய் யை விழுதாக அரைக்கவும்.
- ஒரு பெரிய பேசினில் மாவுகள் மற்றும் அரைத்த விழுது, உப்பு போடவும்.
- கைகளால் நன்கு கலக்கவும்.
- தண்ணீர் விட்டு நன்கு பிசையவும்.
- அடுப்பில் வாணலி போட்டு எண்ணெய் விட்டு, சுட்டதும்,
- தேன்குழல் அச்சில், 'நாடா' தட்டு போட்டு , மாவை போட்டு எண்ணெய் இல் பிழியவும்.
- நிதானமாக அடுப்பு எரியும்படி பர்த்துக்கவேண்டும்.
- சிறிது நேரம் கழித்து திருப்பவும்.
- மறுபுறமும் வெந்ததும் எடுக்கவும்.
- 'ரிப்பன் பகோடா' தயார்.
Ingredients:
- 2 கப் அரிசி மாவு
- 1 / 2 கப் பொட்டுக்கடலை மாவு
- 1sp மிளகாய்பொடி
- சோடா உப்பு ஒரு சிட்டிகை
- 2 -3 sp நெய்
- உப்பு
- பொரிக்க எண்ணெய்
Method:
- ஒரு பெரிய பேசினில் மாவுகள் ,மிளகாய்பொடி,சோடா உப்பு, உப்பு மற்றும் நெய் யை போடவும்.
- கைகளால் நன்கு கலக்கவும்.
- தண்ணீர் விட்டு நன்கு பிசையவும்.
- அடுப்பில் வாணலி போட்டு எண்ணெய் விட்டு, சுட்டதும்,
- தேன்குழல் அச்சில், 'நாடா' தட்டு போட்டு , மாவை போட்டு எண்ணெய் இல் பிழியவும்.
- நிதானமாக அடுப்பு எரியும்படி பர்த்துக்கவேண்டும்.
- சிறிது நேரம் கழித்து திருப்பவும்.
- மறுபுறமும் வெந்ததும் எடுக்கவும்.
- 'ரிப்பன் பகோடா' தயார்.
Ingredients:
- 1 கப் அரிசி மாவு
- 4 கப் கடலை மாவு
- 1 / 2 கப் தேங்காய் பால்
- 10 - 12 பச்சை மிளகாய்
- 2 ஸ்பூன் துருவின இஞ்சி
- உப்பு
- பெருங்காயம் கால் ஸ்பூன்
- சோடா உப்பு ஒரு சிட்டிகை
- பொரிக்க எண்ணெய்
Method:
- பச்சை மிளகாய் + இஞ்சியை அரைக்கவும்.
- அரிசி மாவு , கடலை மாவு, பெருங்காயம் மற்றும் அரைத்த பச்சை மிளகாய் , இஞ்சி, சோடா உப்பு எல்லாம் ஒன்றாக போட்டு நன்கு கலக்கவும்.
- உப்பு மற்றும் தேங்காய் பால் விட்டு மாவு பிசையவும்.
- தேவையானால் கொஞ்சம் தண்ணீர் விட்டு பிசையவும்.
- முறுக்கு அச்சில் 'ரிப்பன் பகோடா' தட்டு போட்டு மாவை ரொப்பி சூடான எண்ணெய் இல் பிழியவும் .
- இரண்டு பக்கமும் வெந்ததும் எடுக்கவும்.
- கலப்பு மாவில் செய்வதை விட அரைத்து செய்யும் இது ரொம்ப ருசியாக இருக்கும்.
Ingredients:
- 2 கப் அரிசி
- 1 கப் கடலை பருப்பு
- 2 டேபிள் ஸ்பூன் துவரம் பருப்பு
- 10 - 12 மிளகாய் வற்றல்
- உப்பு
- 2 டீ ஸ்பூன் நெய் அல்லது வெண்ணை
- சோடா உப்பு ஒரு சிட்டிகை
- பொரிக்க எண்ணெய்
Method:
- அரிசி , கடலை பருப்பு, துவரம் பருப்பு மற்றும் மிளகாய் வற்றல் எல்லாம் ஒன்றாக போட்டு மிஷினில் கொடுத்து அரைக்கவும்.
- ஒரு பேசினில் சோடா உப்பு மற்றும் வெண்ணை போட்டு நன்கு நுரைக்க தேய்க்கவும்.
- பிறகு உப்பு மற்றும் அரைத்த மாவை போட்டு கலக்கவும்.
- கொஞ்சம் தண்ணீர் விட்டு பிசையவும்.
- முறுக்கு அச்சில் 'ரிப்பன் பகோடா' தட்டு போட்டு மாவை ரொப்பி சூடான எண்ணெய் இல் பிழியவும் .
- இரண்டு பக்கமும் வெந்ததும் எடுக்கவும்.
- கலப்பு மாவில் செய்வதை விட அரைத்து செய்யும் இது ரொம்ப ருசியாக இருக்கும்.
Ingredients:
Method:
- ஒரு பெரிய பேசினில் ,ஓமபொடி, காரா பூந்தி ,கனமான அவல் (வறுத்து), பொட்டுகடலை, வேர்கடலை (வறுத்து தோல் உரித்தது ), முந்தரி பருப்பு (வறுத்து உடைத்து), கோதுமை சிப்ஸ் ',உருளை சிப்ஸ், காரா சேவை அல்லது முள்ளு தேன்குழல்' என் எல்லாவற்றிலும் ஒவ்வொரு கப் எடுத்துக்கொண்டு, கறிவேப்பிலையும் பொறிதுப்போட்டு குலுக்கவும்.
- பிறகு உப்பு, மிளகாய்பொடி , மற்றும் பெருங்காயபொடி போட்டு குலுக்கவும்.
- சுவையான 'மிக்ஸ்ர்' ரெடி
Ingredients:
- 2 cup அரிசி மாவு
- 1cup கடலை மாவு
- 2 -3 sp பட்டர் - வெண்ணை
- 1 /2sp பெருங்காய பொடி
- 2 -3 sp எள்
- உப்பு
- பொரிக்க எண்ணெய்
Method:
- ஒரு பெரிய பேசினில் மாவு,பெருங்காய பொடி, எள் , உப்பு மற்றும் வெண்ணையை போடவும்.
- கைகளால் நன்கு கலக்கவும்.
- தண்ணீர் விட்டு நன்கு பிசையவும்.
- அடுப்பில் வாணலி போட்டு எண்ணெய் விட்டு, சுட்டதும்,
- தேன்குழல் அச்சில், 'முள்ளு தேன்குழல்' தட்டு போட்டு , மாவை போட்டு எண்ணெய் இல் பிழியவும்.
- நிதானமாக அடுப்பு எரியும்படி பர்த்துக்கவேண்டும்.
- சிறிது நேரம் கழித்து திருப்பவும்.
- மறுபுறமும் வெந்ததும் எடுக்கவும்.
- கரகரப்பாக நன்றாக இருக்கும்.
Images:
Ingredients:
- 200gms கனமான அவல்
- 100gms பொட்டுகடலை
- 100gms வேர்கடலை (வறுத்து தோல் உரித்தது )
- 50gms முந்தரி பருப்பு (உடைத்து)
- 50gms உலர் திராக்ஷை
- 50gms எள்
- 25gms சோம்பு
- கறிவேப்பிலை கொஞ்சம்
- பெருங்காய பொடி - ஒரு சிட்டிகை
- மஞ்சள் பொடி - ஒரு சிட்டிகை
- உப்பு தேவையான அளவு
- 2 - 3 சிகப்பு மிளகாய்
- 1sp கடுகு
- 1sp - 2sp எண்ணெய்
- 1sp சர்க்கரை (பொடித்தது)
Method:
- ஒரு கடாயை சூடுபடுத்தவும்.
- அதில் கனமான அவல்/கெட்டி அவலை போட்டு நன்கு வறுக்கவும்.
- தனியே வைக்கவும்.
- இப்போது எண்ணெய் விட்டு, கடுகு, உடைத்த சிவப்பு மிளகாய் போட்டு நன்கு வறுக்கவும்.
- பிறகு சோம்பு, எள், பொட்டுகடலை, வேர்கடலை (வறுத்து தோல் உரித்தது ),முந்தரி பருப்பு (உடைத்து), உலர் திராக்ஷை,கறிவேப்பிலை பெருங்காய பொடி,மஞ்சள் பொடி போட்டு நன்கு வறுக்கவும்.
- அடுப்பை சிறிய தணலில் வைக்கவும்.
- உப்பு, சர்க்கரை (பொடித்தது) சேர்க்கவும்.
- நன்கு கலக்கவும்.
- இப்போது தனியே வறுத்து வைத்த அவலை போட்டு நன்கு கலக்கவும்.
- அடுப்பை அணைக்கவும்.
- சுவையான 'அவல் மிக்ஸ்ர்' ரெடி.
Ingredients:
- 500 gms கார்ன் ப்ளகேஸ் (cornflakes ) plain
- 150 gms முந்தரி பருப்பு
- 150gms பாதாம்
- 100gms உலர் திராக்ஷை
- 1sp சர்க்கரை
- 1sp மிளகாய் பொடி
- 1 /2sp உப்பு
- கறிவேப்பிலை கொஞ்சம்
- 1 தேக்கரண்டி எண்ணை
Method:
- பாதாமை தண்ணிரில் 15 நிமிடங்களுக்கு ஊறவைக்கவும்.
- முந்திரியை சரிபாதியாக உடைதுவைத்துக்கொள்ளவும்.
- ஊரிய பாதாமை தோல் உரித்து, சரிபாதியாக உடைதுவைத்துக்கொள்ளவும்
- கறிவேப்பிலை, உலர் திராக்ஷை யை அலம்பி துடைக்கவும்.
- அடுப்பை பற்றவைக்கவும் .
- ஒரு கடாயில் எண்ணெய் விட்டு, முந்தரி பருப்பு, பாதாம், கறிவேப்பிலை, உலர் திராக்ஷை எல்லாவற்றையும் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு பொரிக்கவும்.
- தீயை குறைத்து கார்ன் ப்ளகேஸ் (cornflakes ) போடவும். நன்கு வறுக்கவும்.
- அடுப்பை அணைக்கவும்.
- இப்பொழுது உப்பு, சர்க்கரை,மிளகாய் பொடி சேர்த்து நன்கு கலக்கவும்.
- 'ராயல் மிக்ஸ்ர்' ரெடி.
Ingredients:
- வறுத்து, தோல் நீக்கிய வேர்க்கடலை – 2 கப்
- வறுத்த வெள்ளை எள் – ஒரு டேபிள்ஸ்பூன்
- மிளகாய் வற்றல் – 6 (வறட்டு வாணலியில் லேசாக வறுக்கவும்)
- பூண்டு – 6 - 8 பல்
- உப்பு – தேவையான அளவு.( வறட்டு வாணலியில் லேசாக வறுக்கவும்)
Method:
- கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் ஒன்று சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைக்கவும்.
- சூடான சாதத்தில் சிறிது நெய் விட்டு வேர்க்கடலைப் பொடியைப் போட்டு பிசைந்து சாப்பிட… சூப்பர் போங்கோ
Ingredients:
- புதினா 2 கப் உருவியது
- உளுத்தம் பருப்பு 2 டேபிள் ஸ்பூன்
- கடலை பருப்பு 2 டேபிள் ஸ்பூன்
- தனியா 2 டேபிள் ஸ்பூன்
- கடுகு 1/2 ஸ்பூன்
- குண்டு மிளக்காய் வற்றல் 12 -14
- புளி சிறிய எலுமிச்சை அளவு
- பெருங்காய பொடி 1/4 டீ ஸ்பூன்
- உப்பு
- எண்ணை
- மிளகு 1 ஸ்பூன் (காரம் அதிகம் தேவைபடுபவர்கள் இதை சேர்க்கலாம் )
Method:
- முதலில் புதினாவை ஆய்ந்து அலம்பி வடிய விடணும்.
- வெறும் வாணலி இல் நன்கு வறுக்கணும்.
- வறுத்ததை கை இல் நொறுக்கினால் நொறுங்கணும் அது தான் பதம்
- அதை தட்டில் கொட்டி வைக்கவும்
- புளியை சிறிது சிறிதாக பிச்சு போட்டு நன்கு வறுக்கணும்
- அதையும் தனியே வைக்கக்ணும்.
- பின் வாணலி இல் எண்ணை விட்டு மற்ற சாமான்களை வறுக்கணும்
- பின்பு எல்லா வற்றை யும் மிசில பொடிக்கணும்.
- கமகமக்கும் புதினா பொடி தயார்.
- சாதத்தில் போட்டு சாப்பிடலாம்.
- நெய் அல்லது நல்லெண்ணெய் விட்டு சாப்பிடலாம்.
- தொட்டுக்கொளா சுட்ட அப்பளம் அல்லது தயிர் போறும் .
Ingredients:
- 1 கப் தேங்காய் துருவல்
- 1/3 கப் எள்
- 1/2 கப் வேர்கடலை வறுத்தது
- பூண்டு 15 - 20
- 2 மிளகாய் வற்றல்
- உப்பு
Method:
- தேங்காய் துருவலை சிவக்க வறுக்கவும்.
- அதேபோல எள்ளையும் வறுக்கவும்.
- இவைகளுடன் மற்ற பொருட்கள் சேர்த்து மிக்சி இல் அரைக்கவும்.
- அவ்வளவுதான் வேர்கடலை பூண்டு பொடி ரெடி.
- சுடுசாதத்தில் போட்டு சாப்பிடவேண்டியது தான்
Ingredients:
- பொட்டுகடலை 1 கப்
- வேர்கடலை 1 / 4 கப்
- வத்த மிளகாய் 20 - 25
- பூண்டு 10 - 15
- கறிவேப்பிலை கொஞ்சம்
- உப்பு கொஞ்சம்
Method:
- எல்லாவற்றையும் வறட்டு வாணலி இல் போட்டு வறுக்கவும்.
- பின் மிக்சி இல் போட்டு பொடிக்கவும் .
- அவ்வளவு தான் பருப்பு பொடி தயார்.
Ingredients:
- 1 கப் சிவக்க வறுத்த தேங்காய் துருவல்
- 1/2 கப் வறுத்த வேர்கடலை
- 1/2 கப் வறுத்த எள்
- 10 மிளகாய் வற்றல் (குண்டு)
- 10 -12 பூண்டு
- உப்பு
- கொஞ்சம் எண்ணை
Method:
- எல்லாவற்றயும் மிக்சி இல் போட்டு பொடிக்கவும்.
- சாத்ததில் போட்டு சாப்பிடவும்.
- சுவையாக இருக்கும்.
Ingredients:
- 10 பல் பூண்டு
- ஒரு டேபிள் ஸ்பூன் தேங்காய் துருவல்
- 3 - 4 குண்டு மிளகாய்
- உப்பு
Method:
- எல்லாவற்றையும் ஜஸ்ட் எண்ணெய் தடவிய வாணலில் வறுக்கவும்.
- எல்லாவற்றையும் மிக்சி இல் பொட்டு பொடிக்கவும்.
- வாசனையாக நல்ல இருக்கும்.
- சுடு சாதத்தில் நெய் விட்டு இந்த பொடி போட்டு பிசைந்து
- சாப்பிடவும்.
Notes:
- எந்த காய் கும் , குருமாக்கும் இந்த பொடிய போடலாம்.
Ingredients:
- 1 கப் துவரம் பருப்பு
- 10 மிளகாய் வற்றல்
- 1 டீ ஸ்பூன் மிளகு
- 10 பல் பூண்டு
- உப்பு
Method:
- முதலில் உப்பை வறட்டு வாணலில் வறுக்கவும்.
- பிறகு மிளகு, பிறகு மிளகாய் வற்றல், பிறகு துவரம் பருப்பு என் ஒவ்வொன்றாக தனி தனியாக வறுக்கவும்.
- பூண்டு பற்களை உரித்து அப்படியே போட்டு அரைக்க தரனும்.
- மிஷினில் கொடுத்து நல்ல 'நைசாக' அரைக்கவும்.
- கொஞ்சம் பூண்டு வாசத்துடன் நன்ன்றாக இருக்கும்.
- ஆனால் இதை fridge இல் வைப்பது நல்லது.
- (பூண்டில் கொஞ்சம் ஈரப்பசை இருக்கும் அல்லவா அதுதான் "fridge " லவைக்கணும்.)
Ingredients:
- 1 டின் மில்க் மெய்டு
- 1 ஸ்பூன் தயிர்
Method:
- மில்க் மெய்டு டின் ஐ திறந்து ஒரு மைக்ரோவே வேவ் ஓவன் பாத்திரத்தில் விடவும்.
- தயிர் சேர்க்கவும்.
- நன்கு கலக்கவும்.
- ஓவனில் வைத்து 'high' இல் 2 நிமிடம் வைக்கவும்.
- வெளியே எடுத்து கிளறவும்.
- மீண்டும் 2 நிமிடம் வைக்கவும்.
- வெளியே எடுத்து கிளறவும்.
- மீண்டும் 1 நிமிடம் வைக்கவும்.
- கிளறி சுவை பார்க்கவும்.
- அருமையான திரட்டுப்பால் ரெடி.
Notes:
- உங்களின் ஓவனின் திறனை பொறுத்து நிமிடங்கள் மறுபடலாம். என்றாலும் 6 -7 நிமிடங்களில் செய்து விடலாம் சாப்பிட விருந்தாளி யை உக்கார வைத்துவிட்டு மோர் சாதம் வருவதர்க்குள் ஸ்வீட் ரெடி பண்ணிவிடலாம்
Images:
Ingredients:
- பால் – 2 லிட்டர் (ஃபுல் கிரீம் மில்க் )
- சர்க்கரை – சுவைக்கேற்ப
- குங்குமப்பூ – சிறிதளவு
- ஊற வைத்து தோல் நீக்கிய பாதாம்பருப்பு - ஐந்து - தேவையானால்
- முந்திரிப்பருப்பு – ஐந்து - தேவையானால்
Method:
- ஒரு கனமான உருளியில் பாலை விட்டு அடுப்பில் வைத்து கிளறிக் கொண்டிருக்க வேண்டும்.
- ஒரு கரண்டி (அ) ஸ்பூனால் பால் மேலே வரும் ஆடையை எடுத்து ஒரு பாத்திரத்தில் சேகரித்துக் கொண்டு வரவும்.
- பாதிப் பால் சுண்டும்வரை கொதிக்க வைக்க வேண்டும்.
- குறுக்கிய பாலுடன் சர்க்கரையும் சேர்த்து, மட்டான தழலில் வைக்கவேண்டும்.
- நான்கு கொதித்தது மீண்டும் கூறுகினதும், பாலில் கரைத்த குங்குமப்பூவைச் சேர்த்துக் கலக்கி ஆடையையும் சேர்த்து நன்கு கலக்கி இறக்கவும்.
- நன்கு ஆறினதும் பரிமாறலாம் அல்லது ஃபிரிஜ் இல் வைத்து பிறகு பரிமாறலாம்.
- குளிர்ச்சியாக கப்புகளில் எடுத்துக் கொடுக்கும்போது பாதம் மற்றும் முந்திரியை மெல்லியதாக சீவி போட்டுக்கொடுத்தல் ........ அமிர்தமாய் இனிக்கும்
Ingredients:
- கடலை மாவு 1 கப்
- சர்க்கரை 2 கப்
- நெய் 2 கப்
- ஏலப்பொடி கொஞ்சம்
- தேவையானால் உடைத்த பாதாம் முந்திரி பருப்புகள் 1 டீ ஸ்பூன்
Method:
- முதலில் ஒரு தட்டில் நெய் தடவி வைத்துகொள்ளவும்.
- ஒரு வாணலி இல் 2 கப் சர்க்கரை மற்றும் 1 1/2 கப் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.
- ஏலப் பொடி போடவும்.
- 1 கம்பி பதம் வரும் வரை கொதிக்கட்டும்.
- அதற்குள், மற்றும் ஒரு வாணலி இல் அல்லது ஆழமான உருளி இல் 1 கப் நெய்விட்டு கடலை மாவை வறுக்கவும்.
- நெய்விட்டதும் அது 'liquid ' ஆக ஆகிவிடும்...........அப்படியே அடுப்பை 'சிம்' இல் வைத்து கை விடாமல் கலக்கிக்கொண்டே இருக்கவும்.
- கொஞ்சம் பிரவுன் ஆகும் வரை இப்படி வறுக்கணும்.
- பக்கத்தில் கொதித்துக் கொண்டிருக்கும் சர்க்கரை பாகை எடுத்து இந்த கடலை மாவில் விடவும்.
- பொங்கி வரும்...பத்திரம்.............நன்கு கிளறவும்.
- பொடித்து வைத்துள்ள பருப்புகளை போடவும்.
- மீதி உள்ள நெய்யையும் கொட்டி கிளறவும்.
- நுரைத்து , நன்கு சுருண்டு வரும்போது ஏற்கனவே நெய் தடவி வைத்துள்ள தட்டில் கொட்டவும்.
- கொஞ்சம் ஆறினதும் துண்டம் போடலாம்.
- 'சூப்பரா ஆக' இருக்கும்.............
Images:
Ingredients:
- 1 கப் மைதா
- பேக்கிங் சோடா 1/4 டீ ஸ்பூன்
- சமையல் சோடா ஒரு சிட்டிகை
- சர்க்கரை 1/2 ஸ்பூன் (பொடிக்கவும் )
- தயிர் 1 டேபிள் ஸ்பூன்
- நெய் - உருக்கியது - 1/8 கப்
- வாசனை இல்லாத எண்ணெய் - 1/2 டீ ஸ்பூன்
- சர்க்கரை பாகு வைக்க :
- 1 1/2 கப் சர்க்கரை
- 1 1/2 கப் தண்ணீர்
- ஏலப்பொடி கொஞ்சம் அல்லது ரோஸ் எசன்ஸ்
- பொறிக்க : எண்ணெய்
Method:
- முதலில் மைதாவை சோடா உப்பு மற்றும் பேகிங் சோடா போட்டு சலிக்கவும்.
- ஒரு பேசினில் சலித்ததை போடவும்.
- வேறு ஒரு சின்ன கிண்ணி இல் தயிர் மற்றும் சர்க்கரையை போட்டு கலக்கவும்.
- மாவில் நெய் மற்றும் எண்ணையை விட்டு நன்கு கலக்கவும்.
- நன்கு கலந்ததும் அது பார்க்க 'பிரட் துகள்கள்' போல இருக்கும்.
- அப்படி இருந்தால் பதம் சரி என்று அர்த்தம்.
- இப்போ கிண்ணி இல் இருக்கும் தயிர் மற்றும் சர்க்கரையை நன்கு கரைத்து, மாவில் விடவும்.
- 'மெத்' என்று பிசையவும்.
- தேவையானால்......தேவையானால் துளி ... துளியே துளி தண்ணீர் விட்டுக்கலாம்.
- அவ்வளவு தான் இதை அப்படியே சுமார் 1 மணிநேரம் , மூடி வைத்து விடவும்.
- 1 மணி நேரத்துக்கு பிறகு ஒரு உருளி அல்லது வாணலி இல் தண்ணீர் விட்டு சர்க்கரையை போடவும்.
- அப்பப்போ கிளறி விடவும்.
- 'ஒரு கம்பி 'பாகு வரும் வரை கொதிக்க விடவும்.
- ஏலப்பொடி போட்டு இறக்கவும்.
- மற்றும் ஒரு அடுப்பில் எண்ணெய் வைக்கவும்.
- அடுப்பை 'சிம்' இல் வைக்கவும்.
- பிறகு மாவை எடுத்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டவும்.
- உள்ளங்கை இல் வைத்து கட்டை விரலால் உருண்டை இன் நடுவில் அழுத்தி பள்ளம் போல செய்யவும்.
- இது போல செய்வதால் , பாதுஷாக்கள் நன்கு பொறியும். எனவே இதை மறக்க வேண்டாம்.
- இதே போல மற்ற எல்லா மாவையும் செய்யவும்.
- நான் கொடுத்துள்ள அளவிற்கு 15 'மினி பாதுஷாக்கள்' வரும்.
- இப்போ வாணலி இல் எண்ணெய்விட்டு சில நிமிடங்களிலேயே , அது ரொம்ப சூடாவதர்க்குள் பாதுஷாக்களை போடணும்.
- அதாவது, எண்ணெய் இல் ஒரு துளி மாவை போட்டால் அது 1 நிமிடம் கழித்துத்தான் மேலே வரணும்.
- உடனே மேலே வந்தால் எண்ணெய் இன் சூடு அதிகம் என்று அர்த்தம்.
- அவசரப்படாமல் காத்திருக்கவும்.
- 2 -3 நிமிடங்கள் கழித்து திருப்பி விடவும்.
- நன்கு பவுன் கலர் வந்ததும் எடுத்து பாகில் போடவும்.
- அவ்வளவு தான் சூப்பர் பாதுஷாக்கள் ரெடி.
- கொஞ்சம் ஆறினதும் சாப்பிடலாம்.
- விண்டு பார்த்தால் உள்ளே 'லேயர் லேயராக' இருக்கணும்.
- அது தான் பதம்.
- மேலே சர்க்கரை பூத்துக்கொண்டு இருக்கும்.
- ஆனால் அதுக்கு ஓர் 12 மணி நேரம் காத்திருக்கணும் ! ரிலாக்ஸ்
- ஆனால் உடனே சாப்பிட்டு பார்க்கலாம் :)
Notes:
- மேலே சர்க்கரை பூத்துக்கொண்டு வரவேண்டாம் என்றால், சர்க்கரை பாகில் 1/2 ஸ்பூன் எலுமிச்சை சாறு விடணும்.
- இதற்கான படங்களை கிழே கொடுத்துள்ளேன் ; பார்க்கவும்.
- படிக்கத்தான் இவ்வளவு பெரிசா இருக்கே தவிர 10 நிமிஷத்தில் செய்து விடலாம்
Images:
Ingredients:
- Condensed milk 400 gms tin 1
- கடலை மாவு 3 கப்
- பிஸ்தா, பாதாம் , முந்திரி பொடித்து வைத்தது 3 டேபிள் ஸ்பூன்
- நெய் 1 கப்
- பால் 2 டேபிள் ஸ்பூன்
Method:
- வாணலி இல் நெய்விட்டு கடலை மாவை கருகாமல் வறுக்கவும்.
- இதற்கு ஒரு 10 -12 நிமிடங்கள் ஆகும்.
- பொறுமையாக வறுக்கணும்.
- அப்புறம் ஈசிதான். புன்னகை
- அடுப்பை சின்னதாக்கி விட்டு, condensed மில்க் ஐ விட்டு நன்கு கிளறவும்.
- கைவிடாமல் கிளறவும், அது மொத்தமாய், சுருண்டு வரும் வரை கிளறவும்.
- நெய்தடவிய தட்டில் கொட்டவும்.
- சமப்படுத்தவும்.
- இப்போ உடைத்த பருப்புகளை அதன் மீது தூவி அலங்கரிக்கவும்.
- கொஞ்சம் ஆறினதும் வில்லைகள் போடலாம்.
- அவ்வளவு தான் 'மோஹன் தால்' ரெடி.
- வாயில் கரையும் அற்புதமான ஸ்வீட் ரெடி.
Ingredients:
- 2 கப் மைதா அல்லது all purpose flour
- 3 கப் சர்க்கரை
- 1 கப் வெண்ணை
- 1 கப் வால்நட் ( பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும் )
- 3 கப் வெந்நீர்
Method:
- ஒரு அடிகனமான வாணலி அல்லது உருளி இல் 1 டேபிள் ஸ்பூன் வெண்ணை போடவும்.
- அதிலேயே சர்க்கரையும் போடவும்.
- மிதமான தீ இல் அடுப்பை வைக்கவும்.
- வெண்ணை உருகி சர்க்கரையும் உருகட்டும்.
- அது உருகி கொஞ்சம் பிரவுன் கலரில் குழம்பாக வரும் இதை 'காரமெல்' என்போம்.
- அப்படி வந்ததும், அதை கிளரிக்கொண்டே, வெந்நீரை அதில் விடவும்.
- நன்கு கலக்கவும்.
- அதில் மொத்த 'caramel ' ம் கரைந்து பிரவுன் கலர் தண்ணீர் கிடைக்கும்.
- அதை அப்படியே வைத்துக்கொள்ளவும்.
- மற்றுமொரு வாணலி இல் பாக்கி வெண்ணை போட்டு அது கொஞ்சம் உருகியதுமே , மைதாவை போட்டு நன்கு பொரிக்கவும்.
- கருகாமல் பார்த்துக்கொள்ளனும்.புன்னகை
- நல்ல 'பவுன் கலரில் பொரிந்ததும், பொடித்து வைத்துள்ள வாழ்நாட்களை போட்டு கிளறவும்.
- அவை நன்கு கலந்ததும், இப்போ எடுத்து வைத்துள்ள 'caramel water ' ஐ அதில் விட்டு, கிளறவும்.
- கட்டி தட்டாமல் நன்கு கிளறவும்.
- மொத்த தண்ணீரும் உ றிந்து கொண்டு 'ஹல்வா' பதத்துக்கு வரும்வரை கிளறவும்.
- நெய்தடவி வைத்துள்ள தட்டில் கொட்டவும்.
- தேவையானால் , கொஞ்சம் ஆறினதும், கடைகள் போல வில்லைகள் போடவும்.
- அருமையான ' வால்நட் ஹல்வா ' தயார்.
Ingredients:
- பயத்தம் பருப்பு 1 கப்
- நெய் 1 கப்
- சர்க்கரை 1 கப்
- பால் 1/4 கப்
- சர்க்கரை போடாத கோவா 3/4 கப்
- குங்குமப்பூ - 10 12 இதழ்கள்
- முந்திரி, பாதாம் சீவியது 1 டேபிள் ஸ்பூன்
Method:
- பயத்தம் பருப்பை நன்கு களைந்து, 1 - 1 1/2 மணி நேரம் ஊறவைக்கவும்.
- கொஞ்சம் 'கர கர'பாக அரைக்கவும்.
- வாணலி இல் நெய்விட்டு உருகியதும் அரைத்து வைத்ததை அதில் விட்டு கிளறவும்.அடுப்பை தணித்து வைத்து நன்கு கிளறனும்.
- பக்கத்து அடுப்பில் மட்டும் ஒரு உருளி இல் சர்க்கரை மற்றும் தண்ணீர் விட்டு ஒற்றை கம்பி பாகு வைக்கவும்.
- பாலை சுடவைத்து அதில் குங்குமபூவை கரைத்து வைக்கவும்.
- தால் - நல்லா பொரிந்து கொஞ்சம் 'பிரவுன்' கலரில் வரும்போது அதில் சர்க்கரை பாகை விட்டு கிளறவும்.
- குங்குமப்பூவை கரைத்து வைத்துள்ள பாலையும் விடவும்.நன்கு கிளறவும்.
- எல்லாமாக சேர்ந்து 'ஹல்வா' பதத்துக்கு வரும் போது கோவாவை உதிர்த்துப்போட்டு கிளறி இறக்கவும்.
- மேலே சீவிவைத்துள்ள முந்திரி பாதாமை தூவி சூடாக பரிமாறவும்.
- ரொம்ப அருமையாக இருக்கும்
Ingredients:
- 4 1 / 4 கப் பால் ( கோவா செய்வதற்கு ) அல்லது சர்க்கரை இல்லாத கோவா ஒன்னே கால் கப், துருவி எடுத்துக்கொள்ளவும்
- 1 / 2cup முந்திரி ( முந்திரியை ஊறவைத்து, கொஞ்சம் பாலில் அரைத்து வைக்கவும் )
- 1 கப் சர்க்கரை
- 1 டேபிள்ஸ்பூன் நெய்
- சிறிதளவு ஏலப்பொடி
- பால் சிறிதளவு
- 2 ஸ்பூன் பாதாம் தூளாக்கினது
- மேலே தூவ:
- ரோஜா இதழ்கள் கொஞ்சம்
Method:
- ஒரு அடிகனமான பாத்திரத்தில், முந்திரி விழுது போட்டு அடுப்பில் வைக்கவும்.
- அடுப்பை நிதானமாக எரியவிடவும், கிளறிக்கொண்டே இருக்கவும்.
- சிறிது சிறிதாக துருவின கோவாவை போட்டு கிளறவும்.
- கொஞ்சம் இறுகினதும் , சர்க்கரை போட்டு கிளறவும்.
- நன்கு பந்து போல் சுருண்டுவரும்போது ஏலப்பொடி மற்றும் பாதாம் (தூளாக்கினது )தூவி இறக்கவும்.
- ஒரு பாத்திரத்தில் எடுத்து வைக்கவும் மேலே ரோஜா இதழ்கள் தூவவும்.
- முந்திரி ஹல்வா தயார்.
- சூடாகவோ ஆறினதுமோ பரிமாறலாம்.
- கோவா செய்ய: பாலை ஒரு அடிகனமான பாத்திரத்தில் விட்டு அடுப்பில் வைக்கவும். பொங்காமல் பார்த்துக்கொள்ளவும். அது அப்படியே கொதித்து கொதித்து குறைந்து 'கோவாவாக' மாறும். அதுவரை அப்ப அப்ப கிளறிவிட்டுக்கொண்டே இருக்கவும்.
- ஒரு லிட்டர் பாலுக்கு சுமார் கால் கிலோ முதல் முன்னூறு கிராம் வரை கோவா கிடைக்கும்.
Ingredients:
- 250 கிராம் பாதாம் ( பாதாமை ஊறவைத்து, கொஞ்சம் பாலில் அரைத்து வைக்கவும் )
- 200 கிராம் சர்க்கரை
- 250 கிராம் நெய்
- 3 கப் பால்
- சிறிதளவு ஏலப்பொடி
- 150 கிராம் ரவை
- 2 ஸ்பூன் பிஸ்தா தூளாக்கினது
- இரண்டு ஷீட் 'சில்வர் ரேக் ' (தேவையானால் )
Method:
- பாதாமை ஒரு இரண்டு மணிநேரம் ஊறவைத்து தோலை உரித்து ரவை போல மிக்சி இல் உடைத்துக்கொள்ளவும்.
- ஒரு அடிகனமான பாத்திரத்தில், நெய்விட்டு ரவையை போட்டு வறுக்கவும்.
- பிறகு பாதாம் ரவையை போட்டு வறுக்கவும்.
- கொஞ்சம் சிவந்ததும், பால் சர்க்கரை போட்டு கிளறவும்.
- அடுப்பை நிதானமாக எரியவிடவும், கிளறிக்கொண்டே இருக்கவும்.
- சிறிது சிறிதாக துருவின கோவாவை போட்டு கிளறவும்.
- நன்கு பந்து போல் சுருண்டுவரும்போது ஏலப்பொடி மற்றும் பிஸ்தா துண்டுகள் தூவவும்.
- நெய் பிரிந்து வரும்போது இறக்கி நெய்தடவிய தட்டில் கொட்டவும்.
- மேலே 'சில்வர் ரேக் ' ஒட்டவும்.
- சூடாகவோ ஆறினதுமோ பரிமாறலாம்.
Ingredients:
- 4 1 / 4 கப் பால் ( கோவா செய்வதற்கு ) அல்லது சர்க்கரை இல்லாத கோவா ஒன்னே கால் கப், துருவி எடுத்துக்கொள்ளவும்
- 1 / 2cup பாதாம் ( பாதாமை ஊறவைத்து, கொஞ்சம் பாலில் அரைத்து வைக்கவும் )
- 1 கப் சர்க்கரை
- 1 டேபிள்ஸ்பூன் நெய்
- சிறிதளவு ஏலப்பொடி
- பால் சிறிதளவு
- 2 ஸ்பூன் பாதாம் தூளாக்கினது
- மேலே தூவ:
- ரோஜா இதழ்கள் கொஞ்சம்
Method:
- ஒரு அடிகனமான பாத்திரத்தில், பாதாம் விழுது போட்டு அடுப்பில் வைக்கவும்.
- அடுப்பை நிதானமாக எரியவிடவும், கிளறிக்கொண்டே இருக்கவும்.
- சிறிது சிறிதாக துருவின கோவாவை போட்டு கிளறவும்.
- கொஞ்சம் இறுகினதும் , சர்க்கரை போட்டு கிளறவும்.
- நன்கு பந்து போல் சுருண்டுவரும்போது ஏலப்பொடி மற்றும் பாதாம் (தூளாக்கினது )தூவி இறக்கவும்.
- ஒரு பாத்திரத்தில் எடுத்து வைக்கவும் மேலே ரோஜா இதழ்கள் தூவவும்.
- பாதாம் ஹல்வா ரெடி.
- சூடாகவோ ஆறினதுமோ பரிமாறலாம்.
- கோவா செய்ய: பாலை ஒரு அடிகனமான பாத்திரத்தில் விட்டு அடுப்பில் வைக்கவும். பொங்காமல் பார்த்துக்கொள்ளவும். அது அப்படியே கொதித்து கொதித்து குறைந்து 'கோவாவாக' மாறும். அதுவரை அப்ப அப்ப கிளறிவிட்டுக்கொண்டே இருக்கவும்.
- ஒரு லிட்டர் பாலுக்கு சுமார் கால் கிலோ முதல் முன்னூறு கிராம் வரை கோவா கிடைக்கும்.
Ingredients:
- பூரணம் செய்ய :
- பாசி பயறு அல்லது பாசிப்பருப்பு 100 கிராம்.
- முந்திரி பருப்பு 100 கிராம்.
- வெல்லம் 100 கிராம்
- ஏலக்காய் 10
- தேங்காய் துருவல் 1 கப்
- வெள்ளை எள்ளு 50 கிராம்
- மேல் மாவு செய்ய :
- பச்சை அரிசி மாவு 1 /4 கப் (களைந்து உலர்த்தின அரிசி இல் செய்த மாவு என்றால் நல்லது )
- மைதா 3 /4 cup
- மஞ்சள் கலர் 1 ,சிட்டிகை
- சோடா உப்பு சிறிது
- எண்ணெய் பொரிக்க
Method:
- பச்சை அரிசி மற்றும் மைதா மாவை சலித்து மஞ்சள் கலர், சோடா உப்பு சேர்த்து கெட்டியாக , அதாவது இட்லி மாவு பதத்திற்கு
- தண்ணீர் சேர்த்து கரைத்து வைத்து கொள்ளவும்.
- பூரணத்திற்கு பாசி பயறை நன்றாக நெய் அல்லது எண்ணெய் விட்டு வறுத்துக் கொள்ளவும், ஆறிய பின் ரவை போல் பொடித்து
- கொள்ளவும்.
- பிறகு எள்ளு மற்றும் தேங்காய் துருவலை தனி தனியாக வறுக்கவும்.நல்ல பிரவுன் கலர் வரும் வரை தேங்காவை வறுக்கவும்.
- 'பட பட' வென பொறியும் வரை எள்ளை வறுக்கவும்.
- முந்திரி யை ஒரு சுட்டறு மிக்சி இல் பொடிக்கவும். ஏலம் பொடிக்கவும்.
- ஒரு வாணலி இல் பொடித்த வெல்லம் போட்டு சிறிது தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும்.
- வெல்லம் கரைந்ததும் அதை வடி கட்டி கொள்ளவும்.
- மீண்டும் அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்.
- இளம் பாகு அதாவது ஒரு கிண்ணி இல் தண்ணீர் வைத்துக்கொண்டு பாகில் கொஞ்சம் எடுத்து அதில் விடவும். பிறகு கையால் உருட்டி பார்க்கவும் , உருட்ட வந்தால் அது இளம் பாகு. அப்படி பாகு காய்ந்ததும்,
- அடுப்பை சின்ன தாக்கி, பொடித்த அனைத்தையும் கொட்டி கிளறவும்.
- கொஞ்சம் ஆறினதும் கெட்டியாக பிசைந்து கொள்ளவும் .
- மாவு கெட்டியாக, சிறய சிறிய உருண்டைகளாக பிடிக்கும் பதம் இருக்கவேண்டும்.
- தேவைப்பட்டால் கொஞ்சம் மாவை சேர்த்து கொள்ளலாம்.
- பிசைந்த மாவை சிறு சிறு உருளைகளாக உருட்டவும்.
- மூன்று மூன்று உருண்டைகளாக சேர்த்து தயாராக வைத்துக்கொள்ளவும்.
- ஒரு வாணலி இல் எண்ணெய் விட்டு , உருண்டைகளை கரைத்து வைத்துள்ள மைதா ,அரிசி மாவு கலந்த மாவில் முக்கி
- கொதிக்கும் எண்ணையில் போட்டு பொறித்து எடுக்கவும்.
- நல்ல பவுன் கலரில் எடுக்கவும்.
- சுவையான முந்திரி கொத்து தயார்
- இதை நிறைய நாட்கள் வைத்து சாப்பிடலாம்.சீக்கிரம் கெடாது.
Ingredients:
- ஒரு கப் கடலை மாவு
- இரண்டு கப் நெய்
- இரண்டு கப் சர்க்கரை
- வேண்டுமானால் அரை ஸ்பூன் ஏலப்பொடி
Method:
- ஒரு ஆழமான உருளி இல் ஒன்றரை கப் தண்ணீர் விட்டு , சர்க்கரையை போடவும்.
- அது கொதித்து ஒரு இழை பாகாக வரும்போது ( கொதித்துக்கொண்டு இருக்கும் பாகை ஆள் காட்டி விரலால் தொட்டுக்கொண்டு அதை கட்டை விரலால் தொட்டால் நடுவில் ஒரு நூல் போல வரும் அது வே கம்பி பதம் ) அளந்து வைத்திருக்கும் கடலை மாவை ஒவ்வொரு டேபிள் ஸ்பூன் ஆக பாகில் தூவி கிளறனும்.
- ஒரு ஸ்பூன் நெய் விடனும்.
- இப்படி மொத்த மாவும் நெய்யும் முடியும் வரை போட்டு போட்டு கிளறனும்.
- மொத்தமாக கொட்டக் கூடாது
- மாவு கட்டி இல்லாமல் இருப்பது முக்கியம்.
- ஒரு கட்டத்தில் உருளி இல் இருக்கும் மைசூர் பாகு இல் நெய் பிரிந்து வர ஆரம்பிக்கும்.
- மேலும் நிறைய ஓட்டைகள் இருப்பது போல தோன்ற ஆரம்பிக்கும்.
- இப்போது அடுப்பை சின்னதாக்கி விட்டு ஒரு தட்டில் நெய் கொஞ்சம் தடவவும்.
- மைசூர் பாகை அதில் கொட்டவும்.
- ஒரு பத்து நிமிடம் ஆறினதும் துண்டங்கள் போடலாம்.
Notes:
- மைசூர் பாகு மெத் என்று கிருஷ்ணா ஸ்வீட்ஸ் போல வேண்டுமானால், சர்க்கரை யை ஒன்றரை கப் எடுத்துக்கொள்ளுங்கள் . மற்றும் கிளறும்போது ஒரு சிட்டிகை சோடா உப்பும் சேர்த்துக்கொள்ளுங்கள்.சரியா?
Ingredients:
- (அளவு கண் அளவுதான் )
- சுக்கு 2 இன்ச்
- கண்டதிப்பிலி 1 /4 கை யளவு
- ஓமம் கொஞ்சம்
- மிளகு கொஞ்சம்
- சீரகம் கொஞ்சம்
- விரளிமஞ்சள் 4 - 5
- தனியா 1 /2 கை யளவு
- வெல்லம் கொஞ்சம்
- நெய் 1 /2 cup
- இஞ்சி சாறு 1 /4 cup
Method:
- சுக்கு, கண்டதிப்பிலி, ஓமம், மிளகு, சீரகம், விரளிமஞ்சள், தனியா எல்லாவற்றையும் வாணலில் வறுக்கவும். (dryfry )
- மிக்சியில் அரைக்கவும்.
- ஒரு வாணலியில் வெல்லத்தை பொடித்துபோட்டு, தண்ணீர் விட்டு கொதிக்கவைக்கவும்.
- வெல்லம் கரைந்ததும், வடிகட்டவும்
- மீண்டும் அடுப்பில் வைத்து, பொடித்த பொடியை போட்டு கலக்கவும்
- இஞ்சி சாறு சேர்க்கவும்.
- நன்கு இறுகி வரும்போது நெய் விட்டு கிளறவும்.
- லேகிய பதத்தில் இறக்கவும்.
- பட்சணங்களை சாப்பிட்டபின் தீபாவளி மருந்து சாப்பிடணும்
Ingredients:
- 1cup தேங்காய் துருவல்
- 1cup சர்க்கரை
- 1sp நெய்
- ஏலப்பொடி
- 2sp உடைத்த முந்தரி (தேவையானால் )
Method:
- ஒரு வாணலில் சர்க்கரை, தேங்காய் துருவல் போடவும்.
- நன்கு கிளறவும்.
- நெய் ஊற்றவும் , ஏலப்பொடி, உடைத்த முந்தரி போடவும்.
- நன்கு கிளறவும்.
- நன்கு நெய் பிரிந்து, ஒட்டாமல் வரும்போது, நெய்தடவிய தட்டில் கொட்டி துண்டம் போடவும்.
- தேங்காய் பர்பி தயார்.
- Cheap and best sweet ,with very less ghee .
Ingredients:
- 1cup பாதாம்விழுது
- 100gms நெய்
- 1 tin Condensed milk
Method:
- ஒரு வாணலில் Condensed milk , பாதாம் விழுது, நெய் போடவும்.
- நன்கு கிளறவும்.
- நன்கு நெய் பிரிந்து, ஒட்டாமல் வரும்போது, நெய்தடவிய தட்டில் கொட்டி துண்டம் போடவும்.
- மிருதுவான பாதாம் பர்பி/கேக் தயார்.
- 5 நிமிடத்தில் கேக் தயாராகிவிடும் .
Ingredients:
- 1cup பாதாம்
- 1 1 / 2cup சர்க்கரை
- 1 /2cup பால்
- 3 - 4 ஸ்பூன் நெய்
- ஏலப்பொடி
Method:
- பாதாமை பாலில் அரைமணி ஊறவைக்கவும்.
- தோலியை நீக்கவும்.
- நன்கு அரைக்கவும்.
- ஒரு வாணலில் சர்க்கரை, பாதாம் விழுது, நெய், மற்றும் ஏலப்பொடி போடவும்.
- நன்கு கிளறவும்.
- நன்கு நெய் பிரிந்து, ஒட்டாமல் வரும்போது, நெய்தடவிய தட்டில் கொட்டி துண்டம் போடவும்.
- மிருதுவான பாதாம் பர்பி/கேக் தயார்.
Ingredients:
- 1cup முந்தரி
- 1 1 / 2cup சர்க்கரை
- 1 /2cup பால்
- 3 - 4 ஸ்பூன் நெய்
- ஏலப்பொடி
Method:
- முந்தரியை பாலில் அரைமணி ஊறவைக்கவும்.
- நன்கு அரைக்கவும்.
- ஒரு வாணலில் சர்க்கரை, முந்தரி விழுது, நெய், மற்றும் ஏலப்பொடி போடவும்.
- நன்கு கிளறவும்.
- நன்கு நெய் பிரிந்து, ஒட்டாமல் வரும்போது, நெய்தடவிய தட்டில் கொட்டி துண்டம் போடவும்.
- மிருதுவான முந்தரி பர்பி தயார்.
Ingredients:
- 2cup காரட் துருவல்
- 2 1 /2 cup சர்க்கரை
- 3 /4 cup முந்திரி (பொடிக்கவும்)
- 2tabsp நெய்
- 2tabsp பால்
- ஏலப்பொடி
Method:
- வாணலியில் நெய் விட்டு, துருவின காரட் போட்டு நன்கு வதக்கவும்.
- பால் + சர்க்கரை சேர்க்கவும்.
- சர்க்கரை நன்கு கரைந்ததும் பொடித்துவைத்த முந்திரியை போடவும்.
- நன்கு கிளறவும்.
- நன்கு நெய் பிரிந்து, ஒட்டாமல் வரும்போது, நெய்தடவிய தட்டில் கொட்டி துண்டம் போடவும்.
- கலர் ஏதும் போடாமலே காரட் கலரில் பர்பி வரும்.
Ingredients:
- 1cup கடலை மாவு
- 1 1 /2cup சர்க்கரை
- 1cup நெய்
- 1cup பால் பவுடர்
- ஏலப்பொடி
Method:
- வாணலியில் நெய் விட்டு, கடலை மாவை போட்டு வாசனை வரும்
- வரை வறுக்கவும்.
- அடுப்பை அணைத்துவிட்டு, பால் பவுடர், ஏலப்பொடி போட்டு கை விடாமல் 5 நிமிடங்கள் கிளறவும்.
- மற்றும் ஒரு பாத்திரத்தில், சர்க்கரையை போட்டு பாகு காய்ச்சவும்.
- 'முத்துபாகு' வந்ததும், கலந்து வைத்துள்ள மாவை போட்டு நன்கு கிளறவும்.
- நன்கு நெய் பிரிந்து, ஒட்டாமல் வரும்போது, நெய்தடவிய தட்டில் கொட்டி துண்டம் போடவும்.
- இதுவும் ரொம்ப ஈசி யான ஸ்வீட்.
Notes:
- 'முத்து பாகு' என்றால், சர்க்கரை பாகை ஸ்பூனில் எடுத்து தட்டில் விட்டால், அழகாக 'முத்து' போல் சொட்டும். அது தான் 'முத்து பாகு' பதம்.
Ingredients:
- கடலை மாவு ,சர்க்கரை,நெய் each 1cup
- வால்நட், பாதாம் மற்றும் முந்திரி 1 /2cup
- ஏலப்பொடி
Method:
- சர்க்கரை யை பொடித்துக்கொள்ளவும்.
- வாணலியில் நெய் விட்டு, கடலை மாவை போட்டு வாசனை வரும்
- வரை வறுக்கவும்.
- அடுப்பை அணைத்துவிட்டு, சர்க்கரை பொடி, ஏலப்பொடி மற்றும் வால்நட், பாதாம் மற்றும் முந்திரி போட்டு கை விடாமல் 5 நிமிடங்கள் கிளறவும்.
- நெய்தடவிய தட்டில் கொட்டி துண்டம் போடவும்.
- ரொம்ப ஈசி யான ஸ்வீட்.
Ingredients:
- 1 cup தேங்காய் துருவல்
- 1cup நெய்
- 1cup கடலை மாவு
- 1cup பால்
- 3cup சர்க்கரை
- 2 - 4 துளி வெனிலா எசன்ஸ்
Method:
- மேல்சொன்ன எல்லா வற்றையும் ஒன்றாக ஒரு அடிகனமான பாத்திரத்தில் போடவும்.
- அடுப்பில் வைத்து நன்கு கிளறவும்.
- நன்கு நெய் பிரிந்து, ஒட்டாமல் வரும்போது, நெய்தடவிய தட்டில் கொட்டவும்.
- கொஞ்சம் ஆறினதும் துண்டம் போடவும்.
Ingredients:
- 300gms சர்க்கரை இல்லாத கோவா
- 2cup முந்தரி
- 2cup சர்க்கரை (பொடித்தது )
- ஏலப்பொடி
Method:
- முந்தரியை லேசாக வறுக்கவும்.
- 10 முந்தரிகளை உடைக்கவும் , ஒருப்பக்கமாக வைக்கவும்.
- மீதி முந்தரிகளை மிக்சியில் போட்டு பொடிக்கவும்.
- வாணலில் பொடித்த சர்க்கரை, பொடித்த முந்தரி போடவும்.
- நன்கு கிளறவும்.
- ஏலப்பொடி , உதிர்த்த கோவா போடவும்.
- நன்கு கிளறவும்.
- உடைத்த முந்திரிகளை போடவும் .
- மொத்தமாக சேர்ந்ததும் , தட்டில் கொட்டி , சூட்டுடன் உருண்டை பிடிக்கவும்.
- 'yummy ' லட்டு ரெடி.
Ingredients:
- 2cup முந்தரி
- 2cup சர்க்கரை
- ஏலப்பொடி
Method:
- முந்தரியை லேசாக வறுக்கவும்.
- இரண்டாக உடைக்கவும் , ஒருப்பக்கமாக வைக்கவும்.
- ஒரு வாணலில் சர்க்கரையை போடவும்.
- அது உருகி 'பிரவுன்' கலராக வரும். அது 'caramel ' எனப்படும்.
- அதில் உடைத்த முந்தரியை போடவும்.
- மொத்தமாக சேர்ந்ததும் , தட்டில் கொட்டி , சூட்டுடன் உருண்டை பிடிக்கவும்.
- 'yummy ' லட்டு ரெடி.
Ingredients:
- Condensed milk - 1 டின்
- (cottage cheese) பனீர் - 500gms
- dessicated dry coconut - 4 sp
- ஏலப்பொடி
Method:
- பனீரை துருவவும்.
- அடிகனமான வாணலியில் Condensed milk விட்டு, துருவின பனீரையும் போடவும்.
- நன்கு கிளறவும்.
- அது வாணலி ஓரத்தில் ஒட்டாமல் வரும் போது இறக்கி விடவும்.
- ஏலப்பொடி போட்டு கிளறி, உருட்டவும்.
- ஒருதட்டில் dessicated dry coconut போட்டு உருண்டைகளை அதன் மீது உருட்டவும் .
- தேங்காய் தூள்கள் ஒட்டிக்கொண்டு 'மலாய் லட்டு' பார்க்க ரொம்ப அழகாக இருக்கும்.
- சுவையும் அபாரம தான்.
Ingredients:
- 2cup பயத்தம் பருப்பு
- 2cup சர்க்கரை (மிக்ஸ்யில் பொடிக்கவும் )
- 2 1 /2cup நெய்
- 2 tabsp உடைத்த முந்திரி
- ஏலப்பொடி
Method:
- பயத்தம் பருப்பை நன்கு சிவக்க வறுக்கவும்.
- மிக்ஸ்யில் பொடிக்கவும்.
- ஒரு சல்லடை இல் போட்டு சலிக்கவும்.
- மீண்டும் அரைக்கவும்.
- ஒரு பேசினில் போடவும்.
- பொடித்த சர்க்கரையும் போடவும்.
- ஏலப்பொடி போடவும்.
- ஒரு வாணலில் நெய் விட்டு முந்திரியை வறுத்து அதன் மீது கொட்டவும்.
- நன்கு கலந்து உருண்டை பிடிக்கவும். That is all. 'மா லாடு' ரெடி.
Notes:
- நீங்கள் மெட்ராஸில் இருப்பவரானால் வறுத்த பயத்தம் பருப்பு , சர்க்கரை , ஏலம் எல்லாம் போட்டு மாவு மிஷின்ல் கொடுத்தால் சுலபமாக அரைத்து தருவார்கள். நீங்கள் வீட்டில் நெயில் முந்திரி பொரித்து போட்டால் போரும்.
- நான் எப்பவும் அதுபோல் வீட்டில் வைத்து இருப்பேன். எப்பவேண்டுமாலும் 'மா லட்டு' தயார் பண்ணலாம்.அதுவும் நொடியில்.
- இந்த பொடியை பாலில் கரைத்து கொதிக்க வைத்தால், சுவையான பயத்தம் கஞ்சி / பாயாசம் ரெடி. நீங்களும் முயன்று பாருங்களேன்
Images:
Ingredients:
- 2cup 'கடலை மாவு
- 2cup சர்க்கரை (மிக்ஸ்யில் பொடிக்கவும் )
- 1 /2cup நெய்
- 2 tabsp உடைத்த முந்திரி, பாதாம்
- ஏலப்பொடி
Method:
- வாணலியில் நெய் விட்டு கடலை மாவை நன்கு வாசனை வரும் வரை வறுக்கவும்.
- அடுப்பை சின்னதாக வைத்துக்கொள்ளவும்.
- ஒரு பேசினில் வறுத்த மாவைபோட்டு, முந்திரி, பாதாமை போடவும்.
- ஏலப்பொடி போட்டு உருண்டைகள் பிடிக்கவும்.
- அவ்வளவு தான் கடலை மாவு லட்டு.
Ingredients:
- 2 1 /2cup சேமியா (வறுத்தது )
- Condensed milk - 1 டின்
- 2sp நெய்
- 2 tabsp உடைத்த முந்திரி
- ஏலப்பொடி
Method:
- சேமியா வை லேசாக சுடு பண்ணி , மிக்ஸ்யில் பொடிக்கவும்.
- ஒரு வாணலில் நெய் விட்டு முந்திரியை வறுத்து தனியே வைக்கவும்.
- அடுத்து உலர்ந்த திராக்ஷையை வறுத்து தனியே வைக்கவும்.
- மொத்த நெய்யையும் விட்டு, பொடித்த சேமியாவை வறுக்கவும்.
- Condensed மில்க்கை விடவும்.
- நன்கு கிளறவும்.
- பந்து போல் சுருண்டு வரும் போது எறக்கி ஆறினதும் உருட்டவும்.
- மிருதுவான 'சேமியா லட்டு' ரெடி.
Notes:
- இது போல் பாம்பே ரவா விலும் செய்யலாம். ரவையை பொடித்தோ/பொடிக்காமலோ செய்யலாம். ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதம்,
- ஒவ்வொரு சுவை.
Ingredients:
- 2cup 'பாம்பே' ரவா
- 2cup சர்க்கரை (மிக்ஸ்யில் பொடிக்கவும் )
- 2cup துருவிய கொப்பரை
- 1 /2cup நெய்
- 2 tabsp உடைத்த முந்திரி
- 1tabsp உலர்ந்த திராக்ஷை
- ஏலப்பொடி
- 1 /2cup பால்
- குந்குமப்பூ கொஞ்சம்
Method:
- ஒரு வாணலில் நெய் விட்டு முந்திரியை வறுத்து தனியே வைக்கவும்.
- அடுத்து உலர்ந்த திராக்ஷையை வறுத்து தனியே வைக்கவும்.
- மொத நெய் யையும் விட்டு, ரவையை போட்டு நன்கு சிவக்க வறுக்கவும்.
- நல்ல வாசனை வந்ததும், அடுப்பை அணைக்கவும்.
- ரவையுடன் சர்க்கரை கொப்பரை சேர்த்து, கை விடாமல் 5 நிமிடங்கள் வறுக்கவும்.
- ஏலப்பொடி போடவும்.
- வறுத்த முந்திரி, திராக்ஷையை போடவும்.
- எல்லாவற்றையும் ஒரு பேசினில் போடவும்.
- நடுவில் குழித்து பாலை சுட பண்ணி ஊற்றவும்.
- நன்கு கலந்து சூடாக இருக்கும் போதே உருண்டை பிடிக்கவும்.
- ஆறினால் உருட்ட கஷ்டம் .
Notes:
- இதில் பால் சேர்ப்பதனால் 2 - 3 நாளுக்குமேல் வைத்துக்கொள்ள முடியாது.
Ingredients:
- 2cup 'பாம்பே ரவா
- 2cup சர்க்கரை (மிக்ஸ்யில் பொடிக்கவும் )
- 1cup நெய்
- 2 tabsp உடைத்த முந்திரி
- ஏலப்பொடி
Method:
- ரவையை நன்கு சிவக்க வறுக்கவும்.
- மிக்ஸ்யில் பொடிக்கவும்
- ஒரு பேசினில் போடவும்.
- பொடித்த சர்க்கரையும் போடவும்.
- ஏலப்பொடி போடவும்.
- ஒரு வாணலில் நெய் விட்டு முந்திரியை வறுத்து அதன் மீது கொட்டவும்.
- நன்கு கலந்து உருண்டை பிடிக்கவும்.
- ரவா லட்டு ரெடி.
Notes:
- நீங்கள் மெட்ராஸில் இருப்பவரானால் வறுத்த ரவை , சர்க்கரை , ஏலம்
- எல்லாம் போட்டு மாவு மிஷின்ல் கொடுத்தால் சுலபமாக அரைத்து தருவார்கள். நீங்கள் வீட்டில் நெயில் முந்திரி பொரித்து போட்டால் போரும்.
- நான் எப்பவும் அதுபோல் வீட்டில் வைத்து இருப்பேன். எப்பவேண்டுமாலும் 'ரவா லட்டு' தயார் பண்ணலாம்.அதுவும் நொடியில்.
- இந்த பொடியை பாலில் கரைத்து கொதிக்க வைத்தால், சுவையான ரவா பாயாசம் ரெடி. நீங்களும் முயன்று பாருங்களேன்
Images:
Ingredients:
- 1cup கடலை மாவு
- 1sp அரிசி மாவு
- 1tabsp முந்தரி பருப்பு
- 1tabsp உலர்ந்த திராக்ஷை
- 10 - 15 கிராம்பு
- 2sp நெய்
- ஆரஞ்சு கலர் 2 சிட்டிகை
- அரை ஸ்பூன் ஏலப்பொடி
- உப்பு ஒரு சிட்டிகை
- 'baking powder ' - சோடா உப்பு ஒரு சிட்டிகை
- பொரிக்க நெய்/எண்ணெய்
- சர்க்கரை பாகுகாக :
- 1 3 /4cup சர்க்கரை
- 3 /4cup தண்ணீர்
Method:
- கடலை மாவு, அரிசி மாவு, உப்பு ஒரு சிட்டிகை,ஆரஞ்சு கலர், சோடா உப்பு ஒரு சிட்டிகை எல்லாம் போட்டு நன்கு கலக்கவும்.
- தண்ணீர் விட்டு 'தோசை மாவு' பதத்துக்கு கரைக்கவும்.
- வாணலியில் எண்ணெய் வைத்து சுட்டதும்,
- பூந்தி கரண்டி இல் மாவை விட்டு, ஒரு கரண்டியால் தட்டவும்
- பூந்திகள் எண்ணெய் இல் தொடர்ந்து விழனும்.
- பிறகு பொறித்த பூந்திகளை வடிதட்டில் போடவும்.
- இது போல் மொத்த மாவையும் பூந்தி யாக பொரிக்கவும்.
- ஒரு பெரியபேசினில் மொத்த பூந்திகளையும் போடவும்.
- நெய் விட்டு உலர்ந்த திராக்ஷை, கிராம்பு , முந்திரியை பொரித்து போட்டு கலக்கவும்.
- மற்றும் ஒரு அடுப்பில் சர்க்கரை பாகுகாக ஆழமான பத்திரத்தில் சர்க்கரை + தண்ணீர் விடவும். ஏலப்பொடி போடவும்.
- கம்பி பதம் வரும் வரை கொதிக்கவிடவும்.
- சர்க்கரை பாகை பூந்தி மேல் கொட்டவும்.
- கரண்டியால் கிளறி விடவும்.
- கொஞ்சம் சூடு ஆறினதும் லட்டு பிடிக்கவும்.
Ingredients:
- 200gms பேரிச்சம்பழம (விதைகளை எடுக்கவும், துண்டுகள் போடவும் )
- 2cup டுட்டி பிரூட்டி
- 1cup உலர்ந்த திராக்ஷை
- 2cup உடைத்த பாதாம், பிஸ்தா, முந்தரி துண்டங்கள்.
- 2cup உலர்ந்த அத்திப்பழம் (துண்டுகளாக்கவும்)
- 1 தேக்கரண்டி செர்ரி (தேனில் ஊறவைத்து கடையில் கிடைக்கும் , வாங்கி துண்டுகளாக்கவும் )
- 1tin Condensed milk ( milkmaid tin )
- 2 தேக்கரண்டி நெய்
- 2 தேக்கரண்டி மைதா / corn பலூர்
- 1cup சர்க்கரை
- 1 cup தண்ணீர்
Method:
- ஒரு வாணலியில் நெய் விட்டு மைதாவை போட்டு ஒரு நிமிடம் வதக்கவும்.
- உடனே தண்ணீர் விட்டு கிளறவும்.
- அது கொதித்து அடங்குமுன், பேரிச்சம்பழ துண்டுகள், டுட்டி பிரூட்டி,உலர்ந்த திராக்ஷை, உடைத்த பாதாம், பிஸ்தா, முந்தரி துண்டங்கள்,உலர்ந்த அத்திப்பழம், செர்ரி போடவும்.
- பின் Condensed milk ஊற்றவும் , சர்க்கரை சேர்க்கவும்.
- நன்கு கிளறவும்.
- நன்கு பந்து போல் சுருண்டுவரும்போது, நெய் தடவிய தட்டில் கொட்டவும்.
- ஆறினதும் துண்டம் போடவும்.
- அவ்வளவுதான் மிக்சட் ப்ரூட் ஹல்வா ரெடி.
Ingredients:
- 600gms பேரிச்சம்பழம (விதைகளை எடுக்கவும், துண்டுகள் போடவும் )
- 1tin Condensed milk ( milkmaid tin )
- 2 தேக்கரண்டி நெய்
- 2 தேக்கரண்டி மைதா / corn flour
- 1 /2cup தண்ணீர்
Method:
- ஒரு வாணலியில் நெய் விட்டு மைதாவை போட்டு ஒரு நிமிடம் வதக்கவும்.
- உடனே தண்ணீர் விட்டு கிளறவும்.
- அது கொதித்து அடங்குமுன், பேரிச்சம்பழ துண்டுகள் போடவும்.
- பின் Condensed milk ஊற்றவும் .
- நன்கு கிளறவும்.
- நன்கு பந்து போல் சுருண்டுவரும்போது இறக்கவும்.
- அவ்வளவுதான் ஹல்வா ரெடி.
Ingredients:
- காரட் - காஜர் ஹல்வா போலவே, அதேமுறையில் பூசணி (வெள்ளை பூசணி ),
- பரங்கிக்காய் ( கல்யாண பூசணிக்காய் - அரசாணிக்காய் ), பீட் ரூட் மற்றும் சுரைக்காய் போன்ற காய்கறிகளிலும் செய்யலாம்.
Method:
- பூசணி, சுரைக்காய் போன்ற காய்கறி களில் செய்வதானால், அவற்றை துருவி
- வடிதட்டில் போட்டு வடியடவேண்டும். பிறகு நன்கு பிழிந்து விட்டு துருவலை மாத்திரம் உபயோகிக்கவேண்டும். பிழிந்த நீரை 'சூப்' செய்ய உபயோகிக்கலாம்.
- மேலும் இந்த ஹல்வாகள் செய்ய 'சர்க்கரை இல்லாத கோவா' உபயோகித்தால் அது ஹல்வாவின் சுவையை கூட்டும் .
- , கல்யாண பூசணி , மற்றும் காரட் - காஜர் ஹல்வாவிற்கு கலர் ஏதும் போட வேண்டாம் , மற்ற ஹல்வாகளுக்கு போடணும்.
Notes:
- பூசணி ஹல்வாவின் மறு பெயர் 'காசி ஹல்வா' இந்த ஹல்வா செய்யும் போது சர்க்கரை அளவை சிறிது அதிகரித்தால் கடையில் செய்வது போல் துண்டம் போடவரும். கேசரி கலர் போடலாம்.
Ingredients:
- 1kg 'பிரெஷ்' காரட்
- 1 1 /2lt பால்
- 500gm சர்க்கரை
- ஏலப்பொடி கொஞ்சம்
- 2sp நெய்
- 2sp உடைத்த பாதாம், பிஸ்தா, முந்தரி துண்டங்கள்.
Method:
- காரட்டை நன்கு கழுவி துருவவும்.
- ஒரு அடிகனமான பாத்திரத்தில், பால், காரட் துருவல் போட்டு அடுப்பில் வைக்கவும்.
- அடுப்பை நிதானமாக எரியவிடவும், கிளறிக்கொண்டே இருக்கவும்.
- பொங்கி வழியாமல் பார்த்துக்கொள்ளவும்.
- நன்கு குறுகினதும், சர்க்கரை போடவும். கிளறவும்.
- நெய் ஊற்றவும்.
- நன்கு பந்து போல் சுருண்டுவரும்போது ஏலப்பொடி தூவி இறக்கவும்.
- ஒரு அழகான பேசினில் போட்டு உடைத்த பருப்புகள் கொண்டு அலங்கரிக்கவும்.
Notes:
- ஹல்வா கிளரும் நேரத்தை குறைக்க துருவின காரட்டை பால் விட்டு குக்கரில் இல் வேகவைத்துவிட்டு, சர்க்கரை இல்லாத கோவா போட்டும் செய்யலாம்.
Ingredients:
- 1cup முந்தரி விழுது (150gm முந்திரியை ஊறவைத்து, கொஞ்சம் பாலில் அரைத்து வைக்கவும் )
- 2cup சர்க்கரை
- 2 1 /2cup சக்கரை இல்லாத கோவா
- 2sp நெய்
- 2sp முந்திரி உடைத்து
- சிறிதளவு ஏலப்பொடி (தேவையானால் )
- பால் சிறிதளவு
Method:
- ஒரு அடிகனமான பாத்திரத்தில், முந்தரி விழுது, நெய் போட்டு அடுப்பில் வைக்கவும்.
- அடுப்பை நிதானமாக எரியவிடவும், கிளறிக்கொண்டே இருக்கவும்.
- இப்பொழுது கோவாவை துருவி அல்லது உதிருதுப்போடவும்.
- நன்கு கிளறவும், கொஞ்சம் கெட்டியாகும்போது, சிறிது சிறிதாக நெய் விட்டு கிளறவும்.
- சர்க்கரை சேர்க்கவும்.
- கைவிடாமல் கிளறவும்.
- நன்கு பந்து போல் சுருண்டுவரும்போது ஏலப்பொடி, உடைத்துவைதுள்ள முந்தரி தூவி, கிளறி இறக்கவும்.
- சுவையான முந்தரி ஹல்வா தயார்.
Notes:
- வெறும் முந்தரி விழுது போடும் இந்த ஹல்வா செய்யலாம. (பாதாம்
- ஹல்வா) போலவே.
- சர்க்கரை இல்லாத கோவா கடையில் வாங்கினாலும் ஓகே அல்லது, ஒரு லிட்டர் பாலை சுண்டக் காய்ச்சியும் நாமே தயாரிக்கலாம்.
Ingredients:
- 2cup பாதாம் விழுது (250gm பாதாமை ஊறவைத்து, கொஞ்சம் பாலில் அரைத்து வைக்கவும் )
- 2cup சர்க்கரை
- 1cup நெய்
- 10 - 12 குங்குமப்பூ
- சிறிதளவு ஏலப்பொடி (தேவையானால் )
- பால் சிறிதளவு
Method:
- ஒரு அடிகனமான பாத்திரத்தில், பாதாம் விழுது, சர்க்கரை போட்டு அடுப்பில் வைக்கவும்.
- குங்குமப்பூ வை 1 ஸ்பூன் பாலில் உறவைக்கவும்.
- அடுப்பை நிதானமாக எரியவிடவும், கிளறிக்கொண்டே இருக்கவும்.
- குங்குமப்பூ வை கரைத்து ஊற்றவும்.
- சிறிது சிறிதாக நெய் விட்டு கிளறவும்.
- நன்கு பந்து போல் சுருண்டுவரும்போது ஏலப்பொடி தூவி இறக்கவும்.
Ingredients:
- அளவு :
- 4 கப் கேழ்வரகு மாவு
- 1 கப் உளுந்து
- 2 - 2 1/2 கப் மெல்லிசு அவல்
- ( கெட்டி அவல் என்றால் 1 - 1/2 கப் போறும்)
Method:
- அவல் மற்றும் உளுத்தம் பருப்பை நன்கு களைந்து தனித்தனியாக 2 - 3 மணிநேரம் ஊர வைக்கவும்.
- பிறகு கேழ்வரகு மாவை உப்பு போட்டு கரைத்து வைக்கவும்.
- தண்ணீர் மட்டா விடவும்.
- ஊறிய பிறகு முதலில் உளுந்தை அரைத்து பிறகு அதிலேயே ஊறிய அவலையும் போடவும்.
- அது நன்கு அரைபட்டதும், கரைத்து வைத்துள்ள கேழ்வரகு மாவையும் கொட்டி ஒரு சுற்று சுற்றி , பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.
- ஒரு 8 மணி நேரம் கழித்து தேவையானால் தண்ணீர் விட்டு, நல்லா 'கிறிஸ்ப்' ஆக வார்க்கலாம்.
- அல்லது 'மெத்' என்று கனமாகவும் வார்க்கலாம்.
- அருமையான 'கேழ்வரகு உளுந்து அவல் தோசை ' தயார்.
- ரொம்ப நல்லா இருக்கும், இன்று ஒரே மாவில், தோசை மற்றும் இட்லி செய்து பார்த்தேன் சூப்பர் !
- மேலே சொன்ன கேழ்வாகு அவல் தோசை மாவுதான், அதில் வெங்காயம் பொடியாக போட்டு ஊத்தப்பமாக வும் வார்க்கலாம்.
Images:
Ingredients:
- 1 கப் உளுந்து
- 3 கப் கேழ்வரகு மாவு ( நீங்கள் முளை கட்டி அரைத்தாலும் பரவாஇல்லை, கடை மாவு என்றாலும் பரவாஇல்லை)
- உப்பு.
Method:
- உளுத்தம் பருப்பை 2 மணி நேரம் ஊர வைக்கவும்.
- பிறகு நன்கு அரைக்கவும் .
- பிறகு ஒரு பெரிய பாத்திரத்தில் கேழ்வரகு மாவை போடவும்.
- உப்பு போடவும்.
- அரைத்த உளுத்தம் மாவையும் போட்டு கரைத்து வைக்கவும்.
- அவ்வளவுதான்; தோசை மாவு ரெடி.
- நீங்க உடனேவும் வார்க்கலாம், மறுநாள் பொங்கினதும் கூட வார்க்கலாம்.
- நல்ல மெல்லிசாக, 'மொறு மொறு' என்று வரும்.
Images:
Ingredients:
- தோசை -
- இட்லி அரிசி -- 3 ஆழாக்கு (நான் இன்று பச்சரிசி இல் தான் செய்தேன் )
- வெந்தயம் --- 3 டேபிள் ஸ்பூன்
Method:
- வெந்தயத்தை தனியாக 4 மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்கவும்.
- இட்லி அரிசியை 2 மணி நேரம் ஊறவைத்தாலும் போறும்.
- முதலில் கிரைண்டரில் வெந்தயத்தை போட்டு அரைக்கவும்.
- 3 டேபிள் ஸ்பூன் வெந்தயத்திற்கு 3 டம்ளர் தண்ணீர் தேவை யாக இருக்கும்.
- கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்துக்கொண்டே அரைக்கும்போது நன்கு நுரைக்கும்.
- உளுந்தைபோல பார்ப்பதற்கு நுரைத்து வரும்; நம்ப முடியாத அளவிற்கு 'புஸு புஸு' என்று வரும் புன்னகை
- அதை ஒரு பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.
- பிறகு அரிசியை நன்கு மையாக அரைக்கவும்.
- இரண்டையும் ஒன்றாக முதல் நாளே உப்பு போட்டு பக்குவமாக கரைத்துவைக்கவேண்டும்.
- மறு நாள் காலை நன்கு பொங்கி வந்திருக்கும்.
- காலை தோசை கல்லில் தோசை வார்க்க வேண்டும் .
- நல்ல 'பவுன்' கலரில், 'பட்டு பட்டாக' ரொம்ப அருமையாக வரும்.
- அவ்வளவுதான் சூப்பர் 'வெந்தய தோசை' ரெடி.
Ingredients:
- வெந்த பயத்தம் பருப்பு 1 கப்
- கரம் மசாலா 1/2 ஸ்பூன்
- மிளகாய் பொடி தேவைக்கு ஏற்ப
- உப்பு
- தாளிக்க : சீரகம் 1 ஸ்பூன்
- எண்ணெய் + நெய் தோசை வார்க்க
- தோசை மாவு 2 கப்
Method:
- ஒரு வாணலி இல் பாதி நெய் விட்டு சீரகம் போட்டு தாளிக்கவும்.
- அதில் வெந்த பருப்பு, + தேவையானால் கொஞ்சம் தண்ணீர் விடவும்.
- மிளகாய் பொடி, கரம் மசாலா மற்றும் உப்பு போட்டு நன்கு கிளறவும்.
- தனியே எடுத்து வைக்கவும்.
- தோசை கல்லில் மெல்லிய தோசை வார்க்கவும்.
- இருபுறமும் நெய் விட்டு எடுக்கவும்.
- பிறகு அதில் செய்து வைத்துள்ள மசாலாவை வைத்து மூடி பரிமாறவும்.
- கெட்டித்தைருடன் பரிமாறவும்.
Notes:
- மிளகாய் பொடிக்கு பதிலாக, பச்சைமிளகா, இஞ்சி அரைத்து போடலாம்
Images:
Ingredients:
- மசாலா பொடி செய்யத் தேவையானவை:
- குண்டு மிளகாய் 10 -12
- அன்னாசிப்பூ 4 -5
- தனியா 2 - 3 டேபிள் ஸ்பூன்
- மிளகு 1 டேபிள் ஸ்பூன்
- பட்டை 2 -3
- சீரகம் 1 டேபிள் ஸ்பூன்
- ஏலக்காய் 4 -5
- கிராம்பு 4 -5
- மசாலா செய்ய :
- வேகவைத்த உருளைக்கிழங்கு 2 -3 ( உதிர்த்து வைத்துக்கொள்ளவும்.)
- சின்ன வெங்காயம் 2 (பொடியாக நறுக்கவும் )
- பச்சைமிளகாய் 4 -5 (பொடியாக நறுக்கவும் )
- இஞ்சி துருவியது 1 டேபிள் ஸ்பூன்
- கொத்துமல்லி, கறிவேப்பிலை கொஞ்சம்
- மஞ்சள் பொடி 1 டீ ஸ்பூன்
- தோசை மாவு 2 கப்
- தோசை செய்ய தேவையான நெய் + எண்ணெய்
- தாளிக்க : கடுகு மற்றும் சீரகம்
Method:
- துருவின தேங்காயை வறட்டு வாணலி இல் வறுக்கவும்.
- ஒரு துளி எண்ணெய் விட்டு வறுக்க கொடுத்த மசாலா சாமான்களை வறுத்து பொடிக்கவும்.
- ஒரு ஆழமான வாணலி இல் நெய் மட்டும் எண்ணெய் விட்டு, தாளிக்கவும்.
- பிறகு அதில் பச்சைமிளகாய், சின்ன வெங்காயம், இஞ்சி மற்றும் கறிவேப்பிலை போட்டு நன்கு வதக்கவும்.
- உதிர்த்து வைத்துள்ள உருளைக்கிழங்கு மற்றும் மஞ்சள் பொடி போட்டு, தேவையானால் கொஞ்சம் தண்ணீர் விட்டு கிளறவும்.
- அதில் மசாலா பொடியை தேவையான அளவு போடவும்.
- நன்கு கலக்கவும்.
- உப்பு போட்டு மீண்டும் நன்கு கிளறி இறக்கவும்.
- தோசைக்கல்லை அடுப்பில போட்டு, மெல்லிய தோசை வார்க்கவும்.
- நெய்விட்டு திருப்பவும், பிறகு அதில் செய்து வைத்துள்ள மசாலா 2 -3 ஸ்பூன்கள் தேவைக்கு ஏற்ப வைத்து மூடி பரிமாறவும்.
- இந்த தோசைக்கு தொட்டுக்கொள்ள புதினா அல்லது கொத்துமல்லி அல்லது தேங்காய் சட்னி என எதுவேண்டுமானாலும் நல்லா இருக்கும்.
Notes:
- செய்து வைத்த மசாலா பொடி மீந்து போனால் வதக்கல் கறியமுதுகள் செய்யும்போது உபயோகப்படுத்தலாம்
Ingredients:
- வெந்த பயத்தம் பருப்பு 1 cup
- வெல்லம் 1 cup
- துருவிய தேங்காய் ஒரு மூடி
- முந்திரி 25 -30
- ஏலக்காய் 3 - 4
- சுக்கு பொடி ஒரு சிட்டிகை
- நெய் 1/2 cup
- தோசை மாவு 2 கப்
Method:
- ஒரு வாணலி இல் பாதி நெய் விட்டு முந்திரி யை வறுக்கவும்.
- அதில் வெந்த பருப்பு, துருவிய தேங்காய் மற்றும் வெல்லம் போடவும்.
- தேவையானால் கொஞ்சம் தண்ணீர் விடவும்.
- நன்கு கிளறவும்.
- ஏலப்பொடி போடவும்.
- தனியே எடுத்து வைக்கவும்.
- தோசை கல்லில் மெல்லிய தோசை வார்க்கவும்.
- இருபுறமும் நெய் விட்டு எடுக்கவும்.
- பிறகு அதில் செய்து வைத்துள்ள இனிப்பை வைத்து மூடி பரிமாறவும்.
- குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும் இது
Ingredients:
- தேங்காய் 1
- பச்சரிசி 2 ஆழாக்கு
- உப்பு
- 1 ஸ்பூன் எண்ணை தோசை மாவில் விட.
Method:
- தோசை செய்வதற்கு அரிசியை 1 மணிநேரம் ஊற வைக்கவும்.
- தேங்காய்யை துருவி அரிசியுடன் உப்பு போட்டு அரைக்கவும்.
- உப்பு மற்றும் 1 ஸ்பூன் எண்ணை விட்டு கலக்கி வைக்கவும்.
- ஒரு 15 - 20 நிமிடம் கழித்து தோசை வார்க்கவும்.
- ரவா தோசை போல கல்லின் ஓரத்திலிருந்து மாவை விடவும்.
- மாவு கொஞ்சம் தண்ணியாக இருக்கணும்.
- இட்லி பானை மூடியால் முடி வைக்கவும்.
- 1 நிமிடம் கழித்து திறந்து எடுக்கவும்.
- வெள்ளை வெளேர் என்கிற 'மெத் மெத்' தோசை தயார்.
- துளிக்கூட எண்ணை கிடையாது இதில்.
- காரமாக 'சாகு' அல்லது 'குருமா' தொட்டுக்கலாம்.
Ingredients:
- Fresh தோசை மாவு 1 கப்
- வெல்லம் 1 கப்
- ஏலப்பொடி 1/2 ஸ்பூன்
- தேங்காய் துருவல் 1/2 கப்
- நெய் தோசை வார்க்க
Method:
- ஒரு பாத்திரத்தில் தோசை மாவு மற்றும் வெல்லம், ஏலப்பொடி,தேங்காய் துருவல் எல்லாத்தையும் போட்டு கரைக்கவும்.
- வேண்டுமானால் தண்ணீர் சேர்க்கவும்.
- ஒரு 10 நிமிஷம் கழித்து தோசை வர்க்கவும்.
- நெய்விட்டு இருபக்கமும் வெந்ததும் எடுக்கவும்.
- சாப்பிட கொடுக்கும் போதும் நெய் விட்டு தரவும்.
- அருமையாக இருக்கும்.
Ingredients:
- அரிசி மாவு 1 கப்
- கோதுமை மாவு 1 1/2 கப்
- வெல்லம் 2 கப்
- ஏல பொடி 1 டீ ஸ்பூன்
- சோடா உப்பு ஒரு சிட்டிகை
- நெய் தோசை வார்க்க
Method:
- வெல்லத்ததை தட்டி தண்ணிரில் போடவும்.
- மண்போக வடிகட்டவும்.
- மாவுகள், சோடா உப்பு மற்றும் உப்பு எல்லாம் அந்த வெல்லத் தண்ணிரில் போட்டு தோசை மாவு பதத்துக்கு கரைக்கவும்.
- ஒரு அரைமணி அப்படியே வைத்துவிட்டு , பிறகு தோசை வார்க்கணும்.
- நெய் விட்டு வெல்ல தோசை வார்க்கணும்.
- சுவையான 'வெல்ல தோசை' தயார்.
- குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும்.
Notes:
- அடுப்பு நிதானமாக எரிய வேண்டியது முக்கியம், இல்லாவிட்டால் தோசை தீய்ந்து விடும்.
Ingredients:
- சோள மாவு அல்லது பாஜ்ரா அதாவது கம்பு மாவு அல்லது கேழ்வரகு மாவு ஏதாவது ஒன்று 2 கப்
- உளுந்து 1/2 கப்
- உப்பு
- எண்ணெய்
Method:
- உளுந்தை 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
- பிறகு நன்கு அரைக்கவும்.
- கிரைண்டர் இல் உளுந்து அரைபடும் போதே எடுத்துக்கொண்ட மாவை கொஞ்சம் கொஞ்சமாக போடவும்.
- இரண்டும் சேர்ந்து நன்கு அரைபடட்டும் ஒரு 2 நிமிஷம்.
- பிறகு எடுத்து உப்பு போட்டு கரைத்து வையுங்கள்.
- மறு நாள் தோசை வார்க்கலாம்.
- மெத் என்று அருமையாக இருக்கும்.
Notes:
- சர்க்கரை நோயாளிகளுக்கான தோசை இது ; நீங்கள் மிக்சி இல் அரைப்பவரானால் கோதுமை மாவை 1 கப் தண்ணிரில் கலந்து, மிக்சி இல் 2 நிமிடம் சுற்றி எடுக்கவும். பிறகு உளுந்த்தமாவுடன் கலக்க வேண்டியது தான்
Ingredients:
- கோதுமை மாவு 2 கப்
- மோர் 1 கப்
- உப்பு
- தேவையானால் தண்ணீர்
- தோசை வார்க்க எண்ணெய்
- இதில் தாளிக்க :
- கடுகு 1 டீ ஸ்பூன்
- சீரகம் 1 டீ ஸ்பூன்
- பச்சை மிளகாய் 1 டேபிள் ஸ்பூன் பொடியாக நறுக்கியது
- கறிவேப்பிலை
Method:
- கோதுமை மாவை ஒரு பாத்திரத்தில் போட்டுக்கொள்ளவும்.
- நீர்த்த மோர் எடுத்து வைத்துக்கொள்ளவும்.
- மேலே தாளிக்க சொன்னவைகளை தாளித்து மாவின் மேல் கொட்டவும்.
- நன்கு கையால் பிசைவது போல கலக்கவும்.
- நீர் மோர் மற்றும் உப்பு போட்டு கரைத்து வைக்கவும்.
- ஒரு அரைமணி கழித்து நல்ல மெல்லிசாக தோசை வார்க்கணும்.
- இன்ஸ்டன்ட் கோதுமை தோசை ரெடி
Ingredients:
- கோதுமை மாவு 2 கப்
- உளுந்து 1/2 கப்
- உப்பு
- எண்ணெய்
Method:
- உளுந்தை 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
- பிறகு நன்கு அரைக்கவும்.
- கிரைண்டர் இல் உளுந்து அரைபடும் போதே கோதுமை மாவை கொஞ்சம் கொஞ்சமாக போடவும்.
- இரண்டும் சேர்ந்து நன்கு அரைபடட்டும் ஒரு 2 நிமிஷம்.
- பிறகு எடுத்து உப்பு போட்டு கரைத்து வையுங்கள்.
- மறு நாள் தோசை வார்க்கலாம்.
- மெத் என்று அருமையாக இருக்கும்.
Notes:
- சர்க்கரை நோயாளிகளுக்கான தோசை இது
Ingredients:
- 4 ஆழாக்கு பச்சரிசி
- 1 ஆழாக்கு உளுந்து
- 2 டேபிள் ஸ்பூன் வெந்தயம்
- உப்பு
- தோசை வார்க்க எண்ணெய்
Method:
- அரிசி பருப்பு மற்றும் வெந்தயம் எல்லாத்தையும் தனித்தனியாக 2 - 3 மணிநேரம் ஊர வைத்து மிக்சி அல்லது கிரைண்டர், ஆட்டுக்கல் என எதிலாவது தனித்தனியாக நன்கு அரைக்கவும்.
- ஒன்றாக உப்பு போட்டு கரைத்து வைக்கவும்.
- ஒரு 8 - 10 மணிநேரம் கழித்து தோசை வார்க்கலாம்.
- இந்த 'வெந்தய தோசை' வெந்தய மனமுடன் லைட் மஞ்சள் கலரில் தோசை அருமையாக இருக்கும்.
Notes:
- உடலுக்கு ரொம்ப குளுமை, எனவே வெய்யநாளில் செய்து சாப்பிடுவது ரொம்ப நல்லது.
Images:
Ingredients:
- அரிசி 1 கப்
- உளுத்தம் பருப்பு 1/4 கப்
- கடலை பருப்பு 3/4 கப்
- வெந்தயம் 1 டேபிள் ஸ்பூன்
- உப்பு
- எண்ணெய்
Method:
- அரிசி பருப்பு மற்றும் வெந்தயத்தை களைந்து ஒன்றாகவே ஊறவைக்கவும்.
- 2 -3 மணிநேரம் ஊரினதும் கொஞ்சம் 'காரகர்'பாக அரக்கவும்.
- உடனேயே வார்க்கலாம்.
- அந்த காலத்தில் தவலை இல் வார்ப்பளாம் ; இப்போ நம்மால் முடியாது.
- அதனால் குழிவான வாணலி இல் வார்க்கலாம்.
- வாணலி இல் முதலில் எண்ணெய் விட்டுக்கொண்டு , ஒரு கரண்டி மாவை விடவும்.
- ரொம்ப பரத்த வேண்டாம் .
- சுற்றிலும் எண்ணெய் விட்டு, இட்லி பானை முடியால் அதை மூடி விடவும்.
- 2 நிமிடம் கழித்து திறந்தால் , அடை மேல்பக்கம் வெந்து இருக்கும், அதை திருப்பி போடணும்.
- அப்போது வரும் மேல் பக்கம் நல்ல மொரு மொரு பாக இருக்கும்.
- திருப்பி போட்டதும் இலுப்ப சட்டியை முட வேண்டாம்.
- மறு புறம் போட்டதும் மீண்டும் எண்ணெய் விடணும்.
- அந்த பக்கமும் வெந்ததும் எடுத்து விடலாம்.
- சுவையான 'தவல அடை ' ரெடி.
- ரொம்ப நல்லா இருக்கும்.
Notes:
- வெந்தய கசப்பு இருக்கும் இந்த அடை இல், அது பிடிக்காத வா, ஒரு நாள் முன்பே வெந்தயத்தை மட்டும் ஊற வைத்து விட்டு மறுநாள் அரிசி பருப்பு ஊற வைத்து இந்த வெந்தயத்தை சேர்த்து அரைக்கலாம். வெந்தயம் ஊற வைத்த தண்ணியையும் வீணாக்காமல் அரைக்க உபயோகபடுத்தலாம்.
Ingredients:
- கோதுமை மாவு 2 கப்
- வெல்லம் 1 1/2 கப்
- துளி உப்பு
- தேங்காய் துருவல் 1/2 கப்
- நெய்
Method:
- அழமான வாணலி இல் 4 கப் தண்ணீர் விட்டு வெல்லத்தை பொடித்து போடவும்.
- அது கரைந்ததும் கொதிக்கட்டும் , அடுப்பை சின்னதாக்கி விட்டு கோதுமை மாவை போடவும்.
- நன்கு கட்டி இல்லாமல் கிளறவும்.
- கொஞ்சம் நெய், தேங்காய் துருவல், சிட்டிகை உப்பு மற்றும் ஏலப்பொடி போட்டு கிளறி இறக்கவும்.
- ஒரு தாம்பாளத்தில் கொட்டவும்.
- நல்லா ஆறினதும் நார்த்தங்காய் அளவு உருண்டைகளாக உருட்டவும்.
- பிறகு நெய் தடவிய பிளாஸ்டிக் ஷீட் அல்லது வாழை இலை இல் அடை போல தட்டவும்.
- அடுப்பில் தோசை கல்லை போட்டு சூடானதும், தட்டி வைத்த அடையை அதில் போடவும்.
- இரண்டு புறமும் நெய்விட்டு எடுக்கவும்.
- வெல்ல அடை தயார்.
- இதுவும் குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும்.
Notes:
- இது போல கேழ்வரகு மாவில் கூட செய்யலாம்
Ingredients:
- அரிசி மாவு 3/4 கப்
- உளுத்தம் மாவு 1/4 கப்
- சோயா மாவு 1/4 கப்
- சோடா உப்பு 1/4 கப்
- உப்பு
- எண்ணெய்
Method:
- மேலே சொன்ன எல்லா பொருட்களையும் ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் விட்டு தோசை மாவு பதத்துக்கு கரைத்துக்கொள்ளவும்.
- ஒரு அரைமணி கழித்து நல்ல மெல்லிசாக தோசை வார்க்கணும்.
- அவ்வளவுதான் 'சோயா தோசை' ரெடி.
- இது உடம்புக்கு ரொம்ப நல்லது.
Ingredients:
- 1 கப் பச்சை அரிசி
- 1 கப் புழுங்கல் அரிசி
- 1 கப் பாசி பருப்பு
- உப்பு
- எண்ணெய்
- இஞ்சி
Method:
- அரிசி பருப்பை தனி தனியாக ஒரு அரைமணி ஊறவைத்த பின்பு, அரைக்கவும்.
- இப்பொழுது நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் வெங்காயத்தை மாவுடன் சேர்த்து, தோசை வார்க்கலாம்.
- தொட்டுக்கொள்ள தேங்காய் சட்னி நல்லா இருக்கும்
Ingredients:
- 2 கப் பச்சை பயறு
- 1 கப் அரிசி
- உப்பு
- எண்ணெய்
- இஞ்சி
Method:
- பச்சை பயறு மற்றும் அரிசியை தனி தனியாக ஒரு 4 முதல் 6 மணி நேரம் வரை ஊறவைக்கவும்.
- பிறகு பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக அரைக்கவும்.
- மாவு அரைத்ததுமே தோசை வார்க்கலாம்.
- வெங்காய சட்னியுடன் பரிமாறலாம்.
- ஹைதராபாத்தில் இதற்கும் தொட்டுக்கொள்ள ரவா உப்புமா செய்வார்கள்.
- பச்சை கலருடன் தோசை பார்க்கவே ரொம்ப நல்லா இருக்கும்
Notes:
- பொடியாக நறுக்கிய வெங்காயத்தை மாவுடன் சேர்த்து, தோசை வார்க்கலாம்.
Images:
Ingredients:
- 2 1/2 கப் பாசி பருப்பு
- 1/2 கப் அரிசி
- உப்பு
- எண்ணெய்
- இஞ்சி
Method:
- பாசி பருப்பு மற்றும் அரிசியை தனி தனியாக ஒரு மணி நேரம் ஊறவைக்கவும்.
- பிறகு பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக அரைக்கவும்.
- மாவு அரைத்ததுமே தோசை வார்க்கலாம்.
- வெங்காய சட்னியுடன் பரிமாறலாம்.
- ஹைதராபாத்தில் இதற்கு தொட்டுக்கொள்ள ரவா உப்புமா செய்வார்கள்
Notes:
- பொடியாக நறுக்கிய வெங்காயத்தை மாவுடன் சேர்த்து, தோசை வார்க்கலாம்.
Ingredients:
- 1 கப் உளுத்தம் பருப்பு
- 4 கப் அரிசி
- 1 டீ ஸ்பூன் வெந்தயம்
- 2 டேபிள் ஸ்பூன் கடலை பருப்பு
- 10 -12 காரட்
- 20 -25 பீன்ஸ்
- 1/2 கப் பச்சை பட்டாணி
- 5-6 பச்சை மிளகாய் (நறுக்கியது )
- 10 - 12 வெங்காய தாள் (நறுக்கியது )
- சிறிதளவு இஞ்சி துருவவும்
- 3 -4 பூண்டு பற்கள்
- 2 ஸ்பூன் சோள மாவு
- 1/4 ஸ்பூன் அஜினோமோடோ
- 2 ஸ்பூன் சோயா சாஸ்
- 1 ஸ்பூன் சில்லி சாஸ்
- கொத்துமல்லி சிறிதளவு
- உப்பு
- எண்ணெய்
Method:
- உளுத்தம் பருப்பு, அரிசி, வெந்தையம் மற்றும் கடலை பருப்பு ஆகியவற்றை தண்ணீரில் 1 -2 மணி நேரம் ஊறவைக்கணும்.
- பிறகு அவற்றை நன்றாக அரைக்கவும்.
- பிறகு அரைத்த மாவை 6 -8 மணி நேரம் வரை புளிக்க விடவும்.
- காரட் மற்றும் பீன்ஸ் சை பொடியாக நறுக்கி, பட்டாணியுடன் துளி உப்பு போட்டு நன்றாக வேகவைக்கவும்.
- வாணலி இல் சிறிதளவு எண்ணெய் விட்டு, நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி மற்றும் பூண்டு சேர்க்கவும்.
- பிறகு வேகவைத்த காரட் , பீன்ஸ் மற்றும் பச்சை பட்டாணி, சோயா சாஸ், அஜினமொடோ, சில்லி சாஸ் மற்றும் சிறிதளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.
- சோள மாவுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கரைக்கவும்.
- பிறகு இந்த சோள மாவை, வாணலி இல் உள்ள மஞ்சுரியனுடன் சேர்த்து நன்றாக வதக்கவும்.
- இறுதியாக பொடியாக நறுக்கிய வெங்காய தாள் மற்றும் கொத்துமல்லி சேர்த்து இறக்கவும்.
- இப்பொழுது மஞ்சுரியன் தயாராகி விட்டது.
- பிறகு தோசை கல்லை அடுப்பில் போட்டு தோசை வார்க்கவும்.
- ஒரு பக்கம் வெந்ததும் மறு பக்கம் திருப்பி போட்டு, மீண்டும் அதை பழைய படி போட்டு அதன் மேல் மஞ்சுரியன் வைத்து மூடி ( மசாலா போல ) எடுக்கவும்.
- இதை அப்படியே சாப்பிடலாம் தொட்டுக்கொள்ள எதுவும் வேண்டாம்
Ingredients:
- மைதா மாவு 2 கப்
- கடலை மாவு 1 கப்
- அரிசி மாவு 1 கப்
- தக்காளி 2 - 3
- பச்சை மிளகாய் 2 - 4
- உப்பு
- எண்ணெய் தேவையான அளவு
Method:
- மைதா மாவு, கடலை மாவு மற்றும் அரிசி மாவு ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
- தக்காளியை மிக்ஸ் இல் அரைத்து கொள்ளவும்.
- பிறகு உப்பு, தக்காளி சாறு இரண்டையும் மாவுடன் சேர்த்து தோசை மாவு பதத்துக்கு கரைக்கவும்.
- பச்சை மிளகாய் சேர்க்கவும்.
- அவ்வளவுதான், இப்போ தோசை மாவு தயார்.
- இனி தோசை வார்க்க வேண்டியது தான்.
Notes:
- தேவையானால் பச்சை மிளகாயையும் தக்காளி யுடன் அரைக்கலாம்.
Ingredients:
- அரிசி மாவு 1 கப்
- மைதா மாவு 1 கப்
- கடலை மாவு 1 கப்
- மிளகாய் பொடி 1 ஸ்பூன் (தேவைபட்டால்)
- கறிவேப்பிலை
- உப்பு
Method:
- அரிசி மாவு, கடலை மாவு மற்றும் மைதா மாவு ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து கரைத்து வைக்கவும்.
- பிறகு கறிவேப்பிலை, மிளகாய் பொடி மற்றும் உப்பு சேர்க்கவும்.
- இறுதியாக, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அனைத்தையும் தோசை மாவு பதத்திற்கு கரைக்கவும்.
- மெல்லிய தோசைகளாக வார்க்கவும்.
- மஞ்சள் வண்ணத்தில் தோசை அருமையாக இருக்கும்
Ingredients:
- மைதா மாவு 1 கப்
- அரிசி மாவு 1 கப்
- உப்பு
- மோர் 1 கப்
- எண்ணெய் அல்லது நெய் தோசை வார்க்க
Method:
- மைதா மாவு மற்றும் அரிசி மாவு, இரண்டையும் மோர் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கரைக்கவும்.
- அவ்வளவு தான், தோசை வர்க்க வேண்டியதுதான்
Notes:
- தேவைப்பட்டால் கடுகு, கறிவேப்பிலை மற்றும் பச்சை மிளகாய் சேர்க்கலாம்.
-
Ingredients:
- கோதுமை மாவு 1 கப்
- அரிசி மாவு 2 கப்
- ரவை 3 கப்
- பச்சை மிளகாய் 3 - 4
- கடுகு 1/2 ஸ்பூன்
- சீரகம் 1/2 ஸ்பூன்
- மிளகு 1 டீ ஸ்பூன்
- தண்ணியான மோர் 2 கப்
- முந்திரி 1/2 கப் உடைத்தது
- கறிவேப்பிலை
- வெங்காயம் 1 பொடியாக நறுக்கவும்
- உப்பு
- எண்ணெய் தேவையான அளவு
Method:
- கோதுமை மாவு, அரிசி மாவு மற்றும் ரவை , இவற்றை நன்றாக மோர் விட்டு கரைக்கவும்.( தோசை மாவு பதத்திற்கு).
- பச்சை மிளகாவை பொடி பொடியாக நறுக்கவும்.
- வாணலி இல் சிறிது எண்ணெய் விட்டு கடுகு , பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை தாளித்து , தோசை மாவில் போடவும்.
- முந்திரி போடவும்; சீரகம் ,மிளகு பொடித்து போடவும்.
- பிறகு நறுக்கிய வெங்காயத்தை தோசை மாவுடன் சேர்க்கவும்.
- இந்த தோசை சாதாரண ரவா தோசையை விட 'மொறு மொறு ' வென்று இருக்கும்.
- எல்லா ரவா தோசைகளுக்கும் தேங்காய் சட்னி ரொம்ப நல்லா இருக்கும்.
Ingredients:
- ரவா தோசை மாவு 2 கப்
- வேகவைத்த உருளைக்கிழங்கு 2 -3 ( உதிர்த்து வைத்துக்கொள்ளவும்.)
- வெங்காயம் 2 (பொடியாக நறுக்கவும் )
- பச்சைமிளகாய் 4 -5 (பொடியாக நறுக்கவும் )
- இஞ்சி துருவியது 1 டேபிள் ஸ்பூன்
- கொத்துமல்லி, கறிவேப்பிலை கொஞ்சம்
- பூண்டு 1 டீ ஸ்பூன் பொடியாக நறுக்கினது ( தேவையானால் )
- தாளிக்க :
- கடுகு 1 டீ ஸ்பூன்
- உளுத்தம் பருப்பு 1 டீ ஸ்பூன்
- கடலை பருப்பு 1 டீ ஸ்பூன்
- மஞ்சள் பொடி 1/2 ஸ்பூன்
- எண்ணெய் 2 டேபிள் ஸ்பூன்
- உப்பு
- தோசை வார்க்க எண்ணெய் மற்றும் நெய் கலந்து வைத்துக்கொள்ளுங்கள்.
Method:
- வாணலி இல் எண்ணெய் வைத்து தாளிக்கும் பொருட்களை போட்டு தாளிக்கவும்.
- நறுக்கிவைத்துள்ள இஞ்சி, பூண்டு மற்றும் பச்சை மிளகாயை போடவும்.
- கொஞ்சம் வதங்கினதும், வெங்காயம் போடவும்.
- பிறகு உதிர்த்து வைத்துள்ள உருளைக்கிழங்கை போடவும்.
- நன்கு கிளறவும்.
- கொஞ்சம் தண்ணீர் விட்டு உப்பு போட்டு கிளறவும்.
- மசாலா நன்கு சேர்ந்து வந்ததும், கொத்துமல்லி கறிவேப்பிலை போட்டு கிளறி இறக்கவும்.
- அடுப்பில் தோசைகல்லை போட்டு மெல்லியதாக ரவா தோசை வார்க்கவும்.
- கலந்து தயாராய் வைத்துள்ள எண்ணெய் மற்றும் நெய்யை விடவும்.
- பிறகு அடுப்பை சின்னதாக்கி விட்டு , மசாலாவை ஒரு ஸ்பூன் எடுத்து தோசை இல் தடவவும்.
- பிறகு அதை மடித்து பரிமாறவும்.
- இதற்கு தேங்காய் சட்னி, சாம்பார் எல்லாமே நல்லா இருக்கும்.
Ingredients:
- புழுங்கல் அரிசி 2 கப்
- பச்சரிசி 2 கப்
- துவரம் பருப்பு 1/2 கப்
- உளுத்தம் பருப்பு 1/2 கப்
- வெந்தயம் 2 டீ ஸ்பூன்
- உப்பு
- எண்ணெய் தேவையான அளவு
Method:
- அரிசி, பருப்பு , வெந்தயம் ஆகியவற்றை தனி தனியாக ஊறவைக்கணும்.
- பிறகு அவற்றை தனி தனியாக அரைக்கணும்; பிறகு ஒரு பாத்திரத்தில் உப்பு போட்டு கலக்கவும்.
- 8 மணி நேரம் கழித்து ஊத்தப்பம் வார்க்கலாம்..
- வித்தியாசமான சுவையுடன் ரொம்ப நல்லா இருக்கும் இது
Ingredients:
- அடை மாவு 2 கப்
- துருவிய தேங்காய 1 கப்
- உப்பு
- கறிவேப்பிலை
- எண்ணெய் தேவையான அளவு
Method:
- மாவுடன் எல்லாவற்றையும் கலக்கவும்.
- அடை வார்க்கவும்.
- தேங்காய் அடை தயார்.
Ingredients:
- அடை மாவு 2 கப்
- சின்ன வெங்காயம் - பொடியாக நறுக்கினது 1 கப்
- உப்பு
- கறிவேப்பிலை
- எண்ணெய் தேவையான அளவு
Method:
- மாவுடன் எல்லாவற்றையும் கலக்கவும்.
- அடை வார்க்கவும்.
- வெங்காய அடை தயார்.
- காரமான இந்த அடைக்கு அவியல் அல்லது வெல்லம் ரொம்ப நல்லா இருக்கும்.
Ingredients:
- அடை மாவு 2 கப்
- முளைக்கீரை - பொடியாக நறுக்கினது 1 கப்
- உப்பு
- எண்ணெய் தேவையான அளவு
Method:
- மாவுடன் எல்லாவற்றையும் கலக்கவும்.
- அடை வார்க்கவும்.
- கீரை அடை தயார்
Notes:
- சுவையான அடை செய்வதிற்கு தேங்காய் எண்ணெய்யை உபயோகைப்படுத்தவும் .முளை கீரைக்கு பதில் முருங்கைக்கீரை கூட பயன் படுத்தலாம்.
Ingredients:
- தோசை மாவு 1 கப்
- வெங்காயம் 2 - 3 மிகவும்பொடியாக நறுக்கவும்
- காரட் 2 துருவியது
- தக்காளி 2 பொடியாக நறுக்கவும்
- பச்சைமிளகாய் 4 -5 (பொடியாக நறுக்கவும் )
- கொத்துமல்லி கொஞ்சம்
- சீரகம் 1 டேபிள் ஸ்பூன்
- தோசை வார்க்க எண்ணெய் மற்றும் நெய் கலந்து வைத்துக்கொள்ளுங்கள்.
Method:
- மாவில் எல்லா பொருட்களையும் போட்டு நன்கு கலக்கவும்.
- அடுப்பில் தோசைகல்லை போட்டு கொஞ்சம் கனமாக தோசை வார்க்கவும்.
- கலந்து தயாராய் வைத்துள்ள எண்ணெய் மற்றும் நெய்யை விடுங்கோ.
- நல்லா வெந்ததும் திருப்பி போடுங்கோ.
- மீண்டும் கொஞ்சம் எண்ணெய் விடுங்கோ.
- கல்லிலிருந்து எடுத்து பறிமாருங்கோ.
- தொட்டுக்க எதுவுமே வேண்டாம்; அப்படியே சாப்பிடலாம்.
- 'மெத்' என்கிற ஊத்தப்பம் ரெடி.
Ingredients:
- தோசை மாவு 1 கப்
- வெங்காயம் 2 - 3 மிகவும்பொடியாக நறுக்கவும்
- பச்சைமிளகாய் 4 -5 (பொடியாக நறுக்கவும் )
- கொத்துமல்லி கொஞ்சம்
- சீரகம் 1 டேபிள் ஸ்பூன்
- தோசை வார்க்க எண்ணெய் மற்றும் நெய் கலந்து வைத்துக்கொள்ளுங்கள்.
Method:
- மாவில் எல்லா பொருட்களையும் போட்டு நன்கு கலக்கவும்.
- அடுப்பில் தோசைகல்லை போட்டு கொஞ்சம் கனமாக தோசை வார்க்கவும்.
- கலந்து தயாராய் வைத்துள்ள எண்ணெய் மற்றும் நெய்யை விடுங்கோ.
- நல்லா வெந்ததும் திருப்பி போடுங்கோ.
- மீண்டும் கொஞ்சம் எண்ணெய் விடுங்கோ.
- கல்லிலிருந்து எடுத்து பறிமாருங்கோ.
- தொட்டுக்க எதுவுமே வேண்டாம்; அப்படியே சாப்பிடலாம்.
- 'மெத்' என்கிற ஊத்தப்பம் ரெடி.
Notes:
- ஓரம் கரகரப்பாக வரணும் என்று விரும்புபவர்கள், மாவுடன் கொஞ்சம் அரிசி மாவு சேர்க்கவும். 1 கப் தோச மாவு என்றால் 2 - 3 டேபிள் ஸ்பூன் அரிசி மாவு சேர்க்கலாம். பொதுவாக தோசை மாவு கொஞ்சம் புளித்ததும் இப்படி ஊத்தப்பம் செய்வது வழக்கம். வேண்டுமானால் ப்ரெஷ் மாவிலும் கூட இப்படி ஊத்தப்பம் செய்யலாம் .
Images:
Ingredients:
- தோசை மாவு 1 கப்
- மசாலா :
- பனீர் 1 கப் துருவியது
- சீரகம் 1 ஸ்பூன் பொடிக்கவும்
- மிளகு 1 ஸ்பூன் பொடிக்கவும்.
- தோசை வார்க்க எண்ணெய் மற்றும் நெய் கலந்து வைத்துக்கொள்ளுங்கள்.
Method:
- அடுப்பில் தோசைகல்லை போட்டு மெல்லியதாக தோசை வார்க்கவும்.
- கலந்து தயாராய் வைத்துள்ள எண்ணெய் மற்றும் நெய் யை விடவும்.
- பிறகு அடுப்பை சின்னதாக்கி விட்டு , மசாலாவை ஒரு ஸ்பூன் எடுத்து தோசை இல் தடவவும்.
- பிறகு அதை மடித்து பரிமாறவும்.
- இதற்கு தேங்காய் சட்னி, சாம்பார் எல்லாமே நல்லா இருக்கும்.
Notes:
- வேண்டுமானால்,மாவில் மசாலாவை கலந்தும் அப்படியே வார்த்து சாப்பிடலாம்
Ingredients:
- அரிசி 4 கப்
- உளுத்தம் பருப்பு 1 கப்
- அவல் 1 - 1 1 / 2 கப்
- உப்பு
- எண்ணெய் தேவையான அளவு
Method:
- அரிசி மற்றும் உளுத்தம் பருப்பை தனி தனியாக ஒரு பாத்திரத்தில் போட்டு, 2 முதல் 3 மணி நேரம் நன்றாக ஊறவைக்கணும்.
- பிறகு அவற்றை mixie அல்லது grinder இல் தனி தனியாக அரைக்கவும்.
- அரைப்பதற்கு முன்பு, அவலை நன்றாக அலசி, பிழிந்து ஒரு வடிதட்டில் போட்டு, தண்ணீர் வடியும் படி வைக்கவும்.
- பிறகு இரண்டு மாவையும் ஓன்றாக கலக்கி உப்பு சேர்க்கவும்.
- பிறகு ஊறவைத்த அவலை மாவுடன் சேர்க்கவும்.
- மாவு ஒரு நாள் இரவு முழுவதும் அல்லது குறைந்த பக்ஷம் 8 மணி நேரமாவது அப்படியே இருக்கணும்.
- பிறகு மாவு புளித்து மேல பொங்கி வரும் .
- இப்பொழுது மாவை கொண்டு பேப்பர் ரோஸ்ட் போல் மெல்லிசான தோசை வார்க்கலாம் அல்லது நல்ல தடிமனான , ஸ்பாஞ் போல தோசை வார்க்கலாம்.
- சூடான தோசையை சட்னி அல்லது தோசை மிளகாய் பொடியுடன் சாப்பிடலாம்.
Notes:
- தடிமனான அவல் உபயோகித்தால் ஒரு கப் எடுத்து கொள்ளவும் அல்லது மெல்லிய அவல் என்றால் 1 1/2 போதுமானது.
Images:
Ingredients:
- 2 1/2 கப் அரிசி
- 1 / 2 கப் ஜவ்வரிசி
- 1 / 4 கப் உளுத்தம் பருப்பு
- 1 ஸ்பூன் வெந்தயம்
- உப்பு
- எண்ணெய்
Method:
- அரிசி , ஜவ்வரிசி மற்றும் உளுத்தம் பருப்பை தனித்தனியாக ஊறவைக்ணும்.
- 3 மணி நேரம் கழித்து தனித்தனியாக அரைக்கவும் .
- பிறகு உப்பு சேர்க்கவும்.
- அடுத்த நாள் அல்லது 12 மணி நேரம் கழித்து தோசை வார்க்கலாம்.
- தோசைக்கல்லில் மெல்லியதாக வார்க்கவும்.
- இந்த மாவில் வார்த்தால் ஹோட்டலில் கிடைப்பது போல நல்ல 'கிறிஸ்ப் ' தோசையாக வார்க்கலாம்.
- முயன்று பாருங்கள்
Ingredients:
- அப்பொழுது அரைத்த தோசை மாவு 2 கப்
- எண்ணெய்
Method:
- அரைத்த உடன் தோசை வார்க்க வேண்டியது தான்.
- இந்த தோசை நல்ல நிறத்துடனும், மொரு மொரு வென்றும் இருக்கும்.
Ingredients:
- அரிசி 2 கப்
- உளுத்தம் பருப்பு 1/2 கப்
- உப்பு
- தேங்காய் எண்ணெய்
- துருவிய தேங்காய் 3/4 கப்
Method:
- அரிசி,உளுத்தம் பருப்பை ஒரே பாத்திரத்தில் ஒரு அரைமணி ஊறவைகணும்.
- பிறகு துருவிய தேங்காயை மாவுடன் சேர்த்து அரைக்கவும்.
- அரைத்த மாவில் உப்பு சேர்த்தவுடன் உடனடியாக தோசை வார்க்கலாம்.
- காலை உணவுக்கு மிகவும் சுவையாக இருக்கும்.
- இதற்கு வெங்காய சட்னி நல்லா இருக்கும்.
Ingredients:
- உளுத்தம் பருப்பு 1 கப்
- புழுங்கல் அரிசி 4 கப்
- உப்பு
- எண்ணெய் தேவையான அளவு
Method:
- புழுங்க அரிசியை 2 மணி நேரம் ஊறவைத்த பிறகு,அவற்றுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து அரைத்து ஒரு நாள் இரவு முழுவதும் அப்படியே வைக்கணும்.
- பிறகு காலையில் எழுந்தவுடன் , உளுத்தம் பருப்பை 1 மணிநேரம் ஊரவைத்து, அரைக்கணும்.
- அரைத்த அரிசி மாவையும் உளுத்தம் மாவையும் சேர்த்து கலக்கவும்.
- அரைத்ததும் தோசை வார்க்கலாம்.
- இந்த தோசைக்கு எண்ணெய் விட்டு வார்க்க கூடாது
- ஒரு tissue paper அல்லது நறுக்கிய வெங்காயத்தை எண்ணெய் இல் தோய்த்து தோசை கல்லில் தடவவும்.
- பிறகு தோசை வார்க்கவும்.
- மேலும் இதை 'நான் ஸ்டிக்' இல் வார்க்ககூடாது , 'கல் தோசை' வார்ப்பதற்கு என்று தனி கல் இருக்கு அதில் வார்க்கலாம் ; அல்லது 'வார்ப்பட கல் ' லில் வார்க்கலாம்.
Notes:
- கல் தோசைகல், சதுரமாக இருக்கும்
Images:
Ingredients:
- தோசை மாவு 1 கப்
- பெங்களூர் தக்காளி 2 ( ரொம்ப பொடியாக நறுக்கவும் )
- பச்சைமிளகாய் 4 -5 (பொடியாக நறுக்கவும் ) தேவையானால் சேர்க்கவும்.
- தோசை வார்க்க எண்ணெய் மற்றும் நெய் கலந்து வைத்துக்கொள்ளுங்கள்.
Method:
- அடுப்பில் தோசைகல்லை போட்டு கொஞ்சம் கனமாக தோசை வார்க்கவும்.
- கலந்து தயாராய் வைத்துள்ள எண்ணெய் மற்றும் நெய் யை விட்டு அது முழுவதுமாக வேகும் முன், பொடியாக நறுக்கி வைத்துள்ள தக்காளி மற்றும் பச்சை மிளகாயை அதன் மேல் தூவவும். ( நிறையா )
- அது மாவில் நன்கு ஒட்டிக்கொள்ளனும் .
- பிறகு மெதுவாக திருப்பி போடுங்கோ.
- மீண்டும் கொஞ்சம் எண்ணெய் விடுங்கோ.
- கண்ணுக்கு நிறைவான 'தக்காளி தோசை' ரெடி.
- கல்லிலிருந்து எடுத்து பரிமாருங்கோ.
- தொட்டுக்க எதுவுமே வேண்டாம்; அப்படியே சாப்பிடலாம்.
- தக்காளி நிறைய இருப்பதால் குழந்தைகளுக்கு பிடிக்கும்
Ingredients:
- தோசை மாவு 1 கப்
- வெங்காயம் 2 ( ரொம்ப பொடியாக நறுக்கவும் )
- பச்சைமிளகாய் 4 -5 (பொடியாக நறுக்கவும் ) தேவையானால் சேர்க்கவும்.
- தோசை வார்க்க எண்ணெய் மற்றும் நெய் கலந்து வைத்துக்கொள்ளுங்கள்.
Method:
- அடுப்பில் தோசைகல்லை போட்டு 'சுமாராக கனமாக ' தோசை வார்க்கவும்.
- கலந்து தயாராய் வைத்துள்ள எண்ணெய் மற்றும் நெய் யை விட்டு அது முழுவதுமாக வேகும் முன், பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை அதன் மேல் தூவவும். ( நிறையா )
- அது மாவில் நன்கு ஒட்டிக்கொள்ளனும் .
- பிறகு மெதுவாக திருப்பி போடுங்கோ.
- மீண்டும் கொஞ்சம் எண்ணெய் விடுங்கோ.
- வெங்காயங்கள் நன்கு பொரிந்து கொள்ளும்.
- மணமான 'வெங்காய தோசை' ரெடி.
- கல்லிலிருந்து எடுத்து பரிமாருங்கோ.
- தொட்டுக்க எதுவுமே வேண்டாம், தேவை என்றால் தைறு போறும்.
- வெங்காயம் நிறைய இருப்பதால் உடலுக்கு குளுமை
Ingredients:
- தோசை மாவு 2 கப்
- வேகவைத்த உருளைக்கிழங்கு 2 -3 ( உதிர்த்து வைத்துக்கொள்ளவும்.)
- வெங்காயம் 2 (பொடியாக நறுக்கவும் )
- பச்சைமிளகாய் 4 -5 (பொடியாக நறுக்கவும் )
- இஞ்சி துருவியது 1 டேபிள் ஸ்பூன்
- கொத்துமல்லி, கறிவேப்பிலை கொஞ்சம்
- பூண்டு 1 டீ ஸ்பூன் பொடியாக நறுக்கினது ( தேவையானால் )
- தாளிக்க :
- கடுகு 1 டீ ஸ்பூன்
- உளுத்தம் பருப்பு 1 டீ ஸ்பூன்
- கடலை பருப்பு 1 டீ ஸ்பூன்
- மஞ்சள் பொடி 1/2 ஸ்பூன்
- எண்ணெய் 2 டேபிள் ஸ்பூன்
- உப்பு
- தோசை வார்க்க எண்ணெய் மற்றும் நெய் கலந்து வைத்துக்கொள்ளுங்கள்.
Method:
- வாணலி இல் எண்ணெய் வைத்து தாளிக்கும் பொருட்களை போட்டு தாளிக்கவும்.
- நறுக்கிவைத்துள்ள பூண்டு மற்றும் பச்சை மிளகாயை போடவும்.
- கொஞ்சம் வதங்கினதும், வெங்காயம் போடவும்.
- பிறகு உதிர்த்து வைத்துள்ள உருளைக்கிழங்கை போடவும்.
- நன்கு கிளறவும்.
- கொஞ்சம் தண்ணீர் விட்டு உப்பு போட்டு கிளறவும்.
- மசாலா நன்கு சேர்ந்து வந்ததும், கொத்துமல்லி கறிவேப்பிலை போட்டு கிளறி இறக்கவும்.
- அடுப்பில் தோசைகல்லை போட்டு மெல்லியதாக தோசை வார்க்கவும்.
- கலந்து தயாராய் வைத்துள்ள எண்ணெய் மற்றும் நெய் யை விட்டு இருபுறமும் மொறுமொறுப்பாக எடுக்கவும்.
- பிறகு அடுப்பை சின்னதாக்கி விட்டு , மசாலாவை ஒரு ஸ்பூன் எடுத்து தோசை இல் தடவவும்.
- பிறகு அதை மடித்து பரிமாறவும்.
- இதற்கு தேங்காய் சட்னி, சாம்பார் எல்லாமே நல்லா இருக்கும்.
Notes:
- மசாலா வைக்கும் போது அத்துடன் ஒரு ஸ்பூன் வெண்ணை வைத்து மடித்தால், பட்டர் மசாலா தோசை ஆகிவிடும்
Images:
Ingredients:
- 4 ஆழாக்கு பச்சரிசி
- 1 ஆழாக்கு உளுந்து
Method:
- தனித்தனியாக 2 - 3 மணிநேரம் ஊர வைத்து மிக்சி அல்லது கிரைண்டர், ஆட்டுக்கல் என எதிலாவது அரிசி பருப்பு இரண்டையும் தனித்தனியாக நன்கு அரைக்கவும்.
- உப்பு போட்டு கரைத்து வைக்கவும்.
- ஒரு 8 - 10 மணிநேரம் கழித்து தோசை வார்க்கலாம்.
Ingredients:
- ஓட்ஸ் - ஒரு கப்
- வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு - 1 கப்
- வேக வைத்து மசித்த பச்சைப் பட்டாணி - கால் கப்
- வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கிக் கொள்ளவும்)
- கொத்தமல்லி - 4 டேபிள் ஸ்பூன்
- எலுமிச்சம்பழம் - ஒரு மூடி
- உப்பு - தேவையான அளவு
- ரஸ்க் தூள் - கால் கப்
- பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 3.
- எண்ணை நெய் கலவை - கட்லெட் செய்ய
Method:
- ஓட்ஸில் வெந்நீர் தெளித்து, பத்து நிமிடம் ஊற வைக்கவும்.
- இதனுடன் வேக வைத்த உருளைக்கிழங்கு, பச்சைப் பட்டாணி, பச்சை மிளகாய், வெங்காயம், கொத்தமல்லி,
- எலுமிச்சம் பழச்சாறு எல்லாம் சேர்த்துக் கலந்து, கெட்டியாக பிசையவும்.
- இந்தக் கலவையை வட்டமாகவோ முக்கோணமாகவோ தட்டி, ரஸ்க் தூளில் புரட்டி, தோசைக்கல்லில் போட்டு, சுற்றி எண்ணை நெய் கலவை விட்டு , சிவக்க வெந்தவுடன் எடுக்கவும்.
- தக்காளி சாஸுடன் பரிமாறலாம் இந்த டேஸ்ட்டி கட்லெட்டை!
Ingredients:
- ஓட்ஸ் - 2 கப்
- அரிசி மாவு - 3 கப்
- ரவை -4 கப்
- எண்ணெய் + நெய் தோசை வார்க்க
- உப்பு
- பச்சை மிளகாய் - 2 - 4 பொடியாக நறுக்கினது
- சீரகம் - 2 டீ ஸ்பூன் + கடுகு - 2 டீ ஸ்பூன்
- கறிவேப்பிலை கொஞ்சம்
- கொத்துமல்லி - 2 டேபிள் ஸ்பூன் பொடியாக நறுக்கினது
- இஞ்சி - துருவினது 2 டேபிள் ஸ்பூன்
- பெருங்காயப்பொடி - 1/2 ஸ்பூன்
Method:
- முதலில் ஓட்ஸ்ஐ மிக்சி இல் மாவாக பொடிக்கவும்.
- பிறகு அத்துடன் அரிசி மாவு, ரவையை உப்பு சேர்த்து, கொஞ்சம் தண்ணியான தோசைமாவாக ( ரவ தோசை போல ) கரைத்து கொள்ளவும்.
- பொடியாக நறுக்கின பெருங்காயப்பொடி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை எல்லாம் கரைத்து வைத்திருக்கும் மாவில் போட்டு கலக்கவும்.
- வாணலி இல் எண்ணை விட்டு கடுகு, சீரகம் மற்றும் பச்சை மிளகாய் போட்டு தாளிக்கவும்.
- அது ஒரு 10 - 15 நிமிடம் ஊறட்டும்.
- நான் ஸ்டிக் தோசை கல்லில், மாவை நடுவில் விட்டு பரத்தாமல், வெளி வட்டத்திலிருந்து விடனும்.
- நல்ல மெல்லிசாக விடனும் ரவா தோசை போல, அப்போதான் நல்ல மொரு மொறுப்பாக வரும்.
- இரண்டு பக்கமும் எண்ணெய் விட்டு எடுக்கவும்.
- சுவையான ஓட்ஸ் ரவா தோசை ரெடி
Notes:
- வேண்டுமானால் மிளகு சீரகம் போடலாம்.
Ingredients:
- ஓட்ஸ் - 1/2 கப்
- கோதுமை மாவு - 1 டேபிள் ஸ்பூன்
- அரிசி மாவு - 1/2 கப்
- ரவை - 1 கப்
- எண்ணெய் + நெய் தோசை வார்க்க
- வெங்காயம் - ஒன்று
- பச்சை மிளகாய் - ஒன்று
- கறிவேப்பிலை கொஞ்சம் - உப்பு கொஞ்சம்
Method:
- முதலில் ஓட்ஸ்ஐ நன்கு வறுக்கவும்.
- மிக்சி இல் மாவாக பொடிக்கவும்.
- பிறகு அத்துடன் கோதுமைமாவு, ரவையை உப்பு சேர்த்து, கொஞ்சம் தண்ணியான தோசைமாவாக ( ரவ தோசை போல ) கரைத்து கொள்ளவும்.
- பொடியாக நறுக்கின வெங்காயம்,பச்சை மிளகாய், கறிவேப்பிலை எல்லாம் கரைத்து வைத்திருக்கும் மாவில் போட்டு கலக்கவும்.
- அது ஒரு 10 - 15 நிமிடம் ஊறட்டும்.
- நான் ஸ்டிக் தோசை கல்லில், மாவை நடுவில் விட்டு பரத்தாமல், வெளி வட்டத்திலிருந்து விடனும்.
- நல்ல மெல்லிசாக விடனும் ரவா தோசை போல, அப்போதான் நல்ல மொரு மொறுப்பாக வரும்.
- இரண்டு பக்கமும் எண்ணெய் விட்டு எடுக்கவும்.
- சுவையான ஓட்ஸ் ரவா தோசை ரெடி
Notes:
- கொத்துமல்லி இஞ்சி போடலாம்; மிளகு சீரகம் போடலாம்.
Ingredients:
- மோர் - அரை கப்
- ஓட்ஸ் - 1 கப்
- பாம்பே ரவை - டாலியா -1/2 கப்
- உப்பு - தேவையான அளவு
- கொத்துமல்லி நறுக்கியது 1 டேபிள் ஸ்பூன்
- கறிவேப்பிலை கொஞ்சம்
- துருவிய காரட் 1/2 கப் அல்லது பீட்ருட்
- உப்பு
- தாளிக்க எண்ணெய்
- தாளிக்க :
- கடுகு 1 டீ ஸ்பூன்
- கடலை பருப்பு 1 டீ ஸ்பூன்
- உளுத்தம் பருப்பு 1 டீ ஸ்பூன்
- பெருங்காயப்பொடி 1/4 டீ ஸ்பூன்
- மஞ்சள் பொடி 1/2 டீ ஸ்பூன்
- பச்சைமிளகாய் பொடியாக நறுக்கினது 1 டீ ஸ்பூன்
- இஞ்சி துருவியது 1 டீ ஸ்பூன்
Method:
- வாணலி இல் முதலில் ஓட்ஸ் ஐ கொஞ்சம் சிவப்பாக வறுக்கவும்.
- கொஞ்சம் ஆறினதும் மிக்சி இல் போட்டு பொடிக்கவும்.
- வாணலி இல் எண்ணெய் வைத்து தாளிக்க தந்துள்ள பொருட்களை தாளித்து, அதனுடன் ரவையும் போட்டு வறுக்கவும்.
- ஒரு பாத்திரத்தில் மோர் விட்டு அதில் இதை போடவும்.
- பொடித்து வைத்துள்ள ஓட்ஸ் ஐயும் இதில் போடவும்.
- உப்பு, கொத்துமல்லி, துருவின காரட்( அல்லது பீட்ருட் ) மற்றும் கறிவேப்பிலை எல்லாம் போட்டு கலக்கவும் .
- மாவு இட்லி மாவு பதத்தில் இருக்கணும்.
- ஒரு 15 நிமிஷம் அது ஊறட்டும்.
- பிறகு எண்ணெய் தடவிய இட்லி தட்டுகளில் மாவை விட்டு இட்லி செய்யவும்.
- சுவையான 'ஓட்ஸ் - காய்கறி இட்லி' தயார் .
Notes:
- கண்டிப்பாக ஓட்ஸ் ஐ வறுக்கணும். இல்லாவிட்டால் 'கொழ கொழப்பாக ' இருக்கும்.
Ingredients:
- ஓட்ஸ் 1 கப் ( நன்கு சிவக்க வறுத்துக்கொள்ளவும்)
- வெங்காயம் பொடியாக நறுக்கினது 1/4 கப்
- பெங்களூர் தக்காளி பொடியாக நறுக்கினது 1/4 கப்
- வெள்ளரிக்காய் பொடியாக நறுக்கினது 1/4 கப்
- ஓமப்பொடி 2 டேபிள் ஸ்பூன் ( இதற்கு பதில் 'ஹல்திராம்ஸ் ', 'ஆலு புஜியா' அல்லது 'புஜியா சேவ்' உபயோகிப்போம் நாங்க )
- காரட் பொடியாக துருவினது 1/4 கப்
- பச்சைமிளகாய் பொடியாக நறுக்கினது 1 டீ ஸ்பூன்
- எலுமிச்சை சாறு 1 டேபிள் ஸ்பூன்
- உப்பு
- தேவையானால் மிளகாய் பொடி போடலாம்.
Method:
- ஒரு பெரிய பேசினில் எல்லாவற்றையும் போட்டு கலக்கவும்.
- பேல் ரெடி.
- உடம்புக்கு ரொம்ப நல்லது, வயிற்ருக்கும் நல்லது.
Notes:
- தித்திப்பு தேவையானால் ஸ்வீட் பச்சடி செய்து இதில் விடலாம் காரத்துக்கு பச்சைமிளகாய் போடுவதற்கு பதில் அரைத்து போடலாம்.
Ingredients:
- ஓட்ஸ் 2 கப்
- கெட்டி அவல் 1 கப்
- அரிசி மாவு 1/4 கப்
- தையிரு 1/4 கப்
- உப்பு
- எண்ணெய் தோசை வார்க்க
- பச்சை மிளகாய் 1 பொடியாக நறுக்கணும்
- கொத்துமல்லி கொஞ்சம்
Method:
- முதலில் அவலை நன்கு களைந்து ஒரு 10 நிமிஷம் ஊற வைக்கவும்.
- பிறகு ஓட்ஸை அதில் போடவும், நன்கு கலக்கி மற்ற எல்லா பொருட்களையும் போட்டு தோசை மாவு பதத்துக்கு செய்யவும்.
- மீண்டும் ஒரு 5 நிமிடம் அப்படியே வைக்கவும்.
- பிறகு தோசை வார்க்கலாம்
- அருமையாக இருக்கும், சாம்பார் சட்னி எதானாலும் நல்லா இருக்கும்.
Notes:
- தேவையானால் காரட், வெங்காயம் போன்ற காய்களை துருவி சேர்க்கலாம்
Ingredients:
- ஓட்ஸ் - 1 கப்
- கடலை மாவு - 1 டேபிள் ஸ்பூன்
- ரவை - 1 டேபிள் ஸ்பூன்
- எண்ணெய் + நெய் தோசை வார்க்க
- உப்பு
- வெங்காயம் - ஒன்று
- பச்சை மிளகாய் - ஒன்று
- கேரட் - 1 டேபிள் ஸ்பூன் துருவியது
- முட்டை கோஸ் - 1 டேபிள் ஸ்பூன் துருவியது
- சீரகம் 1 டீ ஸ்பூன்
- மிளகு 1 டீ ஸ்பூன்
- கொத்தம்மல்லி கொஞ்சம்
- கறிவேப்பிலை கொஞ்சம்
- மோர் 1 கப்
- குடமிளகாய் 1 டேபிள் ஸ்பூன் துருவியது
- முந்திரி ஒடித்தது 1 டேபிள் ஸ்பூன் துருவியது
- தேங்காய் துருவியது 1 டேபிள் ஸ்பூன் தேவையானால்
Method:
- முதலில் ஓட்ஸ் மற்றும் ரவையை வாணலி இல் போட்டு வறுக்கவும்.
- அத்துடன் உப்பு சேர்த்து தோசைமாவு பதத்திற்கு கரைத்து கொள்ளவும்.
- மற்றவற்றை எல்லாம் கரைத்து வைத்திருக்கும் மாவில் போட்டு கலக்கவும்..
- அது ஒரு பத்து நிமிடம் ஊறவைகக்வும்.
- தோசை கல்லில் கொஞ்சம் கனமான ஊத்தப்பமாக வார்க்கவும்.
- இரண்டு பக்கமும் எண்ணெய் விட்டு எடுக்கவும்.
- சுவையான ஓட்ஸ் ஊத்தப்பம் ரெடி
Ingredients:
- ஓட்ஸ் - 1/2 கப்
- கோதுமை மாவு - 1/2 கப்
- அரிசி மாவு - 1 டேபிள் ஸ்பூன்
- ரவை - 1 டேபிள் ஸ்பூன்
- எண்ணெய் + நெய் தோசை வார்க்க
- உப்பு
- வெங்காயம் - ஒன்று
- பச்சை மிளகாய் - ஒன்று
- கேரட் - 1 டேபிள் ஸ்பூன் துருவியது (தேவையானால் )
- கறிவேப்பிலை கொஞ்சம்
Method:
- முதலில் ஓட்ஸ்,கோதுமைமாவு, ரவையை உப்பு சேர்த்து தோசைமாவு பதத்திற்கு கரைத்து கொள்ளவும்.
- பொடியாக நறுக்கின வெங்காயம்,பச்சை மிளகாய்,கேரட், கறிவேப்பிலை எல்லாம் கரைத்து வைத்திருக்கும் மாவில் போட்டு கலக்கவும்..
- அது ஒரு பத்து நிமிடம் ஊறவைகக்வும்.
- நான் ஸ்டிக் தோசை கல்லில் கொஞ்சம் கனமான ஊத்தப்பமாக வார்க்கவும்.
- இரண்டு பக்கமும் எண்ணெய் விட்டு எடுக்கவும்.
- சுவையான ஓட்ஸ் ஊத்தப்பம் ரெடி
Notes:
- தேவையானால், பெங்களூர் தக்காளியை பொடியாக நறுக்கி போடலாம்.
- கொத்துமல்லி இஞ்சி போடலாம்.
- எல்லாம் உங்கள் விருப்பம் தான். மிளகு சீரகம் போடலாம்.
- முந்திரி பொடித்து போடலாம்
Ingredients:
- ஓட்ஸ் 1 கப்
- சக்கரை 3/4 கப்
- உடைத்த பருப்புகள் 1 கப் ( பாதாம் , முந்திரி, பிஸ்தா, வேர்கடலை, மற்றும் தேங்காய் பல்லு )
Method:
- வாணலி இல் சக்கரை யை போடவும்.
- அது உருகி brown colour இல் வரும்.
- இதை Caramel என்போம் .
- அப்படி உருகி வந்ததும், ஓட்ஸ் மற்றும் பருப்புகளை போட்டு கலக்கவும்.
- அடுப்பை அணைத்துவிடவும்.
- ஒரு தட்டு அல்ல்து மேடை இல் கோதுமை மாவை தூவி இதை கொட்டவும்.
- அப்பாளாக் குழவியால் சூட்டுடன் சம்ப்படுத்தி தூண்டங்கள் போடவும்.
- 'Oats bar' கள் ரெடி .
- பசங்கள் விரும்பி சாப்பிடுவா, கண்ட கண்ட சாக்கலேடை விட இது தேவலாம்
Ingredients:
- ஓட்ஸ் 2 கரண்டி
- பால் 1/2 கப்
- படம், முந்திரி , கிஸ்மிஸ் (உலர்ந்த திராக்ஷை) உலர்ந்த அத்திப்பழம் 1/4 கப்
- சர்க்கரை அல்லது தேன்
Method:
- ஓட்ஸ் ஐ மைக்ரோ வேவ் பாத்திரத்தில் போட்டு அது மூழ்கும் வரை தண்ணீர் விட்டு 3 – 5 நிமிஷங்கள் வரை வைக்கவும்.
- வெளியே எடுத்ததும் நன்கு கிளறி, பால் மற்றும் சக்கரை போட்டு கலக்கவும்.
- போடவும்
- உலர் பழங்கள் போடவும்
- வேண்டுமானால் தண்ணீர் விட்டுக்கொள்ளவும்.
- இல்லைஎன்றால் கெட்டியாக கப்பில் விட்டு ஸ்பூன் போட்டு கொடுக்கவும்.
- சத்தான கஞ்சி இது .
- மதியம் வரை பசிக்காது
Notes:
- இந்த கஞ்சி இல் உங்களுக்கு விருப்பமான பழங்கள் + உலர் பழங்கள் சேர்க்கலாம்.
Ingredients:
- ஓட்ஸ் 2 கரண்டி
- பால் 1/2 கப்
- சர்க்கரை அல்லது தேன்
Method:
- ஓட்ஸ் ஐ மைக்ரோ வேவ் பாத்திரத்தில் போட்டு அது மூழ்கும் வரை தண்ணீர் விட்டு 3 - 5 நிமிஷங்கள் வரை வைக்கவும்.
- வெளியே எடுத்ததும் நன்கு கிளறி, பால் மற்றும் சக்கரை போட்டு கலக்கவும்.
- வேண்டுமானால் தண்ணீர் விட்டுக்கொள்ளவும்
- பருகவும்.
- சத்தான கஞ்சி ரேயடு.
- மதியம் வரை பசிக்காது
Notes:
- சர்க்கரை வியாதி உள்ளவர்கள் கூட அதர்க்கான 'செயற்கை சக்கரையை ' போட்டுக்கொள்ளலாம்.ஓட்ஸ் ஐ பாலிலேயும் வேகா விடலாம்.
Ingredients:
- ஓட்ஸ் 2 கரண்டி
- ரசம் அல்லது குழம்பு 1 கரண்டி
Method:
- ஓட்ஸ் ஐ மைக்ரோ வேவ் பாத்திரத்தில் போட்டு அது மூழ்கும் வரை தண்ணீர் விட்டு 3 - 5 நிமிஷங்கள் வரை வைக்கவும்.
- (ஒவ்வொரு ஓவன் ஒரு மாதிரி அதனால் தான் 3 -5 என்றேன். நீங்கள் ஒருநாள் வைத்து பார்த்து பின் உங்களுக்கு தேவையான நேரம் வைத்துக்கொள்ளவும்.)
- வெளியே எடுத்ததும் நன்கு கிளறி, ரசமோ குழம்போ விட்டு கலக்கவும்.
- வேண்டுமானால் தண்ணீர் விட்டுக்கொள்ளவும்
- பருகவும்.
- சத்தான கஞ்சி தயார் .
- மதியம் வரை பசிக்காது.
Notes:
- வயசானவங்களுக்கு நாம் ஆவாளுக்கு தராமல் ஏதோ சமைத்து சாப்பிடுகிறோம் என்கிற எண்ணம் வரும், அதை தவிர்க்க வே இப்படி வேண்டுமானால் இதுல் மாவடு சாறு, வேற ஏதேனும் ஊருகாய் கூட போடலாம்
Ingredients:
- சாண்ட்விச் பிரெட் ஸ்லைஸ் – 10
- புதினா – கொத்தமல்லி சட்னி – அரை கப்
- துருவிய பனீர், துருவிய கேரட், துருவிய கோஸ் – தலா கால் கப்
- சில்லி சாஸ், தக்காளி சாஸ் – தலா 2 டேபிள் ஸ்பூன்
- வெண்ணெய் – தேவையான அளவு.
Method:
- துருவிய கேரட், துருவிய கோஸ், துருவிய பனீர், சில்லி சாஸ், தக்காளி சாஸ் ஆகியவற்றை ஒன்றாக கலந்து வைத்துக் கொள்ளவும்.
- பிரெட் ஸ்லைஸின் இருபுறமும் வெண்ணெயை தடவவும்.
- அதன்மேல் புதினா – கொத்தமல்லி சட்னியை தடவவும்.
- இதற்கு மேல் வெஜ் கலவையை வைத்து, நன்கு பரத்தி அதன்மேல் மற்றொரு வெண்ணெய் தடவிய பிரெட் ஸ்லைஸை வைத்து மூடி, டோஸ்ட்டர் அல்லது தோசைக்கல்லில் போட்டு, இருபுறமும் பொன்னிறமாக வரும்வரை வைத்திருந்து , எடுத்துப் பரிமாறவும்.
Notes:
- இல்லாவிட்டால் வெண்ணை போட்டு முதலில் டோஸ்ட் செய்து விட்டு, காய்கறி கலவையை வைத்தும் தரலாம்
Ingredients:
Method:
- சாதாரணமாக, பிரட் என்றதும் பிரட் பட்டர் ஜாம் தான் நினைவுக்கு வரும்.
- 1. பிரட் இல் வெண்ணை மற்றும் ஜாம் தடவி சாப்பிடவேண்டியது தான்.
- அதுலயே பட்டர் ஜாம் கு பதிலாய் பல விதம் பார்ப்போம்.
- 2. பிரட் ஐ தோசை கல் ளில் டோஸ்ட் செய்து ( துளி நெய் விட்டு பிரட் ஐ புரட்டி எடுக்கணும் ) அதில் ஜாம் தடவி சாப்பிட்ல்லாம்.
- 3. மைக்ரோவவே இருந்தால், இரண்டு பிரட் துண்டங்களின் நடுவில் cheese let வைத்து ஒரு 30 செகண்ட் ஓவன் ல வைத்து சாப்பிடலாம்.
- 4. இரண்டு பிரட் துண்டங்களின் நடுவே, வெள்ளரி தக்காளி வெங்காயம் போன்றவற்றை நறுக்கி வைத்து சாப்பிடலாம்.
- 5. நல்ல கனிந்த வாழை பழத்தை "ஸ்லைஸ்" பண்ணி, பிரட் நடுவே வைத்து சாப்பிடலாம்.
- 6. ஒரு பிரட் ஸ்லைஸ் , அதன் மேலே ஒரு சீஸ் ஸ்லைஸ், அதன் மேலே வெங்காயம். அதன் மேலே ஒரு தக்காளி அதன் மேலே வெள்ளரி அத்தேன் மேலே கேரட் அதன் மேலே மற்றும் ஒரு சீஸ் ஸ்லைஸ் அதென்மேலே ஒரு பிரட் ஸ்லைஸ் என் வைத்து, ஒரு "பல் குத்தும் குச்சி" யால் குத்தி ஒரு 45 செகண்ட் ஓவன் ல வைக்கவும் . சீஸ் கொஞ்சமாக உருகி நல்லா இருக்கும்.
- 7. ஓவன் இல்லாதவர்கள் அப்படியே சாப்பிடலாம்.
- 8 வேண்டுமானால் உப்பு மிளகு பொடி தூவி ஓவன் இல் வாக்கலாம்.
- 9. அல்லது தக்காளி சாஸ் விடலாம்.
- 10. இல்லயா, ரெண்டு பிரட் ஸ்லைஸ் நடுவில் ஃபிரிஜ் இல் இருக்கும் ஏதாவது ஒரு துவையல் அல்லது முதல் நாள் கறியமுதை வைத்து சாப்பிடலாம்.
- 11. அதும் இல்ல யா ? புளி பேஸ்ட் ஐ தடவி சாப்பிடலாம்.
Ingredients:
- பிரட்
- ஏதாவது "left over curry" இல்லாவிடில் வெங்காயம்
- தக்காளி
- உருளை கிழங்கு
- சீரகம்
- கடுகு
- கொஞ்சம் எண்ணை
- பிரட் டொஸ்டர்.
Method:
- உருளை யை வேகவைக்கவும்.
- ( குக்கர் இல் தண்ணீர் விட்டோ அல்லது ஓவன் லோ வைக்கவும், வெந்ததும் தோல் உரித்து மசிக்கவும் )
- வாணலி இல் எண்ணைவிட்டு கடுகு சீரகம் தாளிக்கவும்.
- அதில் நறுக்கிய வெங்காயம் தக்காளி போடவும்.
- வதக்கவும்.
- வெந்த உருளைக்கிழங்கை போடவும்.
- தண்ணீர் விடவும்.
- உப்பு போடவும்.
- நன்கு கிளறவும்.
- காய் ரெடி.
- இப்ப இரண்டு பிரட் ஸ்லைஸ் நடுவில் காய் வைத்து அதன் மேல் துளி நெய் தடவி, டொஸ்டர் இல் வைக்கவும்.
- காஸ் இன் மே தீ இல் இருபுறமும் சுடவும்.
- திறந்தால் டோஸ்ட் ரெடி.
- ஏற்கனவே ஏதாவது curry இருந்தால் அதை பிரட் நடுவில் வைத்து மேலே சொன்னது போல் செய்யவும். டொமாட்டோ சாஸ் சுடன் நன்றாக இருக்கும்.
Notes:
- எலக்ட்ரிக்கல் டொஸ்டர் இருந்தால் இன்னும் சுலபம்
Ingredients:
- 4 பிரட் ஸ்லைஸ்
- 3 ஸ்பூன் நெய்
- 2 ஸ்பூன் சக்கரை
Method:
- பிரட் ஐ சிறிய துண்டங்களாக்கவும் .
- வாணலி இல் நெய் விட்டு பிரட் துண்டங்களை நல்ல 'மெத்' என சிறிய தீ இல் வைத்து வறுக்கவும்.
- சக்கரையை தூவி இறக்கவும்.
- அவ்வளவு தான். ருசியோ ருசி.
Ingredients:
- சால்ட் பிரட் 10 ஸ்லைஸ்
- வேக வைத்த உருளை கிழங்கு 3 (உதிர்த்து வைக்கவும் )
- வெங்காயம் 1 (பொடியாக நறுக்கி வைக்கவும் )
- பச்சை மிளகாய் 10
- மிளகாய் பொடி 1 ஸ்பூன்
- கடுகு 1 ஸ்பூன்
- சீரகம் 1/2 ஸ்பூன் ( தேவையானால் )
- உப்பு
- எண்ணை
Method:
- முதலில் வாணலி இல் எண்ணை விட்டு கடுகு சீரகம் தாளிக்கணும்.
- பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் போட்டு வதக்கணும்
- பிறகு வெங்காயத்தை போடணும்.
- பிறகு உருளைக்கிழங்கை போடணும்.
- எல்லாவற்றையும் நன்கு கிளறனும்.
- உப்பு மிளகாய் பொடி போட்டு மறுபடி கிளர்னும்.
- உப்பு உறைப்பு சரி பார்த்து இறக்கிடணும்
- வேண்டுமானால் கொத்துமல்லி தூவலாம்.
- அறினதும் சின்ன சின்ன உருண்டை களாக உருட்டி வைக்கவும்.
- ஆழமான வாணலி இல் எண்ணை விட்டு சுடவைக்கணும்.
- பிரட் இன் ஓரங்களை கட் செய்து விட்டு தயாராய் வைத்துக்கொள்ளவும்
- ஒரு பிரட் ஸ்லைஸ் எடுத்துக்கொண்டு தண்ணீரில் முக்கவும் , இரண்டு உள்ளங்கைகளுக்கு நடுவே வைத்து அழுத்தி தண்ணீரை பிழியவும்.
- பிறகு அந்த பிரெட் நடுவே ஒரு உருளை கறி உருண்டையை வைத்து, பிரெட் ஆலேயே மூடணும்.
- பிறகு நல்லா உருட்டி எண்ணை ல போடணும்.
- நல்ல பொன்னிறமானதும் எடுத்துடனும்.
- இவ்வாறு எல்லா பிரெட் ஐயும் செய்யனும்.
- வெஜிடேபிள் போண்டா போலவே ரொம்ப நல்லா இருக்கும்.
- மேலே பகுதி ரொம்ப கர கர ப்பாகவும் உள்ளே மெத் என்றும் இருக்கும்.
- பார்க்கவும் ரொம்ப அழகாக இருக்கும்.
- டொமாட்டோ சாஸுடன் பரிமாறலாம்.
Notes:
- பிரட் இன் ஓரங்களை பிரெட் குர் குரே செய்ய உப்யோகப்படுத்தலாம்
Ingredients:
- எந்த பிரட் ஆனாலும் சரி 10 ஸ்லைஸ்
- கொஞ்சம் நெய்
- உப்பு
- மிளகு பொடி
Method:
- பிரட் ஐ சின்ன சின்ன துண்டங்களாக ( 1 சென்டி மீட்டர் அளவுக்கு சின்னதாக )
- கட் செய்து வைக்கவும்.
- அப்படியே விட்டால் 4 - 5 மணி நேரத்தில் அவை காய்ந்துவிடும் , இல்லாவிட்டால் மக்ரோவேவ் ஓவனிலோ, அடுப்பில் வாணலி வைத்தோ வறுக்கவும்.
- காந்தாமல் வறுக்கணும்.
- அவை நல்ல கர கர வென வரும் போது , நெய் விட்டு வறுக்கணும். ( இப்படி செய்வதால் நெய் குறைவாக செலவாகும் )
- வறுத்து எடுத்ததும் ஒரு பேசினில் போட்டு உப்பு மிளகு பொடி போட்டு குலுக்கவும்.
- அவ்வளவுதான் , பிரட் குர் குரே தயார்.
- டிரைன் ல போகும் போது , மதிய வேளைகளில் 'போர் ' அடிக்கும்போது இது ரொம்ப நல்லா இருக்கும்.
- மாலை வேளை களிலும் டீ உடன் நல்ல இருக்கும்.
- செய்து பாருங்கள் அப்புறம் மீந்த பிரட் களில் இதயே தான் செய்வீர்கள்
Images:
Ingredients:
- சால்ட் பிரட் 10 ஸ்லைஸ் ( குறுக்கு வாட்டில் வெட்டி வைக்கவும் )
- கடலை மாவு 2 கப்
- சோள மாவு 1/4 cup
- மிளகாய் பொடி 2 ஸ்பூன்
- ஓமம் 1/2 ஸ்பூன் (தேவையானால் )
- பொருங்காயப்பொடி 1/4 ஸ்பூன்
- 2 சிட்டிகை சோடா உப்பு
- 2 சிட்டிகை கேசரி கலர்
- உப்பு
- பொறிக்க எண்ணை
Method:
- ஒரு பேசினில் கடலை மாவு, சோள மாவு,மிளகாய் பொடி, ஓமம், பொருங்காயப்பொடி, சிட்டிகை சோடா உப்பு, கேசரி கலர் மற்றும் உப்பு போடவும்.
- கொஞ்சமாக தண்ணீர் விட்டு நல்ல கெட்டியாக மாவு கரைக்கவும் .
- பிறகு ஒரு ஆழமான வாணலி இல் எண்ணை விட்டு , முக்கோணமாக கட் செய்து வைத்துள்ள பிரட் துண்டங்களை இந்த பஜ்ஜி மாவில் முக்கி எண்ணை இல் போடுங்கள்.
- ஜாக்கிரதையாக போடணும், இல்லாவிட்டால் எண்ணை மேலே தெறித்துவிடும்.
- மெல்ல திருப்பி விடுங்கள்.
- நன்கு பொரிந்ததும் எடுத்து எண்ணையை வடிய விடுங்கள்.
- வடி தட்டில் வைக்கலாம் அல்லது 'டிஷ்யூ பேப்பரில் ' வைக்கலாம்.
- சோள மாவு சேர்ப்பதால் இது ரொம்ப 'கிறிஸ்ப் 'ஆக இருக்கும் அதாவது ரொம்ப மொரு மொருப்பாக இருக்கும்
- நல்ல தேங்காய் சட்னி அல்லது டொமெட்டோ கெட்ச் அப் உடன் பரிமாறுங்கள் .
- மாலை வேளைக்கு ஏற்ற நல்ல டிபன் .
Notes:
- உங்களுக்கு இந்த பஜ்ஜிகள் இன்னும் காரமாக வேண்டுமானால் , பிரட் துண்டங்கள் மேல் துளி மிளகாய் பொடி உப்பு கலவையை தடவி பின் மாவில் முக்கி பஜ்ஜி போடுங்கள் . சரியா?
Ingredients:
- சால்ட் பிரட் 10 ஸ்லைஸ் ( குறுக்கு வாட்டில் வெட்டி வைக்கவும் )
- தோசை மாவு 2 கப்
- மிளகாய் பொடி 2 ஸ்பூன்
- டொமெட்டோ கெட்ச் அப் அல்லது சாஸ் 2 ஸ்பூன்
- பொருங்காயப்பொடி 1/4 ஸ்பூன்
- 2 சிட்டிகை சோடா உப்பு
- 2 சிட்டிகை கேசரி கலர்
- உப்பு
- பொறிக்க எண்ணை
Method:
- ஒரு பேசினில் தோசை மாவு, மிளகாய் பொடி, பொருங்காயப்பொடி, சிட்டிகை சோடா உப்பு, கேசரி கலர் மற்றும் உப்பு போடவும்.
- தேவையானால் கொஞ்சமாக தண்ணீர் விடவும்
- நல்ல கெட்டியாக மாவு கரைக்கவும் .
- பிறகு ஒரு ஆழமான வாணலி இல் எண்ணை விட்டு , முக்கோணமாக கட் செய்து வைத்துள்ள பிரட் துண்டங்களை இந்த பஜ்ஜி மாவில் முக்கி எண்ணை இல் போடுங்கள்.
- ஜாக்கிரதையாக போடணும், இல்லாவிட்டால் எண்ணை மேலே தெறித்துவிடும்.
- மெல்ல திருப்பி விடுங்கள்.
- நன்கு பொரிந்ததும் எடுத்து எண்ணையை வடிய விடுங்கள்.
- வடி தட்டில் வைக்கலாம் அல்லது 'டிஷ்யூ பேப்பரில் ' வைக்கலாம்.
- பிரட் பஜ்ஜி தயார்
- நல்ல தேங்காய் சட்னி அல்லது டொமெட்டோ கெட்ச் அப் உடன் பரிமாறுங்கள் .
- மாலை வேளைக்கு ஏற்ற நல்ல டிபன் .
Notes:
- மீந்து போகும் தோசைமாவில் இதை செயலாம். எண்ணை வேண்டாம் என நினைப்பவர்கள் தோசை கல்லில் போட்டு மட்டாக எண்ணை விட்டு பொறுமையாக , பஜ்ஜி நன்கு வெந்ததும் எடுக்கலாம் .
Ingredients:
- மில்க் பிரட்10 ஸ்லைஸ்
- மில்க் மெய்டு 1/2 டின்
- நெய் 1 - 2 டேபிள் ஸ்பூன்
- முந்திரி துண்டுகள் 1 டேபிள் ஸ்பூன்
- திராக்ஷை 10 - 12
Method:
- முதலில் பிரட் ன் ஓரங்களை நிக்கிவிடுங்கள்.
- பிரட் ஐ மிச்சி இல் ஒரு சுட்டறு சுற்றி எடுங்கள்.
- பூந்துருவலாக வரும்.
- வாணலி இல் நெய் விட்டு முந்திரி திராக்ஷை வறுக்கவும்.
- அடுப்பை சின்னதாக்கி விட்டு பிரட் துருவலை போடவும்.
- ஒரு கிளறு கிளறி மில்க் மெய்டு செக்கவும்.
- நன்கு கிளறி மிதி ஒரு ஸ்பூன் நெய் யையும் விட்டு இறக்கிவிடவும்.
- அவ்வளவு தான் சுவையான 'பிரட் ஹல்வா' நிமிடத்தில் தயார்.
Notes:
- மில்க் மெய்டு சேர்ப்பதால் சர்க்கரை மற்றும் பால் வேண்டாம்.
Ingredients:
- ஜவ்வரிசி ஒரு கப் ( அலசி அரைமணி ஊறவைக்கவும்)
- உருளைக்கிழங்கு கால் கிலோ (வேகவைத்து உதிர்க்கவும் )
- வெங்காயம் பெரிசு ஒன்று
- இஞ்சி துருவியது கொஞ்சம்
- அரை மூடி தேங்காய் துருவல்
- 2 - 4 பச்சைமிளகாய்
- 2 ஸ்பூன் எள்
- அரை ஸ்பூன் சீரகம்
- கறிவேப்பிலை
- 1 டேபிள் ஸ்பூன் 'கிஸ் மிஸ்'
- 10 - 12 முந்திரி
- ஒரு ஸ்பூன் சக்கரை
- உப்பு
- பொரிக்க எண்ணெய்
- எலுமிச்சை சாறு ஒரு டேபிள் ஸ்பூன்
Method:
- ஊறவைத்துப பிழிந்த ஜவ்வரிசி, உருளைகிழங்கு, பொடியாக நறுக்கிய வெங்காயம் , சீரகம் எல்லாவற்றையும் ஒரு பேசினில் போட்டு நன்கு பிசையவும்.
- பெரிய பெரிய உருண்டைகளாக்கவும்.தனியே வைக்கவும்.
- இப்போது இன்னொரு பேசினில், தேங்காய், கிஸ் மிஸ், உடைத்த முந்திரி, எள் , எலுமிச்சை சாறு, பச்சைமிளகாய் மற்றும் துருவின இஞ்சி, கொஞ்சம் உப்பு எல்லாம் போட்டு நன்கு பிசையவும்.
- சிறு சிறு உருண்டைகளாக உருட்டவும்.
- அந்த பெரிய உருண்டை இல் கிண்ணி போல செய்து, இந்த சின்ன உருண்டையை வைத்து மொத்தமாக உருட்டவும்.
- அல்லது வடைகள் போல தட்டவும்.
- எண்ணெய் யை காய வைத்து உருட்டி அல்லது தட்டி வைத்துள்ள போண்டக்களை போடவும.
- நன்கு பொன்னிறமானதும் எடுக்கவும்.
- எந்த சட்னி யுடனும் பரிமாறலாம்.
- அல்லது டொமாடோ கெட்சப் கூடவும் பரிமாறலாம்.
- ஜவ்வரிசி நன்கு பொரிந்து கொண்டு பார்க்கவும் ரொம்ப அழகாக இருக்கும்
Ingredients:
- சாதம் ஒரு கப்
- மைதா ஒரு டேபிள் ஸ்பூன்
- பாம்பே ரவா இரண்டு டேபிள் ஸ்பூன்
- பெரியவெங்காயம் ஒன்று ( பொடியாக நறுக்கவும்)
- பச்சை மிளகாய் காரத்துக்கு தேவையான அளவு. (பொடியாக நறுக்கவும் )
- இஞ்சி கொஞ்சம் ( துருவவும்)
- உப்பு
- பொரிக்க எண்ணெய்
Method:
- எல்லாவற்றையும் ஒரு பேசினில் போட்ட நன்கு பிசையவும்.
- எண்ணெய் யை காய வைத்து பகோடா போடவும .
- கர கரப்பான பகோடா தயார்
Ingredients:
- அரிசி மாவு 1 1/4 கப்
- கடலை மாவு 1 கப்
- முந்திரி பாதியாக உடைத்தது 1 கப்
- வெங்காயம் 1 பெரியது
- மிளகாய் பொடி 2 ஸ்பூன்
- ஒரு சிட்டிகை சோடா உப்பு
- உப்பு
- நெய் 2 ஸ்பூன்
- பொறிக்க எண்ணை
- கறிவேப்பிலை சிறிதளவு
Method:
- வெங்காயத்தை நீள வாக்கில் நறுக்கவும்
- ஒரு பேசினில், மாவுகள் வெங்காயம், மிளகாய் பொடி, உப்பு, நெய் சோடா உப்பு போட்டு நன்கு கலக்கவும்.
- முந்திரி போடவும், கொஞ்சமாக தண்ணீர் விட்டு பிசையவும் .
- மாவு நல்ல கெட்டியாக இருக்கணும்
- அடுப்பில் எண்ணை வைத்து , மாவை கைகளில் எடுத்து எண்ணை இல் பக்கோடாக்களாக போடவும்.
- நல்ல பொன்னிறமானதும் எடுக்கவும்.
- வேறு ஒரு வாணலி இல் துளி எண்ணை வைத்து கறிவேப்பிலையை பொரித்து பக்கோடாக்களின் மேல் கோட்டவும்.
- 'முந்திரி பக்கோடா' ரெடி
Ingredients:
- துவரம் பருப்பு 1 கப்
- தேங்காய் துருவல் 1/4 கப்
- மிளகாய் வற்றல் 3 - 4
- உப்பு
- கொஞ்சம் எண்ணெய்
Method:
- வாணலியில் 1 /2 ஸ்பூன் எண்ணை விட்டு அதில் துவரம் பருப்பு மற்றும் மிளகாய் போட்டு வறுக்கவும்.
- நன்றாக 'மொரு மொரு 'பாக, கருக்காமல் வறுக்கவும்.
- தேங்காய் துருவல் மற்றும் உப்புடன் சேர்த்து மிக்சி இல் 'மட்டா' தன்னறி விட்டு அரைக்கவும்.
- அவ்வளவுதான், 'பருப்பு துவையல்' தயார்.