Tuesday, October 6, 2020

குழம்பு வற்றல்

Ingredients:
  • பூசணி துருவல் – ஒரு கப்,
  • உளுத்தம்பருப்பு – ஒரு கப்,
  • மிளகாய் வற்றல் – 5 முதல் 8,
  • உப்பு – தேவையான அளவு,
  • பெருங்காயம – கால் டீஸ்பூன்


Method:
  • உளுத்தம்பருப்பை அரை மணி நேரம் ஊற வைத்து மிளகாய் சேர்த்து கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்.
  • அதனுடன் பூசணிக்காய் துருவல், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து நன்றாக பிசையவும்.
  • பிசைந்த மாவை பிளாஸ்டிக் பேப்பரில் சிறிது சிறிதாக கிள்ளிப் போட்டு, நன்றாக காய்ந்ததும் எடுக்கவும்.
  • வத்தகுழம்பு , பருப்புசாம்பார், பொரிச்ச கூட்டு செய்யும்போது இதைப் பொரித்துப் போட்டால், சுவையும் மணமும் கூடும்.


Notes:
  • பூசணிக்காய் துருவல் போடாமலும் இதை செய்யலாம்.

No comments:

Blog Archive