Tuesday, October 6, 2020

மாங்காய் குழம்பு

Ingredients:
  • புளிப்பான மாங்காய் 1 தோல் சீவி நறுக்கி வைக்கவும்
  • துவரம் பருப்பு 1 கப்
  • பச்சை மிளகாய் 2 - 4
  • தாளிக்க கடுகு
  • கறிவேப்பிலை
  • எண்ணை தாளிக்க
  • பெருங்காயம் 1/4 ஸ்பூன்
  • சாம்பார் பொடி 2 டீ ஸ்பூன்
  • மஞ்சள் பொடி 1/2 ஸ்பூன்
  • வறுத்து அரைத்த வெந்தய பொடி 1/2 ஸ்பூன்


Method:
  • மாங்காய் மற்றும் துவரம் பருப்பை ஒன்றாக குக்கர் il வேக வைக்கவும்.
  • உருளி இல் எண்ணை விட்டு தாளிக்கணும்.
  • வெந்த மாங்காய் மற்றும் பருப்பை அதில் விடவும்.
  • நன்கு கிளறவும்.
  • சாம்பார் பொடி, மஞ்சள் பொடி, பெருங்காயப்பொடி, வெந்தயபொடி எல்லாம் போடணும்.
  • நல்லா கொதிக்கட்டும் பிறகு இறக்குங்கள்.
  • ரொம்ப நல்லா இருக்கும்.


Notes:
  • புளிகெடுதல் என்று சொல்லிக்கொண்டே நாம் உபயோகிக்கிறோம், எனவே எப்போ எப்போ முடியுமோ அப்போதெல்லாம் புளியை தவிர்த்து எலுமிச்சை, தக்காளி, பைன் ஆப்பிள் மற்றும் மாங்காய் புளிப்பை உபயோகிப்பது உடலுக்கும் நல்லது , டேஸ்ட்க்கும் நல்லது

No comments:

Blog Archive