Tuesday, October 6, 2020

ஊத்தப்பம் - வெங்காய ஊத்தப்பம்

Ingredients:
  • தோசை மாவு 1 கப்
  • வெங்காயம் 2 - 3 மிகவும்பொடியாக நறுக்கவும்
  • பச்சைமிளகாய் 4 -5 (பொடியாக நறுக்கவும் )
  • கொத்துமல்லி கொஞ்சம்
  • சீரகம் 1 டேபிள் ஸ்பூன்
  • தோசை வார்க்க எண்ணெய் மற்றும் நெய் கலந்து வைத்துக்கொள்ளுங்கள்.


Method:
  • மாவில் எல்லா பொருட்களையும் போட்டு நன்கு கலக்கவும்.
  • அடுப்பில் தோசைகல்லை போட்டு கொஞ்சம் கனமாக தோசை வார்க்கவும்.
  • கலந்து தயாராய் வைத்துள்ள எண்ணெய் மற்றும் நெய்யை விடுங்கோ.
  • நல்லா வெந்ததும் திருப்பி போடுங்கோ.
  • மீண்டும் கொஞ்சம் எண்ணெய் விடுங்கோ.
  • கல்லிலிருந்து எடுத்து பறிமாருங்கோ.
  • தொட்டுக்க எதுவுமே வேண்டாம்; அப்படியே சாப்பிடலாம்.
  • 'மெத்' என்கிற ஊத்தப்பம் ரெடி.


Notes:
  • ஓரம் கரகரப்பாக வரணும் என்று விரும்புபவர்கள், மாவுடன் கொஞ்சம் அரிசி மாவு சேர்க்கவும். 1 கப் தோச மாவு என்றால் 2 - 3 டேபிள் ஸ்பூன் அரிசி மாவு சேர்க்கலாம். பொதுவாக தோசை மாவு கொஞ்சம் புளித்ததும் இப்படி ஊத்தப்பம் செய்வது வழக்கம். வேண்டுமானால் ப்ரெஷ் மாவிலும் கூட இப்படி ஊத்தப்பம் செய்யலாம் .

Images:




No comments:

Blog Archive