Tuesday, October 6, 2020

ரிப்பன் பகோடா - 5

Ingredients:
  • 2 கப் அரிசி மாவு
  • 1 / 2 கப் பொட்டுக்கடலை மாவு
  • 10 மிளகாய்வற்றல்
  • 4 - 5 பூண்டு பற்கள்
  • அரை மூடி தேங்காய்
  • 2 -3 ஸ்பூன் நெய்
  • உப்பு
  • பொரிக்க எண்ணெய்


Method:
  • பூண்டு , மிளகாய் வற்றல் மற்றும் தேங்காய் யை விழுதாக அரைக்கவும்.
  • ஒரு பெரிய பேசினில் மாவுகள் மற்றும் அரைத்த விழுது, உப்பு போடவும்.
  • கைகளால் நன்கு கலக்கவும்.
  • தண்ணீர் விட்டு நன்கு பிசையவும்.
  • அடுப்பில் வாணலி போட்டு எண்ணெய் விட்டு, சுட்டதும்,
  • தேன்குழல் அச்சில், 'நாடா' தட்டு போட்டு , மாவை போட்டு எண்ணெய் இல் பிழியவும்.
  • நிதானமாக அடுப்பு எரியும்படி பர்த்துக்கவேண்டும்.
  • சிறிது நேரம் கழித்து திருப்பவும்.
  • மறுபுறமும் வெந்ததும் எடுக்கவும்.
  • 'ரிப்பன் பகோடா' தயார்.

No comments:

Blog Archive