Tuesday, October 6, 2020

காரட் - காஜர் ஹல்வா

Ingredients:
  • 1kg 'பிரெஷ்' காரட்
  • 1 1 /2lt பால்
  • 500gm சர்க்கரை
  • ஏலப்பொடி கொஞ்சம்
  • 2sp நெய்
  • 2sp உடைத்த பாதாம், பிஸ்தா, முந்தரி துண்டங்கள்.


Method:
  • காரட்டை நன்கு கழுவி துருவவும்.
  • ஒரு அடிகனமான பாத்திரத்தில், பால், காரட் துருவல் போட்டு அடுப்பில் வைக்கவும்.
  • அடுப்பை நிதானமாக எரியவிடவும், கிளறிக்கொண்டே இருக்கவும்.
  • பொங்கி வழியாமல் பார்த்துக்கொள்ளவும்.
  • நன்கு குறுகினதும், சர்க்கரை போடவும். கிளறவும்.
  • நெய் ஊற்றவும்.
  • நன்கு பந்து போல் சுருண்டுவரும்போது ஏலப்பொடி தூவி இறக்கவும்.
  • ஒரு அழகான பேசினில் போட்டு உடைத்த பருப்புகள் கொண்டு அலங்கரிக்கவும்.


Notes:
  • ஹல்வா கிளரும் நேரத்தை குறைக்க துருவின காரட்டை பால் விட்டு குக்கரில் இல் வேகவைத்துவிட்டு, சர்க்கரை இல்லாத கோவா போட்டும் செய்யலாம்.

No comments:

Blog Archive