- 1 கப் மைதா
- பேக்கிங் சோடா 1/4 டீ ஸ்பூன்
- சமையல் சோடா ஒரு சிட்டிகை
- சர்க்கரை 1/2 ஸ்பூன் (பொடிக்கவும் )
- தயிர் 1 டேபிள் ஸ்பூன்
- நெய் - உருக்கியது - 1/8 கப்
- வாசனை இல்லாத எண்ணெய் - 1/2 டீ ஸ்பூன்
- சர்க்கரை பாகு வைக்க :
- 1 1/2 கப் சர்க்கரை
- 1 1/2 கப் தண்ணீர்
- ஏலப்பொடி கொஞ்சம் அல்லது ரோஸ் எசன்ஸ்
- பொறிக்க : எண்ணெய்
Method:
- முதலில் மைதாவை சோடா உப்பு மற்றும் பேகிங் சோடா போட்டு சலிக்கவும்.
- ஒரு பேசினில் சலித்ததை போடவும்.
- வேறு ஒரு சின்ன கிண்ணி இல் தயிர் மற்றும் சர்க்கரையை போட்டு கலக்கவும்.
- மாவில் நெய் மற்றும் எண்ணையை விட்டு நன்கு கலக்கவும்.
- நன்கு கலந்ததும் அது பார்க்க 'பிரட் துகள்கள்' போல இருக்கும்.
- அப்படி இருந்தால் பதம் சரி என்று அர்த்தம்.
- இப்போ கிண்ணி இல் இருக்கும் தயிர் மற்றும் சர்க்கரையை நன்கு கரைத்து, மாவில் விடவும்.
- 'மெத்' என்று பிசையவும்.
- தேவையானால்......தேவையானால் துளி ... துளியே துளி தண்ணீர் விட்டுக்கலாம்.
- அவ்வளவு தான் இதை அப்படியே சுமார் 1 மணிநேரம் , மூடி வைத்து விடவும்.
- 1 மணி நேரத்துக்கு பிறகு ஒரு உருளி அல்லது வாணலி இல் தண்ணீர் விட்டு சர்க்கரையை போடவும்.
- அப்பப்போ கிளறி விடவும்.
- 'ஒரு கம்பி 'பாகு வரும் வரை கொதிக்க விடவும்.
- ஏலப்பொடி போட்டு இறக்கவும்.
- மற்றும் ஒரு அடுப்பில் எண்ணெய் வைக்கவும்.
- அடுப்பை 'சிம்' இல் வைக்கவும்.
- பிறகு மாவை எடுத்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டவும்.
- உள்ளங்கை இல் வைத்து கட்டை விரலால் உருண்டை இன் நடுவில் அழுத்தி பள்ளம் போல செய்யவும்.
- இது போல செய்வதால் , பாதுஷாக்கள் நன்கு பொறியும். எனவே இதை மறக்க வேண்டாம்.
- இதே போல மற்ற எல்லா மாவையும் செய்யவும்.
- நான் கொடுத்துள்ள அளவிற்கு 15 'மினி பாதுஷாக்கள்' வரும்.
- இப்போ வாணலி இல் எண்ணெய்விட்டு சில நிமிடங்களிலேயே , அது ரொம்ப சூடாவதர்க்குள் பாதுஷாக்களை போடணும்.
- அதாவது, எண்ணெய் இல் ஒரு துளி மாவை போட்டால் அது 1 நிமிடம் கழித்துத்தான் மேலே வரணும்.
- உடனே மேலே வந்தால் எண்ணெய் இன் சூடு அதிகம் என்று அர்த்தம்.
- அவசரப்படாமல் காத்திருக்கவும்.
- 2 -3 நிமிடங்கள் கழித்து திருப்பி விடவும்.
- நன்கு பவுன் கலர் வந்ததும் எடுத்து பாகில் போடவும்.
- அவ்வளவு தான் சூப்பர் பாதுஷாக்கள் ரெடி.
- கொஞ்சம் ஆறினதும் சாப்பிடலாம்.
- விண்டு பார்த்தால் உள்ளே 'லேயர் லேயராக' இருக்கணும்.
- அது தான் பதம்.
- மேலே சர்க்கரை பூத்துக்கொண்டு இருக்கும்.
- ஆனால் அதுக்கு ஓர் 12 மணி நேரம் காத்திருக்கணும் ! ரிலாக்ஸ்
- ஆனால் உடனே சாப்பிட்டு பார்க்கலாம் :)
Notes:
- மேலே சர்க்கரை பூத்துக்கொண்டு வரவேண்டாம் என்றால், சர்க்கரை பாகில் 1/2 ஸ்பூன் எலுமிச்சை சாறு விடணும்.
- இதற்கான படங்களை கிழே கொடுத்துள்ளேன் ; பார்க்கவும்.
- படிக்கத்தான் இவ்வளவு பெரிசா இருக்கே தவிர 10 நிமிஷத்தில் செய்து விடலாம்
Images:
No comments:
Post a Comment