Tuesday, October 6, 2020

தால் ஹல்வா

Ingredients:
  • பயத்தம் பருப்பு 1 கப்
  • நெய் 1 கப்
  • சர்க்கரை 1 கப்
  • பால் 1/4 கப்
  • சர்க்கரை போடாத கோவா 3/4 கப்
  • குங்குமப்பூ - 10 12 இதழ்கள்
  • முந்திரி, பாதாம் சீவியது 1 டேபிள் ஸ்பூன்


Method:
  • பயத்தம் பருப்பை நன்கு களைந்து, 1 - 1 1/2 மணி நேரம் ஊறவைக்கவும்.
  • கொஞ்சம் 'கர கர'பாக அரைக்கவும்.
  • வாணலி இல் நெய்விட்டு உருகியதும் அரைத்து வைத்ததை அதில் விட்டு கிளறவும்.அடுப்பை தணித்து வைத்து நன்கு கிளறனும்.
  • பக்கத்து அடுப்பில் மட்டும் ஒரு உருளி இல் சர்க்கரை மற்றும் தண்ணீர் விட்டு ஒற்றை கம்பி பாகு வைக்கவும்.
  • பாலை சுடவைத்து அதில் குங்குமபூவை கரைத்து வைக்கவும்.
  • தால் - நல்லா பொரிந்து கொஞ்சம் 'பிரவுன்' கலரில் வரும்போது அதில் சர்க்கரை பாகை விட்டு கிளறவும்.
  • குங்குமப்பூவை கரைத்து வைத்துள்ள பாலையும் விடவும்.நன்கு கிளறவும்.
  • எல்லாமாக சேர்ந்து 'ஹல்வா' பதத்துக்கு வரும் போது கோவாவை உதிர்த்துப்போட்டு கிளறி இறக்கவும்.
  • மேலே சீவிவைத்துள்ள முந்திரி பாதாமை தூவி சூடாக பரிமாறவும்.
  • ரொம்ப அருமையாக இருக்கும்

No comments:

Blog Archive