Tuesday, October 6, 2020

தவல அடை

Ingredients:
  • அரிசி 1 கப்
  • உளுத்தம் பருப்பு 1/4 கப்
  • கடலை பருப்பு 3/4 கப்
  • வெந்தயம் 1 டேபிள் ஸ்பூன்
  • உப்பு
  • எண்ணெய்


Method:
  • அரிசி பருப்பு மற்றும் வெந்தயத்தை களைந்து ஒன்றாகவே ஊறவைக்கவும்.
  • 2 -3 மணிநேரம் ஊரினதும் கொஞ்சம் 'காரகர்'பாக அரக்கவும்.
  • உடனேயே வார்க்கலாம்.
  • அந்த காலத்தில் தவலை இல் வார்ப்பளாம் ; இப்போ நம்மால் முடியாது.
  • அதனால் குழிவான வாணலி இல் வார்க்கலாம்.
  • வாணலி இல் முதலில் எண்ணெய் விட்டுக்கொண்டு , ஒரு கரண்டி மாவை விடவும்.
  • ரொம்ப பரத்த வேண்டாம் .
  • சுற்றிலும் எண்ணெய் விட்டு, இட்லி பானை முடியால் அதை மூடி விடவும்.
  • 2 நிமிடம் கழித்து திறந்தால் , அடை மேல்பக்கம் வெந்து இருக்கும், அதை திருப்பி போடணும்.
  • அப்போது வரும் மேல் பக்கம் நல்ல மொரு மொரு பாக இருக்கும்.
  • திருப்பி போட்டதும் இலுப்ப சட்டியை முட வேண்டாம்.
  • மறு புறம் போட்டதும் மீண்டும் எண்ணெய் விடணும்.
  • அந்த பக்கமும் வெந்ததும் எடுத்து விடலாம்.
  • சுவையான 'தவல அடை ' ரெடி.
  • ரொம்ப நல்லா இருக்கும்.


Notes:
  • வெந்தய கசப்பு இருக்கும் இந்த அடை இல், அது பிடிக்காத வா, ஒரு நாள் முன்பே வெந்தயத்தை மட்டும் ஊற வைத்து விட்டு மறுநாள் அரிசி பருப்பு ஊற வைத்து இந்த வெந்தயத்தை சேர்த்து அரைக்கலாம். வெந்தயம் ஊற வைத்த தண்ணியையும் வீணாக்காமல் அரைக்க உபயோகபடுத்தலாம்.

No comments:

Blog Archive