Tuesday, October 6, 2020

அவல் (போஹா ) தோசை

Ingredients:
  • அரிசி 4 கப்
  • உளுத்தம் பருப்பு 1 கப்
  • அவல் 1 - 1 1 / 2 கப்
  • உப்பு
  • எண்ணெய் தேவையான அளவு


Method:
  • அரிசி மற்றும் உளுத்தம் பருப்பை தனி தனியாக ஒரு பாத்திரத்தில் போட்டு, 2 முதல் 3 மணி நேரம் நன்றாக ஊறவைக்கணும்.
  • பிறகு அவற்றை mixie அல்லது grinder இல் தனி தனியாக அரைக்கவும்.
  • அரைப்பதற்கு முன்பு, அவலை நன்றாக அலசி, பிழிந்து ஒரு வடிதட்டில் போட்டு, தண்ணீர் வடியும் படி வைக்கவும்.
  • பிறகு இரண்டு மாவையும் ஓன்றாக கலக்கி உப்பு சேர்க்கவும்.
  • பிறகு ஊறவைத்த அவலை மாவுடன் சேர்க்கவும்.
  • மாவு ஒரு நாள் இரவு முழுவதும் அல்லது குறைந்த பக்ஷம் 8 மணி நேரமாவது அப்படியே இருக்கணும்.
  • பிறகு மாவு புளித்து மேல பொங்கி வரும் .
  • இப்பொழுது மாவை கொண்டு பேப்பர் ரோஸ்ட் போல் மெல்லிசான தோசை வார்க்கலாம் அல்லது நல்ல தடிமனான , ஸ்பாஞ் போல தோசை வார்க்கலாம்.
  • சூடான தோசையை சட்னி அல்லது தோசை மிளகாய் பொடியுடன் சாப்பிடலாம்.


Notes:
  • தடிமனான அவல் உபயோகித்தால் ஒரு கப் எடுத்து கொள்ளவும் அல்லது மெல்லிய அவல் என்றால் 1 1/2 போதுமானது.

Images:


No comments:

Blog Archive