Tuesday, October 6, 2020

நாரத்தங்காய் குழம்பு

Ingredients:
  • நாரத்தங்காய் - 1 (சாறு எடுக்கவும் )
  • வெந்த துவரம் பருப்பு 1/2 கப்
  • வெல்லம் - 1 சின்ன கட்டி
  • பச்சை மிளகாய் - 4
  • குழம்பு மிளகாய் பொடி - 2 ஸ்பூன்
  • கடுகு - 1 ஸ்பூன்
  • மஞ்சள் பொடி - 1/4 ஸ்பூன்
  • புளி பேஸ்ட் - 1/4 ஸ்பூன் (தேவயானால் )
  • எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
  • வறுத்து அரைத்த வெந்தய பொடி - 1/2 ஸ்பூன்
  • பெருங்காய பொடி - 1/4 ஸ்பூன்
  • கறிவேப்பிலை கொஞ்சம்
  • உப்பு - தேவையான அளவு.


Method:
  • வாணலி இல் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு , கறிவேப்பிலை தாளித்து... பச்சை மிளகாய், உப்பு, மஞ்சள்பொடி , சேர்த்து வதக்கவும் .
  • அதில் வெந்த பருப்பு, நார்தம்காய்ன் சாறு சேர்க்கவும்.
  • வேண்டுமானால் புளிஜலம் அல்லது புளி பேஸ்ட் போடவும். ( ஆனால் வெறும் நாரத்தை சாரே இந்த குழபுக்கு போறும்)
  • வெந்தய பொடி, பெருங்காய பொடி மற்றும் உப்பு போடவும்.
  • நன்றாகக் கொதிக்க விடவும். பிறகு, வெல்லத்தை சேர்க்கவும்.
  • எல்லாம் சேர்ந்து நன்றாகக் கொதித்து எண்ணெய் பிரிந்து வரும் சமயத்தில் அடுப்பிலிருந்து இறக்கவும்.
  • ரொம்ப நல்ல டேஸ்ட் ஆன குழம்பு இது.
  • சாதத்தில் போட்டு சாப்பிடலாம்.


Notes:
  • ஒரு வாரம் 10 நாள் வைத்து சாப்பிடலாம். வயிறு சரி இல்லயானால் கூட இதை சாப்பிடலாம். நல்லது .

No comments:

Blog Archive