Tuesday, October 6, 2020

மிக்சட் ப்ரூட் ஹல்வா

Ingredients:
  • 200gms பேரிச்சம்பழம (விதைகளை எடுக்கவும், துண்டுகள் போடவும் )
  • 2cup டுட்டி பிரூட்டி
  • 1cup உலர்ந்த திராக்ஷை
  • 2cup உடைத்த பாதாம், பிஸ்தா, முந்தரி துண்டங்கள்.
  • 2cup உலர்ந்த அத்திப்பழம் (துண்டுகளாக்கவும்)
  • 1 தேக்கரண்டி செர்ரி (தேனில் ஊறவைத்து கடையில் கிடைக்கும் , வாங்கி துண்டுகளாக்கவும் )
  • 1tin Condensed milk ( milkmaid tin )
  • 2 தேக்கரண்டி நெய்
  • 2 தேக்கரண்டி மைதா / corn பலூர்
  • 1cup சர்க்கரை
  • 1 cup தண்ணீர்


Method:
  • ஒரு வாணலியில் நெய் விட்டு மைதாவை போட்டு ஒரு நிமிடம் வதக்கவும்.
  • உடனே தண்ணீர் விட்டு கிளறவும்.
  • அது கொதித்து அடங்குமுன், பேரிச்சம்பழ துண்டுகள், டுட்டி பிரூட்டி,உலர்ந்த திராக்ஷை, உடைத்த பாதாம், பிஸ்தா, முந்தரி துண்டங்கள்,உலர்ந்த அத்திப்பழம், செர்ரி போடவும்.
  • பின் Condensed milk ஊற்றவும் , சர்க்கரை சேர்க்கவும்.
  • நன்கு கிளறவும்.
  • நன்கு பந்து போல் சுருண்டுவரும்போது, நெய் தடவிய தட்டில் கொட்டவும்.
  • ஆறினதும் துண்டம் போடவும்.
  • அவ்வளவுதான் மிக்சட் ப்ரூட் ஹல்வா ரெடி.

No comments:

Blog Archive