Showing posts with label டிபன்கள். Show all posts
Showing posts with label டிபன்கள். Show all posts

Thursday, October 8, 2020

சுக்கா ரொட்டி

Ingredients:
  • 1 கப் கோதுமை மாவு
  • 2 கரண்டி நல்லெண்ணெய்


Method:
  • ஒரு பேசினில் கோதுமை மாவு போடவும்.
  • உப்பு மற்றும் எண்ணெய் சேர்க்கவும்.
  • நன்றாக கலக்கவும்.
  • தண்ணீர் சேர்த்து நன்றாக பிசையவும்.
  • அரை மணி நேரம் அப்படியே வைத்துவிடவும்.
  • பிறகு சிறிது சிறிதாக உருட்டிக்கொள்ளவும்.
  • சப்பாத்தியாக இடவும்.
  • அடுப்பில் தோசைக்கல்லை போடவும்.
  • கல் சூடானதும், ஒரு சப்பாத்தியை எடுத்து அதில் போடவும்.
  • சப்பாத்தியை தவாவில் வைத்த பிறகு, 2-3 முறை திரும்பவும்.
  • இப்போது அதை நேரடியாக நெருப்பில் காட்டவும்.
  • அப்பளம் சுடுவது போல இரண்டுபக்கமும் சுட்டு எடுக்கவும்.
  • கருகாமல் இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும்.
  • அதை நெருப்பிலிருந்து அகற்றி சைட் டிஷ் உடன் உடனே பரிமாறவும்.
  • சப்பாத்தி சூடாக இருக்கும்போது இதை நீங்கள் சாப்பிட வேண்டும்.
  • இதில் எண்ணெய் இல்லை; என்றாலும் இது 'மெத் மெத்' என்று இருக்கும்.
  • எண்ணெய் இல்லதாதால் , வழக்கம் போல் ஆரோக்கியத்திற்கு நல்லது.

மிகவும் மிருதுவான சப்பாத்தி

Ingredients:
  • 1 கப் கோதுமை மாவு
  • 1 கரண்டி நல்லெண்ணெய்
  • 2 கரண்டி நெய்
  • உப்பு


Method:
  • ஒரு பேசினில் கோதுமை மாவு போடவும்.
  • உப்பு மற்றும் எண்ணெய் சேர்க்கவும்.
  • நன்றாக கலக்கவும்.
  • தண்ணீர் சேர்த்து நன்றாக பிசையவும்.
  • அரை மணி நேரம் அப்படியே வைத்துவிடவும்.
  • பிறகு சிறிது சிறிதாக உருட்டிக்கொள்ளவும்.
  • சப்பாத்தியாக இடவும்.
  • அடுப்பில் தோசைக்கல்லை போடவும்.
  • கல் சூடானதும், ஒரு சப்பாத்தியை எடுத்து அதில் போடவும்.
  • இருபுறமும் திருப்பிப்போடவும்.
  • அதை வெளியே எடுத்து ஒரு தட்டில் போட்டு, இரண்டுபக்கமும் நெய் தடவவும்.
  • அவ்வளவுதான், மிருதுவான சப்பாத்திகள் தயார்.
  • ஏதாவது ஒரு சைடிஷ் செய்து , அத்துடன் சப்பாத்தியை பரிமாறவும்.

சாதாரண சப்பாத்தி

Ingredients:
  • 1 கப் கோதுமை மாவு
  • 2 கரண்டி எண்ணெய் அல்லது நெய்
  • உப்பு


Method:
  • ஒரு பேசினில் கோதுமை மாவு போடவும்.
  • உப்பு மற்றும் எண்ணெய் சேர்க்கவும்.
  • நன்றாக கலக்கவும்.
  • தண்ணீர் சேர்த்து நன்றாக பிசையவும்.
  • அரை மணி நேரம் அப்படியே வைத்துவிடவும்.
  • பிறகு சிறிது சிறிதாக உருட்டிக்கொள்ளவும்.
  • சப்பாத்தியாக இடவும்.
  • அடுப்பில் தோசைக்கல்லை போடவும்.
  • கல் சூடானதும், ஒரு சப்பாத்தியை எடுத்து அதில் போடவும்.
  • இருபுறமும் எண்ணெய் அல்லது நெய்யை ஊற்றி சப்பாத்திகள் செய்யுங்கள்.
  • மிருதுவான சப்பாத்திகள் தயார்.
  • ஏதாவது ஒரு சைடிஷ் செய்து , அத்துடன் சப்பாத்தியை பரிமாறவும்.

ரவா வெஜிடபிள் கொழுக்கட்டை

Ingredients:
  • வறுத்த பாம்பே ரவா - 1/2 கிலோ
  • துருவிய கேரட், நறுக்கிய பீன்ஸ், குடமிளகாய் - எல்லாமாக சேர்த்து 2 கப்
  • நெய் - 2 - 4 டீஸ்பூன்
  • கொத்துமல்லி அல்லது புதினா - அலசி, பின் பொடியாக நறுக்கவும்
  • பச்சை மிளகாய் - 2 - 4 பொடியாக நறுக்கவும்
  • உப்பு


Method:
  • கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் நன்கு கலந்து, சிறிது வெந்நீர் தெளித்துப் பிசைந்து,நீள் உருண்டை களாக உருட்டி, நீராவியில் 10 நிமிடம் வேகவிட்டு எடுக்கவும்.
  • கொத்தமல்லி சட்னி அல்லது தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்.
  • எண்ணெய் நெய் அதிகம் இல்லாத உப்புமா போல இருக்கும்.

வெந்தய கீரை சப்பாத்தி - மேத்தி பரோட்டா

Ingredients:
  • வெந்தய கீரை ஒரு பெரிய கட்டு ( அலம்பி ஆய்ந்து, பொடியாக நறுக்கிக்கொள்ளவும்)
  • கோதுமை மாவு 2 கப்
  • பச்சை மிளகாய் 8 - 10
  • கடலை மாவு 2 டேபிள் ஸ்பூன்
  • உப்பு
  • 1 / 2 ஸ்பூன் மஞ்சள் பொடி
  • நெய் சப்பாத்தி செய்ய


Method:
  • வெந்தய கீரை மற்றும் பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும்.
  • ஒரு பேசினில் கோதுமை மாவு, கடலை மாவு , உப்பு மற்றும் கொஞ்சம் நெய் போட்டு நன்கு கலக்கவும்.
  • பிறகு பொடியாக நறுக்கின வெந்தய கீரை, பச்சை மிளகாய்,மஞ்சள் பொடி போட்டு நன்கு கலக்கவும்.
  • நன்கு அழுத்தி பிசையவும்.
  • பிறகு கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் விட்டு ரொட்டி மாவு பதத்துக்கு பிசையவும்.
  • ஒரு மணி நேரம் ஊறவைக்கவும்.
  • பிறகு வழக்கம் போல சப்பாத்தி களாக இடவும்..
  • தோசை கல்லில் போட்டு எடுக்கவும்.
  • இருபுறமும் நெய் விட்டு எடுக்கவும்..
  • சுவையான மேத்தி பரோட்டா தயார்.

ரவா தோசை 2

Ingredients:
  • பாம்பே ரவா 1 கப்
  • பச்சைமிளகாய் 5 - 6 - பொடியாக நறுக்கவும்
  • சீரகம் அரை ஸ்பூன்
  • பெருங்காயம் கொஞ்சம்
  • மோர் 2 கப்
  • கறிவேப்பிலை கொஞ்சம்
  • கொத்துமல்லி கொஞ்சம்
  • பெரியவெங்காயம் பொடியாக நறுக்கினது
  • உப்பு
  • நெய் தோசை வார்க்க


Method:
  • வாணலி இல் பாம்பே ரவாபோட்டு நன்கு வறுக்கவும்.
  • உப்பு போடவும்.
  • ஒரு பெரிய பத்திரத்தில் கொட்டவும்.
  • கொஞ்சம் ஆறினதும் அதில் சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை, வெங்காயம் , பச்சைமிளகாய், கொத்துமல்லி எல்லாம் போடவும்.
  • நன்கு கையால் கலக்கவும்.
  • பிறகு மோர் விட்டு கட்டிகளில்லாமல் கரைக்கவும்.
  • ஒரு அரைமணி வைத்திருந்து மெல்லிய தோசைகளாய் வார்க்கவும்.
  • நல்ல கரகரப்பாக அதாவது மொறுமொறுப்பாக வரும்.


Notes:
  • சாதாரண தோசை போல இல்லாமல் இந்த மாவை தோசை கல்லின் ஓரத்திலிருந்து விடணும். நடுவில் விட்டு பரத்த முடியாது.

Tuesday, July 22, 2014

மேத்தி பரோட்டா - வெந்தய கீரை சப்பாத்தி

தேவையானவை :

வெந்தய கீரை ஒரு பெரிய கட்டு ( அலம்பி ஆய்ந்து, பொடியாக நறுக்கிக்கொள்ளவும்)
கோதுமை மாவு 2 கப்
பச்சை மிளகாய் 8 - 10
கடலை மாவு 2 டேபிள் ஸ்பூன் 
உப்பு
1 / 2 ஸ்பூன் மஞ்சள் பொடி 
நெய் சப்பாத்தி செய்ய

செய்முறை :

வெந்தய கீரை மற்றும் பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும்.
ஒரு பேசினில் கோதுமை மாவு, கடலை மாவு , உப்பு மற்றும் கொஞ்சம் நெய் போட்டு நன்கு கலக்கவும்.
பிறகு பொடியாக நறுக்கின வெந்தய கீரை, பச்சை மிளகாய்,மஞ்சள் பொடி போட்டு நன்கு கலக்கவும்.
நன்கு அழுத்தி பிசையவும்.
பிறகு கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் விட்டு ரொட்டி மாவு பதத்துக்கு பிசையவும்.
ஒரு மணி நேரம் ஊறவைக்கவும்.
பிறகு வழக்கம் போல சப்பாத்தி களாக இடவும்..
தோசை கல்லில் போட்டு எடுக்கவும்.
இருபுறமும் நெய் விட்டு எடுக்கவும்..
சுவையான மேத்தி பரோட்டா தயார் புன்னகை

கொத்துமல்லி சப்பாத்தி

இனி சில வகை சப்பாத்திகளின் செய்முறைகளை பார்ப்போம் புன்னகை

தேவையானவை :

கொத்துமல்லி ஒரு பெரிய கட்டு ( அலம்பி ஆய்ந்து கொள்ளவும்)
கோதுமை மாவு 2 கப்
நெய் 2 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் 8 - 10 
பூண்டு 4 - 5 பற்கள் ( தேவையானால் )
உப்பு
1 / 2 ஸ்பூன் மிளகாய் பொடி (தேவையானால் )
பெருங்கயப்பொடி கால் ஸ்பூன்
எண்ணெய் + நெய் கலவை சப்பாத்தி செய்ய 

செய்முறை :

கொத்துமல்லியை மற்றும் பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும்.
ஒரு பேசினில் கோதுமை மாவு, உப்பு மற்றும் நெய் போட்டு நன்கு கலக்கவும்.
பிறகு பொடியாக நறுக்கின கொத்துமல்லி, பச்சை மிளகாய்,மிளகாய் பொடி,பெருங்கயப்பொடி மற்றும் பொடியாக நறுக்கின பூண்டு போட்டு நன்கு கலக்கவும்.
நன்கு அழுத்தி பிசையவும்.
பிறகு கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் விட்டு ரொட்டி மாவு பதத்துக்கு பிசையவும்.
ஒரு மணி நேரம் ஊறவைக்கவும்.
பிறகு வழக்கம் போல சப்பாத்தி களாக இடவும்..
தோசை கல்லில் போட்டு எடுக்கவும். எண்ணெய் + நெய் கலவை விட்டு எடுக்கவும்..
சுவையான பச்சை நிறமான கொத்துமல்லி சப்பாத்தி தயார் புன்னகை

குறிப்பு: கொத்துமல்லி உடம்புக்கு ரொம்ப நல்லது, அதை நிறைய சாப்பிட இதுவும் ஒருவழி புன்னகைவேண்டுமானால் கொத்துமல்லி , பூண்டு, மிளகாய் எல்லாவற்றையும் மிக்சி இல் அரைத்ததும் கலக்கலாம்.

மிஸ்ஸி ரொட்டி

தேவையானவை :

கடலை மாவு 1 கப் 
கோதுமை மாவு 1 கப் 
நெய் 2 டேபிள் ஸ்பூன் 
காய்ந்த வெந்தய கீரை (கசுரி மேத்தி) 1 டேபிள் ஸ்பூன் 
உப்பு
1 / 2 ஸ்பூன் மிளகாய் பொடி
1 / 2 ஸ்பூன் சீரகம் 
பெருங்கயப்பொடி கால் ஸ்பூன் 
மஞ்சள் பொடி கால் ஸ்பூன் 
எண்ணெய்

செய்முறை :

ஒரு பேசினில் போட்டு எல்லா சாமான்களையும் நன்கு கலக்கவும்.
ரொட்டி மாவு பதத்துக்கு பிசையவும்.
ஒரு மணி நேரம் ஊறவைக்கவும்.
பிறகு வழக்கம் போல சப்பாத்தி செய்யவும். 
தோசை கல்லில் போட்டு எடுக்கவும். எண்ணெய் விட்டு , விடாமல் எப்படி வேண்டுமோ அப்படி செய்யலாம்.
தந்துரி அடுப்பிலும் செய்யலாம் புன்னகை

கோதுமை மாவு கூழ்

தேவையானவை :

கோதுமை மாவு ஒரு கப்
மிளகாய் வற்றல் 4 - 5
புளி தண்ணீர் 1 1 / 2 கப்
உப்பு
கடுகு கொஞ்சம்
உளுந்து கொஞ்சம்
பெருங்காயம் கொஞ்சம்
எண்ணெய் முக்கால் கப்
கறிவேப்பிலை கொஞ்சம்

செய்முறை :

முதலில் மாவையும் புளி ஜலத்தையும் ஒரு பாத்திரத்தில் போட்டு கரைக்கவும் .
உப்புபோடவும்.
வாணலி இல் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்கயப் பொடி, கறிவேப்பிலை, மிளகாய் வற்றல் போட்டு தாளிக்கவும்.
கரைத்து வைத்துள்ள மாவை கொட்டி கிளறவும்.
அடுப்பை சின்னதாக வைக்கவும்.
மாவு வேகும் வரை அப்ப அப்ப கிளறி விடவும்.
நன்கு பந்து போல சுருண்டு வாணலி இல் ஒட்டாமல் வரும்போது, எண்ணெய் தடவிய தட்டில் கொட்டி , வில்லைகளாக வெட்டவும்.
அவ்வளவுதான், சுவையான கோதுமை மாவு கூழ் தயார்.
தொட்டுக்கொள்ள பருப்பு சாம்பார் நல்லா இருக்கும் புன்னகை

குறிப்பு: வற்றல் மிளகாய்க்கு பதில் மோர் மிளகாய் இதுக்கு ரொம்ப நல்லா இருக்கும் புன்னகை

'குழம்புமாவு உப்புமா '

'குழம்புமாவு உப்புமா '.... இது என்ன என்று குழம்புபவர்களுக்கான விளக்கம் புன்னகை அரிசி மாவை தான் நாங்க அப்படி சொல்வோம். இது அரிசி மாவில் செய்யும் 'கூழ்' . ரொம்ப சுவையாக 'மணல் மணலாக' வரும். கொஞ்சம் எண்ணெய் அதிகம் ஆகும் என்றாலும் சுவை யாக இருக்கும்.

தேவையானவை :

அரிசி மாவு ஒரு கப்
மிளகாய் வற்றல் 4 - 5
புளி தண்ணீர் 1 1 / 2 கப் 
உப்பு
கடுகு கொஞ்சம்
உளுந்து கொஞ்சம்
பெருங்காயம் கொஞ்சம்
எண்ணெய் முக்கால் கப் 
கறிவேப்பிலை கொஞ்சம்

செய்முறை :

முதலில் மாவையும் புளி ஜலத்தையும் ஒரு பாத்திரத்தில் போட்டு கரைக்கவும் .
உப்புபோடவும்.
வாணலி இல் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்கயப் பொடி, கறிவேப்பிலை, மிளகாய் வற்றல் போட்டு தாளிக்கவும்.
கரைத்து வைத்துள்ள மாவை கொட்டி கிளறவும்.
அடுப்பை சின்னதாக வைக்கவும்.
மாவு வேகும் வரை அப்ப அப்ப கிளறி விடவும்.
நன்கு 'உதிர் உதிராக ' வரும்வரை எண்ணெய் விட்டு கிளறவும் .
அவ்வளவுதான், சுவையான 'குழம்புமாவு உப்புமா ' தயார்.
தொட்டுக்கொள்ள பருப்பு சாம்பார் நல்லா இருக்கும் புன்னகை

கோதுமை மோர் களி

தேவையானவை :

கோதுமை மாவு ஒரு கப்
மிளகாய் வற்றல் 4 - 5
மோர் ஒரு கப்
உப்பு
கடுகு கொஞ்சம்
உளுந்து கொஞ்சம்
பெருங்காயம் கொஞ்சம்
எண்ணெய் கொஞ்சம்
கறிவேப்பிலை கொஞ்சம்

செய்முறை :

முதலில் மாவையும் மோரையும் ஒரு பாத்திரத்தில் போட்டு கரைக்கவும் .
உப்புபோடவும்.
வாணலி இல் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்கயப் பொடி, கறிவேப்பிலை, மிளகாய் வற்றல் போட்டு தாளிக்கவும்.
கரைத்து வைத்துள்ள மாவை கொட்டி கிளறவும்.
அடுப்பை சின்னதாக வைக்கவும்.
மாவு வேகும் வரை அப்ப அப்ப கிளறி விடவும்.
நன்கு வெந்து பந்து போல உருண்டு வந்ததும் இறக்கவும்.
அவ்வளவுதான், சுவையான கோதுமை மோர் களி தயார்.
தொட்டுக்கொள்ள பருப்பு சாம்பார் நல்லா இருக்கும் புன்னகை 

குறிப்பு: மிளகாய் வற்றலுக்கு பதில் மோர்மிளகாய் உபயோகிக்கலாம் அதுவும் நல்லா இருக்கும்.

மோர்களி

இதில் பலவகைகள் இருக்குபுன்னகை ஒவ்வொன்றாக பார்போம்.

தேவையானவை :

அரிசி மாவு ஒரு கப் 
பச்சை மிளகாய் 4 - 5 
மோர் ஒரு கப் 
உப்பு
கடுகு கொஞ்சம் 
உளுந்து கொஞ்சம் 
பெருங்காயம் கொஞ்சம் 
எண்ணெய் கொஞ்சம் 
கறிவேப்பிலை கொஞ்சம் 

செய்முறை : 

முதலில் மாவையும் மோரையும் ஒரு பாத்திரத்தில் போட்டு கரைக்கவும் .
உப்புபோடவும்.
வாணலி இல் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்கயப் பொடி, கறிவேப்பிலை, பச்சைமிளகாய் போட்டு தாளிக்கவும்.
கரைத்து வைத்துள்ள மாவை கொட்டி கிளறவும். 
அடுப்பை சின்னதாக வைக்கவும்.
மாவு வேகும் வரை அப்ப அப்ப கிளறி விடவும்.
நன்கு வெந்து பந்து போல உருண்டு வந்ததும் இறக்கவும்.
அவ்வளவுதான், சுவையான மோர் களி தயார் புன்னகை 

குறிப்பு: பச்சை மிளகாய்க்கு பதில் மோர்மிளகாய் அல்லது சிவப்பு மிளகாய் உபயோகிக்கலாம் .

உப்புமா கொழுக்கட்டை

தேவையானவை :

அரிசி 2 கப்
துவரம் பருப்பு 2 டேபிள் ஸ்பூன் 
கடலைபருப்பு 2 டேபிள் ஸ்பூன் 
தேங்காய் துருவல் 2 டேபிள் ஸ்பூன் 
உப்பு 

தாளிக்க :

கடுகு 1 ஸ்பூன்
மிளகாய் வற்றல் 4 - 5 
உளுத்தம் பருப்பு 1 ஸ்பூன் 
கடலை பருப்பு 1 ஸ்பூன் 
பச்சை மிளகாய் 2 - 3 
பெருங்காயம் கால் ஸ்பூன் 
கறிவேப்பிலை கொஞ்சம் 
தேங்காய் எண்ணெய் தாளிக்க கொஞ்சம் 

செய்முறை :

அரிசியை களைந்து உலர்த்தனும். 
மிக்சி இல் ரவையாக பொடிக்கவும்.
தனியாக துவரம் பருப்பு மற்றும் கடலைப்பருப்பையும் ரவை போல பொடிக்கவும்.
ஒரு வாணலி இல் எண்ணெய் விட்டு தாளிக்க வேண்டியவைகளை போட்டு தாளிக்கவும். 
பிறகு தண்ணிர் விடவும். உப்பு போடவும்.
அது நன்கு கொதிக்கும் போது அடுப்பை சின்னதாக்கி விட்டு அரைத்து வைத்துள்ள அரிசி மற்றும் பருப்பு இவைகளை போடவும்.
கட்டிகள் இல்லாமல் நன்கு கலக்கவும்.
தேங்காய் துருவல் போட்டு நன்கு கிளறி இறக்கவும்.
இப்போது ரவை பாதி வெந்து இருக்கும்.
அப்படியே அடுப்பிலிருந்து இறக்கி ஒரு பெரிய தாம்பாளத்தில் கொட்டவும்.
அது கொஞ்சம் ஆறட்டும்.
ஒரு இட்லி பானையில் தண்ணீர் விட்டு அடுப்பில் வைக்கவும்.
இட்லி தட்டுகளில் எண்ணெய் தடவவும்.
ஆறி உள்ள ,பாதி வெந்த உப்புமாவை கைகளில் எடுத்து பிடிகொழுக்கட்டை போல பிடிக்கவும்.
இட்லி தட்டுகளில் அடுக்கவும்.
எல்லாவற்றையும் இவ்வாறு அடுக்கினதும், இட்லி போல ஆவி இல் வேக வைக்கவும்.
அவ்வளவு தான் 'உப்புமா கொழுக்கட்டை ' ரெடி. 
தேங்காய் சட்டினியுடன் பரிமாறவும்.
அல்லது பருப்பு சாம்பாருடன் பரிமாறவும்.

அரிசி ரவை உப்புமா

எங்கள் விடுகளில் இது ரொம்ப பிரசித்தம் .

தேவையானவை :

அரிசி 2 கப்
துவரம் பருப்பு 2 டேபிள் ஸ்பூன் 
மிளகு சீரகம் பொடித்தது 1 டேபிள் ஸ்பூன் 
தேங்காய் துருவல் 2 டேபிள் ஸ்பூன் 
உப்பு 

தாளிக்க :

கடுகு 1 ஸ்பூன்
மிளகாய் வற்றல் 4 - 5 
உளுத்தம் பருப்பு 1 ஸ்பூன் 
கடலை பருப்பு 1 ஸ்பூன் 
பச்சை மிளகாய் 2 - 3 
பெருங்காயம் கால் ஸ்பூன் 
கறிவேப்பிலை கொஞ்சம் 
தேங்காய் எண்ணெய் தாளிக்க கொஞ்சம் 

செய்முறை :

அரிசியை களைந்து உலர்த்தனும். 
மிக்சி இல் ரவையாக பொடிக்கவும்.
தனியாக துவரம் பருப்பையும் ரவை போல பொடிக்கவும்.
ஒரு வாணலி இல் எண்ணெய் விட்டு தாளிக்க வேண்டியவைகளை போட்டு தாளிக்கவும். 
பிறகு தண்ணிர் விடவும். உப்பு போடவும்.
அது நன்கு கொதிக்கும் போது அடுப்பை சின்னதாக்கி விட்டு அரைத்து வைத்துள்ள அரிசி மற்றும் பருப்பு இவைகளை போடவும்.
கட்டிகள் இல்லாமல் நன்கு கலக்கவும்.
மேலே ஒரு மூடி போட்டு முடவும்.
ஒரு 5 நிமிடம் கழித்து திறந்து பார்க்கவும்.
நன்கு கிளறவும் , தேவையானால் கொஞ்சம் தண்ணிர் விடவும்.
மீண்டும் மூடிவைக்கவும்.
ஓரிரு நிமிடங்கள் கழித்து மீண்டும் திறந்து பார்க்கவும்.
ரவை வெந்திருந்தால் , தேங்காய் துருவல் மற்றும் மிளகு சீரகம் போட்டு நன்கு கிளறி இறக்கவும்.
அவ்வளவுதான் உப்புமா ரெடி.
தேங்காய் சட்டினியுடன் பரிமாறவும்.
அல்லது பருப்பு சாம்பாருடன் பரிமாறவும். கெட்டி தயிர் அல்லது ஊறுகாய் கூட ஓகே தான் புன்னகை 

குறிப்பு : இந்த உப்புமா ஆறினதும் தான் ரொம்ப நல்லா இருக்கும். மேலும் இதில் வாணலி இல் இருக்கும் காந்தல் - அதாவது அடி இல் இருக்கும் கொஞ்சம் 'அடிபிடித்த உப்புமா' ( கருகின இல்லை புன்னகை ) ரொம்ப நல்லா இருக்கும் புன்னகை 

காஞ்சிபுரம் இட்லி மாவில் தோசை

தேவையானவை :

ஒரு கப் அரிசி
முக்கால் கப் உளுத்தம் பருப்பு
ஒரு டேபிள் ஸ்பூன் மிளகு சீரகம் - ஒன்றிரண்டாக உடைத்தது
கொஞ்சம் நெய்
கொஞ்சம் கறிவேப்பிலை
பெருங்காயம் அரை ஸ்பூன்
சுக்கு பொடி அரை ஸ்பூன்
உப்பு
ஒரு பெரிய கரண்டி எண்ணெய்

செய்முறை :

அரிசி உளுந்து இரண்டையும் ஒன்றாகவே நனைத்து ஒன்றாகவே அரைக்கணும்.
ஒரு நாலு மணி நேரம் ஊறணும்.
பிறகு கொஞ்சம் 'கரகர'வென அரைக்கணும் .
உப்பு போட்டு கரைத்து வைக்கணும்.
மறுநாள் காலை எண்ணெய் விட்டு நன்கு கலக்கவும்.
பிறகு மற்ற சாமான்கள் எல்லாம் போட்டு நன்கு கலக்கணும்.
பிறகு தோசைகல்லில் எண்ணெய் தடவி தோசைகளாக வர்க்கனும்.
நல்ல கரகரப்பாக சூப்பராக வித்தியாசமான சுவையுடன் இருக்கும்.

ரவா தோசை 4

தேவையானவை :

பாம்பே ரவா 1 கப்
அரிசிமாவு 1 கப்
மைதா ஒரு டேபிள் ஸ்பூன்
கோதுமைமாவு 1 டேபிள் ஸ்பூன் 
சீரகம் பொடித்தது 1 ஸ்பூன்
கறிவேப்பிலை கொஞ்சம் 
மோர் 2 கப் 
உப்பு
எண்ணெய் தோசை வார்க்க

செய்முறை :

வாணலி இல் பாம்பே ரவா மற்றும் அரிசி மாவை கொஞ்சம் தண்ணீர்விட்டு ஊறவைக்கவும்.
ஒரு அரை மணி ஊரினதும் , மிக்சி இல் ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்; உப்பு போடவும்.
பிறகு அதில் மைதா மற்றும் கோதுமை மாவு மற்ற சாமான்களை போடவும்.
நன்கு கையால் கலக்கவும்.
பிறகு மோர் விட்டு கட்டிகளில்லாமல் கரைக்கவும்.
ஒரு அரைமணி வைத்திருந்து மெல்லிய தோசைகளாய் வார்க்கவும்.
நல்ல கரகரப்பாக அதாவது மொறுமொறுப்பாக வரும்.

குறிப்பு : சாதாரண தோசை போல இல்லாமல் இந்த மாவை தோசை கல்லின் ஓரத்திலிருந்து விடனும். நடுவில் விட்டு பரத்த முடியாது.

ரவா தோசை 3

தேவையானவை :

பாம்பே ரவா 1 கப்
அரிசிமாவு 1 கப்
கோதுமை மாவு 1 கப்
பச்சைமிளகாய் 5 - 6 - பொடியாக நறுக்கவும்
மிளகு பொடித்தது 1 ஸ்பூன் 
சீரகம் பொடித்தது 1 ஸ்பூன்
உப்பு
எண்ணெய் தோசை வார்க்க

செய்முறை :

வாணலி இல் பாம்பே ரவாபோட்டு நன்கு வறுக்கவும்.
உப்பு போடவும்.
ஒரு பெரிய பத்திரத்தில் கொட்டவும்; தண்ணீர்விட்டு ஒரு அரைமணி ஊறவைக்கவும்.
பிறகு உப்பு போடவும்.
பிறகு அதில் அரிசிமாவு, கோதுமை மாவு மற்ற சாமான்களை போடவும்.
நன்கு கையால் கலக்கவும்.
பிறகு தண்ணீர் விட்டு கட்டிகளில்லாமல் கரைக்கவும்.
ஒரு அரைமணி வைத்திருந்து மெல்லிய தோசைகளாய் வார்க்கவும்.
நல்ல கரகரப்பாக அதாவது மொறுமொறுப்பாக வரும்.

குறிப்பு : சாதாரண தோசை போல இல்லாமல் இந்த மாவை தோசை கல்லின் ஓரத்திலிருந்து விடனும். நடுவில் விட்டு பரத்த முடியாது.

ரவா தோசை 2

தேவையானவை : 

பாம்பே ரவா 1 கப்
பச்சைமிளகாய் 5 - 6 - பொடியாக நறுக்கவும்
சீரகம் அரை ஸ்பூன்
பெருங்காயம் கொஞ்சம்
மோர் 2 கப்
கறிவேப்பிலை கொஞ்சம்
கொத்துமல்லி கொஞ்சம் 
பெரியவெங்காயம் பொடியாக நறுக்கினது 
உப்பு
நெய் தோசை வார்க்க

செய்முறை :

வாணலி இல் பாம்பே ரவாபோட்டு நன்கு வறுக்கவும்.
உப்பு போடவும்.
ஒரு பெரிய பத்திரத்தில் கொட்டவும்.
கொஞ்சம் ஆறினதும் அதில் சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை, வெங்காயம் , பச்சைமிளகாய், கொத்துமல்லி எல்லாம் போடவும்.
நன்கு கையால் கலக்கவும்.
பிறகு மோர் விட்டு கட்டிகளில்லாமல் கரைக்கவும்.
ஒரு அரைமணி வைத்திருந்து மெல்லிய தோசைகளாய் வார்க்கவும்.
நல்ல கரகரப்பாக அதாவது மொறுமொறுப்பாக வரும்.

குறிப்பு : சாதாரண தோசை போல இல்லாமல் இந்த மாவை தோசை கல்லின் ஓரத்திலிருந்து விடனும். நடுவில் விட்டு பரத்த முடியாது.

வெங்காய ரவா தோசை

மேலே சொன்னது 'ப்ளைன் ரவா தோசை ' இது வெங்காய ரவா தோசை புன்னகை 

தேவையானவை :

பெரியவெங்காயம் பொடியாக நறுக்கினது ஒரு கப் 
பாம்பே ரவா 3 கப்
அரிசிமாவு 2 கப்
கோதுமை மாவு 1 கப்
பச்சைமிளகாய் 5 - 6 - பொடியாக நறுக்கவும்
கடுகு அரை ஸ்பூன்
சீரகம் அரை ஸ்பூன்
பெருங்காயம் கொஞ்சம்
மோர் 2 கப்
கறிவேப்பிலை கொஞ்சம்
உப்பு
எண்ணெய் தோசை வார்க்க
தேவையானால் கொத்துமல்லி 

செய்முறை :

ஒரு பெரிய பத்திரத்தில் பாம்பே ரவா, அரிசிமாவு, கோதுமை மாவு எல்லாவற்றையும் போடவும்.
உப்பு போடவும்.
வாணலி இல் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை, பச்சைமிளகாய் எல்லாம் தாளித்து மாவின் மேல் கொட்டவும்.
நன்கு கையால் கலக்கவும்.
பிறகு மோர் விட்டு கட்டிகளில்லாமல் கரைக்கவும்.
வெங்காயம் சேர்க்கவும்.
ஒரு அரைமணி வைத்திருந்து மெல்லிய தோசைகளாய் வார்க்கவும்.
நல்ல கரகரப்பாக அதாவது மொறுமொறுப்பாக வரும்.

குறிப்பு : சாதாரண தோசை போல இல்லாமல் இந்த மாவை தோசை கல்லின் ஓரத்திலிருந்து விடனும். நடுவில் விட்டு பரத்த முடியாது.

Blog Archive