Tuesday, July 22, 2014

அரிசி ரவை உப்புமா

எங்கள் விடுகளில் இது ரொம்ப பிரசித்தம் .

தேவையானவை :

அரிசி 2 கப்
துவரம் பருப்பு 2 டேபிள் ஸ்பூன் 
மிளகு சீரகம் பொடித்தது 1 டேபிள் ஸ்பூன் 
தேங்காய் துருவல் 2 டேபிள் ஸ்பூன் 
உப்பு 

தாளிக்க :

கடுகு 1 ஸ்பூன்
மிளகாய் வற்றல் 4 - 5 
உளுத்தம் பருப்பு 1 ஸ்பூன் 
கடலை பருப்பு 1 ஸ்பூன் 
பச்சை மிளகாய் 2 - 3 
பெருங்காயம் கால் ஸ்பூன் 
கறிவேப்பிலை கொஞ்சம் 
தேங்காய் எண்ணெய் தாளிக்க கொஞ்சம் 

செய்முறை :

அரிசியை களைந்து உலர்த்தனும். 
மிக்சி இல் ரவையாக பொடிக்கவும்.
தனியாக துவரம் பருப்பையும் ரவை போல பொடிக்கவும்.
ஒரு வாணலி இல் எண்ணெய் விட்டு தாளிக்க வேண்டியவைகளை போட்டு தாளிக்கவும். 
பிறகு தண்ணிர் விடவும். உப்பு போடவும்.
அது நன்கு கொதிக்கும் போது அடுப்பை சின்னதாக்கி விட்டு அரைத்து வைத்துள்ள அரிசி மற்றும் பருப்பு இவைகளை போடவும்.
கட்டிகள் இல்லாமல் நன்கு கலக்கவும்.
மேலே ஒரு மூடி போட்டு முடவும்.
ஒரு 5 நிமிடம் கழித்து திறந்து பார்க்கவும்.
நன்கு கிளறவும் , தேவையானால் கொஞ்சம் தண்ணிர் விடவும்.
மீண்டும் மூடிவைக்கவும்.
ஓரிரு நிமிடங்கள் கழித்து மீண்டும் திறந்து பார்க்கவும்.
ரவை வெந்திருந்தால் , தேங்காய் துருவல் மற்றும் மிளகு சீரகம் போட்டு நன்கு கிளறி இறக்கவும்.
அவ்வளவுதான் உப்புமா ரெடி.
தேங்காய் சட்டினியுடன் பரிமாறவும்.
அல்லது பருப்பு சாம்பாருடன் பரிமாறவும். கெட்டி தயிர் அல்லது ஊறுகாய் கூட ஓகே தான் புன்னகை 

குறிப்பு : இந்த உப்புமா ஆறினதும் தான் ரொம்ப நல்லா இருக்கும். மேலும் இதில் வாணலி இல் இருக்கும் காந்தல் - அதாவது அடி இல் இருக்கும் கொஞ்சம் 'அடிபிடித்த உப்புமா' ( கருகின இல்லை புன்னகை ) ரொம்ப நல்லா இருக்கும் புன்னகை 

No comments:

Blog Archive