Tuesday, July 22, 2014

ரவா தோசை 3

தேவையானவை :

பாம்பே ரவா 1 கப்
அரிசிமாவு 1 கப்
கோதுமை மாவு 1 கப்
பச்சைமிளகாய் 5 - 6 - பொடியாக நறுக்கவும்
மிளகு பொடித்தது 1 ஸ்பூன் 
சீரகம் பொடித்தது 1 ஸ்பூன்
உப்பு
எண்ணெய் தோசை வார்க்க

செய்முறை :

வாணலி இல் பாம்பே ரவாபோட்டு நன்கு வறுக்கவும்.
உப்பு போடவும்.
ஒரு பெரிய பத்திரத்தில் கொட்டவும்; தண்ணீர்விட்டு ஒரு அரைமணி ஊறவைக்கவும்.
பிறகு உப்பு போடவும்.
பிறகு அதில் அரிசிமாவு, கோதுமை மாவு மற்ற சாமான்களை போடவும்.
நன்கு கையால் கலக்கவும்.
பிறகு தண்ணீர் விட்டு கட்டிகளில்லாமல் கரைக்கவும்.
ஒரு அரைமணி வைத்திருந்து மெல்லிய தோசைகளாய் வார்க்கவும்.
நல்ல கரகரப்பாக அதாவது மொறுமொறுப்பாக வரும்.

குறிப்பு : சாதாரண தோசை போல இல்லாமல் இந்த மாவை தோசை கல்லின் ஓரத்திலிருந்து விடனும். நடுவில் விட்டு பரத்த முடியாது.

No comments:

Blog Archive