Showing posts with label ஓட்ஸ் இல் பலவகை உணவுகள். Show all posts
Showing posts with label ஓட்ஸ் இல் பலவகை உணவுகள். Show all posts

Tuesday, October 6, 2020

ஓட்ஸ் கட்லெட்

Ingredients:
  • ஓட்ஸ் - ஒரு கப்
  • வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு - 1 கப்
  • வேக வைத்து மசித்த பச்சைப் பட்டாணி - கால் கப்
  • வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கிக் கொள்ளவும்)
  • கொத்தமல்லி - 4 டேபிள் ஸ்பூன்
  • எலுமிச்சம்பழம் - ஒரு மூடி
  • உப்பு - தேவையான அளவு
  • ரஸ்க் தூள் - கால் கப்
  • பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 3.
  • எண்ணை நெய் கலவை - கட்லெட் செய்ய


Method:
  • ஓட்ஸில் வெந்நீர் தெளித்து, பத்து நிமிடம் ஊற வைக்கவும்.
  • இதனுடன் வேக வைத்த உருளைக்கிழங்கு, பச்சைப் பட்டாணி, பச்சை மிளகாய், வெங்காயம், கொத்தமல்லி,
  • எலுமிச்சம் பழச்சாறு எல்லாம் சேர்த்துக் கலந்து, கெட்டியாக பிசையவும்.
  • இந்தக் கலவையை வட்டமாகவோ முக்கோணமாகவோ தட்டி, ரஸ்க் தூளில் புரட்டி, தோசைக்கல்லில் போட்டு, சுற்றி எண்ணை நெய் கலவை விட்டு , சிவக்க வெந்தவுடன் எடுக்கவும்.
  • தக்காளி சாஸுடன் பரிமாறலாம் இந்த டேஸ்ட்டி கட்லெட்டை!

ஓட்ஸ் ரவா தோசை 2

Ingredients:
  • ஓட்ஸ் - 2 க‌ப்
  • அரிசி மாவு - 3 கப்
  • ர‌வை -4 கப்
  • எண்ணெய் + நெய் தோசை வார்க்க
  • உப்பு
  • ப‌ச்சை மிள‌காய் - 2 - 4 பொடியாக நறுக்கினது
  • சீரகம் - 2 டீ ஸ்பூன் + கடுகு - 2 டீ ஸ்பூன்
  • கறிவேப்பிலை கொஞ்சம்
  • கொத்துமல்லி - 2 டேபிள் ஸ்பூன் பொடியாக நறுக்கினது
  • இஞ்சி - துருவினது 2 டேபிள் ஸ்பூன்
  • பெருங்காயப்பொடி - 1/2 ஸ்பூன்


Method:
  • முதலில் ஓட்ஸ்ஐ மிக்சி இல் மாவாக பொடிக்கவும்.
  • பிறகு அத்துடன் அரிசி மாவு, ர‌வையை உப்பு சேர்த்து, கொஞ்சம் தண்ணியான தோசைமாவாக ( ரவ தோசை போல ) க‌ரைத்து கொள்ள‌வும்.
  • பொடியாக நறுக்கின பெருங்காயப்பொடி, ப‌ச்சை மிள‌காய், கறிவேப்பிலை எல்லாம் கரைத்து வைத்திருக்கும் மாவில் போட்டு கலக்கவும்.
  • வாணலி இல் எண்ணை விட்டு கடுகு, சீரகம் மற்றும் பச்சை மிளகாய் போட்டு தாளிக்கவும்.
  • அது ஒரு 10 - 15 நிமிட‌ம் ஊறட்டும்.
  • நான் ஸ்டிக் தோசை கல்லில், மாவை நடுவில் விட்டு பரத்தாமல், வெளி வட்டத்திலிருந்து விடனும்.
  • நல்ல மெல்லிசாக விடனும் ரவா தோசை போல, அப்போதான் நல்ல மொரு மொறுப்பாக வரும்.
  • இரண்டு பக்கமும் எண்ணெய் விட்டு எடுக்கவும்.
  • சுவையான ஓட்ஸ் ரவா தோசை ரெடி


Notes:
  • வேண்டுமானால் மிளகு சீரகம் போடலாம்.

ஓட்ஸ் ரவா தோசை

Ingredients:
  • ஓட்ஸ் - 1/2 க‌ப்
  • கோதுமை மாவு - 1 டேபிள் ஸ்பூன்
  • அரிசி மாவு - 1/2 கப்
  • ர‌வை - 1 கப்
  • எண்ணெய் + நெய் தோசை வார்க்க
  • வெங்காய‌ம் - ஒன்று
  • ப‌ச்சை மிள‌காய் - ஒன்று
  • கறிவேப்பிலை கொஞ்சம் - உப்பு கொஞ்சம்


Method:
  • முதலில் ஓட்ஸ்ஐ நன்கு வறுக்கவும்.
  • மிக்சி இல் மாவாக பொடிக்கவும்.
  • பிறகு அத்துடன் கோதுமைமாவு, ர‌வையை உப்பு சேர்த்து, கொஞ்சம் தண்ணியான தோசைமாவாக ( ரவ தோசை போல ) க‌ரைத்து கொள்ள‌வும்.
  • பொடியாக நறுக்கின வெங்காய‌ம்,ப‌ச்சை மிள‌காய், கறிவேப்பிலை எல்லாம் கரைத்து வைத்திருக்கும் மாவில் போட்டு கலக்கவும்.
  • அது ஒரு 10 - 15 நிமிட‌ம் ஊறட்டும்.
  • நான் ஸ்டிக் தோசை கல்லில், மாவை நடுவில் விட்டு பரத்தாமல், வெளி வட்டத்திலிருந்து விடனும்.
  • நல்ல மெல்லிசாக விடனும் ரவா தோசை போல, அப்போதான் நல்ல மொரு மொறுப்பாக வரும்.
  • இரண்டு பக்கமும் எண்ணெய் விட்டு எடுக்கவும்.
  • சுவையான ஓட்ஸ் ரவா தோசை ரெடி


Notes:
  • கொத்துமல்லி இஞ்சி போடலாம்; மிளகு சீரகம் போடலாம்.

ஓட்ஸ் - காய்கறி இட்லி

Ingredients:
  • மோர் - அரை கப்
  • ஓட்ஸ் - 1 கப்
  • பாம்பே ரவை - டாலியா -1/2 கப்
  • உப்பு - தேவையான அளவு
  • கொத்துமல்லி நறுக்கியது 1 டேபிள் ஸ்பூன்
  • கறிவேப்பிலை கொஞ்சம்
  • துருவிய காரட் 1/2 கப் அல்லது பீட்ருட்
  • உப்பு
  • தாளிக்க எண்ணெய்
  • தாளிக்க :
  • கடுகு 1 டீ ஸ்பூன்
  • கடலை பருப்பு 1 டீ ஸ்பூன்
  • உளுத்தம் பருப்பு 1 டீ ஸ்பூன்
  • பெருங்காயப்பொடி 1/4 டீ ஸ்பூன்
  • மஞ்சள் பொடி 1/2 டீ ஸ்பூன்
  • பச்சைமிளகாய் பொடியாக நறுக்கினது 1 டீ ஸ்பூன்
  • இஞ்சி துருவியது 1 டீ ஸ்பூன்


Method:
  • வாணலி இல் முதலில் ஓட்ஸ் ஐ கொஞ்சம் சிவப்பாக வறுக்கவும்.
  • கொஞ்சம் ஆறினதும் மிக்சி இல் போட்டு பொடிக்கவும்.
  • வாணலி இல் எண்ணெய் வைத்து தாளிக்க தந்துள்ள பொருட்களை தாளித்து, அதனுடன் ரவையும் போட்டு வறுக்கவும்.
  • ஒரு பாத்திரத்தில் மோர் விட்டு அதில் இதை போடவும்.
  • பொடித்து வைத்துள்ள ஓட்ஸ் ஐயும் இதில் போடவும்.
  • உப்பு, கொத்துமல்லி, துருவின காரட்( அல்லது பீட்ருட் ) மற்றும் கறிவேப்பிலை எல்லாம் போட்டு கலக்கவும் .
  • மாவு இட்லி மாவு பதத்தில் இருக்கணும்.
  • ஒரு 15 நிமிஷம் அது ஊறட்டும்.
  • பிறகு எண்ணெய் தடவிய இட்லி தட்டுகளில் மாவை விட்டு இட்லி செய்யவும்.
  • சுவையான 'ஓட்ஸ் - காய்கறி இட்லி' தயார் .


Notes:
  • கண்டிப்பாக ஓட்ஸ் ஐ வறுக்கணும். இல்லாவிட்டால் 'கொழ கொழப்பாக ' இருக்கும்.

ஓட்ஸ் பேல்

Ingredients:
  • ஓட்ஸ் 1 கப் ( நன்கு சிவக்க வறுத்துக்கொள்ளவும்)
  • வெங்காயம் பொடியாக நறுக்கினது 1/4 கப்
  • பெங்களூர் தக்காளி பொடியாக நறுக்கினது 1/4 கப்
  • வெள்ளரிக்காய் பொடியாக நறுக்கினது 1/4 கப்
  • ஓமப்பொடி 2 டேபிள் ஸ்பூன் ( இதற்கு பதில் 'ஹல்திராம்ஸ் ', 'ஆலு புஜியா' அல்லது 'புஜியா சேவ்' உபயோகிப்போம் நாங்க )
  • காரட் பொடியாக துருவினது 1/4 கப்
  • பச்சைமிளகாய் பொடியாக நறுக்கினது 1 டீ ஸ்பூன்
  • எலுமிச்சை சாறு 1 டேபிள் ஸ்பூன்
  • உப்பு
  • தேவையானால் மிளகாய் பொடி போடலாம்.


Method:
  • ஒரு பெரிய பேசினில் எல்லாவற்றையும் போட்டு கலக்கவும்.
  • பேல் ரெடி.
  • உடம்புக்கு ரொம்ப நல்லது, வயிற்ருக்கும் நல்லது.


Notes:
  • தித்திப்பு தேவையானால் ஸ்வீட் பச்சடி செய்து இதில் விடலாம் காரத்துக்கு பச்சைமிளகாய் போடுவதற்கு பதில் அரைத்து போடலாம்.

அவல் ஓட்ஸ் தோசை

Ingredients:
  • ஓட்ஸ் 2 கப்
  • கெட்டி அவல் 1 கப்
  • அரிசி மாவு 1/4 கப்
  • தையிரு 1/4 கப்
  • உப்பு
  • எண்ணெய் தோசை வார்க்க
  • பச்சை மிளகாய் 1 பொடியாக நறுக்கணும்
  • கொத்துமல்லி கொஞ்சம்


Method:
  • முதலில் அவலை நன்கு களைந்து ஒரு 10 நிமிஷம் ஊற வைக்கவும்.
  • பிறகு ஓட்ஸை அதில் போடவும், நன்கு கலக்கி மற்ற எல்லா பொருட்களையும் போட்டு தோசை மாவு பதத்துக்கு செய்யவும்.
  • மீண்டும் ஒரு 5 நிமிடம் அப்படியே வைக்கவும்.
  • பிறகு தோசை வார்க்கலாம்
  • அருமையாக இருக்கும், சாம்பார் சட்னி எதானாலும் நல்லா இருக்கும்.


Notes:
  • தேவையானால் காரட், வெங்காயம் போன்ற காய்களை துருவி சேர்க்கலாம்

ஓட்ஸ் ஊத்தப்பம் 2

Ingredients:
  • ஓட்ஸ் - 1 க‌ப்
  • கடலை மாவு - 1 டேபிள் ஸ்பூன்
  • ர‌வை - 1 டேபிள் ஸ்பூன்
  • எண்ணெய் + நெய் தோசை வார்க்க
  • உப்பு
  • வெங்காய‌ம் - ஒன்று
  • ப‌ச்சை மிள‌காய் - ஒன்று
  • கேர‌ட் - 1 டேபிள் ஸ்பூன் துருவிய‌து
  • முட்டை கோஸ் - 1 டேபிள் ஸ்பூன் துருவியது
  • சீரகம் 1 டீ ஸ்பூன்
  • மிளகு 1 டீ ஸ்பூன்
  • கொத்தம்மல்லி கொஞ்சம்
  • கறிவேப்பிலை கொஞ்சம்
  • மோர் 1 கப்
  • குடமிளகாய் 1 டேபிள் ஸ்பூன் துருவியது
  • முந்திரி ஒடித்தது 1 டேபிள் ஸ்பூன் துருவியது
  • தேங்காய் துருவியது 1 டேபிள் ஸ்பூன் தேவையானால்


Method:
  • முதலில் ஓட்ஸ் மற்றும் ர‌வையை வாணலி இல் போட்டு வறுக்கவும்.
  • அத்துடன் உப்பு சேர்த்து தோசைமாவு ப‌த‌த்திற்கு க‌ரைத்து கொள்ள‌வும்.
  • மற்றவற்றை எல்லாம் கரைத்து வைத்திருக்கும் மாவில் போட்டு கலக்கவும்..
  • அது ஒரு ப‌த்து நிமிட‌ம் ஊற‌வைக‌க்வும்.
  • தோசை கல்லில் கொஞ்சம் கனமான ஊத்தப்பமாக வார்க்கவும்.
  • இரண்டு பக்கமும் எண்ணெய் விட்டு எடுக்கவும்.
  • சுவையான ஓட்ஸ் ஊத்தப்பம் ரெடி

ஓட்ஸ் ஊத்தப்பம்

Ingredients:
  • ஓட்ஸ் - 1/2 க‌ப்
  • கோதுமை மாவு - 1/2 க‌ப்
  • அரிசி மாவு - 1 டேபிள் ஸ்பூன்
  • ர‌வை - 1 டேபிள் ஸ்பூன்
  • எண்ணெய் + நெய் தோசை வார்க்க
  • உப்பு
  • வெங்காய‌ம் - ஒன்று
  • ப‌ச்சை மிள‌காய் - ஒன்று
  • கேர‌ட் - 1 டேபிள் ஸ்பூன் துருவிய‌து (தேவையானால் )
  • கறிவேப்பிலை கொஞ்சம்


Method:
  • முதலில் ஓட்ஸ்,கோதுமைமாவு, ர‌வையை உப்பு சேர்த்து தோசைமாவு ப‌த‌த்திற்கு க‌ரைத்து கொள்ள‌வும்.
  • பொடியாக நறுக்கின வெங்காய‌ம்,ப‌ச்சை மிள‌காய்,கேர‌ட், கறிவேப்பிலை எல்லாம் கரைத்து வைத்திருக்கும் மாவில் போட்டு கலக்கவும்..
  • அது ஒரு ப‌த்து நிமிட‌ம் ஊற‌வைக‌க்வும்.
  • நான் ஸ்டிக் தோசை கல்லில் கொஞ்சம் கனமான ஊத்தப்பமாக வார்க்கவும்.
  • இரண்டு பக்கமும் எண்ணெய் விட்டு எடுக்கவும்.
  • சுவையான ஓட்ஸ் ஊத்தப்பம் ரெடி


Notes:
  • தேவையானால், பெங்களூர் தக்காளியை பொடியாக நறுக்கி போடலாம்.
  • கொத்துமல்லி இஞ்சி போடலாம்.
  • எல்லாம் உங்கள் விருப்பம் தான். மிளகு சீரகம் போடலாம்.
  • முந்திரி பொடித்து போடலாம்

ஓட்ஸ் பார்

Ingredients:
  • ஓட்ஸ் 1 கப்
  • சக்கரை 3/4 கப்
  • உடைத்த பருப்புகள் 1 கப் ( பாதாம் , முந்திரி, பிஸ்தா, வேர்கடலை, மற்றும் தேங்காய் பல்லு )


Method:
  • வாணலி இல் சக்கரை யை போடவும்.
  • அது உருகி brown colour இல் வரும்.
  • இதை Caramel என்போம் .
  • அப்படி உருகி வந்ததும், ஓட்ஸ் மற்றும் பருப்புகளை போட்டு கலக்கவும்.
  • அடுப்பை அணைத்துவிடவும்.
  • ஒரு தட்டு அல்ல்து மேடை இல் கோதுமை மாவை தூவி இதை கொட்டவும்.
  • அப்பாளாக் குழவியால் சூட்டுடன் சம்ப்படுத்தி தூண்டங்கள் போடவும்.
  • 'Oats bar' கள் ரெடி .
  • பசங்கள் விரும்பி சாப்பிடுவா, கண்ட கண்ட சாக்கலேடை விட இது தேவலாம்

உலர் பழங்களுடன் ஓட்ஸ்

Ingredients:
  • ஓட்ஸ் 2 கரண்டி
  • பால் 1/2 கப்
  • படம், முந்திரி , கிஸ்மிஸ் (உலர்ந்த திராக்ஷை) உலர்ந்த அத்திப்பழம் 1/4 கப்
  • சர்க்கரை அல்லது தேன்


Method:
  • ஓட்ஸ் ஐ மைக்ரோ வேவ் பாத்திரத்தில் போட்டு அது மூழ்கும் வரை தண்ணீர் விட்டு 3 – 5 நிமிஷங்கள் வரை வைக்கவும்.
  • வெளியே எடுத்ததும் நன்கு கிளறி, பால் மற்றும் சக்கரை போட்டு கலக்கவும்.
  • போடவும்
  • உலர் பழங்கள் போடவும்
  • வேண்டுமானால் தண்ணீர் விட்டுக்கொள்ளவும்.
  • இல்லைஎன்றால் கெட்டியாக கப்பில் விட்டு ஸ்பூன் போட்டு கொடுக்கவும்.
  • சத்தான கஞ்சி இது .
  • மதியம் வரை பசிக்காது


Notes:
  • இந்த கஞ்சி இல் உங்களுக்கு விருப்பமான பழங்கள் + உலர் பழங்கள் சேர்க்கலாம்.

சர்க்கரையுடன் ஓட்ஸ்

Ingredients:
  • ஓட்ஸ் 2 கரண்டி
  • பால் 1/2 கப்
  • சர்க்கரை அல்லது தேன்


Method:
  • ஓட்ஸ் ஐ மைக்ரோ வேவ் பாத்திரத்தில் போட்டு அது மூழ்கும் வரை தண்ணீர் விட்டு 3 - 5 நிமிஷங்கள் வரை வைக்கவும்.
  • வெளியே எடுத்ததும் நன்கு கிளறி, பால் மற்றும் சக்கரை போட்டு கலக்கவும்.
  • வேண்டுமானால் தண்ணீர் விட்டுக்கொள்ளவும்
  • பருகவும்.
  • சத்தான கஞ்சி ரேயடு.
  • மதியம் வரை பசிக்காது


Notes:
  • சர்க்கரை வியாதி உள்ளவர்கள் கூட அதர்க்கான 'செயற்கை சக்கரையை ' போட்டுக்கொள்ளலாம்.ஓட்ஸ் ஐ பாலிலேயும் வேகா விடலாம்.

ரசம் அல்லது குழம்பு ஓட்ஸ்

Ingredients:
  • ஓட்ஸ் 2 கரண்டி
  • ரசம் அல்லது குழம்பு 1 கரண்டி


Method:
  • ஓட்ஸ் ஐ மைக்ரோ வேவ் பாத்திரத்தில் போட்டு அது மூழ்கும் வரை தண்ணீர் விட்டு 3 - 5 நிமிஷங்கள் வரை வைக்கவும்.
  • (ஒவ்வொரு ஓவன் ஒரு மாதிரி அதனால் தான் 3 -5 என்றேன். நீங்கள் ஒருநாள் வைத்து பார்த்து பின் உங்களுக்கு தேவையான நேரம் வைத்துக்கொள்ளவும்.)
  • வெளியே எடுத்ததும் நன்கு கிளறி, ரசமோ குழம்போ விட்டு கலக்கவும்.
  • வேண்டுமானால் தண்ணீர் விட்டுக்கொள்ளவும்
  • பருகவும்.
  • சத்தான கஞ்சி தயார் .
  • மதியம் வரை பசிக்காது.


Notes:
  • வயசானவங்களுக்கு நாம் ஆவாளுக்கு தராமல் ஏதோ சமைத்து சாப்பிடுகிறோம் என்கிற எண்ணம் வரும், அதை தவிர்க்க வே இப்படி வேண்டுமானால் இதுல் மாவடு சாறு, வேற ஏதேனும் ஊருகாய் கூட போடலாம்  

Saturday, July 30, 2011

ஓட்ஸ் அடை

தேவையானவை :

ஓட்ஸ் 1 கப்
அரிசி மாவு 1/2 கப்
சோள மாவு 1/2 கப்
பெரிய வெங்காயம் 1 (பொடியாக நறுக்கவும்)
பச்சை மிளகாய் 2 (பொடியாக நறுக்கவும்)
உப்பு
அடை வார்க்க எண்ணை

செய்முறை:

முதலில் ஓட்ஸ் ஐ வெறும் வாணலி இல் போட்டு வறுக்கவும்.
கர கர ப்பாக மிக்சி இல் பொடிக்கவும்.
ஒரு பாத்திரத்தில் போட்டு அரிசி மாவு, சோள மாவுடன் கலக்கவும்.
உப்பு, வெங்காயம், பச்சை மிளகாய் எல்லாம் போட்டு கொஞ்சமாய் தண்ணீர் விட்டு கெட்டியாக பிசையவும் .
ஒரு பிளாஸ்டிக் கோவரில் அல்லது வாழை இலை இல் எண்ணை தடவி, இந்த மாவில் ஒரு சாத்துகுடி அளவு எடுத்து அடை போல் தடவும்.
உரித்து எடுத்து தோசை கல்லில் போட்டு இரண்டு பக்கமும் எண்ணை விட்டு எடுக்கவும்.

குறிப்பு: மிளகாய் வேண்டாம் என்பவர்கள் மிளகாய் பொடி போட்டுக்கலாம்; மிளகு சீராக பொடி போடலாம், கரம் மசாலா போடலாம் நம் சுவைக்கு ஏற்ப செயலாம்புன்னகை" src="http://illiweb.com/fa/i/smiles/icon_smile.gif" alt="புன்னகை" longdesc="4">கறிகாய் கூட காரட் துருவி போடலாம .

ஓட்ஸ் தோசை

தேவையானவை :

ஓட்ஸ் 1 கப்
கோதுமை மாவு 1 கப்
பெரிய வெங்காயம் 1 (பொடியாக நறுக்கவும்)
பச்சை மிளகாய் 2 (பொடியாக நறுக்கவும்)
தேவையானால் ..மிளகு சீரக பொடி சேர்க்கவும்.
உப்பு
தோசை வார்க்க எண்ணை

செய்முறை:

முதலில் ஓட்ஸ் ஐ வெறும் வாணலி இல் போட்டு வறுக்கவும்.
கர கர ப்பாக மிக்சி இல் பொடிக்கவும்.
ஒரு பாத்திரத்தில் போட்டு கோதுமை மாவுடன் கலக்கவும்.
உப்பு, வெங்காயம், பச்சை மிளகாய், மிளகு சீரக பொடி எல்லாம் போட்டு தண்ணீர் விட்டு தோசை மாவு பதத்துக்கு கரைக்கவும்
பிறகு தோசை கல்லில் எண்ணை விட்டு வார்க்கவும்.

குறிப்பு: வேண்டுமானால், இந்த மாவை மோர் விட்டு கரைக்கலாம்

ஓட்ஸ் பொங்கல்

தேவையானவை:

ஓட்ஸ் 1 கப்
மிளகு சீரகம் பொடித்தது 1 டீ ஸ்பூன்
இஞ்சி மிகவும் பொடியாக நறுக்கினது அல்லது துருவினது 1/2 ஸ்பூன்
வேக வைத்த பயத்தம் பருப்பு 1/2 கப்
நெய் 2 ஸ்பூன்
வேண்டுமானால் முந்திரி
கொஞ்சம் கறிவேப்பிலை
உப்பு
பெருங்காயப்பொடி 1/4 ஸ்பூன்

செய்முறை:

ஒரு வாணலி இல் 1 ஸ்பூன் நெய் விட்டு ஒட்சை போட்டு நன்கு வறுக்கவும்.
( நல்ல வறுபடவில்லை என்றால் 'கொஞ்சம் ஒட்டிக்கும்' )
இதில் வெந்த பருப்பை கொட்டி வேண்டுமால் கொஞ்சம் தண்ணீர் விட்டு அடுப்பை சின்ன தாக வைக்கவும்.
நன்கு கலக்கவும்.
ஓட்ஸ் வெந்து நன்கு கலந்ததும், உப்பு போட்டு கிளறவும்.
வேறு ஒரு வாணலி இல் 1 ஸ்பூன் நெய் விட்டு முந்திரி வறுக்கவும்.
அதிலேயே மிளகு சீரகம், இஞ்சி கறி வேப்பிலை போட்டு தாளிக்கவும்.
இதை அடுப்பில் உள்ள ஓட்ஸ் மற்றும் பருப்பு கலவை இல் கொட்டவும்.
நன்கு கிளறி இறக்கவும்.
ஓட்ஸ் பொங்கல் ரெடி.

உலர் பழங்கள் / நட்ஸ் உடன் ஓட்ஸ்

இதுவும் குழந்தைகளுக்கானது

தேவையானவை:

ஓட்ஸ் 2 கரண்டி
பால் 1/2 கப்
படம், முந்திரி , கிஸ்மிஸ் (உலர்ந்த திராக்ஷை) உலர்ந்த அத்திப்பழம் 1/4 கப்
சர்க்கரை அல்லது தேன்

செய்முறை:

ஓட்ஸ் ஐ மைக்ரோ வேவ் பாத்திரத்தில் போட்டு அது மூழ்கும் வரை தண்ணீர் விட்டு 3 – 5 நிமிஷங்கள் வரை வைக்கவும்.
வெளியே எடுத்ததும் நன்கு கிளறி, பால் மற்றும் சக்கரை போட்டு கலக்கவும்.
போடவும்
உலர் பழங்கள் போடவும்
வேண்டுமானால் தண்ணீர் விட்டுக்கொள்ளவும்.
இல்லைஎன்றால் கெட்டியாக கப்பில் விட்டு ஸ்பூன் போட்டு கொடுக்கவும்.
சத்தான கஞ்சி இது .
மதியம் வரை பசிக்காது

குறிப்பு: இந்த கஞ்சி இல் உங்களுக்கு விருப்பமான பழங்கள் + உலர் பழங்கள்சேர்க்கலாம்.

பழங்களுடன் ஓட்ஸ்

நாம் குடிக்கும்போது குழந்தைகள் கேட்குமே, அதனால், அவர்களுக்கானது இது.

தேவையானவை:

ஓட்ஸ் 2 கரண்டி
பால் 1/2 கப்
வாழைப்பழம் அல்லது ஆப்பிள் துண்டாங்கள் 1/2 கப்
சர்க்கரை அல்லது தேன்

செய்முறை:

ஓட்ஸ் ஐ மைக்ரோ வேவ் பாத்திரத்தில் போட்டு அது மூழ்கும் வரை தண்ணீர் விட்டு 3 – 5 நிமிஷங்கள் வரை வைக்கவும்.
வெளியே எடுத்ததும் நன்கு கிளறி, பால் மற்றும் சக்கரை போட்டு கலக்கவும்.
ஆப்பிள் அல்லது வாழப்பழம் போடவும்
வேண்டுமானால் தண்ணீர் விட்டுக்கொள்ளவும்.
இல்லைஎன்றால் கெட்டியாக கப்பில் விட்டு ஸ்பூன் போட்டு கொடுக்கவும்.
சத்தான கஞ்சி இது .
மதியம் வரை பசிக்காது

குறிப்பு: இந்த கஞ்சி இல் உங்களுக்கு விருப்பமான பழங்கள் சேர்க்கலாம். 2 பழங்களை சேர்த்தும் போட்டுத் தரலாம்.

ஓட்ஸ் கஞ்சி சக்கரையுடன்

தேவையானவை:

ஓட்ஸ் 2 கரண்டி
பால் 1/2 கப்
சர்க்கரை அல்லது தேன்

செய்முறை:

ஓட்ஸ் ஐ மைக்ரோ வேவ் பாத்திரத்தில் போட்டு அது மூழ்கும் வரை தண்ணீர் விட்டு 3 - 5 நிமிஷங்கள் வரை வைக்கவும்.
வெளியே எடுத்ததும் நன்கு கிளறி, பால் மற்றும் சக்கரை போட்டு கலக்கவும்.
வேண்டுமானால் தண்ணீர் விட்டுக்கொள்ளவும்
பருகவும்.
சத்தான கஞ்சி ரேயடு.
மதியம் வரை பசிக்காது

குறிப்பு : சர்க்கரை வியாதி உள்ளவர்கள் கூட அதர்க்கான 'செயற்க்கை சக்கரையை ' போட்டுக்கொள்ளலாம்.ஓட்ஸ் ஐ பாலிலேயும் வேக விடலாம்

பூண்டு ஓட்ஸ்

தேவையானவை:

ஓட்ஸ் 2 கரண்டி
பூண்டு 4 - 5 பல்
உப்பு


செய்முறை:

பூண்டை மிகவும் பொடியாக நறுக்கி மைக்ரோ வேவ் பாத்திரத்தில் போட்டு அது 1 டம்ளர் தண்ணீர் விட்டு 2 நிமிஷங்கள் வரை வைக்கவும்.
பிறகு ஓட்ஸ் போட்டு மீண்டும் 3 -5 நிமிடங்கள் வைக்கவும்.
வெளியே எடுத்ததும் நன்கு கிளறி, உப்பு போடவும்.
வேண்டுமானால் தண்ணீர் அல்லது மோர் விட்டுக்கொள்ளவும்
பருகவும்.
சத்தான கஞ்சி தயார் .
மதியம் வரை பசிக்காது.

குறிப்பு: இது கொலஸ்ற்றால் உள்ளவர்கள் குடிக்க ஏற்றது.

கோஸ் ஓட்ஸ்

தேவையானவை:

ஓட்ஸ் 2 கரண்டி
துருவின கோஸ் 1 கரண்டி
உப்பு


செய்முறை:

துருவின கோஸ் ஐ மைக்ரோ வேவ் பாத்திரத்தில் போட்டு அது மூழ்கும் வரை தண்ணீர் விட்டு 3 - 5 நிமிஷங்கள் வரை வைக்கவும்.
பிறகு ஓட்ஸ் போட்டு மீண்டும் 3 -5 நிமிடங்கள் வைக்கவும்.
வெளியே எடுத்ததும் நன்கு கிளறி, உப்பு போடவும்.
வேண்டுமானால் தண்ணீர் அல்லது மோர் விட்டுக்கொள்ளவும்
பருகவும்.
சத்தான கஞ்சி தயார் .
மதியம் வரை பசிக்காது.

குறிப்பு: இது போல் காரட் துருவலையும் செயலாம்

Blog Archive