- மைதா மாவு - 2 கப்
- நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
- சர்க்கரை - ஒரு டீஸ்பூன்
- சோடா உப்பு - அரை சிட்டிகை
- உப்பு - தேவையான அளவு
- எண்ணெய் - நெய் கலவை - தேவையான அளவு.
Method:
- மேலே கூறியுள்ள எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்துப் பிசைந்து கொள்ளவும்.
- நன்கு அழுத்திப் பிசைந்து, சிறிது நேரம் வைத்திருக்கவும்.
- பிறகு அதிலிருந்து சிறிது மாவை எடுத்து, நன்கு மெல்லிய, பெரிய சப்பாத்தியாக இடவும்.
- அதைப் புடவை கொசுவம் போல மடித்துக் கொள்ளவும்.
- இதுவும் பழக்கத்தில் தான் வரும்.
- மடித்ததை வட்டமாக சுருட்டி, சற்றுக் கனமாக இடவும்.
- இதேபோல மொத்த மாவையும் செய்து கொள்ளவும்.
- தோசைக்கல்லில் மிதமான தீயில், எண்ணெய், நெய் சேர்த்து இரண்டு பக்கங்களும் நன்கு வேகும் வரை பொறுத்திருந்து எடுக்கவும்.
- ருசியாக இருக்கும் இந்த மைதா பரோட்டா.
No comments:
Post a Comment