Showing posts with label நவராத்திரி. Show all posts
Showing posts with label நவராத்திரி. Show all posts

Wednesday, October 7, 2020

அரைத்து செய்யும் அப்பம்

Ingredients:
  • கோதுமை மாவு 1 டேபிள் ஸ்பூன்
  • அரிசி 1 கப்
  • வெல்லம் 1 கப்
  • தேங்காய் துருவல் அல்லது பல்லு பல்லாக நறுக்கினது 3 டேபிள் ஸ்பூன்
  • சோடா உப்பு 1 சிட்டிகை
  • ஏலப்பொடி 1/2 ஸ்பூன்
  • பொறிக்க நெய்
  • பூவன் வாழை பழம் 2


Method:
  • அரிசியை ஒரு 1/2 மணி ஊறவைத்து அரைக்கணும், மட்டாய் தண்ணீர் விடணும்.
  • கடைசி இல் வெல்லம்,வாழை பழம,ஏலப்பொடி,கோதுமை மாவு போடவும்.
  • சோடா உப்பு போடவும்
  • நன்கு அரைத்து எடுக்கவும்.
  • தேங்காய் துருவல் அல்லது பல்லு பல்லாக நறுக்கினத்தை போடவும்.
  • பால் வேண்டுமானாலும் விட்டு அரைக்கலாம்.
  • திக் ஆன தோசை மாவு பதத்தில் இருக்கணும்.
  • அடுப்பில் அப்ப காரலை வைத்து எல்லா குழிகளிலும் நெய் விடவும்.
  • உருகி சுட்டதும், அப்ப மாவை கரண்டியால் எடுத்து குழிகளில் விடவும்.
  • மறுபுறம் திருப்பி போட்டு வெந்ததும், அப்ப குச்சியால் அல்லது இரண்டு ஸ்பூன் களால் எடுக்கவும்.
  • பந்து போல் அழகாய் மெத் என்று இருக்கும்.
  • சுவையான அப்பம் தயார்; இதை ஒரு வாரம் 10 நாள் வைத்துக்கொள்ளலாம்.
  • Fridge இல் என்றல் மாதக்கணக்கில் வைத்துக் கொள்ளலாம் :)


Notes:
  • குறிப்பு: அப்ப மாவு எவ்வளவு ஊறுகிறதோ அவ்வளவு மெத் என்று வரும். எனவே காலை இல் முதல் வேலையாக கரைத்து வைக்கணும். எல்லா பக்ஷணமும் பண்ணின பிறகு கடைசியாய் அப்பம் குத்தணும். சரியா? இதை 1 வாரம் 10 நாள் வைத்துக்கொள்ளலாம்.

எள்ளு பொடி

Ingredients:
  • நவராத்திரி சனிக்கிழமை எள்ளு பொடி செய்வது வழக்கம்.
  • எள் 1/2 கப்
  • வெல்லம் 1/2 கப்
  • ஏலக்காய் 2 - 3


Method:
  • எள்ளை பொறுக்கவும்.
  • விரட்டு வாணலி இல் 'பட பட' வென பொரியும் வரை வறுக்கவும்.
  • ஆறவிடவும்.
  • மிக்சி இல் வெல்லம், ஏலக்காயுடன் போட்டு பொடிக்கவும்
  • வேண்டுமானால் உருட்டலாம்.
  • அப்படியே கொலுக்கு நைவேத்யம் செய்யவும்.
  • சுவையாக இருக்கும்.

கடலை பருப்பு சுண்டல்

Ingredients:
  • இந்த வகை யான சுண்டல் செய்வதற்க்கு கடலை பருப்பு,பயத்தம் பருப்பு போன்றவை ஏற்றவை.
  • மேலே சொன்ன கடலை பருப்பு அல்லது பயத்தம் பருப்பு ஏதாவது ஒன்று 1 கப்
  • மிளகாய் வற்றல் 2 -3
  • பெருங்காயப் பொடி 1/2 ஸ்பூன்
  • தேங்காய் துருவல் 1/2 கப்
  • கறிவேப்பிலை கொஞ்சம்
  • கடுகு 1 ஸ்பூன்
  • உளுந்து 1 ஸ்பூன்
  • தாளிக்க எண்ணை
  • உப்பு


Method:
  • இது கடலை பருப்பு சுண்டல்
  • இந்த இரண்டில் எந்த பருப்பை சுண்டல் செய்வதானாலும், ஊரவைக்க வேண்டியதில்லை.
  • தேவையானபோது, நன்கு களைந்து, தண்ணீரை வடித்துவிட்டு, கொஞ்சமாக பருப்புகள் மூழ்கும் வரை தண்ணீர் விட்டு , உப்பு போட்டு குக்கரில் 1 விசில் வரும் வரை வேக விடவும்.
  • சிலர் ஒரு சிட்டிகை சோடா உப்பு போடுவா அது அவ்வளவு நல்லது அல்ல.
  • பருப்பு ரொம்ப குழயக்கூடாது.
  • ஒரு வாணலி இல் எண்ணைவிட்டு, கடுகு, உளுந்து , மிளகாய் வற்றல் தாளிக்கவும்.
  • கறிவேப்பிலை பெருங்காயப்பொடி போடவும்.
  • வெந்த பருப்பை கோட்டவும்.
  • நன்கு கிளறவும்.
  • உப்பு முதலி லேயே போட்டதால் இப்ப போட வேண்டாம்.
  • தேங்காய் துருவல் தூவி கிளறி இறக்கணும் .
  • அவ்வளவுதான், சுண்டல் நைவேத்யத்துக்கு ரெடி


Notes:
  • இதற்கு குக்கர் கூட வேண்டாம், வாணலி லையே செயலாம். தாளித்ததும் , களைந்த பருப்பை போட்டு, தண்ணீர் விட்டு மூடி அடுப்பை சின்னதாவ வைக்கணும். அப்ப, அப்ப கிளறனும். 'நருக்குனு' வெந்ததும், உப்பு, தேங்காய் துருவல் தூவி இறக்கணும். அவ்வளவுதான்

என்ன சுண்டல்கள் செய்யலாம்

Ingredients:


    Method:


      Notes:
      • முதலில் என்ன என்ன சுண்டல் கள் செயலாம் என பார்க்கலாம்.
      • கொத்துக்கடலை,
      • பச்சை பயிறு,
      • வேர்கடலை,
      • பட்டாணி,
      • காராமணி,
      • மொச்சை,
      • ராஜ்மா,
      • கொள்ளு,
      • பயத்தம் பருப்பு,
      • கடலை பருப்பு
      • என சுண்டல்கள் செயலாம்.
      • கார சுண்டல்கள் 3 வகையாக சுண்டல்கள் செயலாம்.
      • 1. தேங்காய் பருப்பு போட்டு,
      • 2. மிளகாய் பொடி போட்டு , அல்லது
      • 3. மசாலா அரைத்து போட்டு.
      • இனிப்பு சுண்டல்கள் 2 வகையாக செயலாம்.
      • வழக்கமாக இனிப்பு சுண்டல் என்றால் வெல்லம் தான் போடுவோம்.
      • சிலர் கடலை பருப்பு சுண்டலில் மட்டும் சக்கரை போடுவது உண்டு.

      நவராத்திரி நைவேத்தியங்கள் பற்றி

      Ingredients:


        Method:


          Notes:
          • நவராத்திரி என்றாலே முதலில் நம் நினைவுக்கு வருவது அழகழகான பொம்மைகளும் சுண்டலும் தான் புன்னகை இல்லையா? சுண்டல் கள் உடல் ஆரோகியத்துக்கு ரொம்ப நல்லது, நிறைய 'புரோட்டீன்' இருக்கு இதில். மேலும் 'சரிவிகித உணவு என்று சொல்லும் அளவுக்கு, கொஞ்சம் எண்ணை, கொஞ்சம் தேங்காய், கொஞ்சம் புரோட்டீன், கொஞ்சம் கார்போ ஹைடிரெடு ' என்று எல்லாம் இருக்கும் இதில். சில சுண்டல் களைல் நாம் கேரட் , வெள்ளரி போன்ற சில காய் களையும் சேர்க்கலாம் . குழந்தைகள் முதல் பெரியவர் வரை எல்லோரும் சாப்பிடலாம்.
          • சுண்டல் இல் கார சுண்டல் மட்டும் அல்ல இனிப்பு சுண்டலும் இருக்கு. சிலவகை சுண்டல்களை இந்த திரி இல் பார்ப்போம். எப்போதும் போல் நீங்களும் உங்கள் குறிப்புகளையும் இங்கு பகிரலாம் புன்னகை உங்கள் பின்னூட்டங்களும் சந்தேகங்களும் வறவேர்க்கப் படுகின்றன

          Blog Archive