Showing posts with label மற்றவை. Show all posts
Showing posts with label மற்றவை. Show all posts

Thursday, October 8, 2020

தீபாவளி லேகியம்

Ingredients:
  • சுக்கு 15 கிராம்
  • மிளகு 15 கிராம்
  • ஓமம் 15 கிராம்
  • கண்டந்திப்பிலி 10 கிராம்
  • கிராம்பு 10 கிராம்
  • ஏலம் 10 கிராம்
  • மஞ்சள் பொடி அரை ஸ்பூன்
  • வெல்லம் - மேல் சொன்ன பொருட்களை எல்லாம் 4 முதல் 6 மணிநேரம் ஊறவைத்து மசிய அரைத்து, அந்த விழுது எவ்வளவோ அந்த அளவு வெல்லம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • நெய் 3 - 4 டேபிள் ஸ்பூன் அல்லது நெய் 3 டேபிள் ஸ்பூன் + நல்லெண்ணெய் 1 டேபிள் ஸ்பூன்.


Method:
  • மேல் சொன்ன பொருட்களை எல்லாம் 4 முதல் 6 மணிநேரம் ஊறவைத்து மசிய அரைக்கவும்.
  • அதே அளவு வெல்லத்தூள் எடுத்துக்கொள்ளவேண்டும்.
  • உருளி இல் கொஞ்சம் நெய் விட்டு, அரைத்த விழுதை போட்டு கிளற ஆரம்பிக்கவும்.
  • அடுப்பு சின்னதாகவே எரியட்டும்.
  • அவ்வப்போது கிளறி விடவும்.
  • அடி பிடிப்பது போல் இருந்தால் இன்னும் கொஞ்சம் நெய் விடவும்.
  • நன்கு சுருள வதங்கியதும், நெய் தானே பிரிய ஆரம்பிக்கும்.
  • கை இல் கொஞ்சம் லேகியம் எடுத்ததால், கொஞ்சமும் ஒட்டாமல் உருட்ட வரும் அது தான் சரியான பதம் .
  • அப்போது உருளியை இறக்கிவிடவும்.
  • நன்கு ஆறினதும், கண்ணாடி பாட்டிலில் எடுத்து வைக்கவும்.
  • வருடம் பூராகவும் நன்றாக இருக்கும்.


Notes:
  • இந்த பொருட்களைத் தவிர இன்னும் இரண்டு சேர்க்கலாம். அவை சித்தரத்தை - 10 கிராம் மற்றும் அரசி திப்பிலி 5 கிராம். மொத்தப்பொருட்கள் ஒற்றைப்படை எண்ணிக்கை இல் இருக்கவேண்டும்.
  • தீபாவளி அன்று மட்டும் இல்லை, எப்போது வயிறு சரி இல்லை என்று தோன்றினாலும், ஒரு சின்ன கோலி குண்டு அளவு இந்த லேகியத்தை எடுத்து சாப்பிட்டுவிட்டு, சூடான தண்ணீர் குடிக்கவும். சரியாகிவிடும்.

Images:






காப்பரிசி

Ingredients:
  • பச்சரிசி – 2 கப்
  • வெல்லம் – 2 கப்
  • பொட்டுக் கடலை – 200 கிராம்
  • நிலக்கடலை – 200 கிராம்
  • வெள்ளை எள் – 50 கிராம்
  • கொப்பரைத் தேங்காய்
  • ஏலப்பொடி
  • நெய்


Method:
  • குருணை இல்லாத, முனை முறியாத பச்சரிசியை கால் மணி நேரம் ஊறவைத்து, நீரை வடித்து, நிழலில் உலர்த்திக் கொள்ளவும். (ஆற நேரமில்லை என்றால் லேசாக வாணலியில் வறுத்துக் கொள்ளலாம்.)
  • வறுத்துத் தோல் நீக்கிய நிலக்கடலையை ஒன்றிரண்டாக உடைத்துக் கொள்ளவும்.
  • கொப்பரைத் தேங்காயை சின்னஞ்சிறு துண்டுகளாகக் கீறிக் கொள்ளவும்.
  • எள், கொப்பரைத் துண்டுகளை சிறிது நெய்யில் பொரித்துக் கொள்ளவும்.
  • வெல்லத்தை முற்றிய பாகாக வைத்து முதலில் முக்கால் பதம் உலர்ந்த அரிசியைச் சேர்க்கவும். பாகின் சூட்டிலேயே அரிசி பொரியும்,
  • பின், ஏலப்பொடி, பொட்டுக்கடலை, நிலக்கடலை, எள், தேங்காய்த் துண்டுகளைக் கலந்து கிளறி இறக்கவும்.
  • காப்பரிசி முதலில் இறுக்கமாக இருக்கும். ஆனால் ஆறியதும் உதிர்ந்துகொள்ளும்.
  • பண்டிகைக்காக இல்லாமல் சாதா நாளில் செய்தால் சீரக மிட்டாய்களை அழகுக்காகக் கலந்து கொள்ளலாம்.


Notes:
  • இதை அநேகமாக எங்கள் வீட்டில் குழந்தை பிறந்து தொட்டிலிட்டு, பெயர்வைக்கும் நாளிலும் முதல் ஆண்டுநிறைவன்று காதுகுத்தும் நாளிலும் செய்வார்கள்.

Blog Archive