Ingredients:
- பம்பாய் ரவை ஒரு கப்
- சர்க்கரை 2 கப்
- பால் 1 கப்
- ஏலக்காய் பொடி ½ sp
- நெய் 2 - 3 ஸ்பூன்
- முந்திரி 1 ஸ்பூன் உடைத்தது
- கிஸ் மிஸ் 1 ஸ்பூன் ( அலம்பி துடைத்து வைக்கவும் )
- ‘கேசர் கலர்’ சில சொட்டுகள் அல்லது குங்குமப்பூ
Method:
- ஒரு பாத்திரத்தில் ஒரு ஸ்பூன் நெய் விட்டு, கிஸ் மிஸ் மற்றும் முந்திரி பருப்பை வறுக்கவும்.
- அவற்றை ஒரு தட்டில் வைக்கவும்.
- மீண்டும் கொஞ்சம் நெய் விட்டு, ரவையை போட்டு வறுக்கவும்.
- கருகாமல், ஆனால் நன்றாக வறுக்கவும்.
- தண்ணீர் + பாதி பால் விடவும்.
- நன்றாக கிளறவும்; ஒரு மூடி போட்டு வேகவிடவும்.
- ரவை நிறைய தண்ணீர் இழுக்கும், எனவே அவ்வப்பொழுது பார்த்து தண்ணீர் சேர்த்துக் கொள்ளுங்கள்.
- ரவை நன்கு வேகும்வரை காத்திருக்கவும்.
- நன்கு வெந்ததும், சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கவும்.
- மீதி பாலை சேர்க்கவும்; ‘கேசர் கலர்’ சில சொட்டுகள் அல்லது குங்குமப்பூ வை பாலில் சேர்த்து கரைத்து பின் பாயசத்தில் சேர்க்கவும்.
- எல்லாமாக சேர்ந்து நன்கு கொதிக்கட்டும்.
- ஏலக்காய் பொடி , வறுத்த முந்திரி மற்றும் கிஸ் மிஸ் சேர்க்கவும்.
- அடுப்பிலிருந்து இறக்கவும்.
- அருமையான, பம்பாய் ரவா பாயசம் தயார்.
- சூடாக அல்லது குளிராக பரிமாறவும்.
Notes:
- தேங்காய் பால் விட்டும் இந்த பாயசம் செய்யலாம்.
- மில்க் மெய்டு விட்டும் செய்யலாம்.
Ingredients:
- சேமியா ஒரு கப்
- பம்பாய் ரவை ஒரு கப்
- சர்க்கரை 3 கப்
- பால் 1 கப்
- ஏலக்காய் பொடி ½ sp
- நெய் 2 - 3 ஸ்பூன்
- முந்திரி 1 ஸ்பூன் உடைத்தது
- கிஸ் மிஸ் 1 ஸ்பூன் ( அலம்பி துடைத்து வைக்கவும் )
- ‘கேசர் கலர்’ சில சொட்டுகள் அல்லது குங்குமப்பூ
Method:
- ஒரு பாத்திரத்தில் ஒரு ஸ்பூன் நெய் விட்டு, கிஸ் மிஸ் மற்றும் முந்திரி பருப்பை வறுக்கவும்.
- அவற்றை ஒரு தட்டில் வைக்கவும்.
- மீண்டும் கொஞ்சம் நெய் விட்டு, சேமியாவை வறுக்கவும்.
- அதிலேயே ரவையை போட்டு வறுக்கவும்.
- கருகாமல், ஆனால் நன்றாக வறுக்கவும்.
- தண்ணீர் + பாதி பால் விடவும்.
- நன்றாக கிளறவும்; ஒரு மூடி போட்டு வேகவிடவும்.
- ரவை நிறைய தண்ணீர் இழுக்கும், எனவே அவ்வப்பொழுது பார்த்து தண்ணீர் சேர்த்துக் கொள்ளுங்கள்.
- ரவை, சேமியா நன்கு வேகும்வரை காத்திருக்கவும்.
- அவை நன்கு வெந்ததும், சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கவும்.
- மீதி பாலை சேர்க்கவும்; ‘கேசர் கலர்’ சில சொட்டுகள் அல்லது குங்குமப்பூ வை பாலில் சேர்த்து கரைத்து பின் பாயசத்தில் சேர்க்கவும்.
- எல்லாமாக சேர்ந்து நன்கு கொதிக்கட்டும்.
- ஏலக்காய் பொடி , வறுத்த முந்திரி மற்றும் கிஸ் மிஸ் சேர்க்கவும்.
- அடுப்பிலிருந்து இறக்கவும்.
- அருமையான, சேமியா ரவா பாயசம் தயார்.
- சூடாக அல்லது குளிராக பரிமாறவும்.
Notes:
- தேங்காய் பால் விட்டும் இந்த பாயசம் செய்யலாம்.
- மில்க் மெய்டு விட்டும் செய்யலாம்.
Ingredients:
- சேமியா ஒரு கப்
- சர்க்கரை 2 கப்
- பால் 1 கப்
- ஏலக்காய் பொடி ½ sp
- நெய் 2 - 3 ஸ்பூன்
- முந்திரி 1 ஸ்பூன் உடைத்தது
- கிஸ் மிஸ் 1 ஸ்பூன் ( அலம்பி துடைத்து வைக்கவும் )
- ‘கேசர் கலர்’ சில சொட்டுகள் அல்லது குங்குமப்பூ
Method:
- ஒரு பாத்திரத்தில் ஒரு ஸ்பூன் நெய் விட்டு, கிஸ் மிஸ் மற்றும் முந்திரி பருப்பை வறுக்கவும்.
- அவற்றை ஒரு தட்டில் வைக்கவும்.
- மீண்டும் கொஞ்சம் நெய் விட்டு, சேமியாவையும் வறுக்கவும்.
- கருகாமல், ஆனால் நன்றாக வறுக்கவும்.
- தண்ணீர் + பாதி பால் விடவும்.
- நன்றாக கிளறவும்; ஒரு மூடி போட்டு வேகவிடவும்.
- சேமியா நன்கு வேகும்வரை காத்திருக்கவும்.
- தேவையானால் இன்னும் தண்ணீர் சேர்க்கலாம்.
- சேமியா நன்கு வெந்ததும், சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கவும்.
- மீதி பாலை சேர்க்கவும்; ‘கேசர் கலர்’ சில சொட்டுகள் அல்லது குங்குமப்பூ வை பாலில் சேர்த்து கரைத்து பின் பாயசத்தில் சேர்க்கவும்.
- எல்லாமாக சேர்ந்து நன்கு கொதிக்கட்டும்.
- ஏலக்காய் பொடி , வறுத்த முந்திரி மற்றும் கிஸ் மிஸ் சேர்க்கவும்.
- அடுப்பிலிருந்து இறக்கவும்.
- அருமையான, சேமியா பாயசம் தயார்.
- சூடாக அல்லது குளிராக பரிமாறவும்.
Notes:
- தேங்காய் பால் விட்டும் இந்த பாயசம் செய்யலாம்.
- மில்க் மெய்டு விட்டும் செய்யலாம்.
Ingredients:
- ஜவ்வரிசி ஒரு கப்
- சேமியா ஒரு கப்
- சர்க்கரை 2 கப்
- பால் 1 கப்
- ஏலக்காய் பொடி ½ sp
- நெய் 2 - 3 ஸ்பூன்
- முந்திரி 1 ஸ்பூன் உடைத்தது
- கிஸ் மிஸ் 1 ஸ்பூன் ( அலம்பி துடைத்து வைக்கவும் )
- ‘கேசர் கலர்’ சில சொட்டுகள் அல்லது குங்குமப்பூ
Method:
- ஒரு பாத்திரத்தில் ஒரு ஸ்பூன் நெய் விட்டு, கிஸ் மிஸ் மற்றும் முந்திரி பருப்பை வறுக்கவும்.
- அவற்றை ஒரு தட்டில் வைக்கவும்.
- மீண்டும் கொஞ்சம் நெய்விட்டு, ஜவ்வரிசி போட்டு, நன்கு வறுக்கவும்.
- பொதுவாக இது அதன் அசல் அளவை விட 2 - 3 மடங்கு பெரியதாக மாறும்.
- இதையும் ஒரு தட்டில் வைக்கவும்.
- மீண்டும் கொஞ்சம் நெய் விட்டு, சேமியாவையும் வறுக்கவும்.
- கருகாமல், ஆனால் நன்றாக வறுக்கவும்.
- தண்ணீர் + பாதி பால் விடவும்.
- நன்றாக கிளறவும்; ஒரு மூடி போட்டு வேகவிடவும்.
- சேமியாவும் ஜவ்வரிசியும் நன்கு வேகும்வரை காத்திருக்கவும்.
- தேவையானால் இன்னும் தண்ணீர் சேர்க்கலாம்.
- ஜவ்வரிசி நன்கு வெந்ததும், சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கவும்.
- மீதி பாலை சேர்க்கவும்; ‘கேசர் கலர்’ சில சொட்டுகள் அல்லது குங்குமப்பூ வை பாலில் சேர்த்து கரைத்து பின் பாயசத்தில் சேர்க்கவும்.
- எல்லாமாக சேர்ந்து நன்கு கொதிக்கட்டும்.
- ஏலக்காய் பொடி , வறுத்த முந்திரி மற்றும் கிஸ் மிஸ் சேர்க்கவும்.
- அடுப்பிலிருந்து இறக்கவும்.
- அருமையான, ஜவ்வரிசி சேமியா பாயசம் தயார்.
- சூடாக அல்லது குளிராக பரிமாறவும்.
Notes:
- ஜவ்வரிசி சேமியா இரண்டையும் வறுத்ததும், பால் மற்றும் தண்ணீர் விட்டு ஒரு பாத்திரத்தில் போட்டு குக்கரில் வைத்துவிடவும். மூன்று விசில் வரை வைத்திருந்து பிறகு எடுத்து சர்க்கரை சேர்த்து பாயசம் செய்யவும். இப்படி செய்வதால், நேரம் மிச்சமாவதுடன், ஜவ்வரிசி நன்கு வேகும்.
- தேங்காய் பால் விட்டும் இந்த பாயசம் செய்யாலாம்.
- மில்க் மெய்டு விட்டும் செய்யலாம்.
Ingredients:
- ஜவ்வரிசி அரை கப்
- மெல்லிய அவல் ஒரு கப்
- சர்க்கரை 2 கப்
- பால் 1 கப்
- ஏலக்காய் பொடி ½ sp
- நெய் 2 - 3 ஸ்பூன்
- முந்திரி 1 ஸ்பூன் உடைத்தது
- கிஸ் மிஸ் 1 ஸ்பூன் ( அலம்பி துடைத்து வைக்கவும் )
- ‘கேசர் கலர்’ சில சொட்டுகள் அல்லது குங்குமப்பூ
Method:
- ஒரு பாத்திரத்தில் ஒரு ஸ்பூன் நெய் விட்டு, கிஸ் மிஸ் மற்றும் முந்திரி பருப்பை வறுக்கவும்.
- அவற்றை ஒரு தட்டில் வைக்கவும்.
- மீண்டும் கொஞ்சம் நெய்விட்டு, ஜவ்வரிசி போட்டு, நன்கு வறுக்கவும்.
- பொதுவாக இது அதன் அசல் அளவை விட 2 - 3 மடங்கு பெரியதாக மாறும்.
- இதையும் ஒரு தட்டில் வைக்கவும்.
- மீண்டும் கொஞ்சம் நெய் விட்டு, அவலையும் வறுக்கவும்.
- கருகாமல், ஆனால் நன்றாக வறுக்கவும்.
- தண்ணீர் + பாதி பால் விடவும்.
- நன்றாக கிளறவும்; ஒரு மூடி போட்டு வேகவிடவும்.
- அவல் சீக்கிரம் வேகும், அதனால் அடிபிடிக்கும் அபாயம் உண்டு... அதனால் நடுநடுவில் கிளறிவிடவும்.
- ஜவ்வரிசியும் நன்கு வேகும்வரை காத்திருக்கவும்.
- தேவையானால் இன்னும் தண்ணீர் சேர்க்கலாம்.
- ஜவ்வரிசி நன்கு வெந்ததும், சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கவும்.
- மீதி பாலை சேர்க்கவும்; ‘கேசர் கலர்’ சில சொட்டுகள் அல்லது குங்குமப்பூ வை பாலில் சேர்த்து கரைத்து பின் பாயசத்தில் சேர்க்கவும்.
- எல்லாமாக சேர்ந்து நன்கு கொதிக்கட்டும்.
- ஏலக்காய் பொடி , வறுத்த முந்திரி மற்றும் கிஸ் மிஸ் சேர்க்கவும்.
- அடுப்பிலிருந்து இறக்கவும்.
- அருமையான, ஜவ்வரிசி அவல் பாயசம் தயார்.
- சூடாக அல்லது குளிராக பரிமாறவும்.
Notes:
- ஜவ்வரிசியை வறுத்ததும், பால் மற்றும் தண்ணீர் விட்டு ஒரு பாத்திரத்தில் போட்டு குக்கரில் வைத்துவிடவும். மூன்று விசில் வரை வைத்திருந்து பிறகு எடுத்து சர்க்கரை சேர்த்து பாயசம் செய்யவும். இப்படி செய்வதால், நேரம் மிச்சமாவதுடன், ஜவ்வரிசி நன்கு வேகும்.
- தேங்காய் பால் விட்டும் இந்த பாயசம் செய்யாலாம்.
- மில்க் மெய்டு விட்டும் செய்யலாம்.
Ingredients:
- ஜவ்வரிசி 1 கப்
- சர்க்கரை 2 கப்
- பால் 1 கப்
- ஏலக்காய் பொடி ½ sp
- நெய் 2 - 3 ஸ்பூன்
- முந்திரி 1 ஸ்பூன் உடைத்தது
- கிஸ் மிஸ் 1 ஸ்பூன் ( அலம்பி துடைத்து வைக்கவும் )
- ‘கேசர் கலர்’ சில சொட்டுகள் அல்லது குங்குமப்பூ
Method:
- ஒரு பாத்திரத்தில் ஒரு ஸ்பூன் நெய் விட்டு, கிஸ் மிஸ் மற்றும் முந்திரி பருப்பை வறுக்கவும்.
- அவற்றை ஒரு தட்டில் வைக்கவும்.
- மீண்டும் கொஞ்சம் நெய்விட்டு, ஜவ்வரிசி போட்டு, நன்கு வறுக்கவும்.
- பொதுவாக இது அதன் அசல் அளவை விட 2 - 3 மடங்கு பெரியதாக மாறும்.
- கருகாமல், ஆனால் நன்றாக வறுக்கவும்.
- தண்ணீர் + பாதி பால் விடவும்.
- நன்றாக கிளறவும்; ஒரு மூடி போட்டு வேகவிடவும்.
- ஜவ்வரிசி நன்றாக வேகவேண்டும்; நடுநடுவில் கிளறிவிடவும்.
- தேவையானால் இன்னும் தண்ணீர் சேர்க்கலாம்.
- ஜவ்வரிசி நன்கு வெந்ததும், சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கவும்.
- மீதி பாலை சேர்க்கவும்; ‘கேசர் கலர்’ சில சொட்டுகள் அல்லது குங்குமப்பூ வை பாலில் சேர்த்து கரைத்து பின் பாயசத்தில் சேர்க்கவும்.
- எல்லாமாக சேர்ந்து நன்கு கொதிக்கட்டும்.
- ஏலக்காய் பொடி , வறுத்த முந்திரி மற்றும் கிஸ் மிஸ் சேர்க்கவும்.
- அடுப்பிலிருந்து இறக்கவும்.
- அருமையான, ஜவ்வரிசி பாயசம் தயார்.
- சூடாக அல்லது குளிராக பரிமாறவும்.
Notes:
- ஜவ்வரிசியை வறுத்ததும், பால் மற்றும் தண்ணீர் விட்டு ஒரு பாத்திரத்தில் போட்டு குக்கரில் வைத்துவிடவும். மூன்று விசில் வரை வைத்திருந்து பிறகு எடுத்து சர்க்கரை சேர்த்து பாயசம் செய்யவும். இப்படி செய்வதால், நேரம் மிச்சமாவதுடன், ஜவ்வரிசி நன்கு வேகும்.
Ingredients:
- மைதா 200 கிராம்
- ரவா 50 கிராம்
- சர்க்கரை 300 கிராம்
- பால் 500 மில்லி
- ஏலக்காய் தூள் ½ sp
- குங்குமப்பூ 12 இழைகள்
- முந்திரி பேஸ்ட் + பாதாம் பேஸ்ட் 2 டேபிள் ஸ்பூன்
- பொறிக்க எண்ணெய்
- உப்பு
Method:
- மைதா மற்றும் ராவா இரண்டையும் ஒரு பேசினில் போட்டு, தண்ணீர் விட்டு நன்கு பிசையவும்.
- சப்பாத்தி மாவைவிட கெட்டியாக இருக்கட்டும்.
- இதை அப்படியே ஒரு மணி நேரத்திற்கு வைத்திருங்கள்.
- சிறிய சிறிய பூரிகளாக இடுங்கள்.
- அவற்றை ஒரு முள் கரண்டி உதவியுடன் துளைகளை போடுங்கள்.
- அதனால் பூரிகள், உப்பாமல், கரகரப்பாக பொறியும்.
- அவற்றை எண்ணெயில் நன்கு பொறிக்கவும்.
- ஒரு ஆழமான வாணலியில் பால் ஊற்றி அதில் முந்திரி பேஸ்ட் + பாதாம் பேஸ்ட் சேர்க்கவும்.
- அதை ஒரு கொதி வரட்டும்.
- ஏலக்காய் பொடி மற்றும் குங்குமப்பூ சேர்க்கவும்.
- நன்றாக கலந்து இப்போது அதில் நொறுக்கப்பட்ட பூரிகளை சேர்க்கவும்.
- அடுப்பிலிருந்து இறக்கி சூடாக பரிமாறவும்.
- ‘பூரி பாயசம்’, குழந்தைகள் பொதுவாக இதை மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.
Notes:
- சப்பாத்தி அல்லது பூரி மீந்து விட்டால், அதை இப்படி செய்து சாப்பிடலாம்.
Ingredients:
- கோதுமை ரவா 1 கப்
- வெல்லம் 2 கப்
- பால் ஒரு கப்
- ஏலக்காய் பொடி ½ sp
- நெய் 2 - 3 ஸ்பூன்
- முந்திரி 1 ௦ உடைத்துக்கொள்ளவும்
- கிஸ் மிஸ் 1 ஸ்பூன் ( அலம்பி துடைத்து வைக்கவும் )
Method:
- ஒரு பாத்திரத்தில் ஒரு ஸ்பூன் நெய் விட்டு, கிஸ் மிஸ் மற்றும் முந்திரி பருப்பை வறுக்கவும்.
- அவற்றை ஒரு தட்டில் வைக்கவும்.
- மீண்டும் கொஞ்சம் நெய்விட்டு, கோதுமை ரவாவை நன்கு வறுக்கவும்.
- கருகாமல், ஆனால் நன்றாக வறுக்கவும்.
- தண்ணீர் + பாதி பால் விடவும்.
- நன்றாக கிளறவும்; ஒரு மூடி போட்டு வேகவிடவும்.
- ரவா நன்றாக வேகவேண்டும்; நடுநடுவில் கிளறிவிடவும்.
- தேவையானால் இன்னும் தண்ணீர் சேர்க்கலாம்.
- ரவை நன்கு வெந்ததும், வெல்லம் சேர்த்து நன்கு கலக்கவும்.
- மீதி பாலை சேர்க்கவும்.
- எல்லாமாக சேர்ந்து நன்கு கொதிக்கட்டும்.
- ஏலக்காய் பொடி , வறுத்த முந்திரி மற்றும் கிஸ் மிஸ் சேர்க்கவும்.
- அடுப்பிலிருந்து இறக்கவும்.
- அருமையான, கோதுமை ரவா பாயசம் தயார்.
- சூடாக அல்லது குளிராக பரிமாறவும்.
Notes:
- இங்கு இது ( கர்நாடகாவில் 'கொதி பாயசம்' என்று சொல்வார்கள்) பிரசித்தம். மிகவும் அருமையாக இருக்கும்.
- வேண்டுமானால் வெல்லத்திற்கு பதில் சர்க்கரை சேர்க்கலாம்
- கோதுமை ரவையை வறுத்ததும், பால் மற்றும் தண்ணீர் விட்டு ஒரு பாத்திரத்தில் போட்டு குக்கரில் வைத்துவிடவும். மூன்று விசில் வரை வைத்திருந்து பிறகு எடுத்து வெல்லம் சேர்த்து பாயசம் செய்யவும். இப்படி செய்வதால், நேரம் மிச்சமாவதுடன், ரவை நன்கு வேகும்.
Ingredients:
Method:
Notes:
- நீங்கள் பாயசம் தயாரிக்கும் போதெல்லாம், அவற்றை குறைந்த தீயில் சமைக்கவும். அது சுவையை அதிகரிக்கும், மேலும் அடிபிடிக்காதிருக்க உதவும்.
- பாயசத்திற்கு முழு கிரீம் பால் அல்லது தேங்காய் பால் பயன்படுத்தவும்.
- பாயசம் ‘வெளிர் இளஞ்சிவப்பு நிறத்தில் ’ இருக்க வேண்டும் என்று விரும்பினால் , ஒரு ஸ்பூன் சர்க்கரையை வெறும் வாணலி இல் வறுத்து தண்ணீரில் கரைக்கவும். அதை பாயசத்தில் சேர்க்கவும். இது பயாசத்திற்கு நல்ல நிறத்தையும் நல்ல சுவையையும் தரும்.
- பாயசத்தில் ‘condensed milk’ or ‘shortened milk’ சேர்ப்பது நல்லது.
- பொதுவாக சர்க்கரைக்கு பதிலாக வெல்லம் பயன்படுத்தினால், சர்க்கரையைவிட அதிக அளவு சேர்க்கவும்.
- பாயசத்தை சுவையாக மாற்ற நீங்கள் அதில் முந்திரி பருப்புகள் அல்லது பாதாம் அல்லது ‘வெள்ளரிவிதைகள் ’அல்லது பூசணி விதைகள் சேர்க்கலாம்.
- பாயசத்திற்கு சுவை அதிகரிக்க, ஏலக்காய் பொடி அல்லது குங்குமப்பூ அல்லது ‘ஜாதிகாய்' அல்லது ‘ஜாதி பத்ரி’ ‘பச்சை கற்பூரம்’ அல்லது ஏதாவது எசன்ஸ் சேர்க்கலாம்.
Ingredients:
- 1 தேங்காய்
- 1/2 டேபிள் ஸ்பூன் அரிசி
- 1 கப் சர்க்கரை
- 1/2 ஸ்பூன் ஏலக்காய் தூள்
- 1/4 sp கேசரி பவுடர்
Method:
- தேங்காயை துருவி, அரைத்து, அரிசியுடன் மிக்சியில் அரைக்கவும்.
- குறைவான தண்ணீரில் அரைக்கவும்.
- பாலை வடிகட்டி வைக்கவும்.
- இது முதல் மற்றும் அடர்த்தியான பால்.
- மீண்டும் தேங்காயை மிக்ஸில் போட்டு 1 கப் தண்ணீர் ஊற்றி அதையே செய்யுங்கள்.
- இது 2 வது பால்.
- இப்போது ஒரு ஆழமான வாணலியில் இரண்டாவது பாலை ஊற்றி ஒரு கொதிக்க
- விடுங்கள்.
- சர்க்கரை கலவையை நன்றாக சேர்க்கவும்.
- ஏலக்காய் தூள் மற்றும் கேசரி பவுடர் சேர்க்கவும்.
- மீண்டும் அது ஒரு கொதி கொதிகட்டும்.
- இப்பொழுது முதல் பால் சேர்க்கவும், அது ஜஸ்ட் ஒரு கொதி வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கவும்.
- நீங்கள் விரும்பினால் வறுத்த முந்திரி பருப்பை சேர்க்கலாம்.
- இது மிகவும் சுவையான மற்றும் எளிமையான பயாசம். நாங்கள் இதை 'தேங்கா பால் பாயசம்' என்று சொல்வோம் . நீங்கள் சர்க்கரைக்கு பதிலாக வெல்லம் சேர்க்கலாம்.
- பொதுவாக இதை 'ஆடி' மாதத்தின் 1 ஆம் தேதி செய்வோம். இந்த பாயசத்தை புது மாப்பிள்ளைக்கு ஒரு வெள்ளி டம்ளரில் தருவோம். இது எங்களுக்கு மிகவும் முக்கியமானது.
Notes:
- தேங்காயை அரைக்கும்பொழுது, கொஞ்சம் அரிசி சேர்த்து அரைத்தால் முழு பாலும் எடுக்கவரும் என்று சொல்வார்கள். நான் சில சமயங்களில் அப்படி செய்து இருக்கேன்.
- கேசரி பவுடரும் பதிலாக, குங்குமப்பூ கூட போடலாம்.
Ingredients:
- மிஷின் (மெல்லிசு ) அவல் 1 /2 கப்
- சக்கரை 3/4 கப்
- ஏலப்பொடி 1/3 ஸ்பூன்
- முந்திரி திராக்ஷை 1 டேபிள் ஸ்பூன்
- நெய் 1 டேபிள் ஸ்பூன்
- பால் 1 கப்
Method:
- ஒரு உருளி இல் நெய் விட்டு முந்திரி திராக்ஷை வறுக்கவும்.
- அதிலேயே அவலை போட்டு வறுகக்வும் .
- அவல் நன்கு வறுபட்டதும், பாலை விடவும்.
- வேண்டுமானால் தண்ணீர் சேர்க்கலாம்.
- அவல் நன்கு வெந்ததும் சக்கரை சேர்க்கவும்.
- ஏலப்பொடி போட்டு கிளறி இறக்கவும்.
- அவல் பாயசம் தயார்.
Notes:
- கெட்டி அவல் உபயோகிப்பதானால் அதை பலமுறை நன்கு களைந்து அலசனும்.அப்புறம் பிழிந்து வடியப்போடனும். அப்பவும் வறுக்க முடியாது எனவே மெல்லிசு அவல் தான் பாயசம் மற்றும் கேசரிக்கு சிறந்தது. கெட்டி அவல் கொண்டு, அவல் சக்கரை செய்யலாம், வெல்ல அவல் செயலாம் . மிஷின் அவல் வெள்ளையாக குப்பை இல்லாமல் இருக்கும். கெட்டி அவலில் தவிடு இருக்கும்.
Ingredients:
- சேமியா - 250 கிராம்
- முந்திரி - 2 டேபிள் ஸ்பூன்
- பால் - 1/2 லிட்டர்
- சர்க்கரை - 1 கப்
- நெய் - 1 டேபிள் ஸ்பூன்
- ஏலப்பொடி சிறிதளவு.
Method:
- வாணலியில் நெய் விட்டு, சேமியாவை போட்டு, மிதமான சூட்டில் வறுத்து, சேமியா நிறம் மாறத் துவங்கியதும், அதில் முந்திரியை சேர்த்து, பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும். இதில் பாதி பாலை + கொஞ்சம் தண்ணீர் விட்டு, சேமியாவை நன்கு வேக வைக்கவும்.
- அடுப்பை மிதமான சூட்டிலேயே வைத்து செய்யவும்.
- சேமியா வெந்ததும், சர்க்கரை சேர்த்து, நன்கு கிளறவும்.
- சிறிது நேரத்தில், சர்க்கரை கரைந்து, பொன்னிறமாக மாறத் துவங்கும்.
- கலவை கெட்டியானதும் இன்னும் கொஞ்சம் பால் விட்டு, ஏலப்பொடி போட்டு இறக்கிவிடவும்.
- சுவையான 'சேமியா பாயசம்' தயார்.
Notes:
- உங்களுக்கு தேவையானால், 'மில்க்மெய்ட்' சேர்க்கலாம்.
- ஏலப்பொடிக்கு பதிலாக, ஏதாவது எசன்ஸ் அல்லது குங்குமப்பூ அல்லது ஜாதிக்காய் என உங்கள் விருப்பத்திற்கு சேர்க்கலாம்.
Ingredients:
- பச்சரிசி - அரை கப்
- பயத்தம் பருப்பு, கடலைப்பருப்பு - தலா ஒரு டேபிள்ஸ்பூன்
- நெய் 1/2 கப்
- முந்திரிப் பருப்பு - 10 - 12
- திராக்ஷை 10 -12
- ஏலக்காய் - 5
- பச்சைக் கற்பூரம் ஒரு சிட்டிகை
- பால் - 2 கப் - 2 1/2 கப்
- பொடித்த வெல்லம் - 2 கப்
Method:
- அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து, நெய் விட்டு, முந்திரி திராக்ஷையை வறுத்து, தனியாக எடுத்து வைக்கணும்.
- பிறகு, அதே நெய்யில் அரிசியையும் பருப்பையும் போட்டு கருக்காமல் சிவக்க வறுகணும்.
- பிறகு அதிலேயே கொஞ்சம் .கொஞ்சமே கொஞ்சம் தண்ணீர் மற்றும் பாலைவிட்டு வேகவிடவும்.
- அப்பப்போ கிளறனும்.
- அது பாட்டுக்கு வேகட்டும்.
- இன்னொரு அடுப்பில், ஒரு பாத்திரத்தில் வெல்லத்தைப் போட்டு, அரை கப் தண்ணீர் விட்டு , கரைந்ததும் வடிகட்டி எடுக்கவும்.
- அரிசியும் பருப்பும் நன்கு குழைய வெந்ததும், வெல்ல ஜலத்தை , பால் சேர்த்த அரிசிக் கலவையில் சேர்த்து நன்கு கிளறவும்.
- சிறிது கெட்டியானதும், ஏலக்காயைப் பொடித்துத் தூவிக் கிளறவும். நன்கு சேர்த்துக் கிளறியதும், வறுத்த முந்திரி சேர்த்து இறக்கவும். அவ்வளவுதான், சுடச் சுட அக்கார அடிசில் தயார்.
- அருமையான இனிப்பு இது.
Notes:
- இதை குக்கரிலும் செய்யலாம். பருப்பு அரிசியை வறுத்து, பால் சேர்த்து 2 விசில் வைத்து இறக்கி, ஏலம், முந்திரி சேர்த்துக் ஒரு கொதி விட்டு இறக்கிடலாம். அதுவே போறும்......ஆனால் மேலே சொன்னது போல செய்தால்தான் ரொம்ப சுவையாக இருக்கும்
- மேலும் 'condensed milk ' விட்டும் செய்யாலாம்; சுவை கூடும், அரிசி கொதிக்கும் நேரம் குறையும்.
- அக்கார அடிசில் ...............இது எங்கள் வீடுகள் மற்றும் எங்கள் கோவில்களில் ரொம்பவும் பிரபலமாக பாயசம். ஐயங்கார் புளிக்காச்சல் - புளியோதரை போல த்தான் அக்கார அடிசிலும் குறிப்பாக இது மார்கழி மாதம் 27 ஆம் நாள் செய்யப்படும். நெய்யுண்ணோம் பாலுண்ணோம் என்று பாவை நோன்பைத் துவங்குவோர் நிறைய நெய்யும் பாலும் கலந்து இதை செய்வோம்
-
- பால், நெய், அரிசி, பயத்தம் பருப்பு வெல்லம், ஏலக்காய்த் தூள், பச்சைக் கற்பூரம் இவை கலந்து இது செய்யப்படுகிறது. இந்த பாயசம் செய்யும்போது அரிசி பாலில் வேகவைக்கப்படும். இது சர்க்கரைப் பொங்கல் போல திடமாகவும் இராது. பாயசம் போல திரவமாகவும் இராது. ஆனால் ரொம்ப சூப்பராக அமிருதமாக இருக்கும் செய்து பாருங்களேன் !