Ingredients:
- 125 gms - மேரி பிஸ்கட்
- 50gms - சர்க்கரை
- 30gms - வெண்ணெய்
- வெண்ணிலா எசன்ஸ்
- 1-1.5 கப் பால்
- 5 gms Eno Fruit Plain Salt
Method:
- அடுப்பில் குக்கரை வைத்து, அதில் தண்ணீர் விட்டு சூடாக்கத் தொடங்குங்கள்.
- 125 கிராம் மேரி பிஸ்கட் எடுத்துக் கொள்ளுங்கள்.
- பிஸ்கட்டுகளை மிக்சி கிரைண்டரில் போட்டு பொடித்துக் கொள்ளுங்கள்.
- 50 கிராம் சர்க்கரை சேர்த்து பிஸ்கட்டுடன் ஒரு பொடியாக அரைக்கவும்.
- அடுப்பில் 30 கிராம் வெண்ணெய் உருக்கி, கலவையில் சேர்க்கவும்.
- வெண்ணிலா எசன்ஸ் ஒரு சில துளிகள் கலவையில் சேர்க்கவும்.
- கலவையை இப்போது ஒரு கிண்ணத்தில் மாற்றி மெதுவாக பால் சேர்க்கவும், தக்காளி சாஸ் போல இருக்க வேண்டும் (தோராயமாக 1-1.5 கப் பால் தேவைப்படும்.)
- வட்டமான ஒரு பாத்திரத்தை எடுத்து வெண்ணெய் அல்லது நெய் கொண்டு கிரீஸ் செய்து கொள்ளவும்.
- கலவையில் 5 கிராம் Eno Fruit salt plain உப்பை சேர்த்து கலக்க ஆரம்பிக்கவும்
- நீங்கள் தயாரித்த கேக் கலவையை பாத்திரத்தில் ஊற்றவும்.
- இந்த பாத்திரத்தை குக்கரில் வைத்து 20 நிமிடங்கள் நீராவி இல் வைக்க வேண்டும்.
- சரியாக 20 நிமிடத்த்தில் , அடுப்பை அணைத்து பாத்திரத்தை வெளியே எடுத்து குளிர விடுங்கள்.
- ஒரு தட்டை பாத்திரத்தின் மேல் வைத்து, அதை தட்டுடன் தலைகீழாக்குங்கள்.
- பிறகு மெதுவாக பாத்திரத்தின் மேல ஒரு தட்டு தட்டிவிட்டு, பாத்திரத்தை எடுங்கள்.
- உங்களின் அருமையான கேக் தட்டில் விழுந்திருக்கும்.
- பொறுமையாக துண்டங்கள் போட்டு பரிமாறவும்.
Notes:
- தேவையானால், நீங்கள் இந்த கேக்கை, பிரெஷ் கிரீம் அல்லது dry fruits கொண்டு அலங்கரிக்கலாம். அல்லது வெள்ளை சாக்லெட்டை உருக்கி ஊற்றி மேலே செர்ரி வைக்கலாம் அல்லது டுட்டி புரூட்டி போடலாம்.
- இதில் நீங்கள் கிரீம் பிஸ்கட் பயன்படுத்தினால், சர்க்கரை, வெண்ணெய் மற்றும் எசென்ஸ் ஆகியவற்றின் கலவையைத் தவிர்க்கலாம் .. கிரீம் தானே இனிப்பு சுவை தரும் என்பதால்
Ingredients:
- 200gms - ஆரஞ்சு பிஸ்கட்
- 1-1.5 கப் பால்
- வெண்ணெய் அல்லது நெய்
- 6 gms ENO Fruit plain Salt
Method:
- அடுப்பில் குக்கரை வைத்து, அதில் தண்ணீர் விட்டு சூடாக்கத் தொடங்குங்கள்.
- 200 கிராம் கிரீம் - சாக்கலேட் அல்லது ஆரஞ்சு அல்லது உங்களுக்கு விருப்பமான எந்த flavour ஆனாலும் ஓகே தான் பிஸ்கட் எடுத்துக் கொள்ளுங்கள்.
- பிஸ்கட்டுகளை மிக்சி கிரைண்டரில் போட்டு பொடித்துக் கொள்ளுங்கள்.
- கலவையை இப்போது ஒரு கிண்ணத்தில் மாற்றி மெதுவாக பால் சேர்க்கவும், தக்காளி சாஸ் போல இருக்க வேண்டும் (தோராயமாக 1-1.5 கப் பால் தேவைப்படும்.)
- வட்டமான ஒரு பாத்திரத்தை எடுத்து வெண்ணெய் அல்லது நெய் கொண்டு கிரீஸ் செய்து கொள்ளவும்.
- கலவையில் 6 கிராம் Eno Fruit salt plain உப்பை சேர்த்து கலக்க ஆரம்பிக்கவும்
- நீங்கள் தயாரித்த கேக் கலவையை பாத்திரத்தில் ஊற்றவும்.
- இந்த பாத்திரத்தை குக்கரில் வைத்து 20 நிமிடங்கள் நீராவி இல் வைக்க வேண்டும்.
- சரியாக 20 நிமிடத்த்தில் , அடுப்பை அணைத்து பாத்திரத்தை வெளியே எடுத்து குளிர விடுங்கள்.
- ஒரு தட்டை பாத்திரத்தின் மேல் வைத்து, அதை தட்டுடன் தலைகீழாக்குங்கள்.
- பிறகு மெதுவாக பாத்திரத்தின் மேல ஒரு தட்டு தட்டிவிட்டு, பாத்திரத்தை எடுங்கள்.
- உங்களின் அருமையான கேக் தட்டில் விழுந்திருக்கும்.
- பொறுமையாக துண்டங்கள் போட்டு பரிமாறவும்.
Notes:
- தேவையானால், நீங்கள் இந்த கேக்கை, பிரெஷ் கிரீம் அல்லது dry fruits கொண்டு அலங்கரிக்கலாம். அல்லது வெள்ளை சாக்லெட்டை உருக்கி ஊற்றி மேலே செர்ரி வைக்கலாம் அல்லது டுட்டி புரூட்டி போடலாம்.
- 20 தே நிமிடத்தில், குக்கரில் அருமையான கேக் . ஆமாம் , எந்த பிஸ்கெட்டைக் கொண்டும் செய்யலாம். நான் நிரைய முறை செய்துவிட்டேன் , நீங்களும் செய்து பாருங்கள். நம் குழந்தைகள் அல்லது கணவர் அல்லது குடும்பத்தாருக்கு பிறந்தநாள் அன்று செய்து அசத்தலாம் .
Images:



Ingredients:
- வால்நட் 250 கிராம்
- பேரீச்சை 250 கிராம்
- உலர்ந்த திராட்சை 250 கிராம்
- பாதாம் 250 கிராம்
- வெள்ளரிவிதை அல்லது பூசணி விதை அதாவது Melon seeds 250 கிராம்
- கொஞ்சம் முந்திரி, கொஞ்சம் பிஸ்தா சுவைக்காக ஆனால் தவிர்ப்பது நல்லது புன்னகை
- பொட்டுக் கடலை 250 கிராம்
- வறுத்த வேர்கடலை 250 கிராம்
- கொப்பரை தேங்காய் ஒரு கை பிடி அளவு (தேவையானால் )
- தினை நன்கு வாசம் வரும் வரை வறுத்தது 250 கிராம்
- வெல்லம் 100 கிராம்
- தேன் உருண்டை பிடிக்கத் தேவையான அளவு
Method:
- தினையை வாணலி இல் போட்டு நன்கு வாசனை வரும் வரை வறுத்து தனியே வைத்துக் கொள்ளவும்.
- பிறகு எல்லாவற்றையும் மிக்ஸி இல் ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.
- ஒரு தட்டில் போட்டுக்கொண்டு உருண்டைகளாக பிடிக்கவும்.
- அருமையான, சுவையான, சத்து மிகுந்த 'டிரை புரூட்ஸ் லட்டுகள் ' தயார்.
Notes:
- தித்திப்புக்காக வெல்லத்திற்கு பதில் கல்கண்டு அல்லது பனைவெல்லம் அல்லது பனம் கல்கண்டு எதுவேண்டுமானாலும் சேர்த்துக் கொள்ளலாம்.
- மிக்ஸி இல் ஒரு சுற்றுவதற்கு பதிலாக எல்லாவற்றையும் முடிந்தவற்றை பொடியாய் நறுக்கிக் கொண்டு, தினையை மட்டும் வறுத்து பொடித்துக் கொண்டு மற்றவற்றை கலந்து லட்டுவாக பிடிக்கலாம்.
- குழந்தைகள் , பெரியவர்கள் யார்வேண்டுமானாலும் இதை சாப்பிடலாம்.... இதில் 30 - 35 கிராம் அளவுக்கு லட்டு பிடித்து வைத்துக் கொண்டு, இரண்டு லட்டு காலை சிற்றுண்டியாகச் சாப்பிட்டுவிட்டு அலுவலகம் சென்றால் மதியம் வரை பசிக்காது. மேலே சொன்னவற்றில் எல்லாமே புரோட்டீன் தான். கொழுப்பு என்பது முந்திரி மற்றும் பிஸ்தாவில் இருக்கும் எனவேதான் அதை வேண்டாம் என்றுசொன்னேன் புன்னகை
- இதைப் பவர் லட்டு என்றும் சொல்லலாம் :)
Ingredients:
- கடலை மாவு - 1 கப்
- நெய் - 1 டேபிள் ஸ்பூன்
- சர்க்கரை - 1 கப்
- ஏலக்காய் - 1/2 டீ ஸ்பூன்
- பாதாம் - 10
- முந்திரி - 1 டேபிள் ஸ்பூன்
- உலர் திராட்சை - 1 டேபிள் ஸ்பூன்
Method:
- ஒரு கப் கடலை மாவிற்கு, ஒரு கப் தண்ணிர் சேர்த்து, கட்டி சேராமல் பிசைந்து கொள்ளவும். தோசை மாவு பதத்தில் இருக்க வேண்டும். வாணலியை சூடாக்கி, தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, புகை வரும் அளவிற்கு சூடானதும், மெல்லிய துளைகள் உள்ள சல்லடைக் கரண்டியை எண்ணெய் மேல் பிடித்து, கடலை மாவை ஊற்றவும். மாவு எண்ணெயில் விழுந்த இரண்டு நிமிடங்களில், எடுத்து விட வேண்டும். அதிக நேரம் வைக்க வேண்டாம். இப்படியே, மொத்த மாவையும், பூந்தியாக பொரித்து எடுக்கவும்.
- பாத்திரத்தில், ஒரு கப் சர்க்கரைக்கு, ஒரு கப் தண்ணீர் சேர்த்து, சர்க்கரை கரையும் வரை, காய்ச்சவும். அடுப்பை மிதமான சூட்டில் வைத்து, இதில், பூந்தியைப் போட்டு, சர்க்கரை பாகும், பூந்தியும் கெட்டியாகும் வரை பக்குவமாக கிளறவும். இதில், நெய், ஏலக்காய் பொடி போட்டு, அடுப்பை அணைத்து, ஆற விடவும்.
- ஆறியதும், நெய்யில் வறுத்த முந்திரி, உலர் திராட்சை, நீரில் ஊற வைத்து உரித்த பாதாம் சேர்த்து, உருண்டைகளாகப் பிடிக்கவும்.
Ingredients:
- கோதுமை ரவை - 1/2 கப் ( சன்னமானது )
- சர்க்கரை - 3/4 கப்
- நெய் - 4 டேபிள் ஸ்பூன்
- ஏலக்காய் பொடி - 1/2 டீ ஸ்பூன்
- முந்திரி - 1டேபிள் ஸ்பூன்
- 'கிஸ் மிஸ்' - 1 டேபிள் ஸ்பூன்
- பால் 1 /2 கப்
Method:
- வாணலியில், ஒரு டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி, கிஸ்மிஸ் மற்றும் முந்திரியை வறுத்துக் கொள்ளவும்.
- தனியே எடுத்து வைக்கவும்.
- மீதி இருக்கும் நெய்யில், கோதுமை ரவை சேர்த்து, மிதமான சூட்டில், நன்கு வாசனை வரும் வரை வறுக்கவும்.
- கருகாமல் வறுக்க வேண்டும்.
- அதில் ஒரு கப் தண்ணீர் மற்றும் அரை கப் பால் விட்டு, நன்கு கிளறி, மூடி வைத்து வேக விடவும்.
- நடு நடுவில் கிளறி விடவும்.
- வெந்ததும், சர்க்கரை சேர்த்து, கரையும் வரை கிளறவும்.
- அதன்பின், மூடி வைத்து, இன்னொரு ஐந்து நிமிடங்கள் வேக வைக்கவும்.
- அதில் ஏலக்காய் பொடி சேர்த்து, நெய்யில் வறுத்த முந்திரி, உலர் திராட்சையை போட்டு, மீதி உள்ள நெய்யை ஊற்றி , நன்கு கலக்கவும்.
- அவ்வளவுதான், கோதுமை ரவை அல்வா தயார்.
Notes:
- இதையே வெல்லம் போட்டும் செய்யலாம்.
Ingredients:
- வால்நட்
- பேரீச்சை உலர்ந்த திராட்சை
- பாதாம் எல்லாம் ஒவ்வொரு ஒரு கை பிடி அளவு
- கொஞ்சம் முந்திரி
- பொட்டுக் கடலை
- வேர்கடலை
- கொப்பரை தேங்காய் ஒரு கை பிடி அளவு
- ஓட்ஸ் இரண்டு கை பிடி அளவு
- கல்கண்டு இரண்டிலிருந்து மூன்று கை பிடி அளவு
Method:
- ஓட்ஸை வாணலி இல் சிறிது சூடு படுத்திக்கொள்ளவும்.
- அதாவது லேசாக வறுத்துக் கொள்ளவும்.
- பிறகு எல்லாவற்றையும் மிக்ஸி இல் ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.
- ஒரு தட்டில் போட்டுக்கொண்டு உருண்டைகளாக பிடிக்கவும்.
- அருமையான, சுவையான, சத்து மிகுந்த 'டிரை புரூட்ஸ் லட்டுகள் ' தயார்.
Notes:
- தித்திப்புக்காக கல்கண்டு அல்லது வெல்லம் அல்லது பனைவெல்லம் அல்லது பனம் கல்கண்டு எதுவேண்டுமானாலும் சேர்த்துக் கொள்ளலாம்.
- மிக்ஸி இல் ஒரு சுற்றுவதற்கு பதிலாக எல்லாவற்றையும் முடிந்தவற்றை பொடியாய் நறுக்கிக் கொண்டு, ஓட்ஸை மட்டும் வறுத்து பொடித்துக் கொண்டு மற்றவற்றை கலந்து லட்டுவாக பிடிக்கலாம்.
- தேன் வேண்டுமானாலும் சுவைக்காக சேர்க்கலாம்.
Images:
Ingredients:
- கெட்டி அவல் ஒரு கப்
- சர்க்கரை முக்கால் கப்
- ஏலக்காய் பொடி கால் டீ ஸ்பூன்
- நெய் அரை முதல் முக்கால் கப்
- உடைத்த முந்திரி ஒரு டேபிள் ஸ்பூன்
Method:
- அவலை சுத்தம் செய்து கொள்ளவும்.
- வறட்டு வாணலி இல் நன்கு வறுக்கவும்.
- கொஞ்சம் வறுபட ஆரம்பிக்கும் போது, நெய் ஒரு ஸ்பூன் விட்டு வறுக்கவும்.
- நன்கு பொரிந்து வறுபடும்.
- தேவையானால் இன்னும் ஒரு ஸ்பூன் விடவும்.
- காந்தாமல் நன்கு வறுக்கவும்.
- வறுத்ததை ஒரு தட்டில் கொட்டி ஆறவிடவும்.
- அவல் நன்கு ஆறினதும், சர்க்கரை, ஏலப்பொடி மற்றும் அவல் எல்லாவற்றையும் மிக்சி இல்போட்டு நன்கு பொடிக்கவும் .
- பொடித்த அவலை ஒரு பேசினில் போட்டுக்கொண்டு, வாணலி இல் நெய் விட்டு முந்திரியை வறுத்து இதன் மேல் கொட்டவும்.
- நன்கு கலந்து லட்டுகளாக பிடிக்கவும்.
- அவ்வளவுதான் சுவையான 'அவல் லட்டுகள்' தயார்.
- செய்வதும் சுலபம் உண்பதும் சுலபம்.
Images:
Ingredients:
- கெட்டி அவல் 1 கப்
- சக்கரை 3/4 கப்
- ஏலப்பொடி 1/3 ஸ்பூன்
- நெய் 1 டேபிள் ஸ்பூன்
- பால் 1 கப்
Method:
- அவலை சுத்தம் செய்து கொள்ளவும்.
- வறட்டு வாணலி இல் நன்கு வறுக்கவும்.
- கொஞ்சம் வறுபட ஆரம்பிக்கும் போது, நெய் ஒரு ஸ்பூன் விட்டு வறுக்கவும்.
- நன்கு பொரிந்து வறுபடும்.
- தேவையானால் இன்னும் ஒரு ஸ்பூன் விடவும்.
- காந்தாமல் நன்கு வறுக்கவும்.
- வறுத்ததை ஒரு தட்டில் கொட்டி ஆறவிடவும்.
- அவல் நன்கு ஆறினதும், சர்க்கரை, ஏலப்பொடி மற்றும் அவல் எல்லாவற்றையும் மிக்சி இல்போட்டு நன்கு பொடிக்கவும் .
- பொடித்த அவலை ஒரு பேசினில் போட்டுக்கொண்டு அதன் மேல் சூடான பாலைவிடவும்.
- அப்படியே ஒரு அரைமணி வைத்திருக்கவும்.
- நன்கு ஆறினதும் வில்லைகள் போடவும்.
- நிஜமாக சொல்கிறேன் மிகவும் அருமையாக இருக்கும்.
- பால் இருப்பதால் பிரிட்ஜில் வைத்து உபயோகிக்கவும்.
- செய்து பார்த்து எழுதவும்.
Images:

Ingredients:
- 1 டின் மில்க் மெய்டு
- 1 ஸ்பூன் தயிர்
Method:
- மில்க் மெய்டு டின் ஐ திறந்து ஒரு மைக்ரோவே வேவ் ஓவன் பாத்திரத்தில் விடவும்.
- தயிர் சேர்க்கவும்.
- நன்கு கலக்கவும்.
- ஓவனில் வைத்து 'high' இல் 2 நிமிடம் வைக்கவும்.
- வெளியே எடுத்து கிளறவும்.
- மீண்டும் 2 நிமிடம் வைக்கவும்.
- வெளியே எடுத்து கிளறவும்.
- மீண்டும் 1 நிமிடம் வைக்கவும்.
- கிளறி சுவை பார்க்கவும்.
- அருமையான திரட்டுப்பால் ரெடி.
Notes:
- உங்களின் ஓவனின் திறனை பொறுத்து நிமிடங்கள் மறுபடலாம். என்றாலும் 6 -7 நிமிடங்களில் செய்து விடலாம் சாப்பிட விருந்தாளி யை உக்கார வைத்துவிட்டு மோர் சாதம் வருவதர்க்குள் ஸ்வீட் ரெடி பண்ணிவிடலாம்
Images:
Ingredients:
- பால் – 2 லிட்டர் (ஃபுல் கிரீம் மில்க் )
- சர்க்கரை – சுவைக்கேற்ப
- குங்குமப்பூ – சிறிதளவு
- ஊற வைத்து தோல் நீக்கிய பாதாம்பருப்பு - ஐந்து - தேவையானால்
- முந்திரிப்பருப்பு – ஐந்து - தேவையானால்
Method:
- ஒரு கனமான உருளியில் பாலை விட்டு அடுப்பில் வைத்து கிளறிக் கொண்டிருக்க வேண்டும்.
- ஒரு கரண்டி (அ) ஸ்பூனால் பால் மேலே வரும் ஆடையை எடுத்து ஒரு பாத்திரத்தில் சேகரித்துக் கொண்டு வரவும்.
- பாதிப் பால் சுண்டும்வரை கொதிக்க வைக்க வேண்டும்.
- குறுக்கிய பாலுடன் சர்க்கரையும் சேர்த்து, மட்டான தழலில் வைக்கவேண்டும்.
- நான்கு கொதித்தது மீண்டும் கூறுகினதும், பாலில் கரைத்த குங்குமப்பூவைச் சேர்த்துக் கலக்கி ஆடையையும் சேர்த்து நன்கு கலக்கி இறக்கவும்.
- நன்கு ஆறினதும் பரிமாறலாம் அல்லது ஃபிரிஜ் இல் வைத்து பிறகு பரிமாறலாம்.
- குளிர்ச்சியாக கப்புகளில் எடுத்துக் கொடுக்கும்போது பாதம் மற்றும் முந்திரியை மெல்லியதாக சீவி போட்டுக்கொடுத்தல் ........ அமிர்தமாய் இனிக்கும்
Ingredients:
- கடலை மாவு 1 கப்
- சர்க்கரை 2 கப்
- நெய் 2 கப்
- ஏலப்பொடி கொஞ்சம்
- தேவையானால் உடைத்த பாதாம் முந்திரி பருப்புகள் 1 டீ ஸ்பூன்
Method:
- முதலில் ஒரு தட்டில் நெய் தடவி வைத்துகொள்ளவும்.
- ஒரு வாணலி இல் 2 கப் சர்க்கரை மற்றும் 1 1/2 கப் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.
- ஏலப் பொடி போடவும்.
- 1 கம்பி பதம் வரும் வரை கொதிக்கட்டும்.
- அதற்குள், மற்றும் ஒரு வாணலி இல் அல்லது ஆழமான உருளி இல் 1 கப் நெய்விட்டு கடலை மாவை வறுக்கவும்.
- நெய்விட்டதும் அது 'liquid ' ஆக ஆகிவிடும்...........அப்படியே அடுப்பை 'சிம்' இல் வைத்து கை விடாமல் கலக்கிக்கொண்டே இருக்கவும்.
- கொஞ்சம் பிரவுன் ஆகும் வரை இப்படி வறுக்கணும்.
- பக்கத்தில் கொதித்துக் கொண்டிருக்கும் சர்க்கரை பாகை எடுத்து இந்த கடலை மாவில் விடவும்.
- பொங்கி வரும்...பத்திரம்.............நன்கு கிளறவும்.
- பொடித்து வைத்துள்ள பருப்புகளை போடவும்.
- மீதி உள்ள நெய்யையும் கொட்டி கிளறவும்.
- நுரைத்து , நன்கு சுருண்டு வரும்போது ஏற்கனவே நெய் தடவி வைத்துள்ள தட்டில் கொட்டவும்.
- கொஞ்சம் ஆறினதும் துண்டம் போடலாம்.
- 'சூப்பரா ஆக' இருக்கும்.............
Images:

Ingredients:
- 1 கப் மைதா
- பேக்கிங் சோடா 1/4 டீ ஸ்பூன்
- சமையல் சோடா ஒரு சிட்டிகை
- சர்க்கரை 1/2 ஸ்பூன் (பொடிக்கவும் )
- தயிர் 1 டேபிள் ஸ்பூன்
- நெய் - உருக்கியது - 1/8 கப்
- வாசனை இல்லாத எண்ணெய் - 1/2 டீ ஸ்பூன்
- சர்க்கரை பாகு வைக்க :
- 1 1/2 கப் சர்க்கரை
- 1 1/2 கப் தண்ணீர்
- ஏலப்பொடி கொஞ்சம் அல்லது ரோஸ் எசன்ஸ்
- பொறிக்க : எண்ணெய்
Method:
- முதலில் மைதாவை சோடா உப்பு மற்றும் பேகிங் சோடா போட்டு சலிக்கவும்.
- ஒரு பேசினில் சலித்ததை போடவும்.
- வேறு ஒரு சின்ன கிண்ணி இல் தயிர் மற்றும் சர்க்கரையை போட்டு கலக்கவும்.
- மாவில் நெய் மற்றும் எண்ணையை விட்டு நன்கு கலக்கவும்.
- நன்கு கலந்ததும் அது பார்க்க 'பிரட் துகள்கள்' போல இருக்கும்.
- அப்படி இருந்தால் பதம் சரி என்று அர்த்தம்.
- இப்போ கிண்ணி இல் இருக்கும் தயிர் மற்றும் சர்க்கரையை நன்கு கரைத்து, மாவில் விடவும்.
- 'மெத்' என்று பிசையவும்.
- தேவையானால்......தேவையானால் துளி ... துளியே துளி தண்ணீர் விட்டுக்கலாம்.
- அவ்வளவு தான் இதை அப்படியே சுமார் 1 மணிநேரம் , மூடி வைத்து விடவும்.
- 1 மணி நேரத்துக்கு பிறகு ஒரு உருளி அல்லது வாணலி இல் தண்ணீர் விட்டு சர்க்கரையை போடவும்.
- அப்பப்போ கிளறி விடவும்.
- 'ஒரு கம்பி 'பாகு வரும் வரை கொதிக்க விடவும்.
- ஏலப்பொடி போட்டு இறக்கவும்.
- மற்றும் ஒரு அடுப்பில் எண்ணெய் வைக்கவும்.
- அடுப்பை 'சிம்' இல் வைக்கவும்.
- பிறகு மாவை எடுத்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டவும்.
- உள்ளங்கை இல் வைத்து கட்டை விரலால் உருண்டை இன் நடுவில் அழுத்தி பள்ளம் போல செய்யவும்.
- இது போல செய்வதால் , பாதுஷாக்கள் நன்கு பொறியும். எனவே இதை மறக்க வேண்டாம்.
- இதே போல மற்ற எல்லா மாவையும் செய்யவும்.
- நான் கொடுத்துள்ள அளவிற்கு 15 'மினி பாதுஷாக்கள்' வரும்.
- இப்போ வாணலி இல் எண்ணெய்விட்டு சில நிமிடங்களிலேயே , அது ரொம்ப சூடாவதர்க்குள் பாதுஷாக்களை போடணும்.
- அதாவது, எண்ணெய் இல் ஒரு துளி மாவை போட்டால் அது 1 நிமிடம் கழித்துத்தான் மேலே வரணும்.
- உடனே மேலே வந்தால் எண்ணெய் இன் சூடு அதிகம் என்று அர்த்தம்.
- அவசரப்படாமல் காத்திருக்கவும்.
- 2 -3 நிமிடங்கள் கழித்து திருப்பி விடவும்.
- நன்கு பவுன் கலர் வந்ததும் எடுத்து பாகில் போடவும்.
- அவ்வளவு தான் சூப்பர் பாதுஷாக்கள் ரெடி.
- கொஞ்சம் ஆறினதும் சாப்பிடலாம்.
- விண்டு பார்த்தால் உள்ளே 'லேயர் லேயராக' இருக்கணும்.
- அது தான் பதம்.
- மேலே சர்க்கரை பூத்துக்கொண்டு இருக்கும்.
- ஆனால் அதுக்கு ஓர் 12 மணி நேரம் காத்திருக்கணும் ! ரிலாக்ஸ்
- ஆனால் உடனே சாப்பிட்டு பார்க்கலாம் :)
Notes:
- மேலே சர்க்கரை பூத்துக்கொண்டு வரவேண்டாம் என்றால், சர்க்கரை பாகில் 1/2 ஸ்பூன் எலுமிச்சை சாறு விடணும்.
- இதற்கான படங்களை கிழே கொடுத்துள்ளேன் ; பார்க்கவும்.
- படிக்கத்தான் இவ்வளவு பெரிசா இருக்கே தவிர 10 நிமிஷத்தில் செய்து விடலாம்
Images:



Ingredients:
- Condensed milk 400 gms tin 1
- கடலை மாவு 3 கப்
- பிஸ்தா, பாதாம் , முந்திரி பொடித்து வைத்தது 3 டேபிள் ஸ்பூன்
- நெய் 1 கப்
- பால் 2 டேபிள் ஸ்பூன்
Method:
- வாணலி இல் நெய்விட்டு கடலை மாவை கருகாமல் வறுக்கவும்.
- இதற்கு ஒரு 10 -12 நிமிடங்கள் ஆகும்.
- பொறுமையாக வறுக்கணும்.
- அப்புறம் ஈசிதான். புன்னகை
- அடுப்பை சின்னதாக்கி விட்டு, condensed மில்க் ஐ விட்டு நன்கு கிளறவும்.
- கைவிடாமல் கிளறவும், அது மொத்தமாய், சுருண்டு வரும் வரை கிளறவும்.
- நெய்தடவிய தட்டில் கொட்டவும்.
- சமப்படுத்தவும்.
- இப்போ உடைத்த பருப்புகளை அதன் மீது தூவி அலங்கரிக்கவும்.
- கொஞ்சம் ஆறினதும் வில்லைகள் போடலாம்.
- அவ்வளவு தான் 'மோஹன் தால்' ரெடி.
- வாயில் கரையும் அற்புதமான ஸ்வீட் ரெடி.
Ingredients:
- 2 கப் மைதா அல்லது all purpose flour
- 3 கப் சர்க்கரை
- 1 கப் வெண்ணை
- 1 கப் வால்நட் ( பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும் )
- 3 கப் வெந்நீர்
Method:
- ஒரு அடிகனமான வாணலி அல்லது உருளி இல் 1 டேபிள் ஸ்பூன் வெண்ணை போடவும்.
- அதிலேயே சர்க்கரையும் போடவும்.
- மிதமான தீ இல் அடுப்பை வைக்கவும்.
- வெண்ணை உருகி சர்க்கரையும் உருகட்டும்.
- அது உருகி கொஞ்சம் பிரவுன் கலரில் குழம்பாக வரும் இதை 'காரமெல்' என்போம்.
- அப்படி வந்ததும், அதை கிளரிக்கொண்டே, வெந்நீரை அதில் விடவும்.
- நன்கு கலக்கவும்.
- அதில் மொத்த 'caramel ' ம் கரைந்து பிரவுன் கலர் தண்ணீர் கிடைக்கும்.
- அதை அப்படியே வைத்துக்கொள்ளவும்.
- மற்றுமொரு வாணலி இல் பாக்கி வெண்ணை போட்டு அது கொஞ்சம் உருகியதுமே , மைதாவை போட்டு நன்கு பொரிக்கவும்.
- கருகாமல் பார்த்துக்கொள்ளனும்.புன்னகை
- நல்ல 'பவுன் கலரில் பொரிந்ததும், பொடித்து வைத்துள்ள வாழ்நாட்களை போட்டு கிளறவும்.
- அவை நன்கு கலந்ததும், இப்போ எடுத்து வைத்துள்ள 'caramel water ' ஐ அதில் விட்டு, கிளறவும்.
- கட்டி தட்டாமல் நன்கு கிளறவும்.
- மொத்த தண்ணீரும் உ றிந்து கொண்டு 'ஹல்வா' பதத்துக்கு வரும்வரை கிளறவும்.
- நெய்தடவி வைத்துள்ள தட்டில் கொட்டவும்.
- தேவையானால் , கொஞ்சம் ஆறினதும், கடைகள் போல வில்லைகள் போடவும்.
- அருமையான ' வால்நட் ஹல்வா ' தயார்.
Ingredients:
- பயத்தம் பருப்பு 1 கப்
- நெய் 1 கப்
- சர்க்கரை 1 கப்
- பால் 1/4 கப்
- சர்க்கரை போடாத கோவா 3/4 கப்
- குங்குமப்பூ - 10 12 இதழ்கள்
- முந்திரி, பாதாம் சீவியது 1 டேபிள் ஸ்பூன்
Method:
- பயத்தம் பருப்பை நன்கு களைந்து, 1 - 1 1/2 மணி நேரம் ஊறவைக்கவும்.
- கொஞ்சம் 'கர கர'பாக அரைக்கவும்.
- வாணலி இல் நெய்விட்டு உருகியதும் அரைத்து வைத்ததை அதில் விட்டு கிளறவும்.அடுப்பை தணித்து வைத்து நன்கு கிளறனும்.
- பக்கத்து அடுப்பில் மட்டும் ஒரு உருளி இல் சர்க்கரை மற்றும் தண்ணீர் விட்டு ஒற்றை கம்பி பாகு வைக்கவும்.
- பாலை சுடவைத்து அதில் குங்குமபூவை கரைத்து வைக்கவும்.
- தால் - நல்லா பொரிந்து கொஞ்சம் 'பிரவுன்' கலரில் வரும்போது அதில் சர்க்கரை பாகை விட்டு கிளறவும்.
- குங்குமப்பூவை கரைத்து வைத்துள்ள பாலையும் விடவும்.நன்கு கிளறவும்.
- எல்லாமாக சேர்ந்து 'ஹல்வா' பதத்துக்கு வரும் போது கோவாவை உதிர்த்துப்போட்டு கிளறி இறக்கவும்.
- மேலே சீவிவைத்துள்ள முந்திரி பாதாமை தூவி சூடாக பரிமாறவும்.
- ரொம்ப அருமையாக இருக்கும்
Ingredients:
- 4 1 / 4 கப் பால் ( கோவா செய்வதற்கு ) அல்லது சர்க்கரை இல்லாத கோவா ஒன்னே கால் கப், துருவி எடுத்துக்கொள்ளவும்
- 1 / 2cup முந்திரி ( முந்திரியை ஊறவைத்து, கொஞ்சம் பாலில் அரைத்து வைக்கவும் )
- 1 கப் சர்க்கரை
- 1 டேபிள்ஸ்பூன் நெய்
- சிறிதளவு ஏலப்பொடி
- பால் சிறிதளவு
- 2 ஸ்பூன் பாதாம் தூளாக்கினது
- மேலே தூவ:
- ரோஜா இதழ்கள் கொஞ்சம்
Method:
- ஒரு அடிகனமான பாத்திரத்தில், முந்திரி விழுது போட்டு அடுப்பில் வைக்கவும்.
- அடுப்பை நிதானமாக எரியவிடவும், கிளறிக்கொண்டே இருக்கவும்.
- சிறிது சிறிதாக துருவின கோவாவை போட்டு கிளறவும்.
- கொஞ்சம் இறுகினதும் , சர்க்கரை போட்டு கிளறவும்.
- நன்கு பந்து போல் சுருண்டுவரும்போது ஏலப்பொடி மற்றும் பாதாம் (தூளாக்கினது )தூவி இறக்கவும்.
- ஒரு பாத்திரத்தில் எடுத்து வைக்கவும் மேலே ரோஜா இதழ்கள் தூவவும்.
- முந்திரி ஹல்வா தயார்.
- சூடாகவோ ஆறினதுமோ பரிமாறலாம்.
- கோவா செய்ய: பாலை ஒரு அடிகனமான பாத்திரத்தில் விட்டு அடுப்பில் வைக்கவும். பொங்காமல் பார்த்துக்கொள்ளவும். அது அப்படியே கொதித்து கொதித்து குறைந்து 'கோவாவாக' மாறும். அதுவரை அப்ப அப்ப கிளறிவிட்டுக்கொண்டே இருக்கவும்.
- ஒரு லிட்டர் பாலுக்கு சுமார் கால் கிலோ முதல் முன்னூறு கிராம் வரை கோவா கிடைக்கும்.
Ingredients:
- 250 கிராம் பாதாம் ( பாதாமை ஊறவைத்து, கொஞ்சம் பாலில் அரைத்து வைக்கவும் )
- 200 கிராம் சர்க்கரை
- 250 கிராம் நெய்
- 3 கப் பால்
- சிறிதளவு ஏலப்பொடி
- 150 கிராம் ரவை
- 2 ஸ்பூன் பிஸ்தா தூளாக்கினது
- இரண்டு ஷீட் 'சில்வர் ரேக் ' (தேவையானால் )
Method:
- பாதாமை ஒரு இரண்டு மணிநேரம் ஊறவைத்து தோலை உரித்து ரவை போல மிக்சி இல் உடைத்துக்கொள்ளவும்.
- ஒரு அடிகனமான பாத்திரத்தில், நெய்விட்டு ரவையை போட்டு வறுக்கவும்.
- பிறகு பாதாம் ரவையை போட்டு வறுக்கவும்.
- கொஞ்சம் சிவந்ததும், பால் சர்க்கரை போட்டு கிளறவும்.
- அடுப்பை நிதானமாக எரியவிடவும், கிளறிக்கொண்டே இருக்கவும்.
- சிறிது சிறிதாக துருவின கோவாவை போட்டு கிளறவும்.
- நன்கு பந்து போல் சுருண்டுவரும்போது ஏலப்பொடி மற்றும் பிஸ்தா துண்டுகள் தூவவும்.
- நெய் பிரிந்து வரும்போது இறக்கி நெய்தடவிய தட்டில் கொட்டவும்.
- மேலே 'சில்வர் ரேக் ' ஒட்டவும்.
- சூடாகவோ ஆறினதுமோ பரிமாறலாம்.
Ingredients:
- 4 1 / 4 கப் பால் ( கோவா செய்வதற்கு ) அல்லது சர்க்கரை இல்லாத கோவா ஒன்னே கால் கப், துருவி எடுத்துக்கொள்ளவும்
- 1 / 2cup பாதாம் ( பாதாமை ஊறவைத்து, கொஞ்சம் பாலில் அரைத்து வைக்கவும் )
- 1 கப் சர்க்கரை
- 1 டேபிள்ஸ்பூன் நெய்
- சிறிதளவு ஏலப்பொடி
- பால் சிறிதளவு
- 2 ஸ்பூன் பாதாம் தூளாக்கினது
- மேலே தூவ:
- ரோஜா இதழ்கள் கொஞ்சம்
Method:
- ஒரு அடிகனமான பாத்திரத்தில், பாதாம் விழுது போட்டு அடுப்பில் வைக்கவும்.
- அடுப்பை நிதானமாக எரியவிடவும், கிளறிக்கொண்டே இருக்கவும்.
- சிறிது சிறிதாக துருவின கோவாவை போட்டு கிளறவும்.
- கொஞ்சம் இறுகினதும் , சர்க்கரை போட்டு கிளறவும்.
- நன்கு பந்து போல் சுருண்டுவரும்போது ஏலப்பொடி மற்றும் பாதாம் (தூளாக்கினது )தூவி இறக்கவும்.
- ஒரு பாத்திரத்தில் எடுத்து வைக்கவும் மேலே ரோஜா இதழ்கள் தூவவும்.
- பாதாம் ஹல்வா ரெடி.
- சூடாகவோ ஆறினதுமோ பரிமாறலாம்.
- கோவா செய்ய: பாலை ஒரு அடிகனமான பாத்திரத்தில் விட்டு அடுப்பில் வைக்கவும். பொங்காமல் பார்த்துக்கொள்ளவும். அது அப்படியே கொதித்து கொதித்து குறைந்து 'கோவாவாக' மாறும். அதுவரை அப்ப அப்ப கிளறிவிட்டுக்கொண்டே இருக்கவும்.
- ஒரு லிட்டர் பாலுக்கு சுமார் கால் கிலோ முதல் முன்னூறு கிராம் வரை கோவா கிடைக்கும்.
Ingredients:
- பூரணம் செய்ய :
- பாசி பயறு அல்லது பாசிப்பருப்பு 100 கிராம்.
- முந்திரி பருப்பு 100 கிராம்.
- வெல்லம் 100 கிராம்
- ஏலக்காய் 10
- தேங்காய் துருவல் 1 கப்
- வெள்ளை எள்ளு 50 கிராம்
- மேல் மாவு செய்ய :
- பச்சை அரிசி மாவு 1 /4 கப் (களைந்து உலர்த்தின அரிசி இல் செய்த மாவு என்றால் நல்லது )
- மைதா 3 /4 cup
- மஞ்சள் கலர் 1 ,சிட்டிகை
- சோடா உப்பு சிறிது
- எண்ணெய் பொரிக்க
Method:
- பச்சை அரிசி மற்றும் மைதா மாவை சலித்து மஞ்சள் கலர், சோடா உப்பு சேர்த்து கெட்டியாக , அதாவது இட்லி மாவு பதத்திற்கு
- தண்ணீர் சேர்த்து கரைத்து வைத்து கொள்ளவும்.
- பூரணத்திற்கு பாசி பயறை நன்றாக நெய் அல்லது எண்ணெய் விட்டு வறுத்துக் கொள்ளவும், ஆறிய பின் ரவை போல் பொடித்து
- கொள்ளவும்.
- பிறகு எள்ளு மற்றும் தேங்காய் துருவலை தனி தனியாக வறுக்கவும்.நல்ல பிரவுன் கலர் வரும் வரை தேங்காவை வறுக்கவும்.
- 'பட பட' வென பொறியும் வரை எள்ளை வறுக்கவும்.
- முந்திரி யை ஒரு சுட்டறு மிக்சி இல் பொடிக்கவும். ஏலம் பொடிக்கவும்.
- ஒரு வாணலி இல் பொடித்த வெல்லம் போட்டு சிறிது தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும்.
- வெல்லம் கரைந்ததும் அதை வடி கட்டி கொள்ளவும்.
- மீண்டும் அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்.
- இளம் பாகு அதாவது ஒரு கிண்ணி இல் தண்ணீர் வைத்துக்கொண்டு பாகில் கொஞ்சம் எடுத்து அதில் விடவும். பிறகு கையால் உருட்டி பார்க்கவும் , உருட்ட வந்தால் அது இளம் பாகு. அப்படி பாகு காய்ந்ததும்,
- அடுப்பை சின்ன தாக்கி, பொடித்த அனைத்தையும் கொட்டி கிளறவும்.
- கொஞ்சம் ஆறினதும் கெட்டியாக பிசைந்து கொள்ளவும் .
- மாவு கெட்டியாக, சிறய சிறிய உருண்டைகளாக பிடிக்கும் பதம் இருக்கவேண்டும்.
- தேவைப்பட்டால் கொஞ்சம் மாவை சேர்த்து கொள்ளலாம்.
- பிசைந்த மாவை சிறு சிறு உருளைகளாக உருட்டவும்.
- மூன்று மூன்று உருண்டைகளாக சேர்த்து தயாராக வைத்துக்கொள்ளவும்.
- ஒரு வாணலி இல் எண்ணெய் விட்டு , உருண்டைகளை கரைத்து வைத்துள்ள மைதா ,அரிசி மாவு கலந்த மாவில் முக்கி
- கொதிக்கும் எண்ணையில் போட்டு பொறித்து எடுக்கவும்.
- நல்ல பவுன் கலரில் எடுக்கவும்.
- சுவையான முந்திரி கொத்து தயார்
- இதை நிறைய நாட்கள் வைத்து சாப்பிடலாம்.சீக்கிரம் கெடாது.
Ingredients:
- ஒரு கப் கடலை மாவு
- இரண்டு கப் நெய்
- இரண்டு கப் சர்க்கரை
- வேண்டுமானால் அரை ஸ்பூன் ஏலப்பொடி
Method:
- ஒரு ஆழமான உருளி இல் ஒன்றரை கப் தண்ணீர் விட்டு , சர்க்கரையை போடவும்.
- அது கொதித்து ஒரு இழை பாகாக வரும்போது ( கொதித்துக்கொண்டு இருக்கும் பாகை ஆள் காட்டி விரலால் தொட்டுக்கொண்டு அதை கட்டை விரலால் தொட்டால் நடுவில் ஒரு நூல் போல வரும் அது வே கம்பி பதம் ) அளந்து வைத்திருக்கும் கடலை மாவை ஒவ்வொரு டேபிள் ஸ்பூன் ஆக பாகில் தூவி கிளறனும்.
- ஒரு ஸ்பூன் நெய் விடனும்.
- இப்படி மொத்த மாவும் நெய்யும் முடியும் வரை போட்டு போட்டு கிளறனும்.
- மொத்தமாக கொட்டக் கூடாது
- மாவு கட்டி இல்லாமல் இருப்பது முக்கியம்.
- ஒரு கட்டத்தில் உருளி இல் இருக்கும் மைசூர் பாகு இல் நெய் பிரிந்து வர ஆரம்பிக்கும்.
- மேலும் நிறைய ஓட்டைகள் இருப்பது போல தோன்ற ஆரம்பிக்கும்.
- இப்போது அடுப்பை சின்னதாக்கி விட்டு ஒரு தட்டில் நெய் கொஞ்சம் தடவவும்.
- மைசூர் பாகை அதில் கொட்டவும்.
- ஒரு பத்து நிமிடம் ஆறினதும் துண்டங்கள் போடலாம்.
Notes:
- மைசூர் பாகு மெத் என்று கிருஷ்ணா ஸ்வீட்ஸ் போல வேண்டுமானால், சர்க்கரை யை ஒன்றரை கப் எடுத்துக்கொள்ளுங்கள் . மற்றும் கிளறும்போது ஒரு சிட்டிகை சோடா உப்பும் சேர்த்துக்கொள்ளுங்கள்.சரியா?