Showing posts with label மாலைநேர சிற்றுண்டிகள். Show all posts
Showing posts with label மாலைநேர சிற்றுண்டிகள். Show all posts

Friday, October 9, 2020

மங்களூர் போண்டா

Ingredients:
  • மைதா மாவு - 1 கப்,
  • சற்று புளித்த தயிர் - அரை கப் - ஒரு கப்
  • சோடா உப்பு - ஒரு சிட்டிகை,
  • பெருங்காயம் - அரை டீஸ்பூன்,
  • சீரகம் - ஒரு ஸ்பூன்
  • மிளகு - ஒரு ஸ்பூன் ( தேவையானால் )
  • கறிவேப்பிலை - சிறிது,
  • உப்பு - ருசிக்கேற்ப,
  • எண்ணெய் - தேவையான அளவு.


Method:
  • ஒரு பாத்திரத்தில் மைதா மாவை போட்டு அதில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் விட்டு நன்கு கலக்கவும்.
  • பிறகு அத்துடன் தயிர், உப்பு, சோடா உப்பு, சீரகம், மிளகு, பெருங்காயம், கறிவேப்பிலை எல்லாம் சேர்த்து நன்கு கலக்கவும்.
  • தேவையானால் சிறிதளவு தண்ணீர் சேர்த்து சற்று கெட்டியாக கரைக்கவும். கை இல் எடுத்து உருட்டிப்போடும் அளவிற்கு தளர்வான மாவு நமக்குத் தேவை. நமக்கு பதம் முக்கியம், மாவு இட்லி மாவைவிட கொஞ்சம் கெட்டியாக இருக்கவேண்டும். :)
  • வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு, அது சூடானதும் மாவை சிறு சிறு போண்டாக்களாக உருட்டிப் போடவும்.
  • நன்கு உப்பிக்கொண்டு குண்டு குண்டாக வரும்.
  • சிவக்க வேக விட்டெடுத்து, சூடாகப் பரிமாறுங்கள்.
  • சுவையான மாலைநேர ஸ்நாக்ஸ் மங்களூர் போண்டா ரெடி.
  • தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்.

Thursday, October 8, 2020

உப்பு பாதாம்

Ingredients:
  • 1 கப் பாதாம்
  • 1 பாக்கெட் சால்ட்


Method:
  • அடுப்பில் வாணலி இல் உப்பு மொத்தம் கொட்டி நன்கு வறுக்கவும்.
  • அது நல்ல சூடாகும்வரை வறுக்கவும் .
  • கிட்ட த்தட்ட 5 முதல் 7 நிமிடங்கள் ஆகும்.
  • பொறுமையாக வறுக்கவும்.
  • நடுவில் ஒரு ஸ்பூன் உப்பு எடுத்து இரண்டு ஸ்பூன் தண்ணீர் விட்டு கரைத்து பாதாமை அதில் போட்டு, உப்பு நீர் எல்லா பாதாமிலும் நன்கு பரவும்படி கலந்து வைக்கவும்.
  • இது சுமார் 3 நிமிடங்கள் ஊறலாம்.
  • இப்போது தண்ணீர் இல்லாமல் பாதாமை மட்டும் எடுத்து உப்பில் போடுங்கள்.
  • அடுப்பை கொஞ்சம் சின்னதாக்கவும்.
  • இப்போது உப்புடன் பாதாமையும் நன்கு வறுக்கவும்.
  • இதை கைவிடாமல் இரண்டு நிமிடங்கள் வறுக்கவும்.
  • பாதாம் பூரித்து , உப்பி வரும் .
  • அடுப்பை அணைத்துவிட்டு, மெட்டல் டீ வடிகட்டி மூலம் பாதாமை சலித்து எடுக்கவும்.
  • அவ்வளவுதான்.....சுவையான salted baadham தயார்.
  • சூடு ஆறினதும் காற்று புகாத டப்பாவில் எடுத்து சேமிக்கவும்.
  • தேவையான போது சாப்பிடலாம்.
  • உப்பு அதிகம் பூத்திருப்பது என்று நீங்கள் நினைத்தால் ஒரு டிஷு பேப்பர் மூலம் துடைத்து , பிறகு டப்பாவில் போட்டு வைக்கவும்.
  • இதேபோல முந்திரி வேர்க்கடலை போன்றவற்றிலும் செய்யலாம்


Notes:
  • 'உப்பு பாதாம்' - salted badham ......இதை நான் இந்த திரி இல்போடக்கூடாது தான், என்றாலும் ஏற்கனவே உள்ள எந்த தலைப்பிலும் இதை இட முடியவில்லை எனவே இங்கு போடுகிறேன்
  • கடைகளில் விலை மிக அதிகம் உள்ள dry fruits இல் பாதாமும் ஒன்று. அதிலும் உப்பு போட்டது , எலுமிச்சை போட்டது என்று விதம் விதமாக உள்ளவை இன்னும் விலை அதிகம். இங்கு நாம் salted badham செய்வது குறித்து பார்ப்போம்.
  • மிகவும் எளிமையான வழி இது....கடை இல் வாங்கியதற்கு நாம் செய்ததற்கும் வித்தியாசமே தெரியாது. முயன்று பாருங்கள்

Images:


Wednesday, October 7, 2020

அவல் வேர்க்கடலை பக்கோடா

Ingredients:
  • அவல் - 200 கிராம்
  • கடலை மாவு - 100 கிராம்
  • அரிசி மாவு - 50 கிராம்
  • வறுத்த வேர்க்கடலை - 50 கிராம்
  • மிளகாய்த்தூள் - 1 டேபிள் ஸ்பூன்
  • பெருங்காயம் - 1 டேபிள் ஸ்பூன்
  • சோடா உப்பு - 1 சிட்டிகை
  • எண்ணெய் - பொறிக்க
  • உப்பு - தேவையான அளவு
  • பொடியாக நறுக்கிய வெங்காயம் - 2
  • பச்சை மிளகாய் நறுக்கியது - 2
  • மிளகாய் பொடி தேவையான அளவு


Method:
  • அவலை கரகரப்பாக பொடித்துக் கொள்ளவும்.
  • வறுத்த வேர்க்கடலையையும் மிக்சி இல் ஒண்டிரண்டாக பொடித்துக் கொள்ளவும்.
  • பிறகு, அரிசிமாவு, கடலை மாவு, பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், மிளகாய் பொடி, , பெருங்காயம், சோடா, உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து பிசைந்து கொள்ளவும்.
  • அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் காய்ந்ததும், பிசைந்தமாவை கிள்ளிப்போட்டு, கரகரப்பாக பொரிந்ததும் எடுத்தால் அவல் வேர்க்கடலை பக்கோடா ரெடி.
  • நல்ல 'கரகரப்பாக' இருக்கும்.


Notes:
  • அவல் சீக்கிரம் ஊறிவிடும் , அதனால், நேரம் ஆக ஆக, பக்கோடா மாவு கெட்டியாகும். எனவே, அவ்வப்போது தண்ணீர் தெளித்து தளர்த்திக் கொள்ளவும்

Images:


ரவா உளுந்து போண்டா

Ingredients:
  • 1 கப் பாம்பே ரவா
  • 3 - 4 டேபிள் ஸ்பூன் உளுத்தம் மாவு அல்லது அரைத்த உளுந்து ஒரு கை
  • ( இட்லிக்கு அரைக்கும்போது கொஞ்சம் எடுத்துக்கோங்கோ)
  • வெங்காயம் - தேவையானால்
  • பச்சை மிளகாய் - 2
  • இஞ்சி துருவியது - 1 ஸ்பூன்
  • உப்பு


Method:
  • ரவை இல் உளுத்தம் மாவு மற்றும் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சித் துருவல், உப்பு எல்லாம் போட்டு மட்டா தண்ணீர் விட்டு பிசையவும்.
  • ஒரு அரைமணி நேரம் அப்படியே வைத்திருக்கவும்.
  • பிறகு வாணலி இல் எண்ணெய்வைத்து அது சுட்டதும், மாவை உருட்டி போண்டாக்கள் போடவும்.
  • தேவையானவர்கள், வெங்காயத்தை பொடியாக நறுக்கி சேர்த்துக்கொள்ளலாம்.
  • ரவை இருப்பதால் மொறுமொறுப்பாகவும், உளுந்து என்பதால் உள்ளே மெத் என்றும் அருமையாக இருக்கும்.
  • வெறுமனையே நல்லா இருக்கும், வேண்டுமானால் தேங்காய் சட்னி அல்லது டொமட்டோ சாஸுடன் பரிமாறலாம்.

Images:


புளி அவல்

Ingredients:
  • கெட்டி அவல் - இரண்டு கப்,
  • புளிஜலம் - ஒரு கப்
  • தனியா - இரண்டு டேபிள் ஸ்பூன் (optional)
  • கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு தலா ஒரு டேபிள் ஸ்பூன்
  • மிளகாய் வற்றல் - ஆறு அல்லது ஏழு
  • உப்பு
  • தாளிக்க:
  • கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு
  • வேர்க்கடலை - ஒரு கைப்பிடி அளவு
  • கறிவேப்பிலை
  • மஞ்சள் பொடி கொஞ்சம்
  • பெருங்காயப் பொடி - கொஞ்சம்
  • நல்லெண்ணெய் - ஒரு டேபிள் ஸ்பூன்


Method:
  • கெட்டி அவலை நன்கு இரண்டு மூன்று முறை அழுக்கு போக அலசி , பிழிந்து, தயாராக வைத்துள்ள புளி கரைசலில் ஊற வைக்கவும்.
  • தேவையானால் சிறிது தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.
  • தனியா, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, மிளகாய் வற்றல்போன்றவற்றை வறுத்து, பொடி செய்து, அவலுடன் சேர்க்கவும்.
  • வாணலி இல் எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, வேர்க்கடலை மற்றும் கறிவேப்பிலை, மஞ்சள் பொடி,பெருங்காயப் பொடி என எல்லாம் போட்டு தாளித்து, அதில் அவல் கலவையை சேர்த்து, நன்றாக கிளறி இறக்கவும்.
  • இரண்டு மூன்று நிமிடங்கள் கிளறினால் போதுமானது


Notes:
  • இது ஒரு சுவையான சிற்றுண்டி, செய்வதும் மிக சுலபம்
  • குறைந்த நேரத்தில் செய்யக் கூடிய, அருமையான டிபன் இது

பாசிப்பருப்பு போண்டா

Ingredients:
  • முழு பாசிப்பருப்பு - 1 கப்
  • துருவிய இஞ்சி - 1 டீஸ்பூன்
  • பச்சை மிளகாய் - 1 டேபிள்ஸ்பூன்
  • கடலை மாவு - 1 டேபிள்ஸ்பூன்
  • அரிசிமாவு - 1 டேபிள்ஸ்பூன்
  • கொத்தமல்லித்தழை - சிறிது
  • உப்பு - ருசிக்கேற்ப
  • எண்ணெய் - தேவையான அளவு


Method:
  • பாசிப்பருப்பை ஒரு மணி நேரம் ஊறவைத்து, சற்றுக் கரகரப்பாக அரைத்தெடுங்கள். (மட்டா தண்ணி விட்டு அரைக்கவும் )
  • அதனுடன் துருவிய பச்சை மிளகாய், இஞ்சி, தேங்காய், கொத்தமல்லித்தழை சேருங்கள்.
  • கடலை மாவு, அரிசிமாவு, உப்பும் போட்டு நன்கு கலந்துகொள்ளுங்கள்.
  • எண்ணெயைக் காயவைத்து சிறு சிறு போண்டாக்களாக கிள்ளிப் போட்டு, நன்கு வெந்ததும் அரித்தெடுங்கள்.
  • ரொம்ப நல்ல டிபன்.

மசால் வடை

Ingredients:
  • கடலை பருப்பு 1 கப்
  • துவரம் பருப்பு 1/4 கப்
  • மிளகாய் வற்றல் 6 - 8
  • பெருங்காயப்பொடி 1/2 ஸ்பூன்
  • சின்ன வெங்காயம்_ 10 அல்லது பெரிய வெங்காயம் 1 - பொடியாக நறுக்கவும்.
  • இஞ்சி_ 1 துண்டு - தோல்சீவி, துருவி வைத்துக்கொள்ளவும்.
  • பூண்டு_ 2 - 3 - பொடியாக நறுக்கவும்.
  • பச்சை மிளகாய் 2 - தேவையானால்
  • சோம்பு 1 டீஸ்பூன் - தேவையானால் ஒன்றிரண்டாக பொடித்து போடலாம்
  • கொத்துமல்லி
  • கறிவேப்பிலை
  • உப்பு
  • பொரிக்க எண்ணெய்


Method:
  • கடலை பருப்பு மற்றும் துவரம் பருப்பை நன்கு அலசி , ஒரு 1/2 மணி ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
  • அப்புறம், ஒருகை பருப்பை தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
  • பாக்கி பருப்பை, மிளகாய் வற்றல் சேர்த்து கொஞ்சம் 'நர நர' வென்று அரைக்கணும்.
  • தண்ணீர் மட்டாய் விடணும்.
  • அரைத்த மாவை ஒரு பேசினில் போடணும்.
  • அதில் பாக்கி சாமான்களை எல்லாம் சேர்த்து நன்கு கலக்கணும்.
  • மாவு நல்ல கெட்டியாக இருக்கணும், ஒருவேளை கொஞ்சம் தளர இருந்தால், சிறிது அரிசிமாவு போட்டு கலந்துக்கலாம்.
  • ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் விட்டு, அது காய்ந்ததும், மாவிலிருந்து ஒரு உருண்டை எடுத்து, உள்ளங்கை களுக்கு இடை இல் வைத்து அழுத்தி, ஓட்டை போடாமல் , தட்டி எண்ணெய் இல் போடணும்.
  • வடைகளை இருபுறமும் திருப்பி விட்டு, நன்கு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.
  • இப்போது சூப்பரான மசால் வடை ரெடி!
  • 'கரகர'பாக ரொம்ப நல்லா இருக்கும்.


Notes:
  • சாப்பிட்டு மீதம் இருந்தால் எலி பிடிக்க வைத்துக்கொள்ளலாம்.

'ஆமை வடை ' - கடலை பருப்பு வடை

Ingredients:
  • ஆமை வடை என்பது 'கடலை பருப்பு ' வடை தான். இதை பண்டிகை நாட்களில் செய்வோம்.
  • கடலை பருப்பு 1 கப்
  • துவரம் பருப்பு 1/4 கப்
  • மிளகாய் வற்றல் 4 - 6
  • பெருங்காயப்பொடி 1/2 ஸ்பூன்
  • கறிவேப்பிலை
  • உப்பு
  • பொரிக்க எண்ணெய்


Method:
  • கடலை பருப்பு மற்றும் துவரம் பருப்பை நன்கு அலசி , ஒரு 1/2 மணி ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
  • அப்புறம், ஒருகை பருப்பை தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
  • பாக்கி பருப்பை, மிளகாய் வற்றல் சேர்த்து கொஞ்சம் 'நர நர' வென்று அரைக்கணும்.
  • தண்ணீர் மட்டாய் விடணும்.
  • அரைத்த மாவை ஒரு பேசினில் போடணும்.
  • அதில் பெருங்காய பொடி, எடுத்து வைத்திருந்த ஊறின பருப்பு, கறிவேப்பிலை மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலக்கணும்.
  • மாவு நல்ல கெட்டியாக இருக்கணும், ஒருவேளை கொஞ்சம் தளர இருந்தால், சிறிது அரிசிமாவு போட்டு கலந்துக்கலாம்.
  • ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் விட்டு, அது காய்ந்ததும், மாவிலிருந்து ஒரு உருண்டை எடுத்து, உள்ளங்கை களுக்கு இடை இல் வைத்து அழுத்தி, ஓட்டை போடாமல் , தட்டி எண்ணெய் இல் போடணும்.
  • வடைகளை இருபுறமும் திருப்பி விட்டு, நன்கு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.
  • இப்போது சூப்பரான பருப்பு வடை ரெடி!


Notes:
  • இதில் வெங்காயம் சோம்பு சேர்த்து செய்தால் , 'மசால் வடை' ( முன்காலத்தில் எலி பிடிக்க கூட உபயோகித்தார்கள் )

Images:


வெங்காய மெது பகோடா

Ingredients:
  • அரிசி மாவு ஒரு கப்
  • கடலை மாவு அரை கப்
  • பொடியாக நறுக்கின வெங்காயம் 3/4 கப்
  • முந்திரி - பொடிசாக நறுக்கியது 2 டேபிள் ஸ்பூன்
  • இஞ்சி துருவியது ஒரு ஸ்பூன்
  • நெய் இரண்டு டேபிள் ஸ்பூன்
  • சோடா உப்பு அரை ஸ்பூன்
  • உப்பு
  • பெருங்கயப்பொடி
  • கறிவேப்பிலை
  • பொரிக்க எண்ணெய்
  • பச்சை மிளகாய் தேவையானால்


Method:
  • ஒரு பெரிய பேசினில் நெய் மற்றும் சோடா உப்பை போட்டு நன்கு நுரை வரும் வரை தேய்க்கவும் .
  • பிறகு அதில் மாவுகளை போட்டு நன்கு அழுத்தி கலக்கவும்.
  • நறுக்கின வெங்காயம் சேர்க்கவும்.
  • மட்டாக தண்ணீர் விட்டு நன்கு பிசையவும்.
  • பிறகு இஞ்சி துருவல், பெருங்காயம், பச்சைமிளகாய்,முந்திரி மற்றும் கறிவேப்பிலை போட்டு பிசையவும்.
  • மாவு கொஞ்சம் மெத் என்று இருக்கணும்.
  • வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு மாவை கையில் எடுத்து கிள்ளி கிள்ளி போடவும், அல்லது உருட்டி வைத்துக்கொண்டு எடுத்து போடவும்.
  • நன்கு பவுன் கலராய் எடுக்கவும்.
  • 'வெங்காய மெது பகோடா' ரெடி.
  • இது வெளியே நல்ல 'கர கர' ப்பாகவும் உள்ளே 'மெத்' என்றும் இருக்கும்.

பயத்தம் பருப்பு தயிர் வடை

Ingredients:
  • பயத்தம் பருப்பு - 1 கப்,
  • புளிப்பில்லாத தயிர் - 2 கப்,
  • கேரட் துருவல் - 1 டீஸ்பூன்,
  • தித்திப்பு சட்னி,
  • பச்சை சட்னி யாவும் தேவைக்கு,
  • உப்பு, எண்ணெய் - பொரிப்பதற்கு
  • பச்சை மிளகாய் - 2,
  • சீரகம் - 1 டீஸ்பூன்.


Method:
  • பயத்தம் பருப்பை,களைந்து, ½ மணி நேரம் ஊற வைத்து, பச்சை மிளகாய் சேர்த்து, கரகரப்பாக, மட்டாக தண்ணீர்விட்டு அரைக்கவும்.
  • பின் சீரகம், உப்பு சேர்த்து கலந்து எண்ணெயை காய வைத்து சிறு சிறு பக்கோடா மாதிரி கிள்ளிப் போட்டு பொரித்து எடுத்து தனியாக வைக்கவும்.
  • 1 கப் தயிருடன், கொஞ்சம் தண்ணீர் சேர்த்து, தேவையான உப்பும் சேர்த்து கலந்து பொரித்து வைத்திருக்கும் வடையின் மீது ஊற்றி சிறிது ஊற விடவும்.
  • பரிமாறும்போது மீண்டும் மீதி உள்ள தயிரில் ஒரு சிட்டிகை உப்பு கலந்து வடைகளின் மேல் விடவும்.
  • அதன் மேல் தித்திப்பு + புளிப்பு சட்னி, பச்சை சட்னி ஊற்றி துருவிய கேரட் தூவி அலங்கரித்து தரலாம்.
  • அல்லது fridge இல் வைத்தும் தரலாம், அருமையாக இருக்கும்.


Notes:
  • பச்சை சட்னி - கொத்தமல்லி, பச்சை மிளகாய், உப்பு, எலுமிச்சை, இஞ்சி சேர்த்து அரைக்கவும். தித்திப்பு + புளிப்பு சட்னிக்கு - புளி விழுது, பேரீச்சை வெல்லம் சேர்த்து கொதிக்க விடவும்.

நமக் பாரா - மைதா கார சிப்ஸ்

Ingredients:
  • மைதா-1 கப்,
  • உடைத்த மிளகு பொடி -1/2 டீஸ்பூன்,
  • வெண்ணெய் அல்லது நெய் -2 டீஸ்பூன்,
  • கருப்பு சீரகம் (அல்லது) சீரகம்-சிறிது,
  • உப்பு, எண்ணெய்-தேவைக்கு.


Method:
  • நெய்/வெண்ணெய்யுடன் மைதாவை பிசையவும்.
  • இது ரவை மாதிரி வரும் போது உப்பு, சீரகம்/கருப்பு சீரகம், மிளகு சேர்த்து நன்கு பிசையவும்.
  • சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து 20 நிமிடம் மூடி வைக்கவும்.
  • பின் மாவை மெல்லிய சப்பாத்தியாக இட்டு விருப்பமான வடிவத்தில் அல்லது டைமண்ட் வடிவத்தில் கட் செய்து வைத்துக் கொள்ளவும்.
  • வாணலி இல் எண்ணெய் வைத்து , அது சூடானதும், வெட்டி வைத்த சிப்ஸ்களை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
  • ஆறியதும் கலகலவென்று சத்தம் வரும்.
  • அதனால் சிலர் இதை 'கல கலா' என்றும் சொல்வார்கள்


Notes:
  • மிளகு காரம் பிடிக்காதவர்கள் மிளகாய் பொடி போட்டு பிசையலாம்.
  • அல்லது, பொறித்து எடுத்த பிறகு சிப்ஸ் இன் மேல் போட்டு குலுக்கலாம்.

சக்கர் பாரா - ஸ்வீட் மைதா சிப்ஸ்

Ingredients:
  • மைதா மாவு - 2 கப்,
  • நெய் - 1/4 கப்,
  • சர்க்கரை - 2 கப்,
  • பொரிக்க எண்ணெய் - தேவையான அளவு,
  • உப்பு - 1/2 சிட்டிகை


Method:
  • நெய்யுடன் மைதாவை பிசையவும்.
  • இது ரவை மாதிரி வரும் போது உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து 20 நிமிடம் மூடி வைக்கவும்.
  • பின் மாவை மெல்லிய சப்பாத்தியாக இட்டு விருப்பமான வடிவத்தில் அல்லது டைமண்ட் வடிவத்தில் கட் செய்து வைத்துக் கொள்ளவும்.
  • வாணலி இல் எண்ணெய் வைத்து , அது சூடானதும், வெட்டி வைத்த சிப்ஸ்களை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
  • பின் வேறு ஒரு வாணலி அல்லது உருளி il சர்க்கரையை போட்டு அது மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து கம்பி பதத்தில் பாகு காய்ச்சவும்.
  • பொரித்த சிப்ஸ் களை பாகில் போட்டு நன்றாக கிளறி இறக்கவும் .


Notes:
  • பாகில் சிறிது ஏலக்காய் பொடி சேர்க்கலாம்.

Tuesday, October 6, 2020

ஜவ்வரிசி போண்டா - 2

Ingredients:
  • ஜவ்வரிசி ஒரு கப் ( அலசி அரைமணி ஊறவைக்கவும்)
  • உருளைக்கிழங்கு கால் கிலோ (வேகவைத்து உதிர்க்கவும் )
  • வெங்காயம் பெரிசு ஒன்று
  • இஞ்சி துருவியது கொஞ்சம்
  • அரை மூடி தேங்காய் துருவல்
  • 2 - 4 பச்சைமிளகாய்
  • 2 ஸ்பூன் எள்
  • அரை ஸ்பூன் சீரகம்
  • கறிவேப்பிலை
  • 1 டேபிள் ஸ்பூன் 'கிஸ் மிஸ்'
  • 10 - 12 முந்திரி
  • ஒரு ஸ்பூன் சக்கரை
  • உப்பு
  • பொரிக்க எண்ணெய்
  • எலுமிச்சை சாறு ஒரு டேபிள் ஸ்பூன்


Method:
  • ஊறவைத்துப பிழிந்த ஜவ்வரிசி, உருளைகிழங்கு, பொடியாக நறுக்கிய வெங்காயம் , சீரகம் எல்லாவற்றையும் ஒரு பேசினில் போட்டு நன்கு பிசையவும்.
  • பெரிய பெரிய உருண்டைகளாக்கவும்.தனியே வைக்கவும்.
  • இப்போது இன்னொரு பேசினில், தேங்காய், கிஸ் மிஸ், உடைத்த முந்திரி, எள் , எலுமிச்சை சாறு, பச்சைமிளகாய் மற்றும் துருவின இஞ்சி, கொஞ்சம் உப்பு எல்லாம் போட்டு நன்கு பிசையவும்.
  • சிறு சிறு உருண்டைகளாக உருட்டவும்.
  • அந்த பெரிய உருண்டை இல் கிண்ணி போல செய்து, இந்த சின்ன உருண்டையை வைத்து மொத்தமாக உருட்டவும்.
  • அல்லது வடைகள் போல தட்டவும்.
  • எண்ணெய் யை காய வைத்து உருட்டி அல்லது தட்டி வைத்துள்ள போண்டக்களை போடவும.
  • நன்கு பொன்னிறமானதும் எடுக்கவும்.
  • எந்த சட்னி யுடனும் பரிமாறலாம்.
  • அல்லது டொமாடோ கெட்சப் கூடவும் பரிமாறலாம்.
  • ஜவ்வரிசி நன்கு பொரிந்து கொண்டு பார்க்கவும் ரொம்ப அழகாக இருக்கும்

சாத பகோடா - 2

Ingredients:
  • சாதம் ஒரு கப்
  • மைதா ஒரு டேபிள் ஸ்பூன்
  • பாம்பே ரவா இரண்டு டேபிள் ஸ்பூன்
  • பெரியவெங்காயம் ஒன்று ( பொடியாக நறுக்கவும்)
  • பச்சை மிளகாய் காரத்துக்கு தேவையான அளவு. (பொடியாக நறுக்கவும் )
  • இஞ்சி கொஞ்சம் ( துருவவும்)
  • உப்பு
  • பொரிக்க எண்ணெய்


Method:
  • எல்லாவற்றையும் ஒரு பேசினில் போட்ட நன்கு பிசையவும்.
  • எண்ணெய் யை காய வைத்து பகோடா போடவும .
  • கர கரப்பான பகோடா தயார்

முந்திரி பகோடா - 2

Ingredients:
  • அரிசி மாவு 1 1/4 கப்
  • கடலை மாவு 1 கப்
  • முந்திரி பாதியாக உடைத்தது 1 கப்
  • வெங்காயம் 1 பெரியது
  • மிளகாய் பொடி 2 ஸ்பூன்
  • ஒரு சிட்டிகை சோடா உப்பு
  • உப்பு
  • நெய் 2 ஸ்பூன்
  • பொறிக்க எண்ணை
  • கறிவேப்பிலை சிறிதளவு


Method:
  • வெங்காயத்தை நீள வாக்கில் நறுக்கவும்
  • ஒரு பேசினில், மாவுகள் வெங்காயம், மிளகாய் பொடி, உப்பு, நெய் சோடா உப்பு போட்டு நன்கு கலக்கவும்.
  • முந்திரி போடவும், கொஞ்சமாக தண்ணீர் விட்டு பிசையவும் .
  • மாவு நல்ல கெட்டியாக இருக்கணும்
  • அடுப்பில் எண்ணை வைத்து , மாவை கைகளில் எடுத்து எண்ணை இல் பக்கோடாக்களாக போடவும்.
  • நல்ல பொன்னிறமானதும் எடுக்கவும்.
  • வேறு ஒரு வாணலி இல் துளி எண்ணை வைத்து கறிவேப்பிலையை பொரித்து பக்கோடாக்களின் மேல் கோட்டவும்.
  • 'முந்திரி பக்கோடா' ரெடி

Tuesday, July 22, 2014

உளுந்து வடை

தேவையானவை :

முழு உளுந்து ஒரு கப்
நாலைந்து பச்சை மிளகாய்கள் 
உப்பு
கொத்துமல்லி கொஞ்சம்
கறிவேப்பிலை கொஞ்சம்
இஞ்சி துருவல் கொஞ்சம் 
பெருங்கயப்பொடி கால் ஸ்பூன் 
பொரிக்க எண்ணெய்

செய்முறை :

உளுந்தை நன்கு களைந்து ஒரு அரை மணி ஊறவைக்கவும்.
பிறகு கிரைண்டர் இல் நன்கு 'பொங்க பொங்க' அரைக்கவும்.
மட்டாக தண்ணீர் விடனும்.
பிறகு அதில் நன்கு பொடியாக நறுக்கின பச்சை மிளகாய், பெருங்காயம், துருவின இஞ்சி, உப்பு , கறிவேப்பிலை கொத்துமல்லி போட்டு கலக்கவும். 
வாணலி இல் எண்ணெய் விட்டு வடைகளாக தட்டிப்போடவும். 
ஒருபுறம் நன்கு வெந்ததும், மறுபுறம் திருப்பி போடவும்.
நன்கு பொரிந்ததும் எடுத்து எண்ணெய் யை வடிய விடவும்.
பிறகு தேங்காய் சட்னி யுடன் பரிமாறவும்.

குறிப்பு: தேவையானால் பச்சை மிளகாய்க்கு பதில் சிவப்பு மிளகாய் உபயோகிக்கலாம்
தேவையானால் வெங்காயம் அல்லது முட்டை கோஸ் துருவி போட்டும் வடை தட்டலாம்.
ஒருவேளை மாவில் தண்ணீர் அதிகமகிவிட்டதாக தோன்றினால் கொஞ்சம் அரிசி மாவு போடலாம் அல்லது கொஞ்சம் பாம்பே ரவா போடலாம்.ஆனால் ரொம்ப போடாதிங்கோ, வடை 'கல்லு' மாதிரி ஆகிவிடும் புன்னகை 

சேமியா பகோடா

தேவையானவை :

சேமியா ஒரு கப் 
அரிசி மாவு 1 / 2 கப்
பச்சை மிளகாய் 4 - 5 
மிளகாய் பொடி கொஞ்சம் 
உப்பு
எண்ணெய்

செய்முறை :

சேமியாவை ஒரு பதினைந்து நிமிடம் வெதுவெதுப்பான நீரில் ஊற வைக்கவும்.
பிறகு அதில் மற்ற சாமான்களை போட்டு நன்கு பிசையவும்.
வாணலி இல் எண்ணெய் விட்டு கலந்த மாவை எடுத்து பகோடாக்கள் போடவும்.
நல்ல பவுன்கலரில் எடுக்கவும்.
நல்ல கரகரப்பான பக்கோடாக்கள் ரெடி.

மெது பக்கோடா

தேவையானவை :

அரிசி மாவு ஒரு கப் 
கடலை மாவு அரை கப் 
இஞ்சி துருவியது ஒரு ஸ்பூன் 
நெய் இரண்டு டேபிள் ஸ்பூன் 
சோடா உப்பு அரை ஸ்பூன் 
உப்பு
பெருங்கயப்பொடி
கறிவேப்பிலை 
பொரிக்க எண்ணெய்
பச்சை மிளகாய் தேவையானால் 

செய்முறை :

ஒரு பெரிய பேசினில் நெய் மற்றும் சோடா உப்பை போட்டு நன்கு நுரை வரும் வரை தேய்க்கவும் .
பிறகு அதில் மாவுகளை போட்டு நன்கு அழுத்தி கலக்கவும்.
தண்ணீர் விட்டு நன்கு பிசையவும்.
பிறகு இஞ்சி துருவல், பெருங்காயம், பச்சைமிளகாய், மற்றும் கறிவேப்பிலை போட்டு பிசையவும்.
மாவு கொஞ்சம் மெத் என்று இருக்கணும்.
வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு மாவை கையில் எடுத்து கிள்ளி கிள்ளி போடவும்.
நன்கு பவுன் கலராய் எடுக்கவும்.
'மெது பகோடா' ரெடி.

குறிப்பு: ஜானவாசத்தில் இந்த பகோடா தான்போடுவா with காசி அல்வா புன்னகை 

ஜவ்வரிசி 'மெத்' பக்கோடா

தேவையானவை :

ஒரு  கப் ஜவ்வரிசி
ஒரு கப் மோர்
4 - 6   பச்சை மிளகாய்
அரை ஸ்பூன் மிளகாய் பொடி
ஒரு வெங்காயம் பொடியாக நறுக்கவும் 
உப்பு
எண்ணெய்

செய்முறை :

ஜவ்வரிசியை  மோரில் இரண்டு மணி நேரம்  ஊறவைக்கவும்.
பிறகு அதில் உப்பு, பொடியாக நறுக்கின பச்சைமிளகாய்,மிளகாய் பொடி  எல்லாம் போட்டு நன்கு பிசையவும்.
எண்ணெய் யை காய வைத்து மாவை உருட்டி பகோடா போடவும.
நன்கு பொன்னிறமானதும் எடுக்கவும்.
'மெத்' என்று சுவையாக இருக்கும்.

ஜவ்வரிசி மற்றும் ரவா போண்டா

தேவையானவை :

அரை கப் பாம்பே ரவா 
கால் கப் ஜவ்வரிசி 
ஒரு கப் மோர் 
4 பச்சை மிளகாய்
ஒரு டேபிள் ஸ்பூன் அரிசி மாவு
உப்பு
எண்ணெய் பொரிக்க 
பெருங்காயப்பொடி 

செய்முறை :

ரவை மற்றும் ஜவ்வரிசியை தனித்தனியே வெறும் வாணலி இல் வறுக்கவும். 
ஒன்றாக மோரில் ஒரு அரைமணி ஊறவைக்கவும்.
பிறகு அதில் உப்பு, பொடியாக நறுக்கின பச்சைமிளகாய்,அரிசிமாவு, பெருங்காயப்பொடி எல்லாம் போட்டு நன்கு பிசையவும்.
எண்ணெய் யை காய வைத்து மாவை உருட்டி போண்டா போடவும.
நன்கு பொன்னிறமானதும் எடுக்கவும்.
எந்த சட்னி யுடனும் பரிமாறலாம்.
அல்லது டொமாடோ கெட்சப் கூடவும் பரிமாறலாம்.
ஜவ்வரிசி நன்கு பொரிந்து கொண்டு பார்க்கவும் ரொம்ப அழகாக இருக்கும்

Blog Archive