- கோதுமை மாவு - 2 கப்,
- வேகவைத்து துருவிய உருளைக்கிழங்கு - 2 கப்
- பச்சை மிளகாய் 8 - 10
- கரம் மசாலா 1 ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
- எண்ணெய்-நெய் கலவை - தேவையான அளவு.
Method:
- ஒரு பாத்திரத்தில் உப்பு மற்றும் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாயை நன்கு கசக்கிப் பிசையவும்.
- அதில் இப்பொழுது வேகவைத்து துருவிய உருளைக்கிழங்கு மற்றும் கரம் மசாலா போட்டு நன்றாகப் பிசைந்து கொள்ளவும்.
- இப்பொழுது , கொஞ்சம் கொஞ்சமாக கோதுமை மாவை போட்டு கலக்கவும்.
- தண்ணீர் துளியும் விடவேண்டாம்.
- அநேகமாய் இரண்டு கப் மாவும் கலக்க வரும்.
- ஒருவேளை, எல்லா மாவும் போட்டு பின் தண்ணீர் தேவையானால் கொஞ்சமே கொஞ்சம் விட்டுக்கொள்ளுங்கள்.
- மாவு நன்கு கெட்டியாக, சப்பாத்தி மாவுபோல் இருக்க வேண்டும்.
- அப்படியே ஒரு பத்து நிமிடங்கள் மூடி வைத்திருங்கள்.
- பிறகு பிசைந்த மாவை சிறிய சப்பாத்திகளாக இட்டு , தோசைக்கல்லில் போட்டு, எண்ணெய்-நெய் கலவையை விட்டு இரண்டு பக்கங்களும் கருகாமல் எடுங்கள்.
- சுவையான, அருமையான ஆலு பரோட்டா தயார்.
- இதற்கு தொட்டுக்கொள்ள எதுவுமே வேண்டாம், தேவையானால் கெட்டித்தயிர் போதும்.
Notes:
- எண்ணெய்-நெய் கலவை - தோசை மற்றும் சப்பாத்தி செய்வதற்கு எப்போதுமே எண்ணெய் அரை கப் என்றால், நெய் கால் கப் என்ற விகிதத்தில் கலந்து வைத்துக் கொள்ளுங்கள். அருமையாக, மணமாக இருக்கும்.
No comments:
Post a Comment