Showing posts with label "Side Dishes". Show all posts
Showing posts with label "Side Dishes". Show all posts

Wednesday, October 7, 2020

சுட்ட கத்தரிக்காய் கொத்ஸு

Ingredients:
  • ஒபர்ஜினி என்று சொல்லப்படும் குண்டு கத்தரிக்காய் 1 பெரியது
  • புளி பேஸ்ட் 1 டீ ஸ்பூன்
  • மிளகாய் வற்றல் 4 - 5
  • எண்ணை 4 டீ ஸ்பூன்
  • கடுகு 1/ 2 ஸ்பூன்
  • உளுத்தம் பருப்பு 1/2 ஸ்பூன்
  • கருவேப்பிலை கொஞ்சம்
  • உப்பு தேவையான் அளவு
  • பெருங்காயபொடி 1/4 ஸ்பூன்


Method:
  • கத்தரிக்காயை அலம்பி துடைத்து, அதன் மேலே கொஞ்சம் எண்ணெய் தவடவும்.
  • காஸ் அடுப்பில், மெல்லிய தணலில் நன்றாக சுட்டுக்கொள்ளவும்.
  • எல்லா பக்கமும் நன்கு வேகணும்.
  • பக்கத்தில் ஒரு பேசினில் தண்ணி வைத்துக்கொண்டு, சுட்ட கத்தரிக்காயை அதில் போடவும்.
  • ஆறினதும் தோலை எடுக்கவும்.
  • நன்கு பிசைந்து வைத்துக்கொள்ளவும்.
  • புளி பேஸ்ட் மற்றும் உப்பு போட்டு, கொஞ்சம் தண்ணிர் விட்டு கரைக்கவும்.
  • வாணலி இல் அல்லது இலுப்பக்கரண்டி இல் கடுகு, உளுந்து, பெருங்காயபொடி, கறிவேப்பிலை தாளித்து இதன் மீது கொட்டவும்.
  • அருமையான சுட்ட கத்தரிக்காய் கொத்சு ரெடி.
  • அரிசி உப்புமாவுடன் ரொம்ப நல்லா இருக்கும்.


Notes:
  • உப்புமா கொழுக்கட்டைக்கும் இது நல்லா இருக்கும்

கத்திரிக்காய் தக்காளி கொஸ்து

Ingredients:
  • விதை இல்லாத பிஞ்சு கத்திரிக்காய் - 5 - 6 (பொடியாக நறுக்கவும்)
  • தக்காளி - 2 (விதை எடுத்து பொடியாக நறுக்கவும் )
  • எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
  • கடுகு - 1 டீஸ்பூன்
  • சீரகம் - 1 டீஸ்பூன்
  • கறிவேப்பிலை - சிறிது
  • பூண்டு - 4 பற்கள்
  • மிளகாய் பொடி - 1 டீஸ்பூன்
  • மஞ்சள் பொடி - 1 டீஸ்பூன்
  • உப்பு - தேவையான அளவு
  • புளிபேஸ்ட் - 1 டீ ஸ்பூன்


Method:
  • ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் விட்டு, கடுகு, சீரகம், பூண்டு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
  • பின்னர் அதில் கத்திரிக்காய் மற்றும் தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாக வதக்கவும்.
  • பின்பு அதில் உப்பு, மிளகாய் பொடி மற்றும் மஞ்சள் பொடி சேர்த்து கிளறி, பின் புளிபேஸ்ட் சேர்த்து சிறிது நேரம் வதக்கி இறக்கினால், கத்திரிக்காய் தக்காளி கொஸ்து ரெடி!!!

சோயா சங்- Meal maker மசாலா

Ingredients:
  • சோயா சங் 1 கப்
  • வெங்காயம் பொடியாக நறுக்கினது 1/2 கப்
  • தக்காளி விதை நீக்கி பொடியாக நறுக்கினது 1/ 4 கப்
  • பூண்டு பொடி 1 ஸ்பூன்
  • துளி எண்ணைவிட்டு வறுத்து அரைத்த மிளகாய் பொடி 1 ஸ்பூன்
  • மஞ்சள் பொடி 1/2 ஸ்பூன்
  • கரம் மசாலா 1/2 ஸ்பூன்
  • பச்சை மிளகாய் பொடியான நறுக்கினது 1 டேபிள் ஸ்பூன்
  • உப்பு
  • எண்ணெய் 2 டேபிள் ஸ்பூன்


Method:
  • முதலில் சோயா சங் ஐ நன்கு அலசி தண்ணீரில் ஊறவைக்கவும்.
  • நன்கு ஊறினதும் பிழிந்து, மிக்சி இல் பொடியாக துருவவும்.
  • வாணலி இல் எண்ணைவிட்டு, பச்சை மிளகாய் தாளிக்கவும்.
  • வெங்காயம் தக்காளி போட்டு வதக்கவும்.அரைத்து வைத்ததை கொட்டவும்.
  • நன்கு கிளறவும்.
  • பூண்டு பொடி, மிளகாய் பொடி, மஞ்சள் பொடி, கரம் மசாலா மற்றும் உப்பு போடவும்.
  • நன்கு கிளறிவிடவும்; அது எல்லாமாக சேர்ந்து 'தொக்கு' போல ஆனதும் இறக்கிவிடவும்.
  • அவ்வளவுதான், super taste 'சோயா சங் மசாலா' ரெடி.
  • சப்பாத்தி , குபூஸ், 'நான்' எல்லாவற்றுக்கும் தொட்டுக்கொள்ளலாம்.
  • இல்லை தோசைக்கு உள்ளே வைக்கும் மசாலாவாகவும் உபயோகிக்கலாம்.
  • அல்லது பிரட் உள்ளே வைத்து சண்ட்விச் செய்யலாம்

முட்டை கோஸ் தயிர் குருமா

Ingredients:
  • முட்டை கோஸ் நறுக்கியது 2 கப்
  • உப்பு
  • மஞ்சள் பொடி ( தேவையானால் )
  • பூண்டு 4 - 5 பல் (அரைக்க)
  • பச்சை மிளகாய் 4 - 5 (அரைக்க)
  • தனியா 1 டேபிள் ஸ்பூன் (அரைக்க)
  • பட்டை 1 துண்டு (அரைக்க)
  • தேங்காய்த் துருவல் 1 கப் (அரைக்க)
  • பொட்டுக்கடலை 1 டேபிள் ஸ்பூன் (அரைக்க)
  • கறிவேப்பிலை (அரைக்க)
  • குழப்பிய கெட்டி மோர் 1 கப் (அரைக்க)


Method:
  • வாணலி இல் கொஞ்சம் தண்ணீர் விட்டு நறுக்கிய கோஸ் ஐ போட்டு, மூடி வேகவைக்கவும்..
  • அரைக்கக் கொடுத்துள்ளவற்றைத் தனியே அரைத்துக் கொள்ளுங்கள்.
  • மற்றும் ஒரு வாணலி இல் எண்ணைவிட்டு, அரைத்த விழுது சேர்த்து, பச்சை வாசனை போக வதக்குங்கள்.
  • பிறகு, வேகவைத்த கோஸ், உப்பு, சேர்த்து, 5 நிமிடம் கொதிக்கவிட்டுங்கள்.
  • அடுப்பை சிம் இல் வைத்து, குழப்பி வைத்துள்ள கெட்டி மோரை விட்டு , நன்கு கிளறி 2 நிமிடம் கொதிக்க விடுங்கள்.
  • பிறகு கறிவேப்பிலை போட்டு இறக்குங்கள்.
  • வாசனையான முட்டை கோஸ் தயிர் குருமா ரெடி!
  • சப்பாத்தி பூரிக்கு ரொம்ப நல்லா இருக்கும்.
  • எங்க வீட்டில் ஹிட் இது !


Notes:
  • தேவையானால் மஞ்சள் பொடி போடலாம், கொஞ்சம் கலர் ஆக இருக்கும

வெஜிடபிள் தயிர் குருமா

Ingredients:
  • இங்கிலீஷ் காய்கறிகள் (கேரட், பீன்ஸ், பட்டாணி, உ. கிழங்கு போன்றவை) சிறிய சதுரத் துண்டுகளாக நறுக்கியது 2 கப்
  • வெங்காயம் 2
  • உப்பு
  • பூண்டு 10 பல் (அரைக்க)
  • பச்சை மிளகாய் 10 -12 (அரைக்க)
  • தனியா 1 டேபிள் ஸ்பூன்(அரைக்க)
  • பட்டை 1 துண்டு (அரைக்க)
  • தேங்காய்த் துருவல் 1 கப் (அரைக்க)
  • பொட்டுக்கடலை 1 டேபிள் ஸ்பூன் (அரைக்க)
  • பட்டை, லவங்கம், ஏலக்காய் தலா 2 (தாளிக்க)
  • எண்ணெய் 2 - 3 டேபிள் ஸ்பூன் (தாளிக்க)


Method:
  • காய்கறிகளுடன் சிறிது உப்பும் முக்கால் கப் தண்ணீரும் சேர்த்து, குக்கரில் ஒரு விசில் வைத்து இறக்குங்கள
  • வெங்காயத்தை பொடியாக நறுக்கிவையுங்கள்.
  • அரைக்கக் கொடுத்துள்ளவற்றைத் தனியே அரைத்துக் கொள்ளுங்கள்.
  • வாணலி இல் எண்ணெயைக் காயவைத்து, தாளிக்கும் பொருள்களைச் சேர்த்து, பின் வெங்காயம் சேர்த்து வதக்குங்கள்.
  • வெங்காயம் வதங்கியதும், அரைத்த விழுது சேர்த்து, பச்சை வாசனை போக வதக்குங்கள்.
  • பிறகு, வேகவைத்த காய்கறி, உப்பு, தேவையான தண்ணீர் சேர்த்து, 5 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்குங்கள்.
  • வாசனையான வெஜிடபிள் தயிர் குருமா ரெடி.


Notes:
  • காலிஃப்ளவர் சேர்க்க விரும்பினால், தனியே உப்பு நீரில் போட்டு ஒரு 10 நிமிஷம் கழித்து எடுத்து, துண்டுகளாக்கி, தனியே வாணலி il வேகவைத்து சேர்க்கவேண்டும். குக்கரில் போடக்கூடாது. ரொம்ப குழைந்து விடும்.
  • தேவையானால் மஞ்சள் பொடி போடலாம், கொஞ்சம் கலர் ஆக இருக்கும

பூரி மசாலா

Ingredients:
  • 500 Gms. உருளைக்கிழங்கு
  • 250 கிராம் வெங்காயம் - பொடியாக நறுக்கவும்.
  • 2 - 4 பச்சை மிளகாய்
  • 1 துண்டு இஞ்சி
  • 2 -4 பல்லு பூண்டு
  • 1/2 ஸ்பூன் கடுகு
  • 1/2 ஸ்பூன் உளுந்து
  • 1/2 கடலை பருப்பு
  • உப்பு
  • கொஞ்சம் எண்ணெய்
  • மஞ்சள் பொடி கொஞ்சம்
  • கறிவேப்பிலை கொத்துமல்லி கொஞ்சம்


Method:
  • உப்பு போட்டு உருளைக்கிழங்கை வேகவைத்துக்கொள்ளவும்.
  • ஆறினதும் , தோலுரித்து,உதிர்த்து வைத்துக்கொள்ளவும்.
  • வாணலி இல் எண்ணெய் விட்டு தாளிக்கவும்.
  • பச்சைமிளகாய், இஞ்சி பூண்டு போட்டு வதக்கவும்.
  • பிறகு, வெங்காயம் போடவும், வதக்கவும்.
  • இப்போது உருளைக்கிழங்கை போடவும்.
  • மெதுவாக கிளறிவிடவும்.
  • கொஞ்சமாய் உப்பு போடவும். ( ஏற்கனவே கிழங்கில் போட்டிருக்கோம் )
  • கொஞ்சமாய் தண்ணீர் விடவும்.
  • அடுப்பை சிம் இல் வைக்கவும்.
  • அப்பப்போ கிளறி விடணும் .
  • நன்கு சேர்ந்து வரும்போது, கிளறி கொத்துமல்லி, கறிவேப்பிலை போட்டு ஒரு கிளறு கிளறி இறக்கிடுங்கோ.
  • அருமையான உருளைக்கிழங்கு மசாலா தயார்.
  • இது பூரி இன் இணை என்றே சொல்லலாம்...அவ்வளவு இருக்கும்.


Notes:
  • பூரி கிழங்கு என்று நம் தமிழ் நாட்டில் அன்பாக சொல்லப்படும் 'டிஷ்' இது

உருளைக்கிழங்கு கறி

Ingredients:
  • 500 Gms. உருளைக்கிழங்கு
  • 250 கிராம் வெங்காயம் - பொடியாக நறுக்கவும்.
  • 2 டீ ஸ்பூன் - மிளகாய் பொடி
  • 1/2 ஸ்பூன் கடுகு
  • 1/2 ஸ்பூன் உளுந்து
  • 1/2 கடலை பருப்பு
  • உப்பு , கொஞ்சம் எண்ணெய்
  • மஞ்சள் பொடி கொஞ்சம்


Method:
  • உப்பு போட்டு உருளைக்கிழங்கை வேகவைத்துக்கொள்ளவும்.
  • ஆறினதும் , தோலுரித்து, சதுரத்துண்டுகளாய் நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
  • வாணலி இல் எண்ணெய் விட்டு தாளிக்கவும்.
  • பிறகு, வெங்காயம் போடவும், வதக்கவும்.
  • இப்போது வெட்டி வைத்துள்ள உருளைக்கிழங்கை போடவும்.
  • மெதுவாக கிளறிவிடவும்.;மிளகாய் பொடி போடவும்.
  • கொஞ்சமாய் உப்பு போடவும். ( ஏற்கனவே கிழங்கில் போட்டிருக்கோம் )
  • அடுப்பை சிம் இல் வைக்கவும்.
  • அது மெல்ல மெல்ல வதங்கட்டும்.
  • அப்பப்போ கிளறி விடணும் .
  • நன்கு 'மொரு மொரு'பானதும், கறிவேப்பிலை போட்டு ஒரு கிளறு கிளறி இறக்கிடுங்கோ..அருமையான உருளைக்கிழங்கு கறி தயார்.
  • இது சப்பாத்தி , பூரிக்கு ரொம்ப நல்லா இருக்கும்.


Notes:
  • இது எங்கள் வீட்டில் எப்பவும் ஹிட். ................... 'தால் சாவல்' மற்றும் இந்த காய் செய்துவிட்டால் போறும் எங்களுக்கு

கொத்துக்கடலை மசாலா 2

Ingredients:
  • 1 கப் வேகவைத்த கொத்துக்கடலை
  • 1 வெங்காயம் அல்லது ஒரு கொத்து வெங்காயத்தாள்
  • 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 1/2 ஸ்பூன் கடுகு
  • 1/2 ஸ்பூன் சீரகம்
  • கொத்துமல்லி தழை - 1 டேபிள் ஸ்பூன்
  • உப்பு
  • எண்ணெய் கொஞ்சம்
  • 1/4 ஸ்பூன் மஞ்சள் பொடி


Method:
  • வாணலி இல் எண்ணெய் விட்டு, கடுகு சீரகம் தாளிக்கவும்.
  • அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் ஐ போடவும்.
  • கொஞ்சம் வதக்கவும்.
  • பொடியாக நறுக்கின வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
  • மஞ்சள் பொடி போடவும், அத்துடன் வெந்த கொத்து கடலையை போட்டு நன்கு மசிக்கவும்.
  • 1/2 கப் தண்ணீர் விட்டு, மீண்டும் நன்கு மசிக்கவும்.
  • உப்பு போட்டு கலக்கவும்.
  • நன்கு கொதித்து சேர்ந்தாற்போல வந்ததும் கொத்துமல்லி தூவி இறக்கவும்.
  • அருமையான கொத்துக்கடலை மசாலா ரெடி.
  • பூரி மற்றும் சப்பாத்தி க்கு நல்லா இருக்கும்


Notes:
  • வேண்டுமானால் கொத்துக்கடலை வேகும்போதே உப்பு போடலாம்.
  • வேண்டுமானால் கொஞ்சம் கரம் மசாலா போடலாம்

கொத்துக்கடலை மசாலா

Ingredients:
  • வேகவைத்த கொத்துக்கடலை 1 கப் ( கடைகளில் கிடைக்கும் டின் கூட ஓகே தான் )
  • பூண்டு பொடி 1 ஸ்பூன்
  • மிளகாய் பொடி 1 ஸ்பூன்
  • மஞ்சள் பொடி 1/2 ஸ்பூன்
  • கரம் மசாலா 1/2 ஸ்பூன்
  • உப்பி
  • எண்ணெய் 1 ஸ்பூன்


Method:
  • மிக்சி இல் வெந்த கொத்துகடலையை விழுதாக அரைக்கவும்.
  • நீங்கள் 'டின்' கொத்து கடலை உபயோகிப்பதாக இருந்தால், அதை பலமுறை நன்கு அலசவும்.
  • உப்பு போடும்போது குறைத்து போடவும்.
  • வாணலி இல் எண்ணைவிட்டு, எல்லா பொடிகளையும் போட்டு நன்கு வறுக்கவும்.
  • அரைத்து வைத்ததை கொட்டவும்.
  • நன்கு பேஸ்ட் போல ஆனதும் இறக்கிவிடவும்.
  • அவ்வளவுதான், super taste 'கொத்துக்கடலை மசாலா' ரெடி.
  • சப்பாத்தி , குபூஸ், 'நான்' எல்லாவட்ட்ருக்கும் தொட்டுக்கொள்ளலாம்.

கொள்ளு தால

Ingredients:
  • கொள்ளு 1 கப்
  • வெங்காயம் 1 பொடியாக நறுக்கவும்
  • பச்சை மிளகாய் 2 - 3
  • தக்காளி 1 பொடியாக நறுக்கவும்
  • உப்பு
  • கொத்துமல்லி
  • கடுகு,சீரகம் - 1 ஸ்பூன் (தாளிக்க)
  • கொஞ்சம் எண்ணெய் (தாளிக்க)


Method:
  • முதலில் கொள்ளை இரவே ஊறப்போடவும்.
  • அல்லது குறைந்த பக்ஷம் 2 மணி நேரமாவது அது ஊறட்டும்.
  • மறுநாள் கொஞ்சம் உப்பு போட்டு குக்கரில் வேகவைக்கவும்.
  • வாணலி இல் எண்ணைவிட்டு, கடுகு,சீரகம் தாளிக்கவும்.
  • பிறகு வெங்காயம், தக்காளி போட்டு வதக்கவும்.
  • அது வதங்கினதும், வெந்த கொள்ளை போடவும்.
  • நிறத்துக்கு தேவையானால் மஞ்சள் பொடி போடலாம்.
  • அது கொதித்து கெட்டியானதும் கொத்துமல்லி தூவி இறக்கவும்.
  • அருமையான 'கொள்ளு தால் ' ரெடி.
  • இதை சப்பாத்தி , பூரி அல்லது சாதத்துடன் பரிமாறலாம்

வெஜிடபிள் குருமா

Ingredients:
  • இங்கிலீஷ் காய்கறிகள் (கேரட், பீன்ஸ், பட்டாணி, உ. கிழங்கு போன்றவை) சிறிய சதுரத் துண்டுகளாக நறுக்கியது 2 கப்
  • வெங்காயம் 2
  • தக்காளி 3
  • தேங்காய்த் துருவல் 1 கப்
  • பொட்டுக்கடலை 1 டேபிள் ஸ்பூன்
  • உப்பு
  • பட்டை, லவங்கம், ஏலக்காய் தலா 2 (தாளிக்க)
  • எண்ணெய் 2 - 3 டேபிள் ஸ்பூன் (தாளிக்க)
  • இஞ்சி 1 துண்டு (அரைக்க)
  • பூண்டு 5 பல் (அரைக்க)
  • சோம்பு அரை டீஸ்பூன் (அரைக்க)
  • பச்சை மிளகாய் 5 -6 (அரைக்க)


Method:
  • காய்கறிகளுடன் சிறிது உப்பும் முக்கால் கப் தண்ணீரும் சேர்த்து, குக்கரில் ஒரு விசில் வைத்து இறக்குங்கள
  • வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கிவையுங்கள்.
  • அரைக்கக் கொடுத்துள்ளவற்றைத் தனியே அரைத்துக் கொள்ளுங்கள்.
  • தேங்காய்த் துருவலையும் பொட்டுக்கடலையையும் நன்கு அரைத்துத் தனியே வையுங்கள்.
  • வாணலி இல் எண்ணெயைக் காயவைத்து, தாளிக்கும் பொருள்களைச் சேர்த்து, பின் வெங்காயம் சேர்த்து வதக்குங்கள். வெங்காயம் வதங்கியதும், தக்காளி, அரைத்த விழுது சேர்த்து, பச்சை வாசனை போக வதக்குங்கள்.
  • பிறகு, வேகவைத்த காய்கறி, அரைத்த தேங்காய்க் கலவை, உப்பு, தேவையான தண்ணீர் சேர்த்து, 5 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்குங்கள்.
  • வாசனையான வெஜிடபிள் குருமா ரெடி!


Notes:
  • காலிஃப்ளவர் சேர்க்க விரும்பினால், தனியே உப்பு நீரில் போட்டு ஒரு 10 நிமிஷம் கழித்து எடுத்து, துண்டுகளாக்கி, தனியே வாணலி il வேகவைத்து சேர்க்கவேண்டும்.
  • குக்கரில் போடக்கூடாது. ரொம்ப குழைந்து விடும்.
  • தேவையானால் மஞ்சள் பொடி போடலாம், கொஞ்சம் கலர் ஆக இருக்கும்

மட்டர் பனீர் மசாலா

Ingredients:
  • பட்டாணி 1 கப்,
  • பனீர் 200 கிராம்,
  • வெங்காயம் 2
  • தக்காளி 5,
  • இஞ்சி, பூண்டு அரைத்த விழுது,
  • முந்திரி அரைத்த விழுது தலா 1 டேபிள் ஸ்பூன்,
  • மிளகாய்த் பொடி 2 டீஸ்பூன்,
  • தனியா பொடி 1 டீஸ்பூன்,
  • மஞ்சள் பொடி கால் டீஸ்பூன்,
  • சீரகத்தூள் அரை டீஸ்பூன்,
  • கரம் மசாலா பொடி அரை டீஸ்பூன்,
  • எண்ணெய் 2 டேபிள் ஸ்பூன்,
  • நெய் 1 டேபிள் ஸ்பூன்,
  • உப்பு


Method:
  • பட்டாணியை துளி உப்பு சேர்த்து தனியாக வேகவைத்துக் கொள்ளுங்கள்.
  • வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்குங்கள்.
  • வாணலியில் எண்ணெயும் நெய்யும் விட்டு வெங்காயம் சேர்த்து நன்கு நிறம் மாறும்வரை வதக்குங்கள்.
  • அதனுடன் தக்காளி, இஞ்சி, பூண்டு விழுது, மிளகாய்த் தூள், தனியா தூள், மஞ்ச பொடி , உப்பு சேர்த்து பச்சை வாசனை போக வதக்குங்கள்.
  • பின்னர் அத்துடன், சிறு துண்டுகளாக நறுக்கிய பனீர், வேகவைத்த பட்டாணி, முந்திரி விழுது ஆகியவற்றைச் சேருங்கள்.
  • கால் கப் தண்ணீர், கரம் மசாலா தூள், சீரகத்தூள் சேர்த்து கொதிக்கவிடுங்கள் .
  • ஒரு 2 நிமிடம் கொதித்ததும், நன்கு கிளறி இறக்குங்கள்.
  • அசத்தலான மட்டர் பனீர் மசாலா ரெடி!

செட்டி நாடு குருமா

Ingredients:
  • கத்தரிக்காய் - 5
  • உருளைக்கிழங்கு 2
  • பெரிய வெங்காயம் 2
  • தக்காளி 4
  • உப்பு
  • கறிவேப்பிலை கொத்துமாள்ளி கொஞ்சம்
  • பூண்டு - 2 பல்
  • தேங்காய்த் துருவல் 1 கப் (அரைக்க)
  • வற்றல் மிளகாய் 6-8 (அரைக்க)
  • தனியா 1 டேபிள் ஸ்பூன் (அரைக்க)
  • சீரகம், சோம்பு தலா அரை டீஸ்பூன் (அரைக்க)
  • கடுகு அரை டீஸ்பூன் (தாளிக்க)
  • சோம்பு கால் டீஸ்பூன் (தாளிக்க)
  • பிரிஞ்சி இலை 1 (தாளிக்க)
  • எண்ணெய் 3 டேபிள் ஸ்பூன் (தாளிக்க)


Method:
  • முதலில், அரைக்கக் கொடுத்துள்ளவற்றை, நன்கு அரைத்துக்கொள்ளுங்கள்.
  • பூண்டைத் தட்டிக்கொள்ளுங்கள்.
  • கத்தரிக்காய், வெங்காயம், உ. கிழங்கு, தக்காளி ஆகியவற்றைப் பொடியாக நறுக்குங்கள்.
  • வாணலி இல், எண்ணெய் விட்டு தாளிக்கும் பொருள்களை போட்டு தாளிக்கவும்.
  • பின்னர், வெங்காயம் சேர்த்து அது வதங்கியதும், நறுக்கி வைத்துள்ள கத்தரிக்காய், உ. கிழங்கு, தக்காளி, அரைத்த விழுது, உப்பு சேர்த்து, மிதமான தீயில், பச்சை வாசனை போகும்வரை வதக்குங்கள்.
  • உ. கிழங்கு வெந்ததும், நசுக்கிய பூண்டைச் சேர்த்து 2 நிமிடம் வதக்கி, தேவையான தண்ணீர் சேர்த்து, கறிவேப்பிலை, கொத்துமல்லி போட்டு, சில நிமிடம் கொதிக்கவிட்டு இறக்குங்கள்.
  • இட்லி, தோசை, சப்பாத்திக்கு ஏற்ற ருசியான குருமா இது.

ஆலு மட்டர் - உருளை கிழங்கு , பட்டாணி காய்

Ingredients:
  • வேகவைத்த உருளை கிழங்கு 2 -3 (தோலுரித்து, சதுரமாக வெட்டிக்கொள்ளவும்)
  • பச்சை பட்டாணி - வேகவைத்தது 1 கப்
  • வெங்காயம் - 1 - பொடியாக நறுக்கிகொள்ளவும்
  • பச்சைமிளகாய் - 2
  • இஞ்சி - 1 துண்டு தோலெடுத்து , துருவிக்கொள்ளவும்
  • பெங்களூர் தக்காளி 2 - விதை எடுத்து பொடியாக நறுக்கவும்
  • உப்பு
  • சீரகம் 1 டீ ஸ்பூன்
  • எண்ணெய் 1 டீ ஸ்பூன்
  • நெய் 1 டீ ஸ்பூன்
  • மாங்காய் பொடி ( ஆம்சூர் ) 1/2 டீ ஸ்பூன்
  • கரம் மசாலா பவுடர் 1/2 டீ ஸ்பூன்
  • தனியா பொடி 1 1/2 டீ ஸ்பூன்
  • மிளகாய் பொடி 1/2 to 1 டீ ஸ்பூன்
  • மஞ்சள் பொடி 1/4 டீ ஸ்பூன்
  • கொத்துமல்லி கொஞ்சம்


Method:
  • மிக்சி இல் வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி யை மையாக அரைத்துக் கொள்ளவும்.
  • வாணலி இல் எண்ணெய் மற்றும் நெய் விடவும்.
  • சீரகத்தை தாளிக்கவும், அரைத்ததை போட்டு நன்கு வதக்கவும்.
  • எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கணும்.
  • அத்துடன், பொடியாக நறுக்கின தக்காளி யை போட்டு நன்கு வதக்கவும்.
  • பிறகு நறுக்கி வைத்துள்ள உருளை மற்றும் வெந்த பட்டாணியை போடவும்.
  • கொஞ்சம் உப்பு போடவும்.
  • கொஞ்சம் வதங்கினதும், எல்லா பொடிகளையும் போடவும்.
  • அடுப்பை கொஞ்சம் தணித்து வைக்கவும்.
  • அப்பப்போ கிளறி விடவும்.
  • கொஞ்சம் 'கிரேவியாக' வேண்டுமானால் தண்ணீர் விடவும்; இல்லை உதிர் உதிராக வேண்டுமானால் அப்படியே கிளறி இறக்கிவிடவும்.
  • அவ்வளவு தான், சுவையான 'ஆலு மட்டர்' தயார்.
  • சப்பாத்தி மற்றும் சாதத்துடன் சாப்பிடலாம் .

ராஜஸ்த்தானி - கடி பகோடா

Ingredients:
  • 1 1 /2 கப் கடலை மாவு
  • 2 ஸ்பூன் மிளகாய் பொடி
  • அரை ஸ்பூன் ஓமம்
  • ஒரு சிட்டிகை பெருங்கயப்பொடி
  • கால் ஸ்பூன் சோடா உப்பு
  • 2 கப் திக்கான மோர்
  • அரை ஸ்பூன் வறுத்து பொடித்த வெந்தயப்பொடி
  • அல்லது காய்ந்த வெந்தய கீரை
  • கறிவேப்பிலை
  • உப்பு
  • பொரிக்க எண்ணெய்


Method:
  • முதலில் ஒரு பேசினில் பாக்கி ஒரு கப் கடலை மாவை போட்டு, ஓமம், சோடா உப்பு, கொஞ்சம் மிளகாய் பொடி, உப்பு போடவும்.
  • தண்ணீர் விட்டு பகோடா மாவு போல கரைக்கவும்.
  • ஒரு பக்கமாய் வைக்கவும்.
  • மோரை நன்கு குழப்பவும்.
  • உப்பு, அரை கப் கடலை மாவு, கொஞ்சம் மிளகாய் பொடி, வெந்தய பொடி அல்லது பொடித்த வெந்தய கீரை போட்டு நன்கு கலக்கவும்.
  • மாவு கட்டி தட்டாமல் நன்கு கலக்கவும்.
  • வாணலி இல் எண்ணெய் துளிவிட்டு கொஞ்சம் ஓமம் மற்றும் கறிவேப்பிலை தாளிக்கவும்.
  • கரைத்த மோரை அதில் விடவும்.
  • அது கொதிக்கட்டும். இது தான் 'கடி'
  • வாணலி இல் எண்ணெய் வைக்கவும்.
  • சூடான எண்ணெய் இல் கரைத்து வைத்துள்ள மாவை எடுத்து பக்கோடாக்கள் போல போடவும்.
  • நல்ல பவுன் நிறத்தில் எடுத்து , கொதித்துக்கொண்டிருக்கும் 'கடி' இல் போடவும்.
  • இது போல எல்லா மாவும்ஆகும் வரை செய்யவும்.
  • பக்கோடாக்கள் மொத்தமும் போட்டதும் ஒரு கொதி வரும் வரை காத்திருக்கவும்.
  • பிறகு 'கடி பகோடாவை' அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.
  • இது ஒரு ராஜஸ்த்தானி டிஷ் , சப்பாத்திக்கு பூரிக்கு ரொம்ப நன்னா இருக்கும்.

பஞ்சாபி - மேத்தி மலாய் மசாலா 2

Ingredients:
  • வெந்தய கீரை - ஒரு பெரிய கட்டு ( ஆய்ந்து, சுத்தப்படுத்தி நறுக்கி வைக்கவும் )
  • வெங்காயம் - 2 - மிகவும் பொடியாக நறுக்கவும்
  • பூண்டு - 4 - 5 பல் - மிகவும் பொடியாக நறுக்கவும்
  • பச்சை மிளகாய் - 2 - மிகவும் பொடியாக நறுக்கவும்
  • ஏலம்1, கிராம்பு1, பட்டை 1 இன்ச் துண்டு, சீரகம் 1/2 ஸ்பூன், 1 பிரிஞ்சி இலை (நன்கு பொடிக்கவும்; இது தான் இதன் மசாலா )
  • ஏலம்1, கிராம்பு1, பட்டை 1 இன்ச் துண்டு, சீரகம் 1/2 ஸ்பூன், 1 பிரிஞ்சி இலை - இதை அப்படியே முழுசாக போட வைத்து கொள்ளுங்கள் .
  • ஃபிரெஷ் கிரீம் - 1/4 கப்
  • மாங்காய் பொடி - 1 ஸ்பூன் (ஆம்சுர் என் கடைகளில் விற்க்கும்)
  • மிளகாய் பொடி - 1/2 ஸ்பூன்
  • சர்க்கரை 1/2 ஸ்பூன்
  • பால் - 1 கப் (ஃபுல் கிரீம் மில்க் )
  • உப்பு
  • எண்ணை - 2 டேபிள் ஸ்பூன்


Method:
  • வாணலி இல் எண்ணை விட்டு ஏலம்1, கிராம்பு1, பட்டை 1 இன்ச் துண்டு, சீரகம் 1/2 ஸ்பூன், 1 பிரிஞ்சி இலை போட்டு வறுக்கவும்.
  • வாசனை வந்ததும், நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாய் , பூண்டு போட்டு வதக்கவும்.
  • இப்ப பொடித்து வைத்துள்ள மசாலா பொடியை போடவும். கருகாமல் வதக்கவும்.
  • நறுக்கி வைத்துள்ள வெந்தய கீரையை போடவும்.
  • நன்கு கிளறவும், கீரை பாதி வெந்ததும் பாலை விடவும்.
  • கீரை வேகும் வரை அப்ப அப்ப கிளறவும்.
  • ஆம்சுர், மிளகாய் பொடி மற்றும் சர்க்கரை போடவும்.
  • கிளறவும். உப்பு போடவும்.
  • கிரீம் போடவும். நல்லா கொதித்ததும் இறக்கவும்.
  • சப்பாத்தி - நான் - உடன் பரிமாறவும்.


Notes:
  • இது ஃபிரெஷ் மேத்தி யால் செய்வது. அதாவது வெந்தய கீரையால் செய்வது. கீரை யை மெட்ராஸ் ல வாங்காதீங்க அது குட்டியாக இருக்கும். கொழ கொழ ப்பாக இருக்கும். வட இந்தியாவில் விற்கும்கீரை இல் செய்வது இது.
  • இதில் பச்சை சோளம் அல்லது பச்சை பட்டாணி சேர்ப்பதுண்டு.

பஞ்சாபி - மேத்தி மலாய் மசாலா

Ingredients:
  • பனீர் - 250 கிராம் ( துண்டமாக்கவும்)
  • காய்ந்த மேத்தி இலைகள் ( கசூர் மேத்தி - கடைகளில் கிடைக்கும் ) - 2 டேபிள் spoon
  • மலாய் ( பால் ஏடு) - 4 டேபிள் ஸ்பூன்
  • முந்திரி விழுது - 1/2 கப்
  • மிளகு பொடி - 1 ஸ்பூன்
  • சீரகம் - 1/2 ஸ்பூன்
  • பால் - 1/2 கப்
  • எண்ணை - 2 ஸ்பூன்
  • உப்பு
  • தண்ணீர் 1/4 கப்


Method:
  • ஒரு வாணலி இல் எண்ணை விட்டு சீரகம் போடவும்.
  • அது பொரிந்ததும் , வெந்தய கீரையை கையால் நொறுக்கி போடவும்.
  • ஒரு கிளறு கிளறி, முந்திரி விழுது, பால் ஏடு போட்டு நன்கு கிளறவும்.
  • எண்ணை பிரிந்து வரும்வரை நன்கு வதக்கவும்.
  • உப்பு மற்றும் மிளகு தூள் போடவும்.
  • நன்கு கலக்கவும்
  • பிறகு பால் மற்றும் தண்ணீர் விடவும்.
  • நன்கு கலக்கவும் , ஒரு கொதி வந்ததும் , நறுக்கி வைத்துள்ள பனீர் துண்டங்களை
  • போடவும்.
  • மறுபடி ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.
  • சுவையான பஞ்சாபி "மேத்தி மலாய் மசாலா " தயார்.
  • சப்பாத்தி அல்லது நான் உடன் பரிமாறவும்.

Tuesday, June 23, 2015

பனீர் பட்டர் மசாலா

பனீர் பட்டர் மசாலா


தேவையானவை:

பனீர் - 200 கிராம்
பெரிய வெங்காயம் - 3
தக்காளி 4
இஞ்சி, பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன்
மிளகாய்த் தூள் - 2 டேபிள் ஸ்பூன்
தனியா தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா தூள் - அரை டீஸ்பூன்
வெண்ணெய் - 50 கிராம்
ப்ரெஷ் க்ரீம் - 2 டேபிள் ஸ்பூன் (பசும் பாலை சற்று அகலமான பாத்திரத்தில் ஊற்றி, இரண்டு மணிநேரம் ப்ரிட்ஜில் வைத்திருந்தால், பாலின் மீது அடர்த்தியாக ஏடு படியும். அது போறும் புன்னகை )
காய்ந்த வெந்தயக் கீரை - 2 டீஸ்பூன்.


செய்முறை:
பனீரை சிறு துண்டுகளாக்குங்கள்.
வெங்காயம், தக்காளியைத் தனித்தனியே அரையுங்கள்.
வாணலியில் வெண்ணெயைப் போட்டு லேசாக உருக்குங்கள்.
அதில் வெங்காயம், இஞ்சி, பூண்டு விழுதைச் சேர்த்து, அடுப்பை ஸிம்மில் வையுங்கள்.
வாணலியில் உள்ளவை நிறம் மாறி, பச்சை வாசனை போகும் வரை வதக்குங்கள்.
பிறகு அதனுடன் மிளகாய்த் தூள், தனியா தூள், தக்காளி விழுது சேர்த்து, கொதிக்கவிடுங்கள்.
கடைசியாக, பனீர் துண்டுகள், கரம் மசாலா, உப்பு, காய்ந்த வெந்தயக் கீரை சேர்த்து 5 நிமிடம் கிளறி இறக்குங்கள்.
ப்ரெஷ் க்ரீமை மேலாக ஊற்றிப் பரிமாறுங்கள்.
குழந்தைகள் விரும்பும் சத்தான சைட் டிஷ், இந்த பனீர் பட்டர் மசாலா!

பூரி...சாகு

பூரி...சாகு - இது கர்நாடகா ஸ்பெஷல் என்றே சொல்லலாம்

பூரி செய்வது எல்லோருக்கும் தெரிந்ததுதான்.

சாகு செய்யத் தேவையானவை:

காலிஃப்ளவர் 1 கப்
உருளைக்கிழங்கு 1 கப் பொடியான நறுக்கவும்
வெங்காயம் 1 பொடியான நறுக்கவும்
பட்டாணி 1/2 கப்
காரட் 1/2 கப் பொடியாக நறுக்கியது
பச்சை சோளம் 1/2 கப்
கடலைமாவு 1 டேபிள்ஸ்பூன்
vegetable stock 1 கப் ( முடிந்தால் )
உப்பு
எண்ணெய் கொஞ்சம்

அரைக்க:

துருவிய தேங்காய் 1 கப்
பட்டை 1 துண்டு
கிராம்பு 2
சீரகம் 1 டீஸ்பூன்
இஞ்சி 1 துண்டு
கசகசா 1 டீஸ்பூன்
பச்சைமிளகாய் 2
கொத்தமல்லி 1/2 கப்

தாளிக்க:

கடுகு 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை 1கொத்து
பெருங்காயம 1/2 டீஸ்பூன்

செய்முறை :

வெங்காயத்தை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
மற்ற காய்கறிகளை சிறிது உப்பு சேர்த்துவேகவைக்கவும்.
அரைக்கக் கொடுத்துள்ளவைகளை நன்றாக விழுது போல அரைத்துக்கொள்ளவும்.
ஒரு வாணலி il எண்ணைய் விட்டு தாளிக்க வேண்டியவைகளை தாளித்து வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கவும்.
பின்னர் வேகவைத்த காய்கறிகள் மற்றும் அரைத்த விழுது சேர்க்கவும்.
இதனுடன் vegetable stock அல்லது தண்ணீர் ஒரு கப்,தேவையான உப்பு சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.
எல்லாம் சேர்ந்து கொதித்தவுடன் கடலை மாவை கால் கப் தண்ணீரில் கரைத்து சேர்த்து கொதிக்கவிடவும்.
கைவிடாமல் கிளறவும்.
நன்கு கொதிக்க ஆரம்பித்ததும் இறக்கி கொத்துமல்லி தூவி வைக்கவும்.
பூரியுடன் பரிமாறவும்.

குறிப்பு: இதை தோசை யுடனும் கூட பரிமாறலாம். முக்கியமானது என்ன வென்றால்.... கடலை மாவு போட்டு கொதிக்கவைப்பதால் வெகுநேரம் வைத்திருக்க முடியாது, ஒரே வேளை இல் பயன்படுத்தி விடவேண்டும். சரியா?


'ஆலு மட்டர்' - உருளை கிழங்கு , பட்டாணி காய்

'ஆலு மட்டர்' - உருளை கிழங்கு , பட்டாணி காய்


தேவையானவை :

வேகவைத்த உருளை கிழங்கு 2 -3 (தோலுரித்து, சதுரமாக வெட்டிக்கொள்ளவும்)
பச்சை பட்டாணி - வேகவைத்தது 1 கப்
வெங்காயம் - 1 - பொடியாக நறுக்கிகொள்ளவும்
பச்சைமிளகாய் - 2
இஞ்சி - 1 துண்டு தோலெடுத்து , துருவிக்கொள்ளவும்
பெங்களூர் தக்காளி 2 - விதை எடுத்து பொடியாக நறுக்கவும்
உப்பு
சீரகம் 1 டீ ஸ்பூன்
எண்ணெய் 1 டீ ஸ்பூன்
நெய் 1 டீ ஸ்பூன்
மாங்காய் பொடி ( ஆம்சூர் ) 1/2 டீ ஸ்பூன்
கரம் மசாலா பவுடர் 1/2 டீ ஸ்பூன்
தனியா பொடி 1 1/2 டீ ஸ்பூன்
மிளகாய் பொடி 1/2 to 1 டீ ஸ்பூன்
மஞ்சள் பொடி 1/4 டீ ஸ்பூன்
கொத்துமல்லி கொஞ்சம்

செய்முறை:

மிக்சி இல் வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி யை மையாக அரைத்துக் கொள்ளவும்.
வாணலி இல் எண்ணெய் மற்றும் நெய் விடவும்.
சீரகத்தை தாளிக்கவும், அரைத்ததை போட்டு நன்கு வதக்கவும்.
எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கணும்.
அத்துடன், பொடியாக நறுக்கின தக்காளி யை போட்டு நன்கு வதக்கவும்.
பிறகு நறுக்கி வைத்துள்ள உருளை மற்றும் வெந்த பட்டாணியை போடவும்.
கொஞ்சம் உப்பு போடவும்.
கொஞ்சம் வதங்கினதும், எல்லா பொடிகளையும் போடவும்.
அடுப்பை கொஞ்சம் தணித்து வைக்கவும்.
அப்பப்போ கிளறி விடவும்.
கொஞ்சம் 'கிரேவியாக' வேண்டுமானால் தண்ணீர் விடவும்; இல்லை உதிர் உதிராக வேண்டுமானால் அப்படியே கிளறி இறக்கிவிடவும்.
அவ்வளவு தான், சுவையான 'ஆலு மட்டர்' தயார்.
சப்பாத்தி மற்றும் சாதத்துடன் சாப்பிடலாம் புன்னகை .

Blog Archive