Ingredients:
- ஒபர்ஜினி என்று சொல்லப்படும் குண்டு கத்தரிக்காய் 1 பெரியது
- புளி பேஸ்ட் 1 டீ ஸ்பூன்
- மிளகாய் வற்றல் 4 - 5
- எண்ணை 4 டீ ஸ்பூன்
- கடுகு 1/ 2 ஸ்பூன்
- உளுத்தம் பருப்பு 1/2 ஸ்பூன்
- கருவேப்பிலை கொஞ்சம்
- உப்பு தேவையான் அளவு
- பெருங்காயபொடி 1/4 ஸ்பூன்
Method:
- கத்தரிக்காயை அலம்பி துடைத்து, அதன் மேலே கொஞ்சம் எண்ணெய் தவடவும்.
- காஸ் அடுப்பில், மெல்லிய தணலில் நன்றாக சுட்டுக்கொள்ளவும்.
- எல்லா பக்கமும் நன்கு வேகணும்.
- பக்கத்தில் ஒரு பேசினில் தண்ணி வைத்துக்கொண்டு, சுட்ட கத்தரிக்காயை அதில் போடவும்.
- ஆறினதும் தோலை எடுக்கவும்.
- நன்கு பிசைந்து வைத்துக்கொள்ளவும்.
- புளி பேஸ்ட் மற்றும் உப்பு போட்டு, கொஞ்சம் தண்ணிர் விட்டு கரைக்கவும்.
- வாணலி இல் அல்லது இலுப்பக்கரண்டி இல் கடுகு, உளுந்து, பெருங்காயபொடி, கறிவேப்பிலை தாளித்து இதன் மீது கொட்டவும்.
- அருமையான சுட்ட கத்தரிக்காய் கொத்சு ரெடி.
- அரிசி உப்புமாவுடன் ரொம்ப நல்லா இருக்கும்.
Notes:
- உப்புமா கொழுக்கட்டைக்கும் இது நல்லா இருக்கும்
Ingredients:
- விதை இல்லாத பிஞ்சு கத்திரிக்காய் - 5 - 6 (பொடியாக நறுக்கவும்)
- தக்காளி - 2 (விதை எடுத்து பொடியாக நறுக்கவும் )
- எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
- கடுகு - 1 டீஸ்பூன்
- சீரகம் - 1 டீஸ்பூன்
- கறிவேப்பிலை - சிறிது
- பூண்டு - 4 பற்கள்
- மிளகாய் பொடி - 1 டீஸ்பூன்
- மஞ்சள் பொடி - 1 டீஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
- புளிபேஸ்ட் - 1 டீ ஸ்பூன்
Method:
- ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் விட்டு, கடுகு, சீரகம், பூண்டு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
- பின்னர் அதில் கத்திரிக்காய் மற்றும் தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாக வதக்கவும்.
- பின்பு அதில் உப்பு, மிளகாய் பொடி மற்றும் மஞ்சள் பொடி சேர்த்து கிளறி, பின் புளிபேஸ்ட் சேர்த்து சிறிது நேரம் வதக்கி இறக்கினால், கத்திரிக்காய் தக்காளி கொஸ்து ரெடி!!!
Ingredients:
- சோயா சங் 1 கப்
- வெங்காயம் பொடியாக நறுக்கினது 1/2 கப்
- தக்காளி விதை நீக்கி பொடியாக நறுக்கினது 1/ 4 கப்
- பூண்டு பொடி 1 ஸ்பூன்
- துளி எண்ணைவிட்டு வறுத்து அரைத்த மிளகாய் பொடி 1 ஸ்பூன்
- மஞ்சள் பொடி 1/2 ஸ்பூன்
- கரம் மசாலா 1/2 ஸ்பூன்
- பச்சை மிளகாய் பொடியான நறுக்கினது 1 டேபிள் ஸ்பூன்
- உப்பு
- எண்ணெய் 2 டேபிள் ஸ்பூன்
Method:
- முதலில் சோயா சங் ஐ நன்கு அலசி தண்ணீரில் ஊறவைக்கவும்.
- நன்கு ஊறினதும் பிழிந்து, மிக்சி இல் பொடியாக துருவவும்.
- வாணலி இல் எண்ணைவிட்டு, பச்சை மிளகாய் தாளிக்கவும்.
- வெங்காயம் தக்காளி போட்டு வதக்கவும்.அரைத்து வைத்ததை கொட்டவும்.
- நன்கு கிளறவும்.
- பூண்டு பொடி, மிளகாய் பொடி, மஞ்சள் பொடி, கரம் மசாலா மற்றும் உப்பு போடவும்.
- நன்கு கிளறிவிடவும்; அது எல்லாமாக சேர்ந்து 'தொக்கு' போல ஆனதும் இறக்கிவிடவும்.
- அவ்வளவுதான், super taste 'சோயா சங் மசாலா' ரெடி.
- சப்பாத்தி , குபூஸ், 'நான்' எல்லாவற்றுக்கும் தொட்டுக்கொள்ளலாம்.
- இல்லை தோசைக்கு உள்ளே வைக்கும் மசாலாவாகவும் உபயோகிக்கலாம்.
- அல்லது பிரட் உள்ளே வைத்து சண்ட்விச் செய்யலாம்
Ingredients:
- முட்டை கோஸ் நறுக்கியது 2 கப்
- உப்பு
- மஞ்சள் பொடி ( தேவையானால் )
- பூண்டு 4 - 5 பல் (அரைக்க)
- பச்சை மிளகாய் 4 - 5 (அரைக்க)
- தனியா 1 டேபிள் ஸ்பூன் (அரைக்க)
- பட்டை 1 துண்டு (அரைக்க)
- தேங்காய்த் துருவல் 1 கப் (அரைக்க)
- பொட்டுக்கடலை 1 டேபிள் ஸ்பூன் (அரைக்க)
- கறிவேப்பிலை (அரைக்க)
- குழப்பிய கெட்டி மோர் 1 கப் (அரைக்க)
Method:
- வாணலி இல் கொஞ்சம் தண்ணீர் விட்டு நறுக்கிய கோஸ் ஐ போட்டு, மூடி வேகவைக்கவும்..
- அரைக்கக் கொடுத்துள்ளவற்றைத் தனியே அரைத்துக் கொள்ளுங்கள்.
- மற்றும் ஒரு வாணலி இல் எண்ணைவிட்டு, அரைத்த விழுது சேர்த்து, பச்சை வாசனை போக வதக்குங்கள்.
- பிறகு, வேகவைத்த கோஸ், உப்பு, சேர்த்து, 5 நிமிடம் கொதிக்கவிட்டுங்கள்.
- அடுப்பை சிம் இல் வைத்து, குழப்பி வைத்துள்ள கெட்டி மோரை விட்டு , நன்கு கிளறி 2 நிமிடம் கொதிக்க விடுங்கள்.
- பிறகு கறிவேப்பிலை போட்டு இறக்குங்கள்.
- வாசனையான முட்டை கோஸ் தயிர் குருமா ரெடி!
- சப்பாத்தி பூரிக்கு ரொம்ப நல்லா இருக்கும்.
- எங்க வீட்டில் ஹிட் இது !
Notes:
- தேவையானால் மஞ்சள் பொடி போடலாம், கொஞ்சம் கலர் ஆக இருக்கும
Ingredients:
- இங்கிலீஷ் காய்கறிகள் (கேரட், பீன்ஸ், பட்டாணி, உ. கிழங்கு போன்றவை) சிறிய சதுரத் துண்டுகளாக நறுக்கியது 2 கப்
- வெங்காயம் 2
- உப்பு
- பூண்டு 10 பல் (அரைக்க)
- பச்சை மிளகாய் 10 -12 (அரைக்க)
- தனியா 1 டேபிள் ஸ்பூன்(அரைக்க)
- பட்டை 1 துண்டு (அரைக்க)
- தேங்காய்த் துருவல் 1 கப் (அரைக்க)
- பொட்டுக்கடலை 1 டேபிள் ஸ்பூன் (அரைக்க)
- பட்டை, லவங்கம், ஏலக்காய் தலா 2 (தாளிக்க)
- எண்ணெய் 2 - 3 டேபிள் ஸ்பூன் (தாளிக்க)
Method:
- காய்கறிகளுடன் சிறிது உப்பும் முக்கால் கப் தண்ணீரும் சேர்த்து, குக்கரில் ஒரு விசில் வைத்து இறக்குங்கள
- வெங்காயத்தை பொடியாக நறுக்கிவையுங்கள்.
- அரைக்கக் கொடுத்துள்ளவற்றைத் தனியே அரைத்துக் கொள்ளுங்கள்.
- வாணலி இல் எண்ணெயைக் காயவைத்து, தாளிக்கும் பொருள்களைச் சேர்த்து, பின் வெங்காயம் சேர்த்து வதக்குங்கள்.
- வெங்காயம் வதங்கியதும், அரைத்த விழுது சேர்த்து, பச்சை வாசனை போக வதக்குங்கள்.
- பிறகு, வேகவைத்த காய்கறி, உப்பு, தேவையான தண்ணீர் சேர்த்து, 5 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்குங்கள்.
- வாசனையான வெஜிடபிள் தயிர் குருமா ரெடி.
Notes:
- காலிஃப்ளவர் சேர்க்க விரும்பினால், தனியே உப்பு நீரில் போட்டு ஒரு 10 நிமிஷம் கழித்து எடுத்து, துண்டுகளாக்கி, தனியே வாணலி il வேகவைத்து சேர்க்கவேண்டும். குக்கரில் போடக்கூடாது. ரொம்ப குழைந்து விடும்.
- தேவையானால் மஞ்சள் பொடி போடலாம், கொஞ்சம் கலர் ஆக இருக்கும
Ingredients:
- 500 Gms. உருளைக்கிழங்கு
- 250 கிராம் வெங்காயம் - பொடியாக நறுக்கவும்.
- 2 - 4 பச்சை மிளகாய்
- 1 துண்டு இஞ்சி
- 2 -4 பல்லு பூண்டு
- 1/2 ஸ்பூன் கடுகு
- 1/2 ஸ்பூன் உளுந்து
- 1/2 கடலை பருப்பு
- உப்பு
- கொஞ்சம் எண்ணெய்
- மஞ்சள் பொடி கொஞ்சம்
- கறிவேப்பிலை கொத்துமல்லி கொஞ்சம்
Method:
- உப்பு போட்டு உருளைக்கிழங்கை வேகவைத்துக்கொள்ளவும்.
- ஆறினதும் , தோலுரித்து,உதிர்த்து வைத்துக்கொள்ளவும்.
- வாணலி இல் எண்ணெய் விட்டு தாளிக்கவும்.
- பச்சைமிளகாய், இஞ்சி பூண்டு போட்டு வதக்கவும்.
- பிறகு, வெங்காயம் போடவும், வதக்கவும்.
- இப்போது உருளைக்கிழங்கை போடவும்.
- மெதுவாக கிளறிவிடவும்.
- கொஞ்சமாய் உப்பு போடவும். ( ஏற்கனவே கிழங்கில் போட்டிருக்கோம் )
- கொஞ்சமாய் தண்ணீர் விடவும்.
- அடுப்பை சிம் இல் வைக்கவும்.
- அப்பப்போ கிளறி விடணும் .
- நன்கு சேர்ந்து வரும்போது, கிளறி கொத்துமல்லி, கறிவேப்பிலை போட்டு ஒரு கிளறு கிளறி இறக்கிடுங்கோ.
- அருமையான உருளைக்கிழங்கு மசாலா தயார்.
- இது பூரி இன் இணை என்றே சொல்லலாம்...அவ்வளவு இருக்கும்.
Notes:
- பூரி கிழங்கு என்று நம் தமிழ் நாட்டில் அன்பாக சொல்லப்படும் 'டிஷ்' இது
Ingredients:
- 500 Gms. உருளைக்கிழங்கு
- 250 கிராம் வெங்காயம் - பொடியாக நறுக்கவும்.
- 2 டீ ஸ்பூன் - மிளகாய் பொடி
- 1/2 ஸ்பூன் கடுகு
- 1/2 ஸ்பூன் உளுந்து
- 1/2 கடலை பருப்பு
- உப்பு , கொஞ்சம் எண்ணெய்
- மஞ்சள் பொடி கொஞ்சம்
Method:
- உப்பு போட்டு உருளைக்கிழங்கை வேகவைத்துக்கொள்ளவும்.
- ஆறினதும் , தோலுரித்து, சதுரத்துண்டுகளாய் நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
- வாணலி இல் எண்ணெய் விட்டு தாளிக்கவும்.
- பிறகு, வெங்காயம் போடவும், வதக்கவும்.
- இப்போது வெட்டி வைத்துள்ள உருளைக்கிழங்கை போடவும்.
- மெதுவாக கிளறிவிடவும்.;மிளகாய் பொடி போடவும்.
- கொஞ்சமாய் உப்பு போடவும். ( ஏற்கனவே கிழங்கில் போட்டிருக்கோம் )
- அடுப்பை சிம் இல் வைக்கவும்.
- அது மெல்ல மெல்ல வதங்கட்டும்.
- அப்பப்போ கிளறி விடணும் .
- நன்கு 'மொரு மொரு'பானதும், கறிவேப்பிலை போட்டு ஒரு கிளறு கிளறி இறக்கிடுங்கோ..அருமையான உருளைக்கிழங்கு கறி தயார்.
- இது சப்பாத்தி , பூரிக்கு ரொம்ப நல்லா இருக்கும்.
Notes:
- இது எங்கள் வீட்டில் எப்பவும் ஹிட். ................... 'தால் சாவல்' மற்றும் இந்த காய் செய்துவிட்டால் போறும் எங்களுக்கு
Ingredients:
- 1 கப் வேகவைத்த கொத்துக்கடலை
- 1 வெங்காயம் அல்லது ஒரு கொத்து வெங்காயத்தாள்
- 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
- 1/2 ஸ்பூன் கடுகு
- 1/2 ஸ்பூன் சீரகம்
- கொத்துமல்லி தழை - 1 டேபிள் ஸ்பூன்
- உப்பு
- எண்ணெய் கொஞ்சம்
- 1/4 ஸ்பூன் மஞ்சள் பொடி
Method:
- வாணலி இல் எண்ணெய் விட்டு, கடுகு சீரகம் தாளிக்கவும்.
- அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் ஐ போடவும்.
- கொஞ்சம் வதக்கவும்.
- பொடியாக நறுக்கின வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
- மஞ்சள் பொடி போடவும், அத்துடன் வெந்த கொத்து கடலையை போட்டு நன்கு மசிக்கவும்.
- 1/2 கப் தண்ணீர் விட்டு, மீண்டும் நன்கு மசிக்கவும்.
- உப்பு போட்டு கலக்கவும்.
- நன்கு கொதித்து சேர்ந்தாற்போல வந்ததும் கொத்துமல்லி தூவி இறக்கவும்.
- அருமையான கொத்துக்கடலை மசாலா ரெடி.
- பூரி மற்றும் சப்பாத்தி க்கு நல்லா இருக்கும்
Notes:
- வேண்டுமானால் கொத்துக்கடலை வேகும்போதே உப்பு போடலாம்.
- வேண்டுமானால் கொஞ்சம் கரம் மசாலா போடலாம்
Ingredients:
- வேகவைத்த கொத்துக்கடலை 1 கப் ( கடைகளில் கிடைக்கும் டின் கூட ஓகே தான் )
- பூண்டு பொடி 1 ஸ்பூன்
- மிளகாய் பொடி 1 ஸ்பூன்
- மஞ்சள் பொடி 1/2 ஸ்பூன்
- கரம் மசாலா 1/2 ஸ்பூன்
- உப்பி
- எண்ணெய் 1 ஸ்பூன்
Method:
- மிக்சி இல் வெந்த கொத்துகடலையை விழுதாக அரைக்கவும்.
- நீங்கள் 'டின்' கொத்து கடலை உபயோகிப்பதாக இருந்தால், அதை பலமுறை நன்கு அலசவும்.
- உப்பு போடும்போது குறைத்து போடவும்.
- வாணலி இல் எண்ணைவிட்டு, எல்லா பொடிகளையும் போட்டு நன்கு வறுக்கவும்.
- அரைத்து வைத்ததை கொட்டவும்.
- நன்கு பேஸ்ட் போல ஆனதும் இறக்கிவிடவும்.
- அவ்வளவுதான், super taste 'கொத்துக்கடலை மசாலா' ரெடி.
- சப்பாத்தி , குபூஸ், 'நான்' எல்லாவட்ட்ருக்கும் தொட்டுக்கொள்ளலாம்.
Ingredients:
- கொள்ளு 1 கப்
- வெங்காயம் 1 பொடியாக நறுக்கவும்
- பச்சை மிளகாய் 2 - 3
- தக்காளி 1 பொடியாக நறுக்கவும்
- உப்பு
- கொத்துமல்லி
- கடுகு,சீரகம் - 1 ஸ்பூன் (தாளிக்க)
- கொஞ்சம் எண்ணெய் (தாளிக்க)
Method:
- முதலில் கொள்ளை இரவே ஊறப்போடவும்.
- அல்லது குறைந்த பக்ஷம் 2 மணி நேரமாவது அது ஊறட்டும்.
- மறுநாள் கொஞ்சம் உப்பு போட்டு குக்கரில் வேகவைக்கவும்.
- வாணலி இல் எண்ணைவிட்டு, கடுகு,சீரகம் தாளிக்கவும்.
- பிறகு வெங்காயம், தக்காளி போட்டு வதக்கவும்.
- அது வதங்கினதும், வெந்த கொள்ளை போடவும்.
- நிறத்துக்கு தேவையானால் மஞ்சள் பொடி போடலாம்.
- அது கொதித்து கெட்டியானதும் கொத்துமல்லி தூவி இறக்கவும்.
- அருமையான 'கொள்ளு தால் ' ரெடி.
- இதை சப்பாத்தி , பூரி அல்லது சாதத்துடன் பரிமாறலாம்
Ingredients:
- இங்கிலீஷ் காய்கறிகள் (கேரட், பீன்ஸ், பட்டாணி, உ. கிழங்கு போன்றவை) சிறிய சதுரத் துண்டுகளாக நறுக்கியது 2 கப்
- வெங்காயம் 2
- தக்காளி 3
- தேங்காய்த் துருவல் 1 கப்
- பொட்டுக்கடலை 1 டேபிள் ஸ்பூன்
- உப்பு
- பட்டை, லவங்கம், ஏலக்காய் தலா 2 (தாளிக்க)
- எண்ணெய் 2 - 3 டேபிள் ஸ்பூன் (தாளிக்க)
- இஞ்சி 1 துண்டு (அரைக்க)
- பூண்டு 5 பல் (அரைக்க)
- சோம்பு அரை டீஸ்பூன் (அரைக்க)
- பச்சை மிளகாய் 5 -6 (அரைக்க)
Method:
- காய்கறிகளுடன் சிறிது உப்பும் முக்கால் கப் தண்ணீரும் சேர்த்து, குக்கரில் ஒரு விசில் வைத்து இறக்குங்கள
- வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கிவையுங்கள்.
- அரைக்கக் கொடுத்துள்ளவற்றைத் தனியே அரைத்துக் கொள்ளுங்கள்.
- தேங்காய்த் துருவலையும் பொட்டுக்கடலையையும் நன்கு அரைத்துத் தனியே வையுங்கள்.
- வாணலி இல் எண்ணெயைக் காயவைத்து, தாளிக்கும் பொருள்களைச் சேர்த்து, பின் வெங்காயம் சேர்த்து வதக்குங்கள். வெங்காயம் வதங்கியதும், தக்காளி, அரைத்த விழுது சேர்த்து, பச்சை வாசனை போக வதக்குங்கள்.
- பிறகு, வேகவைத்த காய்கறி, அரைத்த தேங்காய்க் கலவை, உப்பு, தேவையான தண்ணீர் சேர்த்து, 5 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்குங்கள்.
- வாசனையான வெஜிடபிள் குருமா ரெடி!
Notes:
- காலிஃப்ளவர் சேர்க்க விரும்பினால், தனியே உப்பு நீரில் போட்டு ஒரு 10 நிமிஷம் கழித்து எடுத்து, துண்டுகளாக்கி, தனியே வாணலி il வேகவைத்து சேர்க்கவேண்டும்.
- குக்கரில் போடக்கூடாது. ரொம்ப குழைந்து விடும்.
- தேவையானால் மஞ்சள் பொடி போடலாம், கொஞ்சம் கலர் ஆக இருக்கும்
Ingredients:
- பட்டாணி 1 கப்,
- பனீர் 200 கிராம்,
- வெங்காயம் 2
- தக்காளி 5,
- இஞ்சி, பூண்டு அரைத்த விழுது,
- முந்திரி அரைத்த விழுது தலா 1 டேபிள் ஸ்பூன்,
- மிளகாய்த் பொடி 2 டீஸ்பூன்,
- தனியா பொடி 1 டீஸ்பூன்,
- மஞ்சள் பொடி கால் டீஸ்பூன்,
- சீரகத்தூள் அரை டீஸ்பூன்,
- கரம் மசாலா பொடி அரை டீஸ்பூன்,
- எண்ணெய் 2 டேபிள் ஸ்பூன்,
- நெய் 1 டேபிள் ஸ்பூன்,
- உப்பு
Method:
- பட்டாணியை துளி உப்பு சேர்த்து தனியாக வேகவைத்துக் கொள்ளுங்கள்.
- வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்குங்கள்.
- வாணலியில் எண்ணெயும் நெய்யும் விட்டு வெங்காயம் சேர்த்து நன்கு நிறம் மாறும்வரை வதக்குங்கள்.
- அதனுடன் தக்காளி, இஞ்சி, பூண்டு விழுது, மிளகாய்த் தூள், தனியா தூள், மஞ்ச பொடி , உப்பு சேர்த்து பச்சை வாசனை போக வதக்குங்கள்.
- பின்னர் அத்துடன், சிறு துண்டுகளாக நறுக்கிய பனீர், வேகவைத்த பட்டாணி, முந்திரி விழுது ஆகியவற்றைச் சேருங்கள்.
- கால் கப் தண்ணீர், கரம் மசாலா தூள், சீரகத்தூள் சேர்த்து கொதிக்கவிடுங்கள் .
- ஒரு 2 நிமிடம் கொதித்ததும், நன்கு கிளறி இறக்குங்கள்.
- அசத்தலான மட்டர் பனீர் மசாலா ரெடி!
Ingredients:
- கத்தரிக்காய் - 5
- உருளைக்கிழங்கு 2
- பெரிய வெங்காயம் 2
- தக்காளி 4
- உப்பு
- கறிவேப்பிலை கொத்துமாள்ளி கொஞ்சம்
- பூண்டு - 2 பல்
- தேங்காய்த் துருவல் 1 கப் (அரைக்க)
- வற்றல் மிளகாய் 6-8 (அரைக்க)
- தனியா 1 டேபிள் ஸ்பூன் (அரைக்க)
- சீரகம், சோம்பு தலா அரை டீஸ்பூன் (அரைக்க)
- கடுகு அரை டீஸ்பூன் (தாளிக்க)
- சோம்பு கால் டீஸ்பூன் (தாளிக்க)
- பிரிஞ்சி இலை 1 (தாளிக்க)
- எண்ணெய் 3 டேபிள் ஸ்பூன் (தாளிக்க)
Method:
- முதலில், அரைக்கக் கொடுத்துள்ளவற்றை, நன்கு அரைத்துக்கொள்ளுங்கள்.
- பூண்டைத் தட்டிக்கொள்ளுங்கள்.
- கத்தரிக்காய், வெங்காயம், உ. கிழங்கு, தக்காளி ஆகியவற்றைப் பொடியாக நறுக்குங்கள்.
- வாணலி இல், எண்ணெய் விட்டு தாளிக்கும் பொருள்களை போட்டு தாளிக்கவும்.
- பின்னர், வெங்காயம் சேர்த்து அது வதங்கியதும், நறுக்கி வைத்துள்ள கத்தரிக்காய், உ. கிழங்கு, தக்காளி, அரைத்த விழுது, உப்பு சேர்த்து, மிதமான தீயில், பச்சை வாசனை போகும்வரை வதக்குங்கள்.
- உ. கிழங்கு வெந்ததும், நசுக்கிய பூண்டைச் சேர்த்து 2 நிமிடம் வதக்கி, தேவையான தண்ணீர் சேர்த்து, கறிவேப்பிலை, கொத்துமல்லி போட்டு, சில நிமிடம் கொதிக்கவிட்டு இறக்குங்கள்.
- இட்லி, தோசை, சப்பாத்திக்கு ஏற்ற ருசியான குருமா இது.
Ingredients:
- வேகவைத்த உருளை கிழங்கு 2 -3 (தோலுரித்து, சதுரமாக வெட்டிக்கொள்ளவும்)
- பச்சை பட்டாணி - வேகவைத்தது 1 கப்
- வெங்காயம் - 1 - பொடியாக நறுக்கிகொள்ளவும்
- பச்சைமிளகாய் - 2
- இஞ்சி - 1 துண்டு தோலெடுத்து , துருவிக்கொள்ளவும்
- பெங்களூர் தக்காளி 2 - விதை எடுத்து பொடியாக நறுக்கவும்
- உப்பு
- சீரகம் 1 டீ ஸ்பூன்
- எண்ணெய் 1 டீ ஸ்பூன்
- நெய் 1 டீ ஸ்பூன்
- மாங்காய் பொடி ( ஆம்சூர் ) 1/2 டீ ஸ்பூன்
- கரம் மசாலா பவுடர் 1/2 டீ ஸ்பூன்
- தனியா பொடி 1 1/2 டீ ஸ்பூன்
- மிளகாய் பொடி 1/2 to 1 டீ ஸ்பூன்
- மஞ்சள் பொடி 1/4 டீ ஸ்பூன்
- கொத்துமல்லி கொஞ்சம்
Method:
- மிக்சி இல் வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி யை மையாக அரைத்துக் கொள்ளவும்.
- வாணலி இல் எண்ணெய் மற்றும் நெய் விடவும்.
- சீரகத்தை தாளிக்கவும், அரைத்ததை போட்டு நன்கு வதக்கவும்.
- எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கணும்.
- அத்துடன், பொடியாக நறுக்கின தக்காளி யை போட்டு நன்கு வதக்கவும்.
- பிறகு நறுக்கி வைத்துள்ள உருளை மற்றும் வெந்த பட்டாணியை போடவும்.
- கொஞ்சம் உப்பு போடவும்.
- கொஞ்சம் வதங்கினதும், எல்லா பொடிகளையும் போடவும்.
- அடுப்பை கொஞ்சம் தணித்து வைக்கவும்.
- அப்பப்போ கிளறி விடவும்.
- கொஞ்சம் 'கிரேவியாக' வேண்டுமானால் தண்ணீர் விடவும்; இல்லை உதிர் உதிராக வேண்டுமானால் அப்படியே கிளறி இறக்கிவிடவும்.
- அவ்வளவு தான், சுவையான 'ஆலு மட்டர்' தயார்.
- சப்பாத்தி மற்றும் சாதத்துடன் சாப்பிடலாம் .
Ingredients:
- 1 1 /2 கப் கடலை மாவு
- 2 ஸ்பூன் மிளகாய் பொடி
- அரை ஸ்பூன் ஓமம்
- ஒரு சிட்டிகை பெருங்கயப்பொடி
- கால் ஸ்பூன் சோடா உப்பு
- 2 கப் திக்கான மோர்
- அரை ஸ்பூன் வறுத்து பொடித்த வெந்தயப்பொடி
- அல்லது காய்ந்த வெந்தய கீரை
- கறிவேப்பிலை
- உப்பு
- பொரிக்க எண்ணெய்
Method:
- முதலில் ஒரு பேசினில் பாக்கி ஒரு கப் கடலை மாவை போட்டு, ஓமம், சோடா உப்பு, கொஞ்சம் மிளகாய் பொடி, உப்பு போடவும்.
- தண்ணீர் விட்டு பகோடா மாவு போல கரைக்கவும்.
- ஒரு பக்கமாய் வைக்கவும்.
- மோரை நன்கு குழப்பவும்.
- உப்பு, அரை கப் கடலை மாவு, கொஞ்சம் மிளகாய் பொடி, வெந்தய பொடி அல்லது பொடித்த வெந்தய கீரை போட்டு நன்கு கலக்கவும்.
- மாவு கட்டி தட்டாமல் நன்கு கலக்கவும்.
- வாணலி இல் எண்ணெய் துளிவிட்டு கொஞ்சம் ஓமம் மற்றும் கறிவேப்பிலை தாளிக்கவும்.
- கரைத்த மோரை அதில் விடவும்.
- அது கொதிக்கட்டும். இது தான் 'கடி'
- வாணலி இல் எண்ணெய் வைக்கவும்.
- சூடான எண்ணெய் இல் கரைத்து வைத்துள்ள மாவை எடுத்து பக்கோடாக்கள் போல போடவும்.
- நல்ல பவுன் நிறத்தில் எடுத்து , கொதித்துக்கொண்டிருக்கும் 'கடி' இல் போடவும்.
- இது போல எல்லா மாவும்ஆகும் வரை செய்யவும்.
- பக்கோடாக்கள் மொத்தமும் போட்டதும் ஒரு கொதி வரும் வரை காத்திருக்கவும்.
- பிறகு 'கடி பகோடாவை' அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.
- இது ஒரு ராஜஸ்த்தானி டிஷ் , சப்பாத்திக்கு பூரிக்கு ரொம்ப நன்னா இருக்கும்.
Ingredients:
- வெந்தய கீரை - ஒரு பெரிய கட்டு ( ஆய்ந்து, சுத்தப்படுத்தி நறுக்கி வைக்கவும் )
- வெங்காயம் - 2 - மிகவும் பொடியாக நறுக்கவும்
- பூண்டு - 4 - 5 பல் - மிகவும் பொடியாக நறுக்கவும்
- பச்சை மிளகாய் - 2 - மிகவும் பொடியாக நறுக்கவும்
- ஏலம்1, கிராம்பு1, பட்டை 1 இன்ச் துண்டு, சீரகம் 1/2 ஸ்பூன், 1 பிரிஞ்சி இலை (நன்கு பொடிக்கவும்; இது தான் இதன் மசாலா )
- ஏலம்1, கிராம்பு1, பட்டை 1 இன்ச் துண்டு, சீரகம் 1/2 ஸ்பூன், 1 பிரிஞ்சி இலை - இதை அப்படியே முழுசாக போட வைத்து கொள்ளுங்கள் .
- ஃபிரெஷ் கிரீம் - 1/4 கப்
- மாங்காய் பொடி - 1 ஸ்பூன் (ஆம்சுர் என் கடைகளில் விற்க்கும்)
- மிளகாய் பொடி - 1/2 ஸ்பூன்
- சர்க்கரை 1/2 ஸ்பூன்
- பால் - 1 கப் (ஃபுல் கிரீம் மில்க் )
- உப்பு
- எண்ணை - 2 டேபிள் ஸ்பூன்
Method:
- வாணலி இல் எண்ணை விட்டு ஏலம்1, கிராம்பு1, பட்டை 1 இன்ச் துண்டு, சீரகம் 1/2 ஸ்பூன், 1 பிரிஞ்சி இலை போட்டு வறுக்கவும்.
- வாசனை வந்ததும், நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாய் , பூண்டு போட்டு வதக்கவும்.
- இப்ப பொடித்து வைத்துள்ள மசாலா பொடியை போடவும். கருகாமல் வதக்கவும்.
- நறுக்கி வைத்துள்ள வெந்தய கீரையை போடவும்.
- நன்கு கிளறவும், கீரை பாதி வெந்ததும் பாலை விடவும்.
- கீரை வேகும் வரை அப்ப அப்ப கிளறவும்.
- ஆம்சுர், மிளகாய் பொடி மற்றும் சர்க்கரை போடவும்.
- கிளறவும். உப்பு போடவும்.
- கிரீம் போடவும். நல்லா கொதித்ததும் இறக்கவும்.
- சப்பாத்தி - நான் - உடன் பரிமாறவும்.
Notes:
- இது ஃபிரெஷ் மேத்தி யால் செய்வது. அதாவது வெந்தய கீரையால் செய்வது. கீரை யை மெட்ராஸ் ல வாங்காதீங்க அது குட்டியாக இருக்கும். கொழ கொழ ப்பாக இருக்கும். வட இந்தியாவில் விற்கும்கீரை இல் செய்வது இது.
- இதில் பச்சை சோளம் அல்லது பச்சை பட்டாணி சேர்ப்பதுண்டு.
Ingredients:
- பனீர் - 250 கிராம் ( துண்டமாக்கவும்)
- காய்ந்த மேத்தி இலைகள் ( கசூர் மேத்தி - கடைகளில் கிடைக்கும் ) - 2 டேபிள் spoon
- மலாய் ( பால் ஏடு) - 4 டேபிள் ஸ்பூன்
- முந்திரி விழுது - 1/2 கப்
- மிளகு பொடி - 1 ஸ்பூன்
- சீரகம் - 1/2 ஸ்பூன்
- பால் - 1/2 கப்
- எண்ணை - 2 ஸ்பூன்
- உப்பு
- தண்ணீர் 1/4 கப்
Method:
- ஒரு வாணலி இல் எண்ணை விட்டு சீரகம் போடவும்.
- அது பொரிந்ததும் , வெந்தய கீரையை கையால் நொறுக்கி போடவும்.
- ஒரு கிளறு கிளறி, முந்திரி விழுது, பால் ஏடு போட்டு நன்கு கிளறவும்.
- எண்ணை பிரிந்து வரும்வரை நன்கு வதக்கவும்.
- உப்பு மற்றும் மிளகு தூள் போடவும்.
- நன்கு கலக்கவும்
- பிறகு பால் மற்றும் தண்ணீர் விடவும்.
- நன்கு கலக்கவும் , ஒரு கொதி வந்ததும் , நறுக்கி வைத்துள்ள பனீர் துண்டங்களை
- போடவும்.
- மறுபடி ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.
- சுவையான பஞ்சாபி "மேத்தி மலாய் மசாலா " தயார்.
- சப்பாத்தி அல்லது நான் உடன் பரிமாறவும்.