Ingredients:
- ஒருபத்து பீன்ஸ்
- ரெண்டு காரட்
- ஒரு கை உரித்த பச்சை பட்டாணி
- ரெண்டு வெங்காயம்
- நான்கு பச்சை மிளகாய்
- பத்து பல் பூண்டு
- ஒரு டேபிள் ஸ்பூன் துருவிய இஞ்சி
- நான்கு டீஸ்பூன் நெய்
- இரண்டு டீஸ்பூன் எண்ணெய்
- உப்பு
- பிரிஞ்சி இலை ஒன்று
- பாசுமதி அரசி ரெண்டு கப்
- ஒரு டீ ஸ்பூன் எலுமிச்சை சாறு
- குங்குமப் பூ பத்து பன்னிரண்டு இழைகள்
- பிரியாணி மசாலா பொடி அரைக்க :
- தனியா 2 டேபிள் ஸ்பூன்
- பிரிஞ்சி இலை 2
- மிளகாய் வற்றல் 4
- பட்டை 2
- கிராம்பு 1 டீ ஸ்பூன்
- சீரகம் 1 டீ ஸ்பூன்
- ஜாதி பத்திரி 2 பூ
- ஜாதிக்காய் சின்னது ஒன்று
- பெரிய ஏலக்காய் இரண்டு மூன்று
- அன்னாசிப்பூ 7 - 8
- ஏலக்காய் 10 - 12
- மிளகு 2 டீ ஸ்பூன்
- சோம்பு 1 டீ ஸ்பூன்
Method:
- முதலில் மசாலா பொடிக்கான சாமான்களை ஒவ்வொன்றாக வெறும் வாணலி இல் வறுத்து ஆறவைக்கவும்.
- ஆறினதும் பொடிக்கவும்.
- பாசுமதி அரிசியை களைந்து வடியப்போடவும்.
- வாணலியில் ஒரு ஸ்பூன் நெய்விட்டு, பிரிஞ்சி இலையைப்போட்டு தாளித்துக்கொள்ளவும்.
- பிறகு, தண்ணீர் வடிந்த அரிசியை போட்டு நன்கு வறுக்கவும்.
- அதை குக்கர் பாத்திரத்தில் போட்டுக்கொள்ளவும்.
- அல்லது எலக்டிரிக்கல் குக்கர் பாத்திரத்தில் போட்டுக்கொள்ளவும்.
- மீண்டும் வாணலி இல் ஒரு ஸ்பூன் நெய்விட்டு பொடியாக நறுக்கி வைத்துள்ள காய்கறிகளை போட்டு வதக்கவும்.
- பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு மற்றும் வெங்காயத்தை மிக்சி இல் மையாக அரைக்கவும்.
- அரைத்த விழுதை காய்கறிமேல் கொட்டி , நன்கு கிளறவும்.
- தேவையானால் கொஞ்சம் எண்ணைவிட்டுக்கொள்ளவும்.
- இப்பொழுது கொஞ்சம் உப்பு மற்றும் ஒரு டேபிள் ஸ்பூன் பிரியாணி மசாலா பொடி போட்டு நன்கு கிளறவும்.
- அது நன்கு வதங்கியதும், வறுத்து வைத்துள்ள அரிசிமேல் கொட்டவும்.
- ஒரு கப்புக்கு இரண்டு கப் என்று தண்ணீர் அளந்து விடவும்.
- அதில் ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாறு விடவும்.
- ஒரு ஸ்பூன் எண்ணை விடவும்.
- நன்கு கலந்து விடவும்.
- ருசிபார்த்து உப்பு போட்டுக்கொள்ளவும்.
- குக்கர் பாத்திரத்தை குக்கரில் வைத்து ஆன் செய்யவும்.
- மூன்று விசில் வந்ததும் அணைத்துவிடவும்.
- குங்குமப் பூ வை தண்ணீர் விட்டு வைக்கவும்.
- வெந்த பிரியாணியை வெளியே எடுத்ததும் குங்குமப் பூ கரைசலைக் கொட்டி ஒரு கிளறு கிளறி பரிமாறவும்.
- இதற்கு வெங்காய தயிர் பச்சடி நன்றாக இருக்கும்.
Notes:
- பெரிய வெங்காயத்திற்கு பதில் சின்ன வெங்காயம் உபயோகிக்கலாம் , அதனால் பிரியாணி இந்த சுவை கூடும்
Images:


Ingredients:
- நெல்லிக்காய் 1/2 கப்
- சாதம் 1 கப்
- APP 2 - 3 ஸ்பூன்
- வறுத்துப்பொடித்த வெந்தய பொடி 1/2 ஸ்பூன்
- கறிவேப்பிலை கொத்துமல்லி கொஞ்சம்
- உப்பு
- எண்ணை கொஞ்சம்
- தாளிக்க :
- கடுகு 1 ஸ்பூன்
- உளுந்து 1 ஸ்பூன்
- கடலை பருப்பு 1 ஸ்பூன்
- பெருங்காயம் 1/2 ஸ்பூன்
- மஞ்சள் பொடி 1/2 ஸ்பூன்
Method:
- வாணலியை அடுப்பில் போட்டு தாளிக்க கொடுத்தவைகளை போட்டு தாளிக்கவும்.
- பிறகு துருவி வைத்துள்ள நெல்லிக்காய்யை போடவும்.
- உப்பு போடவும், நன்கு கிளறி விடவும்.
- பிறகு, APP ,வறுத்துப்பொடித்த வெந்தய பொடி எல்லாம் போட்டு மீண்டும் கிளறவும்.
- எல்லாமாக சேர்ந்து வந்ததும் இறக்கவும்.
- ஒரு பேசினில் சாதத்தை போட்டு கொஞ்சம் நெய் விட்டு கலக்கவும்.
- பிறகு செய்து வைத்துள்ளதை போட்டு நன்கு கலக்கவும்.
- அவ்வளவுதான் "நெல்லிக்காய் சாதம்" தயார்.
- மணமாக நல்லா இருக்கும்.
- இதுவும் மத்யான லஞ்ச் பாக்ஸுக்கு நல்லா இருக்கும்
Notes:
- நெல்லிக்காய்யை 'concentrate' செய்து வைத்துக்கொள்ளலாம். Handy யாக இருக்கும்
Ingredients:
- கத்தரிக்காய் 1/2 கிலோ
- All Purpose powder 2 ஸ்பூன்
- புளி பேஸ்ட் 2 ஸ்பூன்
- உப்பு
- எண்ணை தேவையான அளவு
- பெருங்காயப்பொடி 1/4 ஸ்பூன்
- கடுகு 1 ஸ்பூன்
- உளுந்து 1 ஸ்பூன்
Method:
- கத்தரிக்காய்யை அலம்பி சின்னதாக நறுக்கவும்.
- வாணலி il எண்ணைவிட்டு கடுகு உளுத்தம் பருப்பும் போட்டு தாளிக்கணும்.
- நறுக்கின கத்தரிக்காயை போடவும்.
- நன்கு வதக்கவும்.
- இப்போது பெருங்காயம் போடணும்.
- கொஞ்சம் வதங்கினதும் உப்பு மற்றும் புளி பேஸ்ட்போட்டு நன்கு வதக்கவும்.
- காய் நல்லா வதங்கினதும் APP போடவும்.
- நன்கு கிளறி இறக்கவும்.
- சாதத்தை நன்கு ஆறவைத்து , கிளறி வைத்துள்ள கத்தரிக்காய் மசாலாவை போட்டுக் கிளறவும்.
- வாங்கீ பாத் தயார்.
- மதியத்திற்கு பொரித்த அப்பளம் அல்லது வத்தலுடன் சாப்பிடலாம்
Ingredients:
- பங்களூர் தக்காளி 1/2 கிலோ
- பச்சை மிளகாய் 15 - 20
- இஞ்சி துருவினது 1 - 2 டேபிள் ஸ்பூன்
- கடுகு 1 ஸ்பூன்
- உளுந்து 1 ஸ்பூன்
- கடலை பருப்பு 1 ஸ்பூன்
- பெருங்காயம் 1/2 ஸ்பூன்
- மஞ்சள் பொடி 1/2 ஸ்பூன்
- வறுத்துப்பொடித்த வெந்தய பொடி 1/2 ஸ்பூன்
- APP 4 - 5 ஸ்பூன்
- எண்ணை தாளிக்க
- உப்பு
- கறிவேப்பிலை கொத்துமல்லி கொஞ்சம்
Method:
- தக்காளிகளை நன்கு அலம்பி, விதைகள் நீக்கி, சின்ன சின்னதாக நறுக்கி வைக்கவும்.
- பச்சைமிளகாய்களையும் அதே போல செய்யவும்.
- வாணலி இல் எண்ணை விட்டு தாளிக்க கொடுத்தவைகளை போட்டு தாளிக்கவும்.
- பின் பச்சைமிளகாய் இஞ்சி துருவல் போட்டு வதக்கவும்.
- இப்போ தக்காளிகளை போடவும்.
- பிறகு, பெருங்காயம், மஞ்சள் பொடி, வறுத்துப்பொடித்த வெந்தய பொடி மற்றும் உப்பு போட்டு வதக்கவும்.
- அது நன்கு வதங்கினதும் APP போட்டு மீண்டும் நன்கு கிளறவும்.
- கறிவேப்பிலை கொத்துமல்லி தூவி இறக்கவும்.
- ஆறினதும் பாட்டிலில் எடுத்து வைக்கவும்.
- ஃபிரிஜ் இல் வைத்திருந்தால் 6ஃப் மாசம் கூட வைத்துக்கொள்ளலாம்
- தேவையான பொது எடுத்து சாதத்தில் கலந்து பரிமாறவு.
- பொறித்த அப்பளம் மற்றும் உருளை சிப்ஸ் இதற்க்கு நல்லா இருக்கும்.
- இல்லா விட்டால் 'வெங்காய ராய்த்தா ' செய்யலாம்
Notes:
- இதை செய்து வைத்துக்கொண்டால் எப்போது வேண்டுமானாலும் தக்காளி சாதம் கலக்கலாம். ரொம்ப சுலபம், மேலும் டிபன் பாக்ஸ் கட்ட ரொம்ப சௌகர்யமாக இருக்கும். பிக்னிக் செல்லும்போது கலந்து எடுத்துக்கலாம், மோர்சாதத்துக்கு தொட்டுக்கலாம், ஒட்சில் போடலாம் நிறைய விதமாக உபயோகிக்கக்கலாம் தக்காளி மலிவாக கிடைக்கும்போது தொக்கு செய்வது போல இதையும் செய்து வைத்துக்கொண்டால் நல்லது
- இதில் பச்சை மிளகாயுடன் மிளகு உடைத்து போடலாம். வேண்டுமானால் சில பற்கள் பூண்டு சேர்க்கலாம். ஒவ்வொரு முறை வேறு வேறு விதமாக செய்வதால் ருசி வேறு படும்.ஆனால் எல்லாமே நல்லா இருக்கும்
Ingredients:
- மாங்காய் 1 ( தோல் சீவி துருவவும்)
- சாதம் 1 கப்
- APP 2 - 3 ஸ்பூன்
- வறுத்துப்பொடித்த வெந்தய பொடி 1/2 ஸ்பூன்
- கறிவேப்பிலை கொத்துமல்லி கொஞ்சம்
- உப்பு
- எண்ணை கொஞ்சம்
- தாளிக்க :
- கடுகு 1 ஸ்பூன்
- உளுந்து 1 ஸ்பூன்
- கடலை பருப்பு 1 ஸ்பூன்
- பெருங்காயம் 1/2 ஸ்பூன்
- மஞ்சள் பொடி 1/2 ஸ்பூன்
Method:
- வாணலியை அடுப்பில் போட்டு தாளிக்க கொடுத்தவைகளை போட்டு தாளிக்கவும்.
- பிறகு துருவி வைத்துள்ள மாங்காய் யை போடவும்.
- உப்பு போடவும், நன்கு கிளறி விடவும்.
- பிறகு, APP ,வறுத்துப்பொடித்த வெந்தய பொடி எல்லாம் போட்டு மீண்டும் கிளறவும்.
- எல்லாமாக சேர்ந்து வந்ததும் இறக்கவும்.
- ஒரு பேசினில் சாதத்தை போட்டு கொஞ்சம் நெவிட்டு கலக்கவும்.
- பிறகு செய்து வைத்துள்ளதை போட்டு நன்கு கலக்கவும்.
- அவ்வளவுதான் "மாங்காய் சாதம்" தயார்.
- மணமாக நல்லா இருக்கும்.
- இதுவும் மத்யான லஞ்ச் பாக்ஸுக்கு நல்லா இருக்கும்
Notes:
- தக்காளி போல மாங்காய்யையும் 'concentrate' செய்து வைத்துக்கொள்ளலாம். Handy யாக இருக்கும்
Ingredients:
- 3 ஸ்பூன் புளி பேஸ்ட்
- 2 ஸ்பூன் துவரம் பருப்பு
- 2 ஸ்பூன் கடலை பருப்பு
- 2 ஸ்பூன் சாம்பார் பொடி
- 2 -3 பெரிய வெங்காயம்
- 25 - 30 பல் பூண்டு
- 4-6 இன்ச் இஞ்சி துண்டு
- 1 ஸ்பூன் வறுத்து பொடித்த வெந்தயம்
- கடுகு
- மஞ்சள் பொடி
- பெருங்காயம் (தேவயானால் )
- கறிவேப்பிலை - கொஞ்சம்
- எண்ணெய்
- உப்பு
- 2 ஸ்பூன் பொடித்த வெல்லம்
Method:
- முதலில் இஞ்சி இன் தோலியை நீக்கவும் .
- பூண்டு உரிக்கவும், வெங்காயம் நறுக்கவும்.
- மூன்றையும் மையாக அரைக்கவும்.
- வாணலி இல் நல்லெண்ணை விட்டு, கடுகு, கடலை பருப்பு, துவரம் பருப்பு,
- கறிவேப்பிலை தாளிக்கவும்.
- அரைத்த விழுதை போட்டு வதக்கவும். நன்கு எண்ணை
- பிரியும் வரை வதக்கவும். மஞ்சள் பொடி சேர்க்கவும்.
- 2 டம்பளர் தண்ணீர்
- விடவும்.
- புளி பேஸ்ட், சாம்பார் பொடி, பெருங்காய பொடி, வறுத்த வெந்தய பொடி
- எல்லாம் சேர்க்கவும் .
- நன்கு கொதித்து கெட்டியாகும் வரை பொறுக்கவும்.
- பிறகு இறக்கவும். நல்ல மணமுள்ள இஞ்சி குழம்பு தயார்.
- சாதத்துடன் பரிமாறவும். தொட்டுக்கொள்ள அப்பளம் போரும்
Notes:
- இந்த குழம்பை ஒரு வாரம் வரை ஃபிரிஜ் இல்லாமலே கூட வைத்து சாப்பிடலாம். ஃபிரிஜ் இல் வைத்தால் 1 மாதம் கூட வைத்துக்கொள்ளலாம். (புளிக்காய்ச்சல் போல் )
- வெளிஊர்களுக்கு போகும் போது எடுத்து செல்ல லாம் ரொம்ப உபயோகமானதாக இருக்கும். சமயத்தில் "Bread" il தடவி சாப்பிடலாம்
Ingredients:
- அரிசி - இரண்டு கப்,
- எள் - இரண்டு டேபிள் ஸ்பூன்
- தாளிக்க:
- கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, எல்லாமாக 1 டீ ஸ்பூன்
- 2 மிளகாய் வற்றல்
- கறிவேப்பிலை கொஞ்சம்
- நல்லெண்ணைய் - ஒரு டேபிள் ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
Method:
- அரிசியை, உதிரியாக சாதமாக வடித்து கொள்ளவும்.
- ஒரு தாம்பாளம் அல்லது பேசினில் போட்டு பரப்பி வைத்து, 1 ஸ்பூன் எண்ணெய்விட்டு சாதம் உடையாமல் கலந்து வைத்துக் கொள்ளவும்.
- எள்ளை, வாணலி இல் போட்டு , கருகாமல் 'படபட' வென பொறித்து தனியாக வைக்கவும்.
- அதே வாணலி இல் மிளகாய் வற்றலையும் போட்டு, வறுத்து கொள்ளவும்.
- கொஞ்சம் ஆறியவுடன், உப்பு மற்றும் வறுத்த எள், மிளகாய் வற்றல் எல்லாம் ஒன்றாக மிக்சி இல்போட்டு
- பொடிக்கவும்.
- வாணலி இல் எண்ணெய்விட்டு, கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து, சாதத்தின் மேல் கொட்டவும்.
- பொடித்து வைத்துள்ள எள் பொடியை சாதத்தின் மேல் பரவலாக தூவி, மெதுவாக கலநதுவிடவும்.
- அவ்வளவுதான், சுவையான 'எள்ளோதரை அல்லது எள் சாதம்' தயார்.
- மத்தியானம் லுஞ்சுக்கு எடுத்து செல்ல மிகவும் நன்றாக இருக்கும்
Ingredients:
- பீன்ஸ், கேரட், வெங்காயம், காலிஃபிளவர், உருளைக்கிழங்கு பச்சை பட்டாணி - எல்லாமாக சேர்த்து 2 கப்
- தக்காளி - தேவையானால் 1 விதைகள் நீக்கி, நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- 3 கப் குதிரைவாலி அரிசி - நன்கு அலசி, ஒரு 10 நிமிடங்கள் ஊறவைக்கவும். பிறகு வடிய விடவும்.
- முந்திரி 10 -12
- ஏலக்காய் - 4
- லவங்கப்பட்டை - சிறு துண்டு
- கிராம்பு - 4
- பூண்டு- இஞ்சி விழுது 1 டீ ஸ்பூன்
- ஒரு சிட்டிகை மஞ்சள் பொடி
- பச்சை மிளகாய் - 4 கீறி வைத்துக்கொள்ளவும்.
- பச்சை கொத்துமல்லி கொஞ்சம்
- நெய் - 2 டேபிள் ஸ்பூன் + எண்ணெய் 2 டேபிள் ஸ்பூன்
Method:
- குக்கரில் எண்ணெய் + 1 டேபிள் ஸ்பூன் நெய் விட்டு, மசாலா சாமான்களையும் பச்சை மிளகாயையும் போட்டு வதக்கவும்.
- பூண்டு- இஞ்சி விழுது, வெங்காயம் , மஞ்சள் பொடி போட்டு வதக்கவும்.
- அடுத்து காய்கறிகளை சேர்த்து வதக்கவும்.
- இப்போது ஊறவைத்து வடித்து வைத்த குதிரைவாலியை போட்டு ஒரு புரட்டு புரட்டவும்.
- 5 கப் தண்ணீர் விட்டு குக்கரை மூடிவிடவும்.
- மூன்று விசில்கள் வந்ததும், குக்கரை இறக்கிவிடவும்.
- குக்கர் திறக்க வந்ததும், மீதி நெய், தக்காளி கொத்துமல்லி துருவி, ஒரு கிளறு கிளறி, வெங்காய ராய்த்தவுடன் பரிமாறவும்.
- சுவையான குதிரைவாலி பிரியாணி தயார்.
- வெங்காய ரைத்தா அல்லது ஜவ்வரிசி ராய்த்தாவுடன் பரிமாறலாம்
Notes:
- தேவையானால் பிரிஞ்சி இலை சேர்க்கலாம்
Ingredients:
- 1 கப் பச்சரிசி
- 1/2 கப் - 3/4 கப் பயத்தம் பருப்பு
- ஒரு டேபிள் ஸ்பூன் மிளகு சீரகம் - ஒன்றிரண்டாக உடைத்தது
- ஒரு டேபிள் ஸ்பூன் முந்திரி ஒன்றிரண்டாக உடைத்தது
- நெய்
- கறிவேப்பிலை கொஞ்சம்
- துருவின இஞ்சி கொஞ்சம்
- பெருங்காயம்
- உப்பு
- வேண்டுமானால் சிட்டிகை மஞ்சள் பொடி
Method:
- அரிசி பருப்பு களைந்து குக்கரில் அரிசிக்கு 2 1/2 கப் மற்றும் பருப்புக்கு 1 கப் வீதம் தண்ணீர் விட்டு வைக்கவும்.
- அது வெந்ததும், வெளியே எடுத்து, பெருங்காய பொடி, உப்பு போட்டு நன்கு மசிக்கவும்.
- தேவையானால் கொஞ்சம் தண்ணீர் விட்டு மசிக்கவும்.
- வாணலியை அடுப்பில் வைத்து நெய் விட்டு மிளகு சீரகம்,முந்திரி போட்டு வறுக்கவும்.
- இஞ்சி, கறிவேப்பிலை போட்டு வறுக்கவும்.
- மசித்து வைத்துள்ள வெண் பொங்கல் மீது கொட்டவும்.
- சுவையான 'வெண் பொங்கல் ' ரெடி.
- தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்.
- அருமையாக இருக்கும்
Ingredients:
- அரிசி - 1 கப்
- மிளகு - 1 டேபிள்ஸ்பூன்
- சீரகம் 1 டேபிள் ஸ்பூன்
- நெய் - 2 டேபிள்ஸ்பூன்
- முந்திரிப்பருப்பு - 10
- உப்பு
Method:
- அரிசியைக் களைந்து தேவையான தண்ணீரைச் சேர்த்து உதிர் உதிராக வரும்படிக்கு சாதம் வடிக்கவும்.
- மிளகு சீரகத்தை ஒன்றிரண்டாக , வெண் பொங்கலுக்கு பொடித்துக் கொள்வது போல பொடிக்கவும்.
- வாணலில் நெய்யை விட்டு சூடாக்கி அதில் முந்திரிப்பருப்பைப் போட்டு சற்று சிவக்க வறுக்கவும்.
- அதில் பொடித்ததையும் சேர்த்து ஓரிரு வினாடிகள் வறுத்து, உதிர்த்து வைத்துள்ள சாதத்தில் கொட்டவும்.
- நன்றாக, ஆனால் சாதம் நொறுங்காமல் கிளறி வைக்கவும்.
- கறிவேப்பிலை வேண்டுமானாலும் தாளிக்கலாம் .
- சுவையான சம்பா சாதம் தயார்.
- அப்படியே சாப்பிடலாம் , நல்லா இருக்கும்..தொட்டுக்கொள்ள எதுவும் வேண்டி இருக்காது
Notes:
- இது பொதுவாக பெருமாள் கோவில்களில் கிடைக்கும் பிரசாதம்
Ingredients:
- அரிசி - 1 கப்
- மிளகு - 1 டேபிள்ஸ்பூன்
- நெய் - 2 டேபிள்ஸ்பூன்
- தேங்காய்த்துருவல் - 1 டேபிள்ஸ்பூன் (தேவையானால் )
- கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
- உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
- முந்திரிப்பருப்பு - 10
- உப்பு
Method:
- அரிசியைக் களைந்து தேவையான தண்ணீரைச் சேர்த்து உதிர் உதிராக வரும்படிக்கு சாதம் வடிக்கவும்.
- ஒரு வாணலியில் துளி நெய் விட்டு அதில் கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு இரண்டையும் சிவக்க வறுத்தெடுக்கவும்.
- அதே வாணலியில் தேங்காய்த்துருவலைப் போட்டு கருகாமல், கொஞ்சம் சிவப்பாகும் வரை வறுக்கவும்.
- சற்று ஆறியவுடன், வறுத்த பருப்புகள், தேங்காய்த்துருவல் அனைதையும் ஒன்றாகச் சேர்த்து மிக்ஸியில் போட்டு பொடியாக்கவும்.
- தனியே, மிளகை சற்று கொரகொரப்பாகப் பொடித்துக் கொள்ளவும்.
- வாணலில் நெய்யை விட்டு சூடாக்கி அதில் முந்திரிப்பருப்பைப் போட்டு சற்று சிவக்க வறுக்கவும்.
- அதில் மிளகுப்பொடியையும் சேர்த்து ஓரிரு வினாடிகள் வறுத்து, அத்துடன் சாதத்தைச் சேர்க்கவும்.
- அரைத்து வைத்துள்ள பருப்பு/தேங்காய்ப் பொடி, உப்பு ஆகியவற்றையும் சாதத்தில் சேர்த்து நன்றாகக் கிளறி இறக்கி வைக்கவும்.
- கறிவேப்பிலை வேண்டுமானாலும் தாளிக்கலாம் .
- அப்பளத்துடன் அல்லது கத்தரிக்காய் கொத்சுவுடன் பரிமாறவும்
Ingredients:
- அரை நெல்லிக்காய் 1/2 கப்
- சாதம் 1 கப்
- APP 2 - 3 ஸ்பூன்
- வறுத்துப்பொடித்த வெந்தய பொடி 1/2 ஸ்பூன்
- கறிவேப்பிலை கொத்துமல்லி கொஞ்சம்
- உப்பு , எண்ணை கொஞ்சம்.
- தாளிக்க :
- கடுகு 1 ஸ்பூன்
- உளுந்து 1 ஸ்பூன்
- கடலை பருப்பு 1 ஸ்பூன்
- பெருங்காயம் 1/2 ஸ்பூன்
- மஞ்சள் பொடி 1/2 ஸ்பூன்
Method:
- வாணலியை அடுப்பில் போட்டு தாளிக்க கொடுத்தவைகளை போட்டு தாளிக்கவும்.
- பிறகு துருவி வைத்துள்ள அரை நெல்லிக்காய்யை போடவும்.
- உப்பு போடவும், நன்கு கிளறி விடவும்.
- பிறகு, APP ,வறுத்துப்பொடித்த வெந்தய பொடி எல்லாம் போட்டு மீண்டும் கிளறவும். எல்லாமாக சேர்ந்து வந்ததும் இறக்கவும்.
- ஒரு பேசினில் சாதத்தை போட்டு கொஞ்சம் நெய் விட்டு கலக்கவும்.
- பிறகு செய்து வைத்துள்ளதை போட்டு நன்கு கலக்கவும்.
- அவ்வளவுதான் "அரை நெல்லிக்காய் சாதம்" தயார்.
- மணமாக நல்லா இருக்கும்.
- இதுவும் மத்யான லஞ்ச் பாக்ஸுக்கு நல்லா இருக்கும்
Notes:
- அரை நெல்லிக்காய்யை 'concentrate' செய்து வைத்துக்கொள்ளலாம். Handy யாக இருக்கும்
Ingredients:
- பாசுமதி - 2 கப்
- தேங்காய்ப்பால் - ஒன்றரை கப்
- இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்
- மஞ்சள் பொடி - ஒரு சிட்டிகை
- பெரிய வெங்காயம் - ஒன்று
- மிளகாய் பொடி - ஒரு டேபிள்ஸ்பூன் (அல்லது காரத்துக்கேற்ப)
- எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு.
- கோப்ஃதா செய்ய :
- துருவிய பனீர் - கால் கப்
- வேகவைத்த உருளைக்கிழங்கு - கால் கப்
- முந்திரி- 10
- சோள மாவு - கால் கப்
- கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன்
- பொடியாக நறுக்கிய கொத்தமல்லி கொஞ்சம்
- துருவிய கேரட் - 3 டேபிள்ஸ்பூன்
- எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
- உப்பு - தேவைக்கேற்ப.
- அரைக்க:
- புதினா, கொத்தமல்லி (சேர்த்து) - அரை கப்
- தக்காளி - ஒன்று
- பச்சை மிளகாய் - 3
- பட்டை சோம்பு கசகசா (மூன்றும் சேர்த்து) - ஒரு டேபிள்ஸ்பூன்
Method:
- கோஃப்தா தயாரிக்கக் கொடுத்துள்ள வற்றை ஒன்றாக சேர்த்து, நீர் விட்டுப் பிசைந்து உருண்டைகளாக உருட்டவும்.
- வாணலியில் எண்ணெய் விட்டு அது காய்ந்ததும் உருண்டைகளைப் பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும்.
- தனியாக வைக்கவும்.
- அரிசியை களைந்து 15 நிமிடம் ஊறவைக்கவும்.
- அரைக்கக் கொடுத்துள்ளவற்றை விழுதாக அரைக்கவும்.
- குக்கரில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, நறுக்கிய வெங்காயத்தை வதக்கி; இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து மேலும் வதக்கி, மிளகாய் பொடி , மஞ்சள் பொடி , உப்பு, அரைத்த மசாலா விழுது என வொவ்வொன்றாக போட்டு வதக்கவும் .
- ஊறிய பாசுமதி அரிசியை நன்கு வடித்து இதனுடன் சேர்த்து ஒன்றரை கப் தேங்காய்ப்பால், 2 கப் தண்ணீர் சேர்த்து நன்கு கிளறி குக்கரை மூடவும்.
- ஒரு விசில் வந்ததும் இறக்கிவிடவும்.
- பிறகு, பிரியாணியுடன் பொரித்து வைத்துள்ள கோஃப்தாக்களைச் சேர்த்துக் மெல்ல கிளறிவிடவும்.
- அவ்வளவுதான் சுவையான தேங்காய்ப்பால் - கோஃப்தா பிரியாணி தயார்.
- ஏதாவது தயிர் பச்சடியுடன் பரிமாறவும்
Ingredients:
- 2 கப் குழைவாக வடித்த சாதம்
- 1 கப் புளிப்பிலாத 'கடுத்த' தயிர்
- 1/4 கப் பால்
- 50 கிராம் வெண்ணெய்
- 1 டீ ஸ்பூன் வறுத்து பொடித்த உளுத்தம் பொடி ( தேவையானால் )
- 1/4 ஸ்பூன் பெருங்காயப்பொடி
- தாளிக்க :
- 4 -5 பச்சை மிளகாய் - பொடியாக நறுக்கவும்.
- 1 ஸ்பூன் கடுகு
- 1 ஸ்பூன் உளுந்து
- கொஞ்சம் கறிவேப்பிலை
- 1 ஸ்பூன் துருவிய இஞ்சி
- 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் தாளிக்க
Method:
- சாதத்தை நன்கு மசிக்கவும்.
- அதில் கொஞ்சம் சூடுபடுத்திய பால் மற்றும் வெண்ணை போட்டு நன்கு மசிக்கவும்.
- சாதம் கொஞ்சம் ஆறினதும், அதில் தயிர் மற்றும் உப்பு போட்டு நன்கு கலக்கவும்.
- பெருங்காயப்பொடி மற்றும் உளுத்தம் பொடி போட்டு கலக்கவும்.
- வாணலி இல் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்த பொருட்களை தாளித்து சாதத்தின் மேலே கொட்டவும்.
- மீண்டும் நன்கு கலக்கவும்.
- அவ்வளவுதான் சுவையான 'பஹாளா பாத்' அதுதான் தயிர் சாதம் தயார்
Notes:
- இதை இன்னும் சூப்பராக செய்ய , துருவின காரட், மாதுளை முத்துகள், சின்ன சின்ன பச்சை திறக்ஷைகள் எல்லாம் போடலாம்
Ingredients:
- வடித்த சாதம் 1 கப்
- கடுகு 1/2 டீ ஸ்பூன்
- உளுந்து 1 டீ ஸ்பூன்
- கொத்துமல்லி - ஒரு பெரிய கட்டு
- புளி பேஸ்ட் 1 டீ ஸ்பூன்
- பச்சைமிளகாய் 10 - 12
- கொஞ்சம் எண்ணை தாளிக்க
- உப்பு
Method:
- ஒரு பேசினில் சாதத்தை பரத்தி போடவும்.
- அது ஆறட்டும்.
- மிக்சி இல் பொடியாக நறுக்கி வைத்துள்ள புதினா, புளி பேஸ்ட் மற்றும் பச்சை மிளகாயை போடவும்.
- மையாக அரைக்கவும்.
- வாணலியை அடுப்பில் வைத்து எண்ணை விட்டு, கடுகு, உளுந்து, போட்டு தாளிக்கவும்.
- அரைத்து வைத்துள்ள புதினா விழுதை போடவும்.
- நன்கு கிளறவும், அது தண்ணீர் வற்றி கெட்டியாக தொக்கு போல வரும்.
- அப்போது இறக்கிவிடவும்.
- பிறகு ஆற வைத்துள்ள சாதத்தின் மேல் உப்பு மற்றும் செய்துள்ள மசாலாவை போட்டு மெல்ல கிளறவும்.
- அவ்வளவு தான் சுவையான புதினா சாதம் தயார்
Notes:
- நிறைய புதினா வாங்கி இப்படி செய்து வைத்துக்கொண்டால், எப்போது வேண்டுமானாலும் சாதம் செய்யலாம். மேலும், பூண்டு பிடித்தவர்கள் பூண்டை மிகவும் பொடியாக நறுக்கி, தாளிக்கும்போது சேர்த்து செய்யலாம்
Ingredients:
- அரிசி நொய் - 1 cup
- புளி - ஒரு பெரிய எலுமிச்சம் பழ அளவு
- கடுகு- ஒரு டீ ஸ்பூன்
- உளுத்தம் பருப்பு - ஒரு டீ ஸ்பூன்
- வற்றல் மிளகாய் - 2 -4
- கறிவேப்பிலை - கொஞ்சம்
- பெருங்காய பொடி - கொஞ்சம்
- நல்லெண்ணெய் - 2 -3 டேபிள் ஸ்பூன்
- மஞ்சள் பொடி - 1/2 டீ ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
Method:
- உப்பு சேர்த்து, புளியை கரைத்து வைக்கவும். அது 3 முதல் 4 டம்ளர் வரை இருக்கணும்.
- உருளி இல் எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம் பருப்பு, வற்றல் மிளகாய் மற்றும் கறிவேப்பிலை, மஞ்சள் பொடி போட்டு தாளிக்கவும்.
- புளித்தண்ணிரை அதில் விடவும், பெருங்காய பொடி சேர்க்கவும்.
- புளித் தண்ணீர் நன்றாக கொதித்ததும், ரவையை தூவிக் கொட்டி கட்டி தட்டாமல் கிளறவும்.
- அடுப்பை சின்னதாக வைக்கவும். நடு நடுவில் கிளறி விடவும்.
- நொய் நன்கு வெந்ததும் இறக்கவும்.
- புளிப்பு - காரம் சேர்ந்து ரொம்ப நல்லா இருக்கும் இந்த பொங்கல்.
- சூடாக அல்லது நல்லா ஆறினதும் கூட இதை சாப்பிடலாம். தொட்டுக்க ஒன்றுமே வேண்டாம் அல்லது கட்டித் தயிர் தொட்டுக்கலாம்
Ingredients:
- வடித்த சாதம் 1 கப்
- மிகவும் பொடியாக நறுக்கிய பூண்டு 2 டேபிள் ஸ்பூன்
- கொஞ்சம் எண்ணை அல்லது நெய்
- உப்பு
Method:
- ஒரு பேசினில் சாதத்தை பரத்தி போடவும்.
- அது ஆறட்டும்.
- வாணலியை அடுப்பில் வைத்து எண்ணை அல்லது நெய் விட்டு பொடியாக நறுக்கிய பூண்டை போட்டு வதக்கவும்.
- அடுப்பை சின்னதாக வைக்கவும்.
- அதில் உப்பு போடவும்.
- பூண்டு நன்கு வறுபட்டதும் அதை ஆற வைத்துள்ள சாதத்தின் மேல் போட்டு மெல்ல கிளறவும்.
- அவ்வளவு தான் சுவையான பூண்டு சாதம் தாயர்.
- ரொம்ப taste ஆக இருக்கும் , ஒருமுறை செய்து பாருங்கள் பிறகு விடவே மாட்டீர்கள்
Ingredients:
- வடித்த சாதம் 1 கப்
- கடுகு 1/2 டீ ஸ்பூன்
- உளுந்து 1 டீ ஸ்பூன்
- கொத்துமல்லி - ஒரு பெரிய கட்டு
- பச்சைமிளகாய் 10 - 12
- கொஞ்சம் எண்ணை தாளிக்க
- உப்பு
Method:
- ஒரு பேசினில் சாதத்தை பரத்தி போடவும்.
- அது ஆறட்டும்.
- மிக்சி இல் பொடியாக நறுக்கி வைத்துள்ள கொத்துமல்லி மற்றும் பச்சை மிளகாயை போடவும்.
- மையாக அரைக்கவும்.
- வாணலியை அடுப்பில் வைத்து எண்ணை விட்டு, கடுகு, உளுந்து, போட்டு தாளிக்கவும்.
- அரைத்து வைத்துள்ள கொத்துமல்லியை போடவும்.
- நன்கு கிளறவும், அது தண்ணீர் வற்றி கெட்டியாக தொக்கு போல வரும்.
- அப்போது இறக்கிவிடவும்.
- பிறகு ஆற வைத்துள்ள சாதத்தின் மேல் உப்பு மற்றும் செய்துள்ள மசாலாவை போட்டு மெல்ல கிளறவும்.
- அவ்வளவு தான் சுவையான கொத்துமல்லி சாதம் தாயர்
Notes:
- நிறைய கொத்துமல்லி இருக்கும்போது இப்படி செய்து வைத்துக்கொண்டால், எப்போது வேண்டுமானாலும் சாதம் செய்யலாம் மேலும், பூண்டு பிடித்தவர்கள் பூண்டை மிகவும் பொடியாக நறுக்கி, தாளிக்கும்போது சேர்த்து செய்யலாம்
Ingredients:
- வடித்த சாதம் 1 கப்
- கடுகு 1/2 டீ ஸ்பூன்
- உளுந்து 1 டீ ஸ்பூன்
- கடலை பருப்பு 1 டீ ஸ்பூன்
- மிளகாய் வற்றல் 3 -4
- கறிவேப்பிலை கொஞ்சம்
- பெருங்காயப்பொடி 1/4 டீ ஸ்பூன்
- சால்ட்
- கொஞ்சம் எண்ணை தாளிக்க
- எலுமிச்சை சாறு 2 டேபிள் ஸ்பூன்
- மஞ்சள் பொடி 1/2 ஸ்பூன்
Method:
- ஒரு பேசினில் சாதத்தை பரத்தி போடவும்.
- வாணலியை அடுப்பில் வைத்து எண்ணை விட்டு, கடுகு, உளுந்து, கடலை பருப்பு, மிளகாய் வற்றல்,மஞ்சள் பொடி எல்லாம் போட்டு தாளிக்கணும்.
- பிறகு கறிவேப்பிலை மற்றும் பெருங்காயப்பொடி போட்டு உதிர்த்து வைத்துள்ள சாதத்தின்
- மேல் கொட்டவும்.
- அதில் உப்பு மற்றும் எலுமிச்சை சாறு விட்டு மெல்ல கிளறவும்.
- அவ்வளவு தான் சுவையான எலுமிச்சை சாதம் தாயர்
Notes:
- தேவையானால் வாசனைக்கு ஒரு பச்சை மிளகாய் கூட போடலாம்
Ingredients:
- துருவின தேங்காய் 2 கப்
- வடித்த சாதம் 1 கப்
- உடைத்த முந்திரி 1 டேபிள் ஸ்பூன்
- கடுகு 1/2 டீ ஸ்பூன்
- உளுந்து 1 டீ ஸ்பூன்
- கடலை பருப்பு 1 டீ ஸ்பூன்
- மிளகாய் வற்றல் 3 -4
- கறிவேப்பிலை கொஞ்சம்
- பெருங்காயப்பொடி 1/4 டீ ஸ்பூன்
- சால்ட்
- கொஞ்சம் எண்ணை தாளிக்க
Method:
- ஒரு பேசினில் சாதத்தை பரத்தி போடவும்.
- வாணலி இல் தேங்காய் துருவலை போட்டு நன்கு சிவக்க வறுக்கவும்.
- பரத்தி வைத்துள்ள சாதத்தின் மேல் போடவும்.
- மீண்டும் வாணலி யை அடுப்பில் வைத்து எண்ணை விட்டு, கடுகு, உளுந்து, கடலை பருப்பு, மிளகாய் வற்றல் எல்லாம் போட்டு தாளிக்கணும்.
- பிறகு முந்திரி , கறிவேப்பிலை மற்றும் பெருங்காயப்பொடி போட்டு உதிர்த்து வைத்துள்ள சத்தத்தின்
- மேல் கொட்டவும்.
- உப்பு தூவி மெல்ல கிளறவும்.
- சுவையான தேங்காய் சாதம் தாயர்
Notes:
- தேங்காய்யை கருக்காமல் நன்கு சிவக்க வறுக்கவும். இல்லாவிட்டால் சாதம் சீக்கிரம் கெட்டுவிடும்