- பாசுமதி - 2 கப்
- தேங்காய்ப்பால் - ஒன்றரை கப்
- இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்
- மஞ்சள் பொடி - ஒரு சிட்டிகை
- பெரிய வெங்காயம் - ஒன்று
- மிளகாய் பொடி - ஒரு டேபிள்ஸ்பூன் (அல்லது காரத்துக்கேற்ப)
- எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு.
- கோப்ஃதா செய்ய :
- துருவிய பனீர் - கால் கப்
- வேகவைத்த உருளைக்கிழங்கு - கால் கப்
- முந்திரி- 10
- சோள மாவு - கால் கப்
- கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன்
- பொடியாக நறுக்கிய கொத்தமல்லி கொஞ்சம்
- துருவிய கேரட் - 3 டேபிள்ஸ்பூன்
- எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
- உப்பு - தேவைக்கேற்ப.
- அரைக்க:
- புதினா, கொத்தமல்லி (சேர்த்து) - அரை கப்
- தக்காளி - ஒன்று
- பச்சை மிளகாய் - 3
- பட்டை சோம்பு கசகசா (மூன்றும் சேர்த்து) - ஒரு டேபிள்ஸ்பூன்
Method:
- கோஃப்தா தயாரிக்கக் கொடுத்துள்ள வற்றை ஒன்றாக சேர்த்து, நீர் விட்டுப் பிசைந்து உருண்டைகளாக உருட்டவும்.
- வாணலியில் எண்ணெய் விட்டு அது காய்ந்ததும் உருண்டைகளைப் பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும்.
- தனியாக வைக்கவும்.
- அரிசியை களைந்து 15 நிமிடம் ஊறவைக்கவும்.
- அரைக்கக் கொடுத்துள்ளவற்றை விழுதாக அரைக்கவும்.
- குக்கரில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, நறுக்கிய வெங்காயத்தை வதக்கி; இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து மேலும் வதக்கி, மிளகாய் பொடி , மஞ்சள் பொடி , உப்பு, அரைத்த மசாலா விழுது என வொவ்வொன்றாக போட்டு வதக்கவும் .
- ஊறிய பாசுமதி அரிசியை நன்கு வடித்து இதனுடன் சேர்த்து ஒன்றரை கப் தேங்காய்ப்பால், 2 கப் தண்ணீர் சேர்த்து நன்கு கிளறி குக்கரை மூடவும்.
- ஒரு விசில் வந்ததும் இறக்கிவிடவும்.
- பிறகு, பிரியாணியுடன் பொரித்து வைத்துள்ள கோஃப்தாக்களைச் சேர்த்துக் மெல்ல கிளறிவிடவும்.
- அவ்வளவுதான் சுவையான தேங்காய்ப்பால் - கோஃப்தா பிரியாணி தயார்.
- ஏதாவது தயிர் பச்சடியுடன் பரிமாறவும்
No comments:
Post a Comment